எழுத்து வழி பிரச்சாரம்

in 2016 ஜனவரி

எழுத்து வழி பிரச்சாரம் கடமையான விதிக்கப்பட்ட, அதைச் செய்யாவிட்டால்
நாளை மறுமையில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் ஒரு பணி அல்ல.

அபூ அப்தில்லாஹ்

1984.10.30 செவ்வாய் அன்று திருச்சி தூய சின்னப்பர் இறையியல் கல்லூரியில், (St.Pauls Seminery)”சமயங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்” என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில், மார்க்கத்தை வியாபாரப் பொருளாக்கு வது என்ற உப தலைப்பில் அன்றே கடமையான மார்க்கப் பணியை கூலிக்காகச் செய்யக் கூடாது. அதுவே சமூகத்தின் சர்வ நாசத்திற்குக் காரணம் என்று தெளிவாக விளக்கி இருக்கிறோம். அவ்வுரை “”பல்சமயச் சிந்தனை” என்ற தலைப்பில் நூலாக அன்றிலிருந்தே நான்கு பதிப்புகள் 27,000 பிரதிகள் வெளிவந்துள்ளன.

ததஜவினர்தான் குர்ஆன், ஹதீஃதை மட்டுமே தாங்கி வரும் அந்நஜாத்தையோ, அப்புத்தகத் தையோ தொட்டுப் பார்ப்பதற்கே அஞ்சுகின்ற னரே! 39:17,18 இறைவாக்குகள் கூறுவது போல் அவர்கள் எங்கே அல்லாஹ்வின் நன்மாராயம் பெறப்போகிறார்கள். அறிவாளிகளாக இருக்கப் போகிறார்கள். அல்லாஹ்வால் நேர்வழியில் நடத் தப்படப்போகிறார்கள். அவர்கள் தான் பொய்யன் பீ.ஜையின் பேச்சைத் தவிர வேறு யாருடைய பேச் சையும் கேட்பதில்லையே. அவரது எழுத்தைத் தவிர வேறு எவரது எழுத்தையும் படிப்பதில்லையே! குர் ஆனையே நேரடியாகப் படித்து விளங்க முற்படுவ தில்லையே. பீ.ஜை.யின் சுய கருத்துக்கள்தான் அவர் களுக்கு வேதவாக்கு. 2:159-162, 33:36,66-68 குர் ஆன் வசனங்களை அவர்கள் அறியவும் மாட்டார் கள். படித்து விளங்க முற்படவும் மாட்டார்கள்.

பொய்யன் பீ.ஜை. 1986ஏப்ரலிலிருந்து 1987 ஜூன் வரை 15 மாதங்கள் வரை அந்நஜாத் ஆசிரிய ராக இருந்தபோது அவரது எழுத்தோவியங்களைப் படித்து உணர்ந்தால், மனசாட்சிக்கு விரோதமாக இப்படிப் பிதற்றித் திரியமாட்டார்கள். ஆனால் ததஜ தறுதலைகளுக்கு குர்ஆன் (9:71, 103:1-3) ஹதீஃத் மட்டும் மார்க்கமாகத் தெரியாது. அவர்கள் நபியாக ஈமான்-நம்பிக்கை கொள்ளத் தயாராக இருக்கும் பொய்யன் பீ.ஜையின் பேச்சுக்கள், எழுத்துக்கள் மட்டுமே அவர்களுக்கு வேதவாக்கு(?)

ததஜவினர், மார்க்கத்தில் எவை கடமையா னவை, எவை கடமை அல்லாதவை என்ற அடிப் படை அறிவும் இல்லாத மூடர்களாக இருக்கிறார் களா? அல்லது அவர்கள் நபியாக ஈமான் கொள்ளப் போகும் பொய்யன் பீ.ஜை. சொல்லித் தருவதை அப்படியே கண்மூடிப் பரப்பித் திரிகிறார்களா? அவர்களுக்கே வெளிச்சம். அல்லது பீ.ஜையும் அவ ரது பக்தகோடிகளும் ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழாததால் எது கடமை? எது கடமை இல்லை என்பதை அறியாதிருக்கிறார்கள் போலும்.

ஐங்கால தொழுகைகளிலும் 17 ரகாஅத்கள் கடமை. கண்டிப்பாக ஒவ்வொரு ஆணும் பெண் ணும் தொழுதே ஆக வேண்டும். அத்தொழுகை களில் மேலும் 10 அல்லது 12 ரகாஅத்கள் கடமை இல்லை. ஆனால் நபிவழி(சுன்னத்) ஆயினும் அவற்றை விடாமல் தொழுதால் நிச்சயம் நன்மை யுண்டு. அதே போல் ரமழான் மாதம் முழுக்க நோன்பு நோற்பது கடமை. இதர நோன்புகள் கடமையல்ல. அந்த நோன்புகளை நோற்றால் நன்மையுண்டு. 9:71, 103:1-3 குர்ஆன் வசனங்களின் படி மார்க்கப் பிரச்சாரம் கடமை. இப்பணியைச் செய்யாதவர்கள் நாளை மறுமையில் பெரும் நஷ் டத்திற்கு ஆளாவார்கள், தண்டிக்கப்படுவார்கள். இதையே 103:1-3 இறைவாக்குகள் கூறுகின்றன. மேலும் இப்பிரசார பணிக்கு, தொழவைக்க பைசா செலவு கிடையாது. தான் இருக்கும் பகுதியில், தான் சொந்த வேலைக்காகச் செல்லும் பகுதிகளில், சந்திக் கும் மக்களிடம் நன்மையை ஏவி, தீமையைத் தடுத் துப் பிரச்சாரம் செய்வது. இதைச் செய்வது கடமை யாகும். செய்யாவிட்டால் குற்றம்!

அதற்கு மாறாக எழுத்து வழி பிரசாரம் செல வுள்ளதாகும். செலவுள்ள எழுத்து வழி பிரசாரம் கடமை என்றால், அல்லாஹ்(ஜல்) எழுதப் படிக்கத் தெரியாத ஆடு மேய்த்தவர்களை தனது தூதர்களா கத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டான். இறுதித் தூத ராக அன்று தாருந்நத்வா உலமாக்கள் சபையிலிருந்த அதன் தலைவன் அபுல் ஹிக்கம் என்ற அபூ ஜஹீலையே தேர்ந்தெடுத்திருப்பான். அல்லது குறைந்தபட்சம் நபி(ஸல்) அவர்களை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளுமாறு கட்டளையிட்டி ருப்பான். ஆனால் அதற்கு மாறாக 62:2 குர்ஆன் வச னம் கூறுவது போல், மார்க்கப் பிரச்சாரத்திற் கென்று எழுதப் படிக்கத் தெரியாத அவாம்களையே குறிப்பாக அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளது உள் ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது, உறுதிப்படு கிறது. இதிலிருந்து எழுத்து வழிப்பிரச்சாரம் கடமை யான, அதாவது விதிக்கப்பட்ட ஒரு பிரசாரம் இல்லை என்பது உறுதியாகவில்லையா? இதையே ததஜவினர் தங்களின் நபியாக ஈமான் கொள்ளக் காத்திருக்கும் பொய்யன் பீ.ஜை. 1986 ஜூன் அந்நஜாத் இதழில் ஒப்புக்கொண்டு உறுதியாக அறிவித்து எழுதியுள்ளார்.

பணமற்ற ஏழைகளுக்கு ஹஜ் கடமை இல்லை. ஆனால் அவர்களுக்குப் பணம் வந்துவிட்டால் ஹஜ் கடமையாவது போல், எழுதப்படிக்கத் தெரியாத வர்களுக்கு எழுத்து வழிப் பிரச்சாரப்பணி கடமை இல்லாதிருக்கலாம். அதற்கு மாறாக எழுதப் படிக் கத் தெரிந்தால் எழுத்துப் பிரசார பணியும் கடமை தானே என்பதும் மூடத்தனமான வாதமாகும்.
பணம் வருவது ஒருவனது உழைப்பைக் கொண்டு மட்டும் வருவதில்லை. ஆனால் எந்த மொழியையும் ஒருவர் அதற்காக முயன்றால் எழு தப் படிக்கத் தெரிந்து கொள்ள முடியும். எழுத்துப் பிரச்சாரப் பணி கடமை என்றால் அல்லாஹ் ஆதத் தின் மக்கள் அனைவரும் கட்டாயம் எழுதப் படிக் கத் தெரிந்திருக்க வேண்டும் என விதித்திருப்பான், கடமையாக்கி இருப்பான்.

அபூ ஜஹீலின் வாரிசுகளான இந்த அறிவற்ற மவ்லவிகள் கடமையான பிரசார பணிக்குக் கூலி கூடாதென்றால், எழுத்து வழி பிரசார பணிக்கும் கூலி கூடாது என்று தங்கள் பக்தகோடிகள் மூலம் அவதூறு பரப்ப அவர்களது சுயநலமும் ஒரு காரணம்.

கடந்த சுமார் 1200 வருடங்களாக அகில உலக மக்களுக்கும் சொந்தமான இறுதி வாழ்க்கை நெறி நூல் குர்ஆனை வைக்கோல் போரை காக்கும் நாய் கள் போல், அவர்களும் முறையாக விளங்கிப் பயன் படுத்தாமல், மற்றவர்களும் அதைப் படித்து விளங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். குர்ஆனை யும், ஹதீஃத்களையும் இதர மொழிகளில் கொண்டு வந்தால், அதற்கு கூலி பெறக்கூடாது என்று பொய் யாக கதையளந்தார்கள். அதனால் தான் இன்றும் இஸ்லாமிய நூல்களுக்கு விலை என்று போடாமல் ஹதியா-அன்பளிப்பு என்று போட்டு வருகிறார்கள்.

குர்ஆனும், ஹதீஃத்களும் அவரவர் தாய் மொழிகளில் கிடைத்தால் மக்கள் எளிதாக நேரடி யாக மார்க்கத்தை விளங்கிக் கொள்வார்களே. தங் களின் அக்கிரமச் செயல்கள், மார்க்கத்தை ஹரா மான வழியில் மதமாக்கி வயிறு வளர்க்கிறார்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தில்தான் சத்தியத்தை மறைக்க முற்படு கிறார்கள். அத்தீய நோக்கத்துடன் தான் எழுத்து வழி பிரச்சாரத்திற்கும் கூலி-சம்பளம் கூடவே கூடாது என்று வரிந்து கட்டிக்கொண்டு தங்களின் தொண்டரடிப் பொடிகளைக் கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். 1986க்குப் பிறகுதான் பலரது குர்ஆன் மொழி பெயர்ப்புகளும், பல ஹதீஃத் நூல் களின் மொழி பெயர்ப்புகளும் வெளிவரத் தொடங் கின. அதனால் அல்லாஹ் நாடும் சொற்ப மக்களா வது, குர்ஆன், ஹதீஃத் போதனைகளை மட்டும் எடுத்து நடக்க முன்வந்திருக்கிறார்கள். அதைத் தாங்க முடியாமல்தான் இம்மவ்லவிகள் தங்கள் பக்தகோடிகளை இப்படித் தூண்டி விடுகிறார்கள்.

எந்த வழியிலும் மக்கள் நேர்வழியை-அதாவது குர்ஆன் ஹதீஃதை நேரடியாகத் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் மிகக் குறியாக இருக்கிறார்கள்!

பீ.ஜை.1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் வரை அந்நஜாத் ஆசிரியராக மாதம் ரூபாய் ஆயிரத் திற்கு (யூவி.1000/-) பணிபுரிந்தபோது அந்நஜாத் 1986 ஜூன் மாதம், அந்நஜாத் ஆரம்பித்த 3வது இதழி லேயே லெப்பைக்குடிகாட்டிலிருந்து அப்துல் சுப்ஹான் என்பவரின் விமர்சனத்திற்குத் தெளிவா கக் கடமையான பிரசார பணி வேறு, எழுத்துப் பணி வேறு என்பதை தெளிவு படுத்தியுள்ளார். பீ.ஜை. சம்பளமாக ரூ.1000/- வாங்கிக் கொண்டு சம்பளம் வாங்கவும் இல்லை. வாங்குவதாகவும் இல்லை என்று பொய்யாக எழுதியது வேறு வி­யம். ஆயினும் மார்க்கம் சம்பந்தப்பட்ட எழுத் துப் பணிக்கு கூலி வாங்க குர்ஆன் ஹதீஃதில் தடை இல்லை என்று ஒப்புக்கொண்டு எழுதியிருப்பதை அதாவது ததஜவினர் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்துள்ள பீ.ஜையின் இந்த விளக்கத்தை ஏற் கிறார்களா? நிராகரிக்கிறார்களா? பதில் தரட்டும்.

விமர்சனம் : எங்கள் ஊரில் ஒரு ஹாபிழ் பணத்துக் காகத்தான் தராவீஹ் தொழ வைக்கிறார்! பணம் வாங்காத ஹாபிழ் ஒருவரை உடனே அனுப்பவும்! இப்போது தொழ வைப்பவரை நாங்கள் அனுப்பி விடுகிறோம். எல்லா ஊர்களுக்கும் ஹாபிழ்கள் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் ஊதியம் வாங்காமல்தான் ஆசிரியராக சேவை செய்கிறீர்களா?  அப்துஸ்ஸுபுஹான், மெயின் ரோடு, லெப்பைக்குடிக்காடு.

விளக்கம் : ஹாபிழ்கள் தான் தராவீஹ் தொழவைக்க வேண்டும் என்று நாங்கள் எப்போது சொன்னோம்? ஏன் உங்களுக்கு திருகுர்ஆனின் சில சூராக்களும், தொழுகையின் சட்டங்களும் தெரிந்தால் நீங்களே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாமே. புரோகி தர் முறையை மாற்றியமைத்து மக்கள் தாங்களே தங்களின் தீனுடைய காரியங்களை நடைமுறைப் படுத்தும் நிலைமைக்கு உயர வேண்டும் என்பது தான் எங்களின் இலட்சியம். நாங்கள் புரோகிதர் களைச் சப்ளை செய்வதில்லை.

நஜாத்தின் ஆசிரியர் பணிக்குச் சம்பளம் வாங் குவதும், நீங்கள் குறிப்பிடுவதும் வெவ்வேறானவை. இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற் காகச் சம்பளம் வாங்குவதில் தவறு எதுவும் கிடையாது. ஆனால் நான் இதற்காக ஒரு பைசாகூட சம்பளமாக வாங்கவுமில்லை, வாங்குவதாகவும் இல்லை. அந்நஜாத் 1986, ஜூன் பக்கம் 2

Previous post:

Next post: