நாத்திக விஞ்ஞானிகளே! நாத்திகர்களே!! 6-வது அறிவை முறையாக பயன்படுத்த வாருங்கள்

in 2016 ஜனவரி

பெருவெள்ளம் கற்றுத் தந்த பாடம் :
இப்னு ஹத்தாது

நாத்திகர்களின் அடிப்படைக் கொள்கை-விதி என்ன தெரியுமா? மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வெளிரங்கமான ஐம்புலன்களுக்குள் அடங்குபவை மட்டுமே உள்பொருள், ஐம்புலன் களுக்குள் அடங்காதவை இல்பொருள் என்பதே நாத்திகச் சித்தாந்தம். அந்தச் சிந்தாத்தப்படி இறை வன் அவர்களின் ஐம்புலன்களுக்குள் அடங்குவ தாக இல்லை. அதனால் இறைவனே இல்லை என்ற அறிவீனமான வாதத்தை வைக்கிறார்கள். ஐம்புலன்களுக்குள் அடைபடாத எத்தனையோ உண்மைகள் இருக்கின்றன. அவற்றை இந்த நாத்தி கர்கள் ஏற்கத்தான் செய்கிறார்கள். அதற்கு மாறாக அவை அனைத்தையும் விட மகா உண்மையான இறைவனை அவர்கள் மறுப்பதுதான் அறிவீனத்தி லும் பெருத்த அறிவீனமாகும்.

முதலில் இவர்களின் பெற்றோர்கள் இவர் களைப் பெற்றெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது சம்பவம் இவர்களின் ஐம்புலன்களுக்குள் அடங்கு கிறதா? இல்லையே! எந்தப் பெண்ணின் மடியில் வளர்ந்தார்களோ அவளை தாய் என்றும், தாய் யாரைத் தகப்பன் என்று சுட்டிக் காட்டுகிறார்களோ அது பொய்யாக இருந்தாலும் அவரை தகப்பன் என்றுமே ஏற்கிறார்கள். இங்கு அவர்களின் ஐம்புலன்கள் செயலிழந்துவிட்டன. அடுத்து இவர்களை இயக்கும் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள். உயிர் ஐம்புலன்களுக்குள் அடங்குகி றதா? தங்கள் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் தங்களால் காட்ட முடிந்த இவர்களால் தங்களின் உயிரைக் காட்ட முடிகிறதா? முடியவில்லையே! அவர்களின் ஐம்புலன்களுக்குள் அடங்கவில்லையே! அதனால் அவர்களின் சித்தாந்தப்படி தங்களுக்கு உயிரே இல்லை என்பார்களா? அதேபோல் காற்று, மின்சாரம் போன்றவற்றைத் தங்கள் ஐம்புலன்களுக்குள் அடக்க முடிகிறதா? இதுபோல் எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும். ஐம்புலன்களுக்குள் அடங்காத இவற்றை இவர்களின் கொள்கைப்படி மறுக்காமல் எந்த அடிப்படையில் ஏற்கிறார்கள். ஆம்! இவற்றை இறைவனை மறுப்பது போல் மறுத்தால் மக்கள் இவர்களை மகா மூடர்கள் என்று முடிவு கட்டி விடுவார்கள். அதிலிருந்து தப்ப என்ன வாதம் வைக்கின்றனர்.

உயிர், காற்று, மின்சாரம் போன்றவை எங்களின் ஐம்புலன்களுக்குள் அடங்காத இல்பொருள்களாக இருந்தாலும் அவற்றின் செயல்பாடுகளைக் கண் கூடாக் கண்டு வருகிறோம். உயிர் உடலை இயக்குவதைப் பார்க்கிறோம். காற்றைச் சுவாசிப்பதன் மூலம் உணர்கிறோம். மின்சாரத்தை மின்சாதனங்கள் இயக்கப்படுவதன் மூலம் அறிகிறோம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இவை அனைத்தும் இயற்கையின்படி செயல்படுகின்றன என வாதிடுவதில்லை.

அதற்கு மாறாக சூரியன், சந்திரன், பூமி மற்றும் எண்ணற்ற சிறிய, பெரிய, மகா பெரிய கோள்கள் அனைத்தும் ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் சுழல்வது, பூமியில் காணப்படும் விதவிதமான ஒரே இனத்தில் பலதரப்பட்டப் படைப்புகள், நீரில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை, ஆகாயத்தில் பறப்பவை, ஐயறிவு மிருகங்கள், ஆறறிவு மனிதன் என அனைத்துப் படைப்பினங்களும் இயற்கையாகத் தோன்றியவை; இவற்றிற்குப் படைப்பாளன் ஒருவன் இல்லவே இல்லை என்று வாதிடுகின்றனர் நாத்திகர்கள். இவர்களை பகுத் தறிவாளர்கள் என்பதா? ஐயறிவாளர்கள் என்பதா? இவர்கள் கண்ணில் தென்படும் செயல்பாடு களை வைத்து ஐம்புலன்களுக்குள் அடைபடாத உயிர், காற்று, மின்சாரம் போன்றவற்றை ஏற்கும் நாத்திகர்கள், அவர்களின் கண்களுக்குத் தென்படும் சூரியன், சந்திரன், பூமி மட்டுமல்ல எண்ணற்ற கோள்களின் இடைவிடாத துல்லியக் கணக்கின்படி சதா சுழன்று கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான கோள்களின் செயல்பாட்டை வைத்து இறைவனை ஏற்க முடியவில்லையா? இவையெல்லாம் இயற்கை, இயற்கை என வீராப்புப் பேசும் இவர்கள், அவர்கள் கூறும் இயற்கை விதிப்படி அந்தரத்தில் ஒரு கால் பந்தை சுற்றி ஒரு மாட்டைப் பந்தைச் சுழலச் செய்ய முடிகிறதா? முடியவில்லையே!

அதுதான் போகட்டும். பூமி இதர கோள்களுடன் ஒப்பிட்டால், ஒரு புள்ளி அளவே உள்ளது. பிரயாண தூரத்தைக் குறைக்க சுயஸ் கால்வாய், பனாமா கால்வாய் என வெட்டி சாதனைப் படைத்தவர்கள், பூமியின் மேல் பகுதியில் மலைகளைக் குடைந்து சுரங்கப்பாதைகள் அமைத்தவர்கள், பூமியின் ஒரு பகுதியிலிருந்து அதற்கு நேர் எதிர் பகுதிக்குச் சுரங்கப்பாதை அமைத்தால் பிர யாண தூரம் மிக மிகக் குறையுமே. செய்ய முடிகி றதா? இல்லையே! பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சந்திரன், செவ்வாய் போன்ற கோள்களுக்கு விண் வெளிக் கப்பல்கள் அனுப்பிப் பெரும் பெரும் ஆய்வுகள் செய்யும் மனிதனால் பூமியில் சுரங்கப் பாதை அமைக்க முடிகிறதா? முடியவில்லையே!

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நாசகாரக் கருவிகளைக் கண்டுபிடித்துள்ள மனிதன், தன் நாட்டை அழிக்க வரும் எதிரி நாட்டின் ஏவுகணை களை இடையிலேயே சுட்டு வீழ்த்தித் தன் நாட்டைக் காப்பாற்றும் வல்லமை தனக்கு உண்டு என்று பெருமை பேசுவோர் தன் நாட்டை நோக்கி வரும் புயல் காற்றையோ, சுனாமி யையோ, பெரும் மழையையோ, பிரளயத் தையோ, நில நடுக்கத்தையோ அதாவது தன் நாட் டுக்கு வரும் பேரழிவுகளைத் தடுக்க முடிகிறதா? இல்லையே!

தமிழகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட மழை வெள்ளம் ஏற்படுத்திய பெரும் சீரழிவுகளை, மக்கள் அனுபவித்தத் துன்பங்களை நாத் திக விஞ்ஞானிகள், நாத்திக மேதைகள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு தடுத்து நிறுத்த முடிந் ததா? இல்லையே! அதுதான் போகட்டும். தனக்கு நாளை என்ன நடக்கும் என்பதைத் தங்களின் பகுத்தறிவால் பகுத்தறிய முடிகிறதா? முடியவில் லையே! அந்த அறிவு இருந்தால் தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளப் பேராபத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடிந்திருக்க முடியுமே! அன்றாடம் விபத்துக்களில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடாதே! இப் படி அடுக்கடுக்காக அடுக்கி மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவு அற்பத்திலும் அற்பமே என்பதை அறிய முடியும்.

இந்தப் பேருண்மையை ஒட்டுமொத்த மனித குலத்திற்கென்று (முஸ்லிம் மக்களுக்கு மட்டு மல்ல) ஒட்டுமொத்தப் படைப்பினங்களின், குறிப்பாக ஒட்டுமொத்த மனித குலத்தின் இணை, துணை, தேவை எதுவுமே இல்லாத ஒரே இறைவன், மனிதப் படைப்பின் ஆரம்பத்திலி ருந்து (பார்க்க : 2:38,39) இறக்கியருளிய வாழ்க்கை வழிகாட்டல் நூல்களின் வரிசையில் இறுதியாக இறக்கியருளிய அல்குர்ஆனின் 17:85 இறைவாக்கில் “”…அறிவிலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட் டிருப்பது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” என்று இறைவன் திட்டமாகக் கூறியுள்ளான். 50கி.கி. நிறுக்கக் கூடிய எடைக் கருவியில் 50,000 டன் எடையை நிறுக்க முற்படுபவன் எப்படிப் பட்ட புத்திசாலி(?)யாக இருப்பான் என்று நாத்தி கச் சிந்தனையாளர்களே நீங்களே சொல்லுங்கள்.

நாத்திகச் சிந்தனைக்கு வித்திட்ட மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெரியார் போன்றோருக்கு இறை வனைப் பற்றிய ஞானம் கிடைக்க வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஒவ்வொரு மதத்தின் மதகுருமார்கள் போதிப்பதுதான் அந்த அந்த மதங்க ளின் மதக் கோட்பாடு என்ற எண்ணத்தில், மதங்கள் அனைத்தும் போதை தருபவை, அபின் போன்றவையே, மனிதனை செவ்வைப்படுத்த மதங்களும் வேண்டாம், அவை கற்பிக்கும் கடவுளும் வேண்டாம், கடவுளை மற மனிதனை நினை என போதிக்க ஆரம்பித்தனர்.

கடவுளை ஏற்ற வள்ளலாரும் “”கடவுள் காட்டு வது பாதை(நேர்வழி) மதங்கள் ஊட்டுவது போதை” எனத் தெளிவாகக் கூறியுள்ளார். பெரியார் வள்ளளாரின் அறிய உபதேசத்தைக் காணத் தவறிவிட்டார். கடவுளுக்கும் உலகில் மதகுருமார்கள் போதிக்கும் மதங்களுக்கும் (முஸ் லிம் மதம் உட்பட) சம்பந்தமே இல்லை. அனைத்து மதங்களின் மதகுருமார்கள் தங்களின் உழைப்பில்லாத சோம்பேரித்தனமான முற்றிலும் தவறான முறையில் தங்களின் வயிறுகளை நிரப் பக் கற்பனை செய்தவையே அனைத்து மதங்க ளும். இறைவன் மனித குலத்திற்கு ஆதி மனிதர் ஆதத்திலிருந்து கொடுத்து அருளியது மட்டுமே ஒரே நேர்வழி வேறு வழியே இல்லை. (பார்க்க: 2:38, 39, 6:153)

இந்த உண்மையை அறியும் வாய்ப்பு மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெரியார் போன்றோருக்கு கிடைக்கவே இல்லை. இறுதி இறைநூல் குர்ஆனை அவர் கள் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க வில்லை. காரணம் மூளை வறண்ட முல்லாக்கள் இறுதி இறைநூல் குர்ஆன் முஸ்லிம்களின் வேதம்(?) என்று மூடத்தனமாகக் கூறி முஸ்லிம் அல்லாதவர்கள் அதைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. மேலும் மவ்லவி அல்லாதவர்கள் குர்ஆனை விளங்க முடியாது என்று சுயநலத்துடன் கூறி குர்ஆனின் உண்மைக் கருத்துக்களை முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து மட்டுமல்ல முஸ்லிம் களிடமிருந்தும் மறைத்து விட்டார்கள்.

முஸ்லிம், முஸ்லிம் அல்லாத சீரிய சிந்தனையாளர்களும் உலகியல் வழக்கப்படி உலகியல் துறைகளில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே அந்தத் துறைகளில் ஞானம் பெற்றிருப்பார்கள், அவர்களின் வழிகாட்டல்படிதான் நடக்க வேண் டும். மருத்துவர் மட்டுமே மருத்துவ ஞானம் பெற் றிருப்பார். அவரையே மறுத்துவத்துக்கு அணுக வேண்டும், வக்கீலையே வழக்கு வகைக்கு அணுக வேண்டும். இப்படி ஒவ்வொரு துறையிலும் படித்துப் பட்டம் பெற்றவர்களையே அத்துறை சம்பந்தமாக அணுகவேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. இது நூற்றுக்கு நூறு சரி. இதை யாரும் மறுக்க முடியாது. ஆயினும் இத்துறைகள் அனைத்தும் உலகியல் சம்பந்தப்பட்டவை. முன் சென்ற அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு, கண்டு பிடிக்கப்பட்டு, அவர்களால் எழுதப்பட்ட நூல்களை ஆதாரமாகக் கொண்டு கட்டமைக்கப் பட்டவை. மேலும் இந்த அனைத்துத் துறைகளி லும் படித்துப் பட்டம் பெற்றவர்களின் உண்மை யான தகுதியை, ஆற்றலை இவ்வுலகிலே சொந்த அனுபவத்தில் கண்டுகொள்ள முடியும். மேலும் மொத்தச் சமுதாயத்தில் 5% படித்துப் பட்டம் பெற்று எஞ்சிய 95% மக்களின் அத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். எனவே அவர்கள் கற்றக் கல்வியைத் தங்கள் வயிற் றுப் பிழைப்பாகக் கொள்ளலாம். எவ்வித மறுப்பும் இல்லை. தாராளமாக அனுமதியுண்டு!
அதற்கு மாறாகத் தூய மார்க்கத்தை 100% மக்களும் நேரடியாகப் படித்த அறியவேண்டும் என்பதை 67:2 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. எனவே யாரும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளக்கூடாது.

அற்ப அறிவை (17:85) உடைய முன் சென்ற மனிதர்கள் ஆய்வு செய்து எழுதிய நூல்களோடு, பேரண்டத்தை விட பேரறிவுடைய இறைவன் மனித குலத்திற்கென்றே இறக்கியருளிய இறை நெறி நூலை ஒப்பிட்டால் அது எந்தளவு பெருத்த வழிகேடு. சிந்தியுங்கள். குர்ஆனில் மனிதன் நடை முறைப்படுத்தவேண்டிய சட்டங்களைச் சொல் லும் வசனங்களுக்கு (ஆயாத்தும் முஹ்க்கமாத்) எப்படிப்பட்டமேதையின் மேல் விளக்கமும் அவ சியமே இல்லை. அந்த வசனங்களை எழுதப் படிக்கத் தெரியாத ஓர் அரபி (உம்மி) ஒருவர் படிக்கக் கேட்ட மாத்திரத்தில் அவரால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அரபு மொழி தெரியாதவர்கள் அதன் நேரடிக் கருத்தை அவருக்குத் தெரிந்த மொழியில் படித்தாலும், அல்லது படிக்கக் கேட் டாலும் அதை விளங்க முடியும். அந்த எளிய நிலையில்தான் குர்ஆன் இறக்கியருளப்பட்டுள் ளது. இதையும் குர்ஆன் 62:2 இறைவாக்குச் சம்மட்டி அடியாகக் கூறுகிறது. நீங்களே படித்துப் பாருங்கள்.

“”அவன்தான்(இறைவன்) எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களைப் படித்துக் காட்டி அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்க ளுக்கு இறை நூலையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே (எழுதப் படிக்கத் தெரியாதவர்) அனுப்பிவைத்தான். அவர் களோ அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டி லேயே இருந்தனர். (அல்குர்ஆன்: 62:2) மேலும் பார்க்க : 7:157, 3:20) இந்த வசனங்களிலிருந்து என்ன விளங்குகிறது? நாங்கள்தான் மெத்தப் படித்த மேதைகள் என்று பெருமை பேசுகிறவர் களை விட பெருமை கொள்ளாத சாதாரண மக்கள் இறையளித்த நேர்வழியை (6:153) உள்ளது உள்ளபடி மக்களுக்குப் போதிக்க மிகமிகத் தகுதியானவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கவில்லையா?

உலகில் காணப்படும் அனைத்து மதங்களின் மத குருமார்களிடம் காணப்படும் “”நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள், சாதாரண(அவாம்) மக்களுக்கு நேர்வழி புரியாது; நாங்கள்தான் விளக்க வேண்டும் என்று ஆணவம், பெருமை பேசும் அகங்காரம் காரணமாக அவர்கள் இறை வனாலேயே நேர்வழியை விட்டுத் திருப்பப்படு கிறார்கள். தவறான கோணல் வழிகளிலேயே அவர்களை நம்பும் மக்களை இட்டுச் செல்கிறார் கள் என்பதை 7:146 குர்ஆன் வசனம் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் பறைசாற்றுகிறது. இதல்லாமல் பெருமை பேசும் இம்மதகுருமார்கள் பற்றி குர்ஆனில் 2:34, 4:36, 7:36-40,146,206, 11:10, 16:22,23,49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:7, 18, 32:15, 39:49,72, 40:35,47,48,56,60, 45:37, 49:13, 57:23, 59:23, 34:31-33 மற்றும் ஹதீஃத்களில் புகாரீ 4850, 4918, 6071, 6657, முஸ்லிம் 2620. ஆக எண்ணற்ற இடங்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த குர்ஆன் வசனங்களையும், குறிப்பிட் டுள்ள ஹதீஃத்களையும் நேரடியாகப் படித்து விளங்குபவர்கள் வீண் பெருமை பேசும் மதகுரு மார்களின் கேடுகெட்ட இழிநிலையை எளிதாகப் புரிய முடியும். அவர்களின் உடும்புப் பிடியிலி ருந்து விடுபட முடியும். குர்ஆன் உங்களுக்கு விளங்காது என்று பெருமை பேசும் மவ்லவிகள் பொய்யாகச் சொல்வதை வேதவாக்காக ஏற்று குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்க முற்படாதவர்கள் இம்மவ்லவிகளோடு நாளை நரகம் புகுந்து அங்கு ஒருவரை ஒருவர் திட்டித் தீர்ப்பதை குர்ஆனின் 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற எண் ணற்ற வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. அதனால்தான் இம்மவ்லவிகள் மனிதகுலத்தினை குர்ஆனை நெருங்கவிடாமல் அதைப் படித்து விளங்க விடாமல் தடுத்து வருகின்றனர்.

இந்த அளவு மவ்லவிகளின் சுயரூபத்தை நாத்திகர்களுக்குத் தோலுரித்துக் காட்டும் கட்டாயம் ஏன் ஏற்பட்டதென்றால், உலகியல் துறைகளில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே அத்துறைகள் பற்றி அறிவார்கள். அத்துறைகளில் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்று நடக்க வேண்டும் என்ற கட்டாய நிலை இருப்பது போல், மார்க்கத் துறையிலும் படித்துப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே மார்க்கம் பற்றிப் பேச முடியும் என்ற மிகவும் தவறான நம்பிக்கையை துடைத்தெறியவே.
மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெரியார் போன்ற அறிஞர்களுக்கு பெருந் தடுமாற்றம் ஏற்பட்டு, அவர்கள் திசை மாறிப் போய், மதகுருமார்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பை நோக்கமாக் கொண்டு கற்பனை செய்த பல்லாயிரம் கோடி பொய்க் கடவுள்களுடன் அகிலங்களையும், மனிதனையும் இதர ஜீவராசிகளையும் படைத்த தன்னந்தனியனான ஒரே கடவுளையும் மறுக்கும் நிலைக்கு ஆளானார்கள். இம்மவ்லவிகளின் அண்டப்புளுகுப் பிரசாரத்தால் அவர்கள் இறைவனின் இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்கும் துணிச்சல் அவர் களுக்கிருக்கவில்லை. குர்ஆனில் இருப்பதைத் தான் இம்மவ்லவிகள் சொல்கிறார்கள் என்று நம்பினார்கள். அந்த அடிப்படையில்தான் அனைத்து மதங்களும் வழிகேடுகளே, அபின் போல் போதை தருபவையே, மதங்கள் போதிக் கும் கடவுளோ, மறுமையோ, விசாரணையோ, சுவர்க்கம், நரகம் போன்றவையோ இல்லவே இல்லை, கடவுளை மற, மனிதனை நினை எனத் துணிந்து பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். இவர்க ளின் இத்தவறான போதனைக்கு குர்ஆனை அவர் களிடமிருந்து மறைத்த இம்மவ்லவிகளே முழுக்க முழுக்க காரணம். 16:25 குர்ஆன் வசனம் சொல் வது போல் நாளை மறுமையில் அவர்களின் பாவச் சுமைகளையும், தங்களின் பாவச் சுமைகளோடு சுமக்கப் போகிறவர்கள் இம்மவ்லவிகளே!

ஆனால் இன்றோ நிலை வேறு, பெருமை பேசும் இம்மவ்லவிகளுக்கு இஸ்லாமிய மார்க்கத் திலோ, இறுதி இறை நூல் குர்ஆனிலோ அணுவத் தனையும் உரிமை இல்லை. அவர்களின் வீண் பெருமை காரணமாக இறைவனாலேயே குர்ஆன் வசனங்களை விட்டும், நேர்வழியை விட்டும் அவர்கள் திருப்பி விரட்டப்படுகிறார்கள். அவர் கள் நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்; கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டி மக்களை வழிகேட்டில் இட்டுச் சென்று நரகை நிரப்புவார்கள் என்று 7:146 குர்ஆன் வசனம் கூறு வதை மக்களுக்கு எடுத்து காட்டி வருகிறோம்.

1984 அக்டோபர் 30 அன்று திருச்சி கிறித்துவ குருத்துவக் கல்லூரியில், சமயங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள் என்ற தலைப்பில் பேசும்போதே இந்த பேருண்மையை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்துள்ளோம். 1986 ஏப்ரலிலிருந்து ஆரம்பித்து தொடர்ந்து வெளிவரும் அந்நஜாத் மாத இதழிலும் தெளிவாக விளக்கி வருகிறோம். எனவே நாத்திக நண்பர்கள் இம்மவ்லவிகளின் சூன்யப் பேச்சில் மயங்க வேண்டாம். குர்ஆன் முஸ்லிம்களின் வேதம், முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் முஸ்லிம் அல்லாதாருக்கு குர் ஆனில் எவ்வித உரிமையும் இல்லை, அவர்களுக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது என்ற கபடப் பேச்சில் சிக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறோம்.

குர்ஆன் மனித குலத்திற்கென்றே இறுதியாக ஓரிறைவனால் இறக்கியருளப்பட்ட இறுதி நெறி நூலாகும். இப்போது உலகில் வாழும், இனிமேல் உலகம் அழியும் வரை உலகில் வாழப் போகும் மனித குலத்தினர் அனைவருக்கும் சொந்தமான தாகும். அதன் வழிகாட்டல்படி நடப்பவர்கள் மட்டுமே நேர்வழி பெறுவார்கள். மதகுருமார்கள் பின்னால் செல்பவர்கள் அனைவரும் கோணல் வழிகளில் செல்பவர்களே. நாளை நரகை நிரப்ப இருப்பவர்களே.

அதே போல், பல்லாயிரம் கோடி மறுக்கப்பட வேண்டிய மனிதக் கற்பனைகளில் உருவான பொய் தெய்வங்களோடு அகிலங்களையும், என்னையும் மனித குலம் முதல் அனைத்துப் படைப்புகளையும் படைத்துப் பரிபாலிக்கும் தன்னந்தனியனான, இணை துணை, மனைவி, மக்கள் தேவை எதுவுமே இல்லாத ஓரிறைவனை மறுப்பதன் மூலம் நீங்களும், உங்களை நம்பியவர் களும் நாளை நரகை அடைய முற்பட வேண் டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பெரியார்தாசனாக இருந்து இறை தாசனாக (அப்துல்லாஹ்) மாறியவருக்கு ஏற்பட்ட சிந் தனை உங்களுக்கும் ஏற்பட விரும்புகிறேன். நீங் கள் சொல்வது போல் இறைவனோ மறுமையோ இல்லை என்றால் நாம் இருவரும் தப்பினோம்.

அதற்கு மாறாக நாம் சொல்வது போல் இறை வனும், மறுமையும் இருந்தால் நாம் தப்பிவிடுமோ. நாத்திகர்களாகிய உங்களின் நிலை? நரகம். சரியாக சிந்தித்துச் சரியான முடிவுக்கு வர வேண்டுகிறேன். இறைவன் நேர்வழி காட்டுவானாக!

Previous post:

Next post: