ஐயமும்! தெளிவும்!!

in 2016 பிப்ரவரி,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : புத்தாண்டு வாழ்த்துக் கூறலாமா? அன் பளிப்புகள், இனிப்புகள், உணவுகள் பரிமாறலாமா?  M. அபூ நபீல், தேங்காய்பட்டணம்.

தெளிவு : முஸ்லிம்கள் ஹிஜ்ரி புத்தாண்டையே கொண்டாட அனுமதி இல்லை! முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு கொண்டாட்டத் தினங்கள் மட் டும்தான். ஒன்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டம். இரண்டாவது ஹஜ்ஜு பெருநாள் கொண் டாட்டம். இந்த இரண்டு கொண்டாட்டங்கள் அன்றி இதர கொண்டாட்டங்கள் அனைத்தும் பித்அத்-வழிகேடு நரகில்-கொண்டு சேர்க்கும். மீலாது கொண்டாட்டம் பித்அத்-வழிகேடு நரகில்-சேர்க்கும். நபி(ஸல்) அவர்களின் மீலாதைக் கொண் டாடியவன் அபூ லஹப். அச்செயலாலும், மேலும் பல அக்கிரம, அநியாய, இறை நிராகரிப்புச் செயல் களை அவன் செய்ததால் அல்லாஹ்வால் சபிக்கப் பட்டான், நிரந்தர நரகை அடைந்தான். (பார்க்க : 111:1-5)

பிறந்த தினக் கொண்டாட்டம், திருமணத் தினக் கொண்டாட்டம், இன்ன பிறத் தினக் கொண்டாட் டங்கள் அனைத்தும் மாற்றுமத கலாச்சாரமாக யூத, கிறித்தவ நடைமுறைகளை பித்அத்-வழிகேடு என்றி ருக்கும் நிலையில், கிறித்தவ புத்தாண்டை முஸ்லிம் கள் கொண்டாடலாமா? அன்பளிப்புகள், இனிப்பு கள், உணவுகள் போன்றவற்றை முஸ்லிம்கள் பரிமா றலாமா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

அதே சமயம், நம் அண்டை அயலாரான பிற சமய மக்கள் கிறித்தவ புத்தாண்டைக் கொண்டாடி நம் வீடு தேடி வந்து அன்பளிப்பாக இனிப்புகள், உணவுகள் கொடுத்தால் அன்பளிப்பு என்ற அடிப் படையில் அவற்றை நாம் வாங்குவதை மார்க்கம் தடுக்கவில்லை. தாராளமாக வாங்கி நாம் விரும்பி னால் அவற்றைச் சாப்பிடலாம். அல்லது நம்மை விட ஏழ்மையில் வாடுவோருக்குக் கொடுத்து விடலாம்.

அன்பளிப்பை மறுத்து அவர்களின் முகம் வாடச் செய்வது மனித நேயத்துக்கு, மனிதப் பண்பாட் டுக்கு முற்றிலும் முரணான செயலாகும்.

ஐயம் : திருத்துறைப்பூண்டி நகரம் TNTJ கிளை 2 நிர்வாகி ஒருவர் சுகம் என்ற பெயரில் 2 ஆம்புலன்ஸ் களை வைத்துக்கொண்டு திருத்துறைப்பூண்டி நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் பணி புரியும் ஊழியர்களிடம் லஞ்சம் கொடுத்து சவாரி பிடிக்கிறார். அதேபோல் வெளியூர் தனியார் மருத்துவமனைகளில் இறக்கிவிடப்படும் சவாரிகளுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்காக பிரத்யேகமாக கொடுக்கப்படும் லஞ்சத்தையும் வாங்கிக் கொள்கிறார். தொழில் ரீதியில் அமையும் இந்த மாதிரி லஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் இஸ்லாம் அனுமதிக்கிறதா?
H.S. ஜாஹிர் ஹுசைன், திருத்துரைப்பூண்டி, செல் : 9698992038, 8012962244

தெளிவு : இதோ மனிதகுல நேர்வழிகாட்டி குர்ஆன் கூறுகிறது.

அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்ற வரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடா தீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே மக்களின் பொருள்களிலிருந்து ஒரு பகுதியை அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள். (2:188)

இலஞ்சம் வாங்குபவரையும், இலஞ்சம் கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அறிவித்துள்ளனர். திர்மிதி 1257, அபூதாவூத் 3109, இப்னுமாஜா 2304

இந்த குர்ஆன் 2:108 வசனம் ஹதீஃத் ஆதாரம் கொண்டு அச்செயல் லஞ்சமா? இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஐயம் : மீலாது விழாக்கள் நடத்துவதன் மூலம்தான் மாற்றார்களுக்கு இஸ்லாத்தை எளிதாக எடுத்துச் சொல்ல முடியும் என்று மவ்லவிகளின் வாதத்திலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. வானர் நதீர், நாகர்கோவில்.

தெளிவு : குர்ஆன் 15:39 வசனத்தைப் படித்துப் பாருங்கள். (அதற்கு இப்லீஸ்) என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் பூமியில் (வழிகேட்டை தரும் அனைத்தையும்) அவர் களுக்கு அழகாகக் காண்பித்து, அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்து விடுவேன் என்று கூறினான். (15:39)

மேலும் அல்ஹிஜ்ர் 15:26 முதல் 44 வரை நீங்களே நேரடியாகப் படித்து விளங்குங்கள்.

அப்படி நீங்கள் விளங்கினால் ஆதத்தின் சந்ததி களை எப்படியும் வழிகெடுத்து நரகில் தள்ளுவதில் மிகமிகக் குறியாக ஷைத்தான் இருக்கிறான். அதற்கு அல்லாஹ்வும் அனுமதி கொடுத்து விட்டான் என் பதைத் திட்டமாக அறிய முடியும். மனிதனின் இரத்தநாலங்களிலெல்லாம் இரத்தத்துடன் ஷைத் தானும் ஓடிக் கொண்டிருக்கிறான். ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான மதகுருமார்களின் இது போன்ற சுய விளக்கத்தினால்தான் மனிதர்களில் 99.9% வழிகேட்டில் நரகை நிரப்ப விரைந்தோடுகின்றனர்.

சிலை வழிபாடு, மிருக வழிபாடு, பட்சி வழிபாடு, சமாதி வழிபாடு(தர்கா) பீர் வழிபாடு, மத்ஹபு வழிபாடு, தரீக்கா வழிபாடு, அவுலியா வழிபாடு, இமாம்கள் வழிபாடு, மவ்லவிகள் வழிபாடு, இயக்க வழிபாடு என அனைத்து வழிகேடுகளிலும் ஷைத்தான் ஆதத்தின் சந்ததிகளில் 99.9% இழுத்துச் சென்று, அவன் பெற்ற வரத்தை நிறைவேற்றி வருகிறான். இந்த உண்மையை 15:26-44 இறைவாக்கு களை படித்து உணர்கிறவர்கள் மட்டுமே ஏற்பார்கள்.

ஆதத்திற்கு சுஜூது செய்ய அல்லாஹ் கட்டளையிட்டதை மறுத்து ஷைத்தான் சொன்ன சுய விளக் கம் அதாவது என்னைவிட தாழ்ந்த மண்ணிலிருந்து படைத்த ஆதத்திற்கு நான் எப்படி சுஜூது செய்வது என்ற சுயவிளக்கம் இந்த அனைத்து மதகுருமார்கள் சொல்லும் சுய விளக்கங்களை விட மிகமிக ஏற்புடையது. அல்லாஹ் ஏற்றானா? இல்லையே! இப்போது இந்த மவ்லவிகள் சிந்திக்க வேண்டும். ஷைத்தானின் அறிவுபூர்வமான சுய விளக்கத்தையே மறுத்து, ஷைத்தானைச் சபித்து அவளை நரகில் தள்ளிய அல்லாஹ் இம்மவ்லவிகளின் சுய விளக்கங்களை ஏற்பானா? ஒருபோதும் ஏற்கமாட்டான். இம்மவ்லவிகளும் அவர்களது பக்தகோடிகளும் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு வேதனை தாங்க இயலாமல் ஒருவரை ஒருவர் சபித்து வேதனைக்குரல் எழுப்புவதை எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் அம்பலப்படுத்துகின்றன. மவ்லவிகள் படிப் பினைப் பெறத் தயாரில்லை. (33:36,66-68)

இந்த மீலாது விழாக்களை எடுத்து கொள்ளுங் கள். அந்நஜாத்தை 1986 ஏப்ரலில் ஆரம்பிக்கு முன் னரே 6வது வெளியீடாக 23.11.1984ல் “”மீலாது, மெளலூது, மார்க்கம் சொல்வதென்ன?” என்ற தலைப்பில் அன்றே பிரசுரம் வெளியிட்டுள்ளோம். அதில் நபி(ஸல்) பிறந்தவுடன் முதல் மீலாதைக் கொண்டாடியவன், அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்று நரகம் புகும் அபூலஹப் ஆகும். அது மார்க்கத்தில் உள்ளது என்றால் நபி(ஸல்) அவர்களுக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து பிறந்த நாள் கொண்டாட ஆரம்பித்திருப்பார்கள். குறைந்தபட்சம் அல் லாஹ்வால் நபியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னராவது கொண்டாட ஆரம்பித்திருக்க வேண்டும். வழிகாட்டவில்லை. கலீஃபாக்கள், நபிதோழர்கள், இமாம்கள் காலத்திலாவது மீலாது கொண்டாடப்பட்டதா? இல்லவே இல்லை! அப்படியானால் எப் போது மீலாது கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது? ஹிஜ்ரி 600க்குப் பின்னர் எகிப்து அரசர் இர்பல் என்பவரால், மூட முஸ்லிம்களின் “”இயேசுவுக்குப் பிறந்த நாள் கொண்டாடும்போது, நபி(ஸல்) அவர் களுக்கு ஏன் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது” என்ற வழிகெட்ட வழிமுறையைப் பின்பற்றியே மீலாது கொண்டாட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆக இன்றைய முஸ்லிம்கள் குர்ஆனையும், நபி நடைமுறையையும் நேர்வழியாகக் கொள்ளவில்லை. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டு நரகில் எறியப்பட்ட அபூலஹபும், கிறித்தவர்களும்தான் முஸ்லிம்களுக்கு வழிகாட்டிகள். யூதர்களையும், கிறித்தவர்களையும் நீங்கள் ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் போய் நுழைந்தால் நீங்களும் அதில் போய் நுழைவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் முன் அறிவிப்புச் செய்தது பொய்யாக முடியுமா? (பார்க்க புகாரி 3456, 7319, 7320, முஸ்லிம் 5184)

ஆக மீலாது விழா ஆரம்பிக்கப்பட்டது நபி(ஸல்) அவர்களுக்கும் சுமார் 600 வருடங்ளுக்குப் பின்னர். இந்தியாவில் மீலாது விழா ஆரம்பிக்கப்பட்டது எப்போது தெரியுமா? ஹிஜ்ரி 13ம் நூற்றாண்டில் பஞ்சாப் மாநிலம் லாகூரை அடுத்துள்ள பட்டி கர்´ கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த மீலாது விழாக்கள் ஸுன்னத்தா-நபிவழியா-நேர்வழியா? நீங்களே முடிவு செய்யுங்கள். குர்ஆனோ, நபி வழியோ காட்டித்தராத எச்செயலும் மார்க்கத்திற்கு உட்பட் டதா? வழிகேடா? நீங்களே முடிவு செய்யுங்கள். மார்க்கத்தில் அனைத்து பித்அத்களும் வழிகேடுகள் நரகில் கொண்டு சேர்க்கும் என்ற கடுமையான நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இறையச்சத்துடன் கவனத்தில் கொள்பவர்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட சுயவிளக்கங்கள் கொடுத்து 33:36 இறைவாக்குச் சொல்வது போல் பகிரங்க வழிகேட்டில் செல்லமாட்டார்கள்.

இம்மூட முஸ்லிம்கள் மீலாது விழா, மீலாது ஊர்வலம் என ஆரம்பித்து வழிகாட்டப் போய் தான், காவியினர் விநாயகர் ஊர்வலம் என ஆரம்பித்து ஹிந்து-முஸ்லிம் கலவரங்களைத் தூண்டி முஸ்லிம் சமுதாயத்திற்குப் பெரும்கேடு வருடா வருடம் ஏற்படக் காரணமாயிற்று. அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டித்தராத ஒரு செயல், அது நமது மனதுக்கு அழகாகக் தெரிந்தாலும், அதனால் சமுதாயத்திற்குப் பலன் அளிப்பது போல் தெரிந்தாலும், அது சமுதாயத்திற்குப் பெருங்கேடே, வழிகேடே, நரகில் சேர்ப்பதே. ஆயினும் 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தான் அச்செயல்களை அழகாகக் காட்டத்தான் செய்வான். சு.ஜ. மவ்லவிகளுக்கு மீலாது அவர்களின் வாழ்வாதாரமாக இருப்பதால் இப்படிப்பட்ட காரணங்களைக் கூறி மீலாதை நியாயப்படுத்தத்தான் செய்வார்கள். அதனால் மீலாது மார்க்கமாகிவிடாது.

ஐயம் : புறம் அவதூறு என்றால் என்ன? விரிவான விளக்கம் தருக. ஆன்மீகம் மற்றும் அரசியல்வாதி களின் ஊழல்கள், தவறுகள் மற்றும் மார்க்க விரோத செயல்கள் பற்றி மக்கள் பேசுவது புறம் மற்றும் அவதூறு வகையில் சேருமா? வார்னர் நதீர், தேங்காய்பட்டினம்.

தெளிவு : ஒருவரிடம் உண்மையிலேயே காணப்படும் குறைகளை அவரில்லாத நிலையில் பேசுவது புறமாகும். அவரிடம் இல்லாத குறைகளை இட்டுக் கட்டிப் பேசுவது அவதூறாகும். அவதூறுகளுக்கு எந்த நிலையிலும் அனுமதியே இல்லை. கொடிய குற்றமாகும். நாளை மறுமையில் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. ஒருவரிடமுள்ள குறைகள் பற்றிப் பேசுவது இரண்டு வகைப்படும். அவரது தனிப்பட்டக் குறைகளைப் பார்த்தால் அவரிடமே அதைச் சுட்டிக் காட்டித் திருத்த முற்பட வேண்டும். அவர் திருந்தாவிட்டால் அவரது தந்தை, சகோதரர்களிடம் எடுத்துச் சொல்லி அவரை திருத்த வழிகாண வேண்டும். அதுவும் முடியாவிட்டால் சம்பந்தமில்லாத மற்றுவர்களிடம் அக்குறைகளைப் பரப்பித் திரிவது பெருங்குற்றமாகும். செத்தவனின் மாமிசத்தைச் சாப்பிடுவது போன்ற குற்றமாகும். (பார்க்க : 49:12)

அதே சமயம் ஒருவரின் குற்றச் செயல் மற்றவர்களைப் பாதிப்பதாக இருந்தால், உதாரணமாகப் பலே திருடன், பலே கொள்ளைக்காரன், பலே கொலைகாரன், இன்னும் இப்படிப்பட்ட தீச்செயல்களில் ஈடுபட்டு மக்களின் பொருள்களிலும், உயிரிலும் சேதத்தை விளைவிப்பவனை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுவது புறத்தில் வராது. அவனது தில்லுமுல்லுகளை அக்கு வேறு ஆணி வேறாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பது புறமே அல்ல. கண்டிப்பாகச் செய்து அப்படிப்பட்டவர்களின் பெருந்தீங்கிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது பெரிதும் நன்மை பயக்கும் செயலாகும்.

ஒருவன் சுய இன்பத்தில் ஈடுபடுகிறான். அது அவனை மட்டுமே பாதிக்கும். எனவே அதை அம்பலப்படுத்துவது புறம், கூடாது. அதே சமயம் ஒருவன் தனது பேச்சுத் திறமையால் பெண்களை மயக்கி அவர்களைக் கற்பழித்துப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறான். அவனை ஸ்த்ரீ லோலன் என சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி அப்பாவி பெண்களை அவனிடமிருந்து காப்பாற்றுவது புறம் அல்ல, அறச் செயல். அதுபோலவே மணமுடிக்கப் போகும் பெண்ணைப் பற்றியோ, ஆணைப் பற்றியோ யாரும் விசாரித்தால் அவர்களிடம் காணப்படும் குறைகளை எடுத்துச் சொல்வது புறமாகாது. அப்படி ஒரு நபி தோழி நபி(ஸல்) அவர்களிடம் வந்து இரண்டு நபி தோழர்களைச் சுட்டிக்காட்டி அவர்களில் யாரைத் தான் மணமுடிப்பது உத்தமம் என்று கேட்கிறார். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரிடமும் காணப்படும் குறைகளைச் சுட்டிக் காட்டிய பின் அவ்விருவரில் யாரை நீ மண முடிக்க விரும்புகிறாயோ அவரை மணமுடித்துக் கொள் என்று அறிவுரை கூறினார்கள்.

இதுபோல் கூட்டுத்தொழில், கூட்டு வியாபாரம் செய்ய நாடி அவர்களைப் பற்றித் தெரிந்த ஒருவரிடம் கேட்டால் அவர்களிடம் காணப்படும் குறைகளை எடுத்துச் சொல்வது புறமாகாது. இங்கெல் லாம் நோக்கம் அவர்களின் வாழ்வு, தொழில்கள் நலம் பெற வேண்டும் என்ற நன்நோக்கமே. எனவே இவை புறத்தில் வராது.

இப்படிப்பட்ட நிலைகளில் அவர்களின் அச்செயல்களைக் கெடுத்து வீணாக்க வேண்டும் என்ற தீய நோக்குடன் இல்லாது பொல்லாதுகளை இட் டுக்கட்டிக் கேட்கப்பட்டவர் சொல்வாரானால் அது பெரும் அவதூறாகும், பெருங்குற்றமாகும். நாளை நரகை அடைய வேண்டும்.

இவை அனைத்தும் உலகியல் சம்பந்தப்பட் டவை. இப்போது மறுமை பற்றிய மார்க்கச் சம்பந்தப்பட்ட வி­யங்களுக்கு வருவோம். இங்குதான் புறமும், அவதூறுகளும் கொடிகட்டிப் பறக்கின்றன. மார்க்கத்தை மதமாக்கி அதுகொண்டு மிகக் கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்க்கும் மத குருமார்கள் பொய்யுரைப்பதிலும், புறம் பேசுவதிலும், அவதூறுகள் பரப்புவதிலும் மற்ற அனைவரையும் விட முன்னணியில் இருக்கிறார்கள். அதிலும் அனைத்து மதங்களின் மதகுருமார்களை விட முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகள் ஆக உச்சானிக் கொப்பில் இருக்கிறார்கள். அவர்களிலும் பொய்யன் பீ.ஜை. ஆக உச்சானிக் கொப்பில் இருக்கிறார் காரணம் என்ன?

கடந்த 1200 வருடங்களாக குர்ஆனின் நேரடி உண்மைக் கருத்துக்களை மறைத்து 2:159, 33:36 இறைவாக்குகளைக் கண்டு கொள்ளாமல் ஆளாளுக்கு தான்தோன்றித் தனமான சுய விளக்கங்களை ஆளாளுக்குக் கொடுத்து ஒரே கொள்கையில் ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தை எண்ணற்றக் கொள்கைகள் உடைய பல பிரிவினர்களாக்கி இவர்கள் அற்பமான உலகியல் ஆதாயங்களை அடைந்து வருகின்றனர்.

குர்ஆன் போதனைக்கு முரணாக அல்லாஹ் சொல்வதாக, தூதர் சொல்வதாக இதுகாலம் வரை பொய்யுரைத்துத் தங்களின் ஹராமான புரோகிதத் தொழிலை ஜாம் ஜாம் என நடத்தி வந்தனர். முஸ்லிம் அல்லாதாருக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது, முஸ்லிம்களும் ஒளூ இல்லாமல் தொடக் கூடாது, தீட்டுடைய பெண்கள் குர்ஆனை தொடவும் கூடாது, ஓதவும் கூடாது, மவ்லவி அல்லாத முஸ்லிம்கள் அவர்களின் தாய் மொழியில் குர்ஆன் மொழி பெயர்ப்புக் கொடுக்கப்பட்டாலும் அதைப் படித்து அல்லாஹ் சொல்வதை விளங்க முடியாது எனத் தார்ப்பாயில் வடித்தெடுத்த அப்பட்டமான பொய்களைக் கூறி மக்களை வஞ்சித்து அவர்களை நரகில் தள்ளுவதோடு அவர்கள் முழுக்க முழுக்க ஹராமான வழியில் வயிறு வளர்த்து வருகின்றனர்.

கேவலம் ஒரு ஜான் வயிற்றை முழுக்க முழுக்க ஹராமான வழியில் நிரப்ப முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள் என ஒட்டுமொத்த மனித குலத்தினரையும், அவர்களுக்கென்றே இறுதியாக இறக்கியருளப்பட்ட குர்ஆனை நெருங்கவிடாமல் ஆக்கிவிட்டனர். இதைவிட கொடுமை, மாபாதகச் செயல் இருக்க முடியுமா? அதனால்தான் குர்ஆனும், ஹதீஃதும் இவர்களை வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பு என அடையாளம் காட்டி எச்சரிக்கின்றன.

குர்ஆனைப் பொருள் அறிந்து படித்து வருகிறவர்கள், ஹராமான வழியில் வயிறு வளர்த்த முன்சென்ற அனைத்து மதங்களின் மதகுருமார்களையும், இறுதிச் சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் மதகுருமார்களான ஆலிம் வர்க்கத்தையும் எவ்வளவு கடுமையாக அல்லாஹ் விமர்சிக்கிறான் என்பதை அறிய முடியும். ஆயிரக்கணக்கான வசனங்கள் இம்மதகுருமார்களைக் கடுமையாகக் கண்டித்து இறக்கப்பட்டுள்ளதை அறிய முடியும். இம்மதகுரு மார்களை ஆபத்பாந்தவனாக, வழிகாட்டியாகக் கொண்டு, குர்ஆன் உங்களுக்கு விளங்காது, சுத்தமில்லாமல் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற குர்ஆனுக்கே முற்றிலும் முரணானப் பொய்க் கூற்றை வேதவாக்காகக் கொண்டு, குர்ஆனைத் தொடுவதற்கு அஞ்சுபவர்கள் மட்டுமே இம்மவ்லிகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட முடியும். இப்போது வி­யத்திற்கு வருவோம்.

ஒட்டுமொத்த மனித குலத்தையும் வழிகெடுத்து நரகில் தள்ளும் இம்மவ்லவிகளின் அடாத செயல் களை மக்களிடம் கொண்டு செல்வது ஒருபோதும் புறம் ஆகாது. காரணம் அவர்கள் நரகை நோக்கி நடைபோட வைக்கும் பெருங்கொண்ட மக்களில் அல்லாஹ் நாடும் ஒரு சிலராவது இம்மவ்லவிகளின் வசீகர  உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆன், சுன்னாவை பற்றிப் பிடித்து நேர்வழி நடக்கமாட்டார்களா என்ற ஆதங்கத்தில், அவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுவது காலத்தின் கட்டாயமாகும். இது ஒருபோதும் புறத்தில் வராது. மாறாக நன்மை பயக்கும் செயலாகும்.

குர்ஆனை தினசரி பொருள் அறிந்து படியுங்கள். அதில் ஃபிர்அவ்னைப் பற்றி 74 இடங்களிலும், அவனது தீய செயல்கள் பற்றி பட்டியலிட்டுக் காட்டுகிறான். இன்னும் சில தீயவர்கள் பற்றி பெயர் குறிப்பிட்டே அடையாளம் காட்டுகிறான். நபி(ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் கூடப் பிறந்த சகோதரர் அபூ லஹப் பற்றியும் அவனது மனைவி பற்றியும் 111ம் அத்தியாயத்தில் எவ்வளவு கடுமையாகக் கண்டித்து அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான். ஆக சமுதாயத்தை வழிகெடுப்பவர்கள் பற்றி அவர்களின் வழிகெட்ட செயல் பற்றி மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்து மக்களை அவர்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்கப் பாடுவது மார்க்கத்தின் முக்கிய அம்சமாகும். அது ஒருபோதும் புறத்தில் வரவே வராது. நன்மை தரும் செயலாகும்.

அதே சமயம் அவர்களை அடையாளம் காட்டி மக்களை அவர்களின் உடும்புப் பிடியிலிருந்து விடு விக்கும் நல்ல காரியத்தையே செய்கிறோம் என்று இம்மவ்லவிகள் மீது பொய்யுரைப்பது அவர்கள் செய்யாத தீச்செயலைச் செய்ததாக அவதூறு பரப்புவது எந்த நிலையிலும் பெரும் குற்றச் செயலா கும். அவதூறுகளுக்கு மார்க்கத்தில் எந்த நிலையிலும் அனுமதி இல்லை பெரும் பாவமான செயலாகும்.

பொய்யுரைப்பது, அவதூறுகள் பரப்புவது இம்மவ்லவிகளுக்குக் கைவந்த கலையாகும். அதிலும் கொடும் ஷிர்க்கில் மூழ்கி இருக்கும் பொய்யன் பீ.ஜைக்கு ஹல்வா சாப்பிடுவது போலாகும். அதற்கு மேலும் பொய்களையும், புறங்களையும், அவதூறு களையும் மற்றவர்கள் மீது துணிந்து பரப்பிக் கொண்டு, அவரது உண்மையான வழிகேடுகளை மக்களுக்கு அடையாளம் காட்டி அவரது வசீகர சூன்ய பேச்சில் மயங்கி அவர் பின்னால் கண்மூடிச் சென்று நரகில் விழ இருப்பவர்களைக் காப்பாற்ற முற்படுபவர்கள் மீது வீண் பழி சுமத்தி, பீ.ஜையின் பாவங்களை அவர்கள் சுமக்கப் போவதாகவும், அவர்களின் நன்மைகளை பீ.ஜைக்குக் கொடுக்கப் போவதாகவும் அவரது கண்மூடிப் பக்தர்களைக் கொண்டு செய்தி பரப்புவது தான் வேடிக்கையிலும் வேடிக்கையாகும். (பார்க்க : 4:112)

பொய்யையும் அவதூறுகளையும் பரப்புவதும் இரண்டு வகைப்படும். ஒன்று இறைவன் புறத்திலி ருந்து நேர்வழிச் செய்திகளை மட்டுமே மக்கள் மன் றத்தில் வைத்த நபிமார்கள், குர்ஆன், சுன்னாவில் இருப்பதை உள்ளது உள்ளபடி எடுத்து வைக்கும் அல்லாஹ்வின் அடியார்கள் மீது பொய்கள், பழிகள் சுமத்தி, அவதூறுகள் பரப்பி, அவர்கள் கூறும் நேர்வழிச் செய்திகள் மக்களிடம் போய்ச் சேராமல் தடுப்பது. (பார்க்க : 22:42,43,44, 23:44)

இரண்டாவது இம்மவ்லவிகள் உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு, கொள்கை அடிப்படையில் பல பிரிவினர்களாகப் பிரிந்து, தங்கள் பின்னால் பெருங் கூட்டத்தைச் சேர்க்க, மற்ற பிரிவினர்கள் மீது பொய்யுரைப்பது, வீண் பழி சுமத்துவது, அவதூறுகள் பரப்புவது, இதிலும் பொய்யன் பீ.ஜையையே நம்பர் ஒன் உச்சத்தில் இருக்கிறார்.

இதற்கு ஆதாரம் தேடி வேறு எங்கும் போக வேண்டியதில்லை. 1987ல் நம்மை விட்டு வெளி யேறிய பின் நம்மீது அவர் சுமத்தி வரும் பொய்கள், வீண் பழிகள், அவதூறுகள், 1997ல் அவரே கற்பனை செய்த ஜாக் ஜமாஅத்தை விட்டு வெளியேறிய பின் ஜாக் மீது பீ.ஜை சுமத்திய பொய்கள், வீண் பழிகள், அவதூறுகள், 2005ல் அவரே கற்பனை செய்து உருவாக்கிய தமுமுக மீது, பீ.ஜை சுமத்திய பொய்கள், வீண் பழிகள், அவதூறுகள், 1987லிருந்து 2016 வரை அவரது வளர்ச்சிக்கும், பேர் புகழுக்கும், பொருளா தார வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் மீது பீ.ஜை. சுமத்திய பொய்கள், வீண் பழிகள், அவதூறுகள் போதிய சான்றாகும்.

ஆக ஒருவரின் தனிப்பட்டக் குறைகளை அம்பலப்படுத்துவது புறம். இல்லாததைக் கற்பனை செய்து பரப்புவது அவதூறு. சமுதாயத்தை வழிகெடுக்கும் தீச் செயல்களைச் செய்பவர்களை, அம்பலப்படுத்துவது ஒருபோதும் புறம் ஆகாது. அது நன்மை தரும் செயலாகும். ஆயினும் அவர்கள் பற்றியும் அவர்கள் செய்யாத செயல்களை இட்டுக்கட்டி அவதூறு பரப்புவது மார்க்கம் அனுமதிக்காத பெருங்குற்றம். நரகில் கொண்டு சேர்க்கும்.

Previous post:

Next post: