N. மஹபூப் பாஷா, வில்லிவாக்கம்.
1. மனிதர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துரைக்க அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட நபிமார்கள், என்னை இந்த வகையில் சோதனையாக்கு. இந்த அளவுக்கு எனக்கு கஷ்டத்தை கொடு எனக் கேட்டதில்லை. ஆனால் அல்லாஹ்வாகவே மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்திடவும், சோதனையை பொறுத்துக் கொள்பவராகவும் காட்டவே அனைத்து நபிமார்களுக்கும் பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தினான்.
2. ஆதம்(அலை), ஹவ்வா(அலை) ஆகிய இருவரையும் பிரித்து பல ஆண்டுகள் கழித்துத்தான் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவர்கள் எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டார்கள் என்பது தெள்ளத் தெளிவாக ஆலிம்களுக்கும், ஜமாஅத்தார் களுக்கும் தெரிந்திருந்தும், நிக்காஹ்வின்போது ஓதப்படும் துஆவில் மணமக்களை ஆதம் (அலை), ஹவ்வா(அலை) அவர்கள் வாழ்ந்தது போல் வாழ்வாங்கு வாழவைப்பாயாக என்று நாக்கூசாமல் அரபியில் சபிக்கிறார்கள். இதற்கு விபரம் அறிந்த அறியாத அதிகமானோர் ஆமீன் எனக் கூறுகிறார்கள்.
3. ஒருதலைக் காதலாக உள்ள திருமணம் ஆகாத யூசுப் நபி, ஜுலைகா போல் வாழ்வாங்கு வாழ வைப்பாயாக என்று துஆவின் பேரில் மணமக்களை ஆலிம்கள், ஜமாஅத்தார்கள் அரபியில் சபிக்கிறார்கள். இதனையும் விபரம் அறிந்த, அறியாத அதிகமானோர் ஆமீன் எனக் கூறுகிறார்கள்.
4. இப்றாஹீம் நபி அவர்களையும், அவரது மனைவி ஸாரா(அலை) அவர்களையும் குழந்தையின்மை நிலையில் அல்லாஹ் வைத்தான். ஆலிம்கள் மேற்கண்டவர்களைப் போல வாழ்வாங்கு வாழ வைப்பாயாக என துஆ செய்வது போல் அரபியில் ஆலிம்கள், ஜமாஅத்தார்கள் சபிக்கிறார்கள். இதனை அறிந்த, அறியாத அதிகமானோர் ஆமீன் எனக் கூறுகிறார்கள்.
5. இப்றாஹீம் நபி அவர்கள் தன்னுடைய மகன் இஸ்மாயில்(அலை) அவர்களையும், ஹாஜிரா (அலை) அவர்களையும் வனாந்தரத்தில் விட்டுச் சென்றது போல் வாழ்வாங்கு வாழ வைப்பாயாக என்று துஆ செய்வது போல் மணமக்களை ஆலிம்கள், ஜமாஅத்தார்கள் அரபியில் சபிக்கிறார்கள். இதனை அறிந்த, அறியாத அதிகமா னோர் ஆமீன் எனக் கூறுகிறார்கள்.
6. அதே போல் நபி(ஸல்) அவர்களைப் போல் வாழ்வாங்கு (அதிகமான மனைவிமார்களை மணமகன் தேடினால் பெண் வீட்டார் விட்டு விடுவார்களா) வாழ துஆ செய்வது போல் ஆலிம்கள், ஜமாஅத்தார்கள் அரபியில் சபிக் கிறார்கள். இதனை அறிந்த, அறியாத அதிகமானோர் ஆமீன் எனக் கூறுகிறார்கள்.
7. இதே போல் இன்னமும் பல நபிமார்களின் வாழ்க்கையைப் போல் வாழ்வாங்கு வாழ துஆ செய்வது போல் ஆலிம்கள், ஜமாஅத்தார்கள் மணமக்களை அரபியில் சபிக்கிறார்கள். இதனையும் அறிந்த, அறியாத அதிகமானோர் ஆமீன் எனக் கூறுகிறார்கள்.
8. இப்படி ஆலிம்கள், ஜமாஅத்தார்கள் மணமக்களை துஆ என்ற பெயரில் சபித்து விட்டு அந்த விருந்தில் சாப்பிடுகிறார்கள் (வயிற்றை நெருப் பால் நிரப்புகிறார்கள்)
9. மாற்றுமத திருமண விழாவிற்கு வந்த ஒரு குடிகாரன் ஏதோ ஒரு காரணத்தால் மணவிழா வீட்டினை தரக்குறைவாக பேசுவதும், சபிப்பது மாக இருக்க அதனைக் கண்ட குடிகாரனின் உறவினர்கள் சமாதானப்படுத்தி உணவருந்த வருமாறு அழைக்கும்போது (தான் சபித்த அந்த வீட்டின் உணவை) இந்த விழா உணவை உண்ண விரும்புவதும் இல்லை. இந்த வீட்டின் உணவை யார் சாப்பிடுவார்கள் என கூறி சென்று விடுகிறான். ஒரு குடிகாரனுக்கு இருக் கும் உணர்வு கூட இந்த ஆலிம்கள் மற்றும் ஜமா அத்தார்களுக்கு இல்லை. சபித்தபின் சாப்பிடு கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் விருந்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினாரே தவிர சபித்து விட்டு உணவை உண்ணச் சொல்லவில்லை. இதன் காரணமாகத்தான் நபி(ஸல்) அவர்கள் மணமக்களை இரட்டை வரிகளில் அனைத்து பொருளும், வளங்களும் உள்ளடக்கிய வகை யில் கீழ்க்கண்டவாறு துஆ செய்தார்கள். (வாழ்த்தினார்கள்).
10. “”பாரக்கல்லாஹு லக்கும் வபாரக்க அலைக்கும் வஜமஅ பைனகுமா ஃபீஃகைர்” அபூதாவூது, திர்மிதி. பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக் கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்றப் பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று எவ்வளவு இலகுவாக வாழ்த்தினார்கள் என்பதைத் தயவு செய்து சிந்தியுங்கள்.
11. நபி(ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்டதாக கூறும் ஜமாஅத்தார்கள், ஆலிம்கள் நபி(ஸல்) அவர்களின் ஒரு சொல்லையோ, செயலையோ, அங்கீகாரத்தையோ கொண்டு எப்போதுமே செயல்படுவதில்லை. (இதனை வேறு கட்டுரையில் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தப்படும்)
12. ஆலிம்களே, ஜமாஅத்தார்களே, நீங்கள் உண்மையாளராக இருந்தீர்களேயானால், நேர் மையாளராக இருந்தீர்களேயானால் அரபியில் கேட்கும் துஆவை அப்படியே நபிமார்கள் பட்ட கஷ்டங்களை போல் இந்த மணமக்களும் பெரும் கஷ்டங்கள் பட்டிடவேண்டும் என தமிழில் கேட்டுப் பாருங்கள். உங்களை எந்த அளவுக்கு அறியாத மக்கள் விரட்டி அடிப்பார்கள் என சோதித்து பார்க்க தைரியம் இருக்கிறதா?
13. ஆலிம்களையும், ஜமாஅத்தார்களையும் இம்மையில் நேசித்தவர்கள் மறுமையில் ஆலிம்களையும், ஜமாஅத்தார்களையும் அத்தியாயம் 33 வசனம் 66,67,68ன்படி சபிப்பார்கள்.
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப் படும் அந்நாளில், “”ஆ கை சேதமே? அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! என்று கூறுவார்கள். (33:66)
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (33:67)
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்). (33:68)
14. தற்போதைய ஆலிம்கள், ஜமாஅத்தார்கள் நிக்காஹ்வின் போது கேட்கும் துஆ (சபிப்பது) போல நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், நபி(ஸல்) அவர்கள் கேட்டதாக ஒரே ஒரு உதார ணம் காட்ட முடியுமா? அல்லது அவரது காலத் திற்கு பின் அவரது தோழர்களோ, அவரது குடும்பத்தாரோ (நீங்கள் சபிப்பது போல்) துஆ கேட்டதாக காட்ட முடியுமா? அப்படி உங்களால் உதாரணத்தைக் காட்ட முடியாவிட்டால் தயவு செய்து இதனை படித்த பின்பாவது, அறிந்தவர்கள் மணமக்களை வரிசை எண் 10ன்படி நபி(ஸல்) அவர்கள் வாழ்த்தியது போல் மேலே கண்ட துஆவை மட்டுமே கூறி மணமக்களை வாழ்த்த வும். அறியாதவர்கள் ஆமீன் கூறுவதைத் தவிர்த்து நபி(ஸல்) அவர்கள் வாழ்த்தியது போல் வாழ்த்தவும் (வேறு வகையில் மணமக்களை சபிக்காதீர்கள்) நபி(ஸல்) அவர்கள் உங்களுக்கு எதனைக் கட்டளை இடுகிறார்களோ அதன்படி செய்யுங்கள். எதை தடுக்கிறார்களோ அதை விட்டும் தடுத்துக் கொள்ளுங்கள் என அல்லாஹ்வே அல்குர்ஆனில் அத்தியாயம் 59 வசனம் 7ல்.
அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை,அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் வழிப்போக்கருக்கு மாகும். மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக் குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது) மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத் துக் கொள்ளுங்கள். இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (59:7)
மேற்கண்டவாறு கூறியது போல் செயல்படவும். (அத்தியாயம் 2 வசனம் 159,160,161)
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும், அதனை நாம் நெறிநூலில் மனிதர் களுக்காக விளக்கிய பின்னரும், யார் மறைக்கின் றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக் கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (2:159)
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப் பவனாகவும், கிருபையுடையோனாகவும் இருக் கின்றேன். (2:160)
யார் (இந்நெறிநூல் உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். (2:161)
ஆலிம்களையும், ஜமாஅத்தார்களையும் இம்மைக்காக பின்பற்றுபவர்கள் அல்குர்ஆன் மற்றும் ஹதீஃதையும் பின்பற்றுகிறோம் என்பதில் பொய் யர்களே.
15. ஆலிம்கள், ஜமாஅத்தார்கள் மற்றும் அறிந்தவர் கள் அறியாதவரையில் செய்த தவறுகள் அறிந்த பின் திருந்தியவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கம் நுழைபவர்கள், திருந்தாதவர்கள் அத்தியாயம் 67 வசனம் 2.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (67:2)
அத்தியாயம் 67 வசனம் 2 கூறுவது போல் பரீட்சையில் தோல்வியுற்று நாளை நரகம் புகுகிற வர்களே. ஆகவே ஆலிம்களே, ஜமாஅத்தார்களே, அறிந்த, அறியாதவர்களே மனம் உருகி மன்னிப்பு கேளுங்கள் அல்லாஹ்விடம்.
ஆதம்(அலை) அவர்களது சந்ததிகளில் தோன்றிய இடைத்தரகர்கள் புரோகிதர்கள் துணிந்து செய்த மாபெரும் குற்றம் இறைவனை மனிதனாக்கியதும், மனிதனை இறைவனாக்கியதுமேயாகும். இதனையே “”அத்வைதம்” என்றழைக்கிறார்கள். இந்த மாபெரும் குற்றத்தை இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகத்தை இந்த மவ்லவிகள் இஜ்மா, கியாஸ் என்ற பெயரால் இஸ்லாத்திலும் நுழைந்து விட்டார்கள். தூய “”இஸ்லாம்” மார்க்கத்தையும் களங்கப்படுத்திவிட்டார்கள்.
எனவே எமது நோக்கம் இதுதான். இஸ்லாத்தில் இடைத்தரகர்களுக்கு இடமேயில்லை. அடியான் அல்லாஹ்விடம் நேரடியாக முறையிடமுடியும். எவரும் மார்க்கத்தின் பெயரால் இடைத்தரகர்களாகப் புகுந்து மக்களை ஏமாற்றக் கூடாது. அவர் களின் அற்ப உலக ஆதாயத்திற்காக மக்களை வழி கெடுத்து நரகப் படுகுழியில் கொண்டு தள்ளக் கூடாது. இந்த இடைத்தரகர்களான மவ்லவிகள் நெருப்பைத் தங்கள் வயிற்றில் நிரப்பக்கூடாது. ஆக பொதுமக்களும், இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளும் உண்மையில் வெற்றி பெற்று மறுமை யில் ஈடேற்றம் பெறும் வழியையே மக்கள் முன் வைக்கிறோம். எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் அவன் கொடுத்துள்ள நேர்வழி சென்று அவனது பொருத்தம் பெரும் நல்லடியார்களாக நம்மனை வரையும் ஏற்றருள் புரிவானாக!
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிகொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் குறைவாகவே உபதேசம் பெறுகிறீர்கள். (7:3)