அபூ அப்தில்லாஹ்
இறைவனல்லாத உயிருள்ளவை, உயிரற்றவை மனிதன் உட்பட அனைத்தும் படைக்கப்பட்டவையே! குறையுள்ளவையே! ஒரு நேரத்தில் ஆணி லிருந்து வெளிப்படும் இந்திரியத் துளியிலிருக்கும் கோடிக்கணக்கான அணுவைப் போன்ற ஒன்றிலிருந்து இறைவனால் படைக்கப்பட்டவன்தான் மனிதன். இவ்வுலகில் சோதனைக்காகப் படைக் கப்பட்டுள்ளான். அவனுக்குக் கொடுக்கப்பட் டுள்ள அழிந்துபடும் இவ்வுலக வாழ்க்கை மிகமிக அற்பமானது. நிரந்தரமான மறு உலக வாழ்க்கை யோடு ஒப்பிடும் போது சில மணித் துளிகள் அல்ல, சில நிமிடங்கள் அல்ல, சில வினாடிகள் கூட தேறாது. மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறி வும் அற்பத்திலும் அற்பமானது. கடலில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால் அதில் ஒட்டிக் கொண் டிருக்கும் கடல் நீர் எவ்வளவு இருக்கும்? அந்த அளவுதானும் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவு இல்லை. (பார்க்க : குர்ஆன் : 17:85)
அப்படிப்பட்ட அற்பமான அறிவைக் கொண்டு தான் மனிதன் ஆட்டம் போடுகிறான். இறைவ னுடன் போட்டி போடுகிறான். 42:21 இறைவாக் குக் கூறுவது போல் அல்லாஹ் விதிக்காததை எல் லாம் விதித்து அல்லாஹ்வுக்கே இணையாளனாக முற்படுகிறான் 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்படுகிறான். அதனால்தான் அல்லாஹ் 33:72 இறைவாக் கில் மனிதன் அறிவிலியாகவும், அநியாயக்காரனாகவும் இருக்கிறான் என்று அடையாளம் காட்டுகிறான்.
ஆம்! மனிதன் இறைவனையும் மனிதனைப் போன்ற அறிவுடையவன் என மூடத்தனமாக நம்பி மனிதனுக்குரிய உதாரணங்களைக் கூறி தனது வழி கெட்டச் செயல்களை நேர்வழி எனக் காட்டி மனித இனத்தையே நரகில் தள்ளுகிறான். (பார்க்க :16:74)
உதாரணமாக, பிரதமர், முதல்வர், உயர் அதி காரிகள் இவர்களிடம் நாம் ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு நெருக் கமான ஒருவரை இடைத்தரகராகக் கொண்டு அவரது பரிந்துரையின் மூலமே சாதிக்க முடியும் என்பது சரிதான், நியாயம் தான். இது அற்பமான அறிவையுடைய, தேவைகளையுடைய மனித னுக்கும் மனிதனுக்கும் இடையிலான நிலை.
உதாரணமாக பிரதம மந்திரி, முதன் மந்திரி, எம்.பி. எம்.எல்.ஏ., எம்.எல்.சி. அரசு அதிகாரிகள் என யாராக இருந்தாலும் மனிதர்கள் என்ற நிலையில் ஒருவருக்கொருவர் தேவையுடையவர் களே. அற்ப அறிவுடையவர்களே. எனவே இவர் களை அணுக, இவர்களிடம் ஒரு காரியத்தைச் சாதிக்க அவர்களோடு நெருக்கமாக இருப்பவர் களின் சிபாரிசு, பரிந்துரை தேவை என்பதை மறுப் பதற்கில்லை. தகப்பனிடம் காரியத்தைச் சாதிக்க தாயின் சிபாரிசு தேவைப்படலாம். தாயும், தகப் பனும் ஒருவருக்கொருவர் தேவையுடையவர்களே. ஆக, யாருடைய சிபாரிசு-பரிந்துரை பிறருக்கு உதவும் என்றால், ஒருவருக்கொருவர் தேவையுடை யவர்களாகவும், அற்ப அறிவையுடைய நிலையிலும் இருப்பவர்களிடையே மட்டுமே! இங்கு மட்டுமே பரிந்துரை ஏற்கப்படும். அதுவும் முன்பின் அறிமுக மில்லாத ஒருவரைப் பற்றிய பரிந்துரையே செல்லும். நன்கு அறிமுகமான ஒருவரைப் பற்றிப் பிரி தொருவர் பரிந்துரைத்தால் அது பலன் தருமா? நிச்சயம் பலன் தராது.
உதாரணமாகப் பிரதமர் மோடி பிறந்து வளர்ந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் பிறந்த வளர்ந்த ஒருவர், சிறுவயதிலிருந்தே ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி வளர்ந்தவர்கள்; வாடா, போடா எனப் பேசிப் பழகியவர்கள். மோடி டீ வியாபாரம் செய் யும் போது அவரிடம் பல முறை டீ வாங்கிக் குடித்த வர். அப்படி மிக மிக நெருங்கி நீண்ட காலம் மொடி யுடன் பழகியவர். நன்கு மோடிக்கு அறிமுகமான வர். இப்போது மோடி மூலம் பிரதமர் என்ற நிலை யில் ஒரு காரியம் ஆக வேண்டியுள்ளது. மோடியி டம் நேரடியாகப் போய் தனது தேவையைக் கேட்ப தற்கு மாறாக, இப்போது மோடியுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு மந்திரியிடம் தன்னைப் பற்றி மோடிக்கு சிறு வயதிலிருந்தே நன்கு தெரியும். ஆயினும் மந்திரி என்ற நிலையில் இப்போது நீங்கள் தான் அவருக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். எனவே எனக்காக பிரதமரிடம் பரிந்துரை செய்யுங் கள் என்று கூறி அழைத்துச் செல்கிறார். மந்திரியின் பரிந்துரையைக் கேட்ட உடன் மோடி என்ன சொல்வார்?
சிறு வயதிலிருந்து தன்னுடன் பழகியவரைப் பார்த்து, அடே! அறிவு கெட்ட முண்டம், அடி முட்டாளா நீ? நீ யார் என்பது எனக்குத் தெரி யாதா? மந்திரி ஆனதிலிருந்து நெருங்கிப் பழகும் இவர்தான் உன்னைப் பற்றி எனக்கு அறிமுகப் படுத்த வேண் டுமா? என்று கடுமையாகப் பாட்டு விடுவதோடு, மந்திரியைப் பார்த்து ஏனப்பா அவன்தான் மூளை கெட்டத்தனமாக உள்ளான். சிபாரிசுக்கு அழைத் தான் என்றால் உனக்கு மூளை எங்கே போயிற்று? உங்களைப் பற்றி நன்கு தெரிந்த மோடியிடம் நான் வந்து அறிமுகப்படுத்த வேண்டுமா? அது முறையா? எனக்குப் பாட்டுக் கிடைக்கும் என்று கூறி அவரை என்னை நேரில் வந்து பார்க்கச் சொல்லுவியா? அதற்கு மாறாக நீயும் அவரது பேச்சைக் கேட்டு மூளை கெட்டுப் போய் அறிமுகப்படுத்த வந்திருக்கி றாயே! என்று திட்டமாட்டாரா? சுயமாகச் சிந்தியுங்கள்!
இத்தனைக்கும் மோடி குஜராத்தில் இருக்கும் போது பழகியதுதான். இப்போதைய அந்த நண்ப ரின் நிலை தெரியாது. நாளை அவர் எந்த நிலைக்கு ஆளாவார் என்பதும் தெரியாது. இதுதான் மனித நிலை. இப்படிப்பட்ட நிலையில் அற்ப அறிவை யுடைய மனித உதாரணங்களை முக்காலமும் முற்றிலும் அறிந்து வைத்துள்ள சர்வ வல்லமை உடைய இறைவனுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவதை விட மாபெரும் வழிகேடு வேறு இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.
இப்படிச் சட்ட விரோதமாக, திருட்டுத்தன மாக, பின் வாசல் வழியாக இறைவனுக்கும், மனித குலத்தினருக்கும் இடையே இடைத்தரகர் களாக (புரோகிதர்களாகப்) புகுந்து மக்களை வழி கெடுக்கி றார்கள். அவர்களைப் பாழும் நரகில் தள்ளுகிறார் கள். ஷைத்தானின் சபதத்தை நிறை வேற்ற அவனுக் குத் துணை போகிறார்கள். (பார்க்க : 7:11-25)
நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி மிகக் கொடிய ஹரா மான வழியில் தங்கள் ஒரு ஜான் வயிற்றை நிரப்பி வருவதால்தான் இந்தக் கொடுஞ் செயலில் துணிந்து ஈடுபட்டு வரும் துணிச்சல் அவர்களுக்கு ஏற்படு கிறது. (பார்க்க : 2:41, 79,174, 3:77,187,199, 5:44, 5:106, 9:9, 16:95) மேலும் இந்த வசனங் களைப் படித்துப் பார்த்து இந்த மவ்லவிகள் திருந்துவார்கள் என நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை.
நாங்கள்தான் ஆலிம்கள், பட்டம் பெற்ற மவ்லவிகள், மார்க்கத்தைக் கரைத்துக் குடித்த மேதைகள், எங்களுக்குத்தான் குர்ஆன் விளங் கும், அவாம்கள்-பாமரர்களாகிய உங்களுக்கு குர்ஆன் விளங்காது. நாங்கள் கொடுக்கும், மேல் விளக்கங்க ளைக் கண்மூடி ஏற்று நடப்பதே உங்கள் கடமை என்று கடந்த 1200 வருடங்களாகத் தொடர்ந்து வீண் பெருமை பேசி வருவதால் அல்லாஹ்வே இம் மவ்லவிகளை குர்ஆன் வசனங்களை விட்டும், அவ னது அத்தாட்சிகளை விட்டும் திருப்பி விடுகிறான். குர்ஆன் வசனங்களை நேரடியாக எடுத்துக் காட்டி னாலும் நம்பி ஏற்கமாட்டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். வழிகேடுகளையே நேர்வழி என்று கூறி அவர்களும் வழிகெட்டு அவர்களை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் அப்பாவி பெருங்கொண்ட மக்களையும் வழிகெடுத்து நரகில் தள்ளுவார்கள். இந்த உண் மையை 7:146 இறைவாக்கை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே அறிவார்கள்.
மேலும் உண்மையின்றி வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகள் எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக் கிறார்கள். அவர்களதும் அவர்களை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் (தக்லீது) அப்பாவி மக்களின் நாளைய நிலையை அறிய கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களை நீங்களே நேரடியாகப் படித்து விளங்கலாம்.
7:35-41, 33:66-68 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29. 43″36-45, 2:34, 28:39, 38:74, 74:23, 39:59, 38:75, 2:87, 45:31, 46:10, 4:173, 7:36,40,75,76, 88,133, 10:75, 14:21, 23:46, 25:21, 29:39, 34:31,33, 40:47,48, 41:15,38, 71:7, 6:93, 7:48, 46:20, 4:173, 7:206, 21:19, 32:15, 16:49, 37:35, 40:27,35,60, 59:23, 16:29, 39:72, 40:76, 39:60, 35:43, 71:7, 31:7, 45:8, 16:22, 63:5, 16:23, 40:56, 7:146
இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் யார் சோம்பல் படாமல் 2:186 இறைவாக்குக் கூறு வது போல், முற்றிலும் இறைவன் மட்டுமே நம்பி, பயபக்தியுடன் (தக்வா) பொறுமையாகப் படித்து அறிகிறவர்கள் ஆலிம், மவ்லவி, மவ்லானா, அல்லாமா என வீண் பெருமையடிப்பவர்கள் எப் படிப்பட்டக் கேடுகெட்ட நிலையில் இருக்கிறார் கள்? நாளை நரகை நிரப்ப இருக்கிறார்கள். அவர் களை முற்றிலும் நம்பி அவர்கள் பின்னால் கண் மூடிச் செல்லும் அப்பாவி மக்களையும் துணிந்து நரகில் தள்ளுகிறார்கள் என்பதை நிச்சயம் அறிய முடியும்.
ஆயினும் இடைத்தரகர்களான-புரோகிதர் களான, புரோக்கர்களான மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழிக்கு வரமாட்டார்கள். நாய் வாலை மடக்கி விடலாம். கழுதையை உழவுக்குக் கொண்டு வந்து விடலாம். ஆனாலும் மவ்லவிகளை நேர்வழிக்குக் கொண்டுவர முடியாது. காரணம் கொடிய ஹரா மான வழியில் மார்க்கத்தை மதமாக்கி வயிறு வளர்ப் பதாலும் அதன் காரணமாகப் பெருமை பேசி, குர் ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம், மேல் விளக்கம் கொடுத்து குர்ஆன் வசனங்களைப் பொய்யாக்கு வதாலும், அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு நேர் வழியைக் காட்டமாட்டான். (பார்க்க: 7:146)
அன்று 1450 வருடங்களுக்கு முன்னர் தாருந் நத்வா என்ற ஜமாஅத்துல் உலமா சபை என்ற புரோகித நாற்றக் குட்டையிலிருந்து வெளியேறி வந்து சுயமாகத் தம் கைகளால் உழைத்துச் சாப் பிட முன் வந்த ஓர் உமர்(ரழி) போல், ஓர் அலீ(ரழி) போல் இன்றும் இடைத்தரகர்களான-புரோகிதர்க ளான-புரோக்கர்களான ஜமாஅத்துல் உலமா சபை என்ற நாற்றக் குட்டையிலிருந்து வெளியேறி கொடிய ஹராமில் வயிறு வளர்ப்ப தைக் கைவிட்டு, தன் சொந்தக் கைகளால் உழைத்துச் சாப்பிட எவர் கள் முன்வருகிறார்களோ அப்படிப்பட்ட மவ்லவி கள் நேர்வழி பெற வாய்ப்புண்டு. மற்றபடி அந்தப் புரோகித நாற்றக் குட்டையிலிருந்து கொண்டே நேர்வழி பெற வாய்ப்புக் கடுகளவும் இல்லை என்பதையே 7:146 முதல் எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இந்தப் புரோகித மவ்லவிகள்தான் 2:159-162, 186, 7:3, 18:102-106, 33:36, 59:7 போன்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி, அற்ப அறிவு டைய (17:85) மனிதர்களிடையே காணப்படும் உதாரணங்களை முக்காலமும் முழுமையாக அறிந்த இறைவனுக்குக் கூறி அவர்களும் வழிகெட்டு பெருங்கொண்ட மக்களையும் வழிகெடுத்து வருகி றார்கள். தங்களைத் திருட்டுத்தனமாக, சட்ட விரோதமாக அல்லாஹ்வுக்கும் மனித குலத்தினருக் குமிடையே இடைத்தரகராக-புரோகிதர்களாகப் புகுத்த முற்படுவார்கள். குறை மதியுடைய மனிதர் கள் எழுதிய நூல்களுக்கு விளக்க உரை தேவைப்படு வது போல், முக்காலமும் முழுமையாக அறிந்த இறைவன் இறக்கியருளிய அல்குர்ஆனுக்கும் குறை மதியுடைய மனிதர்களின் மேல் விளக்கம் சுய விளக் கம் (தஃப்ஸீர்) அவசியம் தேவை. அவற்றையே அவாம்களான பாமரர்கள் பின்பற்ற வேண்டும். குர்ஆனை பாமரர்களால் விளங்க முடியாது என்று கதையளப்பார்கள்.
அற்ப அறிவுடைய மனிதர்களால் ஆய்வு செய்து எழுதப்பட்ட உலகியல் அறிவியல் சம்பந்தப்பட்ட நூல்களைப் போதிக்க ஆசிரியர்கள் தேவைப்படு வது போல், முக்காலமும் முற்றிலும் அறிந்த இறை வன், எழுதப் படிக்கத் தெரியாத சாதாரண பாமரர் களுக்கென்றே-மனிதர்களுக்கென்றே தெள்ளத் தெளிவாக நேரடியாக எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி வெள்ளை வெளேர் என்று, உள்ளங்கை நெல்லிக்கனி போல், இரவும் பகலைப் போல் திட்ட மாக அல்லாஹ்வே விளக்கியுள்ள குர்ஆனை அற்ப அறிவுடைய இந்த மவ்லவிகள் விளக்கித்தான் விளங்க முடியும் என்பது எப்படிப்பட்ட வடிகட்டி னப் பொய், ஆணவம், அகங்காரம், பெருமை, 42:21 இறைவாக்குக் கூறுவது போல், அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி, 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆணவம், அகங்காரம், பெருமை என் பதை குர்ஆனைப் பொருள் அறிந்து தொடர்ந்து படித்து வருகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.
அன்பார்ந்த மனிதகுலத்தினரே குறிப்பாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளே தெள்ளத் தெளி வாகத் திட்டமாகப் புரிந்து கொள்ளுங்கள். அற்ப அறிவையுடைய மனிதர்களில் மவ்லவிகளையோ, மவ்லவி அல்லாதவர்களையோ முக்காலமும் முற்றி லும் அறிந்த அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடை யில் இடைத்தரகர்களாக, புரோகிதர்களாக, புரோக் கர்களாகப் புகுத்தினால் அது பகிரங்க வழிகேடு என் பதை மேலே கண்ட இறைவாக்குகளை நேரடியா கப் படித்து அறிந்து கொள்ளுங்கள். அதுவும் எவ்வித நியாயமோ, உண்மையோ இல்லாமல் வீண் பெருமை பேசும் இந்த மவ்லவிகளைப் பின்பற்று வது வழிகேட்டிலும் மிகப் பெரிய வழிகேடு என் பதை திட்டமாக அறிந்து கொள்ளுங்கள். நாளை நரகம் நிச்சயம். மிகமிக உறுதி! எச்சரிக்கை!
முஸ்லிம்கள் முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளைப் பின்பற்றுவது நேர்வழி என்றால் ஹிந்துக்கள் ஹிந்து மதகுருமார்களைப் பின்பற்று வதும், கிறித்தவர்கள் கிறித்தவ மதகுருமார்களைப் பின்பற்றுவதும், யூதர்கள் யூத மதகுருமார்களைப் பின்பற்றுவதும், இப்படி உலகில் காணப்படும் அனைத்து மதங்களைப் பின்பற்றுகிறவர்களும் தங் கள் தங்கள் மதகுருமார்களைப் பின்பற்றுவதும் ஒரே நேர்வழியே என்று இம்மவ்லவிகள் ஒப்புக் கொள்ள வேண்டும். பிற மதங்களின் மதகுருமார் களை அடிக்கு அடி, ஜானுக்கு ஜான் பின் பற்றிக் கொண்டு, அவர்கள் போய் ஓர் உடும்புப் பொந்தில் நுழைந்தால் இந்த மவ்லவிகளும் அந்த பொந்தில் நுழைந்து கொண்டு, அவர்கள்தான் கோணல் வழி களில் செல்கிறார்கள், நாங்கள் மட்டும்தான் நேர் வழி நடக்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பது சரியா? இறைவன் ஏற்பானா? சிந்தியுங்கள்!
16.74 குர்ஆன் வசனம் என்ன கூறுகிறது படித்துப் பாருங்கள்.
“”நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற் றையும் நன்கு) அறிபவன். ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள். (16:74)
அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் பல உதாரணங்களைக் கூறி மனிதர்களுக்கு பல வியங்களை விளக்கி இருக்கிறான். அதேபோல் மனிதர்களில் பலர் பலருக்குப் பல உதாரணங்கள் கூறி பல வியங்களைப் புரிய வைக்கலாம். ஆனால் அல்லாஹ்வுக்கு இப்படிப்பட்ட மனித உதாரணங் களைக் கூறி தங்களின் தவறான இறைவனுக்கு இணை வைக்கக் கூடிய (´ர்க்) மிக கொடிய செயல் களை நியாயப்படுத்துவது எவ்வளவு பெரிய கொடிய பாவம் என்பதை இந்த 16:74 இறைவாக்கு நேரடியாகத் தெளிவுபடுத்துகிறது. இதை மேலும் 33:36 இறைவாக்கு இன்னும் தெளிவாக விளக்கு கிறது. படித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரி யத்தைப் பற்றி முடிவெடுத்து விட்டால், அவர் களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கைக் கொண்டுள்ள எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார். (33:36)
இந்த 16:74, 33:36 இறைவாக்குகள் திட்டமாக, தெளிவாக, நேரடியாக என்ன கூறுகின்றன? மார்க்கத்தை மக்களுக்கு விளக்க அல்லாஹ்வைச் சம் பந்தப்படுத்தி எப்படிப்பட்ட மனித உதாரணங்க ளைக் கூறக்கூடாது. மேலும் குர்ஆன் வசனங்கள், நபி(ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நடைமுறை கள் (ஹதீஃத்) தவிர்த்து மூன்றாவதாக எவ்வித மனித உதாரணங்களைக் கூறி வேறு அபிப்பிராயம் ஒரு போதும் கொள்ளக் கூடாது. ஆண்களுக்கும் அந்த உரிமை இல்லை; பெண்களுக்கும் அந்த உரிமை இல்லை. அது பகிரங்கமான வழிகேடு என்று உறுதிப்படுத்தவில்லையா?
இப்போது இந்த இடைத்தரகர்களான மவ்லவி கள் என்ன கூறி மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளு கிறார்கள் தெரியுமா? என்றோ வாழ்ந்து மறைந்த மனிதர்களை, முன்னோர்களை, அந்த பெரியார், இந்தப் பெரியார், அந்த நாதா, இந்த நாதா, அந்த இமாம், இந்த இமாம், அந்த அவுலியா, இந்த அவுலியா, அந்த ஷைகு, இந்த ஷைகு, அந்த அகாபிரீன், இந்த அகாபிரீன், அந்த சாதாத். இந்த சாதாத், ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் என முன்னோர்க ளின் சுயக் கருத்துக்களை மக்களுக்குப் போதித்து அவர்களை வழிகெடுத்து வருகிறார்கள். முன் சென்றவர்களின் சுய கருத் துக்கள் மார்க்கம் ஆகாது. அவை பகிரங்கமான வழி கேடுகள் என்பதை கீழ்க் காணும் குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் அறிவார்கள்.
2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 26:73, 31:21, 43:22,23, 37:69, 7:71, 12:40, 21:54, 26:76, 34:33, 53:23, 7:70, 11:62,87, 14:10, 37:17, 56:48, 11:109
இவ்வளவு தெளிவாக அழுத்தமாக இத்தனை வசனங்களில் அல்லாஹ் கூறி இருந்து இவை அனைத் தையும் நிராகரித்து விட்டு குஃப்ரிலாகி பெருங் கொண்ட மக்கள் இம்மவ்லவிகள் பின்னால் செல் லும் மர்மம் என்ன தெரியுமா? பெருங்கூட்டம் இம்மதகுருமார்கள் பின்னால்தான் செல்கிறார்கள். அந்தக் கூட்ட மயக்கத்தில்தான் பெரும்பான்மையினர் அக்கூட்டத்தோடு கூட்டமாகப் போய்ச் சேருகின்றனர். பெருங்கூட்டங்கள் நரகத்திற்குரியவர் களே என்ற உண்மையை நீங்களே குர்ஆனின் கீழ்க் காணும் வசனங்களைப் படித்து உணர முடியும்.
2:100,110,243, 5:59,103, 6:116, 7:187, 9:69, 11:17, 12:21,38-40,68,103, 13:1, 16:18, 17:89, 25:50, 26:78, 30:6,30, 34:28,35,36, 40:57,59,61,82, 43:48, 45:26, 6:37,111, 7:17,102,131, 8:34, 9:8, 12:106, 10:36,55,60, 16:75,83,101, 21:24, 23:70, 25:44, 26:8, 67,103,121,139,185,174,190,223, 27:61,73, 28:13,57, 29:69, 30:42, 31:25, 34:41, 39:29,49, 41:4, 44:39, 49:4, 52:47 இதேபோல் குர்ஆனில் கலீலன்-சொற்பமான தொகையினர் மட்டுமே நேர்வழி நடந்து சுவர்க்கம் புகுவார்கள் என்று சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அல்லஹ் குறிப்பிடுவதைப் படித்து அறிகிறவர்கள் பெருங்கூட்டம் பார்த்து மயங்க மாட்டார்கள்.
51:55 குர்ஆன் வசனம் கூறுவது போல் யாரு டைய உள்ளத்தில் ஈமான் இருக்கிறதோ அவர்கள் இவ்வுலகை விட மறு உலகை மிக அதிகமாக நேசிப் பார்கள். அவர்கள் மட்டுமே நாம் மேலே எடுத்து எழுதியுள்ள வசனங்கள் அனைத்தையும் சோம்பல் படாமல், நேரம் ஒதுக்கிப் பொறுமையாகப் பெரும் ஜிஹாதாக அதாவது பெரும் முயற்சியாக (பார்க்க 29:69) நேரடியாக குர்ஆனில் பார்த்து தெளிவடை வார்கள். பெருங்கூட்ட மயக்கத்தில் சிக்கமாட்டார் கள். புரோகிதர்களான மவ்லவிகளில் அவர்கள் தர்கா, தரீக்கா, சு.ஜா. ஹனஃபி, ஷாஃபி, மாலிக்கி, ஹம்பலி, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஜாக், ததஜ, இதஜ, இன்னும் வழிகெட்ட எத்தனைப் பிரிவுகள் இருக்கின்றனவோ, அப்பிரிவுகளின் மவ்லவிகள், ரத் கலீஃபா, இயக்க, கழக, அமைப்புத் தலைவர் கள் என அனைத்து வழிகெட்டப் பிரிவுகளின் தலை வர்கள் என அனைத்து மவ்லவி, தலைவர்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு 2:186 கட்ட ளைக்கு முற்றிலும் அடிபணிந்து அல்லாஹ்வை மட் டுமே நம்பி, 3:103 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பிரியாமல், ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத் தாக, அல்லாஹ் பெயரிட்டு(22:78, 41:33) நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்ற “”ஜமாஅத்துல் முஸ்லிமீனில்” போய்ச் சேர் வார்கள். ஒரே தலைமையில் ஒன்றுபட்டுச் செயல் பட முன் வருவார்கள்.
அதற்கு மாறாக 49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான் நுழையாமல் அன்றைய அஃராபு முஸ்லிம்கள் போல் பெயர் தாங்கி முஸ்லிம் கள் அல்லாஹ்வையும், மறுமையையும் உறுதியாக நம்பாமல், இவ்வுலகையே சதமாகக் கொண்டு மிக அதிகமாக நேசிக்கிறார்கள். அப்படிப்பட்ட முஸ்லிம்களுக்கு மேலே நாம் எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் எட்டிக்காயாகக் கசக்கும். இதை நாம் கூறவில்லை. அல்லாஹ்வே 17:41,45-47, 89, 22:72, 25:60, 39:45 குர்ஆன் வசனங்களில் அடை யாளம் காட்டி எச்சரிக்கிறான். எனவே அந்தப் பெயர் தாங்கி முஸ்லிம்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்பி குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட் டல்படி நடப்பதற்கு மாறாக ஒரே மார்க்கத்தை எண்ணற்ற மதங்களாக்கி அதனால் மவ்லவி, ஆலிம், அல்லாமா, மார்க்க மேதை எனப் பெருமை பேசும் மேலே சுட்டிக்காட்டியுள்ள அனைத்துப் பிரிவுக ளின் மவ்லவிகள் கூறும் குர்ஆனுக்கும், ஹதீஃதுக் கும் முரணான சுய கருத்துக்களை வேதவாக்காக(?) கொண்டு, அவர்கள் பின்னால் கண்மூடிச் சென்று நாளை, நரகை நிரப்ப இருக்கிறார்கள். அப்படிப் பட்ட பெருங்கூட்டம் (பார்க்க : 32:13, 11:118,119) இந்த மவ்லவிகளின் வசீகர, உடும்புப் பிடியிலிருந்து ஒருபோதும் விடுபடமாட்டார்கள்.
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே நீங்கள் 2:186, 7:3, 18:102-106, 33:36, 59:7 குர்ஆன் வசனங் களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு உங்களுக்கும், அல் லாஹ்வுக்கும் இடையில் மவ்லவிகளையோ, மவ் லவி அல்லாதவர்களையோ இடைத்தரகர்களை யோக் கொள்ளாமல் நேரடியாக அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ள முன்வாருங்கள். இந்த மவ்லவி களை நம்பி அவர்களின் மேல் விளக்கம் சுய விளக் கங்களை வேதவாக்காகக் கொண்டு செயல்பட் டால், நாளை நீங்களும், அந்த மவ்லவிகளும் நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒப்பாரி வைப் பதை மேலே எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங் களை நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
(மேலும் படித்து விளங்குங்கள்: 33:66-68, 2:159-162)