ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2017 பிப்ரவரி

MTM முஜீபுதீன், இலங்கை

ஜனவரி 2017 தொடர்ச்சி……
அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவன் தனது குழந்தை பிற்காலத் தில் தனது சொத்தில் அல்லது உணவில் பங்கு கொள்ளும் என பயந்து குழந்தையிலேயே அதைக் கொலை செய்யமாட்டான். அக்குழந் தைக்கு அல்லாஹ் அதன் உணவை நிர்ணயித்து வைத்திருப்பான் என்று, அக்குழந்தையை அன்பும் ஆதரவுடனும் பெற்று வளர்ப்பான். அதுபோல் பெண் குழந்தைகளைச் சிசுவில் கொலை செய்யமாட்டார்கள். அப்பெண் குழந்தைக்குரிய வாழ்வாதாரங்களை இறைவன் வழங்குவான் என முழுமையாக நம்புவான். அல்குர்ஆனின் வசனங்களை அவதானியுங்கள்.

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர் களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கிறோம். அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும். (அல்குர்ஆன்: 17:31)

ஆகவே, ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ், அவர்களுக்குரிய வாழ்க்கை ஆதாரங் களை நிர்ணயித்து விட்டான். அதை முன்கூட் டியே தெரிந்து கொள்ளும் ஆற்றல், மறைவான வற்றை அறியும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. அவன் சோதிடம் பார்த்து,நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்து ஏமாற வேண்டாம். அவை யாவும் அல்லாஹ் நல்லதைச் செய்வான் என்ற நம்பிக்கைக்கு மாற்றமாகும். மனிதன் விதியை அறிந்து கொள்ள முடியாததினால், அல்லாஹ் நல்லதைத் தருவான் என்ற நம்பிக்கையோடு முயற்சிக்க வேண்டும். அறிவைப் பயன்படுத்த வேண்டும். எல்லா அறிவு நுட்பங்களையும் அல்லாஹ் அவனுக்கு வைத்துள்ள நன்மையான வற்றைத் தேடுவதற்கு எல்லா அறிவுரீதியான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மனிதனுக்கு நல்ல சிறந்த விளைவுகளைத் தரக் கூடிய பதுமைகளை உற்பத்தி செய்ய வேண் டும். ஆகவே இஸ்லாம் அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை கொண்டு, அதைத் தேடுவதற்கு செயற்படும்படி கூறுகிறது. அவ்வாறு முயற்சிக் கும் போது அல்லாஹ் நாடிய நல்லதை வெற்றி யாக அடைந்து கொள்ள முடியும் என நம்பிக்கை ஊட்டுகிறது. அல்லாஹ் நிர்ணயித்த ஒன்றைத் தடுக்க யாராலும் முடியாது எனக் கூறுகிறது; அவதானியுங்கள்.

dஅல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடி னால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்ப வர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ் மத்தை நாடினால்(அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாள னாகவும் அவர்கள் காணமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 33:17)

(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன் னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கி விட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்ற லுடையவனாக இருக்கிறான்.
அவனே தன் அடியார்களை அடக்கியாள்ப வன், இன்னும் அவனே, பூரண ஞானமுள்ள வன் (யாவற்றையும்) நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 6:17,18)
அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை வைத்தல் வேண்டும். இன்று மனிதன் விதியின் மீது நம்பிக்கை கொண்டு பொறுமையுடன் முயற்சிப்பதில்லை. மனிதன், களவு, கொள்ளை, சூது, ஏமாறுதல் போன்ற செயற்பாடுகள் மூலமாக மற்றவர்களின் பொருட்களைப் பெற முயற்சிப்பது, அல்லாஹ் ஏற்படுத்திய விதியை நம்பாது இருப்பதனால் ஆகும். அல்லாஹ் அவனுக்குக் கொடுக்க நிர்ணயித்தது தனக்கு கிடடைத்தே ஆகும் என நன்மையான வழி களில் முயற்சித்தல் வேண்டும்.
விதியை நம்பாதவர்களே, சோதிடம் மீது நம்பிக்கை கொள்வார்கள். தாயத்துகளை அணி வார்கள், சூனியக்காரர்களிடம் செல்வார்கள். மடமையான நம்பிக்கைகளில் நம்பிக்கை கொள்வார்கள். ஆனால் விதியின்படி நல்லது நடக்கும் என வைத்தியரை நாடவேண்டும். மருந்துகளைக் கண்டுபிடிக்கவேண்டும். உற்பத் தியை அதிகரிக்க அல்லாஹ் நல்லது தருவான் என்ற நம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும், படிக்கவேண்டும், அறிவை விருத்தி செய்து கொள்ளுதல் வேண்டும். வெற்றியை அல்லாஹ் தருவான் என்ற எண்ணத்துடன் சோம்பலை தவிர்த்து திட்டமிட்டு முயற்சி செய்யின் ஒரு போதும் இகழ்ச்சி அடையமாட்டான். அவ் வாறு மனிதன் முயற்சிக்கும் போதும் அல்லாஹ் நாடினால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை யுடன் செயல்படவேண்டும். அச்சத்தையும், நம்பிக்கைத் தளர்வையும் நீக்குவதற்கு விதியின் மீது நம்பிக்கை வைப்பது அவசியமாகும். மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களையும், துயரங் களையும் தவிர்த்து பொறுமையும், ஆறுதலும் அடைவதற்கு அல்லாஹ் விதித்தது நடக்கும் என்ற நம்பிக்கை மருந்தாக அமையும்.

இன்று மனிதர்கள் தமது செயற்பாடுகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துகிறார்கள், மனிதர் கள் விமானத்தில் பல நாடுகளுக்கும் செல்கிறார் கள். உதாரணமாக அவர்கள் பட்டம் ஒன்றை அமைத்து அதன் மூலம் பறக்க முயன்றால் தோல்வியைத் தழுவுவார்கள் என சாதார ணமாக மனிதனால் முன்னதாகவே கூறமுடி யும். இன்று விஞ்ஞானிகள் முன்னதாக வகுத்த நேர அட்டவணைக்கு அமைய சந்திரனில் கால் பதித்துவிட்டு வருகிறார்கள். அவ்வாறாயின், எந்த முன்மாதிரியும் இன்றிப் படைத்து பரிபாலிக்கக்கூடிய அல்லாஹ்வுக்கு மனிதனின் விதியை முன்கூட்டியே திட்டமிட்டு நிர்ண யிக்க, அறிந்து கொள்ள முடியாதா? அறிவுமிக்க மனித சமுதாயமே! சிந்திக்கவேண்டாமா? ஆகவே, மனிதன் மறுமையில் சுவர்க்கம் செல்வானா? அல்லது நரகம் செல்வானா? என்பதை முன்கூட்டி விதியின்படி நிர்ணயித் துள்ளான். எல்லாவற்றையும் படைத்துக் காக் கும் இறைவன், எந்த மனிதன் அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக்கூடிய இறைவன் வேறு யாருமில்லை எனவும், முஹம்மது (ஸல்) அவர் கள் அல்லாஹ்வின் அடிமையும் இறுதி இறைத் தூதரும் ஆவார்கள் என நம்பிக்கை கொண்டு, அல்குர்ஆனின் வழியில் வாழ்ந்து, இறுதி இறைத் தூதரைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவ ருக்கு சொர்க்கத்தின் வாயில் விதியின்படி இலகு வாக்கப்பட்டிருக்கும் எனலாம். ஆகவே அவர் கள் அல்லாஹ்வுக்கு எந்த இணை துணைகளை யும் ஏற்படுத்தாது வணங்கி வழிபடுவார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் (தலை)விதியின்படி ஒரு நரகவாசிக்கு அல்லாஹ்வுக்கு இணை துணைகளை வைப்பது, பாவமான கருமங் களைச் செய்வது இலகுவானதாக இருக்கும். அவன் ஷைத்தானின் வழிகளைப் பின்பற்று வான். அல்லாஹ்வுக்கு இணை வைப்பான்; தனது மனோ இச்சைக்கு அழகாகக் காணக் கூடிய பாவமான செயற்பாடுகளைத் தொடர்ந்து செய்வான்; அல்குர்ஆனைப் பார்க்க மாட்டான். இறைத்தூதர் காட்டிய வழி யில் நடக்கமாட்டான். அறிவு இருந்தாலும் தமது தாய் தந்தை சென்ற, முன்னோர்கள் வகுத்த ஆதாரஙகள் இல்லாத மடமையான வழி களைப் பின்தொடர்வான். ஆகவே, அல்லாஹ் வின் அருளால் சத்திய மார்க்கம் பற்றிய செய்தி கள் உனக்கு கிடைத்திருக்கும். அல்லாஹ் அரு ளிய அல்குர்ஆனைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
அன்று நபி தோழர்கள் அல்லாஹ்வை நிரா கரித்தவரின் மகன் சிறு வயதில் மரணம் அடை யின் அவரின் நிலை என்ன என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த விளக்கத் தினை அவதானியுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எல்லாக் குழந்தைகளும் இயற் கையின் மார்க்கத்தில் தான் பிறக்கின்றன. அவர் களின் பெற்றோர்கள் தான் அவர்களை யூதர் களாகவோ கிறித்தவர்களாகவோ இணை வைப்பாளர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர் என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! அதற்கு முன்னர் (அறியாப் பருவத்தி லேயே) இறந்து விட்டால், அதன் நிலை (என்ன என்பது) பற்றி எனன சொல்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எப்படி செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான் என்று சொன்னார் கள். (முஸ்லிம் : 5167)

மனிதனுக்கு ஒரு துன்பம் நேர்ந்து விட்ட தன் பின் மனிதன் விதிக்கு மாற்றமாக அப்படி நடந்திருந்தால், அல்லது இப்படி நடந்திருந் தால் துன்பத்தினை தவிர்த்திருக்க முடிந்திருக் கும் எனக் கூறுவது கூடாது. அது அல்லாஹ்வின் விதியின்படி நடந்து முடிந்ததாகும். மனிதன் நடக்கப் போகிறதை நல்லதாக நடக்க பிரார்த் தித்து, இறையச்சத்துடன் அறிவுடன் திட்ட மிட்டு செயற்பட வேண்டும். பின்வரும் நபி மொழியை அவதானியுங்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பலமான இறை நம்பிக்கையாளர், பலவீன மான இறை நம்பிக்கையாளரை விடச் சிறந்த வரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்து விடாதே, உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது, நான் (இப்படிச்) செய்திருந் தால் அப்படி அப்படி ஆயிருக்குமே! என்று (அங்கலாய்த்துக்) கூறாதே.

மாறாக, அல்லாஹ்வின் விதிப்படி நடந்து விட்டது. அவன் நாடியதைச் செய்து விட்டான் என்று சொல், ஏனெனில், (இப்படிச் செய்திருந் தால் நன்றாயிருக்குமே என்பதைச் சுட்டும்) “”லவ்” எனும் (வியங்கோள் இடைச்) சொல்லா னது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். முஸ்லிம் : 5178

மனிதர்கள் அல்லாஹ்வின் விதியை நம்புதல் வேண்டும். ஆனால், அதற்காக விதியின் மீது பழி போட்டு தளர்ந்து போய் செயற்படாது உட் காருவதை அல்குர்ஆனும், நபி மொழிகளும் ஏற்கவில்லை. மனிதன் திட்டமிட்டு, அல்லாஹ் வின் படைப்பினங்களின் செயற்பாடுகளை அவதானித்து, ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அருளால் வெற்றியடைய முயற்சிக்க வேண் டும். அந்த முயற்சியின் போது சில பின்னடைவு களை சந்திக்கும்போது, எல்லாம் அல்லாஹ்வின் செயல், மீண்டும் முயற்சிப்போம். அல்லாஹ் அதைவிட நல்லதை நாடுவான் என்ற நம்பிக்கை யுடன் பிரார்த்தித்து முயற்சியைத் தொடர வேண்டும். வெற்றி கிடைக்கும்போது பெருமை அடையாது அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல வேண்டும். இதுவே அல்லாஹ்வின் பார்வையில் விதியை நம்புவதாகும். அதை விடுத்து ஒருவன் நல்லதை நாடி ஒரு செயற்பாட்டை ஆரம்பித்த போது ஏதேனும் துன்பம் ஏற்பட முடியும். அப்போது அவன் அல்லாஹ்வின் விதியை மறந்தவனாக நான் இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருக்குமே என்று அங்கலாய்வது, துன் பத்தை தவிர்த்திருக்கலாம் என்று நினைப்பது கூடாது அல்லது சகுனம் பார்த்திருந்தால், சோதிடம் பார்த்திருந்தால் அல்லது தாயத்து அணிந்திருந்தால் நன்றாயிருக்கமே என நினைப்பது பெரும் பாவமாகும்.

அல்லாஹ்வை விசுவாசம்(ஈமான்)கொண்ட சிலர் அல்லாஹ்வைத் தொழுவார்கள். ஸகாத் தும் கொடுப்பார்கள். நோன்பு, ஹஜ்ஜுக் கடமைகளை நிறைவேற்றுவார்கள். பல நன்மையான கருமங்களைச் செய்து இஸ்லா மிய மார்க்கத்தில் இருப்பார்கள். ஆனால் அவர் களுக்கு ஈமான் பற்றிய அறிவு குறைவாக இருக் கும். அதாவது அவர்களிடம் இஸ்லாம் இருக் கும் ஆனால் ஈமானில் பலவீனம் காணப்படும். ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் நேர்வழியு டன், ஷைத்தானின் பல தீய வழிகளையும் இணைத்து மார்க்கமாக்கிக் கொள்வார்கள். அல்லாஹ்வுக்குப் பல புது வழிகளில் இணை துணைகளையும் இணைத்துச் செயற்படுவார் கள். இதனால் அவர்கள் முஸ்லிம் சமுதாயத் தைப் பல கூறுகளாக பிரித்து பல துணை மார்க் கங்களை அல்லாஹ்வின் இறைத் தூதருக்குப் பின் ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் இறுதித்தூதர் எச்சரித்துள்ளனர். ஆகவே, அவர்களை அல்குர்ஆன், நபி(ஸல்) அவர்களின் ஸஹீஹான ஹதீஃத்களை அவ தானித்து, இந்த ஷைத்தானிய வழிகளைப் புறக் கணித்து விடுங்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்.

உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின இறை நெறி (அல்குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நடத்தை யாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய் உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளான)து வந்தே தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது. புகாரி: 7277)

ஆகவே ஒவ்வொரு மனிதனும், முஸ்லிம்க ளும் ஈமான் என்றால் என்ன என்பதை அறிந்து இஸ்லாம் மார்க்கத்தின் கடமைகளை கடைப் பிடிக்கும்போதே இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் விதிக்கமைய வெற்றிய அடைய முடியும். சொர்க்கத்தினை அடைந்து கொள்ள முடியும். ஆகவே ஈமான் என்றால் யாது என்பதை அல்குர்ஆன், நபி(ஸல்) அவர்களின் உண்மையான ஹதீஃத்கள் மூலம் அறிந்து சிந்தித்து செயற்பட முயற்சித்து வெற்றியின் பக்கம் செல்லுங்கள்.

Previous post:

Next post: