குர்ஆன், ஹதீஃத் போதனைப்படி… பெண்கள் முகத்தை மூடுவது கூடாது…

in 2017 பிப்ரவரி

இம்ரான் ஹுசைன்

பெண்கள் முகத்தை மூடுவது, நிகாப் வாஜிபோ, சுன்னாவோ அல்ல என்பதை உறுதிப்படுத்தும் 10 குர்ஆன் சுன்னா ஆதாரங்கள் மற்றும் முகம் மூடுவதால் ஏற்படும் விபரீதமும்.

நிகாப் அணிதல் தொடர்பில் பல வாதப் பிரதி வாதங்கள் சமகாலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாரார் நிகாப் அணிவது “”வாஜிப்” கட்டாய மானது என்று கூறுகின்றனர். ஏனையவர்களோ அது கட்டாயமானதல்ல என்ற கருத்தைக் கொண்டுள் ளனர். கட்டாயமில்லை என்கிற கருத்தைக் கொண் டவர்களே முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மை யாக இருக்கின்றனர். எனினும் அண்மைக்காலமாக நிகாப் அணிவதை கட்டாயம் என்ற போக்கில் பிரச் சாரங்கள் நிகழ்ந்து வருகிறது.
எனவே அந்தக் கருத்து எவ்வளவு தூரம் அல்குர் ஆனுக்கும், சுன்னாவுக்கும் ஏற்புடையது என்பதையே இங்கு தெளிவுபடுத்த விளைகிறோம்.

ஆதாரம் : 1
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த் திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங் களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சய மாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (சூரதுன் நூர் : 24:30)

நபியவர்கள் காலத்தில் ஸஹாபியப் பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு செல்பவர்களாக இருந் தால் ஆண்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளு மாறு அல்லாஹ் ஏன் ஆண்களுக்கு ஏவ வேண்டும்?

அக்காலத்தில் பெண்கள் தங்கள் முகங்களை மறைக்காமல் இருந்திருந்தால் மட்டுமே பார்வை யைத் தாழ்த்திக கொள்ளுங்கள் என்று ஏவவேண் டும். எனவே முகத்தை மறைத்தல் என்று ஒன்றை குர்ஆன் ஏவவில்லை என்று தெரிகிறது.

ஆதாரம் : 2
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இளைஞர் களே உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங் களுக்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும்.யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரழி) நூல்: புகாரி:1905
இங்கு திருமணம் அந்நியப் பெண்களைப் பார்ப் பதை விட்டும் பார்வையைக் கட்டுப்படுத்தும் என்று சொல்வதிலிருந்து பெண்கள் தமது முகத்தை மறைத்துக் கொள்ளும் வழமை அங்கு காணப்பட வில்லை என்பது தெளிவாகிறது. முற்றாக பெண்கள் தங்களை மறைத்துக் கொண்டிருந்தால், ஆண் களுக்கு பார்ப்பதற்கு அங்கே எதுவும் இல்லை என் பது வெளிப்படையாகத் தெரியும் உண்மையாகும்.

ஆதாரம் : 3
(இளைஞரான) ஃபழ்ல்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது “”கஸ்அம்” கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப் பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார் கள். (இதைக் கண்ட) அப்பாஸ்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எதற்காக நீங்கள் உங்களு டைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தைத் திருப்பி னீர்கள் என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் ஒரு இளைஞனையும், இளம் பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில் ஷைத்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) நூல் : புகாரி : 1513)

இந்த ஹதீஃத் மிகத் தெளிவாகவே நபியவர் களுக்கு எதிரிலேயே நடந்த சம்பவமொன்றைச் சுட் டிக்காட்டுகிறது. நபியவர்களைச் சந்திக்க வந்த பெண் முகத்திரை அணிந்திருந்தால் அந்த ஸஹாபி யின் பார்வை அப்பெண் மீது விழுந்திருக்காது.

முகம் மறைக்கப்படாது இருந்தமையால்தான் ஸஹாபி அப்பெண்ணைப் பார்க்கிறார். நபியவர் களும் நடக்கப் போகும் விபரீதத்தை அஞ்சி ஸஹாபியின் முகத்தைத் திருப்பி விடுகிறார். பெண் கள் முகத்திரை இடுவது கட்டாயமாக இருப்பின், நபியவர்கள் நிச்சயம் இந்தச் சந்தர்ப்பத்தில் அதனை வலியுறுத்தியிருப்பார்கள். ஆனால் அப்படியயான் றும் இங்கு நிகழவில்லை. இதுவும் முகத்திரை என் பது இஸ்லாத்தில் வாஜிபாகவோ, சுன்னத்தாகவோ இருந்தது கிடையாது என்பதை உறுதியாக நிரூபிக்கிறது.

ஆதாரம் : 4
ஜரீர் பின் அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் அறிவிக் கிறார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல் : திர்மிதி(2700)

இதிலும் முகத்திரையுடன் பெண்கள் இருப்பது கடமையாக்கப்பட்டிருந்தால், ஆண்கள் பெண் களைப் பார்ப்பதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக் காது. அப்படியயான்றை அல்லாஹ்வோ, அவனது ரசூல் (ஸல்) அவர்களோ விதிக்கவில்லை என்பதே இதிலிருந்து தெரிகிறது.

ஆதாரம் : 5
நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் எங் களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவை தாம் நாஙகள் பேசிக்கொள்கின்ற எங்கள் சபைகள் என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அப்படியயன்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வந்து தான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார் கள். மக்கள் பாதையின் உரிமை என்ன? என்று கேட் டார்கள். நபி(ஸல்) அவர்கள் பார்வையைத் தாழ்த் திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல் லாலோ, செயலாலோ) துன்பம் தராமல்இருப்பதும் ஸலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகள்ஆகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத்(ரழி), நூல்:புகாரீ : 2466)

இங்கும் பாதையின ஓரத்தில் பேசிக்கொண்டு இருக்கும்போது பார்வையைத் தாழ்த்திக்கொள்ளு மாறு கூறப்பட்டுள்ளது. அதாவதுபெண்கள் பாதை களில் நடமாடும்போது முகத்தை திறந்து கொண்டே சென்றுள்ளனர் என்பதை இதிலிருந்து முடிவு செய்ய முடியும்.

ஆதாரம் : 6
இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்த மாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள். இன்னும் இவர் களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும், அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. ஹலால் இல்லை; மேலும் அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். அல்குர்ஆன் : 33:52

இந்த குர்ஆன் ஆயத்து நபியவர்கள் 9 திருமணங் களை முடித்திருந்த நிலையில், மேலும் திருமணங் களை முடிக்க வேண்டாம் என்பதை அல்லாஹ் உபதேசிக்கும் ஆயத்தாகும். இங்கு அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஸஹாபியப் பெண்கள் தங்களை முற்றாக மறைத்துக் கொண்டுதான் இருந்தார்கள் என்றால், அவர்களது அழகு நபியவர்களைக் கவரலாம் என்று அல்லாஹ் கூறவேண்டிய அவசியமில்லை. அவர்க ளின் முக அழகு வெளிப்படையாகத் தெரியுமாறு அவர்கள் ஹிஜாப் அணிந்திருந்தாலே ஒழிய இப்படி யயாரு சொல் இடம் பெறுவதற்குச் சாத்திய மில்லை. அப்படி அல்லாஹ் ஒரு சட்டத்தை விதி யாக்கவுமில்லை. அப்படி முகத்தை மறைக்குமாறு நபிகளால் ஏவவுமில்லை என்பதை இது காட்டுகிறது.

ஆதாரம் : 7
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரழி) அறிவித் தார். ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களி டம் வந்து இறைத்தூதர் அவர்களே என்னைத் தங்க ளுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ள) வந்துள்ளேன் என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கி தம் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தம் தலையைத் தொங்கவிட்டார்கள்.

தம் வி­யத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபி தோழர்களில் ஒருவர் எழுந்து இறைத்தூதர் அவர்களே தங்களுக்கு இவர் தேவையில்லையயன்றால் எனக்கு இவரை மணமுடித்து வையுங்கள் என்று கூறினார். முஸ்லிம்: பாகம் 5, அத்தியாயம் :67, எண் : 5087

நபியவர்கள் தம் தோழர்களுடன் இருக்கும் சபைக்கு வந்து தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டபெண்ணை நபியவர்கள் மேலும் கீழும் பார்த்துவிட்டே அமைதியாக இருந்தார். அதாவது அப்பெண்ணின் தோற்றத்தை நபியவர்கள் பார்க்கிறார்கள். அப்பெண் தன் முகத்தை மறைத்து ஆடை அணிந்திருந்தால் அப்படிப் பார்ப்பதற்கு எது வும் இருந்திருக்காது. அப்பெண்ணின் முகம் தெரியும்படியாக இருந்திருந்தாலே யார் அந்தப் பெண், அவள் தோற்றம் எப்படி என்று பார்க்க முடியும். அத்தோடு நபியவர்கள் அப் பெண்ணைத் திருமணம் முடிக்க விரும்பாதது கண்டு பக்கத்தி லுள்ள ஸஹாபி, அப்பெண்ணை மணக்க அனுமதி கோருகிறார். அப்பெண்ணைப் பார்க்காமலோ, தெரிந்து கொள்ளாமலோ திடீரென்று ஒருவர் அப்படி முடிவெடுப்பது சாத்தியமில்லை. அப்பெண் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அவரது முகத்தைக் கண்டிருந்தால் மட்டுமே அப்படி மணக்க அனுமதி கோர முடியும்.

ஆதாரம் : 8
அலியே எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப் பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை(அனுமதிக்கப் பட்டது) இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி) நூல்கள்: திர்மதி, அபூதாவூத்.

ஆதாரம் : 9
நான அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் பாங்கும், இகாமத்தும் இல்லா மல் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள். பிறகு பிலால்(ரழி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப் பிடிக்கு மாறும், இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரை யும், நினைவூட்டலும் வழங்கினார்கள்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெணகள் பகுதிக் குச் சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் தர்மம் செய்யுங்கள். நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகுகள் ஆவீர்கள் என்று கூறினார்கள். அப்போது பெண்களின் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து, ஏன் (இந்த நிலை) அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள்.அப்போது அப்பெண்கள் தம் காதணி கள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை பிலால்(ரழி) அவர்களின் ஆடையில்போட்டார்கள். நூல் : முஸ்லிம் : 1607.

நபி(ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டப் பெண் மணி பற்றி அறிவிப்பாளர் ஜாபிர் (ரழி) குறிப்பிடும் போது கண்ணங்கள் கருத்த பெண்மணி என்று கூறுகிறார். இதில் இருந்து அந்தப் பெண்மணி முகத்தை மறைக்கவில்லை என்பது தெரிகிறது. பெண்கள் முகம் மறைப்பது அவசியம் என்றால் தன்னை நோக்கி கேள்வி கேட்ட பெண்ணின் முகம் வெளியே தெரிந்ததை நபிகள் நாயகம்(ஸல்) அவர் கள் கண்டித்திருப்பார்கள். அவர்கள் கண்டிக்காமல் இருந்தது. பெண்கள் அந்நிய ஆண்கள் முன்னிலை யில் முகத்தை மறைப்பது அவசியம் இல்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஆதாரம் : 10
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது :
நம்பிக்கையுள்ள (மூமினான) பெணகள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந் தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வார்கள். இருட் டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்து கொள்ள முடியாது. நூல் : புகாரீ : 578

இறுதியாக பெண்கள் முகத்திரை அணிந்திருந் தால் அந்த முகத்திரையே அவர்கள் யார் என்று அறிவதற்குத் தடையாக இருந்திருக்கும். ஆனால் இருளின் காரணமாக அப்பெண்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது என ஆயிஷா(ரழி) அவர் கள் அறிவிப்பதிலிருந்தே தொழுகைக்கு வந்த பெண் கள் தொழுது விட்டு வெளியே செல்லும்போது முகத்திரை அணிந்திருக்கவில்லை என்பதை விளங் கலாம். எனவே இதனை குர்ஆன் ஆயத்துக்களும், ஹதீஃத்களினதும் அடிப்படையில் பார்க்கும்போது நபியவர்களோ, அல்லாஹ்வோ பெண்களின் முகத்தை மறைப்பதை ஏவவோ, ஊக்குவிக்கவோ, அது பற்றி ஏதேனும் கருத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூறவில்லை என்பது தெளிவாகி றது. எனவே நிகாப் எனும் முகத்திரை அணிவதை வாஜிப் என்று கூறுவது, முற்றிலும் குர்ஆன் சுன்னா வுக்கு மாற்றமான விளக்கமாகும். அல்லாஹ்வோ நபி(ஸல்) அவர்களோ எச்சந்தர்ப்பத்திலும் அப்படி யயாரு விடயத்தை வலியுறுத்தியது கிடையாது என்பதே உண்மை.

இக் கருத்தையே ஸஹாபாக்கள் காலத்திலிருந்து நவீன காலம் வரை தோன்றிய மிகப் பெரும் பான்மையான இஸ்லாமியத் துறை அறிஞர்களும் இமாம்களும் கூறியிருக்கிறார்கள். நான்கு பிரதான மத்ஹபுகளின் இமாம்களும் முகத்திரை அணிவது கட்டாயமில்லை என்பதையே கருத்தாகக் கொண்டுள்ளனர்.
இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் தனது நூலில் மிகத் தெளிவாகவே முகத்திரை அணிவது வாஜிபோ, சுன்னாவோ அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி முகத்திரை அணிதல் என்பது இஸ்லாத் தில் மிகவும் பலவீனமான, ஆதாரம் மிகவும் குறைந்த ஒரு நிலைப்பாடு ஆகும். மேற்சொன்ன 10 ஆதாரங் களும் முகத்திரை அணிவது இஸ்லாத்திலே வழி யுறுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகின் றது. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

Previous post:

Next post: