ஐயமும்! தெளிவும்!!

in 2017 பிப்ரவரி,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : பெண்கள் பர்தா அணிவதில் முகத்தை மூட வேண்டுமா? அல்குர்ஆன் அத்:33, வசனம்59ல் தமது முந்தானைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக என்று இருக்கிறது. விளக்கம் தேவை.
யூ. மரியம் பீ, குண்டூர், திருச்சி.

தெளிவு : உங்களின் இந்த ஐயத்திற்கு விளக்கமாக இந்த இதழில் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் ஹதீஃத்கள் அனைத்தையும் நீங்கள் நேரடியாகப் படித்து விளங்கினால் உங்களின் ஐயம் தீர்ந்துவிடும்.

ஐயம் : மஹர் தொகை கொடுக்காமல் இறந்த கணவர் தன் மனைவி மீது மஹர் தொகை பாக்கிக்கு என்ன செய்யவேண்டும்? எங்களது கிராமத்தில் இறந்த கணவர் மய்யித்தின் காதருகில் சென்று மஹர் தராததை மன்னித்தேன் என அவர் மனைவி சொன்னதைக் காண நேரிட்டது. இது தவறான செய லாயினும் மஹர் தொகை தராமல் இறந்ததற்கு பரி காரம் என்ன? குர்ஆன், ஹதீஃதில் கூறியிருப்பது என்ன? விளக்கம் தரவும். அப்துர்ரஹ்மான,பெரம்பலூர்
தெளிவு : திருமணத்தின் போது மணமகன் மணமக ளுக்குக் கொடுக்க வேண்டியக் கட்டாய வெகுமதி மஹராகும். மணமகளுக்குரிய தனி உரிமைத் தொகையுமாகும். மணமுடிக்கும் போதே மணப் பெண்ணுக்குரிய மஹர் தொகை முறைப்படி கொடுத்து விடுங்கள் என அல்லாஹ் ஆணையிட்டுள் ளான். (பார்க்க அல்குர்ஆன் : 4:24,25)

நபி(ஸல்) அவர்களது காலத்தில் மஹர், மணம் முடிக்கும்போதே கொடுத்ததற்கு பற்பல நபிமொழி களுள்ளன. இரும்பு மோதிரம், திருகுர்ஆனின் ஒரு சில வசனங்களை கற்றுக் கொடுப்பது போன்ற சாதாரண மஹர்களும், 500 திர்ஹம் முதல் 4,000 திர்ஹம் வரை விலை உயர்ந்த மஹர்களும் கொடுக் கப்பட்டுள்ளது. (பார்க்க இஸ்லாமிய திருமணம்) இம்முறையில் மஹர் திருமணத்தின் போதே கொடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற கேள்விகள் உருவாகி இருக்காது.
நாளடைவில் மஹரை ரொக்கமாகவும், கடனாகவும் கொடுக்கலாமென பிக்ஹு சட்டஙகள் இயற்றப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான ரூபாய் களை செலவழித்து படாடோபத்துடன் நடக்கும் திருமணத்திலும் மஹர் கடனாக எழுதப்படுகிறது. அது மணப்பெண்ணுக்குரியது, தரவேண்டியது என்பதை அறவே மறந்து விடுகிறார்கள். மணப் பெண்ணுக்கு முன் மாப்பிள்ளை இறந்து விட்டால் தாங்கள் கேட்டது போன்ற நிலையில் கைம் பெண்ணுக்கு மஹர் கடன் நினைவூட்டப்படுகிறது. தனது கணவனே இறந்து விட்டானே அவரது சிறிய மஹர் வந்து என்ன பலன்? என்ற நிலையில் கவலை யின் உச்சத்தில் ஒரு தமிழ்ப் பெண்ணாக (இஸ்லா மிய பெண்ணாக அல்ல) அவள் அதனை மன்னித் தேன் என சொல்ல வைக்கிறார்கள். வருந்த வேண் டிய வி­யம் அதே சமயம் அப்பெண் கணவனுக்கு முன் இறந்து விட்டால் அது நினைவூட்டப்படு வதில்லை. கடனாக எழுதப்பட்ட மஹரை கணவன் எவரிடமும் சொல்லாமல் ஏப்பம் விட்டு விடுகிறான். என்னே ஆண் ஆதிக்க வெறி. அல்லாஹ் நம்மனை வரையும் காப்பானாக. ஆமீன்.

உண்மையில் கணவன் மஹர் கடன் தரவேண் டிய நிலையில் மரித்து விட்டால் மனைவி ஒரு இஸ் லாமிய பெண்ணாக அவளது மஹரை குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் பெற முடியும். இறந்து விட்ட கணவனுக்கு சொத்து இருக்குமேயானால் அதனை அல்லாஹ்வும் (அல்குர்ஆன் : 4:12,13,176) அவனது தூதர்(ஸல்) அவர்களும் காட்டிய வழியில் பங்கிடுவதற்கு முன் முதன் முதலாக அவன் மனைவிக்குத் தரவேண்டிய கடனைப் பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் சொத்துப் பங்கீடு வி­யத் தில் ஒருவர் இறப்பதற்கு முன் செய்துள்ள மரண சாசனம்படியும், அவரது கடனையும் கழித்த பின் சொத்தைப் பங்கிடவே அல்லாஹ் ஆணையிடு கிறான். (பார்க்க : அல்குர்ஆன் 4:12)

மரித்தவருக்கு எவ்வித சொத்துமில்லாதிருந்தால் மனைவி மனமொப்பி விட்டு விடலாம். (பார்க்க : அல்குர்ஆன் 4:4) எனவே இறப்பவரின் பொருளா தார நிலையை வைத்து அவரது மனைவி அவளுக் குரிய மஹரைச் சட்டப்படி பெறவோ, மனமொப்பி விடவோ உரிமை இருக்கிறது. இதனை இறப்பவரின் நிலையறிந்த ஊர் மக்களே முடிவு செய்யலாம். அதை விட்டு விட்டு கணவனை இழந்து மனக் கஷ் டத்திலிருக்கும் மனைவியை நிர்பந்தித்து மஹரை மன்னித்தேன் என மைய்யத்தான கணவனின் காதில் கூற வைப்பது கேலிக்குரியதாகும். பலஹீன மான பெண்ணினத்தை அடக்கி ஆளும ஆண வர்க் கத்தின் ஆதிக்க வெறியாகும். இது போன்ற அனாட் சாரங்களிலிருந்து அல்லாஹ் நம்மனைவரையும் காத்தருள்வானாக. ஆமீன்.

ஐயம் : ஒரு வேளை நான் என் இறைவனைத் தவிர வேரொருவரைத் தோழராக தேர்ந்தெடுப்பதாக இருந்தால் அபூபக்கர்(ரழி) அவர்களை தேர்ந்தெடுத் திருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள கூறினார்கள். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஃதில் நபி(ஸல்) அவர்கள் இறைவனைத் தோழனாகக் காட்டுகிறார்கள். இறைவன் எஜமானல்லவா? நாம் எல்லோரும் மற்றும் நபி(ஸல்) அவர்களையும் சேர்த்து அடிமை களல்லவா? முரண்படுவதைப் போல் தெரிகிறதே, தெளிவுபடுத்தவும். ரஹமத்துல்லாஹ், தோஹா, கத்தார்.

தெளிவு : அல்லாஹ் நம்மனைவருக்கும் எஜமானன், நாம் அவனது அடிமைகள் என்பது உண்மையே. அதே சமயம் அளவற்ற அருளாளனும், அன்புடை யோனுமாகிய அல்லாஹ் நமக்கு உறற நண்பனாக இருக்க முடியாது என எண்ணலாமா? நமக்கேற் படும் இன்னல்களையும், இடையூறுகளையும் தக்க சமயத்தில் போக்கி உதவுபவன் அவனல்லவா! ஏஜமானனாகிய அல்லாஹ தனது அடியார்களை உற்ற நண்பர்களாகவும் பாவிக்கிறான் என்பதை மறந்து விடக்கூடாது; திருகுர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர்களை தனது உற்ற நண்பராக(கலீல்) எடுத்துக் கொண்டான். (அல்குர்ஆன்: 4:125)
திருதூதர்களில இப்ராஹீம்(அலை) அவர்க ளுக்கு இறைவன் சில கட்டளையிட்டுச் சோதித்தான். (பார்க்க அல்குர்ஆன் 2:124) அல்லாஹ் வின் அனைத்து சோதனைகளிலும் அவனது உதவி யால் வெற்றிப் பெற்ற இப்ராஹீம்(அலை) அவர் களை தனது உற்றத் தோழனாக, நண்பனாக, கலீலாக எடுத்துக் கொண்டதாக அவனே அறிவிப்ப தைக் காணலாம். அரபியில் கலீல் என்ற சொல்லுக்கு நெருங்கிய தோழன், உற்ற நண்பன், நல்லது, கெட்டது அனைத்திலும் சமப் பங்கு ஏற்ற உயிர்த் தோழன் என்பது பொருளாகும். நம்மனைவருக் கும் பல நண்பர்களிருக்கலாம். ஆனால் மிகவும் நெருங்கிய உயிர் நண்பர்களாக (கலீலாக) மிகச் சிலரே இருப்பர். அதேபோல ரசூல்(ஸல்) அவர்க ளுக்கு நபிதோழல்களிருந்தாலும், சிறு வயது முதல் முதலாக இஸ்லாத்தில் இணைந்தவர், மக்கத்து குரை´கள் அனைவரும் ரசூல்(ஸல்) அவர்களை வெறுத்து எதிர்த்தபோது உடனிருந்தவர், மிஃராஜ் சம்பவத்தை அன்றைய மக்களில் பலர் நம்ப மறுத்த போது கூட எனது நண்பர் முஹம்மது(ஸல்) கூறி னால் அது உண்மையாகத்தான் இருக்குமெனக் கூறி உண்மையாக்கியவர் (அஸ் ஸாதிக்) அல்லாஹுவும், அவனது தூதர்(ஸல்) அவர்களும் போதுமென அனைத்தையும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அர்ப் பணித்தவர்கள் இவையனைத்தும் அபூபக்கர்(ரழி) அவர்கள் ரசூல்(ஸல்) அவர்களுடன் கொண்டிருந்த நெருங்கிய நேசத்தை பாசத்தை நட்பைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. எனவே அபூபக்கர்(ரழி) அவர்கள் ரசூல்(ஸல்) அவர்களின் உயிர்த்தோழர் உற்ற நண்பர், கலீல் எனச் சொல்வதில் தவறில்லை. ஆனால்,

ரசூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையாவது நான் உற்ற தோழனாக உயிர் நண்பனாக கலீலாக எடுக்க நாடினால் அபூபக்கர்(ரழி) அவர்களை எடுத்திருப் பேன். ஆனால் அவர் எனது (மார்க்க) சகோதரராக வும், தோழராகவுமிருக்கிறார். அறிவிப்பவர் : அபூமூஸா, இப்னு உமர், இப்னு அப்பாஸ். ஆதாரங்கள் : புகாரி 5, 6 முதல் 10 முஸ்லிம், நஸயீ, திர்மிதி, அஹ்மது.

அபூபக்கர்(ரழி) அவர்கள் ரசூல்(ஸல்) அவர்க ளின் உற்ற உயிர்த் தோழராக இருந்தபோதிலும் கலீல் என்ற சிறப்பை ரசூல்(ஸல்) அவர்கள் தனது எஜமானனாகிய அல்லாஹுவுக்கே முதலில் அளிக் கிறார்கள். அதற்கு அடுத்த ஸ்தானத்தையே அபூபக் கருக்கு தர விரும்புகிறார்கள. ஆனால் தந்து விட வில்லை, எனவேதான் இந்நபிமொழியில் தனது விருப்பத்தைக் கூறிய ரசூல்(ஸல்) அவர்கள், ஆனால் இவர் எனது (மார்க்க) சகோதரர், தோழர் என விளக்கமளிக்கிறார்கள். இங்கு ஏக இறைவனின் மீது தான் கொண்டிருந்த அளப்பரிய பாசத்தை நேசத்தை வேறு எவருடனும் பங்கிட விரும்பாத ரசூல்(ஸல்) அவர்களின் ஏகத்துவம் (தெளஹீது) மிளிர்வதைக் காணலாம். இவ்விதம் ரசூல்(ஸல்) அவர்கள் அல்லாஹுவை தனது கலீலாக ஏற்றதும் நாம் மேலே குறிப்பிட்ட திருகுர்ஆன் 4:125 வசனப் படியாகும் என்பதை அறியவும்.

ஐயம் : இங்குள்ள அரசு (புrழிணுஷ்ழிஐ றூற்யிக்ஷூ றூலிஸerஐதுeஐமி) குர்ஆன் ஹாஃபிஸ்களுக்காக வருடா வருடம் போட்டி (கேள்விகள் குர்ஆனிலிருந்து கேட்டு பதில் பெறுதல்) நடத்தி அதில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு பரிசு அளிக்கிறது. இப்படி செய் வது கூடுமா? ரஹ்மதுல்லாஹ், தோஹா,கத்தார்.
தெளிவு : ஒரு தடவை ரசூல்(ஸல்) அவர்களத் தனது தோழர் உபை இப்னு கஃபு(ரழி) அவர்களை அழைத்து குர்ஆனை ஓதிக் காட்டும்படியும், அல்லாஹ் தனக்கு அவரிடமிருந்து குர்ஆனை செவி யுறும்படி ஆணையிட்டதாகவும் கூறினார்கள். இதனைச் செவியுற்ற உபை இப்னு கஃபு(ரழி) அவர் கள் அல்லாஹ் தனது பெயரைக் குறிப்பிட்டு கூறினானா யாரசூலுல்லாஹ்? என வினவினார்கள். ஆமாம், என ரசூல்(ஸல்) அவர்கள் கூற உபை(ரழி) அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கலானார்கள். (பார்க்க :முஸ்லிம் : 1:747 முதல் 1749)

ஒரு நாள் இரவு அபூமூஸா அல் அஷ்அரி(ரழி) அவர்கள் திருகுர்ஆன் ஓதும் அழகை ரசூல்(ஸல்) அவர்கள் ரசித்துக் கேட்டார்கள். மறுநாள் அபூ மூஸா(ரழி) அவர்களை நோக்கி ஓ அபூமூஸாவே, நேற்றிரவு நீர் ஓதிய குர்ஆனின் அழகு உமக்கு அல்லாஹ் தாவூத்(அலை) அவர்களுக்குத் தந்த குரல் வளத்தைப் போன்று உள்ளதைக் காட்டுகிறது எனப் புகழ்ந்துரைத்தார்கள். (முஸ்லிம்: 1:1735)

அப்துல்லாஹ் பின்கைஸ் அல் அஷ்அரி(ரழி அன்குமா) அவர்களுக்கு தாவூத்(அலை) அவர்களின் அழகிய, இனிய குரல் வளமிருந்ததாக ரசூல்(ஸல்) அவர்கள் புகழ்ந்துரைத்ததை புரைதா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பார்க்க : முஸ்லிம்: 1:1734)

அல்லாஹ் அனுப்பிய நபிகள்,ரசூல்களில் அழகிய குரல் வளம் கொண்டவர் தாவூத்(அலை) அவர்களாகும். எனவேதான் அவருக்கு அனுப்பப் பட்ட நெறிநூல் ஜபூர் பாடல் வடிவிலிருந்ததாக அஹ்லுகிதாபு(யூத கிறித்தவ) மக்களும் கூறுகின்ற னர். அதனை இந்நபி மொழிகளும் ஓரளவு உண்மைப் படுத்துகின்றன.
இந்நபி மொழிகளிலிருந்து நாம் விளங்குவது என்ன? என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். திருகுர்ஆனை அழகாக, இனிமையாக ஓதுவதை இஸ்லாம் வரவேற்கிறது. இனிய குரல் வளம் கொண்ட நபி தோழர்களை ரசூல்(ஸல்) அவர்கள் புகழ்ந்துரைத்ததைக் காண முடிகிறது. உபை இப்னு கஃபு(ரழி) அவர்களின் நிகழ்ச்சியிலிருந்து அல்லாஹுவும் இதனை அங்கீகரிப்பதைக் காண முடிகிறது. இதனடிப்படையில் முஸ்லிம்களி டையே திருகுர்ஆனின் ஞானம், மனனம், இனிய குரல் வளம் கொண்ட நபி தோழர்களை ரசூல்(ஸல்) அவர்கள் புகழ்ந்துரைத்ததைக் காணமுடிகிறது. உபை இப்னு கஃபு(ரழி) அவர்களின் நிகழ்ச்சியி லிருந்து அல்லாஹுவும் இதனை அங்கீகரிப்பதைக் காணமுடிகிறது.

இதனடிப்படையில் முஸ்லிம்களிடையே திருகுர்ஆனின் ஞானம், மனனம், இனிய குரல் வளம் காண போட்டிகளை உலகளாவிய நிலையில் நடத்துவது தவறெனக் கொள்ள முடியாது. இப் போட்டிகள், முஸ்லிம்களிடையே குறிப்பாக குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களிடையே அதிக உற்சாகத்தையும் குர்ஆனில் அதிக நாட்டத் தையும் உருவாக்க உதவுமல்லவா?

ஐயம் : புகாரி 138வது ஹதீஃதில் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை ஆழ்ந்து (குறட்டை விடும் அளவு) உறங்கி பின், பின் இரவில் எழுந்து சுருக்கமாக ஒளூ செய்து அல்லாஹ் நாடிய அளவு தொழுது விட்டு மீண்டும் குரட்டை விடும் அளவு உறங்கினார்கள். பின்னர் சுபுஹு தொழுகைக்காக அழைத்தபோது ஒளூ செய் யாமலேயே சுபுஹு தொழுதார்கள் என உள்ளது. ஆழ்ந்து உறங்கி எழுந்தால் ஒளூ செயய வேண்டுமா? அல்லது மேலே உள்ள ஹதீஃத் அடிப்படையிலும் தொழலாமா? அப்துர்ரஹ்மான், உத்திரமேரூர்.

தெளிவு : இதே ஹதீஃதின் தொடரில் இதற்கு விளக்கமிருப்பதைப் பாருங்கள். ரசூல்(ஸல்) அவர்களின் கண்கள்தான் உறங்கும். அவர்களின் உள்ளம் உறங்காது என்பது மற்றொரு ஹதீஃதில் இடம்பெறும் வாசகமாகும். அதனை அனைத்து நபித்தோழர்களும் அறிந்து வைத்திருந்தனர். எனவேதான் நபி தோழர்களுக்கு பின் வந்த தாபிஈன்கள் இவ்விசயத்தை கேட்டறிவதை இந்த ஹதீஃதின் தொடரில் காண்கிறோம். கண்கள் உறங்க, உள்ளம் உறங்காமலிருக்கும் நிலை நபி(ஸல்) அவர்களுக்கு இருந்த தனிச் சிறப்பாகும். இந் நிலையில் ஒளூ செய்து, தொழுது விட்டு, உறங்கிய ரசூல்(ஸல்) அவர்கள் தனது ஒளூ முறியாமலிருப் பதை அறியும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நமக்கு அந்நிலையில் ஒளூ இருப்பதை அறிய முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். காற்றுப் பிரிந்து விட்டதை அந்நிலையில் அறிய முடியுமா? சந்தேகமான நிலையே தொடரும். எனவே மேலே குறிப்பிட்ட நிலையை ரசூல்(ஸல்) அவர்களது தனிச் சிறப்பாக கொண்டு, நாம் அவ்விதம் உறங்கி எழுந்தால் ஒளூ செய்து தொழுவதே சரியாகும்.

Previous post:

Next post: