ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2017 மார்ச்

MTM  முஜீபுதீன், இலங்கை

பிப்ரவரி 2017 தொடர்ச்சி……
இஸ்லாம் என்ற சொல்லுக்குச் சாந்தியளித் தல், அமைதியளித்தல், கீழ்ப்படிதல், அடிபணி தல், சரணடைதல், கட்டுப்படுதல், ஒப்படைத் தல், இறைவனுக்கு மட்டுமே வழிபடுதல் என் பன இதன் சொற்பொருள் எனலாம். ஆதி பிதா ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வரை எல்லா இறைத்தூதர்களும் அல்லாஹ்வின் ஆணையின் படி இஸ்லாம் மார்க்கத்தினையே போதித்தனர்.
அல்குர்ஆன் இஸ்லாம் மார்க்கம் பற்றி பல இடங்களில் கூறுவதை அவதானியுங்கள்.

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். நெறிநூல் கொடுக்கப்பட்டவர் கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின் னரும் தமக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார் களோ, நிச்சயமாக அல்லாஹ்(அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

(இதற்குப் பின்னரும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக. நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டி ருக்கிறேன். என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறு வழிப்பட்டிருக்கின்றனர்) தவிர, நெறிநூல் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும் நீங்களும் (அவ்வாறே) வழிப் பட்டீர்களா என்று கேளும்; அவர்களும் (அவ் வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட் டார்கள். ஆனால் அவர்கள் புறக்கணித்து விடு வார்களாயின், (நீர் கவலைப்பட வேண்டாம்) அறிவிப்பது தான் உம்மீது கடமையாகும். மேலும், அல்லாஹ் தான் நாடியவர்களை உற்றுக் கவனிப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் : 3:19-20)

அன்று மக்கா, மதீனாவில் வாழ்ந்த யூத கிறித்தவ வேதக்காரர்கள் இஸ்லாம் தான் அல்லாஹ்வின் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் என்பதை அறிந்தே இருந்தனர். ஆனால் அவர் கள் பொறாமையின் காரணமாகவே அறிந்து கொண்டே வேறுபட்டதாக, உள்ளங்களை அறிந்த அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அவ் வாறு சத்திய மார்க்கத்தை அறிந்து கொண்டே நிராகரித்தவர்களை நோக்கி அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். அவதானியுங்கள்.

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க் கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒரு போதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பர். (அல்குர்ஆன் : 3:85)

அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் இஸ்லாம் மார்க் கத்தைப் பற்றி விபரிப்பதை அவதானியுங்கள்.
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடு கிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்கிறான். யாரை அவன் வழிகெடுக்கிறானோ, அவனு டைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ் சைப் போல் இறுகிச் சுருக்கும்படிச் செய்கி றான். இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்க ளுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்து கிறான். (அல்குர்ஆன் : 6:125)

அல்லாஹ்வை விசுவாசித்த மனித சமுதா யம் நேர்வழி அடைந்து நன்மையின் பால் சென்று தீய வழிகளைத் தவிர்ப்பதற்காக அல்லாஹ் இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் ஐந்து பெரும் வணக்க வழி முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளான். அத்துடன் மனிதன் வாழ்வதற்குத் தேவையான சட்டங்களையும் ஏனைய நன்மை, தீமைகளை யும் நபி(ஸல்) அவர்கள் மூலம் நடைமுறைப் படத்திக் காட்டியுள்ளான். அவற்றைக் கடைப் பிடிப்பது ஒவ்வொரு இறை விசுவாசியின் மீதும் கடமையாகும். இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து தூண்களையும் அவதானிப்போம்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப் பட்டுள்ளது. அல்லாஹ்வையே வழிபட்டு, அவன் அல்லாதவற்றை நிராகரிப்பது; தொழு கையை நிலை நிறுத்துவது; ஜகாத் வழங்குவது இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது ரம ழான் மாதத்தில் நோன்பு நோற்பது. முஸ்லிம் : 20
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு முஸ்லிம்களும் இதன் அடிப்படை யில் செயற்படுவது அவசியமாகும்.

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை எனவும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் எனவும் நம்பிக்கை கொள்ளுதல்.
ஆதி பிதா ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வரை வாழ்ந்த ஒவ்வொரு இறைத்தூதர்களும் அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய இறைவன் வேறு யாருமில்லை என்றே கூறினர். அவர்கள் வாழ்ந்த சமுதாயங்களுக்கு வழிகாட் டினர். அத்துடன், ஒவ்வொரு இறைத்தூதர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த விசுவாசிகள் அக்கால இறைத்தூதர்களை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்று நம்பிக்கை கொண்டனர். இந்த இறைத்தூதர்கள் காட்டிய அல்லாஹ்வின் நேர் வழியையே பின்பற்றினர்.

இதன் அடிப்படையில் முன்னைய இறைத் தூதர்கள் தீர்க்கதரிசனம் கூறிய இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களாவார். ஆகவே அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்கள் காட்டிய வழியில் வாழ்வது ஒவ்வொரு இறை நம்பிக்கையாளர் மீதும் கடமையாகும். மறுமை யின் அடையாளமாக ஈஸா(அலை) அவர்கள் மீண்டும் வரும்போதும் அவர்களும் இறுதி இறைத் தூதரின் வழியையே பின் தொடர்வார் என்றே நபி மொழிகள் இயம்புகின்றன.

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள் ஸித்திகீன்கள்(சத்தியவான்கள்) ஷிஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங் களுடையவர்கள்) ஆகியோர்களுடன் இருப் பார்கள். இவர்கள் தாம் மிக்க அழகான தோழர் கள் ஆவார்கள். (அல்குர்ஆன் : 4:69)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட ஒவ்வொரு இறை விசுவாசியும், இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவது, அத் தூதருக்குக் கீழ்படிந்து நடப்பது அவசியமாகும். மேலும் அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

எவர்(அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப் படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கே கீழ்ப்படி கிறார். யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்ப்படி வதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டி யதில்லை. ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பாளராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் : 4:80)

(4:69,80 இரு குர்ஆன் வசனங்களையும் இன் னும் எண்ணற்ற வசனங்களையும் நிராகரித்து குஃப்ரிலாகிறார்கள் ஹதீஃத் மறுப்பாளர்கள்)
1452 ஹிஜ்ரி ஆண்டுகளுக்கு முன் மக்கா, மதீனா போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் சிலை வணக்கத்தில் ஒன்றுபட்டிருந்தனர். கஅபாவில் 360க்கு மேல் சிலைகள் இருந்தன. அதில் இப்ராஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை), மரியம்(அலை), ஈசா(அலை), முற்காலத்தில் வாழ்ந்த நல்லடியார்களினது சிலைகள் வணக்க வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் மக்காவில் வாழ்ந்த குறை´ நிராகரிப்பாளர் களிடம் இந்த வானம், பூமியைப் படைத்தவன் யார் எனக் கேட்டால் அல்லாஹ் என்றே கூறி னர். ஆனால் அவர்கள் மரியாதை செய்யும் சிலைகள் தம்மை அல்லாஹ்விடம் நெருக்க மாக்கி வைப்பர். தமது குறைகளைத் தீர்ப்பர் என்று நம்பினர். அவற்றிற்கு நேர்ச்சைகள் செய்தனர், அந்தச் சிலைகளுக்காக அறுத்துப் பலி யிட்டனர். அல்லாஹ்வின் தூதர்கள் காட்டிக் கொடுக்காத முறையில் சடங்கு சம்பிரதாயங் களையும் அனுசரித்து வந்தனர். அல்லாஹ்வுக் குப் பயப்படுவது போல் அவற்றுக்கும் பயப்பட் டனர். முன்னோர்களினால் அல்லாஹ்வின் அனுமதி ஆதாரமின்றி பல நம்பிக்கைகளை ஏற் படுத்தி மடமையாக வழிப்பட்டனர். இவ்வா றான செயற்பாடுகளையே பல தெய்வ வணக்க வழிபாடுகள் எனலாம். இந்த இணைவைப்புச் செயற்பாடுகள் மூலமாகவே சமூக ஒற்று மையை ஏற்படுத்தலாம் என நம்பினர்.

ஆனால் ஒருவன் அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக்கூடிய இறைவன் வேறு யாரு மில்லை எனக் கூறி இஸ்லாத்தில் சேர்ந்த போது, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை மட்டுமே பின்பற்ற வேண்டி இருந்தது. அபூதாலிப், அப்துல் முத்தலிப் வாழ்ந்த காலத்தில் இருந்த வணக்க வழிபாடுகளை நிராகரிக்கவேண்டி இருந்தது. அன்று நபி(ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரரான அபூதாலிப் மரணப் படுக்கையில் இருக்கும்போது, அவரிடம் நபி(ஸல்) அவர்கள் தமது தந்தையின் சகோதரிடம் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு உரிய இறைவன் வேறு யாரும் இல்லை என்று கூறும்படி சொன்னார் கள். அதற்கு அருகிலிருந்த அபூஜஹ்ல் கூறிய வார்த்தையை அவதானிப்பின் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. (லா இலாஹ இல்லல்லாஹ்) என மொழிந்து நம்பிக்கை கொள்ளும்போது அதற்கு முன் பின்பற்றிய எல்லா வணக்க வழிபாடுகளையும் புறம் தள்ள வேண்டும் என்பதாகும். அவ்விசயங்கள் தமது பெற்றோர், மூதாதைகள் அல்லாஹ்வின் அங்கீ காரம் இல்லாது உருவாக்கிய சகல மார்க்கங் களையும் புறம் தள்ள வேண்டும் என்பதாகும். ஹதீஃதை அவதானியுங்கள்.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கிவிட்டபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கே அவரருகே அபூஜஹ்லையும், அப்துல் லாஹ் பின் அபிஉமய்யா பின் அல்முஃகீராவை யும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்லுங் கள்! இந்த (ஏகத்துவ உறுதி மொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் சாட்சியம் கூறுகிறேன். என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யாவும் அபூ தாலிபே நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டனர். அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறும்படி அபூதாலிப் அவர்களி டம் கோரிக்கொண்டேயிருந்தார்கள். தாம் முன்பு சொன்னதையே அவரிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இறுதியில் அபூத்தாலிப் கடைசியாக அவர் களிடம் பேசியது நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறேன் என்பதாகவே இருந்தது. லா இலாஹ இல்லல்லாஹ் என்னும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக எனக்குத் தடை விதிக்கப்படும் வரை உங்களுக் காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டே இருப்பேன் என்று சொன்னார்கள். அப்போது தான் கண்ணியமும் மாண்புமுடைய அல்லாஹ் இறைவனுக்கு இணை வைப்பவர் கள் நரகவாசிகள் தாம் என்பது நன்கு தெளி வாகிவிட்ட பின்னரும், அவர்கள் நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரி அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை யில்லை என்னும் 9:113ஆவது வசனத்தை அருளினான். அபூத்தாலிப் தொடர்பாக நபி அவர்கள் (வருந்திய போது) அல்லாஹ் நபியே நீங்கள் விரும்பியவரை(யயல்லாம்) நேர்வழி யில் செலுத்திட முடியாது. மாறாக, அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகி றான் எனும் (28:56வது) வசனத்தை அருளி னான். முஸ்லிம் : 39

அன்று மக்காவில் நெறிநூல்காரர்கள் (வேதங்கள்) வாழ்ந்தனர். ஆனால் குறை´ நிரா கரிப்பாளர்கள் அவர்களை மார்க்க அடிப்படை யில் துன்புறுத்த வில்லை. அதுபோல் குறை´ களும் காணுகின்ற சிலைகளை எல்லாம் சிலை யாக வைத்து வணங்கினர். ஆனால் அவர்கள் ஏகன் அல்லாஹ்வுக்கு மட்டும் கீழ்ப்படிந்து வாழ முன்வரவில்லை. அவர்களுக்குத் தெரிந் திருந்தது. லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லி முஸ்லிம்களாக மாறிவிட்டால், அப் துல் முத்தலிப்பின் மார்க்கத்தினை நிராகரிக்க வேண்டி வரும் என்பது. முன்னோர்கள், மூதா தையரின் மார்க்கங்கள் நிராகரிக்கப்படும். இத னால் அவர்கள் சத்திய மார்க்கம் எது எனத் தெரிந்தும் மறுத்தனர். அல்லாஹ்வுடைய மார்க் கத்தில் இருந்து கொண்டு மூதாதைகளின் மதக் கடமைகளைச் செய்வதற்கு அனுமதி கொடுக் கப்பட்டிருப்பின் நபி(ஸல்) அவர்களை கண்ணி யப் படுத்தியிருப்பார்கள்.

அன்று குறை´ நிராகரிப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரு மார்க்கங்களி லும் இணக்கம் ஒன்றை ஏற்படுத்தச் சம்மதிக்கு மாறு வேண்டினர். அதற்கு அல்லாஹ் அல்குர் ஆன் மூலம் பின்வருமாறு பதில் கொடுத்தான். அவதானியுங்கள்.

நபியே! நீர் சொல்வீராக, காஃபிர்களே! நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்க மாட்டேன். இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களல்லர். அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவ னல்லன். மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். (அல்குர்ஆன்: 109:1-6)

Previous post:

Next post: