அபூ ஃபாத்திமா
தக்வாவைப் பற்றி அல்குர்ஆனில் தக்வா என்று பதினைந்து (15) இடங்களிலும் முத்தக்கூன் என்று (6) ஆறு இடங்களிலும் முத்தக்கீன் என்று நாற்பத்தி மூன்று (43) இடங்களிலும் தக்வா-பயபக்தி பற்றி நேரடியாக அல்லாஹ் கூறியுள்ளான். அதேபோல் இருபத்தியயாரு(21) இடங்களில் ஃகெளஃப்-அச்சம் பற்றிக் கூறியுள்ளான். இவையன்றி ஃகாஃப் என்று ஆறு(6) இடங்களில் அல்லாஹ் கூறியுள்ளான்.
இப்போது கூர்ந்து கவனியுங்கள்! 21 இடங்களி லுள்ள ஃகெளஃபுக்கும், 6 இடங்களிலுள்ள ஃகாஃபுக்கும் மிகச் சரியாக அச்சம், இறையச்சம் எனத் தமிழில் மொழி பெயர்த்த மவ்லவிகள், 15+6+43=64 இடங்களில் வரும் தக்வாவுக்கும் எந்த அடிப்படையில், எந்த அகராதியின் அடிப்படையில் அச்சம், இறையச்சம் என மொழி பெயர்த்துள்ளனர்? அதுவும் 1990க்கு முன்னர் மொழி பெயர்க்கப்பட்ட வற்றைப் பாருங்கள். அவற்றில் தக்வா-பயபக்தி எனச் சரியாக மொழி பெயர்த்துள்ளனர். அப்துல் ஹமீது பாக்கவி, ஜான் டிரஸ்ட் போன்ற பழைய மொழி பெயர்ப்புகளைப் பாருங்கள். அவற்றில் எல்லாம் தக்வாவுக்கு பயபக்தி எனச் சரியாக மொழி பெயர்த்துள்ளனர். ஆனால் இப்போது அப்துல் ஹமீது பாகவியின் கொள்ளுப் பேரன் மவ்லவி உமர் ரீப் சரியான மொழி பெயர்ப்பான பயபக்தி என்று சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள இடங்களில் எல்லாம் சுயநலத்துடன் இறையச்சம் என தவறாக மொழி பெயர்த்துள்ளார். அதேபோல் ஜான் டிரஸ்ட் மொழி பெயர்ப்பிலும் 1987க்குப் பிறகு புகுந்த தவ்ஹீத்(?) மவ்லவிகளும் பயபக்தி என்று இருந்த இடங்களில் எல்லாம் இறையச்சம் என்று சுயநலத்துடன் தவறாக மொழி பெயர்த்து ள்ளனர். இவற்றில் தவறாக இருக்கும் மொழி பெயர்ப்பு களை நாம் முன்னர் சுட்டிக் காட்டியுள்ளோம். அவர் கள் அவற்றைத் திருத்தத் தயாரில்லை. ஆனால் சுய நலத்துடன் சரியான மொழி பெயர்ப்புகளைத் தவ றாக மொழி பெயர்ப்பதில் குறியாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இருக்கும் சுயநலம் என்ன தெரியுமா? மதகுருமார்களான ஆக அடிமட்ட தர்கா, தரீக்கா, பரேல்வி மவ்லவிகளிலிருந்து மத்ஹபு தேவ்பந்த் மவ்லவிகளிலிருந்து, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஸலஃபி, ஜாக், ததஜ, இதஜ என அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள் வரை 2:159-162,186, 7:3, 18:102-106, 33:36, 59:7 போன்ற குர்ஆன் வசனங்கள் நேரடியாகக் கூறும் அல்லாஹ் வுக்கும் மனித குலத்தினருக்கும் இடையில் இடைத்தரகர்களாக-புரோகிதர்களாக-மதகுரு மார்களாக மனிதர்களில் எவருமே வரவே முடி யாது என்ற கடுமையான எச்சரிக்கைகளை நிரா கரித்து குஃப்ரிலாகும் இந்த மவ்லவிகள் எப்படியும் இறைவனுக்கும் மனித குலத்தினருக் குமிடையில் இடைத்தரகர்களாகப் புகுவதில் மிகவும் குறியாக இருக்கிறார்கள். அது எப்போது சாத்தியமாகும்?
இறைவனைப் பற்றிய ஓர் அச்சத்தை, பெரும் பயத்தை உண்டாக்கி, இறைவனை நாம் நேரடி யாக நெருங்க முடியாது. இந்த மதகுருமார்களான மவ்லவிகளைக் கொண்டுதான் இறைவனை நெருங்க முடியும் என்ற குருட்டு, மூட நம்பிக் கையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கமே அடிப்படை நோக்கமாகும். இதை ஓர் உதாரணம் மூலம் எளிதாக விளங்க முடியும்.
சில மூளை வரண்ட தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் தங்கள் கட்டுப்பாட்டை மீறி, தங்களு டைய பரிந்துரை இல்லாமல், தகப்பனிடமிருந்து தங்கள் தேவைகளை அடையக்கூடாது. அந்த நிலை ஏற்பட்டால், தாங்கள் பெற்ற குழந்தைகள் தங்களின் கட்டுப்பாட்டை விட்டுப் போய் விடுவார்கள் என்ற வீண் அச்சத்தில், சிறு பருவத்தில் இருந்தே தந்தைமார்கள் பற்றிய ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தி வருவார்கள். அதன் விளைவு? பிள்ளைகள் நேரடியாகத் தங்கள் தந்தைமார்களை நெருங்கப் பயப்படுவார்கள் எதுவாக இருந்தாலும் தாய்மார்களின் மூலமே, அவர்களின் பரிந்துரை மூலமே தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். தாய்மார்களின் பேச்சைக் கேட்டு தந்தைமார்களை, வயசான காலத்தில் அடிக்க உதைக்க முற்பட்ட பிள்ளைகளையும் பலர் பார்த் திருப்பீர்கள்.
அந்த மூளை வரண்ட தாய்மார்களைப் போல் தான், இந்த மூளை வரண்ட மவ்லவிகளும் செயல் படுகிறார்கள். தாய்மார்கள் தந்தைகளைப் பற்றிய பய உணர்வை உண்டாக்குவது போல், இந்த மவ்லவிகள் இறைவனைப் பற்றிய வீண் அச்ச உணர்வை, பொய்ப் பயத்தை உண்டாக்கி முஸ்லிம்கள் அல்லாஹ் மீது நம்பிக்கை இழந்து இந்த மவ்லவிகளின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இம்மவ்லவிகள் மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க வேண்டும் என் பதே இம் மூளை வரண்ட மவ்லவிகளின் அசல் நோக்கம். என்னே விபரீத புத்தி!.
எப்படித் தாய்மார்கள், பிள்ளைகளைத் தந்தை மார்களைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ. அதேபோல் இம்மவ்லவிகளும் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உண்டாக்கி முஸ்லிம்களை தங் களின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் நேரடியாகக் குர்ஆனில் கூறுவதை எடுத் துக் காட்டினாலும், எங்கள் மவ்லவிகள் இப்படித் தான் கூறுகிறார்கள். எங்கள் மத்ஹபு இப்படித்தான் கூறுகிறது. எங்கள் அண்ணன் இப்படித்தான் கூறுகி றார் என்று கூறி குர்ஆன் வசனங்களையே நிரா கரித்து குஃப்ரிலாகும் வேதனைக்குரிய நிலையையே பார்க்கிறோம்.
மூளை வரண்ட தாயின் துர்போதனையால் தந்தையை உதாசீனம் செய்யும் பிள்ளைகள் போல், மூளை வரண்ட இம்மவ்லவிகளின் துர்போதனை யால் வழிகெட்டுச் செல்லும் முஸ்லிம்கள் குர்ஆன் வசனங்களையே நிராகரிப்பதன் மூலம் அல்லாஹ் வையே உதாசீனம் செய்யும் அவலத்தைப் பார்க்கத் தானே செய்கிறோம். மேலும் ஓர் ஆதாரம்!
2:186, 7:3, 18:102-106,, 33:36, 59:7 குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி கபுரு வழி பாடுகள், தர்கா சடங்குகள் போன்ற பெரும் வழி கேட்டில் மூழ்கி இருக்கும் முஸ்லிம்களிடம் அவர் களின் வழிகெட்ட ´ர்க்கான போக்கை குர்ஆன் வசனங்களை நேரடியாகக் காட்டி எச்சரித்தாலும் அவர்கள் குர்ஆன் வசனங்களை ஏற்றுத் தங்களைத் திருத்திக் கொண்டு நேர்வழிக்கு வருவதாக இல்லை. இந்த ´ர்க்கான செயல்கள் ஆரம்பத்திலிருந்தே சுட்டிக்காட்டப்படுகின்றன. குறிப்பாக அறிஞர் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் இந்த ´ர்க் கான செயல்களைக் கடுமையாகச் சாடியிருப்பதை அவர்களின் ஆதாரபூர்வமான நூல்களிலிருந்து அறியமுடிகிறது. அல்லாஹ் அல்லாதவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள், அல்லாஹ்விடம் பரிந்துரை செய்து ஈடேற்றத்தைப் பெற்றுத் தருவார் கள், அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்பான் என்ற மூட நம்பிக்கையில் அவர்களை வழிபடுவது, ஒருவன் தண்ணீருக்குள் கையை விட்டு, இறுக்கப் பிடித்துக் கொண்டு வெளியில் எடுத்தால் அவன் கையில் தண்ணீர் இருக்குமா? இருப்பதில்லை தானே? அது போன்றதொரு வழிகேடுதான் அவுலி யாக்களை வழிபடுவது எனத் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்.
அவர் வாழ்ந்த காலத்தில் கபுரு வழிபாட்டினர் அவரைக் கடுமையாகத் திட்டினார்கள். மன நோயாளி, பைத்தியக்காரர், வழிகேடன், மூடன் என்று திட்டி அவருக்கு குஃப்ர் ஃபத்வாவும் கொடுத்தனர் இந்த கபுரு வழிபாட்டினர். இன்று அதற்கு மாறாக அவர் இறந்த பின்னர் அவரையும் பெரிய அவுலியாவாக ஆக்கி, அவருக்கொன்று தர்கா கட்டி வழிபாடுகள் செய்து வருகின்றனர். அவரது பெயராலேயே மவ்லூது, இருட்டில் அவரை ஆயி ரம் முறை அழைத்தால் அவர் வந்து உதவி செய்வார்; தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்றெல்லாம் மூட நம்பிக்கைகளை வளர்த்து, இம்மவ்லவிகள் கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்த்து வருகின்றனர்.
இந்த கபுரு வழிபாடு, சமாதிச் சடங்குகள், தர்கா அலங்கோலங்களை சில அறிஞர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். அவர்களில் இப்னு தைமிய்யா, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் போன்றவர்கள் சமீப காலத்தவர்கள். இவர்களால் கபுரு வழிபாடுகள் கடுமையாகச் சாடப்பட்டு மக்களிடையே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தாங்க முடியாத கபுரு வணங்கி மவ்லவிகள், இவர்களைப் பற்றிய பல கட்டுக் கதை களைக் கூறி வெறுப்புணர்வை ஏற்படுத்தி அவர் களின் நூல்களைப் படிக்க விடாமல் முஸ்லிம் களைத் தடுத்து வருகிறார்கள்.
ஆயினும் மவ்லவிகளின் எழுத்துக்களும், பேச் சுக்களும் அவர்கள் வடிகட்டிய மூடர்கள் என்ப தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உதா ரணமாக தர்கா தரீக்கா, மூடச்சடங்குகளை குர்ஆன் வசனங்களைக் காட்டியே எதிர்ப்பவர்களை இம் மூட மவ்லவிகள் “”வஹ்ஹாபி” என்று கூறி சுய அறி வில்லாமல் மூட நம்பிக்கைகளில் மூழ்கி இம்மூட முல்லாக்கள் பின்னால் செல்லும் அப்பாவிப் பெருங் கொண்ட முஸ்லிம்களிடம் கபுரு சடங்குகளை எதிர்ப்பவர்களைப் பற்றிய ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆயினும் அவர்களின் மூளை வரண்ட நிலை யைப் பாருங்கள். “”வஹ்ஹாப்” அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று, கொடை வள்ளல் என்பது அர்த்தம். “”வஹ்ஹாபி” என்றால் அல்லாஹ்வைச் சேர்ந்தவர் என்று பொருளாகிறது. இந்த மவ்லவிகள் தாங்கள் அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள் “”மவ்லவி” என்று தங்களை அழைப்பது போல் (பார்க்க: 8:40, 22:13,78, 44:41, 47:11) “”வஹ்ஹாபி” என்பது அல்லாஹ் வைச் சார்ந்தவர்கள் என்ற பொருளையே தரும்.
இப்போது இந்த மூளை வரண்ட மவ்லவிகளின் அல்லாஹ்வையே இழிவுபடுத்தும் போக்கைப் பாருங்கள். “”வஹ்ஹாப்” அல்லாஹ்வின் பெயர் களில் ஒன்று. வஹ்ஹாபி என்ற பெயரை வெறுப்ப வர்கள் யார்? ஷைத்தானி-ஷைத்தானைச் சார்ந்த வர்களாக மட்டுமே இருக்கமுடியும். ஆக முளை வரண்ட மவ்லவிகள் தங்களை ஷைத்தானைச் சேர்ந்தவர்கள் (தாஃகூத்) என்றே பிரகடனப்படுத்து கிறார்கள்.
இன்னும் பாருங்கள்! இந்த மூட முல்லாக்களின் அறிவீனத்தின் ஆழத்தை, இந்த கபுரு எதிர்ப்புப் பிரசாரத்தைச் செய்தவர் முஹம்மது என்பவராவர். அவரின் தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் (முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்)) அப்துல் வஹ்ஹாப் அவர்கள் கபுரு எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஒருபோதும் செய்ததில்லை. அவரது மகன் முஹம்மது தான் கபுரு வழிபாட்டைக் கடுமையாக எதிர்த்தார்.
அப்படி என்றால் இவர்கள் “”முஹம்மதீ” என்று அல்லவா அவரை இழிவுபடுத்த முற்பட்டிருக்க வேண்டும். அவரது தந்தையை இழிவுபடுத்துவது அவர்களின் நோக்கமாக இருந்தால் “”அப்துல் வஹ்ஹாபி” என்றல்லவா, இழிவுபடுத்தி இருக்க வேண்டும். இரண்டையும் விட்டு “”வஹ்ஹாப்” என்று அல்லாஹ்வின் பெயரை ஏன் இழுக்க வேண் டும்? ஆம்! இந்த மூளை வரண்ட மவ்லவிகளுக்கு அல்லாஹ்வை விட அவனது தூதர் முஹம்மது(ஸல்) உயர்வாகத் தெரிகிறார். “”முஹம்மதீ” என்றால் முஹம்மது(ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதாக ஆகிவிடும் என்று தவறாக எண்ணி அல்லாஹ்வை இழிவுபடுத்தினாலும் பரவாயில்லை. முஹம்மது அவர்களை இழிவுபடுத்தக்கூடாது என்ற எண்ணத் தில்தான் வஹ்ஹாபி, வஹ்ஹாபி என ஓயாது கூறி வருகிறார்கள்.
ஆக, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபை இழிவுபடுத்துவதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வை இழிவுபடுத்துகிறார்கள். இவர்களில் ஒரு கூட்டம் அல்லாஹ்வும் ரசூலும் ஒன்றுதான்; நபி(ஸல்) அவர்கள் மிஃறாஜ் சென்ற இடத்தில் அங்கு தன்னையே கண்டார்கள் என்று உளறுபவர் களும் அவர்களில் உண்டு. இன்னும் பாருங்கள் அவர்களின் வழிகேட்டின் உச்சத்தை!
1986லிருந்து புரோகித எதிர்ப்பு முயற்சியாக அந்நஜாத்தை ஆரம்பித்து எண்ணற்ற இடையூறு களுக்கிடையே தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதில் இம்மவ்லவிகளின் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி வருகிறோம். அதனால் இம்மவ்லவிகள் ஆத்திரப்பட்டு வஹ்ஹாபி என ஒப்பாரி வைப்பது போல் நஜாத் காரன் என இழிவு செய்து மக்கள் அந்நஜாத்தைப் படிக்க விடாமல் தடுத்து வருகிறார்கள். நஜாத் பற்றி குர்ஆன் 40:41 வசனம் என்ன கூறுகின்றது என்று பாருங்கள்.
என்னுடைய சமூகத்தாரே எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின் பால் அதாவது நஜாத்தின் பால் அழைக்கிறேன். ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பின்பால் அழைக்கிறீர்கள். (40:41)
“நஜாத்’ என்றால் ஈடேற்றம்-வெற்றி அதாவது சுவர்க்கம் செல்வோர் என்பது பொருளாகும். அப்படியானால் இம்மவ்லவிகள் தாங்கள் வஹ்ஹாபி அல்ல ஷைத்தானி என்று சொல்வது போல் இங்கு தாங்கள் நஜாத்-வெற்றியடைந்து சுவர்க்கம் செல்பவர்கள் அல்லர். தோல்வியைச் சந்தித்து நரகம் புகுவோர் என்று அவர்களே சுய வாக்குமூலம் அளிக்கின்றனர். அதுவும் ஒவ்வொரு கடமையான தொழுகைகளிலும் 7:55,205 குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி ஓதும் பித் அத்தான அதாவது வழிகேடான கூட்டு துஆவில் “”நஜாத்தன் மினன்னார்” அதாவது நரக நெருப் பிலிருந்து ஈடேற்றம்-வெற்றியைத் தருவாயாக என ஓயாது துஆ செய்து கொண்டு “”நஜாத்காரன்” என இழிவு படுத்துவது அவர்கள் எந்தளவு வடிகட்டின மூடர்கள் என்பதை உறுதிப்படுத்தவில்லையா? முஸ்லிம்களே இந்த நிலையிலும் நீங்கள் இந்த மவ்லவிகளின் பின் கண் மூடிச் சென்றால் (தக்லீது) உங்களின் இறுதி முடிவு நரகம் என்பதில் சந்தேகம் உண்டா?
இந்த விளக்கங்களை இங்கு ஏன் தருகிறோம் என்றால் மவ்லவிகள், மார்க்கம் கற்ற மேதைகள் என வீண் பெருமை பேசும் இவர்களை விட வடிகட்டின மூடர்கள் இவ்வையகத்தில் இல்லை என்பதைப் பொதுமக்கள் புரிய வேண்டும் என்பதற்கே. இம் மவ்லவிகள் உண்மையிலேயே குர்ஆனில் “”உலில் அல்பாப்” என்று அல்லாஹ் கூறும் உண்மையான அறிஞர்களாக இருந்தால் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து குர்ஆனை அற்பக் காசுக்கு விற்பார்களா? நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங் களை நிராகரித்துக் கொடிய ஹராமான வழியில் ஒரு ஜான் வயிற்றை நிரப்புவார்களா? கூலிக்கு மார டிப்பார்களா? அதற்காக எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து நாங்கள்தான் ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்கத்தைக் கரைத்துக் குடித்த மேதைகள், அவாம்களுக்கு மார்க்கம் விளங்காது. நாங்கள் சொல்கிறபடிதான் அவர்கள் நடக்க வேண் டும். குர்ஆன் அவர்களுக்கு விளங்காது. குர்ஆனை அவர்களது மொழிகளிலும் படித்து விளங்க முற் படக்கூடாது. பொருள் அறியாமல் கிளிப் பிள்ளைப் பாடமாக தினசரி ஓதி வரலாம் என வீண் பெருமை பேசுவார்களா? சிந்தியுங்கள். வானத்தின் கீழ் வாழும் மனிதர்களிலே இந்த முஸ்லிம் மதகுருமார் களான மவ்லவிகளை விட, ஆக வடிகட்டின மூடர் கள் வேறு யாரும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். காரணம் இவர்களிடம் தான் அகில உலகிற்கும், அனைத்துப் படைப்பினங்களுக் கும், அனைத்து மனிதர்களுக்கும் ரப்பு, ஏகன் இறைவன் இறக்கியருளிய மதகுருமார்களால் மாசு படுத்தப்படாத வாழ்க்கை நெறிநூல் களின் வரிசையில் இறுதியாகவும், முடிவாகவும் வந்த குர்ஆன் இருக்கிறது.
மனித குலத்தினருக்கே நேர்வழியை, வாழ்க்கை வழிமுறையை மனிதர்களில் எவரது மேல் விளக்கம், சுய விளக்கம் இல்லாமல் விளக்கும் அற்புத குர்ஆனை கையில் வைத்துக் கொண்டு அதை முறைப்படி நடுநிலையோடு விளங்கா மலும், முஸ்லிம்களின் வேதம் என தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய்யைக் கூறி இதர மதத் தினர்(?) குர்ஆனை நெருங்கவிடாமல் தடுத்து வருகின்றவர்கள் அதாவது வைக்கப்போரை காக்கும் நாய்போல் காத்து வரும் இம்மவ்லவி களை விட அடிமுட்டாள்கள், பெரும் வழி கேடர்கள், 16:25 குர்ஆன் வசனம் கூறுவது போல், உலக மக்களின் பாவங்கள் அனைத்தை யும் சுமந்து கொண்டு நாளை நரகின் அடித் தட்டில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஓலமிடப் போகிறவர்கள் இம்மவ்லவிகளை விட இவ்வானத்தின் கீழ் வேறு யாரும் இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.
அல்லாஹ் அல்குர்ஆனில் அனைத்து விசயங் களையும், மனித குலத்தினருக்கென்றே தெள்ளத் தெளிவாக, நேரடியாக, எவ்வித சந்தேகமோ, முரண்பாடோ இல்லா நிலையில் விளக்கி இருப்பதாகவும், இந்த குர்ஆனை நேரடியாகப் படித்து மனித குலத்தினரே சிந்தித்து விளங்கமாட்டீர்களா என்று 54:17,22,32,40 ஆகிய 4 இடங்களில் மீண்டும் மீண்டும் கேட்டுள்ளான். இந்த நிலையில் இந்த வடிகட்டின மூட மவ்லவிகள் அனைத்தையும் முற்றிலும் அறிந்த அல்லாஹ் தெளிவாக விளக்கிய குர்ஆன் வசனங்கள் உங்களுக்கு விளங்காது. 17:85 இறைவாக்குக் கூறுவது போல் அற்பமான அறிவுடைய மவ்லவிகளா கிய நாங்கள் விளக்கித்தான் நீங்கள் குர்ஆனை விளங்க முடியும் என்று வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகளை விட அடிமுட்டாள்கள் இந்த வானத்தின் கீழ் இருக்க முடியுமா? மறுமை நாளில் 16:25 இறைவாக்குக் கூறுவது போல் இம்மவ்லவிகள் தங்கள் பாவச் சுமையை சுமப்ப தோடு உலக மக்களின் பாவச் சுமைகளையும் சுமக்க இருக்கிறார்கள். 16:25 இறைவசனம் கூறுவது போல் இவர்கள் சுமக்கப் போவது மிகமிகக் கெட்டதாகும். மனம் திருந்தி தவ்பா செய்து மீண்டால் போச்சு. இல்லை என்றால் அதோகதிதான். தக்வா-பயபக்தி இறைவனைப் பற்றிய அச்சமும் ஆதரவும் நிறைவாக உள்ள, தக்வா பதம் வந்துள்ள அனைத்து இடங்களி லும் இறையச்சம் என மொழி பெயர்த்து, முஸ்லிம் களுக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்ச-பய உணர்வை ஏன் ஏற்படுத்தியுள்ளனர் என்று இப்போது புரிகிறதா? மக்களே நீங்கள் இந்த மவ்லவிகளை நம்பினால் மீளா நரகம் தான். எச்சரிக்கை.
மீண்டும் மிகமிகக் கடுமையாக எச்சரிக்கி றோம் மவ்லவிகளே! இன்று உலகில் காணப் படும் கொடிய இணை வைப்புகள்(´ர்க்) பஞ்சமா பாவங்கள், மிருகச் செயல்கள் அனைத் திற்கும் முக்கிய காரணம், நீங்கள் இறைவன் இறக்கியருளிய ஒட்டுமொத்த மனித சமுதாயத் திற்கும் சொந்தமான வாழ்க்கை நெறிநூல் குர் ஆனை அது முஸ்லிம்களின் வேதம், முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. முஸ்லிம்களும் தங்கள் தாய் மொழிகளில் படித் தாலும் விளங்க முடியாது. மவ்லவிகள் விளக் கித்தான் புரிய முடியும். குர்ஆனை ஸலஃபுகள் விளங்கியது போல் தான் விளங்க வேண்டும் என்றெல்லாம் தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய்களைக் கூறி மனித குலத்தினரை குர் ஆனை நெருங்க விடாமல் தடுத்து வருவதே யாகும். இன்று அரங்கேறி வரும் ஜனநாயக அரசியல் பித்தலாட்டங்களுக்கும், நீங்கள் உங்க ளின் சுயலாபத்திற்காக வழிகேட்டில் செல்லும் பெரும்பான்மையினரை உங்களின் பக்தர் களாக ஆக்கிக் கொள்வதே காரணமாகும்.
தக்வா-பயபக்தி அச்சமும் இறைவனின் மகத்தான அன்பும் ஆதரவும் நிறைந்ததாகும். ஒருவன் மிகமிகக் கொடிய இணை வைப்பில் மூழ்கியவனாக இருந்தாலும், கடலளவு பாவங் களில் மூழ்கி இருந்தாலும் தனது அத்தவறுகளை உணர்ந்து திருந்தி இறைவனிடம் பாவ மன்னிப் புக் கோரினால் இறைவன் மன்னித்தருளும் மகாமகா கிருபையாளன். இறைவன் மீது எவ ருமே எந்த நிலையிலும் நம்பிக்கை இழக்கக் கூடாது. இதுவே தக்வாவாகும். எவரையும் அல்லாஹ்வுக்கும் தனக்கும் இடையில் இடைத் தரகராக்கிக் கொள்ளக்கூடாது!
அபூ ஃபாத்திமா
தக்வாவைப் பற்றி அல்குர்ஆனில் தக்வா என்று பதினைந்து (15) இடங்களிலும் முத்தக்கூன் என்று (6) ஆறு இடங்களிலும் முத்தக்கீன் என்று நாற்பத்தி மூன்று (43) இடங்களிலும் தக்வா-பயபக்தி பற்றி நேரடியாக அல்லாஹ் கூறியுள்ளான். அதேபோல் இருபத்தியயாரு(21) இடங்களில் ஃகெளஃப்-அச்சம் பற்றிக் கூறியுள்ளான். இவையன்றி ஃகாஃப் என்று ஆறு(6) இடங்களில் அல்லாஹ் கூறியுள்ளான்.
இப்போது கூர்ந்து கவனியுங்கள்! 21 இடங்களி லுள்ள ஃகெளஃபுக்கும், 6 இடங்களிலுள்ள ஃகாஃபுக்கும் மிகச் சரியாக அச்சம், இறையச்சம் எனத் தமிழில் மொழி பெயர்த்த மவ்லவிகள், 15+6+43=64 இடங்களில் வரும் தக்வாவுக்கும் எந்த அடிப்படையில், எந்த அகராதியின் அடிப்படையில் அச்சம், இறையச்சம் என மொழி பெயர்த்துள்ளனர்? அதுவும் 1990க்கு முன்னர் மொழி பெயர்க்கப்பட்ட வற்றைப் பாருங்கள். அவற்றில் தக்வா-பயபக்தி எனச் சரியாக மொழி பெயர்த்துள்ளனர். அப்துல் ஹமீது பாக்கவி, ஜான் டிரஸ்ட் போன்ற பழைய மொழி பெயர்ப்புகளைப் பாருங்கள். அவற்றில் எல்லாம் தக்வாவுக்கு பயபக்தி எனச் சரியாக மொழி பெயர்த்துள்ளனர். ஆனால் இப்போது அப்துல் ஹமீது பாகவியின் கொள்ளுப் பேரன் மவ்லவி உமர் ரீப் சரியான மொழி பெயர்ப்பான பயபக்தி என்று சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள இடங்களில் எல்லாம் சுயநலத்துடன் இறையச்சம் என தவறாக மொழி பெயர்த்துள்ளார். அதேபோல் ஜான் டிரஸ்ட் மொழி பெயர்ப்பிலும் 1987க்குப் பிறகு புகுந்த தவ்ஹீத்(?) மவ்லவிகளும் பயபக்தி என்று இருந்த இடங்களில் எல்லாம் இறையச்சம் என்று சுயநலத்துடன் தவறாக மொழி பெயர்த்து ள்ளனர். இவற்றில் தவறாக இருக்கும் மொழி பெயர்ப்பு களை நாம் முன்னர் சுட்டிக் காட்டியுள்ளோம். அவர் கள் அவற்றைத் திருத்தத் தயாரில்லை. ஆனால் சுய நலத்துடன் சரியான மொழி பெயர்ப்புகளைத் தவ றாக மொழி பெயர்ப்பதில் குறியாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இருக்கும் சுயநலம் என்ன தெரியுமா? மதகுருமார்களான ஆக அடிமட்ட தர்கா, தரீக்கா, பரேல்வி மவ்லவிகளிலிருந்து மத்ஹபு தேவ்பந்த் மவ்லவிகளிலிருந்து, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஸலஃபி, ஜாக், ததஜ, இதஜ என அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள் வரை 2:159-162,186, 7:3, 18:102-106, 33:36, 59:7 போன்ற குர்ஆன் வசனங்கள் நேரடியாகக் கூறும் அல்லாஹ் வுக்கும் மனித குலத்தினருக்கும் இடையில் இடைத்தரகர்களாக-புரோகிதர்களாக-மதகுரு மார்களாக மனிதர்களில் எவருமே வரவே முடி யாது என்ற கடுமையான எச்சரிக்கைகளை நிரா கரித்து குஃப்ரிலாகும் இந்த மவ்லவிகள் எப்படியும் இறைவனுக்கும் மனித குலத்தினருக் குமிடையில் இடைத்தரகர்களாகப் புகுவதில் மிகவும் குறியாக இருக்கிறார்கள். அது எப்போது சாத்தியமாகும்?
இறைவனைப் பற்றிய ஓர் அச்சத்தை, பெரும் பயத்தை உண்டாக்கி, இறைவனை நாம் நேரடி யாக நெருங்க முடியாது. இந்த மதகுருமார்களான மவ்லவிகளைக் கொண்டுதான் இறைவனை நெருங்க முடியும் என்ற குருட்டு, மூட நம்பிக் கையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கமே அடிப்படை நோக்கமாகும். இதை ஓர் உதாரணம் மூலம் எளிதாக விளங்க முடியும்.
சில மூளை வரண்ட தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் தங்கள் கட்டுப்பாட்டை மீறி, தங்களு டைய பரிந்துரை இல்லாமல், தகப்பனிடமிருந்து தங்கள் தேவைகளை அடையக்கூடாது. அந்த நிலை ஏற்பட்டால், தாங்கள் பெற்ற குழந்தைகள் தங்களின் கட்டுப்பாட்டை விட்டுப் போய் விடுவார்கள் என்ற வீண் அச்சத்தில், சிறு பருவத்தில் இருந்தே தந்தைமார்கள் பற்றிய ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தி வருவார்கள். அதன் விளைவு? பிள்ளைகள் நேரடியாகத் தங்கள் தந்தைமார்களை நெருங்கப் பயப்படுவார்கள் எதுவாக இருந்தாலும் தாய்மார்களின் மூலமே, அவர்களின் பரிந்துரை மூலமே தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். தாய்மார்களின் பேச்சைக் கேட்டு தந்தைமார்களை, வயசான காலத்தில் அடிக்க உதைக்க முற்பட்ட பிள்ளைகளையும் பலர் பார்த் திருப்பீர்கள். அந்த மூளை வரண்ட தாய்மார்களைப் போல் தான், இந்த மூளை வரண்ட மவ்லவிகளும் செயல் படுகிறார்கள். தாய்மார்கள் தந்தைகளைப் பற்றிய பய உணர்வை உண்டாக்குவது போல், இந்த மவ்லவிகள் இறைவனைப் பற்றிய வீண் அச்ச உணர்வை, பொய்ப் பயத்தை உண்டாக்கி முஸ்லிம்கள் அல்லாஹ் மீது நம்பிக்கை இழந்து இந்த மவ்லவிகளின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இம்மவ்லவிகள் மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க வேண்டும் என்பதே இம் மூளை வரண்ட மவ்லவிகளின் அசல் நோக்கம். என்னே விபரீத புத்தி!.
எப்படித் தாய்மார்கள், பிள்ளைகளைத் தந்தை மார்களைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ. அதேபோல் இம்மவ்லவிகளும் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உண்டாக்கி முஸ்லிம்களை தங் களின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் நேரடியாகக் குர்ஆனில் கூறுவதை எடுத் துக் காட்டினாலும், எங்கள் மவ்லவிகள் இப்படித் தான் கூறுகிறார்கள். எங்கள் மத்ஹபு இப்படித்தான் கூறுகிறது. எங்கள் அண்ணன் இப்படித்தான் கூறுகி றார் என்று கூறி குர்ஆன் வசனங்களையே நிரா கரித்து குஃப்ரிலாகும் வேதனைக்குரிய நிலையையே பார்க்கிறோம். மூளை வரண்ட தாயின் துர்போதனையால் தந்தையை உதாசீனம் செய்யும் பிள்ளைகள் போல், மூளை வரண்ட இம்மவ்லவிகளின் துர்போதனை யால் வழிகெட்டுச் செல்லும் முஸ்லிம்கள் குர்ஆன் வசனங்களையே நிராகரிப்பதன் மூலம் அல்லாஹ் வையே உதாசீனம் செய்யும் அவலத்தைப் பார்க்கத் தானே செய்கிறோம். மேலும் ஓர் ஆதாரம்!