தாஃகூத்-மனித ஷைத்தான்கள் யார்?

in 2017 மார்ச்

அபூ அப்தில்லாஹ்

(இஸ்லாமிய) மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந் தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகை யால், எவர் மனித ஷைத்தான்களை(தாஃகூத்) நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ; அவர் அறுந்துவிடாத கெட்டி யான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண் டார்; மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (2:256)

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால், நிராகரிப் பவர்களுக்கோ (வழிகெடுக்கும்) மனித ஷைத் தான்கள் (தாஃகூத்) தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவர்களை வெளிச்சத்திலிருந்து, இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றனர். அவர்களே நரகவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பர். (2:257)

(நபியே!) நெறிநூலில் ஒரு பாகம் கொடுக் கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், மனித ஷைத்தான் களையும் (தாஃகூத்) நம்புகின்றனர். மேலும், (இணை வைப்போரைச் சுட்டிக் காண்பித்து), “”இவர்கள் தாம், நம்பிக்கை கொண்டவர்களை விட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றார் கள்” என்று கூறுகின்றனர். (4:51)

(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட (இந்நெறி நூலை)யும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (நெறிநூல்கள் அனைத்)தையும் நம்புவதாக எண்ணிக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில் லையா? அவர்கள் மனித ஷைத்தான்களை (தாஃகூத்) தீர்ப்புக் கூறுபவர்களாக ஆக்கிக் கொள்ள விரும்புகின்றனர்; (ஆனால்) அவர் களோ அவர்களை நிராகரிக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளனர்; ஷைத்தானோ, அவர்களை வெகுதூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான். (4:60)

நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் பெரும் முயற்சி செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் மனித ஷைத்தான்களின் (தாஃகூத்) பாதையில் பெரும் முயற்சி செய் கிறார்கள். ஆகவே, (நம்பிக்கையாளர்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு (தாஃகூத்) எதிராகப் பெரும் முயற்சி புரியுங்கள். நிச்சய மாக ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமான தேயாகும். (4:76)

அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதி பலனை அடைந்தவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ் எவர் களைச் சபித்து, இன்னும் அவர்களை மீது கோப மும் கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்கு களாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், மனித ஷைத்தான்களை (தாஃகூத்) வணங்கியவர்களும் தான், அவர்கள்தாம் தீய இடத்திற்குரியவர்கள்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! (5:60)
மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்தி லும், “”அல்லாஹ்வையே நீங்கள் வழிபடுங்கள், மனித ஷைத்தான்களை(தாஃகூத்) விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்கு மாறு) நம் தூதரை அனுப்பி வைத்தோம். எனவே, அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று? என்ப தைக் கவனியுங்கள். (16:36)
எவர்கள் மனித ஷைத்தான்களை(தாஃகூத்) வழிபடுவதை விட்டும் விலகி, முற்றிலும் அல்லாஹ்வின்பால் முன்னோக்கியிருக்கிறார் களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம். ஆகவே, என்னுடைய அடியார்களுக்கு நன்மாராயம் கூறுவீராக! (39:17)

அவர்கள் சொல்லைச் செவியேற்று, அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள்; அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர் களைத் தாம்; இவர்கள்தாம் அறிவுடையோர். (39:18)

மேலே எடுத்தெழுதப்பட்ட எட்டு(8) இறை வாக்குகளையும் கவனமாகப் படித்துப் பாருங் கள். அவற்றில் காணப்படும் “தாஃகூத்’ என்ற அரபி பதத்திற்கு அனைத்து வழிகெட்டப் பிரிவு களின் மவ்லவிகள் ஷைத்தான் என்றே எழுதி அவை ஜின் இன ஷைத்தானையே குறிக்கின் றன என்ற தவறான கருத்தை பெருங்கொண்ட மக்களிடம் புகுத்தியுள்ளனர். ஆயினும் அல்லாஹ் மனித ஷைத்தான்களை ­யாத்தீன் என்று (2:14) குறிப்பிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறதே அல்லாமல், ஜின் இன ஷைத்தானை அல்லாஹ் தாஃகூத் என்று குறிப்பிட்டுள்ள ஒரேயயாரு வசனத்தையும் பார்க்க முடிய வில்லை. இப்லீசும் ஆதத்திற்கு சுஜூது செய்ய அல்லாஹ் இட்டக் கட்டளையை மீறியதால் வரம்பு மீறத்தான் செய்தான். ஆயினும் அல்லாஹ் இப்லீசை ஷைத்தான் என்று கூறு கிறானேயல்லாமல் தாஃகூத் என்று ஒரு இடத்திலும் கூறவில்லை.

ஆக மேலே எழுதப்பட்டுள்ள 8 குர்ஆன் வசனங்களும் அல்லாஹ்வின் நேரடி வழிகாட் டலை நிராகரித்து குஃப்ரிலாகி எண்ணற்ற குர்ஆன் வசனங்களைக் கண்டு கொள்ளாமல் கண்மூடி அல்லாஹ்வுக்கும் அவனது பிரதான படைப்பான மனித குலத்தினருக்கும் இடையே திருட்டுத்தனமாக, சட்டவிரோத மாகப் புகுந்து இறைவனின் பெயரைச் சொல்லியே மக்களை ஏமாற்றி வயிறு வளர்க் கும் மனித இன ஷைத்தான்களான, மதகுரு மார்களான இம்மவ்லவிகளையே. 7:11-18, 15:22-44 இன்னும் பல வசனங்கள் கூறுவது போல் இறைவனது கடும் கோபத்திற்கும், சாபத் திற்கும் ஆளாகி விரட்டியடிக்கப்பட்டு நரகை யடைந்த ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான இந்த அனைத்து மதங்களின் மதகுருமார்களும் அவர்களை நம்பியுள்ள அப்பாவி மக்களைத் தங்களின் வசீகர, சூன்ய பேச்சால் மயக்கி நரகில் தள்ளும் கொடிய மனித இன ஷைத் தான்களாக-தாஃகூத்களாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதே மேற்படி குர்ஆன் வசனங்கள் கூறும் உண்மையாகும்.
இம்மவ்லவிகள் குர்ஆனில் உள்ளபடி கூறப் படும் கூட்டங்களுக்கு மக்கள் போவதைத் தடுக் கும் செயல்களையே தங்களின் பிரதானக் கடமையாகவே கடைபிடிப்பார்கள். இந்த உண்மையையே மேலே எடுத்தெழுதப்பட் டுள்ள குர்ஆன் வசனங்களும் உறுதிப்படுத்து கின்றன.

எவர்கள் நேர்வழி நடந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கம் நுழைய விரும்பு கிறார்களோ அவர்கள் 2:256 குர்ஆன் வசனத் திற்குக் கட்டுப்பட்டும், நேர்வழி (6:153) தெள் ளத் தெளிவாக உள்ள நிலையில் அல்லாஹ் வையே முழுக்க முழுக்க நம்பி (2:186) குர்ஆனைப் பற்றிப் பிடித்து நடக்கிறாரோ (3:103) அவரே கெட்டியான கயிற்றைப் பற்றிப் பிடித்தவர் ஆவர். அவர்கள் நிச்சயமாக தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான இம்மவ்லவி களை நிராகரித்து விடுவார்கள். மேலும் அல்லாஹ் யார் தாஃகூத்களான இம்மவ்லவி களை நிராகரித்து அல்லாஹ்வையே முற்றிலும் நம்பி குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழி காட்டல்கள்படி நடக்கிறார்கள் என்பதை நன்கறிபவனாகவும் இருக்கிறான்.

இன்னும் 2:257 வசனம் எனன கூறுகிறது? ஈமான் கொண்டவர்களின் பாதுகாவலன் (அவுலியா) அல்லாஹ் மட்டுமே! அல்லாஹ்வே அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்திற் குக் கொண்டு வருகிறான். ஆனால் நிராகரிப்ப வர்களுக்கோ தாஃகூத் என்ற மனித ஷைத்தான் களான மதகுருமார்களே அவர்களின் பாது காவலர்கள். அவர்கள் வெளிச்சத்திலிருந்து (சுவர்க்கம்) இருள்களின் பக்கம் (நரகம்) கொண்டு செல்கிறார்கள். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக இருப்பர் என்று உறுதியாக எச்சரிக்கிறது.

அடுத்து வரும் 4:51 வசனம் என்ன கூறுகின்றது பாருங்கள் !
நெறிநூல் கொடுக்கப்பட்டவர்கள் சிலை, சமாதிகளையும், தாஃகூத் என்ற மனித ஷைத் தான்களான மதகுருமார்களையும் நம்புகின்ற னர். மேலும் சுன்னத் ஜமாஅத், ததஜ, ஜாக் போன்ற பிரிவினைவாதிகளான இணை வைப் பாளர்களைச் சுட்டிக்காட்டி இவர்கள்தான் குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்றி நேர்வழி நடப்பவர்களை விட மிகவும் நேரான பாதையில் இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர் என்று வழிகேடர்களை அடையாளம் காட்டுகிறது.
அடுத்து 4:60 குர்ஆன் வசனம் என்ன கூறுகிறது பாருங்கள்!

உலகம் அழியும் வரை நடைமுறையில் இருக் கும் குர்ஆனையும், இதற்கு முன்னர் இறக்கப் பட்ட அனைத்து வாழ்க்கை நெறிநூல்களையும் நம்புவதாகக் கூறிக்கொண்டு, அவர்கள் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான மதகுருமார்களைத் தீர்ப்புக் கூறுபவர்களாகக் கொள்ளவே விரும்புகின்றனர். ஆனால் அவர் களோ தாஃகூத்களான இம்மதகுருமார்களை நிராகரிக்க வேண்டும் என்று 2:186, 7:3, 18:102-106, 33:36, 59:7 மேலும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள் ளான். ஆனால் ஜின் இன ஷைத்தானோ அவர் களை வெகுதூரமான வழிகேட்டில் தள்ளி விடவே விரும்புகிறான்.
இன்னம் 4:76 குர்ஆன் வசனம் என்ன கூறுகிறது பாருங்கள்!

ஈமான் கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அதாவது குர்ஆன், ஹதீஃத் வழியில் பெரும் முயற்சி செய்கிறார்கள். நிராகரிப்பவர் களோ தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களின் வழியில் பெரும் முயற்சி எடுக்கிறார்கள். ஆகவே நம்பிக்கையாளர்களாகிய நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு (தாஃகூத்) எதிராகப் பெரும் முயற்சி எடுங்கள். நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதேயாகும் என்கிறது.

இன்னும் 5:60 குர்ஆன் வசனம் என்ன கூறுகிறது பாருங்கள் !
அல்லாஹ்விடமிருந்து மிகமிகக் கெட்ட பிரதிபலனை அடைகிறவர்களைப் பற்றி அறி விக்கட்டுமா? அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபமும் கொண்டு, அவர்களில் சிலரை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான மதகுருமார்களை வழிபடுகிறவர்களும்தான். அதாவது இம்மத குருமார்களின் வழிகெட்ட போதனைகளை வேதவாக்காகக் கொண்டு செயல்படுகிறவர் களும்தான். அவர்கள்தாம் தீய இடத்திற்குரிய வர்கள். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள் என்று கூறுமாறு அல்லாஹ் நபிக்குக் கட்டளை யிட்டுள்ளான்.
இன்னும் 16:36 இறைவாக்கு என்ன கூறுகிறது பாருங்கள்!

அல்லாஹ்வுக்கு மட்டுமே வழிபடுங்கள். தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான மத குருமார்களை விட்டும் நீங்கள் விலகி விடுங்கள் என்று தெளிவுபடுத்துவதற்காகவே தூதர்களை அனுப்பி வைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். அவர்களில் அல்லாஹ்வின் நேர்வழி பெற்றோ ரும் உண்டு. அவர்கள் இம்மதகுருமார்களை முற்றிலும் நிராகரித்துப் புறக்கணித்துவிட்டு அல்லாஹ்வின், அவனது தூதர்களின் வழிகாட் டலை மட்டுமே பற்றிப் பிடித்தவர்கள். இம்மத குருமார்களை நம்பி அவர்கள் பின்னால் கண் மூடி (முகல்லிது) சென்றவர்களின் நிலை என்னாயிற்று என்றும் பூமியில் சுற்றுப்பயணம் செய்து அப்பொய்யர்களின் நிலை என்னா யிற்று என்றும் அறிந்துகொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறான். முத்தாய்ப்பாக 39:17,18 குர்ஆன் வசனங்கள் என்ன கூறுகின்றன என்று பாருங்கள்.
எவர்கள் தாஃகூத்களான மனித ஷைத்தான் களான இம்மதகுருமார்களை வழிபடுவதை விட்டும், அதாவது அவர்கள் கூறும் வழிகேடு களை அப்படியே கண்மூடிப் பின்பற்றுவதை விட்டும் (பார்க்க 9:31) முற்றிலும், விலகி, அல்லாஹ்வை மட்டுமே நம்பி (2:186) அவ னையே முன்னோக்கி அவனது வழிகாட்டல் படி அதாவது குர்ஆனின் வழிகாட்டல்படி நடக்கிறார்களோ அவர்களுக்கே அல்லாஹ் வின் நன்மாராயம் கிடைக்கிறது. குர்ஆனைப் பற்றிப் பிடித்து நடக்கும் அந்த நல்லடியார் களுக்கு நன்மாராயம் கூறும்படி நபிக்கே அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

தாஃகூத்களான இம்மதகுருமார்களான மவ்லவிகளின் கேடுகெட்ட புத்தி என்ன தெரி யுமா? தங்கள் பின்னால் வரும் செம்மறி யாட்டுக் கூட்டம் தப்பித் தவறியும் மற்றவர் களின் எழுத்தைப் பார்த்தோ, பேச்சைக் கேட்டோ, தங்களை விட்டுப் பிரிந்து அந்தப் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதில் மிகமிக எச்சரிக்கையாக இருப்பார்கள். தங்களது பக்தர் கள் மற்றவர்களின் நிகழ்ச்சிகளில் போய் கலந்து கொள்ளக்கூடாது என்று மிகமிக எச்சரிக்கை யாக இருப்பார்கள். இவர்களின் கண்மூடிப் பக்தர்கள் அவர் தடுப்பதை வேதவாக்காகக் கொண்டு பிறரது நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வதைத் தவிர்க்கிறார்களோ அதாவது அந்தத் தலைவரை வழிபடுகிறார்களோ (9:31) அவர் கள் இறுதியில் சென்றடைவது நரகமே. அதற்கு மாறாக யார் எழுதினாலும் அதைப் பார்த்து, யார் பேசினாலும் அதைக் கேட்டு அவற்றில் குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டு இருப்பதை ஏற்பவர்களாகவும், குர்ஆன், ஹதீஃதுக்கு முர ணாக இருப்பதைத் தூக்கி எறிபவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்களே நேர்வழி நடந்து சுவர்க்கம் புகுகிறவர்கள். அவர்களே அல்லாஹ்வின் நன்மாராயத்தைப் பெற்றவர் கள். அல்லாஹ் இவர்களைத்தான் நேர்வழியில் நடத்துகிறான். இவர்கள் மட்டுமே அறிவுடை யோர். தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான வரம்பு மீறி நடக்கும் மவ்லவிகளும், அவர்கள் பின்னால் செல்லும் கண்மூடி பக்தர்களும் (தக்லீத்) அறிவு கெட்டவர்களே. பெரும் மூடர் களே. நாளை நரகை நிரப்ப இருப்பவர்களே. (பார்க்க : 33:36,66-68)

இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நடுநிலையோடு படித்து உள்ளத்தில் உள் வாங்கிக் கொள்பவர்கள், நாங்கள்தான் மார்க்கம் கசடறக் கற்ற மேதைகள், மார்க்க விற்பன்னர்கள், மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் என வீண் பெருமை பேசும் (7:146) தர்கா, தரீக்கா, மத்ஹபு, ஹனஃபி, ஷாஃபி, மாலிக்கி, ஹன்பலி, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஸலஃபி, ஜாக், ததஜ, இதஜ, ஜ.இ. மற்றும் அனைத்து வழிகெட்ட பிரிவுகளின் ஒட்டுமொத்த மவ்லவிகளும் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களே. உண்மையான ஆலிம் கள் 21:92, 23:52 குர்ஆன் வசனங்கள் கூறும் ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனப் பிரித்துக் கூறுபோட மாட்டார்கள். 36:21 இன்னும் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி மார்க்கத்தைப் பல மதங்களாக்கி அவை கொண்டு வயிறு வளர்க்கமாட்டார்கள். சமுதாய ஒற்றுமையை தங்களின் சுயநலத்திற்கும், சுய லாபத்திற்கும் சீர்குலைக்க மாட்டார்கள்.

முஸ்லிமீன் என்று அல்லாஹ் இட்ட பெயரில் (22:78, 41:33) ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய பெயரில், சமுதாயத்தை ஒன்றுபடுத்தும் ஒரு முயற்சி இன்ஷா அல்லாஹ் 18 ­ஃபான், 1438, (2017, மே 14) ஞாயிறன்று துறைமங்களம் மூ.லு.மஹாலில் நடக்க இருக்கும் அந்த முயற்சிக்குத் தங்கள் பக்தர்களை தடுப்பது கொண்டே இந்த மவ்லவிகளின் உண்மை நிலையை அதாவது இம்மவ்லவிகள் 39:17 சொல்லும் தாஃகூத்கள் தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

Previous post:

Next post: