படைத்தவனின் பாலிடிக்ஸ்

in 2017 மார்ச்

– நல்லூர் செல்வன்

டாக்டர் ஷாகிர் நாயக் சில மாதங்களுக்கு முன் தீவிரவாதி, பயங்கரவாதி என்ற அடை மொழியுடன் இணைத்து இந்த பெயரை உச்சரிக்காத இந்திய மீடியாக்களே இல்லை என்று சொல்லலாம். இப்போது, இந்தியாவில் இவருடைய ISLAMIC REASEARCH FOUNDATIONக்கு தடை, இதன் பின்னணியில் இருப்பவர்கள், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய விரோத அரசியல்வாதிகள் இதற்கு காரணம். இவருடைய நிகழ்ச்சிகளில் கூடும் கூட்டம். அங்கே எழுப்பப்படும் கேள்விகள், அவற்றுக்கு தரப்படும் அறிவுபூர்வமான, ஆணித்தரமான பதில்கள், அதன் விளைவாக இஸ்லாத்தை ஏற்போர் எண்ணிக்கை பெருகு வது இவையயல்லாம் எங்கே தங்கள் கூடா ரத்தை காலியாக்கி விடுமோ என்று பயப்படு கிறார்கள். அதன் காரணமாக ரொம்ப நாளா கவே ஷாகிர் நாயக்குக்கு வாய்க்கட்டுப் போட வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருந் தது. அதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டி ருந்தார்கள். வெறும் வாயை மென்று கொண்டி ருந்தவனுக்கு அவல் கிடைத்த கதையாக, டாக்காவில் நடந்தது. சில விளங்காப்பயல்கள் நடத்திய பயங்கரவாத தாக்குதல் சம்பவம். அதை வைத்து ஒரு கதையை ஜோடித்து, தீவிர வாதத்துக்கும் ஷாகிர் நாயக்குக்கும் முடிச்சு போட்டு அவரை உள்ளே தள்ளி விடலாம் என்று பார்த்தார்கள். அதற்கு வழியில்லாமல் போகவே, அவருடைய ணூயூய்ல் முறைகேடு நடந் திருப்பதாகச் சொல்லி தடை போட்டிருக்கி றார்கள். சீப்பை ஒழித்து விட்டால், கல்யாணம் நின்று விடும் என்று எண்ணுபவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

வர்ணாசிரம பாலிடிக்ஸ் போன்ற ஒரு பிரித் தாளும் பாலிடிக்ஸ் கொண்டு, மக்களைப் பல குரூப்பாக பிரித்து அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த ஃபிர்அவ்ன் தன்னுடைய ஆளு கைக்குட்பட்ட நிலத்தில் பிறக்கப் போகும் ஒரு ஆண் மகனால்தான் தனக்கு வேட்டு காத்திருக் கிறது என்பதை ஜோதிடர்கள் சொல்லக் கேட்டு, அதைத் தடுப்பதற்கு அவன் மேற் கொண்ட முயற்சிகளெல்லாம் விழலுக் கிறைத்த நீராகிப் போன சரித்திரம் இவர்க ளுக்கு தெரியுமா? பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் ஈவிரக்கமின்றி கொன்றொ ழித்த சரித்திரம் இவர்களுக்கு தெரியுமா? அவனுக்கு வேட்டு வைக்கப் போகிறவரை அவனே வளர்த்த சரித்திரம் இவர்களுக்கு தெரியுமா? அவர் முதலில் திக்குவாய்காரராய் இருந்து பின்னாளில் சரியாகப் பேசிய சரித்திரம் இவர்களுக்கு தெரியுமா? தன்னை வளர்ப்பவருக்கு தன் மூலமாகத்தான் வேட்டு வரப்போகிறது என்பதை அந்த நபரே அறியா திருந்தது இவர்களுக்கு தெரியுமா? அவ்வளவு ஏன்?

முஸ்லிம்களின் ரத்தத்தின் மீது யாத்திரை பாலிடிக்ஸ் நடத்தி, பள்ளிவாசலை இடித்து இரண்டு சீட்டில் இருந்த பா.ஜ.க.வை எண்பதுக்கு உயர்த்திய அத்வானிக்கு, அவரை விட பெரிய ரத்த பாலிடிக்ஸ் நடத்த வைத்து நடத்திய அந்த நபரைக் கொண்டே அவரை செல்லாக் காசாக்க போவது பற்றி தெரியுமா? அந்த நபரை அவரேதான் வளர்த்து விடுவார் என்பது தெரியுமா? தன்னையுமறியாமல் தனக் குத்தானே ஆப்பு வைத்துக் கொள்கிறோம் என்பது தெரியுமா? அனுபவமும், திறமையும், சீனியாரிட்டியும் இருந்தும் அவை எதுவுமே இல்லாத தன்னுடைய சிஷ்யனை கொண்டே தான் செல்லாக்காசாக்கப் படுவோம் என்பது தெரியுமா? அல்லது அந்த சிஷ்யனுக்குதான், தன் குருநாதரை தானதான செல்லாக் காசாக்கப் போகிறோம் என்பது தெரியுமா? இதையயல்லாம் இவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா?

அஹ்மத் தீதாத், ஷாகிர் நாயக் எனும் உலகின் தலைசிறந்த இஸ்லாமிய பிரச்சாரகர் கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அரபு நாடுகளிலிருந்தோ, இந்தோனேசியாவி லிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ, ஆப்கானி லிருந்தோ, ஈரானிலிருந்தோ, புருணையிலி ருந்தோ, பங்களாதே´லிருந்தோ உருவாகா மல், இவர்களின் அடாவடித்தனம் கொடிகட்டி பறக்கும் குஜராத்திலும், மராட்டியத்திலும் உரு வாகியிருப்பதை பற்றி இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஃபிர்அவ்னின் கோட் டைக்குள்ளேயே மூஸா(அலை) உருவா கியதை இது நினைவுபடுத்தவில்லையா?

ஆரம்பத்தில், திக்குவாய்க்காரராக இருந்த ஷாகிர்நாயக் பின்னாளில் ஆங்கிலம், இந்தி, உர்து, சமஸ்கிருதம், அரபி, குர்ஆன், ஹதீஃத், பைபிள், ராமாயணம், மஹாபாரதம், பகவத் கீதை, ரிக், யஜூர், சாமம், அதர்வணம், புத்தர், குருநானக் பாகம், அத்தியாயம், பக்கம், எண் என்று பொளந்து காட்டுவது மூஸா(அலை) அவர்களை நினைவுபடுத்தவில்லையா? இதை யயல்லாம் இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

சிந்தித்து பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதோடு, இந்த மண்ணில் இஸ்லாம் வாழவும், வளரவும் துணை நிற்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும், அவர் கள் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக இருக்கும் அதை விட்டு விட்டு தாங்கள் இப் போது பின்பற்றும் வழிதான் சரியானது, ரத்த பாலிடிக்ஸ்தான் சரியானது என்று அவர்கள் நினைத்தால்,

நிராகரிப்பவர்கள் உங்களை ஒழித்துக் கட்டு வதற்காக எப்படியயல்லாம் பாலிடிக்ஸ் பண் ணிக் கொண்டிருந்தார்கள்? அவர்களும் பாலி டிக்ஸ் பண்ணினார்கள், அல்லாஹ்வும் பாலிடி க்ஸ் பண்ணினான். பாலிடிக்ஸ் பண்ணுவதில் அல்லாஹ் கை தேர்ந்தவன். எல்லோரையும் மிகைத்தவன் என்பதையயல்லாம் (இவர் களுக்கு) எடுத்துச் சொல்லுங்கள். 8:30

இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இப் படித்தான்) பாலிடிக்ஸ் பண்ணிக் கொண்டி ருந்தார்கள். 13:42

அவர்களும் விதம் விதமாகத்தான் பாலி டிக்ஸ் பண்ணிப் பார்த்தார்கள். அவர்களு டைய பாலிடிக்ஸ், மலைகளையே பெயர்த்து விடக் கூடியவையாக இருந்தாலும் அவர்களு டைய ஒவ்வொரு பாலிடிக்ஸையும் முறியடிக் கும் மாஸ்டர் பாலிடிக்ஸ் அல்லாஹ்விடம் இருந்தது (இருக்கிறது). 14:46

அல்லாஹ் அவர்கள் செய்த பாலிடிக்ஸை அடியோடு பெயர்த்தெடுத்து அவர்களின் தலை மீதே விழ வைத்ததையும், அவர்கள் சுதாரிக்கும் முன் நினைத்துக் கூடப் பார்க்காத திசையிலி ருந்து அவர்களுக்கு தண்டனை வந்ததையும் எடுத்துச் சொல்லுங்கள். 16:26

உங்களை ஒழித்துக் கட்டுவதற்கு என் னென்ன தில்லுமுல்லுகளைக் கையாள வேண் டுமோ அத்தனை தில்லுமுல்லுகளையும் அவர் கள் கையாண்டார்கள். கடைசியில் அவர்கள் விரும்பாத நிலையில்தான், (அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தான்) அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் வந்தது, வெற்றி வாகை சூடியது. 9:48

அவன்தான் தன்னுடைய தூதரை வழி காட்டலோடு சத்திய மார்க்கத்தோடு அனுப்பி வைத்தான். இணை வைத்து வணங்குபவர்கள் (அதனை) வெறுத்தாலும் சரி (உலகிலுள்ள மற்ற) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் விழுங்கும்படி செய்வான். 9:33

அல்லாஹ் பூமியை (உருண்டையாக சுருட்டி அதன் கிழக்குப் பகுதிகளும் மேற்குப் பகுதி களும் (சந்திக்கும் இடமான சர்வதேச தேதிக் கோடு போடப்பட்டிருக்கும் இடம்) எனக்குத் தெரியுமாறு காட்டினான். எனக்குக் காட்டப் பட்ட இடங்கள் வரை (அதாவது சர்வதேச தேதிக் கோட்டில் தொடங்கி சர்வதேச தேதிக் கோடு வரை) என் சமுதாயத்தாரின் ஆட்சி பரவும் (அகண்ட முஸ்லிம் சாம்ராஜ்யம் ஏற்படும்) என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் : 5538

அல்லாஹ் தன்னுடைய திட்டம் என்ன? என்பதை தன் தூதர்(ஸல்) வாயிலாக முன்னறி விப்புச் செய்திருக்கிறான். உலகம் முழுவதும் உள்ள தங்கள் கூட்டாளிகளை இவர்கள் சேர்த் துக் கொள்ளட்டும். பாலிடிக்ஸ் பண்ணட்டும். முடிந்தால், இதை தடுத்து நிறுத்தட்டும்.

Previous post:

Next post: