மதகுருமார்கள்-மதங்கள்-ஜனநாயக சாபக்கேடு!

in 2017 மார்ச்,தலையங்கம்

சென்ற இதழில் 10 அறிஞர்கள்+11 மூடர்கள் = 21 மூடர்கள் இதுவே ஜனநாயகம் என்றும் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் இன்றைய அரசியல் என்றும் எழுதி இருந்தோம். இன்றைய தமிழக அரசியலில் இவை நூற்றுக்கு நூறு அரங்கேறி வருகின்றன! என்பதை மறுப்போர் உண்டா? ஹிந் துக்களுக்கு ஓர் இறைவன், யூதர்களுக்கு ஓர் இறை வன், கிறித்தவர்களுக்கு ஓர் இறைவன். இப்படி ஒவ் வொரு மதத்தினருக்கும் ஓர் இறைவன் என்று மதங் களை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுரு மார்கள் கூறி வருவது தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய். அதில் உண்மை அணுவளவும் இல்லை என் பதை மனித குலத்தினர் முதலில் உணர வேண்டும். அண்ட சராசரங்களையும் அனைத்துப் படைப்புக் களையும், மலக்குகளையும், இறுதியில் நரகத் தையோ, சுவர்க்கத்தையோ அடையவிருக்கும் ஜின் குலத்தினரையும், மனித குலத்தினரையும், சோதனை -பரீட்சை வாழ்க்கைக்காகப் படைத்திருப்பவன் பிறப்போ இறப்போ இல்லாதவன், இணை துணை இல்லாத, மனைவி மக்கள் இல்லாத, ஜின், மனித ரைப் போல் எவ்விதத் தேவையும் இல்லாதவன் தன்னந்தனியனான ஒரே இறைவன் தான்.

அந்த ஒரே இறைவன், என்று மனிதனைப் படைத்தானோ அன்றிலிருந்தே ஜின் இனமும் மனித இனமும் எப்படி வாழவேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வாழ்க்கை வழிகாட்டும் செய்தி களாக இறைத்தூதர்களுக்கு வஹி மூலம் இறக்கி யருளி வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கிறான். இப்படி பல்லாயிரக்கணக்கான இறைத்தூதர்களை யும் மனித வளர்ச்சிக்கேற்றவாறு நெறிச் செய்திகள், பின்னர் நெறிநூல்களையும் இறக்கி வழிகாட்டி யுள்ளான்.

ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸ் இறைவனின் ஒரேயயாரு கட்டளையை நிராகரித்து, இறை வனின் கோபத்திற்கு ஆளாகி இறைவனால் விரட்டப்பட்டு ஷைத்தான் ஆனான். நரகவாதி யானான். இந்தக் கோபத்தின் காரணமாக, ஷைத்தான் மனித இன முதல் மனிதர் ஆதத்தின் சந்ததிகளைத் தன்னைப் போல் இறைக்கட்டளை களை நிராகரித்து காஃபிராகி நரகை அடையச் செய்ய வேண்டும் என்ற வெறிகொண்டு செயல் பட்டான். அவனது வெறியை ஏகனாகிய இறைவனி டம் முறையிட்டு அதற்குரிய வரத்தையும் பெற்றுக் கொண்டான் (பார்க்க : இறுதி நெறிநூல் குர்ஆன் அஃராஃப் : 7:11-25, அல்ஹிஜ்ர் : 15:26-44)

ஷைத்தான் ஏகன் இறைவனிடமிருந்து பெற்ற வரத்தின் அடிப்படையில் அதைக் கொண்டு சுவர்க் கத்தில் நூழைந்து அங்கிருந்த முதல் மனிதர் ஆதத்தையும் அவரது மனைவியையும் வழிகெடுத்து இறைவன் தடுத்திருந்த கனியைப் புசிக்க வைத்து இறைவனுக்கு மாறு செய்ய வைத்தான். ஆயினும் அவ்விருவரும் தங்கள் தவறை இப்லீஸ் என்ற ஷைத்தானைப் போல் நியாயப்படுத்த முற்பட வில்லை; மாறாக தங்கள் தவறை உணர்ந்து இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினார்கள். இறைவனும் அவர்களை மன்னித்து சோதனையாக இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தான். (2:30-39)

இவ்வுலகிலும் ஷைத்தான் தனது ஷைத்தானிய சேட்டைகளை மிகவும் வீரியமாக மனித குலத்தின ரிடையே புகுத்தினான். அவர்களில் இறைக் கட்டளைகளை நிராகரித்து ஒரே நேர்வழியை பல கோணல் வழிகளாக்கி அதாவது ஒரே மார்க்கத்தைப் பல கோணல் வழிகள் மதங்களாக்கி அவை கொண்டு கொடிய தவறான வழிகளில் வயிற்றை நிரப்பும் மதகுருமார்களைத் தனது நேரடி ஏஜண்டு களாகத் தேர்ந்தெடுத்தான் ஷைத்தான்.

இந்த மதகுருமார்கள் மீது ஷைத்தான் புகுத்திய தலையாய பணி என்ன தெரியுமா? இறைவனிட மிருந்து நேர்வழி இறைச் செய்திகளை வஹி மூலம் பெற்ற இறைத்தூதர்களை மிகக் கடுமையாக எதிர்ப்பது, அவர்களைப் பேயன், பைத்தியக்காரன், பொய்யன், மனநோயாளி இன்னும் பல இழி சொற்களால் திட்டி மக்கள் அவர்களின் நேர்வழிக் கருத்துக்களைக் கேட்கவிடாமல் தடுப்பது. கொலை செய்வதாக மிரட்டுவது, சில இறைத்தூதர்களைக் கொலையும் செய்துள்ளனர். ஊரை விட்டு விரட்டு வது, இப்படி எண்ணற்றக் கொடுமைகள் செய்து அவர்கள் தங்கள் நேர்வழிச் செய்திகளைச் சுதந்திர மாக மக்கள் மத்தியில் எடுத்து வைப்பதிலிருந்து தடுப்பது இவையே மதகுருமார்களின் இழி செயல் கள். ஷைத்தான் பெற்ற வரத்தின் காரணமாக (பார்க்க : 15:39,40) பெருங்கொண்ட மக்களும் இந்த மதகுருமார்களின் பின்னால் நரகை நோக்கித் தான் செல்வார்கள். (பார்க்க: 32:13, 11:118,119)

இறைத் தூதர்கள் இம்மதகுருமார்களோடு வாழும் காலத்தில் இவ்வாறெல்லாம் கொடுமைப் படுத்தி, சிலரை ஊரை விட்டு விரட்டி, சிலரைக் கொலை செய்து அட்டூழியம் புரிந்த இம்மதகுரு மார்கள் அந்த இறைத் தூதர்களின் மறைவுக்குப் பின் என்ன செய்தார்கள் தெரியுமா? அந்த இறைத் தூதர் களையே வரம்பு மீறி, வானளாவப் புகழ்ந்து அவர் களை இறைவனுக்கு இணையாக, இணை தெய்வங் களாக்கி, துணை தெய்வங்களாக்கி இணை வைக்கச் செய்து பெருங்கொண்ட மக்களை நிரகில் தள்ளு கிறார்கள். ஹிந்து மதத்தினர் தசாவதாரமாகச் சொல் வதும், இன்னும் பல கற்பனைக் கடவுள்களாக்கி வழிபடுவதும், யூத, கிறித்தவ மதகுருமார்களும், அவர்களைப் பின்பற்றுவோரும் ஷைத்தானின் வழிகாட்டல்படி மனிதர்களை, படைப்புகளை தெய்வங்களாக்கி வழிபடுவதும், ஷைத்தானின் வலையில் சிக்கிய தாஃகூத் என்ற மனித ஷைத்தான் களான மதகுருமார்களின் ´ர்க்கான கொடிய செயல் களில் மக்களை மூழ்கடித்து நரகில் தள்ளி ஜின் இன இப்லீஸ் ஷைத்தானின் சபதத்தை நிறைவேற்றத் துணை போகிறவர்களே இம்மதகுருமார்கள்.

ஷைத்தானின் ஏஜண்டுகளான இம்மதகுருமார் கள் இறைத்தூதர்களையும் மனிதர்களையும், மலக்குகளையும், ஜின்களையும் இதர படைப்பினங் களையும் இணை, துணை தெய்வங்களாக்கி அவற்றை மக்கள் வழிபட வைத்து கொடிய இணை வைப்பில் மூழ்கடித்து நரகில் தள்ளுவதோடு அதற்கு உறுதுணையாக இன்னொரு தந்திரத்தையும் கையாள்கிறார்கள். அது என்ன தெரியுமா? அவை தான் வேதங்கள்!

ஆரம்ப கால இறைத்தூதர்களுக்கு இறைவன் ஒருவன்தான். பிறப்பு, இறப்பு இல்லாதவன், இணை துணை இல்லாதவன். மனைவி மக்கள் இல்லை. தேவையற்றவன் அந்த இறைவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும். இறைவனுக்கும் மனிதர் களுக்கும் இடையில் இடைத்தரகர் இல்லை. நேரடி யாக இறைவனிடம் மட்டுமே தங்கள் தேவை களைக் கேட்க வேண்டும். இப்படிச் சொற்பமான செய்திகள் மட்டுமே இருந்ததால் அவை இறைச் செய்திகளாக வஹி மூலம் அறிவிக்கப்பட்டு அந்தந்த இறைத்தூதர்களால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வந்தன. அவை நூல் வடிவைப் பெறவில்லை. எப் படிப் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே தேவைப்பட்டு, அதன் பின்னர் வளர வளர குழந்தை யின் தேவைகளும் அதிகரித்து 21 வயதில் தேவைகள் பூர்த்தியாகி அதன் பின் அவன், அல்லது அவள் நூறு வயது வாழ்ந்தாலும் மேலதிகத் தேவைகள் ஏற்படு வதில்லையோ அது போல் முதல் தூதர் ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர் கள் வரைப் பல்லாயிரம் தூதர்கள் வந்த நிலையில் இறைச் செய்திகள் அதிகரித்து அதிகரித்து இறைநெறி நூல்களுமாகி, இறுதித் தூதருக்கு அருளப்பட்ட இறுதி வாழ்க்கை நெறிநூல் சம்பூரணமாகி நிறைவு பெற்று உலகம் அழியும் வரை மனிதகுலத்தினர் அனைவருக்கும் அல்குர்ஆனே வாழ்க்கை நெறிநூல் என்பதை அல்குர்ஆனே உறுதிப்படுத்துகிறது. (பார்க்க : 5:3, 3:19,85) முஹம்மது (ஸல்) அவர் களுக்குப் பிறகு இறைத்தூதரும் இல்லை. குர்ஆனுக் குப் பிறகு மனித குலத்தினருக்கு வேறு வாழ்க்கை நெறிநூலும் இல்லை.

இங்கு ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான மதகுருமார்கள் செய்த தந்திரம், ஆதி மனிதரில் இருந்து இறைத்தூதர்களை அவதாரமாக இணை, துணை தெய்வங்களாக்கியது போல், இறைநெறிச் செய்திகளிலும் இறைநெறி நூல்களிலும் மனிதக் கருத்துக்களைப் புகுத்தி, மாசுபடுத்தி அவற்றை வேதங்கள் என மக்களிடையே தந்திரமாகப் புகுத்தி விட்டார்கள். 15:39 குர்ஆன் வசனம் கூறுவது போல் வழிகேடுகளையே ஷைத்தான் அழகாகக் காட்டு வதால், மக்களும் அவற்றையே நேர்வழி காட்டும் வேதங்களாகத் தூக்கிப் பிடிக்கின்றனர்.

ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா? முன்னர் இருந்த ஓர் இறைத்தூதருக்கு ஒரு வாழ்க்கை நெறிநூல் கொடுக்கப்பட்டு அவர் அதை மக்களிடையே போதிப்பார். அன்றைய மதகுருமார் கள் அதைக் கடுமையாக எதிர்த்தாலும் இறைவன் நாடும் மிகச் சொற்பமானவர்கள் இறைப் போத னையை எடுத்து நடப்பார்கள். பெரும்பான்மை யினர் அம்மதகுருமார்கள் பின்னால் தான் செல்வார் கள். அத்தூதர் மறைந்தவுடன் அவரை அவதார மாக்கி, அவரது போதனைகளிலும் சுயநலத்துடன் கலப்படமாக்கி அதையே இறைவேதம் எனப் போதிப்பார்கள். அடுத்து வரும் இறைத்தூதர் இறைவனிடமிருந்து நேர்வழிச் செய்தியை வஹி மூலம் பெற்று மக்களுக்கு அறிவிப்பார். அது மக்களி டம் முன்னய இறைத்தூதர் கொடுத்த வேதம் என்று நம்பிச் செயல்படுத்தும் வேதத்திற்கு முரணாக இருக்கும். உடனே இம்மத குருமார்கள் பார்த்தீர் களா? முன்னைய தூதர் போதித்த போதனைக ளுக்கு முரணாக இவர் கூறுகிறார். இவர் பொய்யர் என்றும் இன்னும் பல பொய்ச் செய்திகளைக் கூறி நேர்வழியை ஏற்கவிடாமல் தடுப்பார்கள். ஆனால் இறைவனோ முன்னைய தூதருக்கு அருளப்பட்டு இம்மதகுருமார்களால் வேதமாக்கப்பட்டதை இரத்து செய்துவிட்டே புதிய நெறிநூலை அருள் செய்திருக்கிறான்.

எப்படி அரசுகள் புழக்கத்திலிருக்கும் கரன்சி களை செல்லாதவையாக்கி விட்டுப் புதிய கரன்சிகளைப் புழக்கத்தில் விடுகின்றனவோ அதைச் சரிகாணும், அந்தப் பழைய கரன்சியில் இருக் கும் பல அம்சங்ளைக் காட்டி அவையும் செல்லும் என்று அறிவீனமாக வாதிடமாட்டார்களோ அப் படிப்பட்ட மக்கள், ஆட்சிகளுக்கெல்லாம் மாபெரும் ஆட்சியாளனாகிய இறைவன் அருளியது புழக்கத் தில் இருந்த நெறி நூல்களில், மதகுருமார்கள் பல தகிடுதத்தங்கள் செய்து, கிறுக்கி அசிங்கப்படுத்தி யுள்ள செல்லாத வேதங்களைத் தூக்கிப் பிடிப்பது எப்படிப்பட்ட அறிவீனமான செயல், இறைவனைக் கோபப்படுத்தும் செயல், நாளை நரகில் சேர்க்கும் செயல் என்பதை இறைவனையும், மறுமையையும் நம்பும் ஆத்திகர்கள் சிந்திக்க வேண்டுகிறோம்.

அப்படி முறையாகச் சிந்தித்தால் ஆத்திகர்கள் அனைவரும் முன்னைய வேதங்கள் அனைத்தும் இறைவனால் செல்லாதவை என இரத்து செய்யப் பட்டு, இறுதியாக இறைவன் இறக்கியருளிய குர் ஆன் மட்டுமே புழக்கத்திலிருக்கும் வாழ்க்கை வழி காட்டும் நெறிநூல்; ஒட்டுமொத்த மனித குலத்தி னரும் அதன்படி நடப்பதே மறுமையில் வெற்றி யைத் தரும் என்பதை நிச்சயமாக அறிவார்கள்.

முன்னைய நெறிநூல்களைப் போல் மனிதக் கரம் பட்டு, மாசு பட்டு வேதங்கள் ஆக்கப்பட்டது போல், குர்ஆன் மனிதக் கரம் பட்டு மாசு படாமல் சுமார் 1450 வருடங்களுக்கு முன் அது இறக்கப் பட்டவாறே ஒரு புள்ளி கூட மாறாமல் மிகமிகத் தூய்மையாகவே இருக்கிறது. குர்ஆன் மாசு பட்ட வேதம் அல்ல என்பதும் இன்று வரை நிரூபிக்கப் பட்டு வருகிறது என்பதையும் அறிவார்கள்.

இந்த நீண்ட விளக்கத்தைத் தரும் கட்டாயம் ஏற்பட்டதற்குக் காரணம், மனித குலத்தினர் அனை வரும் குர்ஆனைப் பற்றிப்பிடித்து அதன் வழிகாட் டல்படி நடக்க வேண்டும் என்ற அரிய உண்மையை உணர்த்தவே. ஆயினும் முஸ்லிம் மதகுருமார்கள் உட்பட அனைத்து மதகுருமார்களும் இந்த உண் மையை ஏற்கமாட்டார்கள். காரணம் அது அவர் களின் வயிற்றுப் பிழைப்பு; முதுகில் அடித்தாலும் தாங்குவார்கள்; ஆனால் வயிற்றில் அடித்தால் தாங் குவார்களா? ஆயினும் மறுமையோடு ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை ஒரு நொடி கூட இல்லை என்ற நிலையில், கேவலம் இந்த ஒரு நொடி வாழ்க்கைக்காக, மிகமிக நீண்ட கணக்கிட்டுக் கூற முடியாத நிரந்தர மறு உலக வாழ்க்கையை இழப்ப வன் அறிவாளியாக இருக்க முடியுமா? அடி முட்டா ளாக மட்டுமே இருக்க முடியும். இறைவன் மீதும், மறுமை மீதும் சுவர்க்கம், நரகம் மீதும் மிகமிக உறுதியான நம்பிக்கையுடைய வன், இவ்வுலகில் கண்ணால் பார்ப்பவற்றை விட மிக உறுதியாக மறுமையை நம்புகிறவன் ஒரு போதும் இவ்வுலக வாழ்க்கைக்காக மறு உலக வாழ்க் கையை ஒரு போதும் இழக்க முற்படமாட்டான்.

ஆகத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள். அனைத்து வேதங்களும், முஸ்லிம் மதகுருமார்கள் தூக்கிப் பிடிக்கும் இஜ்மா, ஃகியாஸ், நவீன மத்ஹப் ததஜ மவ்லவிகள் தூக்கிப் பிடிக்கும் லாஜிக் பாலிசி போன்ற பெத்தப் பெயர்களோடு முஸ்லிம்களி டையே வலம் வரும் மனிதர்கள் கற்பனை பிக்ஹ்கள் இவை அனைத்தும் இறைவனது முன்னிலையில் செல்லாக்காசு, வெற்றுப் பேப்பர்கள் மட்டுமே. இவற்றை நேர்வழியாகத் தவறாக எண்ணி நடப்பவர்கள் நாளை நரகை அடைவது உறுதி. இது நமது கூற்றல்ல. குர்ஆன் 7:35-41, 33:36,66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 வசனங்கள் கூறும் உண்மையாகும்.
இப்போது மனித குலத்தினர் ஒட்டுமொத்த மக்களும் உலகம் அழியும் வரை பற்றிப்பிடிக்க வேண்டிய, உலக மக்கள் அனைவருக்கும் சொந்த மான குர்ஆனின் அன்ஆம் 6:116 வசனம் பெரும் பான்மையினரின் கருத்தே ஏற்றுக் கடைபிடிக்க வேண்டியது. அதுவே ஜனநாயகம் என்று மக்கள் கூறுவது பற்றி என்ன கூறுகிறது பாருங்கள்.

பூமியிலுள்ளவர்களில் அதிகமானோரை (தூதரே) நீர் பின்பற்றினால் அவர்கள் உம்மை இறைவனின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர் கள் (வெறும்) கற்பனைகளையும், ஊகத்தையுமே பின்பற்றுவோர் தவிர வேறில்லை. (6:116)

ஷைத்தானின் தூண்டுதலினால் மனோ இச்சைக்கு வழிபட்டு ஜனநாயகம், ஜனநாயகம் என்று கூப்பாடு போடுகிறவர்கள் எவ்வளவு பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள், அவர்கள் வெறும் கற்பனைக் கட்டுக்கதைகளையும், மனிதனை அழிவில் கொண்டு சேர்க்கும் யூகங்களையுமே பின்பற்றுகிறார்கள் என்பதை இந்த 6:116 வசனம் உறுதிப்படுத்தவில்லையா?

மேலும் குர்ஆன் மாயிதா : 5:100 வசனம் கூறுவதைப் பாருங்கள்.
(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும் தீயதும் நல்லதும் சமமாகமாட்டா. எனவே அறிவாளிகளே இறைவ னுக்குப் பயபக்தியுடன் நடங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்று நீர் கூறுவீராக. (5:100)

இந்த இறைவாக்கில் “”யா உலில்அல்பாப்” என்றும் கூறும் அறிஞர்களில், 7:146 இறைவாக்கை நிராகரித்துப் பெருமை பேசும் மதகுருமார்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். இந்த 6:116, 5:100 குர்ஆன் வசனங்கள் கூறும் ஜனநாயகச் சாபக்கேட்டை கடந்த பல்லாண்டு களாக இந்தியர்கள் அனுபவித்து வந்தாலும் அதன் உச்சக் கட்டத்தை கடந்த சில மாதங்களாக கண்டு வருகிறோம். அனுபவித்து வருகிறோம். கடைந் தெடுத்த அயோக்கியர்கள், பொய்யர்கள், மக்கள் சொத்தை ஒரு வகையில் சேதப்படுத்துவதோடு, பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தை வாரிச் சுருட்டி வெளிநாடுகளில் சொத்து சேர்ப்பவர்கள், துணிந்து கொலை செய்கிறவர்கள், பின்னர் காவல்துறை யினருக்கும், வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்துத் தப்பித்து, சுதந்திரமாக மக்கள் மத்தியில் பெருமையுடன் பவனி வருகிறவர்கள், குடி, கூத்து, விபச்சாரம் இவற் றில் முங்கிக் குளிப்பவர்கள், இப்படிக் கணக்கில் அடங்கா அட்டூழியங்கள், அக்கிரமங்கள் இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்கள்தான் ஜனநாயக அடிப் படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.சி, எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி, முதன் மந்திரி, பிரதம மந்திரி எனப் பெருமையுடன் பவனி வருகிறார்கள்.

இவர்கள் இயற்றும் சட்டங்களோ கேட்கவே வேண்டியதில்லை. விவசாயிகளையும், ஏழை எளிய மக்களையும் வஞ்சித்து அவர்களை ஒருவேளை கஞ்சிக்கும் வழியில்லாமல் திண்டாடவிட்டு, பல்லா யிரம் கோடிகளுக்கு அதிபதிகளான கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் செல்வந்தர்கள். மேலும் மேலும் பல்லாயிரம் கோடிகளைத் தவறான வழி களில் திரட்டுவதோடு, இந்த அரசியல் வியாபாரி களுக்கும் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு சட்டம் இயற்றி அவர்களை வளர்த்து வருகிறார்கள்.

அது மட்டுமா? மதுபானக் கடைகள் நடத்துவது விபச்சார விடுதிகள் நடத்துவது, பலவகை சூதாட் டங்களை வளர்ப்பது, ஆணும், ஆணும், பெண்ணும் பெண்ணும் அவர்களின் மனித உரிமை எனச் சொல்லி மணமுடித்துக் கொள்ள சட்டம் இயற்று வது இப்படி ஐயறிவு மிருகங்களே வெட்கப்படும் அசிங்கமான சட்டங்களை இயற்றுவது இவை யயல்லாம் ஜனநாயக சாபக்கேடு அல்லாமல் வேறு என்ன சொல்லுங்கள்!

இன்னும் இவை போன்ற மிருக வாழ்க்கைக்கு வழி வகுப்பதுதான் ஜனநாயகச் சாபக்கேடு. ஆறறிவு மனிதனை ஐயறிவு மிருகங்களை விட ஒரு கேடு கெட்ட வாழ்க்கை வாழ வழி வகுப்பதே ஜனநாயக அரசியல். ஜனநாயக அரசியல் மட்டுமல்ல, 17:85 குர்ஆன் வசனம் கூறும் அற்ப அறிவுடைய மனிதனின் கற்பனையில் உதித்த சர்வாதிகார, கம்யூனிச, சோசலிச, இன்னும் எத்தனை வகைகள் மனிதக் கற்பனையில் உருவான அரசியல் வகைகள் மனிதனை வாழ வைக்கா. அவனை மிருகமாக்கி வீழ வைத்து நாளை நரகில் சேர்ப்பவையே.

இன்று அகில உலக நாடுகள் அனைத்தையும் உற்றுப் பாருங்கள். அந்தந்த நாடுகளின் ஆட்சியா ளர்களாக இருந்தாலும் ஜனாதிபதி, பிரதமர், சர்வாதிகாரி, மந்திரிகள், பெரும் பெரும் செல்வந்தர் கள், நடுத்தர வர்க்கம், ஏழை எளியவர்கள் என யாரை எடுத்தாலும் ஒருவகை துன்ப சோக வாழ்க்கையே வாழ்கிறார்கள். பெரும் செல்வந்தர் களில் எத்தனை பேர் இரவில் தூக்க மாத்திரை போடாமல் தூங்குகிறார்கள். குறிப்பாகச் சொன் னால் மனித குலத்தினர் அன்றாடம் சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் தமிழகச் சட்டசபையில் அரங்கேறிய ஆகக் கேடுகெட்ட அசிங்கக் காட்சிகளை மக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்ததுதானே. முத்தரப்பு எம்.எல்.ஏக்களும் பண்பட்ட மனிதர்களாக இருந் தால் இப்படிப் பண்பாடற்ற செயல்களில் ஈடுபட்டி ருப்பார்களா? ஆட்சியைப் பிடித்து வழமையாக மக்களின் சொத்தைப் பல்லாயிரம் கோடி, பல்லா யிரம் கோடி எனக் குறுக்கு வழிகளில் கொள்ளை யடிக்கும் கேடுகெட்ட தீய எண்ணத்துடன் முத்தரப் பாரும் செயல்பட்டது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகிறதே! உண்மையில் மக்களுக்குத் தொண்டு செய்யும் நன்நோக்கம் இருந்தால் இப் படிப்பட்டத் தீய செயல்களில் ஈடுபடுவார்களா? மக்கள் சொத்தைக் கொள்ளை அடிப்பதே மூன்று சாராரின் அசல் நோக்கம். இன்னுமா ஜனநாயக ஆட்சியில் மக்கள் மயங்குகிறார்கள்?
தாஃகூத் என்ற மதகுருமார்கள் எப்படித் தங்களின் ஹராமான வயிற்றுப் பிழைப்புக்காக வழி கெட்ட பெருங்கொண்ட மக்களின் ஆதரவை எதிர் பார்க்கிறார்களோ அதுபோன்றே அரசியல் குருமார் கள் வழிகெட்ட பெருங்கொண்ட மக்களின் விருப்பப்படி நடக்கும் ஆட்சியையே விரும்புகிறார் கள். அதுவே ஜனநாயக ஆட்சி – சாபக்கேடு.

பரீட்சை எழுதும் மாணவனிடமே அதைத் திருத்தும் பொறுப்பைக் கொடுத்தால் என்ன நடக் கும்? குற்றவாளியிடமே தீர்ப்பளிக்கும் அதிகாரத் தைக் கொடுத்தால் என்ன நடக்கும்? 67:2 குர்ஆன் வசனம் கூறுவது போல் இவ்வுலகில் சோதனை வாழ்க்கை அதாவது பரீட்சை வாழ்க்கை வாழும் மனிதனிடம் பரீட்சைக்குரிய கேள்விகளையும், கேள்விகளுக்குரிய விடைகளையும் கொடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டால் அது பரீட்சையாக இருக்க முடியுமா? சிந்தியுங்கள்!
எனவே மனிதனே தனது வாழ்க்கைக்குரிய சட்டங்களை வகுத்து அதன்படி நடக்க முற்பட் டால் ஆறறிவு மனிதன் ஐயறிவு மிருகத்தை விட கேடுகெட்ட நிலைக்குத் தள்ளப்பட்டு நாளை நரகை அடைவது திண்ணம்.

அப்படியானால் மனிதன் யார் கொடுத்த வாழ்க்கைத் திட்டப்படி நடக்க வேண்டும்? இவனைப் போல் அற்ப அறிவுள்ள மனிதன் கண்டு பிடித்தக் கருவியை இயக்க அவனே வழிகாட்டு கையேட்டையும் அக்கருவியை இயக்கிக் காட்டும் ஒரு பொறிஞரையும் அனுப்பி வைப்பதைப் பார்க் கத்தானே செய்கிறோம். அப்படியானால் மனிதனைப் படைத்த பேரறிஞன் யார்? இறைவன் தானே. அப்படியானால் அந்த இறைவனே மனிதக் கருவியை இயக்க வழிகாட்டும் நுலையும், அதை இயக்கிக் காட்ட ஒரு பொறிஞரையும் அனுப்பியுள் ளதை ஐயறிவை மட்டுமே பயன்படுத்தாமல், ஆறாவது அறிவான பகுத்தறிவையும் முறையாகப் பயன்படுத்துகிறவர்கள் மறுக்க முடியுமா?

ஆம்! மனிதக் கருவியைப் படைத்த இறைவன் அதை இயக்க வழிகாட்டும் நூலான குர்ஆனையும், மனிதக் கருவியை இயக்கிக் காட்ட அவனது தூதரான முஹம்மதையும் தந்துள்ளான். அந்த முஹம்மது(ஸல்) அவர்கள் 1450 ஆண்டுகளுக்கு முன்னரே அப்படிப்பட்ட ஓர் இறையாட்சியை நிறுவி அற்புதமாக நடைமுறைப்படுத்தியும் காட்டி விட்டார்கள். அவரது இறப்புக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலீஃபாக்கள் நியாயமான, நடு நிலையான அறிவுடைய பல அறிஞர்கள் இதுவரை ஏற்றிப் போற்றி வரும் ஓர் அற்புத ஆட்சியை நடத் திக் காட்டிச் சென்றுள்ளார்கள். ஆனால் இன்று மத குருமார்களின் மாய வலையில் சிக்கியுள்ள முஸ்லிம் நாடுகளிலும் இறையாட்சி நடைமுறையில் இல்லை. இறுதித் தூதர் இறையாட்சியை நிலைநாட் டிய அரேபியாவிலும் மதகுருமார்களிடம் சிக்கி யுள்ள மன்னராட்சியே நடைபெறுகிறது. அங்கும் முழுமையான இஸ்லாமிய இறையாட்சி இல்லை. முஸ்லிம்கள் என்று ஷைத்தானின் நேரடி ஏஜண்டு களான தாஃகூத்கள் என்ற மனித ஷைத்தான்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆனைப் பற்றிப் பிடிக்கிறார்களோ! அப்போது தான் இறையாட்சி மலரும். அந்த இறையாட்சி மலர இறைவன் அருள்புரிவானாக!

Previous post:

Next post: