விமர்சனம் : 30 வருடங்களாக உம் போன்ற மூடர் களிடம் மார்க்கம் சிக்கி படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. பல உதாரணங்களை கூற முடியும். சமீ பத்திய உதாரணம் ஒன்று கூறுகின்றேன். பிப்.2017, அந்ஜாத் பக்கம் 13ல் “”முகத்தை மூடுவது” குறித்து உமது மூட விளக்கத்தை (அல்குர்ஆன் 33:59) நானும் பலமுறை படித்தும் எமக்குப் புரியவில்லை. “”வட நாட்டு சேட்டு பெண்களிடம்” என்று தொடங்கும் வரியிலி ருந்து) நீர் மீண்டும் படித்து பாரும். உமது விளக்கம் தான் என்ன? முஸ்லிம் பெண்கள் “”தலை முந்தானையை” தாழ்த்திக் கொள்ள வேண்டுமா? ராஜஸ்தான் பெண்கள், வட நாட்டு சேட்டு பெண்கள் செல்வது போல முகத்தில் தொங்கவிட்டு கொள்ள வேண்டும் என்பது உமது முடிவானால் அதுவும் முகத்தை மறைப்பது தானே… அப்படியானால், முகத்திரை போடக்கூடாது என்றால், முகத்தை மூடிக் கொள்ளலாமோ? உமது வடநாட்டு சேட்டு பெண்ணை உதாரணம் காட்டி கூறும். ஃபத்வா எமது கால்தூசுக்கு சமானம். வழி கெட்டோரில் நீர்தான் முந்தியாள் என்பதில் எமக்கு எள்ளளவும் சந்தேகமே இல்லை.
அல்ஹாஜ், மவ்லானா, மவ்லவி. நூர் முகமது பாஸில், பாக்கவி, இமாம் தமிழ் முஸ்லிம் பள்ளி, சிங்கப்பூர்
விளக்கம் : இவை போன்ற அர்ச்சனைகளை(?) இன்று நேற்றல்ல, 1966களிலிருந்து கடந்த 51 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம். தர்கா-கபுரு வழிபாடு வழிபாடல்ல, அது கொடிய வழிகேடு-´ஷிர்க் என்று நாம் சொன்னபோது, அன்று காயல்பட்டின மக்களால் பேரறிஞராக மதிக்கப்பட்ட “”சூஃபி ஹழரத்” என்ற பெத்தப் பெயரையுடையவர் கபுரு வழிபாடு ஷிர்க் அல்ல உனக்குத்தான் “”கிறுக்கு” என்று வசை பாடியது, குர்ஆனை நேரடியாகப் பொருள் அறிந்து படித்து விளங்கியபின் 2:186, 7:3, 18:102-106, 33:36, 66-68, 59:7 இன்னும் பல வசனங்களின்படி தரீக்காக்கள், மத்ஹபுகள், பிரிவுகள் அனைத்தும் வழிகேடுகள் நாளை நரகில் சேர்க்கும், மார்க்கத்தைக் கொடிய ஹராமான வழியில் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டு, அதற்காகவே வீண் பெருமை பேசும் மதகுருமார்களான ஒட்டுமொத்த மவ்லவிகளும் வழிகேடர்களே, நாளை தங்கள் பக்த கோடிகளுடன் நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டி, சபித்து ஒப்பாரி வைப்பவர் களே (பார்க்க : 7:35-45, 33:66-68) என்று குர்ஆனில் உள்ளதை உள்ளபடி சொன்ன 1984லிலிருந்தும், 1986-ல் அந்நஜாத் ஆரம்பித்த சில மாதங்களிலேயே துபை சென்று காலஞ் சென்ற இக்பால் மதானியுடன் ஸலஃபியும் வழிகேடே நாளை நரகில் சேர்க்கும் என்று 3:103,105, 6:153,159, 12:108, 30:32, 42:13,14, 21:92,93, 23:52-56, மேலும் பல குர்ஆன் வசனங்கள் அடிப்படையில் பெருத்த வழிகேடு நாளை நரகில் சேர்க்கும் என்ற குர்ஆனில் நேரடியாக உள்ளதை உள்ளபடி சொன்னதிலிருந்து, ஸலஃபி மவ்லவிகளாலும் ஆக 6:153 குர்ஆன் வசனம் சொல்லும் ஒரே நேர்வழி மார்க்கத்தை 6:153,159, 7:146, 12:108, 30:32, 21:92,93, 23:52-56, 42:13,14 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து-குஃப்ரிலாகி பல கோணல் வழிகள் மதங்களாக்கி, இன்னும் நூற்றுக்கணக்கான வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி கொடிய ஹராமான வழியில் தங்கள் வயிற்றை நிரப்ப, அதற்காகவே நூற்றுக் கணக்கான வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி வீண் பெருமை பேசும் ஒட்டுமொத்த மவ்லவிகளும் எம்மீது பலபல அர்ச்சனைகளைச் சொரியத்தான் செய்கிறார்கள்.
ஒரே நேர்வழி மார்க்கத்தைப் பல கோணல் வழிகள் மதமாக்கி, கொடிய ஹராமான வழிகளில் ஒரு ஜான் வயிற்றை நிரப்பிய மதகுருமார்கள் நபி மார்களைத் திட்டித் தீர்த்த ஏச்சு பேச்சு வசை மொழி களோடு ஒப்பிடும்போது, எம் போன்ற சாதாரண மனிதன் மீது சொரியப்படும் இவை ஒன்றுமே இல்லை!
இந்த மவ்லவிகளின் அவதூறுகள், அபாண்டங்கள், பொய்கள், ஏச்சுப் பேச்சுக்கள் இன்னும் பலவிதமான கொடுமைகள் இவை அனைத்தையும் அர்ச்சனைகள் என்று ஏன் குறிப்பிடுகிறோம் தெரியுமா? ஆம்! அவர்கள் செய்யும் அற்ப, சொற்ப நன்மைகளையும், எமது ஏட்டில் பதிவிடுகிறார்கள். அவை எமது ஏட்டைக் கணக்கச் செய்பவைதானே. அதற்காக இம்மவ்லவிகளுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதே சமயம் அவர்களை மிகமிகக் கடுமையாக விமர்சித்து, அவர்களின் வசீகர வஞ்சக முகத்திரையைக் கிழிக்கப் பெரும் முயற்சி எடுக்க ஒரே காரணம் அவர்களின் நய வஞ்சக வசீகர சூன்ய பேச்சில் மயங்கி அவர்கள் பின்னால் செல்லும் பெருங்கூட்டத்திலிருந்து அல்லாஹ் நாடும் ஒருசிலராவது அவர்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு 2:186, 7:3, இறைக் கட்டளைக்கு அடிபணிந்து 3:103 வசனம் சொல்வது போல் குர் ஆனை ஒரே ஜமா அத்தாக ஒன்றுபட்டுப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்க முன்வர மாட்டார்களா? என்ற அதீத ஆசையைத் தவிர வேறில்லை.
நீங்கள் உங்கள் பெயருக்கு முன்னால் போட் டிருக்கும் அல்ஹாஜ், மவ்லானா, மவ்லவி, பாஸில், பாகவி போன்ற பட்டங்களும், உங்களின் வீண் பெருமையை அம்பலப்படுத்துகின்றன. மேலும் நீங்கள் தமிழ் முஸ்லிம் பள்ளியில் இமாமாக இருந்து 2:79,174-176, 36:21 இன்னும் இவைபோல் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி ஹராமான வழியில் மார்க்கத்தை மத்ஹபாக்கி கொடிய ஹராமான வழியில் உங்கள் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதால் 7:146 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனை விளங்குவதிலிருந்து அல்லாஹ்வே உங்களைத் திருப்பி விடுகிறான். 6:153 இறைவாக்குக் கூறும் நேர்வழியை நீங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டீர்கள். கோணல் வழியான மத்ஹபு வழிதான் உங்களுக்கு நேர்வழியாகத் தெரியும். அதற்கு உங்களின் விமர்சனமே போதிய சான்றாகும். இதோ 33:59 குர்ஆன் வசனம் என்ன கூறுகிறது பாருங்கள்.
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தங்கள் மீது தொங்கவிட்டுக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்ப வன் மிக்க அன்புடையவன். (33:59)
இன்னும், நம்பிக்கையாளர்களான பெண்களுக் கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் மூன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் (நம்பிக்கையாளர்களான பெண்கள்) தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரிகளின் புதல்வர் கள், அல்லது தங்கள் பெண்கள் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் (வயோதிகத்தின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அலங்கா ரத்தை வெளிப்படுத்தக் கூடாது, மேலும், தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்து வைத்திருப்பது அறியப்படுவதற்காக தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும் நம்பிக்கையாளர் களே! நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். (24:31)
இந்த இரண்டு குர்ஆன் வசனங்களையும் எவ் வித சுயநோக்கமோ, சுய ஆதாயமோ இல்லாமல் நடுநிலையுடன் படித்து விளங்குகிறவர்கள், உண்மையை உள்ளபடி விளங்க முடியும். 24:31 குர்ஆன் வசனத்தில் இரண்டு ஆடைகளால் (மார்புக் கச்சை, சட்டை) மறைக்கப்பட்டிருக்கும் மார்பகத்தை மூன்றாவதாக முந்தானையைக் கொண்டு மறைக்கக் கட்டளையிடும் அல்லாஹ், இந்த மவ்லவிகள் சொல்லுவது போல் அதிகமான அழகை வெளிப்படுத்தும் முகத்தை மறைக்கக் கட்டளையிட மறந்து விட்டானா? அல்லாஹ் மறந்து விட்டதாகச் சொல்லி 49:16 குர்ஆன் வசனம் சொல்லுவது போல் அல்லாஹ்வுக்கே இம்மவ்லவிகள் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறார்களா? 42:21 இறைவாக்குக் கூறுவது போல், தீர்ப்பை அல்லாஹ் மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்காவிட்டால் இம்மவ்லவிகளுக்கு இவ் வுலகிலேயே தீர்ப்பளிக்கப்பட்டிருக் கும்.
இரண்டு ஆடைகளால் மறைக்கப்பட்டிருக்கும் மார்பகத்தை மூன்றாவதாக முந்தானையால் மறைக்கக் கட்டளையிட்ட அல்லாஹ் திறந்திருக்கும் முகத்தை மறைக்கச் சொல்லாததற்கு ஒரே காரணம் வெளியே செல்லும் பெண் யார் என்று நிச்சயம் அடையாளம் தெரிவது கட்டாயமாகும். முகம் மறைப்பதைக் கட்டாயமாக்கி இருக்கும் சவுதி அரசு, பெண்கள் முகத்தை மறைத்துப் புகைப்படம் எடுத்துக் கொடுத்தால், விசா, பாஸ்போர்ட் வழங்குமா? சிந்தியுங்கள். இதிலிருந்தாவது வெளியே செல்லும் பெண்கள் ஆள் அடையாளம் தெரிய முகம் திறந்திருக்க வேண்டும் என்பது புரிய வில்லையா? இன்று முஸ்லிம் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் வெளியில் நடமாடுவதால் தான், அது கொலைகாரர்களுக்கும், கொள்ளைக் காரர்களுக்கும், திருடர்களுக்கும், வழிப்பறிகாரர் களுக்கும், விபச்சாரிகளுக்கும் அது பெரிய வாய்ப்பாகப் போய்விட்டது. கிறித்தவ கன்னியாஸ்திரிகள் முகம் மட்டும் தெரிய இதர பாகங்கள் அனைத்தை யும் முழுமையாக மறைத்துக் கொண்டு உலகம் முழுவதும் நடமாடுகிறார்களே! அதை யாரும் ஆட்சேபம் செய்கிறார்களா? இல்லையே? சிந்தியுங்கள்!
இந்த மவ்லவிகளின் வீண் பெருமை கார ணமாக அல்லாஹ்வே குர்ஆன் வசனங்களை விளங்குவதை விட்டும். அவனது இதர அத்தாட்சிகளை விளங்குவதை விட்டும் திருப்பி விடுவதால், (பார்க்க: 7:146) அவர்கள் சத்தியத்தை-நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். வழிகேடுகளே அவர்களுக்கு நேர்வழியாகத் தெரியும் என்பதற்கு இந்த விமர் சனத்தைத் தொடுத்த மவ்லவியே போதிய ஆதாரமாகும். பலமுறைப் படித்தும் விளங்கவில்லை என்று அவரே ஒப்புக் கொள்கிறார்.
33:59 குர்ஆன் வசனத்தின் இறுதிப்பகுதி என்ன கூறுகிறது?
“”…அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்….” (33:59)
இது எப்போது சாத்தியம்? முகம் தெரிந்தால் தானே. இந்த மூட முல்லாக்களின் மடத்தனமான ஃபத்வாவின்படி ஆள் அடையாளமே தெரியாமல் முகத்தையும் மறைத்துக் கொண்டு வெளியில் நட மாடினால் செல்வது ஆணா? பெண்ணா? யார் என்று தெரியாத நிலையில் அவர்கள் கண்ணியமானவர்கள் என்று அறிய முடியுமா? இதிலிருந்தே முகம் மறைக்கப்படவில்லை. ஆள் அடையாளம் தெரியும் நிலையில் முகம் தெரிகிறது என்பது விளங்க வில்லையா? இந்த நிலையில் 33:59 இறைவாக்கு முகத்தை மூடவே சொல்கிறது என்று சுயவிளக்கம் கூறும் சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் பள்ளி இமாம் கூறுவது அவரின் வீண் பெருமை காரணமாகவும், கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்ப்பதின் காரணமாகவும், எல்லாம் வல்ல அல்லாஹ்வே அவரின் கண், செவி, உள்ளம் அனைத்திலும் முத்திரையிட்டு நேர்வழியை விளங்க முடியாமல் ஆக்கி இருக்கிறான் என்பதே உறுதியாகிறது. (7:146)
விமர்சனம் : பீ.ஜே. என்ற இன்னொரு வழிகெட்ட மூடனும் உம்மை பிரிந்தது “”விதியில் உள்ளது” அதனை ஏற்றுக் கொள்ளாத நீர் “இறை விதியை” குறை குற்றம் காணும் உமக்கு துளி அளவு ஈமானும் இருக்கிறதா? 30 வருடங்களாக “”பீ.ஜே. போய்விட் டாரே” என்று புலம்பிக் கொண்டே ஒப்பாரி வைத்துக் கொண்டே இருக்கிறீரே? அல்லாஹ்வின் நாட்டத்தை ஏற்றுக் கொள்ளாத நீர் ஊருக்கு உபதேசம் செய்யும் உதவாக்கரை மனிதர்” என்பதில் எமக்கு இம்மியளவும் சந்தேகமில்லை. விதியை மதிக்காத-நம்பாத முஸ்லிமின் நிலை குறித்து ஹதீஃத் விளக்கத்தை படிக்கவும்.
அல்ஹாஜ், மவ்லானா, மவ்லவி. நூர் முகமது பாஸில், பாகவி, இமாம், தமிழ் முஸ்லிம் பள்ளி, சிங்கப்பூர்.
விளக்கம் : இந்த விமர்சனத்திலும் உங்களின் அறியாமையையும், மூடத்தனத்தையும் தான் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். குர்ஆனை நீங்கள் முறையாக முழுமையாக நடுநிலையுடன் படித்து உணர்ந்திருந்தால், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஃபிர் அவ்னைப் பற்றி எழுபத்தி நான்கு(74) இடங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். ஃபிர்அவ்னின் செயல்பாடுகள் அனைத்தும் அல்லாஹ் விதித்த விதியின்படிதான் நடந்தது என்பதை உங்கள் எழுத்துப்படியே மறுக்க முடியாது. இந்த நிலையில் அல்லாஹ் அவனை கடலில் மூழ்கடித்துப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மரணிக்கச் செய்த நிலையில் 1450 ஆண்டுகளுக்கு முன்னர் மனித குலத்தினருக்கே இறுதி உபதேசமாக வாழ்க்கை வழிகாட்டும் இறுதி நெறிநூலாக இறக்கியருளிய குர்ஆனில் 74 இடங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருக்கிறானே, உங்களின் கருத்துப் படி அல்லாஹ் விதித்த விதியை மறுத்து அல்லது மறந்து அவ்வாறு கூறி இருக்கிறானா? (நவூதுபில் லாஹ்) உங்களைப் போன்ற மூட முல்லாக்களுக்கு அப்படிப்பட்ட வழி கெட்ட சிந்தனை இருக்கலாம் என்பதை 42:21, 49:16 இன்னும் பல இறைவாக்குகள் உறுதிப்படுத்து கின்றன.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? என்றோ இறந்து போன ஃபிர்அவ்னைப் பற்றி எந்த நபியைப் பற்றி, ரசூலைப் பற்றி, நல்லடியார்களைப் பற்றி, தீயவர்களைப் பற்றி இந்தளவு பல இடங்களில் கூறாத அல்லாஹ் பிர்அவ்னைப் பற்றி கூறி இருக்கிறான் என்றால், ஃபிர்அவ்ன் அந்த அளவு பெருத்த வழி கேடன், தன்னை மிஞ்சியவன் எவனுமில்லை என்றெல்லாம் ஆணவம், அகங்காரம், பெருமை பிடித்தவனாக இருந்ததால் அல்லாஹ் அவனைப் பற்றி 74 இடங்களில் மீண்டும் மீண்டும் கூறி மக்களை எச்சரிக்கிறான். அவனைப் போல் நடக்காதீர் கள். அவனது வழிகாட்டலை ஏற்காதீர்கள். அவ னைப் பின்பற்றாதீர்கள், ஆணவம் கொள்ளாதீர் கள், பெருமை கொள்ளாதீர்கள், இறைக் கட்டளை களை உதாசீனம் செய்யாதீர்கள், அல்லாஹ்வின் கட்டளைப்படி நடங்கள் என்று வலியுறுத்தி இவ் வாறு 74 இடங்களில் அவனைச் சுட்டிக் காட்டி அல் லாஹ் எச்சரித்துள்ளான். இப்போது விசயத்திற்கு வருவோம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள பொய்யன் பீ.ஜையைப் பற்றி அல்லாஹ்வின் விதியை மறந்து, அல்லது மறுத்து நாம் எழுதவில்லை. நீங்கள் வேண்டுமா னால் அல்லாஹ்வை எப்படி நம்பவேண்டுமோ, மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்காத, நம்பாத வராக இருக்கலாம். அதனால்தான் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி வீண் பெருமை அடிப்பவராகவும், எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி மார்க்கத்தை மதமாக்கிக் கூலிக்கு மாரடிக்கிறீர்கள். சம்பளத்திற்குத் தொழ வைக்கிறீர்கள்! அதனால் முஸ்லிமின் நிலை குறித்து ஹதீஃத் விளக்கத்தை படிக்காத நபராக இருக்கலாம். அதனால்தான் அல்லாஹ் வெறுக்கும் வீண் பெருமையடிக்கிறீர்கள். அதனால்தான் குர்ஆனை விளங்குவதை விட்டே அல்லாஹ்வால் திருப்பப்படுகிறீர்கள். (பார்க்க : 7:146)
அதனால்தான் பொய்யன் பீ.ஜை. இன்றைய ஃபிர்அவ்னாக இருக்கிறான் என்பதையும் உங்களால் விளங்க முடியவில்லை. ஜகாத், சூன்யம், பிறை இன்னும் பல மார்க்க வியங்களில் ஃபிர்அவ்னைப் போல் ஆணவம், அகங்காரம், வீண் பெருமையுடன் குர்ஆனை, ஹதீஃதை மறுத்து குஃப்ரிலாகி சுய விளக்கம் கொடுக்கிறான். 2:102ல் அல்லாஹ் குறிப்பிடும் இரு மலக்குகளான ஹாரூத், மாரூத்தை ஷைத்தான்கள் என்று கூறி ஷைத்தான் ஆகிறான். 3:7 இறைவாக்குக் கூறும் பல பொருள்கள் தரும் முத்தஷாபிஹாத் வசனங்களை ஒரே பொருளாக் கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்று கூறுவதை, அல்லாஹ்வுக்கும் கல்விமான்களுக்கும் உண்டு என்று கூறி அல்லாஹ்வை மனித நிலைக்குத் தாழ்த்தி, தன்னை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தி அனரப்புக்கு முல் அஃலா என்று ஃபிர்அவ்ன் கூறி யது போல் இன்று பொய்யன் பீ.ஜை. சொல்லாமல் சொல்கிறான்.
இவை மட்டுமா? சந்திரன் மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது என்று கூறும் மூடன், சாப்பிடுவது என்றால் வாயால் மட்டுமே சாப்பிடுவது என்பது போல் பார்ப்பது என்றால் கண்ணால் மட்டுமே பார்ப்பதாகும் என்று உளறும் மூடன்; கி.மு. 383-ல் யூதர்களின் கற்பனையில் உதித்த 3-ம் பிறையை 1-ம் பிறையாக சுய சிந்தனை இன்றி ஏற்கும் மூடன், நபி(ஸல்) அவர்கள் தலைப்பிறையை புறக்கண்ணால் மட்டுமே பார்க்கக் கட்டளையிட் டுள்ளார்கள் எனப் பகிரங்கமாகப் பொய் கூறும் மூடன், ஜகாத்துடைய வியத்தில் உமர்(ரழி) அலீ(ரழி) இருவர் கூறுவது நபி(ஸல்) அவர்கள் நடைமுறையல்ல, பொய் எனக் கூறி மறுக்கும் பீ.ஜை. தலைப்பிறை விவகாரத்தில் தாபியீ கூறும் கூற்றை நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகத் தூக்கிப் பிடிக்கும் மூடன், “”பார்ப்பது” என்றால் கண்ணால், உள்ளத்தால், ஆய்வால், அறிவால், கணிப்பால், கணக்கீட்டால், தகவலால் போனற பல பொருள்களால் பார்ப்பது என்பதை மறுத்துக் கண்ணால் மட்டுமே பார்ப்பது என்று அறிவீனமாக உளறும் மூடன், கணிப்பிற்கும், கணக்கீட்டுக்கும் வேறுபாடு தெரியாத மூடன், ஹரக்கத்துக்கும், இஷாராவுக்கும் வேறுபாடு தெரியாத மூடன், இத்திபாவுக்கும், இக்திதாவுக்கும் வேறுபாடு தெரியாத மூடன், இன்னும் இவை போல் பல விஷயங்களில் உண்மை நிலையை அறியா மூடன், வழிகேடன் பொய்யன் பீ.ஜை. கைநிறைய பணமும், உலகியல் பேர் புகழும், மக்கள் கூட்டமும் எதனால் சேர்கிறது என்ற உண்மையை முஃமினூன் 23:52 முதல் 56 வரை குர்ஆன் வசனங்கள் வரை கூறுவதை அறியா மூடன். மேலும் தாரியாத் 51:56 இறைவாக்குக் கூறும் மனித இனமும், ஜின் இனமும் மட்டுமே சோதனை வாழ்க் கைக்காகப் படைக்கப்பட்டுள்ளன. இந்த இரு இனங்களுக்கு மட்டுமே நல்லது கெட்டது, கூடும் கூடாது என்ற சட்டம். மலக்குகளுக்கு இந்த சட்டங் கள் இல்லை. அல்லாஹ்வின் கட்டளை எதுவோ, அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தா லும் உடன் எவ்வித மறுப்பும் இல்லாமல் அதை நிறைவேற்றுவதே மலக்குகளின் கடமை. இந்த அடிப்படைச் சாதாரண அறிவும் இல்லாத பொய்யன் பீ.ஜை.2:102-ல் வரும் இரு மலக்குகள் கெட்டதைச் செய்வார்களா என உளறிக் கொண்டு அவர்கள் மலக்குகள் அல்ல. அவ்விருவரும் ஷைத்தான் கள் என்று கூறி தானும் வழி கெட்டு தன்னை நம்பியுள்ள அப்பாவிகளையும் வழி கெடுத்து நரகில் தள்ளும் கொடியவன் பொய்யன் பீ.ஜை.
இன்னும் பாருங்கள் அவனின் அநியாயங்களையும், அட்டூழியங்களையும், இறைவனை அஞ்சாத வழி கேடுகளையும் :d
61:2,3 இறைவாக்குகள் கூறுவது போல், தன்னை மறந்து ஊருக்கு உபதேசம் செய்யும் மூடன். குர்ஆன் 2:2,3 வசனங்களின் வழிகாட்டல்படி பயபக்தி (தக்வா) இல்லாத நிலையில் கட்டாயக் கடமையான ஐங்காலத் தொழுகைகளை தவறாது பேணித் தொழுது தொழுகையை நிலை நாட்டாத பெருத்த மூடன்.
அல்லாஹ்மீது பொய்ச் சத்தியம் செய்தே அவனுடன் நெருங்கிப் பழகிய அவனின் பேர் புகழுக்கும், வசதிவாய்ப்புக்கும் அல்லாஹ்வுக்குப் பிறகு உறு துணையாக இருந்த நூற்றுக்கும் அதிகமான நபர்கள் மீது அப்பட்டமான அவதூறுகள், வீண் பழிகள், பொய்யுரைகள், அமானித மோசடி, பெண்களைச் சம்பந்தப்படுத்திப் பொய்யான செய்திகள் என ஒரு சாதாரண, நடுத்தர முஸ்லிம் கூட செய்ய அஞ்சும் படுபாதகச் செயல்களை 1987லிருந்து துணிந்து செய்து கொண்டிருப்பவன். ஏறிய ஏணியையே எட்டி உதைக்கும் சண்டாளன் என்று சொல்வார்களே அதைவிட ஆகத் தரங்கெட்டவன். இவை அனைத்திருக்கும் அவனின் கையெழுத்து வடிவிலும், குரல் பதிவு வடிவிலும் எம்மிடம் ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் ஒரு மேடையில் இருவரையும் அமரச் செய்து விசாரித்தால் நாம் தொடுத்துள்ள அனைத்துக் குற்றச் சாட்டுகளையும் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்.
பீ.ஜை.யாகிய உங்கள் மீது நாம் சுமத்துகிற அனைத்துக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தயார். நீங்கள் மற்றவர்களை வா, வா வந்து நிரூபி என்று ஓயாது சவால் விட்டுக் கொண்டிருக்கிறீர்களே! நீங்கள் பொய்யன் இல்லை, உண்மையாளர் என்று உங்கள் மனசாட்சி சொல்லுமானால் எனது அழைப்பை ஏற்று வந்து உங்கள் உண்மைத் தன்மையை நிரூபித்துக் காட்டுங்கள் என்று கடந்த 25 வருடங்களாக நேரடியாக கடிதம் மூலம் அழைத்துக் கொண்டிருக்கிறோம். அவனோ வராமல் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடிக்கொண்டி ருக்கிறான்.
அவனை தக்லீது செய்யும் பக்தகோடிகளிடம் அபூ அப்தில்லாஹ் மவ்லவி அல்ல, அவரது பேச்சைக் கேட்காதீர்கள், அந்நஜாத்தைப் படிக்காதீர்கள் என்ற அவனது பிதற்றலை வேதவாக்காகக் கொண்டு அந்நஜத்தைத் தொட்டுக் கூடப் பார்க்கமாட்டார்கள் என்ற தைரியத்தில், பொய்யன் பீ.ஜை. அழைத்தும் நாம் வராமல் பிடரியில் பின்னங்கால் அடிபட ஓடுவதாக அப்பட்டமான பொய்யைப் பரப்புகிறான். அவனது பக்தகோடிகளைக் கொண்டு பரப்பச் செய்கிறான். மற்றவர்களின் பேச்சை கேட்க விடாமலும், எழுத்தைப் படிக்க விடாமலும் தடுப்பவர்கள் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்கள் என்பதும், அவர்களின் அந்த ஷைத்தானிய பேச்சை வேத வாக்காகக் கொண்டு மற்றவர்களின் பேச்சைக் கேட்காமலும், எழுத்தைப் படிக்காமலும் இருப்பவர்கள் தாஃகூத் என்ற அவர்களை வணங்கி வழிபட்டு கொடிய ஷிர்க்கில் -இணை வைப்பில் மூழ்கிறார் கள். (பார்க்க : 9:31) பொய்யன் பீ.ஜை. தடுப்பதைப் பொருட்படுத்தாமல் எவர் பேசினாலும் கேட்டு, எவர் எழுதினாலும் படித்து அதில் அழகானவற்றை அதாவது குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டவற்றை எடுத்து நடப்பவர்கள் மட்டுமே நேர்வழி நடக்கி றார்கள். அவர்களே அறிவாளிகள், அவர்களுக்கே அல்லாஹ்வின் நன்மாராயம், சுபசோபனம் உண்டு என்று 39:17,18 இறைவாக்குகள் கூறுவதை நிராக ரித்து குஃப்ரிலாகும் ஒரு நபர்தான் பொய்யன் பீ.ஜை.
பொதுவாக முஸ்லிம் மதகுருமார்கள் உட்பட அனைத்து மதங்களின் மதகுருமார்கள் அனைவரும் இறைவனுக்கும் மனித குலத்தினருக்கும் இடையில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக இடைத் தரகர்களாக-புரோகிதர்களாகப் புகுந்து கொண்டு, நாங்கள்தான் நேர்வழிகாட்ட அதிகாரம் பெற்றவர் கள் என அண்டப்புளுகை, ஆகாசப் பொய்யைக் கூறி, கடவுளின் பெயராலேயே தவறான வழிகளில் வயிறு வளர்ப்பவர்கள் கேடுகெட்டவர்கள். அனைத்து மதங்களின் மதகுருமார்களிலும் கேடு கெட்டவர்கள் முஸ்லிம் மதகுருமார்களே. காரணம் இதர மதங்களின் மதகுருமார்களிடம் உள்ளவை மனிதக் கரம் பட்டு மாசுபட்டு, வாழ்க்கை நெறிநூல்கள் வேதங்கள் ஆக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் மதகுருமார்களிடம் மட்டுமே மாசுபடாத, ஒரு புள்ளி கூட மாற்றப்படாத நிலையில் மனித குலத் தினருக்கே சொந்தமான இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் இருக்கிறது. இந்த நிலையில் அந்த குர் ஆனின் நேரடிப் போதனைகளுக்கு முரணாக 7:146 இறைவாக்குக் கூறுவது போல் பெருமையடித்துக் கொண்டு கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டிக் கொடிய ஹராமான வழிகளில் வயிறு வளர்க்கிறார்கள். அது மட்டுமா? இம்மவ்லவிகளும் குர்ஆனை உள்ளது உள்ளபடிப் படித்து விளங்க முற் படாமல், வைக்கப்போரை காக்கும் நாய் போல், முஸ்லிம்கள் உட்பட மற்ற மதத்தினரையும் ஒட்டு மொத்த மனித குலத்தினரையும் குர்ஆனைப் படித்து விளங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கி றார்கள்.
முஸ்லிம் மதகுருமார்களிலும் ஆகக் கேடு கெட்டவன் பொய்யன் பீ.ஜை. காரணம் என்ன தெரியுமா? இதர அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள் இஜ்மா, கியாஸ் என்ற பெயரால், அகாபிரீன்கள், சாதாத்துகள், அவுலியாக்கள், நாதாக்கள், இமாம்கள், ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் என முன் சென்றவர்களின் பெயர்களைச் சொல்லி, 2:41, 79, 3:78,187, 188, 4:44,46, 5:41,63, 6:21,25,26, 9:9,10, 34, 11:18,19, 31:6 இத்தனை குர்ஆன் வசனங்களை நிராகரித்து, இவர்களின் புரோகித முன்னோர்கள் கற்பனை செய்த கட்டுக்கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றிக் கொடிய ஹராமில் வயிறு வளர்க்கி றார்கள்.
ஆனால் பொய்யன் பீ.ஜையோ அல்லாஹ் சொல்வது மார்க்கம் அல்ல, அல்லாஹ்வின் தூதர் சொன்னது மார்க்கம் அல்ல, கலீஃபாக்கள் சொல் வது மார்க்கம் அல்ல, நபிதோழர்கள் சொல்வது மார்க்கம் அல்ல, ஆக எவர் சொல்வதும் மார்க்கம் அல்ல, பீ.ஜையாகிய தான் சொல்வது மட்டுமே மார்க்கம்-ஒரே நேர்வழி என்று பிதற்றுகிறான். குர் ஆன் வசனங்கள் அவனது அறிவுக்கு ஒத்துவரவில்லை என்றால் அவற்றிற்கு இவனது சுயவிளக்கம், ஆதாரபூர்வமான ஹதீஃத்கள் இவனது அறிவுக்குச் சரியாகப்படவில்லை என்றால் ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் மறுப்பது என வரம்பு மீறி நடக்கும் தாஃகூத்தாக-மனித ஷைத்தானாக இருக்கிறான்.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக உங்களைப் போன்ற சு.ஜ. இடைத்தரகர்களான புரோகிதர்கள் குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் என்ற நான்கின் அடிப்படையில் மனிதக் கருத்துக்களை மார்க்கத்தில் புகுத்தி, அதை மதமாக்கி தர்கா-கபுரு வழிகேடுகள், தரீக்கா வழிகேடுகள், மத்ஹபு வழிகேடுகள் என குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரணான வழிகேடுகளை-கோணல் வழிகளை நேர்வழி எனப் பொய்யாகக் கூறி பெருங்கொண்ட முஸ்லிம்களை நரகில் தள்ளி, ஹராமான வழிகளில் வயிறு வளர்த்து வருகிறீர்கள்.
பொய்யன் பீ.ஜையோ மேலே சொன்ன அனைத்து வழிகேடுகளையும் விட்டு விடுபட்டு, குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்க ஆதாரங்கள் என்று தெளிவாக விளங்கி நேர்வழிக்கு வந்த முஸ்லிம் ஆண்,பெண்களை, தன்னை தக்லீது செய்ய வைத்து இயக்க வழிகேட்டில் மூழ்க வைத்து, உலகியல் ஆதாயங்களைப் பெரிதுபடுத்திக் காட்டி அவர்களையும் நரகை நோக்கி நடைபோட வைத்திருக்கிறான். அந்த அடிப்படையில் பொய்யன் பீ.ஜை. கடுமையாக விமர்சிக்கும் சு.ஜ. மவ்லவிகளை விட பெரும் வழிகேட்டில் இருப்பது பொய்யன் பீ.ஜையே!
கடந்த சுமார் 1050 வருடங்களாக சு.ஜ.வினர் நான்கு மத்ஹபுகளுக்குள் கட்டுப்பட்டிருந்தனர். முஸ்லிம்கள் அந்த நான்கு மத்ஹபுகளை விட்டு விடுபட்டு 21:92, 23:52 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து முஸ்லிம்கள் ஒரே மத்ஹபாக, ஒரே இயக்கமாக, ஒரே ஜமாஅத்தாக பிரியா மல் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்ற இலட்சியத் தோடுதான் அந்நஜாத்தை ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் அந்நஜாத்தில் பணி புரிந்த பீ.ஜையும் இந்த நேர் வழியைச் சரிகண்டு, எங்களுக்கு இஸ்லாம் அல்லாத இயக்கம் இல்லை இடைத்தரகர் இல்லை. ஒவ்வொரு ஆணும், பெண்ணும், சுயமாக விளக்கி தங்களின் மார்க்கக் கடமைகளைச் செய்ய வேண்டும். நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதில்லை என்று தெளிவாக ஒப்புக்கொண்டவன்தான்; அந்நஜாத்தில் எழுதியவன்தான். 1986ல் இவற்றை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு எழுதி இருந்தால் இப்படித் தடம் புரண்டு சென்றிருக்க மாட்டான். எம்மைத் திருப்திபடுத்தி உலகியல் ஆதாயங்களை அடைய முனாஃபிக் தனமாக-நயவஞ்சகமாக உள் ஒன்று வைத்து வெளியில் ஒன்றாக அன்று பேசினான், எழுதினான் என்பது ஒரு வருடத்திலேயே அம்பலத்திற்கு வந்துவிட்டது. அதன் விளைவு 1986க்கு முன்னர் முஸ்லிம் சமுதாயம் நான்கு மத்ஹபுகளாக இருந்தது, கடந்த 30 வருடங் களில் 50 மத்ஹபுகளாகச் சிதறிச் சின்னாபின்னப் பட்டு வருகிறது. இன்னும் எத்தனை மத்ஹபுகள் தோன்றுமோ?
இன்று தமிழக முஸ்லிம்களில் ஷிர்க், குஃப்ர், பித்அத்களிலிருந்து மீண்டு வந்தவர்கள் மீண்டும் அவற்றில் மூழ்கிறதற்கும், பலர் பல்லாண்டுகளாகக் குடும்பங்களை அம்போ என பரிதவிக்கவிட்டு கொடும் சிறையில் வாடி வதங்குவதற்கும் பொய்யன் பீ.ஜை.தான் காரணம் என்பதை நீங்கள் அறியாதிருக்கலாம். நாம் நன்கு அறிவோம். தமிழகத் தில் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி போன்ற சொற் பிரயோகங்கள் கடந்த 25 ஆண்டுகளில் பெருக பொய்யன் பீ.ஜையே பிரதான காரணகர்த்தா என்பதையும் நாம் அறிவோம்.
பொய்யன் பீ.ஜை. கையில் கோடிக்கணக்கான பணம் புரள்வதையும், ஷிர்க் ஒழிப்பு மாநாடு” என்ற அர்த்தமற்றப் பெயரில் பல லட்சம் செலவழித்து மிகைப்பட விளம்பரம் செய்து, அரசியல் கட்சிகளின் பாணியில் கூட்டத்தைக் கூட்டியதையும் அறிந்த சிலர், இல்லுமினாட்டிகளின் வலையில் வசமாகச் சிக்கி இருக்கிறானோ எனச் சந்தேகப்படுகின்றனர். சென்ற நூற்றாண்டில் குலாம் அஹமது மிர்சா சிக்கியது போல் இந்த நூற்றாண்டில் பீ.ஜை. சிக்கியுள்ளானோ என ஐயம் ஏற்படத் தக்கக் காரணங்கள் வெளிப்படுகின்றன. 1993 மே இதழிலேயே புரோகிதர்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்ற இலவச இணைப்பில் பொய்யன் பீ.ஜை. பற்றி அன்றே தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளோம்.
இப்படி அவன், இவன் என்று நாம் கடுமையாக விமர்சிப்பதை பொய்யன் பீ.ஜை.யாலும் அவனது பக்தகோடிகளாலும் ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். பீ.ஜையை விட நாம் 10 வயது மூப்பு. அதேசமயம் அவனை விட வயதில் இளையவர்கள்; அவனது வலது இடது கைகளாக இருந்து கொண்டு, அவனது வழிகெட்டக் கொள்கைகளை அப்படியே பரப்பிக் கொண்டிருந்த அப்பாஸ் அலி, வேலூர் இப்ராஹீம் இருவரும் அவன் கூடவே இருந்து அவனது இழி செயல், குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்ட செயல்பாடுகள் அனைத்தையும் நேரடியாகக் கண்டு விரக்தியடைந்து வெளியே வந்து அவனது அராஜகச் செயல்கள் அனைத்தையும் வாட்ஸ் அப்பில் புட்டு புட்டு வைக்கின்றனர். பொய்யன், பீ.ஜையின் வண்டவாளங்கள் அனைத்தையும் தண்டவாளத்தில் பீ.ஜை.யின் பித்தலாட்டங்கள் என்ற தலைப்பில் ஏற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எம்மை விட அதிக மரியாதைக் குறைவாக அவன் இவன் என மிகக் கடினமாக எழுதி வருகிறார்கள், பேசி வருகிறார்கள். அவர்கள் இருவரும் பீ.ஜையைவிட மிகவும் வயதில் குறைந்தவர்கள்.
இந்த நிலையில் நாம் ஃபிர்அவ்னின் வாரிசான பொய்யன் பீ.ஜையை அவன், இவன் என ஒருமை யில் பேசுவது எழுதுவது தவறல்ல. மேலும் ஒரே நேர் வழியான தூய மார்க்கத்தை பல கோணல் வழிகள் மதங்களாக்கி, அதையே ஹராமான வழியில் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகளை நாம் மிகக் கடுமையாக விமர்சிப்பது அவர் களின் அந்த நிலையிலேயே நேர்வழிக்கு வருவார் கள் என்ற நம்பிக்கையில் அல்ல. அவர்களின் சூன் யப் பேச்சில் மயங்கி அவர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு, அல்லாஹ் நாடும் ஒரு சில ராவது நேர்வழிக்கு வந்து 3:103 இறைக் கட்டளைப் படி குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல் படி நடக்க முன்வரமாட்டார்களா? என்ற பேராசை யில் தான். அதேபோல் சு.ஜ. மவ்லவிகளை விட மிகக் கடுமையாக ஃபிர்அவ்னின் வாரிசான பொய்யன் பீ.ஜையை விமர்சிக்கக் காரணம் தர்கா, தரீக்கா, மத்ஹபுகள் போன்ற வழிகேடுகளிலிருந்து விடுபட்டு குர்ஆன், ஹதீஃத் மட்டுமே ஒரே நேர்வழி என்று விளங்கி வந்த சகோதர சகோதரிகளை தன் சூன்ய வசீகர பேச்சால் இயக்க வழிகேடுகளில் சிக்க வைத்து நரகை நோக்கி நடைபோடவைத்துள்ளவர்களில் அல்லாஹ் நாடும் ஒரு சிலராவது பொய்யன் பீ.ஜையின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடு பட்டு நேர்வழிக்கு வரமாட்டார்களா என்ற பேரா சையில்தான். பொய்யன் பீ.ஜை.யை தொடர்ந்து நாம் விமர்சித்து வரும் காரணம் இப்போதாவது புரிகிறதா?
மேலும் பொய்யன் பீ.ஜை. எம்மோடு இணைந்து நஜாத்தில் செயல்பட்டது 1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் வரை வெறும் 15 மாதங்கள் மட்டுமே. நம்மை விட்டு வெளியேறி 30 வருடங்கள் ஆகியும் அவனையும், அவனது பக்த கோடிகளையும் நஜாத் கூட்டம், நஜாத்காரன்கள் என்றும் அவனது பள்ளிகளை நஜாத் பள்ளி என்றும் அடையாளப் படுத்துகிறார்கள். அவனது வழிகெட்ட ஈனச் செயல் களால் நஜாத் பெயரும் சமுதாயத்தில் தவறாக எண்ணப்படுகிறது. இதன் காரணமாகவும் பொய்யன் பீ.ஜையைத் தொடர்ந்து அடையாளம் காட்டும் கட்டாயம் ஏற்படுகிறது.