சேமித்து வைக்கும் செல்வங்களுக்கு… ஜகாத் ஒரேயொரு முறையா? ஒவ்வொரு ஆண்டுமா?

in 2017 மே

அல்குர்ஆன் வழிகாட்டுகிறது :
நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிமார்களிலும், சந்நியா சிகளிலும் அநேகர், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும், எவர்கள் பொன்னை யும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர் களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (9:34)

(நபியே!) அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் நரக நெருப் பில் அவை காய்ச்சப்பட்டு, அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப் புறங் களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும்; (இன்னும்) இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது; ஆகவே, நீங்கள் சேமித்து வைத்திருந்ததைச் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறப்படும்). (9:35)

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலி ருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுத்துக்கொண்டு, அதைக் கொண்டு அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவீராக! இன் னும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீ ராக! நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிப வனாகவும் இருக்கின்றான். (9:103)

(வெற்றி கொள்ளப்படும் அனைத்து) ஊரார் களிடமிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும்; (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக் கும், ஏழைகளுக்கும் வழிப்போக்கருக்கும் உரிய தாகும். உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள் ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு) பங்கிட்டுக் கொடுக் கக் கட்டளையிடப்பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; இன்னும், எதை விட் டும் உங்களை விலக்கினாரோ (அதை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
(59:7)
மேலும் பார்க்க : 2:43,83,110,177,195,261, 262, 277, 3:180, 4:77,162, 5:12,55, 7:156, 8:60, 9:5,11,18,60,71, 18:81, 19:13,31,55,59, 21:73, 22:41,78, 23:4, 24:3,7, 24:56, 27:3, 30:39, 31:4, 33:33, 41:7, 49:15, 51:19, 58:13, 61:11, 70:24, 73:20, 92:17,18, 98:5.

அல்ஹதீஃத் வழிகாட்டுகிறது :
யாருக்கேனும், அல்லாஹ் பொருளாதார வசதியை வழங்கி அதற்கு அவன் ஜகாத் கொடுக் காமல் இருந்தால், கியாமத் நாளில் கடுமையான வி­ம் நிறைந்த பாம்பு ஒன்றை அவன் கழுத்தில் சுற்றச் செய்யப்படும். “”நான்தான் நீ சேர்த்து வைத்த செல்வம், நான்தான் நீ புதைத்து வைத்தப் புதையல்” என்று கூறிக் கொண்டே அது அவனைத் தீண்டிக் கொண்டிருக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம்.

ஏழைகளுக்குச் சொந்தமான ஜகாத் பொருள், மற்ற பொருள்களுடன் கலந்திருந்தால் அவற்றை ஜகாத் பொருள் அழித்துவிடும் என நபி(ஸல்) கூறினார்கள். ஆயிஷா(ரழி) புகாரீ இமாமின் வரலாற்று நூல்.

வியாபாரத்திற்காக வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும் அதற்குக் கட்டாயம் ஜகாத் வழங்கி வரவேண்டும். அது எந்தப் பொருளாக இருப்பினும் ஜகாத் கட்டாயம் வழங்கியே ஆகவேண்டும்.

நாங்கள் வியாபாரத்திற்காக வைத்திருக்கும் பொருட்களுக்காக ஜகாத் கொடுத்துவர வேண் டும் என்று நபி(ஸல்) எங்களுக்குக் கட்டளை யிட்டார்கள். சமூராஇப்னு ஜுன்துப்(ரழி) அபூதாவூது, பைஹகீ.

இன்று நிலங்கள், கட்டிடங்கள் வருமானத் தைப் பெருக்கும் வியாபாரப் பொருள்களாக இருப்பதால் அவற்றிற்கும் ஜகாத் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். நீர் பாய்ச்சி விளைந்த விளைச்சலில் 5% இயற்கையாக விளையும் விளைச்சலில் 10% உடனடியாக ஜகாத்தாகக் கொடுக்க வேண்டும். இப்னு உமர்(ரழி), புகாரீ.
20 தீனாருக்கு (87 கிராம் தங்கம்) குறைவான வற்றில் ஜகாத் கடமையில்லை. 20 தீனார் ஒரு ஆண்டு இருந்தால் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அலீ (ரழி) அஹ்மத், அபூதாவூத், பைஹகீ.
190 திர்ஹம் (687 கிராம் வெள்ளி) வரை ஜகாத் இல்லை. 200 திர்ஹம் இருக்கும்போது அதற்கு 5 திர்ஹம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அலீ(ரழி) அபூதாவூது, நஸாயீ, திர்மிதி, இப்னு மாஜா.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நான் எவர் தொழுகைக்கும், ஜகாத்துக்கும் இடையில் பாகுபாடு செய்கின்றாரோ அவ ரோடு போர் தொடுப்பேன். ஏனெனில் நிச்சய மாக ஜகாத் பொருளின் மீதுள்ள பாத்தியதை யாகும். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணை யாக அவர் ஒரு ஆட்டுக்குட்டியேனும் (இன் னொரு அறிவிப்பில் ஒட்டகத்தைக் கட்டும் ஒரு சிறிய கயிறாக இருப்பினும்) எனக்கு அளிக்க மறுப்பாராயின், நபி(ஸல்) அவர்களிடம் அவர் அதனை அளித்து வந்திருப்பின் நிச்சயமாக அவர்கள் அதனை மறுத்தால் நான் அவர்க ளோடு போர் தொடுப்பேன் என்று முதல் கலீஃபா அபூபக்கர்(ரழி) கூறினார்கள். அபூஹு ரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம், முஅத்தா, அபூ தாபூது, திர்மிதி, நஸாயீ.

இந்த ஹதீஃதை எவ்வித சுயநல உள்நோக்க மும் இல்லாமல் நடுநிலையுடன் படிப்பவர்கள் ஜகாத் கொடுத்த பொருள்களுக்கே மீண்டும் மீண்டும், வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பதை எளிதாக விளங்க முடியும்.

அறிந்து கொள்ளுங்கள். எவர் பணம் படைத்த அநாதைகளுக்குச் செயலாளராக இருக்கிறாரோ அவர், அவர்களின் பொருள் களில் வியாபாரம் செய்யவும். அன்றி ஜகாத் அவற்றைக் கரைத்து விடும் வரை(ஆண்டு தோறும்) ஜகாத் கொடுத்துச் சிறுகக் குறைய) விட்டு விடாதீர்கள் என்று நபி(ஸல்) கூறினார் கள். அம்ருப்னு ஷிஐபுதம் தந்தை மூலமாகவும் அவர்தம் பாட்டனார் மூலம் அறிந்து. திர்மிதி.

நிச்சயமாக, நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்தாள். அவருடன் அவரின் மகளும் வந்திருந்தாள். அவளின் கைகளில் இரு பெரும் பொற்காப்புகள் இருந்தன. அப்பொழுது நபி (ஸல்) அப்பெண்ணிடம், இதற்கு நீர் ஜகாத் கொடுத்து வருகிறீரா? என்று கேட்டனர். இல்லை என்றாள் அப்பெண்;(அதற்கு) அவர் கள், அல்லாஹ் உமக்கு மறுமை நாளில் இதன் காரணமாக தீக்குழம்பிலான இரண்டு காப்பு களை அணிவிக்க உமக்கு விருப்பம்தானே? என்று வினவினர். உடனே அவர் அவ்விரண் டையும் கழற்றி நபி(ஸல்) அவர்களின் முன் போட்டு, இவ்விரண்டும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உரியவையாகும் என்று கூறினார்.
அம்ருப்னு ஷிஐபு அவர்கள் தம் தந்தை மூல மாகவும் அவர்தம் பாட்டனாரின் மூலமாகவும் அறிந்து ஸுனன்.

ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத் தால் போதும் என்றிருந்தால் அக்காப்புகளின் 40-ல் 1 கொடுத்தால் போதும் அல்லவா? தொடர்ந்து வருடா வருடம் ஜகாத் கொடுக்கா மல் விட்டதால் அல்லவா இரண்டு காப்புகளை யும் கழற்றி ஒப்படைத்துள்ளார்.
மூன்று காரியங்களைச் செய்பவர்கள் இறை விசு வாசத்தின் ருசியைச் சுவைத்துக் கொள்வார்கள்.
1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனே இல்லை என்ற அடிப்படையில் இறை வனுக்கு மட்டுமே அடிபணிபவர்.
2. தனது செல்வத்தின் ஜகாத்தை பரிசுத்த எண்ணத்துடனும், உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர்.
3. பல் உடைந்த, மட்டமான, நோய்வாய்ப் பட்டவற்றை கொடுக்காமல் இருப்பவர்.
உமர்(ரழி), அபூதாவூத் : 1349

ஜகாத் கொடுத்து வரும்படி நபி(ஸல்) கட் டளையிட்ட ஹதீஃத்களில் துஅத்தீ-கொடுக் கிறீரா? என்றும், அதுஃத்தீ தருகிறாயா? என்று தொடர் நிலையில் கேட்டிருக்கிறார்களே அல் லாமல் அஃதய்த்த-கொடுத்து வீட்டீரா என்றோ, இறந்தகால வினையில் கேட்கவில்லை. இதிலி ருந்து ஒரு பொருளுக்கு வருடா வருடம் தொடர்ந்து ஜகாத் கொடுப்பது கடமை என்பது உறுதியாகிறது.

“”ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை.” அலீ(ரழி) அபூதாவூது, பைஹகி

இதுவரை நாம் எடுத்து எழுதியுள்ளவை ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண் டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண் டும் என்பதைச் சொல்லும் குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்கள் ஆகும். பொய்யன் பீ.ஜை. தனது வழிகெட்டக் கொள்கையை நிலைநாட்ட 22:78-ல் ஹுவ சம்மாக்கு முல் முஸ்லிமீன் அவனே உங்களுக்கு முஸ்லிமீன் எனப் பெயரிட் டுள்ளான் என்பதை அவன் முஸ்லிம் எனச் சொன்னான்-கூறினான் என்று திரித்துக் கூறு வது போல், 9:34-ல் வல்லஃதீன யக்னிசூனஃத் ஃதஹப வல்ஃபிழ்ழத வலாயுன்பிகூனஹாஃபீ ஸபீலில்லாஹ்-எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடா திருக்கிறார்களோ என்றிருப்பதிலுள்ள “”சேமித்து வைத்துக்கொண்டு” என்றிருப்பதை தனது வழி கெட்ட சுயநல வாதத்தை நிலைநாட்ட இருட் டடிப்புச் செய்வது போல் (2:159) இன்னும் இவைபோல் பல தில்லுமுல்லுகள், திருகுதாளங் கள், உருட்டல் பெறட்டல்கள் செய்து வரம்பு மீறிச் செயல்படும் தாஃகூத் என்ற மனித ஷைத் தானாவது போல் நாம் 2:159 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆன் வசனங்களைத் திரித்து வளைத்து மறைத்துக் கூறவில்லை. குர்ஆன், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி எடுத்து எழுதி யிருக்கிறோம். ஒவ்வொரு வரும் நேரடியாகக் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்களைப் படித்து விளங்க முன்வாருங்கள். 29:69 அல்லாஹ்வின் வாக்குறுதிப்படி நேர்வழியை அவனே எளிதாக்கித் தருவான்.

மேலே நாம் எடுத்தெழுதியுள்ள ஹதீஃத் களில் சிலவற்றில் அறிவிப்பாளர் வரிசையில் சில குறைபாடுகள் இருந்தாலும், அவை 9:34, 59:7 வசனங்கள் கூறும் கருத்தையே கூறுவதால் அவை ஏற்கத்தக்கவையே! இந்த மூட முல்லாக் களுக்கு ஹதீஃத்களைத் தரம் பிரிக்கும் ஆற்ற லும் இல்லை. இவர்கள் கல்வி கற்ற புரோகித மதரஸாக்களில் ஹதீஃத் கலை முறையாகக் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. காரணம் என்ன தெரியுமா? மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்ட இவர்களின் முன்னோர்களான ஆலிம்கள் என பெருமை பேசிக் கொண்டு, தங்கள் புரோகிதத் தொழிலுக்குச் சாதகமாகக் கள்ளநோட்டுக்களை அச்சடிப்பது போல் லட்சக்கணக்கான பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஃத்களைக் கற்பனை செய்து முஸ்லிம்களிடையே புழக்கத்தில் விட்டு வயிற் றையும், பையையும் நிரப்ப ஆரம்பித்தார்கள். அவையே கடந்த 1200 ஆண்டுகளாக முஸ்லிம் களில் நடைமுறையில் இருக்கின்றன.

இன்று இவர்களின் புரோகித மதரஸாக் களில் படிப்பிக்கும் நூல்களில் நிறைந்து காணப் படுபவை பலகீன, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களே. இந்த நிலையில் ஹதீஃத்கலையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் துணிவு அவர்களுக்கு இருக்க முடியுமா? அப்படிக் கற்றுக் கொடுத்தால் அவர்களின் ஹராமான வயிற்றுப் பிழைப்பு நாறிப்போய்விடாதா? அவர்களின் வீடுகளிலுள்ள அடுப்புகளில் பூனை தூங்க ஆரம்பித்துவிடாதா? எனவே இந்த மூட முல்லாக்களுக்கு ஹதீஃத் கலைஞானம் கடுகளவும் இல்லை.

நாம் 1984லிலிருந்து குர்ஆனைப் பொருள் அறிந்து படிப்பதுடன் ஹக்கீகத்துல் பிக்ஹ் என்ற உருது நூலையும் படித்து பொய்யான, பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத் களையும் அறிந்து கொண்டோம். முஸ்லிம் சமு தாயத்தின் அதலபாதாள வீழ்ச்சிக்கு இப் பொய்யான ஹதீஃத்களே அடிப்படைக் கார ணம் என்பதை அறிந்திருந்ததால், அந்நஜாத்தில் அதுபற்றி எழுத இம்மவ்லவிகளைத் தூண்டி னோம். அவர்கள் முன்வரவில்லை. காரணம் அதுபற்றிய ஞானம் அவர்களிடம் அப்போது இருக்கவில்லை. இப்போதும் தெளிவாக இல்லை.

எனவே நாம் நஜாத் ஆரம்பித்த 2ம் இதழில் (மே 1986) ரமழான் இரவுத் தொழுகை பற்றி எழுதிவிட்டு 3ம் இதழிலிருந்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் 1986 வரை ஐந்து இதழ்களில் “”ஹதீஃதுகளின் பாகுபாடுகள்” என்ற தலைப்பில் எழுதி வந்தோம். இது இம் மவ்லவிகளுக்குப் பெரும் மானக்கேடாகப் போய்விட்டது. நீங்கள் எழுத வேண்டாம் மவ்லவிகளாகிய நாங்களே எழுதுகிறோம் என்று கூறி அந்த உருது கிதாபை என்னிட மிருந்து வாங்கி றீ.லு. “நபிவழி தொகுப்பு வரலாறு” எனத் தொடராக எழுத ஆரம்பித் தார். அவை தனிநூலாகவும் வெளிவந்தது. அப்படி இருந்தும் பொய்யன் பீ.ஜைக்கு ஹதீஃத்கள் பற்றி முழுமையான தெளிவான ஞானம் இல்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையே கடிக்க முற்பட்டுவிட்ட தாக ஒரு கதை சொல்வார்களே அதுபோல் கலீஃபாக்களையும், நபிதோழர்களையும் பொய்யர்கள் எனத் தூற்றத் தொடங்கி இருக்கிறார்.

இம்மவ்லவிகளின் ஆபாக்களான-முன் னோர்களான மதகுருமார்களே பலவீனமான, இட்டுக்கட்டப்பட்டப் பொய்யான லட்சக் கணக்கான ஹதீஃத்களை தங்களின் சுயலாபத் திற்காக, அற்ப உலகியல் ஆதாயங்களுக்காக, ஹராமான வழியில் தொப்பையை நிரப்பக் கற்பனை செய்துப் பரப்பினார்கள். நபி தோழர் களுக்கு ஹராமான வழியில் தொப்பையை நிரப்பும் நோக்கம் கடுகளவும் இல்லை. எனவே ஹதீஃத் என்ற பெயரால் பொய்களை இட்டுக் கட்டும் அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை.

இன்றும் இப்புரோகிதப் பூசாரிகளுக்குப் பொய் ஹதீஃதுகள் இல்லாமல் பிழைப்பு நடக் காது. இது கடந்த 1200 வருடங்களாக நடக்கும் தொடர் கதையாகும். எனவே 1200 வருடங்க ளுக்கு முன்னரே அல்லாஹ் “”உலில் அல்பாப்” என்று கூறும் சில உண்மையான அறிஞர்கள் இந்த ஹதீஃத்களைப் பெரும் முயற்சி செய்து தரம் பிரித்துத் தந்தார்கள். அதற்காக அவர்கள் கைக்கொண்ட முறை நபிதோழருக்குப் பிறகு அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெரும் நபர் களின் அறிமுகம், நம்பகத்தன்மை, ஞாபகத் தன்மை, பொய்யரா, கேட்ட நபிதோழரை மறைத்துச் சொல்கிறாரா, யாரிடமிருந்து கேட் டதாகச் சொல்கிறாரோ அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இருந்ததா? இப்படிப் பல கோணங் களில் விசாரித்தறிந்து, ஆய்ந்தறிந்து ஹதீஃத் களைத் தரம் பிரித்து எழுதிப் பாதுகாத்தார்கள். இப்படி ஐந்து லட்சம் அறிவிப்பாளர்களின் தரமான, தரமற்ற நிலைகள் அஸ்மாவுர் ரிஜால் என்ற நூலில் பதிந்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1200 வருடங்களாக ஹதீஃத் அறிவிப் பாளர்கள் வரிசையில் இடம் பெறும் நபர்களின் தராதரம், உண்மையாளர்களா? பொய்யர் களா? என்று அலசி ஆராயப்பட்டுள்ளதே அல் லாமல், நபி தோழர்களில் எவரையும் எந்த அறி ஞரும் அவர்கள் உண்மை சொல்கிறார்களா? அல்லது பொய்யர்களா? என ஆய்வு செய்ததாக வரலாறு இல்லை. எந்த நூலிலும் அப்படியயாரு ஆய்வு நடத்தி பதிவு செய்துள்ளதை நாம் பார்க்கவில்லை. அப்படியயாரு அயோக்கியத் தனத்தையே பொய்யன் பீ.ஜை. அரங்கேற்றி யுள்ளார். ஆக பொய்யர்களிலேயே தான்தான் மாபெரும் பொய்யன் என்பதற்கு அவரே ஆதாரமாக இருக்கிறார்.
முதலில் சேமித்து வைக்கும் பொருளுக்கு வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களை முறியடிக்க ஷைத்தானைப் பின்பற்றி பல பொய் வாதங்களை வைத்தார்.

ஒரு பொருளுக்கு ஒருமுறை மட்டுமே ஜகாத் என்ற பொய் வாதத்தை நிலைநாட்ட 9:34ல் “”சேமித்து வைக்கும் பொருளுக்கு” என்றி ருப்பதை இருட்டடிப்புச் செய்து “”தங்கள் பொருளுக்கு” என்று உண்மையை மறைத்து எழுதி, பொருள் கிடைத்தவுடன் ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று தனது மனோசாட்சிக்கு விரோதமாக, மனோ இச் சைக்கு (ஷைத்தானுக்கு) அடிமைப்பட்டு வாதிட்டு வருகிறார். 9:34 இறைவாக்கோ 59:7 இறைவாக்குச் சொல்வது போல் வெளியே செல்லவிடாமல் தடுத்துச் சேமித்து வைக்கும் பொருளுக்கு ஜகாத் கடமை என்கிறது. மற்ற படி இன்று நடை முறையிலிருக்கும் வருமான வரி பற்றியது அல்ல ஜகாத். வருமான வரி பற்றிச் சொல்வதாக இருந்தால் வெறும் 2டி% மட்டும் சொல்லுமா என்ற சாதாரண அறிவும் பொய்யன் பீ.ஜைக்கு இல்லை.

சேமித்து வைக்கும் நிலை என்றால் அது தலைமுறை தலைமுறைக்கு இருக்க வாய்ப் பில்லை. அதற்கு கால நிர்ணயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த கால அளவைத்தான் அலீ(ரழி) ஒரு வருடம் என அறிவிக்கிறார்கள். அலீ(ரழி) சொல்வது பொய் அதாவது அலீ(ரழி) பொய்யர்(நவூதுபில்லாஹ்) என்பது பொய்யன் பீ.ஜையின் வாக்குமூலம். அந்த ஒரு வருடத்திற் குப் பின்னும் அச்செல்வம் அவரிடமே சேமிக் கப்பட்டு வெளியே செல்லாமல் தடுக்கப்பட்டி ருந்தால் அடுத்த ஒரு வருடத்திற்கு அதற்குரிய ஜகாத் உண்டு. இதையே உமர்(ரழி) பொருள் களுக்கு வருடா வருடம் ஜகாத் கடமை என்று கூறி இருக்கிறார்கள். இங்கும் உமர்(ரழி) சொல் வது உண்மை அல்ல; பொய். உமர்(ரழி) பொய் யர் என்பது பொய்யன் பீ.ஜை.யின் வாக்கு மூலம் (நவூதுபில்லாஹ்)

கலீஃபாக்களில், நபிதோழர்களில் யாருமே நபி(ஸல்) சொல்லாத, செய்யாத, அங்கீகரிக்காத ஒன்றை மார்க்கமாக்கினார்கள் என்று கடந்த 1200 ஆண்டுகளில் யாரும் சொன்னதாக எந்த முன்னுதாரணமும் இல்லை. அப்படிப்பட்ட பெரும் பழியை உமர்(ரழி), அலீ(ரழி) இரண்டு கலீஃபாக்கள் மீது சுமத்தும் பொய்யன் பீ.ஜை. எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக்கிறார் என் பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

செல்வத்திற்கு வருடா வருடம் ஜகாத் கொடுத்தால் செல்வம் கரைந்து செல்வந்தர்கள் ஏழையாகி விடுவார்கள் எனச் செல்வந்தர் களைப் பயமுறுத்தி அவர்கள் ஜகாத் கொடுப் பதைத் தடுத்தார்.

ஜகாத் செல்வத்தை மேலும் மேலும் வளரச் செய்யும் வட்டி செல்வத்தை அழித்தொழிக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க: 30:39)
அப்படியே செல்வம் வியாபாரம், தொழில் எதிலும் ஈடுபடுத்தப்படாமல் முடக்கி வைக்கப் பட்டிருந்தாலும், வருடா வருடம் ஜகாத் கொடுத்து செல்வம் 87 கிராம் தங்கம் அளவைத் தொட்டுவிட்டால் அதன்மீது ஜகாத் கடமை இல்லை.

அப்படியானால் பொய்யன் பீ.ஜை. சொல் வது போல் வருடா வருடம் ஜகாத் கொடுப்ப தால் செல்வந்தன், ஏழையாக ஆவானா? பீ.ஜையின் ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்யைப் பார்த்தீர்களா? 30:39ல் அல்லாஹ் சொல்வது பொய் (நவூதுபில்லாஹ்) நான் சொல் வதுதான் உண்மை என்று அல்லாஹ்வை மறந்து பிதற்றும் பொய்யன் பீ.ஜையின் நிலை நாளை என்னவாகும்? சிந்தியுங்கள்!

இந்தப் பொய் வாதத்தில் மூக்கறுபட்ட பின் அடுத்தப் பொய் வாதம் என்ன தெரியுமா? வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதால்தான் பெரும் பெரும் செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்கத் தயங்குகிறார்கள். ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என்றால் எல்லா செல்வந்தர்களும் ஜகாத் கொடுக்க முன் வருவார்கள். எப்படி இருக்கிறது பொய்யன் பீ.ஜையின் பொய் வாதம்? நாளை இந்தப் பொய்யன் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை என்றிருப்பதால்தான் 99.9% முஸ்லிம்கள் தொழுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளைத் தொழுகை மட்டும்தான் என் றால் முஸ்லிம்கள் அனைவரும் தொழுகை யாளிகள் ஆகிவிடுவார்கள் என்று பொய்யன் பிரசாரம் செய்ய ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை. பீ.ஜை.யும் அவரது பக்தகோடி களும் ஐவேளைத் தொழுகைகளைப் பேணித் தொழுது, தொழுகையை நிலைநாட்டுவ தில்லை என்பது ஊரறிந்த உண்மை.

அல்லாஹ் அல்குர்ஆனில் 32 இடங்களில் தொழுகையை நிலைநாட்டுங்கள். ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள் என்று மடக்கி மடக்கிச் சொல்வதிலிருந்தே தொழுகையும், ஜகாத்தும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவை என்பது உறுதியாகத் தெரிகிறது.

இப்படி எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து-குஃப்ரிலாகி ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும், அதுவும் பொருள் கைக்குக் கிடைத்தவுடன் ஜகாத் கொடுக்க வேண்டும். ஒரு வருடம் கழிய வேண் டியதில்லை என்று அல்லாஹ்வும் அவனது தூத ரும் முடிவு செய்த வி­யத்தில் வேறு கருத்துக் கூறும் பீ.ஜையின் நாளைய நிலையை 33:36 இறைவாக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. நாளை மறுமையில் அவரும் அவரது பக்த கோடிகளும் அடையப்போகும் வேதனை களை குர்ஆன் 33:66,67,68 இறைவாக்குகள் அப் பட்டமாக அறிவிக்கின்றன. (மேலும் பார்க்க 7:35-41, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45)
இந்த இறைவாக்குகளெல்லாம் எங்களைப் பற்றி அல்ல. முன்சென்ற மதங்களின் மதகுரு மார்கள் மற்றும் அவர்களது பக்தகோடிகள் பற் றிக் கூறுகின்றன என்று கூறி இந்த மவ்லவிகள் தங்கள் பக்தகோடிகளை ஏமாற்றி வருகின்ற னர். முன்னைய மதகுருமார்களையும் அவர் களது பக்தகோடிகளையும் இந்த மவ்லவிகளும் அவர்களது பக்தகோடிகளும் ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுகிறார்கள். அவர் கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்திருந்தால் இவர்களும் அதில் நுழைபவர்களாகவே இருக் கிறார்கள். (பார்க்க : புகாரீ: 3456, 7319, 7320, முஸ்லிம் 5184)

நாங்கள்தான் நேர்வழி காட்டக்கூடியவர் கள், இறைவனை அடையச் செய்யக்கூடியவர் கள், சுவர்க்கத்திற்கு வழிகாட்டக்கூடியவர்கள் எனப் பெருமை பேசும் அனைத்து மதங்களின் மத குருமார்களும் கடைந்தெடுத்த அயோக் கியர்கள், பொய்யர்கள், மக்களை நரகத்திற்கு இட்டுச் செல்லக் கூடியவர்கள், தாஃகூத்கள் என்பதை நீங்களே கீழ்க்கண்ட குர்ஆன் வசனங் களை நேரடியாகப் படித்து அறிந்து கொள் ளுங்கள்.

2:34,256,257, 7:36-40,146, 175-179,206, 27:14, 4:36, 44, 35:10, 2:159-162, 3:77, 4:27, 5:48, 6:157, 18:57, 45:23, 47:25, 21:19, 11:10, 16:22,23,49, 17:37, 25:63, 28:83, 31:7,18, 32:15, 35:10, 39:49, 72, 40:35,47,48,56,60, 45:37, 49:13, 57:23, 59:23, 74:1-3, 34:31-33, புகாரீ 4850, 4918, 6071, 6657, முஸ்லிம் 2620.

இத்தனை குர்ஆன் வசனங்களையும், யார் நேரடியாகப் படித்து அறிகிறார்களோ, ஹதீஃத் களையும் படித்துணர்கிறார்களோ அவர்கள் நிச் சயமாக அறிந்து கொள்ள முடியும். நாங்கள் தான் ஆலிம்கள், மவ்லவிகள் குர்ஆனைச் சரி யாக விளங்கி மக்களுக்குப் போதிக்கும் உரிமை பெற்றவர்கள் என்று வீண் பெருமை பேசுகிற வர்கள், நாளை தங்களின் பக்தர்களோடு நரகில் கிடந்து வெந்து கரிக்கட்டைகளாக ஆகிக் கொண்டு ஒப்பாரி வைக்கப் போகிறார்கள் என்பதை, கோடிக்கணக்கில் பல தலைமுறைகளுக்குச் செல்வத்தைச் சேமித்துக் குவித்து வைத்துப் பெருமைப்படும் பெரும் செல்வந்தர்களுக்கு பொய்யன் பீ.ஜையின் ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும். மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்கத் தேவை யில்லை என்ற வழிகெட்ட மூட ஃபத்வா பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தம் செல்வத் திலிருந்து ஒரு சிறு பகுதியைப் பொய்யனுக்கு வாரி இறைக்கின்றனர். பொய்யனின் இலட்சிய மும் அதுதானே! செல்வந்தர்களோ கப்ரைச் சந்திக்கும் வரை செல்வத்தைக் குவிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள் என்று 102:1,2 இறை வாக்குகள் கூறுகின்றன. நாளை அவர்களின் நிலை பற்றி 102:3-8 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

30 கோடி ரூபாயைத் தங்கத்தில் முதலீடு செய்து நகைக்கடை வைத்திருக்கும் ஒரு நகைக் கடைக்காரர், 30 கோடி ரூபாய்க்கு வருடா வருடம் 2டி% சதவீதம் என்று 75 லட்ச ரூபாயை ஜகாத்தாகக் கொடுக்க முடியுமா? என்று கேட் டார். அதுபோல் 40 கோடி செல்வம் இருந்தால், 1 கோடி வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும்; 100 கோடி செல்வம் இருந்தால் 2டி கோடி வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும். இது எப்படிங்க முடியும்?

ஒரு சில ஆயிரக்கணக்கில் ஜகாத் கொடுக் கும்போது ஜகாத் வருடா வருடம் கொடுக்க முன் வந்த இந்தச் செல்வந்தர்களுக்கு, கோடிக் கணக்கில் ஜகாத் வருடா வருடம் கொடுக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களின் செல்வத்தில் 30:39 இறைவாக்கில் வாக்களித்திருப்பது போல் பல மடங்கு பெருகிப் பல நூறு கோடியான வுடன், கோடிக்கணக்கில் வருடா வருடம் ஜகாத் கொடுப்பதா என மலைக்கிறார்கள். அவர்களின் மலைப்புக்கு நீர் வார்த்தது போல் பொய்யன் பீ.ஜை. அவர்களை மகிழ்விக்க ஒரு பொருளுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று வழிகெட்ட குருட்டு ஃபத்வாவை வழங்கி வருகிறார்.

இந்தக் குருட்டு ஃபத்வா மூலம் இச்செல்வந் தர்களை பொய்யன் பீ.ஜை. எப்படிப் பெரும் இழப்புக்கு ஆளாக்கி வருகிறார் என்று பாருங்கள்.
100 கோடி செல்வம் உடைய ஒரு செல்வந்தன் இந்த வருடம் 2டி கோடி ஜகாத் கொடுக்கிறான் என்றால் அந்த 2டி கோடிதான் அவனது நிரந்தர வைப்பு நிதி. வருடா வருடம் அவன் தொடர்ந்து ஜகாத் கொடுத்து வந்தால் வருடா வருடம் அவனது நிரந்தர வைப்பு நிதி யில் அது சேர்ந்து கொண்டிருக்கும். இந்த நிலை யில் அவனது அஜல் முடிந்து மரணத்தைத் தழுவு கிறான். அவன் இதுவரை எனது செல்வம், எனது செல்வம் எனப் பெருமைப்பட்டுக் கொண்டி ருந்தானே அது இப்போது அவன் செல்வ மில்லை. அவனது வாரிசுகளினதும், பினாமிகளி னதும் செல்வமாகிவிட்டது. அவன் தனது செல்வம், தனது செல்வம் என்று பெருமை பேசிக்கொண்டிருந்தானே அந்தச் செல்வத்தை இழப்பதோடு மட்டுமல்ல, அவனது வாரிசுக ளும், பினாமிகளும் அதை அனுபவித்து மகிழ் வது மட்டுமல்ல, நாளை மறுமையில் அவை நரக நெருப்பில் காய்ச்சப்பட்டு அவனது விலாப் புறங்களிலும், நெற்றியிலும், முதுகிலும் சூடு போடப்படும். இதுதான் நீ உனக்காகச் சேமித்து வைத்திருந்தது. நீ சேமித்து வைத்திருந்ததைச் சுவைத்துப் பார் என்று அச்செல்வந்தர்களுக்குக் கூறப்படும். (பார்க்க : 9:34,35)

நபி(ஸல்) அவர்களும் இப்படி எச்சரித்துள் ளார்கள். மனிதன் தனது செல்வம் தனது செல்வம் என பெருமையடிக்கிறான். அவன் உண்டு கழித்தது, உடுத்திக் கிழித்தது, மறுமை வைப்பு நிதியில் சேமித்தது மட்டுமே அவனது செல்வம்; எஞ்சியவை அவனது வாரிசுகளுக் குரியதாகும். (ஹதீஃத் சுருக்கம்) செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு பொய்யன் பீ.ஜை.யின் வழிகெட்ட மூட ஃபத்வாவை நம்பி உங்கள் செல்வத்திற்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் சேமித்து வைத்திருக்கிறீர்களே அது உங்கள் செல்வம் அல்ல. நீங்கள் வருடா வருடம் ஜகாத், சதக்கா கொடுத்து மறுமை வைப்பு நிதியில் சேர்த்து வைப்பது மட்டுமே உங்கள் செல்வம். அதுவே நாளை மறுமையில் பலனளிக்கும். வருடா வருடம் ஜகாத் கொடுக் காமல் நீங்கள் சேமித்து வைக்கும் செல்வம் நாளை மறுமையில் நெருப்பிலிட்டுக் காய்ச்சப் பட்டு உங்கள் நெற்றி, விலா, முதுகில் சூடு வைக்கப்படும் எச்சரிக்கை. (பார்க்க : 9:34,35)

Previous post:

Next post: