கணக்கீட்டின்படி பிறையா? கண் பார்வைப்படி பிறையா?

in 2017 மே,பிறை

அபூ அப்திர்ரஹ்மான்
நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள் ஆலிம் கள், மவ்லவிகள் என வீண் பெருமை பேசும் மவ்லவி கள் (பார்க்க : 7:146) தலைப் பிறையை மேற்கில் சூரியன் மறைந்தபின் பார்த்துப் பிறைப் புறக்கண் ணுக்குத் தென்பட்டால் மட்டுமே மாதத்தைத் துவங்க வேண்டும். இன்றைய நவீன கண்டுபிடிப் பான கணக்கீட்டின்படி மாதத்தைத் துவங்குவது கூடாது, ஹராம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இவர்களின் இந்த வாதம் எந்தளவு குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்படுகிறது என்பதை வரிசை யாகப் பார்ப்போம்.

1. அவனே சூரியனையும், சந்திரனையும் காலம் காட்டியாக அமைத்தான்… (6:96)
2. ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கை யும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு (சந்திரனான) அதற்கு (மாறி மாறி) வரும் பல படித்தரங்கள் உண்டாக்கினான்…(10:5)
3. இன்னும் சூரியனையும், சந்திரனையும் (கணக் கிடத் தோதுவாக) வசப்படுத்தினான். (31:29)
4. சூரியனும், சந்திரனும் கணக்கின்படியே இருக் கின்றன. (55:5)

இந்த நான்கு குர்ஆன் வசனங்களும் சூரியன், சந்திரன் இரண்டுமே துல்லிய கணக்குப்படி சுழல் கின்றன. அவற்றின் சுழற்சியை கணக்கிடும் வகை யில் அவற்றை வசப்படுத்தித் தந்துள்ளதாகவும் அல்லாஹ் கூறுகிறான்.

…அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவா கக் கணக்கிடுகிறான். அதை நீங்கள் சரியாகக் கணக் கிட்டுக் கொள்ளமாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான். ஆகவே அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்துவிட்டான். (73:20)

இப்போது சிந்தியுங்கள்! பகலையும், இரவை யும், உண்டாக்கும் சூரிய ஓட்டத்தைத் துல்லியமா கக் கணக்கிட மனிதர்களால் முடியாது என்று அல் லாஹ் கூறி இருக்கிறான். இந்த நிலையில் சூரிய ஓட் டத்தை கணக்கிடும் கடிகாரம் போன்ற நவீன கருவி களால் கணக்கிட்டு, சூரியனைப் புறக்கண்ணால் பார்க்காமல் இந்த மவ்லவிகள் எவ்வித மறுப்பும் இல்லாமல் தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். அதற்கு மாறாக எவ்வித குறைபாடும் இல்லாத மிகமிகத் துல்லிய கணக்கீட்டின்படி சந்திர சுழற் சியை அறிந்துக் கடைபிடிக்கும் சந்திர மாதத் துவக் கத்தை ஏற்க மறுக்கிறார்கள். இதிலிருந்தே அவர் களின் பெருமை, ஆணவம், அகங்காரம் வெளிப்படு வதை குர்ஆன் 7:146, 27:14, 4:44 வசனங்களை நீங் களே நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இன்று இம்மவ்லவிகள் ஏற்றிருக்கும் சூரிய சுழற்சியின் கணக்கீட்டை, அது முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததும் உடனடியாக ஏற்றிருப்பார்கள் என நினைக்கிறீர் களா? அப்படி உடனடியாக ஏற்க அவர்களின் வக் கிர ஆணவப்போக்கு ஒருபோதும் இடம் தந்தி ருக்காது. இன்று சந்திரக் கணக்கைக் கடுமையாகச் சுய விளக்கம் கொடுத்து எதிர்ப்பது போல் அன்றும் சூரியக் கணக்கைக் கடுமையாக எதிர்த்துத்தான் இருப்பார்கள். புரோகிதப் புத்தி அப்படித்தான் அவர்களைச் செயல்பட வைக்கும் 73:20 வசனத் தைக் காட்டி அல்லாஹ்வே பகலையும், இரவையும் உண்டாக்கும் சூரிய சுழற்சியைத் துல்லியமாக மனிதர்களால் கணக்கிடமுடியாது என்று கூறி இருக் கும் போது நீங்கள் எப்படி ஐவேளைத் தொழுகை யின் நேரங்களை கணக்கிட்டுத் தொழ முடியும்? சூரிய ஓட்டத்தை வழமைபோல் கண்ணால் பார்த்து மட்டுமே தொழ வேண்டும் என்று வரட்டுப் பிடி வாதம் பிடித்துத்தான் இருப்பார்கள்.

உலகியல் நடைமுறைதான் அவர்களை மாற்றி யது. அவர்களாக உணர்ந்து மாறவில்லை. தர்கா வழி பாடு, தரீக்கா வழிபாடு, சு.ஜ. வழிபாடு, மத்ஹபு வழிபாடு, மஸ்லக் வழிபாடு, இயக்க வழிபாடு, பிரிவு கள் வழிபாடு என அனைத்து வழிபாடுகளும் வழி பாடல்ல வழிகேடுகள் என குர்ஆன், ஹதீஃத் நேரடி ஆதாரங்களைக் கொண்டு தெளிவுபடுத்தினாலும், அதன் உண்மை நிலை நாளை மறுமையில் தான் பார்க்க முடியும். இவ்வுலகில் அவைதான் செழிப் பான, சுகமான வாழ்க்கையை கொடுப்பதாக 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தான் வழிகேடு களைத்தான் வழிபாடாகக் காட்டுவான்.

எனவே இவற்றில் பெருங்கொண்ட மக்கள் மயங்கி வழிகேட்டில் நிலைத்திருக்கத்தான் செய் வார்கள். நேரடியாக சுய சிந்தனையுடன் குர்ஆன் வசனங்களைப் படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட வழிகேடுகளை விட்டும் விடுபட்டு நேர்வழி பெறமுடியும். மற்றபடி மதகுருமார்களான இந்த அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளைக் குருட்டுத்தனமாக நம்பி அவர்களை தக்லீது செய் யும் முகல்லிதுகளாக இருக்கும் வரை நாளை மறு மையில் நரகில் எறியப்படும்போதுதான் தாங்கள் வழிகேடுகளில் இருந்ததை ஒப்புக்கொண்டு பிதற்று வதை பல குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
உலகியல் நடைமுறைகள் அப்படி அல்ல. எப்படிப்பட்ட முகல்லிதாக இருந்தாலும், அவர்கள் சுயமாகச் சிந்தித்து விளங்காவிட்டாலும், நடை முறைகள் அவர்களை மாற்றத்தான் செய்யும். உதா ரணமாக அனைத்து மதகுருமார்களின் துர்போதனை காரணமாக, காலங்காலமாக பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற மூட நம்பிக்கை இருந்து வரத்தான் செய்தது.

முஸ்லிம் மதகுருமார்களை உற்பத்தி செய்யும் குருத்துவக் கல்லூரிகளான அரபு மதரஸாக்களில் இன் றும் போதிக்கப்படும், புவியியல் சம்பந்தமான நூலான “”தஷ்ரீக்குல் அஃப்லாக்” என்ற சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூலில் பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்றே எழுதப்பட்டுள்ளது. இன்றைய மதரஸாக்களிலும் இந்நூலே அதில்தான் பரக்கத் இருக்கிறது என்ற குருட்டு நம்பிக்கையில் படிப்பிக்கப்படுகிறது. ஆயி னும் உலகியல் நடைமுறைப்படி பெரும்பாலான மவ்லவிகள் இன்று பூமி உருண்டை என்றும், பூமி தான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று ஒப்புக் கொள் கிறார்கள். ஒருசில மக்கு மண்டூகங்களே அந்நூலி லுள்ளதை வேதவாக்காகக் கொண்டு அதையே பிதற்றி வருகின்றனர். ஒரு மதனியே இவ்வாறு பிதற் றியதை எமது சொந்த அனுபவத்தில் அறிந்துள்ளோம்.
அதுபோல்தான் சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து ஐங்காலத் தொழுகை நேரங்களைக் கணித்து நெடுங்காலம் தொழுது வந்த இம்மவ்லவி கள் முதன்முதலில் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு சூரியனைப் பார்க்காமல் கடிகாரத்தைப் பார்த்துத் தொழ ஆரம்பிக்கும்போது இப்படித்தான் குய்யோ முறையோ என ஓலமிட்டிருப்பார்கள். அவர்கள் மாறவில்லை. கால ஓட்டம்தான் அவர்களை மாற்றி யது. இன்று ஒவ்வொரு பள்ளியிலும் தொழுகை நேர அட்டவணை என பலகைத் தொங்குவதைப் பார்க் கிறோம். அதில் நாளின் முதல் தொழுகையாக ஃபஜ்ர் தொழுகை எழுதப்பட்டிருப்பதும், நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான் என்பதையும் அவர்கள் அறியா மலேயே ஒப்புக்கொண்டிருப்பதைப் பார்க் கிறோம்.

இப்போது முஸ்லிம்களே சுயமாகச் சிந்திக்க முன்வாருங்கள். இம்மதகுருமார்கள் முன்காலத்தில் பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்று பிடிவாதம் பிடித்தார்கள். இப்போது அதில் இம்மவ்லவிகள் பொய்யர்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு பூமி உருண்டை, பூமியே சூரி யனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதேபோல் சூரியனைக் கண்ணால் பார்த்தே ஐங்காலத் தொழுகை நேரங்களை முடிவு செய்ய வேண்டும் கடிகாரம் காட்டும் நேரத்தை ஒரு போதும் ஏற்கக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தார் கள். இப்போது அதில் இம்மவ்லவிகள் பொய்யர் கள் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு, சூரிய னைப் பார்க்காமல் கடிகாரம் பார்த்து ஐங்காலத் தொழுகைகளைத் தொழுது வருகிறார்கள்.

அதே வரிசையில் இன்று நவீன கண்டுபிடிப்பான கணினி கணக்கீட்டைக் கொண்டு சந்திரனின் ஓட் டத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதை ஏற்கக் கூடாது. நபி(ஸல்) அவர்கள் பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் மாதத்தைத் துவங்கச் சொல்லியிருக் கிறார்கள். அதன்படி சூரியன் பூமி, சந்திரன் மூன்று கோள்களும் நேர்கோட்டிற்கு வந்து மாதம் முடி வதை சங்கமம் உறுதிப்படுத்தினாலும், அடுத்த நாளை (பிரதமை) முதல் நாளாகக் கணக்கிடக் கூடாது. கண்ணுக்குத் தெரியும் பிறை பார்த்து 3-ம் நாளைத்தான் 1-ம் நாளாகக் கொள்ள வேண்டும் என்ற ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யை நபி(ஸல்) கூறியதாகக் கோரஸாகக் கூறி வருகிறார் கள். பூமி வி­யத்தில், சூரியன் வி­யத்தில் இம் மவ்லவிகள் பொய்யர்கள் என நிரூபனமானது போல், சந்திரன் வி­யத்திலும் இம்மவ்லவிகள் மகா பொய்யர்கள் என்பது நிரூபணமாகத்தான் போகி றது. அவர்கள் உண்மையை ஏற்கமாட்டார்கள். (பார்க்க : 27:14, 4:44) கால ஓட்டம் தான் அவர்கள் பொய்யர்கள் என்பதை அம்பலப்படுத்தும்.

காலத்தைக் கணக்கிடக் கடிகாரமோ, சந்திர மாதத் துவக்கத்தைக் கணக்கிட கணினியோ அன்று நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருக்கவில்லை. அதனால் சூரிய சுழற்சியைக் கண்ணால் பார்த்து நேரத்தையும், சந்திரச் சுழற்சியைக் கண்ணால் பார்த்து மாதத் துவக்கத்தையும் அறியும் சந்தேகத் திற்குரிய நிலையே அன்று இருந்தது. அதனால்தான் மேகமூட்டமான ஒரு நாளில் நபி(ஸல்) சூரியன் மறைவதற்கு முன்னரே நோன்பு துறந்து விட்டார் கள் என்ற செய்தியை புகாரீ 1959வது ஹதீஃத் அறி விக்கிறது. ஆனால் இன்றோ நவீன கருவிகள் மூலம் நேரத்தையும், சந்திர மாதத் துவக்கத்தையும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி மிகத் துல்லியமாக அறிந்து செயல்படும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான்.

அதை முன்னறிவிப்புச் செய்யும் ஹதீஃத் இதோ பாருங்கள் :
நாம் எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயம் (உம்மத்துன் உம்மிய்யா) ஆவோம். எழுதுவதை அறியமாட்டோம். கணக்கையும் அறியமாட் டோம். மாதம் என்பது இப்படியும், அப்படியும் இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சில வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும். இப்னு உமர்(ரழி) புகாரீ : 1913

இந்த ஹதீஃதை காதால் கேட்ட ஒரு எழுதப் படிக்கத் தெரியாத பாமரனும் (அவாம்) இது மாதம் 29-ல் முடிகிறதா? 30-ல் முடிகிறதா? என்று உறுதியா கச் சொல்லமுடியாத, சந்திரச் சுழற்சியைக் கணக் கிட்டு அறியமுடியாத காலத்தில் இருக்கிறோம் என்று நபி(ஸல்) கூறியதை அறிந்து கொள்வான். ஆக இந்த ஹதீஃத் சந்திர சுழற்சியை கணக்கிடவும், முன் கூட்டியே கணக்கிட்டு எழுதி வைக்கவும் அறியாத நிலையில் இருக்கிறோம் என்று நபி(ஸல்) சொன்ன தாக அப்பாமரன் விளங்கிக் கொள்வான்.

அதற்கு மாறாக மெத்தப் படித்த மேதைகள், ஆலிம்கள் என்று வீண் பெருமை பேசும் (7:146) இம் மவ்லவிகளின் மூடத்தனத்தைப் பாருங்கள். கணக் கீட்டை ஏற்கக் கூடாது. கண்ணால் பார்த்து மூன் றாம் நாளைத்தான் முதல் நாளாக எடுக்க வேண்டும் என்ற அவர்களின் மூடக் கொள்கையை நிலை நாட்ட எப்படிப் பொய்யுரைக்கிறார்கள் பாருங்கள்.

பொய்யன் பீ.ஜையின் பொய்யுரையைப் பாருங்கள். இந்த ஹதீஃதில் குறிப்பிடும் கணக்கு சந்திரனின் சுழற்சி பற்றிய கணக்கு இல்லையாம். சாதாரண கணக்காம். அடுத்து ஜாக் மவ்லவிகளின் பொய்யுரையைப் பாருங்கள்.

விண்ணியல் அறிவு வளர்ச்சியுற்று சந்திர சுழற் சிக் கணக்குத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தாலும் கணக்கிடவும் கூடாது, அவற்றை எழுதி வைக்கவும் கூடாது என்று நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளதாகப் பொய்யுரைக்கிறார்கள். ஆக தூய மார்க்கத்தைப் பல மதங்களாக்கி கொடிய ஹராமான வழியில் நரக நெருப்பை (2:174) கொண்டு வயிற்றை நிரப்பும் ஒட்டுமொத்த மதகுருமார்களான மவ்லவிகள் பெரும் பொய்யர் களே. (பார்க்க : 16:105)

பொய்யர்களுக்குக் கேடுதான் நரகம்தான் என் பதை 45:7, 52:11, 77:15,19,24,28,34,37,40,45,47,49, 83:10 ஆகிய 13 இடங்களில் மீண்டும் மீண்டும் அல்லாஹ் கூறி எச்சரிக்கிறான். ஆனால் அல்லாஹ் வின் இந்தக் கடும் எச்சரிக்கைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். தூய மார்க்கத்தை மத மாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாக்கிக் காலம் தள்ளும் மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழிக்கு வர மாட்டார்கள் என்பதை 36:21, 7:146, 27:14, 4:44, இன்னும் எண்ணற்ற வசனங்கள் உறுதிப்படுத்து கின்றன.

2:159-162, 33:36,66-68 இறைவாக்குகளைக் கண்டுகொள்ளாமல் அவற்றை நிராகரித்து குஃப்ரி லாகி துணிந்து பொய்யுரைப்பவர்கள்தான் ஆலிம் என பெருமை பேசும் இம்மவ்லவிகள்.

குர்ஆனில் சுமார் 213 இடங்களில் பொய்யர்கள் பற்றி வருகிறது. இவற்றில் மிகப் பெரும்பாலா னவை அல்லாஹ்வுக்கும், அடியார்களுக்கும் இடை யில் தரகர்களாகத் திருட்டுத்தனமாகப் புகுந்து இறைவனின் பெயரைச் சொல்லியே மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கும் இம்மதகுரு மார்கள் பொய்யர்களே, அவர்களுக்குக் கேடுதான் நரகம்தான் என்றே கூறுகின்றன; இவர்களின் பொய் நிலையை மக்களுக்கு அடையாளம் காட்டுகின்றன. முஸ்லிம்கள் நேரடியாக குர்ஆனைப் படித்தாலல் லவா விளங்கப் போகிறார்கள். முஸ்லிம்கள் குர் ஆனைத் தொடுவதற்குக் கூட அஞ்சுகிறார்கள். அந்த ளவு இம்மவ்லவிகள் அவர்களைப் பயமுறுத்தி வைத் திருக்கிறார்கள். அதனால் பெரும்பாலான முஸ்லிம் கள் 12:106 இறைவாக்குச் சொல்வது போல், கொடிய ´ர்க்கில் மூழ்கி இருக்கிறார்கள். 9:31 இறைவாக்குச் சொல்வது போல் இம்மவ்லவிகளை ரப்பாக-இறைவனாகக் கொண்டு அவர்களை தக்லீது செய்து நாளை நரகை நிரப்ப இருக்கிறார்கள்.
(பார்க்க : 32:13, 11:118,119)

அந்த தைரியத்தில்தான் மவ்லவிகள் துணிந்து அப்பட்டமான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்ப் பதோடு, அவர்களை நரகிற்கு அழைக்கிறார்கள். மக்களே உஷார்.

உலகியல் நடைமுறைகள் பற்றி அவர்கள் பொய் கூறினாலும், காலக்கிரமத்தில் அவர்கள் பொய்யர் கள்தான் என்பது மக்களின் கவனத்திற்கு வந்து விடும். அந்த அடிப்படையில் பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது, சூரியனை கண்ணால் பார்த்துத்தான் தொழவேண்டும். கடிகாரம் பார்க் கக்கூடாது, ஒலிபெருக்கி ஹராம் போன்ற பொய் கள் அம்பலத்துக்கு வந்துவிட்டன. கூடிய விரைவில் சந்திரனைக் கண்ணால் பார்த்துத்தான் 3-ம் நாளை 1-ம் நாளாக எடுக்க வேண்டும் என்ற பொய்யும் அம்பலத்திற்கு வந்துவிடும். ஆனால் மறுமையைப் பற்றி அவர்கள் அவிழ்த்து விடும் பொய்களை முஸ்லிம்களே நீங்கள் நாளை மறுமையில் தான் கண்டு, அவர்களைத் திட்டிச் சபிக்கப் போகிறீர்கள். (பார்க்க : 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45)

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே நாளை மறுமையில் இந்த மவ்லவிகளை அடையா ளம் காண்பதால் உங்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. நரகிலிருந்து விடுதலை கிடைக்காது. இவ் வுலகிலேயே அவர்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு, 2:186 இறைவாக்குச் சொல்வது போல் அல் லாஹ்வை மட்டுமே நம்பி, 7:3 இறைவாக்குக்கு அடி பணிந்து நேரடியாக உங்கள் தாய்மொழியிலுள்ள குர்ஆன் மொழி பெயர்ப்பைப் படித்து அதன் வழி காட்டல்படி நடக்க முன்வாருங்கள். அதுவே 6:153 இறை வாக்குச் சொல்வது போல் ஒரே நேர்வழி யாகும்.

Previous post:

Next post: