“பேரழிவு பெருங்கூட்டம் “யாஜுஜ்-மாஜுஜ்” என்னும் “ZOMBIE APOCALYSE”

in 2017 ஜுன்,அறிவியல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-

மனித குல வரலாற்றில் ஏராளமான பேரழிவுச் சம்பவங்கள் நடந்துள்ளன.இயற்கையின் சீற்றங்களான பெரும்ம ழை,புயல்,வெள்ளம்,எரிமலை,பூகம்பம், போன்றவற்றால் மனித குலம் அழிந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நடந்த பெரும் போர்களினால் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். ஆனாலும் இது போன்ற பேரழிவு சம்பவங்களினால் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் அழிந்து விடவில்லை.

ஆனால் அல் குர்ஆனில் அல்லாஹ் கூறும் “யாஜுஜ்-மாஜுஜ்’ எனும் பெரும் கூட்டம், இறுதி நாளில் வெளியாகி பேரழிவில் ஈடுபடும்.இக்கூட்டத்தாரை எந்த மனிதராலும், எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது. எவராலும் வெல்லப்பட முடியாத பெருங்கொண்ட கூட்டமே யாஜுஜ்-மாஜுஜ். இன்று ஒவ்வொரு தொழுகையின் இறுதியில் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று,”மஸீஹ் தஜ்ஜாலின்” தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுதல்.

இந்த தஜ்ஜாலை கொல்லக்கூடிய சக்தி மனிதர்களில் எவருக்கும் கிடையாது.அது இறுதி நாளில் மீண்டும் பூமிக்கு வரும் ஈஸா மஸீஹ் (அலை) அவர்களால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும்.ஆனாலும் இதற்குப் பின் வரும் பேரழிவு பெருங் கூட்டமான யாஜுஜ்-மாஜுஜ் இனத்தாரை ஈஸா (அலை) அவர்களாலும் அழிக்க முடியாது.அல்லாஹ் ஒருவனைத் தவிர.

இன்றைய அறிவியலின் உச்சத்தில் அணு ஆயுதங்களை வைத்து ஆட்டம் போடும் அனைத்து வல்லரசுகளையும் வெறும் வில், அம்பு ஆயுதங்களைக் கொண்டே யாஜுஜ்-மாஜுஜ் வென்று விடுவார்கள். மேட்டிலிருந்து தண்ணீர் எவ்வாறு பள்ளத்தில் விரைவாக பாய்வது போல் பூமியில் பரவி அனைவரையும் வென்று விடுவார்கள்.கையில் கிடைத்த அனைத்தையும் தின்று விடுவார்கள்.ஒரு சொற்பமான மனிதர்களைத் தவிர அனைத்து மனிதர்களையும் கொன்று தின்று விடுவார்கள்.

இன்றைய பகுத்தறிவு அறிவியல் உலகில் வாழும் பிற மக்களுக்கு மாஜுஜ் யாஜுஜ்-பற்றிய செய்திகள் வெறும் கற்பனை கதையாக, நம்ப முடியாத நாடகமாக தெரியலாம்.ஆனால் அல்லாஹ்வை மட்டும் இறைவனாக நம்பி வாழும் முஸ்லிம்களுக்கு இது இனி இவ்வுலகில் நடக்கப் போகும் சம்பவம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும்.ஆனாலும் அல்லாஹ்வின் கிருபையைக்கொண்டு,இது போன்ற பேரழிவு சம்பவம் சில மக்களால்,அல்லது சில வைரஸ் நரம்பு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களால் வெகுவாகப் பரவி உலகை குறுகிய காலத்தில் அழிக்க முடியும் என்று அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து நிரூபித்துள்ளார்கள்.

உதாரணமாக,இன்று அமெரிக்கா ஹாலிவுட் திரைப்படங்களில் அதிகமாக வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்திய படங்கள் சோம்பிகள் (zombies). பிணங்கள் எழுந்து நடமாடி பிற மனிதர்களைக் கடித்து இரத்தம் குடித்து,அவர்களையும் நடை பிணமாக்கும் இரத்தக் காட்டேரி கதைகள்.1932 ம் வருடத்திலிருந்து இதுவரை சுமார் 500,திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.(தமிழில் முதன் முதலாக வந்த சோம்பி திரைப்படம் “மிருதன்”)

மனிதர்கள் ஒருவித வைரஸால் தாக்கப்படும் போது அவர்கள் சோம்பிகளாக மாறிவிடுகிறார்கள். வலி உள்பட எதுவும் அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் கடித்தால் கடிபட்ட மனிதனும் சோம்பியாகிவிடுவான்.எவராலும் கொல்ல முடியாத பிண மனிதர்களாக மாறி  வெகு விரைவில் பல்கிப் பெருகி உலக மொத்த ஜனத்தொகையையும் சுத்தமாக கடித்து கொன்று வெறி பிடித்த நடைப் பிணமாக ( Zombies) அலைய விட்டு விடுவார்கள்.

இன்று உலகில் வாழும் சுமார் 750 கோடி மனிதர்களுக்கிடையே ஸோம்பி போன்ற தாக்குதலோ,அல்லது வைரஸ் நரம்பு நோய் தாக்கம் ஏற்பட்டாலோ இவை உடனடியாக உலகம் முழுவதும் பரவி,விரைவில் அனைவரையும் கொன்று விடும்.எந்தளவு என்றால் இந்த தாக்குதல் ஆரம்பித்த நூறாவது நாளில்,உலக மக்கள்தொகை 750 கோடிப்பேர்களில் மிஞ்சி இருக்கும் மக்கள் வெறும் 273 பேர் மட்டுமே என்பது அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்டுள்ளது.

Scientists have used math to estimate how a zombie outbreak would play out, similarly to how we predict the spread of real diseases.

When the zombie apocalypse comes, it will be swift and brutal. Within 100 days of the dead rising to feast on our flesh, only 273 people will remain. Or so suggests a grim estimate from students at the University of Leicester, published recently in the school’s Journal of Physics Special Topics.

https://physics.le.ac.uk/journals/index.php/pst/article/view/965/683

இன்று திரைப்படங்களில் மக்களை மிரட்டும் ஸோம்பிகள் வெறும் கற்பனை கதாபாத்திரமே.ஆனால் உலக இறுதிக்காலத்தில் உண்மையாகவே வெளிவர இருக்கும் ஸோம்பிகள் என்னும் யாஜுஜ்-மாஜுஜ் பெருங்கூட்டத்தின் பேரழிவில் சிக்கி பெரும்பான்மையான மக்கள் இறந்து விடுவார்கள்.ஈஸா (அலை) அவர்களை பின்பற்றிச் சென்று மலை உச்சியில் மறைந்து கொண்ட சிறு கூட்டமே தப்பிப் பிழைக்கும்.

யஃஜுஜு, மஃஜுஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.    அல்குர்ஆன் 21:96

தஜ்ஜாலை விட்டும் அல்லாஹ் காப்பாற்றிவிட்ட ஒரு  கூட்டத்தாரிடம் அடுத்து ஈஸா  (அலை) அவர்கள் வருவார்கள். அவர்களின் முகங்களை தடவி விடுவார்கள். அவர்களிடம் சொர்க்கத்தில் உள்ள அவர்களுக்குரிய  தகுதிகளைப்பற்றிப் ஈஸா நபி கூறுவார்கள். அந்த  சமயத்தில் ஈஸாவிடம் அல்லாஹ், “நான் என் அடியார்களை சிலரை வெளியாக்கி  உள்ளேன். அவர்களிடம் யாரும் சண்டை  செய்ய முடியாது. எனவே என் அடியார்களை தூர் மலைப்பக்கம் ஒன்று சேர்ப்பீராக!”  என்று அல்லாஹ் கூறுவான்.

அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி) முஸ்லிம்.2937.

அல்லாஹ் யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தாரை அனுப்புவான்.அவர்கள் ஒவ்வொரு உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக கீழே இறங்கி வருவார்கள்.அவர்களில் முதல் அணியினர் (ஜோர்தானில்) உள்ள தபரிய்யா ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்து விடுவார்கள்.அவர்களில் இறுதி அணியினர் அதைக்கடந்து செல்லும்போது, முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும் என்று பேசிக்கொள்வார்கள்.

அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி) முஸ்லிம்.5629..

பூமியில் குழப்பம் விளைவிக்கும் ஒரு பெருங்கொண்ட கூட்டம் இறுதி நாளில் வெளியாகி மக்களுக்குத் தீங்கிழைப்பார்கள் என்ற உண்மையை குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

வெறும் வில்லும்,அம்பையும் ஆயுதமாகக் கொண்டிருக்கும் யாஜுஜ்-மாஜுஜ் குள்ளர் கூட்டம் எப்படி மனிதர்களை வெல்ல, கொல்ல முடியும்? ஆம்! அருவியிலிருந்து வெள்ளம் பாய்வதுபோல் கோடிக்கணக்கில் வந்து குவிவார்கள்.காரணம்,யாஜுஜ்-மாஜுஜ் மக்கள் கிடைத்த எல்லாவற்றையும் தின்று தீர்த்து  ஆற்று நீரே வற்றிப்போகும் அளவு குடித்து பெரும் பஞ்சத்தை ஏற்படுத்துவார்கள்.அவர்கள் தின்று தீர்க்கும் அளவிற்கு அதிகமான குழந்தைகளை வத வத எனப் பெறுவார்கள்.ஒவ்வொரு  பெண்ணும் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் பெற்றேடுப்பார்கள்.

. “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி). நூல்: தப்ரானீ; இப்னு ஹஜர்.பத்ஹுல் பாரி.

ஒவ்வொரு ஆயிரம்  பேர்களில் 999 பேர் நரகம்  செல்பவர்கள்,மனிதர்களில் ஜனத்தொகையோடு யாஜுஜ்-மாஜுஜ் ஜனத்தொகையை  ஒப்பிடும்போது,1: 999.ஒரு  மனிதருக்கு 999 பேர் யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தினராக இருப்பார்கள்.இன்றைய மனித  ஜனத்தொகை 750 கோடி மக்களிடையே Zombies   தாக்குதல் ஏற்பட்டால் நூறாவது நாளில் மிஞ்சி இருப்பவர்கள் வெறும் 273 பேர் மட்டுமே…அப்படியென்றால் நம்மை விட  999 மடங்கு அதிகமான யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தினர் இறங்கும் போது,தப்பிப்பிழைக்கும் மனிதர்கள் வெகு சொற்பமே!

இது போன்ற  ஸோம்பிகள் தாக்குதல் அமெரிக்காவில் பரவும்போது தப்பிப் பிழைப்பதற்கு  மக்கள் ராக்கி மலைகளில் எறிக்கொள்ளவேண்டும் என்று இன்றைய ஆய்வாளர்கள் கூறுவது கவனிக்கத் தக்கது.

In a Zombie Outbreak, Head for the Rocky Mountains.

http://www.livescience.com/50016-best-place-to-hide-from-zombies.html

இன்று  ஆய்வாளர்கள் கூறும் இக்கருத்தை அல்லாஹ் அன்றே அல்குர் ஆனில் கூறி,யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தினரிடமிருந்து தப்பிக்க  “தூர்” மலையில் மக்களுடன்  ஏறிக்கொள்ளும்படி, ஈஸா (அலை) அவர்களுக்கு வழி காட்டுகிறான்.

ஈஸா (அலை)  அவர்களுக்கு அல்லாஹ்,நான் என் அடியார்கள்  சிலரை வெளிவரச் செய்துள்ளேன்,அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல்.கிடையாது,எனவே,என் அடியார்களை (சினாயிலுள்ள) தூர்  மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள்.  என்று வஹி  அறிவிப்பான்.பின்னர்  அல்லாஹ் யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தாரை அனுப்புவான்.

அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி) முஸ்லிம்.5629.

அல் குர் ஆனில் அல்லாஹ் கூறும் அனைத்து செய்திகளும் கதையோ,கற்பனையோ அல்ல,அனைத்தும் ஞானமுள்ளவனும் பேரறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து வந்த சத்திய வாக்குகள்.இந்த சத்தியம் எப்போதும் உண்மை அறிவியலுக்கு  என்றும்  முரண்படாது.மாறாக அறிவியலை மெய்ப்படுத்தி  அதற்கு சான்றாக விளங்கும்.

நிச்சயமாக  நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம்.அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும்  மக்களுக்கு நேர்  வழியாகவும் அருளாகவும் இருக்கிறது.       அல் குர்ஆன்.7:52.

 

Previous post:

Next post: