இன்பத்திலும், துன்பத்திலும் மனிதனின் நிலை!

in 2017 ஜுன்

அல்குர்ஆன் கூறும் :
இன்பத்திலும், துன்பத்திலும் மனிதனின் நிலை!
அபூபக்கர், அதிராம்பட்டிணம்

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது, நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள்.

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள்தாம் நேர்வழியை அடைந்தவர்கள். (2:156,157)

மனிதனை(ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டு மானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக் கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த் திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சிய மாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப் பட்டு விடுகின்றன். (10:12)

நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து, பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகின்றான். (11:9)

அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். (11:10)

ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு. (11:11)

மேலும், எந்த நிஃமத்(பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதே யாகும். பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டுவிட்டால் அவனிடமே நீங்கள் முறையிடு கிறீர்கள். (16:53)

பின்னர் அவன் உங்களிடமிருந்து அத்துன் பத்தை நீக்கிவிட்டால் உடனே உங்களில் ஒரு பிரி வினர் தம் இறைவனுக்கே இணை வைக்கின்றனர். (16:54)

இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் தீண்டினால் அவனையன்றி நீங்கள் எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவை யாவும் மறைந்துவிடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடு கிறீர்கள். இன்னும் மனிதன் மகா நன்றி மறப்ப வனாகவே (கஃபூரா) இருக்கின்றான். (17:67)

மேலும் மனிதர்களில் சிலர் நாங்கள் அல்லாஹ் வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று சொல்கிறார்கள்; எனினும் அவர்களுக்கு அல்லாஹ் வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர் களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனை போல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது நிச்சயமாக நாங்கள் உங்களோடு தான் இருந்தோம் என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா? (29:10)

இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழைக்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்துக் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான்.

(நபியே!) நீர் கூறுவீராக; “”உன் குஃப்ரைக் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே.” (39:8)

மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமா னால் அவன் நம்மையே அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால், அவன் இது எனக்குக் கொடுக் கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத் தான் என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள். (39:49)

மனிதன் நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடை வதில்லை. ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான். (41:49)

எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை-கிருபையை சுவைக்கச் செய்தால், அவன் இது எனக்கு உரியதேயாகும். அன்றியும் (விசாரனைக்குரிய) வேளை ஏற் படுமென நான் நினைக்கவில்லை. நான் என்னு டைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக் கும் என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சய மாக நாம் தெரிவிப்போம். மேலும் நாம் அவர்களை நிச்சயமாக கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (41:50)

அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான். ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை (துஆஇன் அரீழ்) செய்கின்றான். (41:51)

எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால், நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை. செய்தியை சேர்ப்பதுதான் உம் மீது கடமையாகும். இன்னும், நிச்சயமாக நம் முடைய ரஹ்மத்தை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான். (42:48)

மவ்லவி, மவ்லவி அல்லாததார் எவர் பின்னால் சென்றாலும் நாளை நரகமே!
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்திக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும்; அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக. (2:186)

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கி கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்; நீங்கள் குறைவாகவே உபதேசம் பெறுகிறீர்கள். (7:3)

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக நிராகரிப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம். (18:102)

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப் பிராயம் கொள்வதற்கு நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக் கும் எவர் மாறு செய்கிறாரோ, நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலயே இருக்கிறார். (33:36)

Previous post:

Next post: