எமது மரணத்திற்குப் பின்னரும் அந்நஜாத்தின் பணி தொடரவேண்டிய கட்டாயம்!

in 2017 ஜுலை

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அந்நஜாத் மாத இதழ் 1986 ஏப்ரலிலிருந்து தொடர்ந்து பல சிரமங்களிடையே, கடுமையான எதிர்ப்புக்களிடையே, கொலை மிரட்டல்களிடையே, விஷமத்தனமான அவதூறுகளிடையே, ஓயாத கடுஞ்சொற்களிடையே, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையே, தபால் துறை அநீதிக்கிடையே கடந்த 31 வருடங்களாக எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் பேருதவியாலும் பெருங் கிருபையினாலும், அந்நஜாத் நின்றுவிட வேண்டும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு, விருப்பத்திற்கிடையே இடைவிடாது வந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

இத்தனை இடர்பாடுகளுக்குக் காரணம்? ஆம்! 1300 வருடங்களாக ஆதத்தின் சந்ததிகள்-மனித குலத்தினர் அனைவருக்கும் சொந்தமான இறைவனின் இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆனை மறைத்து வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி அவர்களை நரகில் தள்ளும் கொடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் திருடனிலும் கேடுகெட்ட திருடர்களை, புரோகிதர்களான இடைத்தரகர்களை மக்களுக்கு இனம் காட்டி, அவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இம் மவ்லவிகளின் வசீகர, சூன்ய, உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் பற்றிப் பிடித்து அவர்களை 6:153 இறைவாக்குக் கூறும் நேர்வழி நடக்க வைக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது அந்நஜாத். இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் சீர்கேடுகளை, அதலபாதாள வீழ்ச்சியைப் பார்த்து, சமுதாய சீர் திருத்தத்தை நோக்கமாகக் கொண்டு, இந்த மவ்லவிகளைப் போல் எமது சுயக் கருத்துக்களையோ. கற்பனைகளையோ, யூகங்களையோ அவிழ்த்து விடவில்லை. அப்படியானால் அது 2:159, 33:36 இறைக் கட்டளைகள்படி பகிரங்க வழிகேடு என்பதை நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.

ஆனால் அதற்கு மாறாக முழுக்க முழுக்க குர்ஆன் வசனங்கள் கூறுவதையே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது அந்நஜாத். 2:186 இறைவாக்கு மனிதர்களில் யாரையும் நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்ப வேண்டும், அவனது வழிகாட்டல்படியே நடக்க வேண்டும். அவனிடம் மட்டுமே கேட்க வேண்டும் அதுவே நேர்வழி என்று கட்டளையிடுவதையே எடுத்துக் கூறுகிறது அந்நஜாத். அதற்கு மேலும் விளக்கமாக 7:3 இறைவாக்கு அல்லாஹ்வால் இறக்கப்பட்டவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். அல்லாஹ்வால் இறக்கப்பட்டவையில் ஒன்று குர்ஆன் மற்றது சுன்னா(ஹதீஃத்) (பார்க்க : 53:2-6) என்பதையே எடுத்துக் கூறுகிறது அந்நஜாத். இவை போதாதென்று மேலும் மிகக் கடுமையாக 18:102-106 இறைவாக்குகள் கூறுவதையே எடுத்துக் கூறுகிறது அந்நஜாத். 18:102 இறைவாக்கு அல்லாஹ்வை விட்டு மனிதர்களில் அவுலியா-இமாம்-மவ்லவி, வழிகாட்டி என நம்பிப் பின்பற்றுகிறவர்கள் காஃபிர்-நிராகரிப்பாளர்களே, அவர்கள் ஒதுங்குமிடம் நரகம் என மிகக் கடுமையாக எச்சரிப்பதையே அந்நஜாத் எடுத்துக் காட்டுகிறது. 9:31 இறைவாக்கு அல்லாஹ்வை விட்டு மனிதர்களில் யாரை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டா லும், அவர்கள் அம்மனிதர்களை ரப்பாக-இறை வனாகக் கொண்டு கொடிய ´ர்க்கில் மூழ்குவதால் தான் அவர்கள் நரகை அடைகிறார்கள் என்ப தையே அந்நஜாத் எடுத்துக் கூறுகிறது.

18:103 முதல் 106 வரையுள்ள இறைவாக்குகள் இமாம்கள், ஆலிம்கள், மவ்லவிகள் என மனிதர்களைத் தங்கள் வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டவர்கள் மாபெரும் நஷ்டவாளிகள், அவர்கள் பாவமான செயல்களைச் செய்துகொண்டு நன்மையான செயல்களைச் செய்வதாக அறிவீனமாக நம்பிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செயல்கள் நாளை மறுமையில் நிறுக்கப்படா. நரகமே அவர்களுக்குக் கூலியாகும். காரணம் அவர்கள் குர்ஆனை, சுன்னாவை நேரடியாகப் பார்க்காமல் அவற்றை நிராகரித்து மனிதர்கள் பின்னால் செல்வதாகும் என்று கூறுவதையே அந்நஜாத் எடுத்துக் கூறுகிறது. 33:36 இறைவாக்குக் கூறும் அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கம் பற்றித் தெளிவுபடுத்திய பின்னர், மார்க்கத்தில் மேல் விளக்கம், பிக்ஹு, தஃப்ஸீர் என்ற பெயர்களால் குர்ஆன், ஹதீஃதின் நேரடிக் கருத்துக்களைத் திரிப்பது, வளைப்பது, மறைப்பது (பார்க்க 2:159) பகிரங்கமான வழிகேடு என்று கூறுவதையே அந்நஜாத் எடுத்து வைக்கிறது. அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலை இருட்டடிப்புச் செய்யும் இந்த மவ்லவிகளைப் பின்பற்றும் முஸ்லிம்களின் நாளைய நிலை பற்றி 33:66-68, 7:35-41, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற எண்ணற்ற இறைவாக்குகள் கூறு வதையே அந்நஜாத் எடுத்து வைக்கிறது.

இவ்வசனங்களில் சில பெருமையடித்தவர்கள் என்று குறிப்பிடுவது நாங்கள்தான் ஆலிம்கள்-மவ்லவிகள்-மார்க்கம் கற்றவர்கள், அவாம்கள் குர் ஆனை அவர்களது தாய்மொழியில் படித்தும் விளங்க முடியாது என்று வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகளையே குறிப்பதை அந்நஜாத் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது. மவ்லவிகள் பின்னால் சென்று நாளை நரகை நிரப்ப இருக்கும் முஸ்லிம்கள் 3:103 இறைக் கட்டளைப்படி இம் மவ்லவிகளின் வழிகெட்ட போக்கை நன்கறிந்து அவர்களை நிராகரித்துப் புறக்கணித்துவிட்டு, நேரடியாக குர்ஆன், ஹதீஃத் போதனைப்படி நடப்பவர்களை, வஹ்ஹாபிகள், நஜாத்காரன், குழப்ப வாதிகள், ஜமாஅத்துல் முஸ்லிமீன் அபூ அப்துல்லாஹ்வின் ஜமாஅத், நரகவாதிகள் எனப் பூச்சாண்டி காட்டிப் பிதற்றிக் கொண்டும், மக்களை ஏமாற்றி வஞ்சித்துக் கொண்டும், நரகை நோக்கி நடைபோட வைக்கும் மவ்லவி களும், அவர்களது பக்தர்களும், நாளை அவர்களை நரகில் காணாமல் ஆச்சரியத்துடன் கேட்பதை 38:62,63 வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இப்படிப் பெருமையடிக்கும் இம்மவ்லவிகளின் இழிநிலைகள் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களை எடுத்து வைத்து அவர்களின் போலி வேடத்தைக் கலைத்து வருகிறது அந்நஜாத். அவர்களின் வீண் பெருமை காரணமாக அல்லாஹ்வே அவர்களை குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பி விடுவதாகவும், நேரடியான குர் ஆன் வசனங்களை எடுத்துக் காட்டினாலும் இம் மவ்லவிகள் நம்பி ஏற்கமாட்டார்கள். ஒரே நேரான வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். நரகில் கொண்டு சேர்க்கும் கோணல் வழிகளையே தங்களின் வழியாகக் கொண்டு, அவற்றையே நேர்வழி யாக மக்களுக்குப் போதிப்பார்கள் என்று 7:146 குர் ஆன் வசனம் கூறுவதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது அந்நஜாத். இந்த நேரடி குர்ஆன் வசனங் கள் அனைத்தும் 51:55 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான் உறுதியாக உள்ள ஒருசிலருக்கு மட்டுமே பலன் தரும். 32:13, 11:118,119, 12:106, 25:30 இறைவாக்குகள் கூறுவது போல் மிக மிகப் பெரும்பான்மையினருக்கு குர்ஆன் உபதேசங்கள் விழலுக்கு இறைத்த நீர்தான்.

அது மட்டுமல்ல. பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு குர்ஆன் உபதேசம் எட்டிக் காயாகக் கசக்கும் என்ற உண்மையை 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 இறைவாக்குகள் அம்பலப்படுத்து வதையும் அந்நஜாத் மக்கள் மன்றத்தில் யாருக்கும் அஞ்சாமல், படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சி எடுத்து வைக்கிறது. இந்த மூட முல்லாக்கள் அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி (நவூது பில்லாஹ்) அல்லாஹ் சொல்லாத சட்டங்களைச் சொல்லி அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக் கும் அதிமேதாவிகளாகி வழிகெட்டுச் செல்வதை 42:21, 49:16 இறைவாக்குகள் கூறுவதையே மக்களிடம் அந்நஜாத் எடுத்து வைக்கிறது. இப்போது சொல்லுங்கள், பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் அந்நஜாத்திற்கு ஆதரவு கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது. பெரும்பான்மை மக்களின் ஆதர வைப் பெற சத்தியத்தை மறைத்து அசத்தியத்தை அதாவது தர்கா, தரீக்கா, மத்ஹபு, ஜாக், மஸ்லக், ஸலஃபி, ததஜ, இதஜ, இன்ன பிற இயக்கங்களைச் சரிகண்டு அந்நஜாத்தில் எழுத முடியுமா? ஒரு போதும் முடியாது. அப்படியானால் அந்நஜாத்தை நிறுத்தி விடுவதா? ஒருபோதும் முடியாது. 1000ல் 999 பேர் நரகத்திற்குரியவர்கள் (பார்க்க : புகாரீ : 3348, 4741 முஸ்லிம் 379) என்ற எச்சரிக்கையும், சில நபிமார்கள் ஒரேயொரு நபரைக்கூட நேர் வழிக்குக் கொண்டுவர முடியாமல் தன்னந்தனியாக சுவர்க்கம் போவார்கள் (பார்க்க: புகாரீ : 5705, 5752) என்ற எச்சரிக்கையும் நமக்கு எதை உணர்த்துகிறது?

நாம் சுவர்க்கம் போக என்ன வழி? என்றுதான் பார்க்க வேண்டுமே அல்லாமல், ஊரைத் திருத்தும் பொறுப்பை அல்லாஹ் நபிமார்களுக்கும் தர வில்லை, மனிதர்களில் எவருக்கும் தரவில்லை. தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருப்பதே நமது கடமை. இதை எண்ணற்ற வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன. (பார்க்க : 10:99, 13:40, 50:45, 2:272, 28:56, 5:99, 13:40, 14:52, 16:35,82, 24:54, 29:18, 36:17,30, 42:48, 46:35, 64:12) இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் பொறுமையாக, நடுநிலையுடன் நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள், அல்லாஹ்விடமிருந்து வஹீ மூலம் பெற்ற சத்திய-நேர்வழிச் செய்திகளை மக்கள் மன்றத்தில் வைக்கும் போது, அந்நேர்வழியை எத்தனை பேர் ஏற்றுக் கொண்டார்கள். மிகப் பெரும்பான்மையினர் அந்நபிமார்களை எப்படி எல்லாம் இழித்தும், பழித்தும், பொய்யர்கள், குழப்பவாதிகள், பயித்தியக்காரர்கள், மன நோயாளிகள் என்று வாய்க்கு வந்த வாரெல்லாம் திட்டி அந்நபிமார்களின் நேர்வழிக் கருத்துக்களை மக்கள் கேட்கவிடாமல் தடுத்தார்கள். நபிமார்கள் வேதனையின் விளிம்பிற்கே செல் லும்போது அல்லாஹ் அவர்களுக்கு எப்படிப்பட்ட ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவர்களைத் திடப்படுத்தினான் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள முடியும்.

36:30 இறைவாக்கு அந்தோ அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை என்று அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். ஆக சத்தியத்தை-நேர்வழியை மிகப் பெரும்பான்மையினர் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். மிகமிக சொற்பமா னவர்கள் மட்டுமே நேர்வழியை ஏற்பார்கள் என குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் உறுதிப் படுத்து கின்றன. இன்றும் குர்ஆன், சுன்னாவில் உள்ளதை உள்ளபடி சொல்பவர்கள் பெரும்பான்மை மக்க ளால் இழிவுபடுத்தப்படுகிறார்கள். பேயன், பைத்தியக்காரன், பொய்யன், மன நோயாளி இன் னும் இவைபோல் பல இழி சொற்களால் பரிகாசம் செய்து மக்கள் அவர்களின் நேர்வழிப் பேச்சைக் கேட்காமல் தடுத்துவிடுகிறார்கள் இம்மவ்லவிகள்!

அல்லாஹ் குர்ஆன் 2:256,257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17, 51:53, 52:32 ஆகிய வசனங்களில் தாஃகூத், தாஃகூன் என்று குறிப்பிடுவது வழிகெடுக் கும் மனித ஷைத்தான்களாகிய இம்மவ்லவி களையே. அவர்கள் 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல் குர்ஆனின் நேரடிப் போதனை களை தாங்கள் பெற்றக் குழந்தைகளை அறிவது போல் அறிந்த நிலையில்தான் அவற்றை மறுக்கி றார்கள். ஆம்! அவர்கள் 6:153 இறைவாக்குச் சொல் லும் ஒரே நேர்வழி மார்க்கத்தை எண்ணற்றக் கோணல் வழிகள் மதங்களாக்கி அவை கொண்டு தங்கள் வயிற்றையும், பையையும் நிரப்புவதால் 36:21, 2:79, 174,175, 31:6 இறைவாக்குகள் கூறுவது போல் அவர்கள் நேர்வழிக்கு வர வாய்ப்பே இல்லை என்று குர்ஆன் கூறுவதை நாம் மறுக்க முடியுமா? உணவு, உடை, இருப்பிடம் ஆக அனைத்தும் ஒட்டு மொத்தமாக முழுக்க முழுக்க ஹராமில் இருக்கும், அதனால் பெருமை பேசும் இந்த மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள் (பார்க்க : 7:146) என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுவது எமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை.

ஆனால் சொந்த ஹலாலான உழைப்பில் கை நிறையப் பொருளீட்டும் டாக்டர்கள், விஞ்ஞானிகள், பொறிஞர்கள், வியாபாரிகள் போன்ற அறிவு ஜீவிகளும், இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்ற நிலையில், உள்ளங்கை நெல்லிக்கனி போல், குன்றிலிட்ட தீபம் போல் கடுகளவும் சந்தேகமே இல்லாத குர்ஆன் வசனங்கள் கூறும் இந்த உண்மைகளை உணர முடியாத அறிவிலிகளாக இருப்பதே எமக்குப் பெருத்த ஆச்சரியத்தைத் தருகிறது. அவர்களுக்கு வயிற்றுப் பிரச்சனையோ, வாழ்க்கைப் பிரச்சனையோ இல்லவே இல்லை. பின் ஏன் நேர்வழியை ஏற்கத் தயங்குகிறார்கள் தெரியுமா? நேர்வழியில் இருப்பவர்கள் மிகமிகச் சொற்ப மாக இருப்பதால், ஆயிரத்தில் ஒன்று லட்சத்தில் ஒன்று என்று மட்டுமே இருப்பதால், மக்கள் செல்வாக்குக் கிடைக்காது, பேர் புகழ் கிடைக்காது, இருக்கிற பேர் புகழும், பட்டம் பதவியும் பறிபோய் விடும் என்ற அச்சமே அவர்கள் நேர்வழியை-சத்தியத்தை ஏற்று நடக்கத் தடையாக இருக்கிறது. பாவம் அவர்கள், அனைத்து நபிமார்களும் பெரும் பான்மை மக்களிடம் பட்ட கஷ்டங்களை, ஏற்ற அவதூறுகள், அர்ச்சனைகள், இன்னும் பல உள்ளத்தை வேதனைப் படுத்தும் அவமானங்களை குர்ஆனை நேரடியாகப் படித்து உணர்ந்திருந்தால், அற்பமான அழிந்துபடும் இவ்வுலகில் கிடைக்கும் மக்கள் செல்வாக்கு, பட்டம், பதவி இவற்றில் மயங்கி உள்ளம் ஒப்புக்கொண்ட உண்மைகளை மறைக்க முற்படுவார்களா?

ஒரு பிரபலமான மருத்துவர், எழுத்தாளர், நாவலாசிரியர், பேச்சாளர் தனது பேச்சுக்களில், எழுத்துக்களில் 3:103 இறைவாக்கிலுள்ள பிஹப்லில்லாஹ்-அல்லாஹ்வின் கயிறு அதாவது குர்ஆனைப் பிரியாமல் ஒரே ஜமாஅத்தாகப் பற்றிப் பிடியுங்கள் என்றிருப்பதை ஒற்றுமை எனும் கயிறைப் பற்றிப் பிடியுங்கள் என்றே தொடர்ந்து தனது பேச்சுக்களில், எழுத்துக்களில் பயன்படுத்தி வருகிறார். இது காலம் காலமாக மூட முல்லாக்கள் சொல்லி வரு வது, எழுதி வருவது, அதற்கு நியாயமான காரண மும் உண்டு. அதாவது ஹப்லில்லாஹ்-அல்லாஹ்வின் கயிறு என்று உள்ளதை உள்ளபடி சொன்னால், மக்கள் குர்ஆனைப் பற்றிப் பிடிக்க ஆரம்பித்து விட்டால் இந்த மவ்லவிகளின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமே. அதை அவர்களால் ஜீரணிக்க முடியாதே. அதனால் தான் 1984லிலிருந்து நாம் தொடர்ந்து தெளிவாக விளக்கி இருந்தாலும், இந்த மூடமுல்லாக்கள் பிடிவாதமாக ஒற்றுமை எனும் கயிறு என்று பிதற்றி வருகிறார்கள்.

அதாவது கடந்த 1300 வருடங்களாக சுன்னத் ஜமாஅத் என்ற பித்அத்தான நரகில் சேர்க்கும் வழி கெட்ட பிரிவில் ஒற்றுமையாக இருப்பதாகவும், அந்த ஜமாஅத்தில்தான் ஒற்றுமையாக நிலைத்தி ருந்து நரகில் போய் சேரத் தூண்டுகிறார்கள்; தாஃகூத் என்ற மனித இன ஷைத்தானின் வேலையை தொடர்ந்து பிடிவாதமாகச் செய்து வருகிறார்கள். அதற்கு மாறாக ஓரளவு வளமான இவ்வுலக வாழ்க்கையை அல்லாஹ் கொடுத்திருக்கும் இந்த அறிவு ஜீவிகளுக்குப் பிடித்த கேடு என்ன? மூட முல்லாக்கள் சுயநலத்துடன் ஒப்புவிக்கும் வழி கேட்டை, இவர்களும் போதிக்கும் மர்மம் என்ன? 33:36,66-68 இன்னும் பல இறைவாக்குகள் எச்சரிப்பது போல் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு இந்த மவ்லவிகளைத் திட்டிச் சபித்து ஒப்பாரி வைக்கப் போகிறார்களா?

ஆகக் கடந்த 31 வருடங்களாக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இந்த மவ்லவிகளின் வழி கெட்ட துர்போதனைகளை அறிந்து அவர்களிட மிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆனையும், சுன்னாவையும் பற்றிப் பிடித்து அவற்றின் நேரடி வழிகாட்டல்படி மட்டுமே நடக்க வேண்டும் (பார்க்க : 2:186, 7:3, 18:102-106, 59:7) என்று தொடர்ந்து எழுதி வந்தாலும் இந்த குர்ஆன் கூறும் கருத்து மக்களில் 0.001% போய்ச்சேரவில்லை. அப்படிப் போய்ச்சேர்ந்த முஸ்லிம்களில் 0.01% அதை ஏற்று அதன்படி நேர்வழி நடக்க முன்வரவில்லை. ஜின் இன ஷைத்தான்களும், தாஃகூத் என்ற மனித இன ஷைத்தான்களும் மக்களை குர்ஆன் கூறும் நேர்வழிக்கு வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் ஆயிரக்கணக் கான நபிமார்களின் நேர்வழிப் போதனைகளை எத்தனை பேர் ஏற்றுக் கொண்டார்கள் என்று குர்ஆன் விவரிக்கும் செய்தி களைப் படித்து அறிந்துள்ளதால், எமக்கு இது ஆச்சரியத்தையோ, வேதனையோ தரவில்லை. நபி நூஹ் (அலை) மற்றும் தன்னந்தனியாக சுவர்க்கம் போகும் சில நபிமார்களின் வரலாறுகளை குர்ஆன் கூறுவது எமக்குப் போதிய அறிவைத் தருகிறது.

ஆகவே எமது உயிர் மூச்சு உள்ளவரை அந்நஜாத்தின் குர்ஆன் வழி போதனையைத் தொடர்வது மட்டுமல்லாமல், எமது மரணத்திற்குப் பின்னரும் அந்நஜாத்தின் பணி தொடர வேண்டும் என்ற பேராவலுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு அருள் புரிய வேண்டும், அதற்குரிய சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அந்த வல்லவனிடம் தொடர்ந்து துஆ செய்கிறோம். முஃமின்களை துஆ செய்ய அன்புடன் வேண்டுகிறோம். அந்நஜாத் எடுத்துவைக்கும் 2:159 இறைவாக்கு எச்சரிப்பது போல், திரிக்கப்படாமல், வளைக்கப் படாமல், மறைக்கப்படாமல் குர்ஆனின் நேரடிக் கருத்துக்கள் கடந்த 31 ஆண்டுகளில் முழு முஸ்லிம் சமுதாயத்தையே சென்றடையவில்லை. தமிழ் பேசும் முஸ்லிம்களிடையேயும் முழுமையாக சென்றடையவில்லை. இந்த நிலையில் ஆதத்தின் சந்ததிகளான மனிதகுலம் அனைவருக்கும் குர்ஆனின் நேரடிக் கருத்துக்கள் போய் சேருவது எப்போது?

நமது கடமை அதற்கான முழு முயற்சிகளில், நமது சொந்த யூகம், சுய கருத்து, கற்பனை எதையும் புகுத்தாமல், அல்லாஹ் வழிகாட்டியுள்ளபடி மட்டுமே விடாது தொடர்ந்து பாடுபடுவதாகும். பெரும் ஜிஹாத் செய்வதாகும். ஜிஹாத் என்றால் துப்பாக்கி எடுத்துப் போர் புரிவதல்ல. மிகக் கடும் முயற்சி செய்வதாகும். அல்லாஹ் இந்த ஹிஜ்ரி 15ம் நூற்றாண்டில் மனிதகுலத்தினருக்கு ஒரு மறுமலர்ச்சியை நாடினால் அது நடக்கும். அந்த மறுமலர்ச்சி அல்லாஹ்வின் நாட்டத்தில் இல்லை என்றால் அது நடக்காது. ஆயினும் நம்முடைய முயற்சிக்கு நிச்சயம் நாளை மறுமையில் நற்கூலி உண்டு. மஹத்தான வெகுமதிகள் நிச்சயம் உண்டு. இன்ஷா அல்லாஹ்.

அந்நஜாத் வாசகர்களே, உங்களில் பலர் வெறு மனே அந்நஜாத்தைப் படிக்கிறீர்களே அல்லாமல், அதில் குறிப்பிடும் குர்ஆன் வசனங்களை நேரடியாக குர்ஆனை எடுத்துப் படித்து விளங்கும் பழக்கம் இல்லை. குர்ஆனுடன் நேரடித் தொடர்பு உங்க ளுக்கு ஏற்படாதவரை, குர்ஆன் கூறும் நேர்வழியை அறியும் வாய்ப்புக் குறைவு. அவர்களே அந்நஜாத் சொன்ன விஷயங்களையே மீண்டும் மீண்டும் சொல்கிறது என சலித்துக் கொள்கிறார்கள். குர்ஆன் 1450 வருடங்களாக சொன்ன விஷயங்களையே மீண்டும், மீண்டும் சொல்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். சிலர் அந்நஜாத் குறிப்பிடும் குர்ஆன் வசனங்களை உடனடியாக குர்ஆனை எடுத்து நேரடியாகப் படித்து விளங்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு நேரடியாக குர்ஆனுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் அந்நஜாத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டிய தில்லைதான்; ஆயினும் அவர்கள் ஒன்றை நினைவு கூர வேண்டும்.

அந்நஜாத்தைப் படித்ததன் மூலம் குர்ஆனுடன் நேரடித் தொடர்பு ஏற்படும் பாக்கியம் தங்களுக்குக் கிடைத்தது. அந்த பாக்கியம் மனித குலத்தினரில் அல்லாஹ் நாடுவோருக்குக் கிடைக்க வேண்டும் என்றால், இடைத்தரகு புரோகிதமற்ற குர்ஆனின் நேரடிக் கருத்துக்கள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். இந்த முயற்சியை அந்நஜாத் மட் டுமே செய்து வருகிறது. மற்றபடி உலகளாவிய அள வில் இஸ்லாத்தின் பெயரால், வழிகெட்ட எண்ணற் றப் பிரிவினர்களின், இடைத்தரகர்களான மதகுருமார்களின் சுய கருத்துக்களே குர்ஆன் விளக்கமாக-தஃப்ஸீராக எடுத்து வைக்கப்படுகின்றன. நேரடியாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் கருத்துக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற நேரிய-சத்தியக் கருத்துக்களை எடுத்து வைக்கும் அரிய முயற்சி உலகின் எந்தப் பகுதியிலும் நடைபெறு வதாகத் தெரியவில்லை; இருந்தால் அறியத் தரவும்.

எனவே அந்நஜாத்தின் சீரிய இந்த முயற்சி கண்டிப்பாகத் தொடர்வதோடு, அந்நாஜாத் கூறும் நேரடி குர்ஆன், சுன்னா கருத்துக்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய நம்மால் ஆன முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அதன் முடிவு எல்லாம் வல்ல அல்லாஹ் வின் கையிலேயே இருக்கிறது. நமது கையில் இல்லை என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும்.

எனவே அந்நஜாத்தைப் படிப்பதன் மூலம் குர் ஆனை நேரடியாகப் பற்றிப் பிடிக்கும் பாக்கியம் பெற்ற சகோதர, சகோதரிகளும் அந்நஜாத் தொய் வின்றித் தொடர்ந்து வெளிவர தங்கள் சந்தாக்களைப் புதுப்பிப்பதோடு, தாராளமாக அந்நஜாத் திற்கு வளர்ச்சி நிதி கொடுத்தும் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் குர்ஆனைப் பற்றிப் பிடிக்கும் நன்நோக்கில் அவர்களுக்கும் அந்நஜாத்தை அறிமுகப்படுத்தி சந்தா சேர்த்து அந்நஜாத் தொடர்ந்து வெளிவர உதவுங்கள். இது உங்களுக்கு மறுமையில் மகத்தான நற்கூலிகளைப் பெற்றுத் தரும்.

அடுத்து அந்நஜாத் ஆரம்பித்த காலத்திலிருந்து சகோதர சகோதரிகளிடமிருந்து அவர்களுடைய ஜகாத்தைப் பெற்று 9:60 இறைவாக்குக் கூறும் நபர்களுக்கு கொடுத்துவிட்டு அதன் வரவு செலவு கணக்கை வருடா வருடம் ஜகாத் கொடுத்தவர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். மற்றபடி சில அறிவீனர்கள் பேர் புகழை விரும்பி ஜகாத் பெறுபவர் களைப் படம் பிடித்துப் பத்திரிக்கைகளில் போட்டு அவர்களை அவமானப்படுத்தும் தீச் செயலை நாம் செய்வதே இல்லை. (பார்க்க: 2:261-265)

அந்நஜாத் வளர்ச்சி நிதி என்று குறிப்பிட்டு வரும் நிதியை மட்டுமே அந்நஜாத் கணக்கில் சேர்க்கிறோம். ஜகாத் நிதியிலிருந்து சல்லிக்காசும் அந்நஜாத் திற்காக எடுப்பதில்லை. 9:60 இறைவாக்கு ஜகாத்தை வசூலிப்பது, விநியோகிப்பது, கணக்கிடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு ஒரு பங்கு உண்டு என்று கூறினாலும் நாம் அப்படி எடுப்ப தில்லை. பட்டியல் தயாரித்து அச்சடிப்பது, தபாலில் அனுப்புவது போன்ற செலவினங்களையும் ஜகாத் கணக்கில் கொண்டு வருவதில்லை. நாமே செல வழிக்கிறோம். இலவசப் பிரசுரங்களின் செலவையும் அந்நஜாத் நிதியிலிருந்தோ, ஜகாத் நிதியிலிருந்தோ எடுப்பதில்லை. ஜகாத் பணத்தைக் கொள்ளை அடித்துச் சுரண்டுவதாக சில அறிவீனர்கள் அவதூறு பரப்புவதால் இந்த விளக்கம் அவசியமாகிறது. இதைக் கண்டு கொள்ளாமல் விட்டால், அவர்தான் மறுப்புத் தெரிவிக்கவில்லையே. அத னால் சொல்வது உண்மை என்று அவரே ஏற்றுக் கொண்டார் என்றும் அறிவீனர்கள் அவதூறு பரப்பலாம்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்களது அந்நஜாத் சந்தாக்களை அவசியம் புதுப்பித்து அந்நஜாத் பணி தொய்வில்லாமல் தொடர உதவுங்கள், மேலும் அந்நஜாத் வளர்ச்சி நிதியாகக் கொடுத்து அந்நஜாத்தைப் பலப்படுத்துங்கள். உங்களது ஜகாத் பணத்தை தாராள மாக அனுப்பி, ஏழை, எளிய மக்களின் நியாயமான, அத்தியாவசியத் தேவைகளுக்குக் கொடுத்து உதவும் அரிய சேவைக்கு ஒத்துழைப்புத் தருமாறு மிக்க அன்புட னும், ஆதரவு வைத்தும் வேண்டுகிறோம்.

அந்நஜாத் தொய்வின்றித் தொடர நீங்கள் அனை வரும் துஆ செய்யுங்கள். உங்களின் இவ்வுலக மறு உலக வாழ்க்கை வளமாக, சுபீட்சமாக அமையவும், உங்கள் சிறிய, பெரிய பாவங்களை அல்லாஹ் கருணையுடன் மன்னித்து நாளை மறுமையில் மகத்தான பதவிகளைத் தரவும் துஆ செய்கிறோம்.

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே, ஒவ் வொரு ஆணையும், ஒவ்வொரு பெண்ணையும் அல்குர் ஆன் 2:186, 7:3, 18:102-106, 33:36,66-68, 53:2-5, 59:7 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து, 3:102-105 குர்ஆன் வசனங்கள் கூறு வதற்கு அடிபணிந்து, புரோகிதர்களை முற்றிலும் புறக்கணித்து அதாவது 2:186, 50:16, 56:85 குர்ஆன் வசனங்கள் அறிவுரையை ஏற்று மனிதர்களில் பாம ரனையோ, மெத்தப் படித்த மவ்லவியையோ அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடையில் இடைத்தர கராகப் புகுத்தாமல், அவர்களில் எவரையும் நமது வழிகாட்டியாக ஏற்காமல், நேரடியாக குர்ஆன், ஹதீஃத் போதனைகள்படி அவற்றை மட்டுமே மார்க்கமாகக் கொள்ள வேண்டும் என்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டு அந்நஜாத் இதுவரை தொய்வின்றி தொடர்ந்து வெளி வருகிறது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

ஆதம்(அலை) காலத்திலிருந்தே மனித சமுதாயத் தைத் தங்களின் வசீகர சூன்ய, நயவஞ்சகப் பேச் சால், எழுத்தால் ஆட்டிப் படைக்கும் இப்புரோ கிதர்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்க முழுதும் பாடுபட்ட நபிமார்கள் இப்புரோகிதர்களிடம் பட்ட பாட்டை இறுதி வாழ்க்கை நெறி நூல் அல்குர்ஆன் தெளிவாக எடுத்தியம்பிக் கொண் டிருக்கிறது. மக்கள்தான் படிப்பனைப் பெறத் தயாரில்லை.

ஆயினும் நம்முடைய நீங்காதக் கடமை சத்தியத்தை – நேர்வழியை – குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனைகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். 51:55 இறைவாக் குக் கூறுவது போல் முஃமின்களுக்கு – உள்ளத்தில் ஈமானுடையவர்களுக்கு அது நிச்சயம் பலன் அளிக்கவே செய்யும். 49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான் நுழையாத பெரும்பான்மையினருக்கு குர்ஆன், ஹதீஃத் உபதேசம் ஒருபோதும் பயன் தராதது மட்டுமல்ல, குர்ஆன், ஹதீஃத் போத னையை மிகக் கடுமையாக வெறுப்பார்கள். (பார்க்க : 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45)

அதனால் பெருங்கொண்ட மக்களின் ஆதரவு நமக்குக் கிடைக்கவில்லையே என்ற கவலை நமக்குக் கூடவே கூடாது. அக்கவலை நம்மை வழிகேட்டி லிட்டுச் சென்று விடும். (பார்க்க: 5:100, 6:116) நாம் 6:153 இறைவாக்குக் கூறும் நேர்வழி நடந்து சுவர்க்கம் செல்ல விரும்பினால், குர்ஆன், ஹதீஃதை மட் டுமே மார்க்கமாக எடுத்துச் சொல்லும் அந்நஜாத் தின் கல்லில் நார் உறிக்கும் பணி தொடர்ந்து உலகம் அழியும் வரை நடந்தே ஆக வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக.
நாம் எமது 77வது வயதைக் கடந்து கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் வல்லமை மிக்க அல்லாஹ் எம்மை இப்பூமியின் மேற் பரப்பில் நடமாட அனுமதிக்கிறானோ? யாம் அறியோம்! ஆயினும் எமக்குப் பின்னரும் அந்நஜாத் குர் ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்க ஆதாரங்கள்; மனிதர்களில் எவரது சுய கருத்தும் ஒருபோதும் மார்க்கம் ஆகாது என்ற நேர்வழிக் கருத்தில் உறுதியாக நின்று நிலைத்து வெளிவர வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். அல்லாஹ் அருள் புரிவானாக!

அந்த இலட்சியத்தோடு, இரண்டு சகோதரர்கள் கொடுத்த 6 சென்ட் நிலத்தின் அடித்தளத்தில் ஒரு படுக்கை அறை கொண்ட இரு வீடுகளும், இரு படுக்கை அறை கொண்ட இரு வீடுகளும் கட்டி முடித்திருக்கிறோம். முதல் தளத்தில் நான்கு வீடுகளும், இரண்டாம் தளத்தில், குர்ஆன், ஹதீஃத் பயிற்சிக்குரிய ஒரு மன்றமும் கட்ட பெரும் முயற்சி எடுத்து வருகிறோம். மறுமை வாழ்வில் உறுதியான நம்பிக்கையும், அந்நஜாத் தொடர்ந்து வெளிவந்து 51:55 இறைவாக்குக் கூறுவது போல், ஈமான் தாரிகளுக்குப் பயன்தர வேண்டும் என்பதில் உறுதி யான நம்பிக்கையுடைய சகோதர சகோதரிகள் இந்த வகைக்கும் பெருந்தொகை தந்து கட்டிட வேலைகள் முழுமையாக முடிவுபெற உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

2:186, 7:3, 53:2-6, 18:102-106, 33:36,66-68, 50:16, 56:85, 59:7 இன்னும் பல வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி அல்லாஹ்வுக்கும் அடியானுக் கும் இடையில், திருட்டுத்தனமாக புகுந்து மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் இடைத்தரகர்களான, புரோகிதர்களான அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளையும் அடையாளம் காட்டி, சமுதாயத்தை அவர்களின் கொடூர, நயவஞ்சக, உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்கப் பாடுபடும் அந்நஜாத்தின் தொடர் முயற்சி உலகம் அழியும் வரை நீடிக்க விரும்பும் சகோதர, சகோதரிகள், தாராளமாக நிதி உதவி செய்ய அன்புடன் வேண்டுகிறோம். அதனால் மறுமையில் பெரும் பெரும் பதவிகள் பெற அல்லாஹ்விடம் துஆவில் வேண்டுகிறோம்.

9:107 இறைவாக்குக் கூறும் மஸ்ஜிதன்ழிரார் என்ற பிரிவினைவாதிகளின் பள்ளிகளுக்கு நிதி உதவி செய்வதை விட மறுமையில் அதிக நன்மைகளைப் பெற்றுத் தருவது இப்புரோகித மவ்லவிகளின் உடும்புப் பிடியிலிருந்து சமுதாயத்தை விடு விக்கச் செய்யப்படும் அந்நஜாத்தின் முயற்சியாகும். ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடிக்கச் செய்யப்படும் முயற்சியாகும்! வஸ்ஸலாம்.

குறிப்பு : தயவு செய்து உங்களின் Email ID, செல் நம்பர், Email செய்து தகவல் தொடர்பை எளிமைப் படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
———————-
இக்கட்டுரையில் வரும் குர்ஆன் வசனங்களில் சில…

6:153 وَاَنَّ هٰذَا صِرَاطِىْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ‌ ۚ وَلَا تَتَّبِعُوْا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏
6:153. நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
2:159 اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَ يَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ‏
2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
33:36 وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏
33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
2:186
2:186 وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌؕ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏
2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
7:3 اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ‌ ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ‏
7:3. (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
18:102 اَفَحَسِبَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنْ يَّتَّخِذُوْا عِبَادِىْ مِنْ دُوْنِىْۤ اَوْلِيَآءَ‌ ؕ اِنَّاۤ اَعْتَدْنَا جَهَـنَّمَ لِلْكٰفِرِيْنَ نُزُلًا‏
18:102. நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
18:103
18:103 قُلْ هَلْ نُـنَبِّئُكُمْ بِالْاَخْسَرِيْنَ اَعْمَالًا ؕ‏
18:103. “(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
18:104
18:104 اَ لَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا‏
18:104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.
18:105
18:105 اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ وَلِقَآٮِٕهٖ فَحَبِطَتْ اَعْمَالُهُمْ فَلَا نُقِيْمُ لَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ وَزْنًـا‏
18:105. அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.
18:106
18:106 ذٰلِكَ جَزَآؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوْا وَاتَّخَذُوْۤا اٰيٰتِىْ وَرُسُلِىْ هُزُوًا‏
18:106. அதுவே அவர்களுடைய கூலியாகும் – (அது தான்) நரகம் – ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.
33:66 يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا‏
33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
33:67
33:67 وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا‏
33:67. “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
33:68
33:68 رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيْرًا
33:68. “எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்).
7:35 يٰبَنِىْۤ اٰدَمَ اِمَّا يَاْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِىْ‌ۙ فَمَنِ اتَّقٰى وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
7:35. ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
7:36
7:36 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَاۤ اُولٰۤٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
7:36. ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் – அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.
7:37
7:37 فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ ؕ اُولٰۤٮِٕكَ يَنَالُهُمْ نَصِيْبُهُمْ مِّنَ الْـكِتٰبِ‌ؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمْ رُسُلُـنَا يَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَيْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ‏
7:37. எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” எனக் கேட்பார்கள்; (அதற்கு) “அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்” என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக – இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
7:38
7:38 قَالَ ادْخُلُوْا فِىْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ فِى النَّارِ‌ ؕ كُلَّمَا دَخَلَتْ اُمَّةٌ لَّعَنَتْ اُخْتَهَا‌ ؕ حَتّٰۤى اِذَا ادَّارَكُوْا فِيْهَا جَمِيْعًا ۙ قَالَتْ اُخْرٰٮهُمْ لِاُوْلٰٮهُمْ رَبَّنَا هٰٓؤُلَۤاءِ اَضَلُّوْنَا فَاٰتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ‌  ؕ قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَّلٰـكِنْ لَّا تَعْلَمُوْنَ‏
7:38. (அல்லாஹ்) கூறுவான்: “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்.” ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு” என்று சொல்வார்கள். அவன் கூறுவான்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு – ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்.”
7:39
7:39 وَقَالَتْ اُوْلٰٮهُمْ لِاُخْرٰٮهُمْ فَمَا كَانَ لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ
7:39. அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி, “எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இருமடங்கு) வேதனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்கள்.
7:40
7:40 اِنَّ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا يَدْخُلُوْنَ الْجَـنَّةَ حَتّٰى يَلِجَ الْجَمَلُ فِىْ سَمِّ الْخِيَاطِ‌ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُجْرِمِيْنَ‏
7:40. எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
7:41
7:41 لَهُمْ مِّنْ جَهَـنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ‌ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ‏
7:41. அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு – இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
3:103
3:103 وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை – வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
51:55
51:55 وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ‏
51:55. மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
32:13 وَ لَوْ شِئْنَا لَاٰتَيْنَا كُلَّ نَفْسٍ هُدٰٮهَا وَلٰـكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّىْ لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ‏
32:13. மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை – ஜின்களையும், (தீய) மனிதர்களையும் – ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.
17:41
17:41 وَلَقَدْ صَرَّفْنَا فِىْ هٰذَا الْقُرْاٰنِ لِيَذَّكَّرُوْا ؕ وَمَا يَزِيْدُهُمْ اِلَّا نُفُوْرًا‏
17:41. இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை!
17:45 وَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًا ۙ‏
17:45. (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்.
17:46
17:46 وَّجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا‌ ؕ وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ نُفُوْرًا‏
17:46. இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல் மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள்.
17:47
17:47 نَحْنُ اَعْلَمُ بِمَا يَسْتَمِعُوْنَ بِهٖۤ اِذْ يَسْتَمِعُوْنَ اِلَيْكَ وَاِذْ هُمْ نَجْوٰٓى اِذْ يَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا‏
17:47. (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
42:21 اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَاْذَنْۢ بِهِ اللّٰهُ‌ؕ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِىَ بَيْنَهُمْ‌ؕ وَاِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
42:21. அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் – நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
49:16 قُلْ اَ تُعَلِّمُوْنَ اللّٰهَ بِدِيْـنِكُمْ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
49:16. “நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கிறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் – அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்” என்று (நபியே!) நீர் கூறும்.
10:99 وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِى الْاَرْضِ كُلُّهُمْ جَمِيْعًا‌ ؕ اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰى يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‏
10:99. மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
13:40 وَاِنْ مَّا نُرِيَـنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَـتَوَفَّيَنَّكَ فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ وَعَلَيْنَا الْحِسَابُ‏
13:40. (நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம் வாழ் நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும்படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்); உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது.
2:256 لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ  قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ‌ۚ فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْۢ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا‌‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
2:257
2:257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌ؕ  وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
2:257. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ – (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
2:146 اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْؕ وَاِنَّ فَرِيْقًا مِّنْهُمْ لَيَكْتُمُوْنَ الْحَـقَّ وَهُمْ يَعْلَمُوْنَؔ‏
2:146. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
36:21 اتَّبِعُوْا مَنْ لَّا يَسْــٴَــلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ‏
36:21. “உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்).
2:79 فَوَيْلٌ لِّلَّذِيْنَ يَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَيْدِيْهِمْ ثُمَّ يَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِيَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًا ؕ فَوَيْلٌ لَّهُمْ مِّمَّا کَتَبَتْ اَيْدِيْهِمْ وَوَيْلٌ لَّهُمْ مِّمَّا يَكْسِبُوْنَ‏
2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!
7:146 سَاَصْرِفُ عَنْ اٰيٰتِىَ الَّذِيْنَ يَتَكَبَّرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ ؕ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا‌ ۚ وَاِنْ يَّرَوْا سَبِيْلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوْهُ سَبِيْلًا‌ ۚ وَّاِنْ يَّرَوْا سَبِيْلَ الْغَىِّ يَتَّخِذُوْهُ سَبِيْلًا‌ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ‏
7:146. எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.
49:14 قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا‌ ؕ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰـكِنْ قُوْلُوْۤا اَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْاِيْمَانُ فِىْ قُلُوْبِكُمْ‌ ۚ وَاِنْ تُطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا يَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَيْـٴًــــا‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
49:14. “நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
5:100 قُلْ لَّا يَسْتَوِى الْخَبِيْثُ وَالطَّيِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيْثِ‌ ۚ فَاتَّقُوا اللّٰهَ يٰۤاُولِى الْاَ لْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
5:100. (நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “தீயதும், நல்லதும் சமமாகா எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என்று நீர் கூறுவீராக.

Previous post:

Next post: