முரண்பாடுகள்+அபத்தங்கள்  =  பித்தலாட்டங்கள்

in 2017 ஆகஸ்ட்

 N.அலி, கல்லிடைக்குறிச்சி.

பில்லி, சூனியம் ஒரு பித்தலாட்டம் என்ற நூலில் 2:102ம் வசனத்தின் நேரடிப் பொருள் பல குர்ஆன் வசனங்களுக்கு (பார்க்க 10:77, 7:118-120, 20:69, 52:13,14,15) முரண்படுகிறது என்று கூறி இலக்கணப்படி மாற்றுப் பொருள் கொடுக்க இடமிருக்கிறது என்றும் அவ்வாறு பொருளும் செய்து வரிக்கு வரி விளக்கம் கொடுத்திருக்கிறார் அந்நூலின் ஆசிரியர் பீ.ஜை. அவர் என்ன காரணம் கூறி மாற்றுப் பொருள் கொடுத்தாரோ அதே காரணங்கள் இவருடைய மொழிப் பெயர்ப்பிலும் நிறைந்து காணப்படுகின்றன. அதாவது முரண்பாடுகள். கருத்துப் பிழைகள் அதை அடையாளம் காட்டுவதே நமது நோக்க மாகும். அவருடைய மொழிப் பெயர்ப்பு வருமாறு :

“பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்” பக்கம் 188+194.
ஸுலைமானின் ஆட்சியில் “”ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள்.” ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை (ஜிப்ரீல், மிகாயீல்) அவ்விரு வானவர்களுக்கும் சூனியம் அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர் நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கண வனுக்கும் மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்த முடியுமோ அந்த ஒன்றை அவ்விருவரிட மிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்கு தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை என்பதை உறுதியாக அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது அவர்கள் அறிய வேண்டாமா? (குர்ஆன் 2:102)

ஸுலைமானின் ஆட்சியில் “”ஷைத்தான்கள் கூறியதை” இவர்கள் பின்பற்றினார்கள் என்ற வாக்கியம் சொல்வது என்ன? சூனியம் என்பது நல்லவர்களால் கற்றுக் கொடுக்கப்படவில்லை. அதைக் கற்றுக் கொடுத்தவர்கள் சுலைமான் நபி காலத்தில் வாழ்ந்த தீயவர்கள்தான் இதுதான் மேலே உள்ள வாசகத்தின் கருத்து.

இவர் “”ஷைத்தான்கள் கூறியதை” என்று மொழிப் பெயர்த்த இடத்தில் “”மா தத்லு” என்ற அரபுப் பதம் இடம் பெறுகிறது. இதற்கு “”கூறியதை” என்று ஒருக்காலும் மொழிப் பெயர்க்க முடியாது. இதற்கு சில வசன எண்களைத் தருகிறோம் (பார்க்க:29:45, 27:92, 28:92, 28:53) அவருடைய மொழிப் பெயர்ப்பையே எடுத்துப் பாருங்கள் அறிந்து கொள்வீர்கள். இங்கு மட்டும் ஏன்? “”கூறியதை” என்று மொழிப் பெயர்க்கிறார் தெரியுமா? அதாவது சூனியம் என்பது ஷைத்தானின் சொந்தக் கூற்று என்ற அவருடைய சொந்த கருத்தை திணிப்பதற்காக குர்ஆனின் நேரடிப் பொருளை இருட்டடிப்பு செய்வதற்காக இவ்வாறு செய்கிறார். இது 69:44, 45 குர்ஆன் வசனம் கண்டிக்கும் குற்றமாகும். இது முதல் தவறு அடுத்து அவர் கூறுவதைப் பாருங்கள்.

ஸுலைமான்(ஏக இறைவனை) மறுக்க வில்லை (ஜிப்ரீல் மீகாயீல்) எனும் அவ்விரு வான வர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை என்ற வாக்கியம் சொல்வது என்ன? சூனியத்தை சுலைமான் நபி(அலை) கற்றுக் கொடுத்ததாக யூதர்கள் சொல்வது தவறு அவர் சூனியத்தை கற்றுக் கொடுக்கவில்லை. அதுபோல் சூனியத்தை கற்றுக் கொடுத்த தாக யூதர்கள் நம்பினார்கள் என்பதும் அந்த நம் பிக்கை தவறானது என்பதும் இங்கே சொல்லப்படுகிறது. அதாவது சூனியத்தை கற்பது இறை மறுப்பாகும். குஃப்ராகும் இதை சுலைமான் நபியும் செய்யமாட்டார்கள். வானவர்களும் செய்ய மாட்டார்கள். ஸுலைமான் நபி கற்றுக் கொடுத்ததாக யூதர்களின் நம்பிக்கைக்கு இதில் மறுப்பு இருக்கிறது என்பதால் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் மலக்குமார்கள் விஷயத்தில் அல்லாஹ் பயன்படுத்திய வாசகம் மறுப்பாக அமையவில்லையே ஏன்? சுலைமான் நபி நிராகரிக்கவில்லை என்று மறுத்த அல்லாஹ் “”மலக்குகள் நிராகரிக்க வில்லை” என்று மறுக்காமல் “”அருளப்பட வில்லை” என்று கூற வேண்டிய அவசியம் என்ன? குறைந்தபட்சம் மலக்குமார்கள் கற்றுக் கொடுக்கவில்லை என்று கூறினால்தான் மறுப்பாக அமையும் அதை விட்டு விட்டு “”அருளப்படவில்லை” என்ற வாசகம் எந்த வகையில் மறுப்பாக அமையும்? அல்லது அவரே (பீ.ஜை) கூறுவது போன்று வானவர்கள் இதை செய்ய மாட்டார்கள் என்று நேரடியாக கூறியிருப்பான் அதை விட்டு “”அருளப்படவில்லை” என்று கூறுவானா? இது மறுப்பாகத் தெரிகிறதா? அல்லது உளறலாகத் தெரிகிறதா? அவருடைய நூலின் பக்கம் 19ல் ஒரு அறிவுரை கூறுகிறார் படித்துப் பாருங்கள்.

“”நாம் திருகுர்ஆனுக்கு ஒரு விளக்கம் கொடுக்கிறோம் என்றால் அந்த விளக்கம் அல்லாஹ்வின் தகுதிக்கு ஏற்ப அமைந்துள்ளதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். மகத்தான தகுதி படைத்த இறைவன் இப் படிச் சொல்வானா என்று சந்தேகத்தை ஏற் படுத்தும் எந்த விளக்கத்தையும் திருகுர் ஆனுக்கு கொடுக்கக் கூடாது எந்த வசனத்தை புரிந்து கொள்வதாக இருந்தாலும் அதைச் சொன்னவனின் தகுதியையும் அவனது மகத் தான அறிவையும் ஆற்றலையும் கவனத்தில் கொண்டு அவனது அறிவாற்றலுக்கு ஏற்ற பொருளைத்தான் கொடுக்க வேண்டும்.” அவரின் இந்த அதி அற்புத அறிவுரையின் படியே கேட்கின்றோம். இந்த அடிப்படையில் தான் மேற்கண்ட வாசகத்தை மொழிப் பெயர்த்தி ருக்கிறீர்களா?

பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்கு கற்பித்த ஹாரூத் மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர் என்ற வாக்கியம் சொல்வது என்ன? ஹாரூத் மாரூத் எனும் ஷைத்தான்கள்தான் சூனியத்தை கற்றுக் கொடுத்தனர். இதன் மூலம் அவர்கள் இறை மறுப்பாளர்களாகிய காஃபிர்கள் ஆயினர் இதற்கு நாம் மறுப்புக் கொடுக்க வேண்டாம் இதற்கடுத்த வாக்கியத்திற்கு அவர் கொடுக் கும் மொழிப் பெயர்ப்பும், விளக்கமும் எவ்வளவு முரண்பாடுகளை அள்ளித் தருகின்றது என்பதைப் பாருங்கள்.

நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று) மறுத்து விடாதே என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை என்ற வாக்கியம் சொல்வது என்ன? காஃபிர்களாகி விட்ட ஹாரூத், மாரூத் எனும் ஷைத்தான்கள் சூனியத்தை கற்றுக் கொடுப்பதற்கு முன் கற்றுக் கொள்ள முன்வரும் ஒவ்வொருவருக்கும் மறவாமல் ஒரு எச்சரிக் கையை செய்து விடுவார்கள். நாங்கள் சூனி யத்தை கற்று காஃபிர்களாக, இறை மறுப்பாளர் களாக ஆகி உங்களுக்கு முன்னால் படிப்பினை யாக இருக்கிறோம். எனவே இதைக் கற்று நீங்க ளும் காஃபிர்களாகி விடாதீர்கள் என்பதுதான் அந்த எச்சரிக்கையை ஒருவருக்கும் செய்யாமல் அவர்கள் இருந்ததில்லை.

குர்ஆனின் 59:16, 35:5,6, 7:202, 17:53, 14:22, 15:39, 29:28 இன்னும் ஆதமுடைய சம்பவங்களைக் கூறும் அனைத்து குர்ஆன் வசனங்களையும் படித்துப் பாருங்கள் அதிலும் குறிப்பாக 2:34ல் கூறும் அனைத்து நிராகரிப்புக்கும் முன் மாதிரி முதல் நிராகரிப்பாளன் இவையனைத்தும் ஷைத்தானின் தன்மை பற்றி அறிய போதுமாகும் அதிலும் 59:16ல் வசனம் ஷைத்தான் மனிதனிடம் நிராகரித்துவிடு என்று கூறுவான் மனிதன் நிராகரித்தவுடன் ஷைத்தான் அல்லாஹ்வுக்கு அஞ்சி விலகி விடுவான் என்று சொல்கிறது. அப்படியானால் ஷைத்தான் என்பவன் மனிதனை நிராகரிக்கவே தூண்டுவான் என்பது தெள்ளத் தெளிவாகும். ஷைத்தானுக்கு குர்ஆன் கூறும் இலக்கணமே தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுப்பதே என்பதுதான். இதே தன்மையுடைய மனிதர் களைத்தான் குர்ஆன் ஷைத்தான் என்று கூறுகிறது. குர்ஆன் கூறும் ஷைத்தானிய தன்மைக்கு ஒட்டுமொத்த முரண்பாடாய் மேற்கண்ட மொழிபெயர்ப்பும், விளக்கமும் அமைந்துள் ளது. அது மட்டுமல்ல 2:102ன் முன்னைய பகுதி சூனியத்தைக் கற்ற ஷைத்தான்கள் காஃபிர்கள் என்றும் அதே வசனத்தின் அடுத்த வாக்கியம் நாங்கள் காஃபிர்கள் ஆனாலும் பரவாயில்லை நீங்கள் (மக்கள்) காஃபிர்களாகி விடாதீர்கள் என்று தங்களை “”படிப்பினையாக்கி” எச்சரித்த குர்ஆனுக்கு முரணான உலக மகா அதிசயமும் இங்குதான் பார்க்க முடியும் என்ன கொடுமை இது ஒரு வசனத்தின் வாக்கியத்திற்கு அந்த வசனத்தின் இன்னொரு வாக்கியமே முரணா? இதுதான் குர்ஆனை முரண்பாடு இன்றி விளக்கும் இலட்சணமா?

இன்னும் சில சந்தேகங்களும் கேள்விகளும் எழுகின்ற ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொள்ள வரும் ஒவ்வொருவருக்கும் மறவாமல் எச்சரிக்கக் கட்டளையிட்டது யார்? அப்படி எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியம் என்ன? மூஸா நபிக்கு எதிராக சூனியத்தை பயன்படுத்திய சூனியக்காரர்களே இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் சூனியத்தை கற்றதினால் காஃபிர்களாகி விட்ட ஹாரூத், மாரூத், என்ற ஷைத்தான்கள் (அவரது விளக்கப்படி தீய மனிதர்கள்) தாங்கள் காஃபிர்கள் ஆனாலும் பரவாயில்லை மக்கள் காஃபிர்கள் ஆகிவிடக்கூடாது என்று தங்களை முன்னிருத்தி எச்சரித்த நல்லவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு இருந்த தடைதான் என்ன? முந்தைய வாக்கியங் களில் ஷைத்தான்கள் என்று பொதுவாக கூறும் அல்லாஹ் இவர்களை மட்டும் ஹாரூத், மாரூத் என்று பெயர் சொல்லி குறிப்பிடக் காரணம் என்ன? இது போன்று எண்ணற்ற கேள்விகள் எழும் விரிவஞ்சி விட்டுவிடுகிறோம். அடுத்து கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏறபடுத்துவதை அவ்விருவரிடமிருந்தும் அவர் கள் கற்றுக் கொண்டனர் என்ற வாக்கியம் சொல் வது என்ன? இந்த இடத்தில் அரபு மூலத்தில் சபபிய்யா எனப்படும் “”ஃபா” என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. அதாவது இச்சொல்லுக்கு பின்னால் சொல்லப்படும் நிலைமை இச்சொல் லுக்கு முன்னால் சொல்லப்பட்ட செய்தியின் காரணமாக நடந்தது என்று பொருள் இதை குறிக்க தமிழ் மொழியில் எனவே, ஆகவே என்று கூறுவார்கள் இன்னும் சில உதாரணங்களைக் கூறி (பக்கம் 191, 192, 193) மொழி இலக்கண பாடம் நடத்தி மக்கள் சூனியம் அல்லாத கணவன் மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் “”புதிய கலையை” கற்றுக் கொண்டனர் என்று விளக்கம் கொடுக்கிறார் இதிலுள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.

குர்ஆனின் 41:3, 2:159, 54:22, 27:6 இன்னும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களில் மனிதர்களுக்கு தெளிவாக குர்ஆனை விளக்கி இருக்கிறோம் என்று அல்லாஹ் தன்னுடைய வசனத்தை நன்கு விவரித்ததாக சொல்கிறான். ஆனால் இவரோ “”ஃபா” என்ற சபபிய்யா எனப்படும் அரபு இலக் கணத்தின் மூலம் மக்கள் சூனியம் அல்லாத வேறொரு கலையை மக்கள் கற்றுக் கொண்டார்கள் என்ற விஷயத்தை அல்லாஹ் நேரடியாக தெளிவாக சொல்லாமல் “”ஃபா” என்ற ஒற்றை அரபு எழுத்தில் வைத்து விட்டான் என்று சொல்லாமல் சொல்கிறார். அதாவது மக்களுக்கு விளக்குவதற்கு அல்லாஹ்வுக்கு அரபு மொழியில் வார்த்தை கிடைக்காமல் அரபு மொழியின் ஒற்றை எழுத்து இலக்கணத்தில் வைத்து விட்டான் என்கிறார் போலும் 2:102ன் நேரடிப் பொருள் அதுவும் அவர் கூறும் வாக்கியத்தில் சூனியத்திற்கு ஆற்றல் உண்டு கருத்து வருவதால் அது இணைவைப்பாகி விடும் என்பதால்தான் மாற்று மொழிப் பெயர்ப்பு செய்து விளக்கமும் கொடுக்க வேண்டிய நிலை என்கிறார் இவர் சொல்வது உண்மை என்றால் அல்லாஹ் 35:14, 7:198 ஆகிய வசனங்களில் இணைவைப்பை பற்றி கூறும் போது மிக நன்கறிந்தவனைப் போல் எவ ரும் உமக்கு எடுத்துக் கூறமாட்டார் என்று கூறுகிறான் அதிலும் 7:198ல் அல்லாஹ் தன்னுடைய நபிக்கு அதுவும் சிலையின் மீது நம்பிக்கை வைத்தி ருக்கும் குறைஷ் காஃபிர்களுக்கே தெரிந்த விஷயத்தை தான் விளக்குகிறான். இதன்மூலம் மக்கள் இணை வைப்பைப் பற்றி தெரிந்த விஷயமாக இருந்தாலும் அதை தன்னுடைய வார்த்தைகளின் மூலம் தெளிவாக விவரிக்கிறான் 35:14லும் இதை உணர்த்துகின்றன. அப்படியானால் 2:102ன் வசனத்தில் இணை வைப்பு எனும் அநீதி இருக்குமானால் அதை தெளிவாக சொல்லியிருப்பான். அதற்கு மாறாக உம்மிகளிடையே ஒரு தூதரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நெறி நூலைக் கொடுத்து அதிலொரு வசனத்தின் வாக்கியத்தில் அதுவும் சரியாக புரியாமல் போனால் இணை வைப்பாகிவிடும் நிலையில் அதன் உட்கருத்தை அரபு இலக்கணப்படி ஒற்றை எழுத்தில் புகுத்தமாட்டான். இது அவனுடைய பண்புக்கு எதிரானதாகும். (பார்க்க: 2:159)

அரபு இலக்கணம் பேசுவதில் இவர் உண்மையாளராக இருந்தால் இதற்கு முந்தைய வாக்கியத்தில் “”நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம்” இதைக் கற்று மறுத்துவிடாதே என்ப தில் இடம் பெறும் “”ஃபித்னா” என்ற அரபு பதத்திற்கு எந்த அரபு இலக்கண அகராதிப்படி “”படிப்பினையாக” என்று மொழிப் பெயர்த்தார்? அவரே அவரது பில்லி, சூனியம் என்று முதலில் வெளியிட்ட நூலின் கடைசி இரு பக் கங்களில் “”ஃபித்னா” என்ற அரபு பதத்திற்கு “”சோதனை, குழப்பம்” என்ற இரு பொருள் இருக்கிறது “”சோதனை” என்பதற்கு பதிலாக “”குழப்பம்” என்று மொழிப் பெயர்த்தால் எந்த வசனத்துடனும் மோதுதலின்றி பொருந்திப் போவதை பார்க்கலாம் என்று எழுதினார் அவர் சொன்னதைப் போன்று அவருடைய மொழிப் பெயர்ப்பில் செய்து இருந்தால் சூனியக் குழப்பம் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும் வேண்டுமானால் நீங்களே அவர் சொன்னது போல் செய்து பாருங்கள் உங்களுக்கும் அது விளங்கும் அவருடைய உபதேசமெல்லாம் ஊருக்குத் தான் மற்றபடி அவருக்கில்லை அதனால்தான் தனது மொழிப் பெயர்ப்பில் “”படிப்பினையாக” என்று மொழிப் பெயர்த்தார் இதன் மூலம் அவர் சொன்னதை அவரே செய்ய முயற்சிக்க வில்லை செய்திருந்தால் அவரது மூக்கு உடை பட்டு இருக்கும் அவரது இரட்டை வேட அரபு இலக்கண சாயம் வெளுத்து இருக்கும். அதன் காரணத்தினால்தான் அவரின் இந்த நூலில் அதைப் பற்றி வாயே திறக்காமல் கண்டும் காணா தது போல், இந்த “”ஃபித்னா” என்ற பதத்தில் எந்த சர்ச்சையும் இல்லாதது போல் மூடி மறைக்க பார்க்கிறார் இதுதான் அரபு இலக்கண இலக்கி யம்? அவருக்குச் சாதகம் என்றால் அரபு இலக் கண, இலக்கியம் என்பார். அவருக்கு பாதகம் என்றால் நழுவி விடுவார்.

அடுத்து இதில் ஹைலைட்டான கருத்துப் பிழையும் உள்ளது அல்லாஹ் அனுப்பிய பல்லாயிரக்கணக்கான நபிமார்கள் எச்சரித்தும் குஃப்ரை விட்டும் திருந்தாத மக்கள் (யூனூஸ் நபியுடைய சமுதாயத்தைத் தவிர பார்க்க யூனூஸ் அத்தியாயம்) 950 வருடங்கள் பிரச்சாரம் செய்த நூஹ் நபி செய்ய முடியாத விஷயத்தை நபிமார்கள் அல்ல அல்லாஹ்வுடைய நல்லடியார்களும் அல்ல இறைவனே வெறுக் கும் காஃபிர்கள் ஆகிவிட்ட இரு ஷைத்தான்கள் எச்சரித்து மக்கள் குஃப்ரை விட்டும் விலகினார் கள் என்றால் நபிமார்களை விட இந்த இரு ஷைத்தான்கள் சிறந்தவர்கள் மேலானவர் களா? (நவூதுபில்லாஹ்) நபிமார்கள் பட்ட கல்லடிகள், சொல்லடிகள் அவர்கள் பட்ட கஷ்டங்கள் எதுவு மின்றி இரு ஷைத்தான்களின் ஒற்றை வரி எச்சரிக்கையில் மக்கள் குஃப்ரை விட்டும் அஞ்சி விலகி விட்டார்கள் என்ற விளக் கத்தை ஏற்றுக் கொண்டால் இந்த இரு ஷைத் தான்களும் நபிமார்களை விட சிறந்தவர்கள் மேலானவர்கள்? என்று கருத்து தானாகவே வந்து விடும் இதை யாராலும் மறுக்க முடியாது. அடுத்து இன்னொரு வி­யத்தைப் பார்ப்போம். சூனியம் அல்லாத தீமை குறைந்த மற்றொரு புதிய கலையை மக்கள் கற்றனர் என்கிறார்.

அதாவது குர்ஆன், ஹதீஃத் சொல்லித் தராத 21ம் நூற்றாண்டின் புதிய நவீன கண்டு பிடிப்பையும் நமக்கு அறிமுகம் செய்கிறார் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு சொல்லித் தராத புதிய தீமையைச் சொல்கிறார் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் குற்றம் சொல்கிறார். குறை காணுகிறார் எப்படி என்று பாருங்கள் எந்த தீமையும் செய்ய முடி யாத ஆற்றல் இல்லாத சூனியத்தை கற்றால் குஃப்ர், அதே சமயம் அல்லாஹ் நாடினால் தீங்கு அளிக்கக் கூடிய கணவன் மனைவியை பிரிக்கக் கூடிய பிறருக்கு சில தீங்கு ஏற்படுத்தக்கூடிய ஒரு கலையை கற்றால் அது பாவமாம்? ஆற்றல் இல்லாத எந்த தீங்கும் செய்ய முடியாத சூனி யத்தை விட இவர்கள் கண்டு பிடித்த அல்லாஹ் நாடினால் தீங்கு அளிக்கக் கூடிய ஒரு கலை சூனியத்தை விட சூப்பர் பவர் கலைதானே அப்படியானால் இந்த புதிய கலைக்கு குஃப்ர் பத்வா கொடுப்பது தானே நியாயம் அதை விட்டு எந்த ஆற்றலும் இல்லாத எந்த தீங்கும் செய்ய முடியாத சூனியத்திற்கு குஃப்ர் பத்வா கொடுப்பது எந்த வகையில் நீதி, நியாயம்?

மனித அறிவே ஏற்றுக்கொள்ளாத இந்த விஷயத்தை மனிதனுக்கு நீதி பரிபாலனம் கற்றுத் தந்த அல்லாஹ் இவ்வாறு அநீதியாகக் கூறு வானா?அல்லது அல்லாஹ் நீதி தவறி மறதியாக (நபூதுபில்லாஹ்) இவ்வாறு கூறிவிட்டான் என்று கூறி தன்னுடைய மொழிப் பெயர்ப்பையும் விளக்கத்தையும் நியாயப்படுத்த அல்லாஹ் வுடைய நீதி பரிபாலனத்தை குறை காணுகிறாரா? இவருடைய மொழிப் பெயர்ப்பையும், விளக்கத் தையும் ஏற்றுக் கொண்டால் இப்படிப்பட்ட மகா அபத்தமான கருத்தையும் ஏற்க வேண்டி வரும்.

இணைவைப்பு எனும் பூச்சாண்டிக் காட்டி தான் தன்னுடைய விளக்கங்களை நியாயப்படுத்தினார். ஆனால் இவருடைய விளக்கத்தின் படியும் இணை வைப்பு தொடரவே செய்கிறது. சூனியம் குறித்து இவர் எடுத்து வைத்த வாதம் ஒரு மனிதன் பிரிதொரு மனிதனுக்கு தீங்கு செய்ய வேண்டுமானால் ஆயுதம் கொண்டு உடலையோ, வார்த்தைகளைக் கொண்டு மனதையோ காயப் படுத்த முடியும். இது அல்லாத எந்த வகையிலும் ஒரு மனிதன் பிரிதொரு மனிதனுக்கு தீங்கு செய்ய முடியாது என்றும் அவ்வாறு செய்வது அல்லாஹ் வுக்கு மட்டுமே உள்ள ஆற்றல் எனவே சூனியக் காரர்கள் சூனியத்தின் மூலம் எத்தகைய ஆயுத மும் இல்லாமல் தீங்கு செய்ய முடியுமானால் அது சூனியக்காரர்களை அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறார்கள் என்று நம்புவதாகும். இது இணைவைப்பாகும் என்று கூறினார்.

இதே அடிப்படையில் இவர் கண்டுபிடித்த புதிய கலையை சிந்திப்போம். இவர் கண்டு பிடித்த புதிய கலையின் மூலமாக அல்லாஹ் நாடினால் கணவன் மனைவியை பிரிக்க முடியும் என்றும் இதன்மூலம் பிறருக்கு சில தீங்கு ஏற்படுத்த முடியும் என்பதை பக்கம் 193ல் தெளிவாக ஒப்புக் கொள்கிறார். அப்படியானால் அவர்கள் கற்றுக் கொண்ட கலையின் மூலமாக எந்த ஆயுதமும் இல்லாமல், வார்த்தைகளைக் கொண்டோ அல்லாமல் அல்லாஹ் நாடினால் கணவன், மனைவியிடையே பிரிவினையையும் இன்னும் பிறருக்கு சில தீங்கு செய்ய முடியுமானால் இந்த கலையைக் கற்றவர்கள் அல்லாஹ் வைப் போல் செயல்படுகிறார்கள் என்று நம்புவ தாகும். இது இணை வைப்பாகும் என்று கூறினார். இதே அடிப்படையில் இவர் கண்டுபிடித்த புதிய கலையின் மூலமாக அல்லாஹ் நாடினால் கணவன் மனைவியை பிரிக்க முடியும் என்றும் இதன் மூலம் பிறருக்கு சில தீங்கு ஏற்படுத்த முடியும் என்பதை பக்கம் 193ல் தெளிவாக ஒப்புக் கொள்கிறார் அப்படியானால் அவர்கள் கற்றுக் கொண்ட கலையின் மூலமாக எந்த ஆயுதமும் இல்லாமல், வார்த்தைகளைக் கொண்டோ அல்லாமல் அல்லாஹ் நாடினால் கணவன், மனைவியிடையே பிரிவினையையும் இன்னும் பிறருக்கு சில தீங்கு செய்ய முடியுமானால் இந்த கலையைக் கற்றவர்கள் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறார்கள் என்று நம்புவதாகும்.

இது இணை வைத்தல் ஆகும் என்ற இணை வைப்பைக் காட்டி அதிலிருந்து விடுபடலாம் என்றோ அதே இணைவைப்பு இங்கும் தொடரத்தான் செய்யும் உண்மையில் இவர்களுக்கு இணைவைப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நோக்கமல்ல எப்படியயன்றால் இணை வைப்பையும், குஃப்ரையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்தால் இணை வைப்பை விட குஃப்ர் மிக கடுமையானதாகும் அதாவது இணை வைப்பவர்களுக்கு மன்னிப்பே இல்லை என்றும் (4:48, 4:116) அவர்களுக்கு சுவர்க்கம் ஹராம் என்றும் 5ம் அத்தியாயத்திலும் மாபெரும் அநீதி என்று லுக்மான் அத்தியாயத்திலும் இன்னும் இணை வைப்பவர்களின் நல்லறங்கள் அழிந்து விடும் என்று எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. இது இணைவைப்பின் தன்மை யாகும் அடுத்து குஃப்ரைப் பற்றி பார்த்தால் அதற்கும் இதே போன்று நிராகரித்த நிலையில் மரணித்தால் மன்னிப்பே இல்லை என்றும் இன்னும் நிராகரிப்புக்கு நரகம் தயார் செய்யப்பட் டுள்ளதும் இன்னும் ஒருபடி மேலே போய் நிராகரிப்பாளர்களுக்கு நரகில் கிடைக்கும் தண்டனைப் பற்றி விலா வாரியாக குர்ஆன் விவரிக்கிறது இவை அனைத்துக்கும் மேலாக குஃப்ர் எனும் பாவத்திற்கே அல்லாஹ்வினதும், அவனுடைய மலக்குமார்களினதும், அவனுடைய நல்லடியார் களான மனிதர்களினதும் சாபம் உண்டாகும் (பார்க்க : 2:161) இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வரமாட்டார்கள் காரணம் குஃப் ரைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டால் இவரும், இவருடைய சகாக்களும் இவருடைய இயக்க கூடாரமும் காலியாகிவிடும். இப்பொழுது புரிகி றதா? இணைவைப்பை ஏன் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்று, நமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர் தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. (2:102ன் இறுதிப் பகுதி)

கணவன், மனைவிக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்தும் கலையால் அல்லாஹ் நாடினால் பிற ருக்குத் தீங்கு ஏற்படுத்த முடியும் என்றாலும் இவர்களுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை என்று இச்சொற்றொடர் எச்சரிக்கின்றது.

இங்கு அவருடைய பாணியில் சில கேள்விகள் எழுகின்றன. அதாவது பக்கம் 187ல் சில கேள்வி களை எழுப்பி இவ்வாறு சிந்திக்கும் போது நேரடி மொழிப் பெயர்ப்பில் கருத்துப் பிழை இருப்பது தெளிவாகிறது என்றார். அதே பாணியில் சில கேள்விகள்.

அவர்கள் அறிந்தே இந்த பாவத்தை செய்தார் கள் என்று மேலுள்ள வசனம் கூறுகிறது. அப்படி யானால் அந்த மக்கள் அறிந்து வைத்திருந்தது குஃப்ரை பற்றியா? அல்லது இவர் கூறும் பாவத்தை பற்றியா?

அவர்கள் தங்களையே விற்று கற்றுக் கொள்ளும் அளவுக்கு இவர் கூறும் கலையின் சிறப்பு அம்சம் என்ன? தங்களை விற்கும் நிலை வந்து விட்ட பிறகு போயும் போயும் இந்த சிறிய கலையைக் கற்பதால் ஏற்படும் பயன் என்ன?

அவர்கள் தங்களையே விற்று இந்த கலையை கற்று உலகியல் ஆதாயங்களை அடைவதற்குத் தான் அப்படியானால் மிகப் பெரிதாக ஒரு கலை யைக் கற்றுக் கொண்டு அதன் மூலம் மிகப் பெரிய உலகியல் ஆதாயங்களை அடைவதுதானே சிறந் தது. அதை விட்டு விட்டு இந்த சிறிய கலையைக் கற்க வேண்டிய அவசியம் என்ன?
அவர்கள் தங்களையே விற்றுதான் கற்க வேண் டும் எனும் நிலை இருக்கும்போது சிறியதை ஏன் கற்க வேண்டும்? அதுவும் ஒன்றே ஒன்றை தேர்வு செய்து தங்களை விற்று கற்பார்களா? இவ்வாறு சிந்திக்கும் போது இவருடைய விளக்கத்தில் கருத்துப் பிழை இருப்பது தெளிவாகிறது.

மேலுள்ள 2:102ன் இறுதிப் பகுதிக்கு இவரின் சுய விளக்கமோ கற்பனை விளக்கமோ எடுபடாது அதனால் தான் நீட்டி முழக்காமல் அடக்கி வாசிக்கிறார். ஏனெனில் மேலுள்ள வாசகம் இவர் சொல்வதைப் போன்று மறுமையில் கேடுதான் உள்ளது என்று எச்சரிக்கவில்லை மாறாக மறுமையில் எந்த நற்பேறும் இல்லை என்று முடிவைச் சொல்கிறது இன்னும் அந்த மக்கள் இந்த முடிவை அறிந்தே கற்றுக் கொண்டனர் என்று தெளிவாக சொல்கிறது.

ஈமான்தாரிகளின் உயிரையும், உடைமை யையும் சுவனத்திற்கு பகரமாக வாங்கிக் கொண் டதாக அல்லாஹ் சொல்கிறான் (பார்க்க 9:16) அதைப் போன்றே 2:102 இந்த வசனத்தில் தங்களை விற்று நிராகரிப்பை வாங்கிக் கொண்டதாக சொல்கிறான் அதன் மூலம் மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. அதாவது சுவனம் இல்லை. அவர்கள் தங்களை விற்று வாங்கி கொண்டது மிகவும் கெட்டது என்றும், அதை அறிந்தே செய்தனர் என்றும் அல்லாஹ் சொல்கிறான் இதன் மூலம் சூனியத்தை கற்பது குஃப்ர் என்று அவரே ஒப்புக் கொண்டபடி அந்த மக்கள் சூனியத்தைக் கற்று நிராகரிப்பை விலைக்கு வாங்கியதைத்தான் 2:102ன் வசனத்தின் இறுதிப் பகுதி தெளிவாய் எடுத்துச் சொல்கிறது மற்றபடி இவர் கண்டுபிடித்த புதிய கலையை மக்கள் கற்றுக் கொள்ளவில்லை.

ஏனெனில் அவரே ஒப்புக் கொண்டபடி அது ஒரு பாவமான காரியம்தான் குஃப்ர் அல்ல ஆனால் 2:102ன் இறுதிப் பகுதியோ குஃப்ரை பற்றியும் குஃப்ர்க்கான தண்டனைப் பற்றியும் பேசுகிறது. இதன்மூலம் சூனியம் அல்லாத ஒரு கலை எனும் இவருடைய கூற்று கடைந்தெடுத்த பொய்யாகும். இங்கு ஒரு வி­யத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அதாவது இவரைப் போன்று குர்ஆனில் தங்களது சொந்த கருத்தை நுழைத்தால் ஒரு சுன்னத் ஜமாஅத் ஆலிமோ அல்லது பிற இயக்கத்தின் தலைவர்களோ செய்திருந்தால் அவர்களை சும்மா விட்டிருப்பார்களா? ஆனால் அவர்களே அந்த தவறைச் செய்தால் தங்களை யார் கேட்க போகிறார்கள் என்ற அசட்டு தைரியமும், தங்க ளிடம் உள்ளவர்கள் சுயமாக சிந்திக்க மாட்டார்கள் என்று மக்களைப் பற்றி லேசாக எண்ணுவதும் தான் அவர்களை தைரியமாக துணிந்து செயல்பட வைக்கிறது. ஆகவே சுயமாக சிந்திக்க முன்வாருங்கள். குர்ஆனில் அவர் செய்யும் தில்லுமுல்லுகளை நாம் எடுத்து வைப் பதால் நம்மீது கோபம் ஏற்படலாம். ஆனால் உண்மையில் குர்ஆனில் தில்லுமுல்லுகள் செய் யும் அவரின் மீது தான் நியாயமாக கோபப்பட வேண்டும். அதுதான் சரியான வழிமுறையாகும் அது தான் சத்தியத்தை அறிந்து கொள்ள உதவும்.

இறுதியாக இரண்டு விஷயங்களை பதிவு செய்ய விரும்புகிறோம். குர்ஆனில் 24:15ம் வசனத்தில் அல்லாஹ் மனிதர்கள் லேசாக கருதிய ஒரு விஷயத்தை ஆயிஷா(ரழி) அவர் களைப் பற்றி தங்கள் நாவுகளால் பரப்பிய அவதூறை அல்லாஹ் தன்னிடத்தில் மகத்தானதாக இருந்தது என்று சொல்கிறான். இதை ஒருவர் விளக்கும் போது அல்லாஹ் மகத்தானது என்று சொல்லக் கூடிய விஷயத்தை பார்த்தீர்களா? மிகச் சாதாரணமானதுதான் என்று கூறினால் அவரை அறிவாளி என்போமா? அல்லது மூடன் என்போமா? இதே போன்றுதான் இவரும் 7:116ம் வசனத்தில் சூனியக்காரர்கள் செய்த செயலை “”மகத்தான சூனியத்தை கொண்டு வந்தனர்” என்று அல்லாஹ் சொல்கிறான் இதை மேற்கோள் காட்டி இவரோ அல்லாஹ் மகத் தான சூனியம் என்று சொன்ன சூனியத்தின் நிலையைப் பார்த்தீர்களா? சில கண்கட்டு வித்தைகளையும் ஏமாற்று தந்திரமான சில அற்பமான, மிகச் சாதாரணமான விஷயத்தைத்தான் என்கிறார்.

அதாவது அல்லாஹ் அற்பமான மிகச் சாதா ரணமான ஒரு விஷயத்தை மகத்தானது என்று தவறாக வர்ணித்து விட்டான் என்று சொல்லாமல் சொல்கிறார் சூனியம் குறித்து அவர் எடுத்து வைக்கும் வாதமெல்லாம் வஹீ ஆதாரமல்ல நாம் மேலே சொன்னது போல் வெறும் வார்த்தை ஜாலங்கள் தான் அடுத்து இரண்டாவது விஷயம் பக்கம் 187ல் கணவன் மனைவியை சூனியத்தின் மூலமாக பிரிப்பதை மிகச் சிறிய வி­யமாகவும் பக்கம் 194ல் கணவன் மனைவியை பிரிப்பது என்பது குஃப்ர் அல்லாத பாவம் என்கிறார் இது விஷயமாக சிந்திக்கும்போது மனிதர்களுக்காக அல்லாஹ் வால் முதலில் உருவாக்கப்பட்ட உறவு கணவன், மனைவி உறவாகும். சொர்க்கத்தில் பிரவேசித்த முதல் உறவும் கணவன், மனைவியே மனிதகுல பெருக்கத்தின் மூல ஆதாரம் கணவன், மனைவியே (4:1) அந்நஹ்ல் 16:72 வசனத்தில் கணவன், மனைவி மூலம் ஏற்படும் பலன்களை குறிப்பிட்டு பொய்யில் நம்பிக்கை கொண்டு என்னுடைய அருட்கொடையை நிராகரிக்கிறீர்களா? என்று அல்லாஹ் கேட்கிறான் அடுத்து அர்ரூம் 30:21ம் வசனத்தில் கணவன், மனைவிக்கிடையில் உள்ள பிணைப்பும், இணைப்பும் மனித சமூகத்திற்கு தன்னுடைய நிறைவான சான்று என்கிறான். கணவன், மனைவியை பிரிப்பது என்பது அல்லாஹ்வின் மாபெரும் சமூகச் சான்றை சிதைப்பதாகும். மனிதகுல சமூக கட்டமைப்பை சீர்குலைப்பதாகும். ஆக இதுவும் சாதாரண விஷயமல்ல என்பதை நம்மால் அறிய முடிகிறது குர்ஆனை முறையாக சிந்திப்போம், நேர்வழி அடைவோம். அல்லாஹ அருள் புரிவானாக.

Previous post:

Next post: