அபூ அப்தில்லாஹ்
மதகுருமார்களின் ஆதிக்கம்:
ஆதி மனிதன் ஆதத்திலிருந்து இன்று வரை எத்தனை மதங்கள் தோன்றியுள்ளனவோ அந்த அத்தனை மதங்களிலும், இஸ்லாமிய மதம் உட்பட மதகுருமார்களின்-மதபோதகர்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. அனைத்து மதங்களையும் பின்பற்றும் அனைத்து மக்களும் இந்த மதகுருமார்களை கடவுளுக்கு மிகமிக நெருக்கமானவர்கள்; அவர்களின் ஆதரவு இல்லாமல் கடவுளின் பொருத்தமோ, மோட்சம் என்ற சுவர்க்கமோ அடைய முடியாது என்று உறுதியாக நம்புகிறார்கள்.
இந்த மதகுருமார்களை கடவுளின் அவதாரமாகவே நம்புகின்றனர். அவர்களை சந்நிதானம், காட் ஃபாதர், காட் மதர், அதே கருத்தைத் தரும் ஹழரத்-ஹஜ்ரத்-ஹஸ்ரத், மவ்லவி (அல்லாஹ்வைச் சேர்ந்தவர்-(பார்க்க 3:150, 8:40, 22:78, 66:2) மவ்லானா (2:286, 9:51ல் இறைவனைக் குறிப்பிடும் பதம்) போன்ற அடைமொழிகளால் அழைப்பதே எமது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தப் போது மானவையாக இருக்கின்றன.
ஆம்! இந்த மதகுருமார்கள் அல்லாஹ்வை விட தங்களைச் சிறந்த பாதுகாவலர்களாகச் சொல்லி மக்களை நம்பவைத்து ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்.
“”உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்; மந்திரம் பாப்பானுக்குக் கட்டுப்பட்டது; எனவே உலகு பாப்பானுக்குக் கட்டுப்பட்டது” என்ற இந்து மதகுருமார்களின் கற்பனை இதை உண்மைப்படுத்தும்.
மதகுருமார்கள் வணங்கப்படுகிறார்கள்:
இறைவனை வணங்குவது போல் அவர்களது காலடியில் விழுந்து வணங்குவது, கால்களைத் தொட்டு வணங்குவது, அவர்கள் காலால் இட்ட பணிகளைத் தலையால் சுமந்து நிறைவேற்றுவது, அவர்கள் எச்சில் படுத்திக் கொடுத்த பொருள் களை பிரசாதமாக எண்ணிச் சாப்பிடுவது இவையும் எமது இந்தக் கருத்தை நிலைநாட்டப் போது மானதாகும்.
இறைவனிடம் நேரடியாகத் தனது குற்றங்களை முறையிட்டு அவனிடமே பாவமன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக கிறித்தவ மத குருமார்களிடமே தனது குற்றங்கள் பாவங்களை எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டால் (Confession) இறைவன் மன்னித்து விடுவான் என்ற மூட நம்பிக்கை கிறித்தவர்களிடம் காணப்படுகிறது.
அதற்கும் மேலாக நம் இந்திய நாட்டில் அம்மணச் சாமியார்களை தெய்வமாகவே கொண்டு அவர்களின் மூத்திரத்தைக் குடிப்பதாக சிம்போலிக்காக நினைத்து அவர்களின் இன உறுப்பில் நீரை ஊற்றி அதிலிருந்து வடிவதைக் குடிக்கும் பக்தர்களும் இருப்பதாக அறிகிறோம். அதற்கும் மேலாக தான் மணமுடிக்கும் பெண்ணை தனது மதகுரு முதலில் அனுபவித்த பின்னரே தான் அனுபவிக்க வேண்டும் என மூட நம்பிக்கை உடையவர்களும் இருப்பதாக அறிகிறோம். இப்படி மதகுருமார்களை தெய்வ நிலைக்கு உயர்த்தி, அவர்கள் உதிர்க்கும் பகுத்தறிவுக்கே ஒவ்வாத மூடநம்பிக்கைகளை, அனாச்சாரங்களை, அவலங்களை அப்படியே கண்மூடி ஏற்றுச் செயல்படும் மக்களே மனித குலத்தில் மிகமிக அதிகம். (பார்க்க 6:116)
முஸ்லிம் மதகுருமார்கள்:
முஸ்லிம் மதகுருமார்களிடம் மேலே சொல்லப்பட்ட இழிகுணங்களில் சில காணப்படா விட்டாலும், அவர்கள் கூறும் கோணல் வழிகளையே நேர்வழியாகக் கொண்டு பொது மக்கள் அதன்படி நடக்க வேண்டும் என்ற இறு மாப்பு அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த மதகுருமார்கள் எப்படிப்பட்ட இழி வான கேவலமான ஆறறிவு மனிதன் செய்யக் கூடாத செயல்களைச் செய்தாலும், அதைக் குறையாகவோ, இழிவாகவோ அவர்களின் பக்தர்கள் நினைப்பதாக இல்லை. இதற்கு ஜயேந்திரர், நித்யானந்தா போன்ற ஹிந்து மத குருமார்களும், பல கிறித்தவ மத குருமார்களும், முஸ்லிம் மதகுருமார்களும் செய்யும் இழி செயல்களை அவர்களின் பக்தர்கள் குறையாக எண்ணுவதே இல்லை என்பதே போதிய ஆதாரமாகும்.
செம்மறி ஆட்டு மந்தை:
மவ்லவி என்ற ஒரு முஸ்லிம் மத குரு அல்குர்ஆன் 7:81 வரம்பு மீறிய செயல் என கண்டித்துக் கூறும் ஓரினப் புணர்வில் பள்ளியிலேயே ஈடுபட்டபோது கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டார். பிடிபட்டவுடன் வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவதற்குப் பதிலாக தனது தவறான செயலை நியாயப்படுத்தி என்ன கூறினார் தெரியுமா? என்ன அப்படி நான் தவறு செய்து விட்டேன்? அவுலியாக்கள் (இறை நேசர்கள்) செய்யும் செயலைத் தான் நானும் செய்துள்ளேன் என்று கூறினாரே பார்க்கலாம். ஆம்! மதகுருமார்கள் என்றால் தவறான செயல்களை, கோணல் வழிகளை நியாயப்படுத்துவதுதான் அவர்களின் எதார்த்த நிலை என்பதை மக்களில் மிகமிகச் சிலரே உணர்கிறார்கள். பெருங்கொண்ட மக்கள் இந்த மதகுருமார்களின் பின்னால் கசாப்புக் கடைக்காரர் பின்னால் தங்களை அறுக்கும் இடத்தை நோக்கி வேகமாகச் செல்லும் செம்மறி ஆட்டு மந்தைபோல், கண்மூடிச் சென்று நரகில் விழுகிற வர்களாகவே இருக்கிறார்கள்.
மதகுருமார்களின் வரலாறு:
இப்போது இந்த மதகுருமார்களின் வர லாற்றை அல்குர்ஆன் கூறும் ஆதாரங்களைக் கொண்டே பார்ப்போம். ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்ட பின்னர், இடம் பெற்ற சம்பவங்கள், இப்லீஸ் இறைக் கட்டளையை நிராகரித்து ஷைத்தானாகியது, ஆதத்தின் சந்ததிகளில் மிகப் பெரும்பான்மையினரைக் கொண்டு நரகத்தை நிரப்ப சபதம் செய்தது, இறைவன் ஷைத்தானுக்கு இறுதி நாள் வரை மிக நீண்ட ஆயுளுடன் வாழ அனுமதித்தது இவை அனைத்தும் தெரிந்த விஷயமே!
தெரியாதவர்கள் அல்குர்ஆன் 2:36, 3:175, 4:118-121, 5:91, 7:11-22,27, 8:48, 14:22, 16:63,100, 17:61-65, 19:83, 20:120,121-128, 22:3,4,53, 26:221-223, 35:6,7, 36:60, 41:36, 58:19 இந்த இறைவாக்குகளை நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளவும்.
ஷைத்தான் ஆதத்தின் சந்ததிகளில் மிகப் பெரும்பாலோரைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக சபதம் ஏற்றுள்ளானல்லவா? இறைவனும் அதற்கு அனுமதி கொடுத்து விட்டானல்லவா? அந்த சபதத்தை நிறைவேற்றத் தன்னுடைய நேரடி ஏஜண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் இந்த அனைத்து மதங்களின் மதகுருமார்கள். கோபம் கொப்பளிக்கிறதல்லவா? இரத்தம் கொதிக்கிறதல்லவா? கோபப்படாதீர்கள், நிதான மிழக்காதீர்கள், அமைதி கொள்ளுங்கள்! அதற்குரிய ஆதாரங்களை குர்ஆனிலிருந்தே தருகிறோம். நடுநிலையோடு கவனமாக அவதானியுங்கள். இதுதான் உண்மை என்பதை உங்களாலும் உணர முடியும்.
பல்லாயிரம் இறைத் தூதர்கள்:
அல்குர்ஆனில் 25 இறைத் தூதர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது. வரலாறு கூறப்படாத பல்லாயிரம் இறைத் தூதர்கள் உண்டு. அந்த இறைத் தூதர்கள் தங்கள் சமூகத்தாரிடம் “”நாங்கள் அனைத்தையும் படைத்த சர்வ வல்லமை மிக்க தன்னந் தனியான இணை துணை இல்லாத ஏகன் இறைவனால் அனுப்பப்பட்டத் தூதர்கள். அவனது அடிமைகள்; அந்த இறைவனுக்கு மட்டுமே அடிபணிந்து நடக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை கூறுவதோடு நாங்களும் அவ்வாறே நடக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளோம் என்றே போதித்தார்கள். எந்த இறைத் தூதரும் தன்னை இறைவனின் மகன் என்றோ, அவதார மென்றோ, இறைத் தன்மையுடையவர் என்றோ கூறவில்லை. மாறாக தங்களை இறைவனின் அடிமை என்றே பிகரடனப்படுத்தினார்கள். (பார்க்க 19:30, 38:30,44, 43:59)
மேலும் நாங்கள் செய்ய ஏவப்பட்டிருக்கும் இந்த இறைப் பணிக்கு மக்களாகிய உங்களிடம் கூலி-சம்பளம்-ஊதியம் கேட்கவில்லை. அது எங்கள் இறைவனிடமே இருக்கிறது என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்த இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். (பார்க்க:6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109, 127,145,164,180, 34:47, 38:86, 42:83)