அந்நஜாத் VS புரோகிதம்

in 2017 அக்டோபர்

N. அலி, கல்லிடைகுறிச்சி

ஜூலை 2017 அந்நஜாத்தின் முகப்பு அட்டையில் 18:102வது வசனத்தை இடம் பெறச் செய்து அதே இதழில் “”அந்நஜாத்தின் பணி தொடர வேண்டிய கட்டாயம்” என்ற தலைப்பில் மறைந்து விட்ட அன்புச் சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் அந்நஜாத் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கக்கூடிய குர்ஆன் வசனங்களில் முதலாவதாக 2:186 வசனத்தை யும், இரண்டாவதாக 7:3யையும், மூன்றாவ தாக 18:102யையும் இடம் பெறச் செய்து இம் மூன்று வசனங்களின் நேரடிக் கருத்தை பகிரங்க மாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது என்று எழுதியதோடு மட்டுமில்லாமல் அதே இதழில் மேலும் சில ஆக்கங்களில் “”ஆலிம் எனத் தனிப்பிரிவு இஸ்லாத்தில் உண்டா” என்ற தலைப்பிலும் “”உலகே மாயம், ஸலபியே மாயம்” என்ற ஆக்கத்திலும் 18:102ன் நேரடிக் கருத்தை  வலியுறுத்தி இருந்தார்.

இப்போது விஷயத்திற்கு வருகிறோம். (TNTJ) சகோதரர் ஒருவர் அவரின் தொடு திரை அலைபேசியின் வாட்ஸ்-அப்பில் பதிவு செய் யப்பட்ட ஒரு செய்திக்கு மறுப்பு கொடுப்பதற் காக “”நிராகரிப்பாளர்கள் என்னையன்றி எனது அடியார்களைப் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளளாம் என்று எண்ணுகிறார்களா? என்று ஒரு வசனம் வருமே அந்த வசன எண் எது? என்று நம்மிடம் கேட்டார். நாம் உடனே 18:102 என்று பதிலளித் தோம். (இச் சம்பவம் ஜூலை  மாதத்தில்  தான்  நடைபெற்றது)

உடனே அந்த சகோதரர் தன்னுடைய தொடு திரைபேசியில் உள்ள APP-ல் பதிவிறக் கம் செய்யப்பட்ட PJ-யின் மொழிப் பெயர்ப்பை எடுத்துப் பார்த்தார். பார்த்து விட்டு நாம் அவரின் தொடு திரை பேசியை வாங்கி வசனத்தை பார்வையிட்டோம். நமக்கே ஒரு வினாடி நாம் சொன்ன வசனம் தானா? என்ற நிலை ஏற்பட்டது. அதைப் படித்து  பாருங்கள்.

(நம்மை) மறுப்போர் என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள லாம் என்று எண்ணுகிறார்களா? மறுப் போருக்கு நரகத்தையே தங்குமிடமாக தயார் செய்து  வைத்திருக்கிறோம். (18:102)

நீங்கள் கேட்ட வசனம் இதுதான். நான் சொன்ன வசன எண்ணும் சரிதான். ஆனால் இதில் மொழியாக்கம் “”அப்படி” இருக்கிறது என்று சொன்னோம். உடனே அவர் “”இல்லை நான் சொன்னது இந்த வசனமே இல்லை அது வேற வசனம் என்று சொல்லி விட்டார். அவருடைய பதில் நம்மை சிந்திக்க வைத்தது, எழுதவும்  வைத்து  விட்டது.

இப்படிப்ட்ட மொழியாக்கம் தமிழில் வெளிவந்துள்ள 15 மொழியாக்கங்களில் இவரைத் தவிர்த்து 14 மொழியாக்கங்களில் ஏதாவது ஒன்றில் இடம் பெற்றிருந்தால் கூட அறியாமை, அச்சுப் பிழை என்று விட்டிருக் கலாம். அதோடு மட்டுமில்லாமல் 18:102ன் நேரடிக் கருத்தை எடுத்து வைக்கும் அந்நஜாத் தோடு தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்று கருதலாம். இந்த இரண்டு எண்ணத்திற்கும் அப் பாற்பட்டவர் PJ ஏனெனில் ஆரம்ப கால அந்நஜாத்தின் ஆசிரியர் அவர், அதன் அடிப் படையில் பிரச்சாரம் செய்தவர். எனவே அறியாமை என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்து “”அச்சுப் பிழை” என்று நாம் கருதலாம் என்று நினைத்தாலும் அதற்கும் இடமில்லை. ஏனெனில் 18ம் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை மனனம் செய்தவர் தஜ்ஜாலின் குழப்பங்களை விட்டும் பாதுகாக்கப்படுவார் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஃத் இருக் கிறது. இவ்வளவு தெளிவாக அந்த வசனங்களின் சத்தும், சாரமும் நெஞ்சில் பதிவதற்கு ஹதீஃத் ஏவிக் கொண்டிருக்கும் போது அதில் “”அச்சுப் பிழை” அசட்டை என்பது ஏற்புடையதல்ல.

இது திட்டமிட்ட புரோகித வேலையாகும். ஆம்! “”அந்நஜாத்” மக்கள் மன்றத்தில் எதை பகிரங்கமாக எடுத்து வைக்கிறதோ அதை பக்காவாக மறைப்பதே புரோகிதமாகும் மற்ற புரோகிதர்களை விட இவரே வழிகெடுப்பதில் முன்னணியில் இருக்கிறார் ஏனெனில் வேறு எவரும் இந்த அளவிற்கு கீழிறங்கி செயல்படு வதாக நாம் அறியவில்லை. 18:102-106, 109,110 ஆகிய நான்கு வசனங்கள் அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் இடையில் எத்தகைய இடைத் தரகரும் இல்லை என்பதை நேரடியாக நெத்தி யடியாக கூறும் வசனங்களிலேயே புரோகிதம் தன்னுடைய கொடூர புத்தியை காட்டுகிற தென்றால் மற்ற மார்க்க வி­யங்களின் நிலை? இது சிந்திக்க வேண்டிய வி­யம் இதில் அலட்சியம்  ஆகவே  ஆகாது.  அந்நஜாத்தின் பேனா முனை புரோகிதத் திற்கு எதிரான போர் முனையாக இருக்கவும். அதிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் நயமான வார்த்தை வீச்சுகளாகவும், நறுக்கென தெறிக்கும் வாள் வீச்சுகளாக இருக்கவும். இதுதான் அந்நஜாத்தாகும்! ஈடேற்றமாகும்!  அல்லாஹ்  அருள்புரிவானாக…

Previous post:

Next post: