ஐயமும்! தெளிவும்!!

in 2017 நவம்பர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : இரவு நேரத்தில் துஆ கேட்டால் அல்லாஹ் கொடுப்பான் என்று சொல்கிறார் களே உண்மையா? சபூரா பேகம், தஞ்சை.

தெளிவு : இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ நிறைவேற்றித் தரப்படும் என்று ஹதீஃதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஹதீஃதை பார்ப்போம்.
“”நிச்சயமாக இரவில் ஒரு நேரம் இருக் கிறது. அந்த நேரத்தை எந்த முஸ்லிமாவது அடைந்து, அதில் ஈருலக விஷயங்களிலும் எந்த நன்மையையாவது அல்லாஹ்விடம் பிரார்த்திப்பாராயின் அதனை அவன் அவருக்குக் கொடுத்து விடுகிறான். இதன் நேரம் ஒவ்வொரு இரவிலும் இருக்கத்தான் செய்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்” என்று ஜாபீர்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம்

மேலே உள்ள ஹதீஃத் இரவில் ஒரு நேரம் இருப்பதாக மட்டும் கூறப்பட்டுள்ளது. அந்த நேரம் எது என்பதை விளக்கும் ஹதீஃத்களை இப்போது பார்ப்போம்.

“”ஒவ்வொரு இரவின் மூன்றாம் பாகத்தில் நம் இறைவன் முதல் வானத்திற்கு இறங்கி வந்து 1. “”எவர் என்னிம் பிரார்த்திக்கிறார்-அப்பிரார்த் தனையை நான் ஏற்றுக்கொள்ள, 2. எவர் என்னிடம் எதைப் பற்றியாவது பிரார்த்திக்கிறார்- அதனை அவருக்கு நான் கொடுக்க, 3. எவர் என்னிடம் பாவமன்னிப்பு கேட்கிறார் -அவரது பாவத்தை நான் மன்னிக்க” என்று கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) அவர்கள் ஆதாரம் : புகாரீ, முஸ்லிம், முஅத்தா, அபூ தாவூத், திர்மிதீ.
“”அல்லாஹ்வின் தூதரே! எந்த பிரார்த் தனை அதிகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது?” என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “”இரவின் இறுதி பாகத்திலும், பர்லான தொழு கைகளுக்குப் பின்பும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ உமாமா(ரழி), நூல்: திர்மிதீ

பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற நேரங்கள் பற்றிய ஹதீஃத்கள்:
“”பாங்கிற்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் எந்த துஆவும் மறுக்கப்பட மாட்டாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “”அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எதைக் கேட்பது” என்று வினவப்பட்டபோது, “”நீங்கள் இம்மையிலும், மறுமையிலும் நல்வாழ் வைக் கேட்டு துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ்(ரழி), ஆதாரம் : அபூதாவூது, திர்மிதீ.

“”மனிதன் சஜ்தாவில் முழங்கால்களையும், கைகளையும் தரையில் ஊன்றி, நெற்றியைத் தரையில் வைத்திருக்கும்பொழுது இறைவ னுக்கு மிகவும் நெருக்கமாகி விடுகிறான். எனவே, (அப்போது) அதிகமாக இறைஞ்சுங் கள்” என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ.

3 பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவை, ஏற்று கொள்ளப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1. அநீதம் இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை, 2.ஏழை யின் பிரார்த்தனை, 3. தந்தை தன் மகனுக்காக செய்யும் பிரார்த்தனை” என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி), அதாரம்: அபூதாவூத், திர்மிதி.

ஐயம் : எனது வீட்டினர் பஜாருக்கு போவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் போதெல்லாம், என் தாய் வழி மாமா ஒருவர் எங்களிடம் “”பஜாரில் அதிக நேரம் இருக்கக்கூடாது. சீக்கி ரத்தில் வீட்டுக்கு வந்து விடுங்கள்” என்று சொல் லிக் கொண்டே இருப்பார். அவர் சொல்லுவது மார்க்கத்தில் சரியா என்பதை ஆதாரத்துடன் விளக்கவும். தாஜுதீன், திருச்சி.

தெளிவு : அவர் கூறுவது சரி என்பதை கீழே உள்ள ஹதீஃத்களைப் படித்து தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள்.
“”நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான இடங்கள் பள்ளிவாசல்கள் ஆகும். அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான இடங்கள் கடைவீதிகள் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி), ஆதாரம்: முஸ்லிம்.

“”உங்களில் முடிந்த அளவு, கடைவீதிக்கு செல்பவர்களில் நீங்கள் முதல் நபராகவும், கடைவீதியிலிருந்து வெளியேறுபவர்களில் நீங்கள் பிந்தியவராகவும் இருக்க வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அது ஷைத்தானுடைய களம் ஆகும். அங்குதான் அவனுடைய கொடி நாட்டப்பட்டு இருக்கிறது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : சல்மான்(ரழி), ஆதாரம் : முஸ்லிம்.

(“”கடைவீதிக்கு செல்பவர்களில் நீங்கள் முதல் நபராகவும் கடைவீதியிலிருந்து வெளி யேறுபவர்களில் நீங்கள் பிந்தியவராகவும் இருக்க வேண்டாம்” என்பதன் கருத்து “”கடை வீதியில் அதிக நேரம் இருக்கக்கூடாது. நமது வேலையை மட்டும் முடித்துவிட்டு கடைவீதி யிலிருந்து விரைந்து வெளியேறிவிடவேண்டும்” என்பதும், “”இல்லையயனில் ஷைத்தானுடைய வலையில் சிக்கிக் கொள்வோம்” என்பதையும் இந்த ஹதீஃத் உணர்த்துகிறது. இதை உணர்ந்து இதன்படி செயல்படுவதே பாவங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியாகும்)

Previous post:

Next post: