சபாஷ் கர்நாடகா!

in 2017 நவம்பர்,தலையங்கம்

M. அப்துல் ஹமீத்

சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முற்போக்கு சிந்தனையாளரான, கன்னட எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான 55 வயதான பி.கவுரி லங்கேஷ் அவர்கள், இந்து மதத் தின் மனுதர்மத்தையும், ஏற்றத்தாழ்வையும் உருவாக்கிய சாதி அமைப்பையும், பெண்ணை அடிமையாக்கிய சடங்குகளையும் வீரியத் தோடு எதிர்த்து வந்தார். எச்சில் இலை மீது தலித்துகள் உருளும் சடங்கு, அந்தரத்தில் முதுகில் அலகு குத்திக்கொண்டு தொங்குவது, நிர்வாண பூஜை, நரபலி போன்று கர்நாடகக் கோயில்களில் தொடரும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கவுரி லங்கேஷ் எழுதிவந்தார். இதற்காக முதல்வர் சித்தராமையாவை அடிக்கடி சந்தித்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். இதன் விளைவாக கர்நாடக அரசு சட்டம் இயற்ற முன்வந்துள்ளது. மகிழ்வைத் தருகிறது.
“மனிதாபிமானமற்ற தீய நடைமுறைகள் ஒழிப்பு சட்ட மசோதா” மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. இச்சட்டம் சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த மசோதாவின் நோக்கம் :
1. சாதிகளின் பெயரால் கீழ்வர்க்க அப்பாவி மக்களை சுரண்டுவதை தடுத்தல்.
2. மனிதகுல தனித்தன்மையை பாதுகாப்பதற்காக, கீழ் சாதி என்ற பெயரில் அவர்களின் சுய மரியாதையை இழக்கச் செய்யும்படியான செயல்களைத் தடுத்தல்.
3. நோயை மந்திரத்தின் மூலமாக குணப்படுத்துவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் செயல்களைத் தடுத்தல்.
4. இல்லாத பேயையும் பிசாசையும் நோயாளியின் உடலில் இருப்பதாக பயமுறுத்தி, அவைகளை ஓட்டி விடுவதாகக் கூறி, அதன் மூலம் வருமானம் தேடும் செயல்களைத் தடுத்தல்.
5. சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது மேலாடை இல்லாமல் உருள வேண்டும். பிறகு இலைகளை தலையில் சுமந்து சென்று கொட்டி விடவேண்டும். பிறகு ஆறுகளில் குளிக்க வேண்டும். இதனால் தோல் வியாதிகள் குண மாகும் என்ற மூட நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு, ஆனால் அதே சமயம் இதில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் மக்கள் கீழ் சாதியினராகவே இருக்கின்றனராம்.

மனிதனை மனிதன் தரம் பிரித்து ஒரு சாராரை சாதி மத அடிப்படையில் ஒதுக்கி வைத்து, துன்புறுத்தி, கொலை செய்து கொண்டிருப்போரிடம் ஒரு கேள்வி.

நீங்கள் வணங்கும் இறைவன் அவர்களைப் படைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? படைக்கவில்லை என்று எண்ணிக்கொண்டு அவர்களை ஒதுக்கி வைக்கிறீர்களா? துன்புறுத் துகிறீர்களா? கொலை செய்கிறீர்களா? அப்படி யானால், உங்கள் இறைவனுக்கு அவர்களை படைக்க ஆற்றல் இல்லையா? அப்படி ஆற்றல் இல்லை என்றால், நீங்கள் புனித குர்ஆனில் அல்லாஹ் கூறும், “”மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்” என்ற 4:1 இறை வசனத்தின்படி மக்கள் அனைவரும் சமமே, கீழ் சாதியினர், மேல் சாதியினர் என்பதெல்லாம் இல்லவே இல்லை. மனித கற்பனையில் உருவானவைகளே இவைகள்.

வணங்குபவன் இறைவனா? சற்று சிந்தியுங் கள். ஒரே இறைவன் தான் அனைவரையும் படைத்தான்! எனவே ஒவ்வொரு மனிதரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் வாழ்ந்து வெற்றி பெற முயற்சிப்போம்.

மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி காசு சேர்க்கும் இன்னும் பல விஷயங்கள் இம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை எனத் தெரிகிறது. இருந்தாலும் இந்த மூட பழக்க வழக்கங்கள் அநேக மக்களிடம் பிரிக்க முடியாத அங்க மாக குடிகொண்டிருக்கின்றன. இதை எதிர்த்து சட்டம் கொண்டுவர தனி துணிச்சல் தேவை. எனவே மூட பழக்க வழக்கங்களுக்கு முடிவு கட்டுவதற்காக மசோதா கொண்டு வந்துள்ள கர்நாடகா முதல்வரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சபாஷ் சி.எம்.!

காவிரி நீர் பிரச்சனையிலும் உங்கள் முடிவிலிருந்து சற்று இறங்கி வந்து அனைவரும் பயன் பெற வழி வகுக்கலாமே! ஏனெனில், தண்ணீர் இறைவன் கொடுத்த அருட்கொடை அல்லவா?

இறைத்தூதர் முஹம்மது (அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட இரு ஓடைகளின் தண்ணீர் பிரச்சனைக்கு வழங்கிய தீர்ப்பைப் பாருங்கள்.
(காவிரி நீர் பங்கீடு போல) “”மக்ஜூர், முதைனீப் என்ற இரண்டு ஓடைகளின் தண்ணீரை பங்கீடு செய்வது பற்றி இறைத் தூதர் இட்ட கட்டளை. “”நிச்சயமாக தண்ணீருக்கு அருகில் இருப்பவர் தூரமாக இருப்பவருக்கு விடாமல், தண்ணீரை தன்னுடைய கணுக்கால் அளவுக்கு தடுத்துக் கொள்ள வேண்டாம் (அதாவது : அதற்கு சற்று குறைவாகத் தடுத்துக் கொள்ளளாம்)” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.
அறிவிப்பாளர் : சஹ்லது இப்னு அபிமாலிக் (ரழி), நூல் : முஅத்தா, அபூதாவூது.
நல்லதை ஏற்போம்! செயல்படுத்துவோம்!!
====================================================
நேர்வழி அல்லாத இதர பிற வழிகளைப் பின்பற்றாதீர்கள்!

நிச்சயமாக இதுவே எனது நேரான வழி யாகும். இதையே நீங்கள் பின்பற்றி நடப்பீர் களாக. (அல்குர்ஆன் : 6:153)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது கரத்தால் ஒரு கோட்டைக் கிழித்தார்கள். பின்னர் “”இது அல்லாஹ்வின் நேரான வழி” என்று தனது விரலால் சுட்டிகாட்டினார்கள். பிறகு அந்த கோட்டின் வலப்பக்கத்தில் இரு கோடுகளையும், இடது பக்கத்தில் இரு கோடுகளையும் போட்டார்கள்.

பின்னர் “இந்த இரண்டு கோட்டிலும் ஒவ்வொன்றிலும் கைவிரலை வைத்து சுட்டி காட்டினார்கள். இந்த வழிகள் ஒவ்வொன்றிலும் ஷைத்தான் நின்று கொண்டு மக்களைத் தன் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கிறான்” (ஷைத்தானின் வழிகள்) என்று கூறிவிட்டு இந்த இறைவசனத்தை (அல்குர்ஆன் : 6:153) ஓதிக் காட்டினார்கள்.
நபிமொழி செய்தியாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரழி).
ஆதாரம் : முஸ்னத் அஹ்மத், தாமீ, ஹாகீம், நஸயீ, இப்னுல் மர்தவைஹி, திர்மிதி, தஃப்சீர் தபரீ.

“”நீங்கள் இதையே பின்பற்றுங்கள், வேறு வழிகளைப் பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் : 6:153)
இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன், அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறான். ஆனால் நிராகரிப்பாளர்களுக்கு புரோகித மனித ஷைத்தானாகிய தாகூத்களே பாதுகாவலர்கள் ஆவார்கள். புரோகித மனித ஷைத்தானாகிய தாகூத்கள் அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களுக்கு அவர்கள் கொண்டு செல்கிறார் கள். அவர்கள் தாம் நரகவாசிகள், அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் : 2:257)
சுயமாக சிந்தியுங்கள், செயல்படுங்கள், படியுங்கள்! பணியுங்கள்! பரப்புங்கள்! குர்ஆனை.

Previous post:

Next post: