தொடர் 4
அபூ அப்தில்லாஹ்
அக்டோபர் தொடர்ச்சி……..
அவர்கள் சொல்வது போல், அறிந்தவர்களிடம் கேட்டு அறிவதாக இருந்தால், “”அஹ்லல் இல்மி” என்று இருக்க வேண்டும்; அவர்கள் கூறுவதைக் கண்மூடிப் பின்பற்றுவதாக இருந்தால் “”கல்லிதூ அஹ்லல் இல்மி” என்றே இருக்க வேண்டும். அப்படி இல்லை; மாறாக “”அஹ்ல ஃத்திக்ரி” என்றே இருக்கிறது. “”ஃதிக்ர்’ என்று இந்த இடத்தில் குறிப்பிடுவது 3:58ல் கூறும் இறையறிவிப்புக்களையே குறிக்கும். 16:43, 21:7 குறிப்பிடும் “”உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அனுப்பிய தூதர்கள் அனைவரும் ஆண்களே” என்ற செய்தி எந்த அறிஞனின் அறிவிலும் தெரிவதல்ல; இறைவன் அறிவித்துக் கொடுப்பதைக் கொண்டு மட்டுமே அறிய முடியும். இதிலிருந்து என்ன தெரிகிறது? மார்க்கம் பற்றி எவருக்கும் சந்தேகம் வந்து கேட்டால், எவரிடம் கேட்கப்படுகிறதோ அவர் உடனடி யாக அல்குர்ஆனை எடுத்து, அதில் குறிப்பிட்ட விஷயம் பற்றிக் கூறும் வசனத்தைக் காட்ட வேண்டும். அல்லது அது பற்றிய ஆதாரபூர்வ மான ஹதீஃதைக் காட்ட வேண்டும்.
நரகில் தள்ளும் மதகுருமார்கள்!
அதற்கு மாறாக இந்த மதகுருமார்கள் என்ன செய்கிறார்கள்? தங்களின் மனோ இச்சைப்படியுள்ள சுய விளக்கங்களையும், கற்பனைகளையும் கூறி மக்களை வழிகெடுக்கிறார்கள். குர் ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்ட கருத்துக்களைக் கூறி மக்களை நரகில் தள்ளு கிறார்கள்.
அடுத்து இவர்கள் எந்த அடிப்படையில், எந்த ஆதாரத்தை வைத்துத் தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், மதகுருமார்கள் என்று கூறுகிறார்கள் என்பதை நோட்டமிட்டுப் பாருங்கள். ஏதாவதொரு அரபி மதரசாவில் ஓசியில் தங்கி ஓசிச் சோறு சாப்பிட்டு சில ஆண்டுகள் கழித்து விட்டால் அவர்கள் ஆலிம்கள். இது தான் மதகுருமார்களின் அளவுகோல். நபி (ஸல்) அவர்கள் இப்படியொரு மார்க்கக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறார்களா? அப்படியயாரு ஆதாரம் இவர்களிடம் இருக்கிறதா? இல்லையே?
மதரசா விஞ்ஞானக் கண்டுபிடிப்பா?
பின் எப்படி பித்அத்தான இந்த நடைமுறை முஸ்லிம் சமுதாயத்திலும் நுழைந்தது? நபி(ஸல்) அவர்களது காலத்தில் இல்லாதிருந்து இப்போது விஞ்ஞான வளர்ச்சி காரணமாகக் கண்டு பிடித்த புதிய கண்டுபிடிப்பா? அதுவும் இல்லையே!
நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர்தான் எண்ணற்ற நபிமார்கள் வந்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் நபி இல்லை. நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த நபிமார்களின் மறைவுக்குப் பிறகு அந்த சமுதாயங்களில் திருட்டுத்தன மாக நுழைந்து கொண்ட மார்க்கத்தை தொழிலாகக் கொண்ட மதகுருமார்களின் கற்பனையில் உருவானதே இந்தப் புரோகித கல்வி முறை.
இந்து மதகுருமார்கள் நடத்தும் குருகுல மடம், கிறித்தவ மதகுருமார்கள் நடத்தும் குருத்துவக் கல்லூரி இப்படி அனைத்து மதங்களிலுமுள்ள மதகுருமார்கள், மதத்தை வைத்து வயிறு வளர்க்கும் மதகுருமார்களை உற்பத்தி செய்யும் குருத்துவ கல்வி முறையை நடைமுறைப்படுத்தத்தான் செய்கிறார்கள். 1450 வருடங்களுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களது காலத்தில் இந்த அனைத்து மதங்களிலும் குருகுலக் கல்வியை போதிக்கும் மடங்கள் இருக்கத்தான் செய்தன. ஏன்? நபி(ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த அரபு நாட்டிலேயே “”தாருந்நத்வா” என்ற குருகுல மடம் இருக்கத்தான் செய்தது. அன்று நபி(ஸல்) அவர்களை மிகக் கடுமையாக, கொடூரமாக எதிர்த்தவர்கள் இந்த குருகுல மடத்தின் மதகுரு மார்களே! அவர்களின் பக்தர்களே! குறிப்பாக அதன் தலைவனும் அபுல் ஹிக்கம் என்று குறைஷ்களால் மதித்துப் போற்றப்பட்டவனுமான அபூஜஹீலே!
நடுநிலையுடன் சிந்தியுங்கள்!
இப்போது நிதானமாக நடுநிலையுடன் சிந்தியுங்கள். ஆதம்(அலை) அவர்களிலிருந்து இறுதித் தூதர் வரை, நபிமார்களின் மறைவிற்குப் பின்னர் ஒவ்வொரு சமுதாயத்திலும் திருட்டுத்தன மாகப் புகுந்து கொண்ட இந்த மதகுருமார்கள் நடைமுறைப்படுத்திய குருகுல கல்வி முறை இறைவனின் அங்கீகாரம் பெற்ற நேர்வழியாக இருந்தால், நபி(ஸல்) என்ன செய்திருப்பார்கள்?
360 சிலைகளாலும் பல கபுருகளாலும் (சமாதி) நிறைந்திருந்த, அசுத்தப்பட்டிருந்த ஆதி ஆலயம் கஃபதுல்லாஹ்வை அச்சிலைகளை உடைத்தெறிந்து, கபுருகளைத் தரைமட்ட மாக்கி ஒழுங்குபடுத்தி சுத்தப்படுத்தியது போல், தமது முப்பாட்டனாரின் முப்பாட்ட னார் குசை கி.பி.440ல் நிறுவிய தாருந்நத்வா குருகுல மடத்தையும் மூட நம்பிக்கைகளை விட்டும் தூய்மைப்படுத்தி முறையாகச் செயல்பட வைத்திருப்பார்கள் அல்லவா?
அப்படிச் செய்யாமல் அக்குருகுல மடத்தை (தாருந் நத்வா) வேரோடு வேரடி மண்ணோடு ஏன் ஒழித்துக் கட்டினார்கள்? இன்று இந்த மத குருமார்களை முஸ்லிம்கள் மதிப்பது போல், அன்று குறைஷ்களால் மாபெரும் மேதைகளாக-அறிஞர்களாக மதித்துப் போற்றப்பட்ட வர்களை ஜாஹில்கள்-மூடர்கள் என்றும் “அபுல் ஹிக்கம்’ என குறைஷ்களால் வானளாவப் புகழ்ந்துரைக்கப்பட்டவனை- அக்குருகுல மடத்தின் தலைவனை அபூ ஜஹீல்-மடமை யின் தந்தை என்றும் ஏன் தமது சமுதாயத்தினருக்கு அடையாளம் காட்டினார்கள்? சிந்தித் துணர வேண்டாமா?
இஸ்லாத்தில் இடைத்தரகர்களுக்கு அனுமதியே இல்லை!
அப்படிச் சிந்தித்துணர்ந்தால், இறைவனின் 7:3, 3:36,66,67,68, 59:7 போன்ற நேரடிக் கட்ட ளைகளை நிராகரித்து-குஃப்ரிலாகி, இன்னும் 2:186, 50:16, 56:85 இறைவாக்குகளில் மனிதனுக்கு மிகமிக நெருக்கமாக பிடரி நரம்பை விட நெருக்கமாக ஏகன் இறைவனே இருப்பதைத் தெளிவாகத் திட்டமாக அந்த இறைவனே அறிவித்த நிலையில், அந்த இறைவனுக்கும் அவனது அடியானான மனிதனுக்கும் இடையில் இடைத் தரகர்களாக-புரோகிதர்களாக-மதகுருமார்க ளாக இவர்கள் எப்படிப் புக முடியும்? அப்படியானால் அந்த ஏகன் இறைவனை விட மார்க்கத்தை மக்களுக்கு விளக்கும் ஆற்றல் மிக்கவர்களா இம்மதகுருமார்கள்? என்று சிந்தித்தால் உண்மை விளங்கும்.
இறைவனை விஞ்சிய மதகுருமார்கள்!
மார்க்கத்தை மனித குலத்திற்கே தெள்ளத் தெளிவாக நேரடியாக, எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி மனிதனைப் படைத்த இறைவனே விளக்கி விட்டதை அல்குர்ஆன் 2:99,159, 185, 209, 213, 253, 3:86,97,105,184, 4:153, 5:32 இவை போல் சுமார் 52 இடங்களில் கூறி இருக்க அல்லாஹ்வே தெளிவாக விளக்கியும் குர்ஆன் உங்களுக்கு விளங்காது, நாங்கள்தான் விளக்க வேண்டும் என்று ஆணவத்துடன் கூறும் இம்மதகுருமார்கள் அல்லாஹ்வை விட ஆற்றல் மிக்கவர்களாக தங்களைத் தாங்களே கர்வத்துடன் பீற்றிக் கொள்வது அவர்களின் கொடூர முகத்தை அடையாளம் காட்டவில்லையா?
மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாகவும், மார்க்கம் அல்லாததை மார்க்கமாகவும் ஆக்கும் மத குருமார்கள்!
இந்த மத குருமார்களைத்தான் மார்க்கமல்லாததை மார்க்கமாக்கி இறைவனுக்கு இணையாளர்கள் ஆகிறார்கள் என 42:21ல் இறைவன் கடிந்து கூறுகிறான். தீர்ப்பை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்காவிட்டால், இவ்வுலகிலேயே இந்த ம குருமார்களுக்குத் தண்டனை கொடுக் கப்பட்டிருக்கும் என்றும் இறைவன் கூறுகிறான். இந்த மதகுருமார்கள் ஏகன் இறைவனுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படும் தற்குறிகள் என்று 49:16ல் இறைவன் கண்டித்துக் கூறுகிறான். வானத்தின் கீழ் வாழும் படைப்புகளிலேயே மிகமிக கேடுகெட்ட ஜன் மம் இந்த மதகுருமார்கள்தான் என்ற உண் மையை 7:175 முதல் 179 வரை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயமாக அறிவார்கள்.
மதகுருமார்களின் இலக்கணம் பாரீர்!
ஆக அல்குர்ஆனில் பொய்யன்கள் என 3:61, 16:39, 51:56 மூன்று இடங்களிலும், 3:90, 15:56, 56:51, 1:7, 23:105-108, 37:69 ஆகிய இறை வாக்குகளில் வழிகெட்டவர்கள் என்றும், 2:90, 5:87, 6:119, 7:55, 10:74 ஆகிய இறைவாக்குகளில் வரம்பு மீறுகிறவர்கள் என்றும், 6:55, 147, 7:40,84,133, 9:66, 10:13, 75, 11:52, 116, 12:110, 14:49, 15:12, 58, 18:49,57, 19:86, 20:102, 25:22, 31, 26:200, 27:69, 28:17, 32:22, 34:32, 37:34, 43:74, 44:37, 45:31, 46:25, 51:52, 54:47, 68:35, 74:41, 77:18 ஆகிய 34 இறைவாக்குகளில் குற்ற வாளிகள் என்றும், 2:12,60, 3:63, 5:64, 7:74, 86, 103,142, 10:40,81,91, 11:85, 26:183, 27:14, 28:4, 77, 29:30, 36, 38:28 ஆகிய இடங்களில் குழப்பம் செய்கிறவர்கள் என்றும், சுமார் 135 இடங்க ளில் நிராகரிப்பாளர்கள் என்றும் கூறும் அனைத்து இறைவாக்குகளும் மதகுருமார்களையும், அவர்களை கண்மூடிப் பின்பற்றியவர்களையுமே குறிக்கும் என்பதை யாரால் மறுக்க முடியும்.
(தொடரும் இன்ஷா அல்லாஹ்)