தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்
அமல்களின் சிறப்புகள்…
தொடர் : 31
M. அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அமல் இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்
பக்கம் : 375, ஹதீஃத் எண் 12ம் அதன் தொடர்ச்சியும்.
ஹதீஃத் எண். 12 ஹஜ்ரத் அபூதர்தா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹுத ஆலா கியாமத்து நாளில் சில மனிதர்களை அவர்களுடைய முகங்கள் ஒளியாய்ப் பிரகாசிக்கும் நிலையில் எழுப்புவான். அவர்கள் முத்து மேடைகளில் அமர்ந்திருப்பார்கள். மற்ற மனிதர்கள் “”அவர்களைக் கண்டு பொறாமை கொள் வார்கள். அவர்கள் நபிமார்களோ, ஷிஹதாக்களோ அல்லர்” என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறியபோது, “”யா ரசூலல்லாஹ் அவர்களை நாங்கள் அறிந்து கொள்வதற்காக அவர் களைப் பற்றி எங்களுக்கு விளக்கிக் கூறுவீர்களாக! என்று ஒருவர் கேட்டார்.
அப்பொழுது நபியவர்கள், “”அவர்கள் பல கூட்டத்தார்களிலிருந்தும் பல ஊர்களிலிருந்தும் அல்லாஹ்வுக்காக ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு கொண்டு ஓரிடத்தில் ஒன்று கூடி அல்லாஹ்வை திக்ரு செய்பவர்கள்” என்று பதிலளித்தார்கள். (நூல் : தப்ரானீ)
ஆய்வு :
“”அசி” (அமல்களின் சிறப்பு) ஆசிரியர் எழுதியுள்ள, மேல் உள்ள விசயங்களை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
கூட்டமாக திக்ர் செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் புரிகிறது. கூட்டமாக திக்ர் செய்தால் சப்தமாகத்தான் செய்ய முடியும். ஆனால், சப்தமாக திக்ர் செய்யவேண்டும் என்று எழுதவில்லை. ஜாக்கிரதை உணர்வோடு வார்த்தைகளை கையாள்கிறார். சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களிடம், எழுதும்போது தாம் எந்த இடத்திலும் மாட்டிக் கொள்ளக்கூடாது என்கின்ற ஜாக்கிரதை உணர்வு அதிகமாகவே இருக்கும். அது போல குர்ஆன் மற்றும் ஹதீஃதுகளுக்கு மாற்றமாக செயல்பட வேண்டும் என்ற கொள் கையில் உள்ள இவர் ஜாக்கிரதை உணர்வோடு வார்த்தைகளை கையாள்கிறார். எப்படி என்றால், உரக்க சப்தமிட்டு திக்ர் செய்யக் கூடாது என்று குர்ஆன் கூறுவதால், சப்தமாக திக்ர் செய்ய வேண்டும் என்று எழுதாமல், கூட் டமாக திக்ர் செய்ய வேண்டும் என்று மட்டும் கூறுகிறார். கூட்டமாக வேறு அமல்கள் செய்வதற்கு ஹதீஃத்களில் ஆதாரம் இருப்பதால் அதை திக்ர் செய்யலாம் என்பதற்கு பயன்படுத்துகிறார். ஆக ஒரு கல்லை எறிந்து, இரண்டு மாங்காயை பறிக்கிறார். அதாவது ஒரே வியத்தில் குர்ஆனுக்கும், ஹதீஃதுகளுக்கும் மாற்றமாக செயல்படும் வித்தையை கற்றுத் தருகிறார்.
கூட்டமாக திக்ர் செய்யும்போது உரத்த சப்தமாக திக்ர் செய்யும் நிலை தானாகவே ஏற்பட்டு விடும். சப்தமாக திக்ர் செய்ய வேண்டும் என்று எழுதாமலே, சப்தமாக திக்ர் செய்யும்படி ஆக்கி விடுகிறார். அதாவது குர்ஆனுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற இவரது கொள்கையை உம்மத்துக்கு அறிமுகம் செய்து வெற்றி கண்டு வருகிறார். இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள திக்ர் மஜ்லிஸ்களில் நடைபெறும் திக்ர்கள் இப்படித்தான் நடைபெற்று வருவது என்பது இவர்களே இவர்களுக்கு எதிராக அல்லாஹ் வுக்கு தரும் ஆதாரங்கள்.
இப்போது இறை வசனம் 7:205ஐ கவனியுங்கள்.
“”நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும், சொல்லில் உரத்த சப்தம் இல்லாமல் காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவு கூர்வீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்”
இந்த இறைவசனம் அறியத் தருபவைகளாவன :
1. திக்ரை தனிமையில் செய்ய வேண்டும்.
2. பணிவோடு திக்ரு செய்ய வேண்டும்.
3. அச்சத்தோடு செய்ய வேண்டும்.
4. சொல்லில் உரத்த சப்தம் இல்லாமல் சொல்ல வேண்டும்.
5. காலையிலும் மாலையிலும் நினைவு கூற வேண்டும்.
இவைகள் அனைத்தும் அல்லாஹ் 7:205ல் கூறும் இறைக் கட்டளை.
இந்த வசனத்திற்கு எதிராக இவரது திக்ர் மஜ்லிஸ்கள் செயல்படுவதை பாருங்கள்.
1. தனிமையில் திக்ர் செய்யவில்லை.
2. பணிவோடு திக்ர் செய்யவில்லை. (கூட்ட மாக திக்ர் செய்வதால் இந்த நிலை ஏற்படவே ஏற்படாது)
3. அச்சத்தோடு திக்ர் செய்யவில்லை. (கூட்ட மாக திக்ர் செய்வதால் அச்சம் ஏற்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவு)
4. சப்தம் இல்லாமல் திக்ர் செய்யவில்லை.
5. காலையிலும், மாலையிலும் திக்ர் செய்வ தில்லை. (குர்ஆன் வசனத்திற்கு எதிராக, இவர்களது மஜ்லிஸ்களில் இரவுகளில் திக்ர் செய்யப்படுகிறது)
இவர்களது கூற்றுக்கு ஆதாரமாக இவர்கள் மேலே காண்பித்துள்ள தப்ரானி ஹதீஃதையம், இன்னும் பற்பல சஹீஹான ஹதீஃத்களையும் எடுத்துக் காண்பிக்கின்றனர். அதாவது கூட்டமாக திக்ர் செய்பவர்களை கண்டுபிடித்து, மலக் குகள் தங்கள் இறக்கைகளை அவர்கள் மீது விரித்து அவர்களை சூழ்ந்து கொள்கின்றனர். அங்கே சகீனத் என்ற அமைதி இறங்குகிறது. அல்லாஹ்விடம் அவர்களைப் பற்றி எடுத்து சொல்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ்விட மிருந்து உயர்ந்த படித்தரம் உள்ள சுவனபதிகள் வழங்கப்படுகிறது என்று கூறுகின்ற சஹீஹான ஹதீஃத்கள் கூறி திக்ர் மஜ்லிஸ்களை நியாயப் படுத்துகின்றனர்.
குர்ஆனுக்கு எதிராக செய்யவேண்டியதை செய்துவிட்டு, தங்கள் செயல்களுக்கு ஆதாரமாக ஹதீஃத்களைக் காண்பிக்கின்றனர் என்றால், இங்கேதான் இவரது மாயாஜாலம் வேலை செய்கிறது. உண்மையில் இவர் காண்பிக்கக்கூடிய ஹதீஃத்கள் இவர் கூறும் திக்ர் மஜ்லிஸ்களைப் பற்றி கூறவே இல்லை என்பதை இனி விரிவாக பார்ப்போம்.
திக்ர் என்றால் ஓரிடத்தில் சிலரோ, பலரோ அமர்ந்து சில சொற்களால் அல்லாஹ்வை தியானிப்பது என்பதை மட்டுமே மக்களுக்கு தமது செயல்களின் மூலமாக கற்றுக் கொடுத்திருக்கின்றனர். “அசி’ ஆசிரியரும், இவரின் கொள்கைக்கு ஆதரவளித்து வரும் மவுலவிகளும், இவர்கள் நடத்தும், “திக்ர் மஜ்லிஸ்களே’ இதற்கு சான்றாகும்!
திக்ர் என்ற வார்த்தைக்கு குர்ஆன் பல பொருள்களைத் தருகிறது. அவற்றுள் சிலவற்றை இறை வசனங்களுடன் அறியத் தருகிறோம்.
நினைவு கூறுதல் 2:12,200 & 13:28, உபதேசம் 12:104, 21:24, சிந்தித்தல் 16:44, இறைவேதம், அல்குர்ஆன் 15:6,9, அறிவுரை 21:10, தொழுகை 29:45, 62:9, வேதம் 16:44, நல்லுபதேசம் 68:52.
அல்லாஹுத ஆலா தனது பரிசுத்த குர்ஆனில், எவ்வாறு திக்ரு செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறானோ அதற்கு நேர் மாற்றமாக “”அசி” நூலாசிரியர் கூறி இருப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. வாடிக்கையாகவே அவர், குர்ஆன், ஹதீஃத் கருத்துக்கு எதிர் கருத்து கூற வேண்டியது தனது தலையாய கடமையாக எண்ணி செயல்பட்டு வருபவர் தானே அவர்.