ஆயத்தும்! ஹதீஃதும்!

in 2018 ஜனவரி

அபூ கலீல்
தொடர்-1

 

1. முன்பெல்லாம் இஸ்லாத்தின் பெயரால் அரபி கற்ற மவ்லவிகள் எதை சொன்னா லும் அது மார்க்கம் என்ற நிலை மக்களி டையே நிலவி வந்தது. இந்த நிலை நீண்ட காலமாக சாவகாசமாக நிலைத்து இருந்தது.

2. சமீப காலமாக குறிப்பாக தமிழகத்தில் அரபி மொழி தெரிந்த, தெரியாத அதே நேரத்தில் மார்க்கம் தெரிந்த பலரின் முயற்சியால், அல்குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஆயத்துக்களும், ஹதீஃதுகளும் தான் உலக மாந்தர்களின் வாழ்க்கை வழி காட்டி என்பதை மக்கள் உணர ஆரம்பித்தனர். உணர்ந்தவர்களில் ஒரு சிலர் தடு மாற்றம் அடைந்து பாதை மாறி தடுமாற் றத்தில் இருக்கின்றனர். அதே நேரம் வளர்ந்தும் வந்தனர். அந்த வளர்ச்சியில் சிலரின் நிலை ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் எனும் குழப்பத் தில் தற்போது இருக்கின்றனர்.

3. ஒரு சிலரின் கடும் முயற்சியால் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஃத்கள் தான் வாழ்க்கை வழிகாட்டி எனும் நிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டது. எவரேனும் சொந்தமாக எதையேனும் சொல்லிவிட்டால், அவர் பாடு திண்டாட்டம்தான் என்று படிப்படியாக அதே நேரத்தில் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது தமிழகம்.

தமிழகத்தில் ஏற்படுகின்ற மேலே கூறிய ஒவ்வொரு நிலையும் உலகில் பல நாடுகளி லும் எதிரொலித்து வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், அரபியை தாய் மொழியாகக் கொண்ட நாட்டினருக்கு தெரிவதை விட, தமிழை தாய் மொழியாகக் கொண்ட அரபி தெரியாத சாதாரண தமிழ் முஸ்லிம்கள் குர்ஆனை, ஹதீஃதுகளில் தெளிவு பெற்றவர்களாக ஆங்காங்கே காணப்படுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த சூழலில், “ஆயத்தும்-ஹதீஃதும்” என்ற தலைப்பில் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஃதுகள் தெரிவிக்கும் சில செய்திகளை பகிர்ந்து கொள்ளும் நன்னோக் கோடு இத்தொடர் ஆரம்பம் ஆகிறது. தலைப்பிற்குள் செல்வோம்.
நிராகரிப்போருக்கு அல்லாஹ்வின் சவால்!

அல்குர்ஆன் 6:158 ஆயத்து :
“”வானவர்கள் அவர்களிடம் வருவதையோ, அல்லது உம் இறைவனே வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில் (இதற்கு) முன்னால் நம்பிக்கை கொள்ளாதிருந்த அல்லது (நம்பிக்கை கொண்டிருந்தும்) அதனுடைய நம்பிக்கையில் எந்த நன்மையையும் சம்பாதிக்காதிருந்த எந்த ஆத்மாவிற்கும், அதனுடைய நம்பிக்கை (அந்நாளில்) பலன் தராது. (ஆகவே, அவர்களை நோக்கி அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள். மேலும் நிச்சயமாக நாங்களும் எதிர்பார்க்கின்றோம் என்று (நபியே!) நீர் கூறும்.

இந்த இறை வசனம் ஏதோ ஒரு அசம்பாவிதம் வரப்போகிறது என்ற அச்சத்தையும் சவாலாக இந்த வசனம் சொல்லப்பட்டு இருப்பதால் வரவிருப்பது நல்லதாக இருக்காதோ என்றெண்ணி, அச்சம் இன்னும் அதிகரிக்கிறது.

அல்குர்ஆன் 27:82 ஆயத்தில் அந்த அத்தாட்சி என்னவென்று கூறப்பட்டுள்ளது :

“”அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும்போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து (தாப்பத்துல் அர்ளு) வெளியாக்குவோம். அது நிச்சயமாக மனிதர்கள் (யார் யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லை என்று அவர்களுக் குச் சொல்லிக் காண்பிக்கும்”

இந்த வசனம் குர்ஆன் ஹதீஃதை தவற விட்ட முஸ்லிம்களுக்கும் பொருந்துமே என்ற கவலையும் கூடவே வருகிறது.
மேலே கூறப்பட்ட அல்குர்ஆன் 6:158, 27:82 வசனங்கள் கூறுவது என்ன?

குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் நிராகரித்த மக்கள் 3 கோரிக் கைகளை முன் வைத்தனர். அந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை எதிர்பார்ப்பதாக கூறினர். அவையாவன:
1. மலக்குகள் நேரில் வரவேண்டும்.
2. அல்லது அல்லாஹ்வே வரவேண்டும்.
3. அல்லது அல்லாஹ்வின் அத்தாட்சி களில் சில வரவேண்டும்.
அவர்களின் எதிர்பார்ப்பைக் குறித்து அல்லாஹ் கேட்கிறான்.
“”இவைகளைத் தவிர வேறெதனையும் எதிர்பார்க்கின்றனரா?” என்று கேட்டுவிட்டு, அவர்கள் கேட்டதில் 3வது கோரிக்கையான “”அல்லாஹ்வின் அத்தாட்சிகள் சில வரும்” என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

இறை வசனங்களுக்கான ஹதீஃதுகள் :
1. “”நீங்களும் எதிர்பாருங்கள், மேலும் நிச்சயமாக நாங்களும் எதிர்பார்க்கின்றோம்” என்ற இறை வசனத்திற்கு “”மேல் திசையிலிருந்து சூரியன் உதயமாதல்” என்று நபி (ஸல்) அவர்கள் பொருள் கூறினர் என அபூசயீத்(ரழி) அவர்கள் அறிவித்தார்கள். (நூல்: திர்மிதி)

2. உலக முடிவு நாளின் அடையாளங்களில் முந்தியது. சூரியன் தான் அஸ்தமனமா கும் இடத்திலிருந்து உதயமாவதும், காலையில் தாப்பத்துல் அர்ளு வெளிப்படுவதும் ஆகும். இந்த இரண்டில் எது முந்திவிடுகிறதோ, அதனையடுத்து மற்றதும் வெளிப்பட்டு விடும் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித் துள்ளார்கள். இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரழி), நூல் : முஸ்லிம், அபூதாவூது.

3. “”மூன்று செயல்கள் நடந்து விட்ட பிறகு அதற்கு முன் இறை நம்பிக்கை கொள்ளாதார். அதன்பின் இறை நம்பிக்கை கொள் வதனால், எந்த பயனும் பெற மாட்டார் கள். 1. சூரியன் மேற்கு திசையிலிருந்து உதயமாவதும், 2. தஜ்ஜால் வெளிப்படுவதும். 3. தாப்பத்துள் அர்ளு (பூமியிலி ருந்து மிருகம்) வெளியாவதும் ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள் ளார்கள். அபூ ஹுரைரா(ரழி), திர்மிதீ

அல்குர்ஆன் 27:82 ஆயத்தின்படியும், மேற் கண்ட ஹதீஃதின் படியும் வரவிருக்கும் 3 அத்தாட்சிகள் :
1. சூரியன் மேற்கு திசையிலிருந்து உதய மாவது.
2. தஜ்ஜால் வெளிப்படுவது
3. தாப்பத்துள் அர்ளு (பூமியிலிருந்து மிருகம்) வெளியாவது.
அந்த நேரத்தில் ஒவ்வொருவரின் நிலை என்ன?
இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்த நாளில் :
1. முன்னால் ஈமான் கொள்ளாத ஆத்மாக் களும்.
2. அல்லது (முன்னால்) ஈமான் கொண்டி ருந்தும் அந்த ஈமானின் மீது எந்த அமல்களும் செய்யாமல் இருந்த ஆத்மாக்களும் இப்போது ஈமான் கொள்வதால் அது எந்த பலனையும் தராது.
அபூ ஹுரைரா(ரழி), முஸ்லிம் : 249
“”(நபியே அவர்களை நோக்கி) கூறுங்கள்.
“”(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர் பாருங்கள்.

மேலும், நிச்சயமாக நாங்களும் எதிர் பார்க்கின்றோம்.
எனவே, முஸ்லிம்கள் வர இருக்கும் இறைவனின் 3 அத்தாட்சிகள் பற்றி எதிர்பார்த்து இருக்க வேண்டும். “”அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ் ஜால்” “”(யா அல்லாஹ்! நிச்சயமாக தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாது காவல் தேடுகிறேன்)” என்று ஒவ்வொரு தொழுகையின் அத்தஹிய்யாத்தில், சலவாத் திற்கு பிறகு ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள்.

Previous post:

Next post: