அந்நஜாத் ஜூன் 1988

in 1988 ஜுன்

ஷவ்வால் 1408 – ஜூன் 1988
கொள்கைச் சகோதர, சகோதரிகளின் கவனத்திற்கு
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் அந்நஜாத்  தனது இலட்சியம் பயணத்தை உங்கள் அனைவரின் முழு ஆதாரவுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் அந்நஜாத்தால் எடுத்துவைக்கப்பட்ட குர் ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம், மனித அபிப்பிராயங்களுக்கும்ஊகங்களுக்கும்  மார்க்கத்தில்  அணுவளவும்  அனுமதி இல்லை  என்று தெளிவான கொள்கையை ஏற்றுக்கொள்ளும் காலம் கனிந்து வருகின்றது. இந்த காலகட்டத்தில் கொள்ளைச் சகோதர, சகோதரிகள் மிகவும் கவனமாக நடத்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறோம்.

கலப்படமற்ற தூய இஸ்லாம் மக்களிடையே வேகமாகப் பரவி வருவதால், கலப்பட இஸ்லாத்தை மக்களுக்குப் போதித்து உலகஆதாயம் அடைந்தவர்கள், தங்களின்  தொழிலுக்கு  ஆபத்து  வந்துவிட்டதே  என்று கதி கலங்க, தங்களின் பிரோகிகத் தொழிலை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சிகள் செய்து வருகின்றனர். அவர்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்திருக்கும் சகோதரர்களை ஏவிவிட்டு வன் முறையைத் தூண்டுகின்றனர். இதனால் சில இடங்களில் கொள்கைச் சகோதரர்கள் துன்பத்திற்கு ஆளாகிவரும் செய்திகளும் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. எனினும்  நாம்  பொறுமை  காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.  அந்தச்  சகோதரர்கள்  அறியாமையால்  அவ்வாறு  செயல்படுகிறார்கள். எனவே அவர்களின் ஹிதாயத்திற்காக நாம் து ஆ செய்வதோடு பொறுமையைக் கடைபிடிக்க வேண்டுகிறோம்.

மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை. எனவே நாம் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் குர் ஆன் , ஹதீஸை மக்கள் முன் எடுத்து வைக்கக் கடமைப்பட்டுள்ளோமேயல்லாமல்,  அவர்களை  குர்ஆன், ஹதீஸ்படி  நடந்து  தான்  ஆக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தும் அதிகாரம்  நமக்கு  இல்லைஎன்பதைத் தெளிவாக  நாம்  பிரிந்துக்  கொள்ளவேண்டும்.  அல்லாஹ்வே “” விரும்பியர் விசுவாசிக்கலாம்;  விரும்பியவர் நிராகரிக்கலாம் நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களுக்கு நரக நெருப்பை சித்தப்படுத்தியுள்ளோம்” (18:29) என்று தெளிவாக அறிவித்துவிட்டான். நாம் நிர்பந்தத்தை உண்டாக்குவது முறையாகாது.

அடுத்து கொள்ளைச் சகோதரர்கள்  முக்கியமாக கவனிக்கவேண்டிய வி­யம், எந்தக்குர் ஆன், ஹதீஸை செயல்படுத்த மக்களிடம் வேண்டுகிறாமோ இதை  முதலில்  நாம்  செயல்படுத்திக்  காட்டவேண்டும்.   இது வி­யத்தில் நமது சகோதரர்களிடையே பெரும் குறைபாடுகள் இருப்பதாக அறிகிறோம். குறிப்பாக  குர் ஆன்,  ஹதீஸைப்  பற்றி பேசும்  சகோதரர்கள்  தங்கள் ஐங்கால் தொழுகைகளில் அக்கறை செலுத்துவதில்லை என்று செய்தி நமக்கு கிடைக்கின்றது. நாம் மாபெரும் “”தஃவா” பணியைச் செய்து கொண்டிருப்பதால், இரவும், பகலும் அதிலேயே மூழ்கி இருப்பதால் தொழுகையை விடுவது குற்றமில்லை என்று கருதுகிறார்கள்  போலும்.

அன்புச் சகோதரர்களே ! தெளிவாக அறிந்துக் கொள்ளுங்கள், நாம் செய்யாத  ஒன்றை  மக்களுக்கு  உபதேசிக்க  நாம்  வெட்கப்படவேண்டும்.  நாம் செயல்படாததைச் சொல்வதால் பெரும் வெற்றி நிச்சயமாகக் கிடைக்காது. நமது உபதேசங்களைக் கொண்டு ஒரு சிலர் ஹிதாயத் பெற்று நேர்வழிக்கு வந்தாலும் அதனால் நமக்கு  அணுவளவும் நன்மைகிட்டாது. நாளை நமது உபதேசத்தைக்கேட்டு திருந்தியவர்கள்  சுவர்க்கத்திலும்,  அந்த   உபதேசத்தைச் செய்த நாம் நரகத்திலும் இருக்க நேரிடும், இது எவ்வளவு பெரிய துர்பாக்கிய நிலை என்பதைச் சிந்திக்க வேண்டும். காரணம், தொழுகை அற்றவனின்  இதர  செயல்களில்  எதுவும்  ஏற்றுக்கொள்ளப்படாது.

தொழுகையின் சிறப்பையும், அவசியத்தையும் மக்களுக்கு, மேடைகளில் எடுத்து முழக்கிக்கொண்டு நாம் தொழுகையில் பேணுதல் இல்லாமல் இருப்பதும், தனி மனித வழிபாட்டின் கெடுதல்களைத் தெளிவாக மேடைகளில் முழங்கிக்கொண்டு, சொந்த வாழ்க்கையில் தனிமனித வழிபாட்டிற்கு வித்திடுவதும், இன்றைய நவீன அரசியல் வாதிகளின் போக்கே அல்லாமல் உண்மை விசுவாசியின் நடைமுறையாக இருக்க முடியாது. இன்றைய அரசியல்வாதிகள் தான் மேடைகளில் மக்களைக் கவர்வதற்காக  ஒழுக்க சீலர்களைப்போல்  பேசிக்கொண்டு,  சொந்த  வாழ்கைக்யில்  ஓழுக்கக் கேடுகளையே கொள்கையதக கொண்டிருப்பவர்கள். இந்த இழிவான நிலை நமக்கு வேண்டாம். மக்களுக்கு போதிப்பவற்றை எடுத்து நடப்பதில் நாம் முதன்மையானவர்களாகத் திகழ வேண்டும்.

அடுத்து அந்நஜாத்தை குர்ஆன், ஹதீஸை எடுத்துச் சொல்லும் ஏடு என்று மக்களிடையே அறிமுகப்படுத்துவதாக அறிகிறோம். வழிகேட்டில் இருக்கும் எல்லாப்பிரிவினரும் குர் ஆன், ஹதீஸைச் சொல்வதாகத் தான் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மக்களிடையே நமக்கு  செல்வாக்கு  வந்துவிட்டால் மார்க்கம்  என்றால்  குர் ஆன்,  ஹதீஸைத்  தூக்கிப்  பிடிப்பதற்குப் பதிலாக அந்நஜாத்தை தூக்கிப்பிடிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.இதுவும் நமது அசல் நோக்கத்திற்கு  எதிரானதுதான்.  சத்திய  முயற்சியில்  ஈடுபட்ட  இயக்கங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வியது இந்தத் தவரைச் செய்ததனால் தான். இந்த மாபெரும் தவறை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது.

“” அந்நஜாத்”  குர் ஆன்,  ஹதீஸை  எடுத்துச்  சொல்லும்  ஏடு  என்று அறிமுகப்படுத்துவதை  விட்டு, குர்ஆன், ஹதீஸை மக்கள் நேரடியாகப் பார்த்து விளங்கிச் செயல்படுவதற்குத் தடையாக இருக்கும் அனைத்து முட்டுக்கட்டைகளையும் அகற்றிட பாடுபடும் ஏடு என்று அறிமுகப்படுத்துங்கள். உண்மையில்  குர் ஆன்,  ஹதீஸை  உலக  மக்கள்  அனைவரும்  ஏற்று,  விளங்கிச்  செயல்படத்  தடையாக இருக்கும் நாஸ்திக,ஆஸ்திக அடிப்படையிலான எல்லாவித முட்டுக்கட்டைகளையும் தெளிவாக விளக்கி, அவற்றை அகற்றிவிட்டு மக்கள் அனைவரும் குர் ஆன், ஹதீஸை ஏற்று தக்லீது  இல்லாமல்  நேரடியாக  விளங்கிச்  செயல்பட  வைப்பது மக்களிடையே பேசப்படும் அனைத்தும் மொழிகளிலும், குர் ஆனையும், ஹதீஸையும் தெள்ளத் தெளிவாக வெளியிடுவது, இவையே அந்நஜாத்தின் மாறாத இலட்சியங்களாக இருக்கின்றன, அவை நிறைவேற து ஆ செய்யும்படி அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.

———————————————————————————————————————————–

விமர்சனங்கள் ! விளக்கங்கள் !!
முழுக்குக்  குளிப்பு,  மாதவிடாய்  குளிப்பு,  பேறு காலத்  தீட்டுக்குளிப்பு  ஆகியவற்றில் முழுமையாக ஒரு முடியளவு கூட விடுபடாமலும் குளிக்கலாம். அப்படி நனையாமல் விடுபட்டாலும் பாதகமில்லை குளிப்பு நிறை வேறிவிடும் என்ற கருத்தை ஒரு ஏடு வெளியிடுகிறதே? S. தாஜுத்தீன், திருச்சி

அந்த ஏட்டின் கூற்றில் சாறு இருக்கிறதா ? என்பதை விரிவாகவே பார்ப்போம். முதலில் ஒரு உரோமக்கால் அளவு கூட விடுபடாமல் நளைய வேண்டும் என்பதற்குரிய ஹதீஸ்களைத் தருகிறோம். அதன்பின் நனையாமல் விடுபட்டாலும் பாதகமில்லை என்று அவர்கள் கூறி அதற்கு ஆதாரமாகத் தரும் ஹதீஸ்களையும்  தருகிறோம். இரண்டு வகையான ஹதீஸ்களையும் ஒத்துப்பார்த்து நீங்களே சரியான ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.

உரோமக்கால் அளவுகூட விடுபடாமல் நனைய வேண்டும் என்பதற்கு ஆதாரமான ஹதீஸ்கள் :
1. அன்னை ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி(ஸல்) அவர்களுக்கு  (ஜனாபத் ) ஏற்பட்டு குளிக்கும் போது, ஆரம்பாக இரு கைகளையும் கழுவிக் கொண்டு, தொழுகையின் ஒளூ போன்று, ஒளூ செய்து கொண்டு குளிப்பார்கள்.  பின்னர்  தமது  கையால்  உரோமங்களைக்  கோதிக்  கழுவுவார்கள்.  முடியின் அடிப்பாகத்தில் தண்ணீர் ஊடுருவிச் சென்று  அது  நனைத்து  விட்டதென்ற உறுதி தமக்கு ஏற்பட்டவுடன் அம்முடியின் மீது மும்முறைத்  தண்ணீதை  ஊற்றுவார்கள்.  பின்பு தமது மேனி அனைத்தையும் கழுவிக் கொள்வார்கள். (புகாரீ)

2.  அன்னை ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்கள் . (அறிவிப்பின் சுருக்கம்) நபி (ஸல்) அவர்கள் தமக்கு பெருந் தொடக்கு (ஜனாபத்) ஏற்பட்டு குளிக்கும் போது தாம் தொழுகைக்கு செய்யும் ஒளூ போன்று ஒளூ செய்து கொண்டு, பின்னர் தண்ணீர் பாத்திரத்திற்குள்  தமது இருகைகளையும் புகுத்தி (தாம் அள்ளிய தண்ணீரால்,  தமது  உரோமங்களை  முடியின்  அடிப்பாகமாகிய)  தோல் பாகம் வரைத்  தண்ணீர் செலுத்தப்பட்டு விட்டதாக தாம் உணரும் வரைத் தமது உரோமத்தைக் கோதிவிட்டு, மும்முறைத்  தமது தலையில் தண்ணீரை  ஊற்றுவார்கள்.  குளித்த  பின் எஞ்சியுள்ள தண்ணீரையும் தமதுதலை  மீதே  ஊற்றிக்  கொள்வார்கள்.  (அபூதாவீத்)

3. அன்னை  ஆயிஷா  (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி (ஸல்) அவர்களிடம் அஸ்மா பின்த்து யஜீத் (ரழி) அவர்கள் வந்து ஒரு பெண் தனது ஹைளுக்காக குளிக்கும் போது எவ்வாறு குளிக்க    வேண்டும் என்று கேட்க, அதற்கவர்கள் உங்களிலொருவர் தாம் குளிக்க வேண்டும் என்று கேட்க, அதற்கவர்கள் உங்களிலொருவர் தாம் குளிக்க ஆயுத்தமாகும் போது தண்ணீரையும், எலந்தை இலைகளையும் எடுத்து வைத்துக் கொண்டு, அவற்றால் நன்கு (தம்மைச்) சுத்தப்படுத்திய  பின்தனது  தலையில்  தண்ணீரை  ஊற்றி தலை முடியின் வேர்ப்பாகங்களுக்கு  தண்ணீர் சென்றடையும் வரை தனது தலையை பலமாக நன்றாகத்  தேய்த்து பிறகு அவள் தன் மீது தண்ணீரை ஊற்றி (குளித்து)க்கொள்ள வேண்டும். பின்னர் கஸ்தூரி (போன்று) வாசனை தடவிய சிறியதளவு பஞ்சைக்கொண்டு அவள்தன்னைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்கள். அதற்கு  அந்த  ஸஹாபிப்  பெண் நபி (ஸல்) அவர்களை நோக்கி ; அப் பஞ்சைக் கொண்டு எவ்வாறு சுத்தமாக்கிக் கொள்வது ?   என்று  கேட்க,  நபி (ஸல்)  அவர்கள்  (விளக்கம்  எதுவும்)  கூற  முடியாத  நிலையில் “” சுப்ஹானல்லாஹ்” அதைக்  கொண்டு  அவள்  தன்னைச்  சுத்தமாக்கிக்  கொள்ளவேண்டும்  என்று  கூறினார்கள் (அந்த அம்மையார் ஒன்றும் புரியாத நிற்பதைக்  கண்ட)  உடன்  அன்னை  ஆயிஷா (ரழி)  அவர்கள்   மறைமுகமாக   அவ்வம்மையாரிடம்  இரத்த   வாடையை  அப்பஞ்சை  வைத்து  மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். மீண்டும் அப்பெண் நபி (ஸல்)அவர்களிடம் (ஹைளு, நிஃபாகஸ் அல்லாத) ஜனாபத்துக்கு குளிப்பு பற்றி கேட்டார்கள் அதற்கவர்கள் தண்ணீரை, எடுத்து (தன்னை)  நன்கு  சுத்தம்  செய்து கொண்டு,  பிறகு  தலையில்  தண்ணீரை  ஊற்றி அது உரோமங்களின் வேர்ப் பாகங்களை அடையும் வரை தேய்த்து பின்னர் தன் மீது தண்ணீரை ஊற்றி (குளித்து)க் கொள்ள வேண்டும் என்றார்கள்.

(இவ்வுரையாடலை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ) அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் “”பெண்களிலேயே மதீனத்து அன்ஸாரி பெண்களே மேலானவர்கள். ஏனெனில், மார்க்கத்தைக்கேட்டு விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்திற்கு அவர்களின் வெட்கம் சிறிதும் தடையாகவே இல்லை என்று கூறினார்கள் .(முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா)

4.    ஜூமைஉ பின் உமைர் (ரழி) அறிவித்துள்ளார்கள் : நான் எனது தாயார், சிறிய தாயார் ஆகியவருடன் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவ்விருவரில் ஒருவர் (அன்னை) அவர்களிடம் நீங்கள் (கடமையான) குளிப்பின்போது  எவ்வாறு குளிப்பீர்கள்  என்று கேட்க, அதற்கு அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் (குளிக்கும் போது) தாம் தொழுகைக்குச் செய்வது போல ஒளூ செய்து கொண்டுபின்னர்  தமது  தலையில்  மும்முறைத் தண்ணீரை ஊற்றிக் கொள்வார்கள். நாங்களோ (தலையில்) பின்னர் இருப்பதன் காரணத்தால் 5 முறை தண்ணீரைத் தலைகளில் ஊற்றிக் கொள்வோம்.  (அபூதாவூத் )

5.  உரோமத்தின் வேர்ப்பாகங்கள் நனைத்து விட்டதாக உணர்ந்ததன் பின்னரே இரு கைகள் நிறைய தண்ணீரை அள்ளி ஊற்றுதல் :
அன்னை ஆயிஷா (ரழி)  அறிவித்துள்ளார்கள் :  நபி(ஸல்)  அவர்கள் ஜனாபத்  ஏற்பட்டு  குளித்தால்  ஆரம்பமாக   தமது  இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.  பிறகு  தமது  வலக்கையால்  தண்ணீரை  அள்ளி  இடக்கையில் ஊற்றி தமது மர்மஸ்லத்தைக் கழுவிக்கொண்டு, பிறகு தமது தொழுகைக்கு ஒளூ செய்வது போல ஒளூ செய்து கொள்வார்கள்.

பின்னர் தண்ணீரை அள்ளியதோடு தமது விரல்களை உரோமங்களின் வேர்ப் பாகங்களில் புகுத்துவார்கள் Šஅவை அனைத்தையும் தாம் நனைத்துவிட்டதாக  நம்பிக்கை  ஏற்பட்டவுடன்,  தமது  இரு  கைகள்  நிறைய  மும்முறை  தண்ணீரை  அள்ளி  தமது  தலையில் ஊற்றுவார்கள். பின்னர் தமது அனைத்து மேனியிலும் தண்ணீதை ஊற்றிவிட்டு தமது கால்களைக் கழுவிக் கொள்வார்கள். (முஸ்லிம்)

நனையாமல் விடுபட்டாலும் குளிப்பு நிறைவேறிவிடும் என்பதற்கு ஆதாரமாக அவர்கள் கொடுத்துள்ள ஹதீஸ்கள் :
1.     “” நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் சிலர் குளிப்பது பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள் . அப்போது சிலர் “”என் தலையை இவ்வாறெல்லாம் நான் கழுகுவேன் ” என்று கூறிக்கொண்டிருந்தார்கள். (அதைக்கேட்ட) நபி (ஸல்) அவர்கள் “” நிச்சயமாக நானோ மூன்று தடவை கைகளால் தண்ணீரைத் தலையில் ஊற்றிக்கொள்வேன் ” என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் : ஜூபைர் இப்ன முத்யிம் (ரழி) நூல் : முஸ்லிம்

2. “”ஸகீப்” என்ற கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களிடம் எங்கள் பிரதேசம் குளிர் பிரதேசமாக உள்ளது. நாங்கள் எவ்வாறு குளிப்பது? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “”நானே என் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கொள்கிறேன்” என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) நூல் : முஸ்லிம்

3.  நபி (ஸல்) அவர்கள் (ஜனாபத் எனும்) கடமையான குளிப்பு குளிக்கும்போது தன் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுவார்கள் ” என்று ஜாபிர் (ரழி) அவர்கள் கூறியபோது ஹஸன் இப்னு  முஹமம்த் அவர்கள் “”என் தலைமுடி அதிகமாக உள்ளதே ! (நானும் மூன்று முறை ஊற்றிக்  கொண்டால்போதுமா?)  என்று  கேட்டார்  அதற்கு ஜாபிர் (ரழி) அவர்கள் “”என் சகோதரா மகனே !” உனது   தலை முடியைவிட நபி (ஸல்) அவர்களின் தலைமுடி மிகவும்  அதிகமானதாகவே  இருந்தது.  ( அப்படி  இருந்தது  அவர்கள்  மூன்று  முறை  தலையில்  தண்ணீர்  ஊற்றிக் கொள்தோடு சரி) என்று பதில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) நூல் : முஸ்லிம்

4. அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) அவர்கள், பெண்கள் குளிக்கும் போது தங்கள் தலை (முடி)யை அவிழ்த்து விடும்படி  வற்புறுத்து வதை அன்னை ஆயிஷா (ரழி)  அவர்கள்  செவியுற்றனர்.  இப்னு அம்ரின்  தீர்ப்பு  மிக   அதிசயமாகவல்லவோ  இருக்கின்றது,  பெண்கள்  குளிக்கும்  போது   தங்கள் தலையை அவிழ்த்து விட வேண்டும் என கட்டளையிடுகிறாரா? அவர்களை மொட்டை அடித்துக் கொள்ளும்படி கட்டளையிடக் கூடாதா? நானும் அல்லாஹ்வின் தூதரும் ஒரு பாத்திரத்தில் குளித்திருக்கிறோம். அப்போது தலையில் மூன்றுமுறை ஊற்றிக் கொள்வதை விட அதிகமாக்கியதில்லை” என்று அன்னை ஆயிஷா (ரழி) குறிப்பிட்டார்கள். நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்.

நானும், நபி (ஸல்) அவர்களும் ஒரு “”ஸாஹ்” என்னும் அளவுள்ள பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது என் கையால் மூன்று முறை தரையில் ஊற்றிக் கொள்வேன். மேலும் என் தலையை நான் அவிழ்த்து விடுவதுமில்லை என்று அன்னை ஆயிஷா (ரழி) குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : உபைதுல்லலாஹ் (ரழி),      நூல் : நஸயீ.

இந்த இரண்டு வகையான ஹதீஸ்களுக்கும் முரணில்லாமல் நாம் எடுக்கும் முடிவு இருக்க வேண்டும் என்று அவர்களே கூறியுள்ளார்கள். ஆனால் அவர்களே  ஒப்புக்கொண்டுள்ளது  போல்  அவர்களின் கூற்று அதாவது சில பகுதிகள் விடுபட்டாலும் பரவாயில்லை குளிப்பு நிறைவேறி விடும் என்ற அவர்களின் கூற்று முன்னைய ஹதீஸ்களுக்கு முரண்படாமல் இருக்கிறதா? என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள் .
முதல் ஹதீஸின்,

முடியின் அடிப்பாகத்தில் தண்ணீர் ஊடுருவிச் சென்று அது நனைத்து விட்டதென்று உறுதி தமக்கு எற்பட்டவுடன்….
இரண்டாம் ஹதீஸின்,
தோல் பாகம் வரைத் தண்ணீர் செலுத்தப்பட்டு விட்டதாகதாம் உணரும் வரை …..
மூன்றாம் ஹதீஸின்,
தலை முடியின் வேர்ப் பாகங்களுக்கு தண்ணீர் சென்றடையும் வரை தனது தலையைப் பலமாக நன்றாக தேய்த்து……… பிறகு தலையில் தண்ணீர் ஊற்றி அது உரோமங்களின் வேர்ப் பாகங்களை அடையும் வரைத் தேய்த்து…………
நான்காம் ஹதீஸின்,
நாங்களோ  (தலையில்)  பின்னல்  இருப்பதன்  காரணத்தால்  ஐந்து  முறைத்  தண்ணீரைத்  தலையில்  ஊற்றிக்  கொள்வோம்.
ஐந்தாம் ஹதீஸின்,
தமது விரல்களை உரோமங்களின் வேர்ப்பாகங்களில் புகுத்துவார்கள். அவை அனைத்தையும் தாம் நனைத்து விட்டதாக நம்பிக்கை ஏற்பட்டவுடன் ……. ஆகிய கருத்துக்களுக்கு முற்றிலும் முரண்படுகிறதே இதைச் சிந்திக்க  வேண்டாமா? அப்படியானால் அவர்களின் முடிவு சரியாக இருக்க முடியுமா ?
இப்போது அந்த இரண்டு வகையான ஹதீஸ்களுக்குமிடையே ஒன்றுக் கொன்று முரண் இல்லாமல் நாம் செல்லுகி¼<ன் சரிதானா என்று பாருங்கள்.
சில பகுதிகன் நனையாமல் விடுபட்டாலும் பரவாயில்லை, குளிப்பு நிறைவேறிவிடும் என்பதற்கு ஆதாரமாக அவர்கள் கொடுத்திருக்கும்
ஐந்து  ஹதீஸ்களையும்  ஆழ்ந்து  நோக்குபவர்கள்,  வீண்  சந்தேகங்களுக்கு  (வஸ்வாஸ்)  இடங்  கொடுக்கக்  கூடாது, என்ற கருத்தில் அமைந்துள்ள ஹதீஸ்களே  அல்லாமல்  சில  பகுதிகள்  நனையாவிட்டாலும் பரவாயில்லை என்ற கருத்தில் அமைந்துள்ள  ஹதீஸ்கள்  இல்லை.  என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

மேலும், “”சிலர் சிரமப்பட்டு பெருங்கஷ்டம் எடுத்துக் கழுகுவதாகக் குறிப்பிட்டதைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் “” நானோ அவ்வாறெல்லாம் செய்வதில்லை மூன்று முறை தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்கிறேன்.” என்று கூறியதை அவர்கள் தங்கள் ஏட்டின் பிப்ரவரி 88 இதழின் 87-ம் பக்கம் குறிப்பிட்டிருப்பதும் நமது கருத்தையே ஊர்ஜிதம் செய்கின்றது. அவர்களின்  குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களிலேயே தலைக்கு மட்டும் விஷேச முக்கியத்துவம்  கொடுத்து  மூன்று முறை  தண்ணீர்  ஊற்றப்படுவது  தெளிவாகக்  குறிப்பிடப்படுவதிலிருந்தே  என்ன  புரிந்து கொள்ள முடிகின்றது? நனைந்தாலும் பரவாயில்லை, நனையாவிட்டாலும் பரவாயில்லை என்றிருக்குமானால், மேனி முழுவதும் தலை உட்பட தண்ணீர் ஊற்றிக்கொள்வார்கள் என்று வந்திருக்குமே, தலையில் அடர்த்தியாக முடி  இருப்பதால்  ஒரு முறை  மட்டும்  ஊற்றுவதால்  அடிப்பாகம்  முழுமையாக நனைய வாய்ப்பு குறைவு என்பதால் தானே மூன்று முறை தலையில் ஊற்றிக்கொள்ள வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தலையில் 3 முறை ஊற்றிக் கொண்டால் போதும்,  தேய்த்துக் குளிக்கவும் செய்யலாம்; தேய்க்காமலும் விடலாம் என்று சொல்வதற்காவது இடம்பாடு இருக்கிறது. ஆனால் முழுமையாக ஒரு முடியளவு கூடவிடுபடாமல் குளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற சட்டத்தை இந்த ஹதீஸ்களிலிருந்து எப்படி எடுத்தார்கள் என்றே நாம் கேட்கிறோம், அப்படி சட்டம் எடுப்பது முன்னைய ஹதீஸ்கள் அனைத்திற்கும் முரண்படுவதை அவர்கள் கவனிக்கவில்லையா?

இன்னொரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறோம். தெளிவாகப் பிரிந்துவிடும்.
சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யவேண்டும். அப்படி சுத்தம் செய்யாதவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்கிறோம். அதேசமயம் சிலர் வீண் சந்தேகம் (வஸ்வாஸ்)காரணமாக சுத்தம் செய்த பின்பும் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பார்கள் அந்த சந்தேகத்தின் காரணமான நபி (ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக டேலா பிடிக்கிறோம் என்று சொல்லி அநாகரீகமாக நடத்துக் கொள்வதையும் பார்க்கிறோம், இந்த வீண் சந்தேகத்தைப்  போக்கும்  விதமாக,  உங்கள்  கீழ்  ஆடையில்  சிறிது நீரை ஊற்றிக்கொள்ளுங்கள்.சிறுநீர் தானே என்று சந்தேகம் வரும்போது அது நாம் ஊற்றிய நீர் என்று மனதைத் தேற்றிக் கொள்ள சொல்லப்பட்டதாகும் இது.

சிறு நீரைச் சுத்தப்படுத்துவதை வலியுறுத்தி வரும் ஹதீஸ் :
( 1 ) நபி (ஸல்) அவர்கள் கப்ரில் வேதனை செய்யப்படும் இரு நபர்களின் விபரங்களை சஹாபாக்களுக்கு விளக்கி கூறுகையில் இவ்விருவரில் ஒருவர் தமது சிறு நீரை முறையாக சுத்தம் செய்து கொள்ளா திருத்தவர் என்று கூறியுள்ளார்கள். (ஹதீஸின் சுருக்கம்) இப்னு அப்பாஸ் (ரழி) முஸ்லிம்.

வஸ்வாஸ் சம்பந்தப்பட்ட ஹதீஸ்
1. நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டு ஒளூ செய்தால் (தமது ஆடையில்) தண்ணீர் தெளித்துக்கொள்வார்கள்.
ஹக்கமுபின் ஸுஃப்யான் (ரழி)  அபூதாவூத்
2.  நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தமது மறைவு பாகப் பகுதியில் தண்ணீரைத் தெளித்துக் கொண்டார்கள்.
இப்னு ஹக்கம் (ரழி) அபூதாவூத்

3.  ஒரு முறை அலி (ரழி) அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்பதற்கு வெட்கப்படுகிறறேன். ஆகவே நீங்கள் எனக்காக நபி (ஸல்) அவர்களிடம் பின்வரும் வி­யமாக கேட்டு வாருங்கள் என்றார்கள். அதாவது “” ஒருவர் தாம் தமது மனைவியிடம் (சாதாரயமாக) அணுகி நின்று கொண்டிருக்கும் சமயம் தமக்கு “” மதீ” வெளிவந்து விடுகிறது. அதற்காக அவர் என்ன செய்ய வேண்டும்? ” என்பதாகும்.

மிக்தாத் (ரழி) கூறிகிறார்கள் : நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “” உங்களில் எவருக்கும் அவ்வாறு ஏற்பட்டால் தமதுமர்ம  உறுப்பன்  மேல்  (உள்ள ஆடையின் மீது) தண்ணீரைத் தெளித்துக் கொண்டு தாம் தொழுகைக்கு ஒளூ செய்து கொள்வாராக! ” என்று கூறினார்கள். மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) அபூதாவூத்

இந்த  இரண்டிற்கும்  முரண்  இல்லாமல்  நாங்கள்  முடிவு  செய்கிறோம். என்று சொல்லி சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்யவும் செய்யலாம்
செய்யாமலும் விடலாம். என்று கூறுவது அறிவுடைமையாகும்? என்று சீர்தூக்கிப் பாருங்கள்.

ஆக சிந்தனையாளர்கள், அந்த ஏட்டின் கூற்றில் சாறு இல்லை. சக்கை தான் மிஞ்சுகின்றது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
அந்த  ஏடு  தன் ஏப்ரல்  இதழின்  4 ம், 5ம்  பக்கங்களில்  ஹாபிழ்  இப்னு  ஹஜர் (ரஹ்)  அவர்கள்  சம்பந்தப்பட்ட  ஹதீஸ்  ஸஹீஹானது என்று கூறவில்லை என்று நிரூபிக்க பெரும் முயற்சிகள் எடுத்து எழுதி விட்டு அடுத்து 5ம், 6ம் பக்கங்களிலேயே “” ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தல்கீஸ் என்ற நூலில்  பிரச்சினைக்குரிய  ஹதீஸை சரியானது  என்று  கூறுகிறார்கள்  என்பது  உண்மையே  என்று  ஒப்புக்கொள்ளவும் செய்கின்றது. 5ம் பக்கத்தில் காணப்படும்  அவர்களின்  முரண்பட்ட  கூற்றுக்களே  அவர்களை  அடையாளம்  காட்டப்   போதுமானதாக இருக்கிறது. பிரச்சனைக்குரிய ஹதீஸை ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) பலவீனமானது என்று தனது “”தஹ்தீப் ”   என்ற  நூலில் குறிப்பிடுகிறார்கள் என்று  அந்த ஏடு தவறாக தனது டிசம்பர் ’87 இதழின் 63-ம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததையே நாம் மறுத்திருக்கிறோம். இப்போது விஷயம் எப்படியெல்லாமோ திசை திருப்பப்படுகிறது. சத்தியத்தைஏற்கும் மனப்பான்மையை, நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக. நான் எனும் அகந்தை (அனானியத்)யை விட்டும்
காப்பானாக.

———————————————————————————————————————————

நாஸ்திக  நண்பர்களே ! நாசத்தைத் தவிர்ப்பீர் !!
K.M.H அபூ அப்துல்லாஹ்
ஜனவரி  88  இதழில்   ஒவ்வொரு  பொருளின்  படைப்புக்குச் காரணகர்த்தா ஒருவன் இருப்பது உண்மையானால், அந்தக் காரணகர்த்தாவின் படைப்புக்கு யார்  காரணம்? என்ற சிந்தனையாளர்களையும் திணரச் செய்யும் நாஸ்திகர்களின் கேள்விக்குரிய விளக்கத்தைப் பார்த்தோம். அடிப்படைஉண்மைக்கும், அந்த அடிப்படை உண்மையை வைத்துப் பெறப்படும் உண்மைகளுக்கும் உள்ள பெருத்த வேறுபாட்டையும் கண்டோம். உலகக் காரியங்களில்  அனைத்துத்  துறைகளிலும்  காணப்படும் இந்த பெருத்த வேறுபாட்டை ஒப்புக் கொள்ளும் நாஸ்திக நண்பர்கள் இறைவன் வி­யத்தில் மட்டும் அந்த   மாபெரும்   உண்மையை  ஒப்புக் கொள்ளாமல்  விதண்டாவாதம்  செய்வது,  அவர்கள்  சாத்தானின்  வலையில் சிக்குண்டிருக்கிறார்கள். என்பதையே படம்  பிடித்துக் காட்டுகிறது என்பதைத் தெளிவாகப் பார்த்தோம்.

இந்த  இதழில்  நாஸ்திகர்கள் சொல்லிக் கொள்ளும் பகுத்தறிவு தான் உண்மையில் பகுத்தறிவா? இந்தப் பகுத்தறிவு அவசியமா? என்பதை விரிவாக அலசுவோம்.

அவர்கள் தங்களின்  புலன்களைக்  கொண்டும்  பெறப்படும்  அறிவையே  பகுத்தறிவு என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக புலன்களின்  எல்லைக்குள்  கட்டுப்படாத  காரியங்களை  எல்லாம்  பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை, மூடநம்பிக்கை என்ற தப்பான முடிவுக்கு அவசரப்பட்டு வந்து விடுகிறார்கள்.  அவர்களின்  புலன்களைக் கொண்டு  அறியப்படும் காரியங்களை முழுமையான  பகுத்தறிவைச் சார்ந்தவை அல்ல.

பகுத்தறிவின்  ஒரு  பகுதி  என்று  வேண்டுமானால்    சொல்லிக் கொள்ளலாம் என்பதை அவர்கள் உணரவேண்டும். தமிழ்பேசும்  குடும்பத்தில்வளரும்  ஒரு  குழந்தை “” தண்ணீர்” என்று சொல்லும்  அதே  பொருளை ஹிந்தி பேசும் குடும்பத்திலுள்ள குழந்தை “”பானி” என்கிறது. ஆங்கிலம் பேசும் குடும்பத்திலுள்ள  குழந்தை  “”வாட்டர் ”  என்கிறது.  ஆக   ஒரே  பொருள்  மொழிக்கு  மொழி  வெவ்வேறு உச்சரிப்பால் விளங்கப்படுகின்றது. இதில்  என்ன  பகுத் தறிவு  இருக்கிறது  என்பதை  நாஸ்திகர்கள்  சிந்திக்க வேண்டும்.

நடைமுறையில் இருப்பதைக் காதால் கேட்டு உச்சரிப்பதைத் தவிர இங்கு பகுத்தறிவுக்கு வேலையை இல்லை. ஆறறிவு மனிதன் பேசுவது போல் ஐந்தறிவு  (பகுத்தறிவு இல்லாத)  கிளி,  மை²  போன்ற பறவைகள்  பயிற்றுவித்தால்  அழகாகப்  பேசுகின்றன. பகுத்தறிவில்லாத நாய் குரங்கு போன்ற மிருகங்கள்  பயிற்சியின்  மூலம்  மனிதன் செய்யும் காரியங்களை மனிதனிடும் கட்டளை கொண்டு விளங்கிச் செயல்படுத்துவகைப் பார்க்கிறோம். ஐந்தறிவைக்  கொண்ட  குரங்கு  இனத்தைச்  சார்ந்த  ஒருவகை  குரங்கு  பயிற்சியின் மூலம் அழகாக கார் ஓட்டிச்செல்வதை அறிகிறோம். இவை எல்லாம்நமக்கு எதை ஊர்ஜிதம் செய்கின்றன. இப்படிப்பட்ட காரியங்களுக்கு பகுத்தறிவு அவசியமே இல்லை என்பதையே நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. ஆக  மனிதன்  உலகில்  பிறந்து, வளர்ந்து பேசுவதிலிருந்து, அவன் பெறும் கல்விகளிலிருந்து, அவன் செயல்படுத்தும் உலகக் காரியங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும் போது அவை முழுமையான பகுத்தறிவு அடிப்படையிலானவை என்று சொல்லுவதை விட,  அவனது ஐம்புலன்களைக் கொண்டு அவன் அடைந்து கொண்ட ஓர் வகை அறிவு என்று மட்டுமே சொல்ல முடியும். ஏன் என்றால் பகுத்தறிவைக் கொண்டு செயல்படுத்தும் காரியங்களை  ஐந்தறிவு  பிராணிகள்  ஒரு போதும்  நிறை வேற்ற முடியாது.  நாஸ்திக  நண்பர்கள் பெருஞ் செயல்களாக, பகுத்தறிவு செயல்களாக நம்பும்காரியங்களை ஐந்தறிவு மிருகங்கள் பயிற்சிகள் கொண்டு செய்கின்றன.

இன்னும்  தெளிவாகச்  சொல்வதாக  இருந்தால்   மனிதனின்  இந்த   உலக   வாழ்க்கைக்கு   பகுத்தறிவு  அவசியமே இல்லை என்று ஆணித்தாமாகச்சொல்லி  விடலாம். பகுத்தறிவோடு படைக்கப்பட்டுள்ள மனித சமுதாயம், பகுத்தறிவில்லாத ஐந்தறிவு கொண்ட ஒரு சமுதாயமாகப் படைக்கப்பட்டிருந்தால் மனிதனின் இந்த உலக வாழ்க்கை, இப்போதிருப்பதை விட மிக சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நாஸ்திக நண்பர்கள் சொல்வது  போல்,  இறைவன்  இல்லை,  மறுமை  இல்லை  என்றால் மனிதன் பிறந்து வளர்ந்து விருப்பம் போல் விரும்பியதை எல்லாம் சாப்பிட்டு, விரும்பியதை எல்லாம் அனுபவித்து, விரும்பியவர்களோடு எல்லாம்கல்விகள் செய்து வாழ்க்கையில்  அனைத்தையும்அனுபவித்து மடிய வேண்டியதுதான்,  இவற்றையே  ஐந்தறிவு  பிராணகள்  செய்து  கொண்டிருக்கின்றன. நாம் மேலே குறிப்பிட்டகாரியங்களை நிறைவேற்றுவதற்கு அந்தப் பிராணிகளுக்கு பகுத்தறிவு இல்லாதது ஒரு குறையாகவே இல்லை. மாறாக அது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது.

மனிதனின்  இவ்வுலக வாழ்க்கை செழிப்பாக அமைவதற்காக கடவுள் இல்லை, மரணத்திற்குப் பின் ஒரு  வாழ்க்கை இல்லை என்ற பொய்த் தத்துவங்களை எடுத்துச் சொல்லுவதை நாஸ்திகர்கள் விட்டு மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கை இன்பமயமாக அமைய பகுத்தறிவு அவசியம்  இல்லை. என்ற கோ­த்தை  அவர்கள்  கிளப்புவார்களானால்  அது  நிச்சயமாக  நல்ல பலனைத்தரும் என்பது நமது உறுதியான நம்பிக்கை. கடவுள் இல்லை என்ற பொய் தத்துவத்தை, கம்யூனிஸக் கொள்கையை கடந்த சுமார் 75 ஆண்டுகளாக செயல்படுத்திப் பார்த்துவிட்டார்கள்.  முழுக்க  முழுக்க அவர்களின் ஆதிக்கத்தில் வந்துள்ள  ரஷ்யா,  சீனா போன்ற  நாடுகளில்  கூட  ஏற்றத்தாழ்வற்ற  சமத்துவ வாழ்க்கையை, அனைவரும் அனைத்தையும் அடைந்துகொள்ளும் வாய்ப்பை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. அங்கு அதிகாரிகள் அனுவிப்பதை மக்கள் அனுபவிக்க முடிவதில்லை. கம்யூனிஸக் கொள்கை  மக்களிடமிருந்து  மறைய  ஆரம்பித்து விட்டது. என்பதற்கு ரஷ்யாவும், சீனுவும் நல்ல எடுத்துக் காட்டுகளாகும். எனவே நாஸ்திக சகோதரர்கள் அவர்களின் பழைய “” கடவுள் இல்லை ”  என்ற  பொய்த் தத்துவத்தை விட்டு, “பகுத்தறிவு மனிதனுக்கு அவசியமில்லை ” என்ற புதிய தத்துவத்தை முழக்க  ஆரம்பித்தால்,  அது  கம்யூனிச  தத்துவத்தை  விட அதிக பலன் கொடுக்கும் என்பதில்  சிறிதும் ஐயமில்லை. காரணம், உலகில் காணப்படும் போட்டி, பொ<மை,  ஏதேச்சதிகாரம்,  ஆதிக்க  வெறி,  பதுக்கல்  மிதமிஞ்சிய சொத்துக்களை  சேர்த்து  தனதாக்கிக்  கொள்ளுதல், வஞ்சகம்,  மோசடி, கொள்ளை,  களவு  இவை  அனைத்திற்கும்  மனிதனின்  பகுத்தறிவே? மூல காரணமாக இருக்கிறது. பகுத்தறிவில்லாத மிருகங்களிடம் இச்செயல்கள்காணப்படுகின்றனவா  என்று சிந்தித்துப் பாருங்கள். மிருகங்கள் பல தலை முறைகளுக்குத்  தேவையான சொத்துக்களை சேர்த்து வைப்பதில்லை. ஊரிலுள்ள  நிலங்களை  எல்லாம்  தனதாக்கிக்  கொள்ள  நினைப்பதில்லை. கரன்ஸி நோட்டுக்களை  சேர்த்து வைக்க நினைப்பதில்லை பல ஆண்டுகளுக்கல்ல, பல  நாட்களுக்குத் தேவையான உணவுகளையும் சேர்த்து வைப்பதில்லை. இவை எதுவுமே இல்லாத பகுத்தறிவற்ற பிராணிகள் தங்கள் உலக  வாழ்க்கையை  மிகவும்  சந்தோ­மாக  நடத்தி  கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட பகுத்தறிவற்ற மிருகங்களை அவற்றின் உலக வாழ்விற்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை,  அதே  போன்ற  சந்தோ­மான  மிருக  வாழ்க்கையை மனிதனும் ஏன் வாழக் கூடாது? என்றே நாஸ்திகர்களிடம் நாம் கேட்கிறோம்.

பகுத்தறிவின் (?) மூலம் மனிதன் விதவிமான பல நவீன கருவிகளை கண்டுபிடித்து, வசதியான உலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறான்அதை  எப்படி  விட்டு விடுவது  என்று  நாஸ்திகர்கள் கேட்டால், அதற்கு நமது பதிலாவது, நீங்கள் குறிப்பிடும் அந்த விஞ்ஞான வளர்ச்சியின் மூலமும், மறு உலக வாழ்க்ககை ஒரு புறம் இருக்கட்டும், இவ்வுலக வாழ்க்கைக்கும் மிரட்டல்களே அதிகப்பட்டுள்ளன. இவ்வுலகை அழித் தொழிக்கும் அணுகுண்டுகள்,  நாசகாரத்  கருவிகள்,  இன்னும் இவை போன்ற நவீன கண்டுபிடிப்புகள் மனிதனின் இவ்வுலக வாழ்க்கையின் சந்தோ­த்திற்கு  சவாலாக அமைந்துள்ளனவே  அல்லாமல்,  இவ்வுலக  வாழ்க்கையை  மகிழ்ச்சிக்  கடலில் மூழ்க் வைக்கக் கூடியவனாக இல்லை. நிமிடத்திற்கு நிமிடம்அஞ்சிக் கொண்டே வாழ வேண்டியுள்ளது. அந்த வகையிலும் பகுத்தறிவு (?) கொண்டு இவ்வுலக இன்ப வாழ்க்கைக்கு கேடுகள் ஏற்பட்டுள்ளனவே  அல்லாமல் நலன்கள் ஏற்படவில்லை என்பதே உண்மையாகும்.

ஐந்தறிவுள்ள  பிராணிகளால்  செய்ய  முடியாத  ஒன்றையோ,  அல்லது  பல  காரியங்களையோ சுட்டிக்காட்டி, இதை மனிதன் செய்கின்றானே என்று நாஸ்திகர்கள் எதிர் கேள்வி கேட்டால், அதற்கு நமது பதிலாவது மனிதனைப் போன்று முற்றிலும் உடலமைப்புள்ள ஒரு ஐந்தறிவு பிராணியைச் சுட்டிக் காட்டி அப்படிக் கூறினால் அது  நியாயமாகும். முற்றிலும் மனிதனைப் போன்ற உடலமைப்பு இல்லாததே அதற்கு பிரதான காரணம் என்று  நாம் கூறினால் அவர்கள் என்ன மறுப்பு வைத்திருக்கிறார்கள். இவ்வளவு  தெளிவாக  எடுத்துச் சொல்லி பகுத்தறிவற்ற மிருக வாழ்க்கை வாழத் தயாரா? என்று நாஸ்திகர்களிடம்  நாம்  கேட்டால் அவர்கள்  தயங்கவே  செய்வார்கள்.  ஆயினும் அவர்கள்  பகுத்தறிவு என்று நம்பிக் கொண்டிருப்பது உண்மையில்  பகுத்தறிவு  அல்ல  என்பதை  அவர்கள்  உணராதது  வேதனைக்குரிய  ஒரு  வி­யமே  அவர்கள்  இதை உணர்ந்து கொள்ள தெளிவான ஒரு உதாரணத்தைத் தருகிறோம்

“” கவுளைக் காட்டுங்கள் ஒப்புக் கொள்கிறோம் ” இது நாஸ்திகர்களின் தாரக மந்திரம். இதை பகுத்தறிவு வாதம் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்டாக்டர் கோவூர்  இந்த  அடிப்படையில்  சவால்  விட்டது  நாடறிந்த  வி­யம். ஆனால் ஆழ்ந்து சிந்திப்பவர்கள் மட்டுமே இது பகுத்தறிவுவாதம். அல்ல, பகுத்தறிவற்ற ஐந்தறிவுள்ள மிருக வாதம் என்பதைப் புரிவார்கள், எப்படி  என்பதை விளக்குகிறோம்.

ஒரு  ஆடு  நின்று  கொண்டிருக்கிறது  என்று  வைத்துக்  கொள்வோம்.  அந்த  ஆட்டை  நோக்கி  “”ஓ ஆடே  இதோ  பார் உனக்கு மிகவும் விஷேசமான ஆகாரம்  இங்கே  வைத்திருக்கிறேன்.  அதை  நீ சாப்பிடுவதால் உன் பசி தீரும், அது ஜீரணமாகி உனக்கு நல்ல  சக்தி  உண்டாகும். எனவே விரைந்து அதைச் சாப்பிட்டு பலன் அடைந்து கொள். இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவி விடாதே. என்று அந்த ஆட்டின் காதுகளில் விழுமாறு ஒருவன் உரக்கக் கூறுகிறான்  என்று  வைத்துக்  கொள்ளுங்கள்.  இந்த அழைப்பை ஏற்று அந்த ஆடு ஐந்தறிவுள்ள மிருகம் வருமா? என்று சிந்தத்துப் பாருங்கள். ஒருபோதும்  வராது மாறாக,  இவண்  போடும்  சப்தத்தைக் கேட்டு அந்த ஆடு விரண்டோடலாம். அதே சமயம் இவன் அந்த ஆகாரத்தின் சிறப்பைப் பற்றி எதுவும்  பேசாமல், அந்த ஆகாரத்தை அந்த ஆடு பார்க்கும் விதமாகத் தூக்கிப் பிடிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆடு அந்த  ஆகாரத்தைக் கண்டவுடன் அதை நோக்கி விரைந்து ஓடி வரும். இது பகுத்தறிவற்ற மிருகத்தின் நிலை. அதே சமயம் ஒரு மனிதன் இன்ய²ரு  மனிதரின் வீட்டுக்குப் போய், “” நாளை பகல் சாப்பாட்டிற்கு எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள். ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அவசியம்  தவறாது கலந்துகொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறான என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கு  அழைக்கப்பட்ட மனிதன் விருந்துக்குரிய  உணவு வகைகளையும்  கண்ணால்  பார்க்கவில்லை,  உணவுகள் தயாரிக்கப்படக் கூடிய எந்த ஏற்பாட்டையும் பார்க்கவில்லை. விருந்து சம்பந்தப்பட்டஎந்த அறிகுறியும் இல்லை.  இந்த  நிலையில்  வந்த மனிதனின் அழைப்பை மட்டும் காதுகளால் கேட்கிறான், அந்த மனிதனையும், அவனது தாரதரத்தையும் அறிந்து வைத்திக்கிறான். அடுத்த நாள் குறிப்பிட்டபடி அந்த நண்பரின் வீட்டுக்குப் போய் பார்க்கும் போது விதவிதமான ஆகாரவகைகளையும், குடிப்பு வகைகளையும் பார்க்கிறான். நன்றாக சாப்பிட்டு மகிழ்கிறான். நேற்று சொன்னதை இன்று கண்ணுரக் காண்கிறான். அநுபவிக்கிறான். ஐந்தறிவுள்ள மிருகத்தைப் பொருத்தமட்டிலும் இது சாத்தியமா? என்றால் ஒரு போதும் சாத்தியமில்லை. பகுத்தறிவுள்ள மனிதனைப் பொருத்த மட்டிலுமே இது சாத்தியமானகாரியமாகும்.

“”கடவுளைக் கண்டு, மறுமையைக் கண்டு செயல்படுகிறோம்” என்று சொல்லும் நாஸ்திகர்களின் வாதம் ஐந்தறிவு மிருகவாதமா? அல்லது பகுத்தறிவு வாதமா? என்பதை சிந்திப்பவர்கள் விளங்கி கொள்ள முடியும். பகுத்தறிவு இல்லாத நிலையில், இவ்வுலக மனித வாழ்க்கை சாத்தியமானதே. ஒரு வகையில் பகுத்தறிவு இருப்பதை விட இல்லாமல் இருப்பது, மிகவும்மகிழ்ச்சிகரமானதாகவே  இவ்வுலக  வாழ்க்கை அமையக் காரணமாக இருந்தும், மனிதனுக்கு ஏன் பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது? அந்தப் பகுத்தறிவின் சரியான பொருள் என்ன? இவற்றை அடுத்துப் பார்ப்போம்.
(இன்ஷா அல்லாஹ் வளரும்)
———————————————————————————————————————————

குர் ஆனை விளங்குவது யார்?  (தொடர் Š 6)
இப்னு  ஹத்தாது
ஜனவரி 88 இதழில், நபி (ஸல்)அவர்களை 23 வருட நபித்துவ காலத்திலேயே குர் ஆனின் “”முஹக்கமாத்” வசனங்கள் தத்துவ ரீதியாகவும் (Theoritic-ally)நடைமுறை  ரீதியாகவும்  (Practically)  தெள்ளத்  தெளிவாக  தெளிவுபடுத்தப்பட்டு  விட்டன.  முடிந்து போன  வி­யத்தில்  மீண்டும் தெளிவுபடுத்துகிறோம். என்று மனிதர்கள் புகுந்து தங்கள் மனித அபிப்பிராயங்களை மார்க்கத்தில்  நுழைந்து  பெருங்குற்றமாகும்.  அந்த அடிப்படையில்  தங்கள் அரபி ஞானத்தைக் கொண்டும், இலக்கண, இலக்கிய திறமைகளை கொண்டு மார்க்கத்தில் பெருமை  பேசக்கூடாது. மார்க்கத்தை உபதேசிக்கும் தகுதி தங்களுக்கு மட்டுமே உண்டு என்று மார்தட்டக் கூடாது. உண்மையில் அரபிமொழி, இலக்கண இலக்கிய ஞானம் இவை காரணமாக மார்க்கத்தில் தங்கள் சுயகருத்துக்களைப் புகுந்தும் பண்டிதர்களைவிட,  சுய கருத்துக்களைப் புகுந்தாமல், உள்ளதை உள்ளபடி சொல்லும் சாதாரணமக்களே, மார்க்கசேவைக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்பதைக் குர் ஆனின் 62.2 வசனம் தெளிவுபடுத்துகின்றது என்பதை விரிவாகப் பார்த்தோம்.

மார்க்க  வி­யத்தில்  அரபிமொழி  இலக்கண,  இலக்கிய  தேர்வு  பெற்ற  பண்டிதர்களுக்கு யூகம் செய்து ஒன்றைச் சொல்ல அனுமதி இல்லை என்று கருத்துக்கு சில சகோதரர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். குர் ஆனின் 4:83 வசனத்தில்,  தகுதி  பெற்றவர்கள் மார்க்க காரியங்களில் ஊகித்தறிந்து சொல்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறதே ! என்று அந்த வசனத்தில் வரும் “” இஸ்தின்பாத் ” என்ற வார்த்தையை வாதிடுகிறார்கள். குர் ஆன் முழுவதையும்ஆய்ந்து நோக்கியும், 4:83 Šல் உள்ள இந்த “”இஸ்தின்பாத் ”  என்ற ஒரு வார்த்தையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறு வாதிடுகிறார்கள்.குர்ஆனிலேயே  ஒரேயயாரு  இடத்தில்  மட்டுமே (4:83) இடம் பெற்றுள்ளது இந்த  “”இஸ்திக்பாத்”  மார்க்க  வி­யத்தில்  அல்ல,  பயம், பீதி, பாதுகாப்பு போன்ற  உலகக்  காரியங்கள்  சம்பந்தப்பட்ட  காரியங்களில்  மட்டுமே  தகுதியுடையவர்கள்  ஊகித்தறிந்து  சொல்லும்  அனுமதியை வழங்கியுள்ளது என்பதை அறியத்தவறி விடுகிறார்கள். அந்த வசனத்தை முழுமையாகத் தருகிறோம்.

நீங்கள் பார்த்து நடு நிலையான ஒரு முடிவுக்கு வர அன்புடன் வேண்டுகிறோம்.

“” மேலும் பீதியோ. பாதுகாப்பைப்பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமா²ல் உடனே  அவர்கள்  அதைப்  பரப்பி  விடுகிறார்கள். அவர்கள்  அதை அல்லாஹ்வின் தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ, தெரிவித்தால், அவர்களில் அதை ஊகித்து அறியக் கூடியவர்கள்,அதை  நன்கு விசாரித்தறிந்து ( தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள் ” (4 : 83 )

இந்த  வசனம்  உலகில்  ஏற்படும் நல்லவை அல்லது தீயவை சம்பந்தப்பட்ட வி­யத்தை ஊகிப்பது பற்றியே குறிக்கிறது. மறுமையில் நாம் அனுபவிக்கப்போகும் நன்மை தீமை பற்றிய வி­யத்தை ஊகித்து அறிவது அல்ல  என்பதைத் தெளிவாகவே சுட்டிக் காட்டுகின்றது. உலகில் ஏற்படும் நல்லவை அல்லது தீயவை சம்பந்தமடாக ஓர் அறிஞர் ஊகம் செய்து சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்று பகிரங்கமாக தெரிய வருவதற்கு முண்போ  யூகம்  செய்து  சொல்லப்பட்டாலும்,  பின்னால் அந்த யூகம் சரியானது. அல்லது தவறானது என்பதைத் திட்டவட்டமாக அனைவரும்  அறிந்து  கொள்கின்றனர். மரணத்திற்குப் பின் மறுமையில் அனுபவிக்கும் ஒன்றாக அது இல்லை. எனவே யூகம் செய்து சொன்னவர் எவ்வளவு  பெரிய மனிதராக  இருந்தாலும்,  அந்த  யூகம் தவறு என்று தெரிந்தவுடன்,  பெரிய  மனிதர்  சொன்னார்  என்பதற்காக,  அந்தத் தவறான யூகத்தைத் தொடர்ந்து செய்து யாரும் நஷ்டமடைய தயாராக மாட்டார்கள்.  மனிதர்களிடையே சிறப்பான பல அம்சங்களைப் பெற்ற நபி(ஸல்) அவர்களின் யூகமே, தவறு என்று தெரிந்தபின் நபித்தோழர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

நபி (ஸல்) அவர்கள் மதீ² சென்றடைந்தவுடன் அங்க அன்சாரிகள் செய்து கொண்டிருந்த அயல் மகரந்தச் சேர்க்கையை நபி (ஸல்) அவர்கள்  யூகம் செய்து வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அன்சாரிகளும் நபி (ஸல்) அவர்களின் யூகத்தை ஏற்று அந்தச் செயலை விட்டு விட்டார்கள், ஆனால் அந்த வருட அறுவடையிலேயே அந்த யூகம் தவறு என்பதை கண் கூடாகக் கண்டு கொண்டார்கள். தவறு என்று தெரிந்த பின்  நபி (ஸல்)  அவர்கள் யூகம் செய்து சொன்ன வி­யமாயிற்றே என்று தொடர்ந்து செய்ய அவர்கள் தயாராக இல்லை,  நபி (ஸல்) அவர்களிடம்  வந்து  முறையிடுகிறார்கள், நபி (ஸல்) அவர்களும் “” மார்க்க வி­யத்தில் நான் ஒன்றை உத்திரவிடும் போது, அதை ஏற்று நடங்கள். என் அபிப்பிராயத்தில்  நான் ஒன்றைச் சொல்வேனேயானால் நானும் ஒரு மனிதனே ! ” (முஸ்லிம்)
என்று கூறி, மனித யூகத்திற்கு, அது தன்னுடைய யூகமாக இருந்தாலும், மார்க்த்தில் இடமில்லை என்று தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இங்கு  மனித  யூகம்  நஷ்டத்தை தருகின்றது என்று கண்டு கொண்டவுடன் நபி (ஸல்) அவர்களின் யூகமே கைவிடப்படுகின்றது  என்பதை நாம் பார்க்கும் போது  வேறு  யாருடைய  யூகத்தையும்  அது  தவறு என்று தெரிந்து கொண்டு யாரும் எடுத்த நடக்கப் போவதில்லை  என்பது  நமக்குத் தெளிவாகவே  தெரிகின்றது.  எனவே  உலகக்காரியங்களில்  யார்  யூகம் செய்து சொன்னாலும்  அதைப்பற்றி  நமக்கு  அக்கரை  இல்லை.  அது மார்க்கமும் இல்லை, ஆனால் நமது கவலை எல்லாம் 4:83 குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டி மார்க்கக் காரியங்களில் யூகம் செய்து சொல்வது மக்களை எவ்வளவு தூரம் வழிகேட்டில் இட்டுச் செல்கின்றது. அப்படி பகிரங்கமான வழிகேட்டில் இருந்தாலும், அவற்றின் நஷ்டத்தை  இந்த  உலகில்  காணாது, நாளை மறுமையில்  காணும்  நிலை  இருப்பதால்  மக்கள்  அப்படிப்பட்ட  மூடக்  காரியங்களை பக்தியோடு காலங்காலமாகச் செய்து வரும் துர்பாக்கியநிலை உருவாக்கி விடுகின்றதே என்பதேயாகும்.

உதாரணமாக தலைவர்களின், பெரியார்களின் யூக அடிப்படையில் பெரும் பான்மையோ மிகவும் பக்தியோடு செய்து வரும்  பாத்திஹாக்கள் மவ்லிதுகள்  புரு(டா)தா,  ஸல்வாத்துநாரியா,  இறந்தவர்களின் பெயரால் நடைபெறும் கத்தம், அவுலியாக்களின் சமாதிகளில் நடைபெறும் சடங்குகள்,அவுலியாக்களின், நபிமார்களின் பொருட்டால் கேட்கப்படும் பிராத்தனைகள் தீக்லீது ( மத்ஹபுகள்), தரீக்காக்கள் (தஸவ்வுஃப்) இவை அனைத்தும் தெளிவாக குர்ஆனுக்கும்,  ஸஹீஹான  ஹதீதுகளுக்கும்  முற்றிலும்  முரணுக  இருக்கன்றன.

இப்ராஹீம்(அலை)  அவர்களின்  நேரடி  வாரிசுகளான,  தங்களை  முஸ்லிம்கள்  என்று  நம்பிக்  கொண்டிருந்த  குறை´களைக்  காபிர்கள் என்று அல்லாஹ் தீரீப்பு வழங்கி இருக்கிறதற்குரிய தெளிவான காரணத்தைக் குர்ஆன் 18:102 Šம் வசனத்திலிருந்து 18 :106 வசனம் வரை தெளிவுபடுத்துகின்றது. அந்தக் குறை´கள் இறந்து போன நபிமார்களையும், அவுலியாக்களையும் தங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் இறைவனை நெருங்கச் செய்யும் இரட்சகர்களாக, பாதுகாவலர்களாகக் கருதிக் கொண்டு அவர்களை சிலை வடிவிலும், கபுரு வடிவிலும் வைத்துச் சடங்குகள் செய்ததேயாகும். இவ்வளவு தெளிவாக இறைவனின் அடியார்களைப் பற்றி (நபிமார்கள், அவுலியாக்கள்)  திருமறை  கூறிக்  கொண்டிருக்க முஸ்லிம்கள்  இன்று இறந்தவர்களின்   பெயராலும்,  அவுலியாக்களின் பெயராலும்  சடங்குகள்  செய்து  கொண்டிருப்பதின்  காரணம். அவர்கள் இமாம்களாகபெரியவர்களாக,  தலைவர்களாக  எண்ணிக்கொண்டிருப்பவர்களின் மனித யூகங்களை மார்க்கமாக்கியதேயாகும். ஆக இவர்கள் செய்யும் இந்தச் செயல்கள் அனைத்தும் இவர்களை நரகில் கொண்டு சேர்க்கக்கூடியனவாக இருந்தும், அவற்றின் கெடுதிகளைக் கண் கூடாகக் காண முடியாமல் இருப்பதாலும், நாளை மறுமையிலேயே அவற்றின் கொடிய விளைவுகளை நரகில் காண வேண்டிய நிலை இருப்பதாலுமே இவற்றை பக்தியோடுகாலங்காலமாகச் செய்து வருகின்றனர்.

இந்த உலகில் இப்படிப்பட்ட அ²ச்சாரங்களை தங்கள் பெரியோர்கள், தலைவர்கள் இவர்களின் மீது குருட்டு நம்பிக்கை வைத்து, மிகவும் பக்தியோடு செய்து  வருகிறார்கள்.  நாளை  இவர்கள்  நரக  நெருப்பில்  போட்டு  பொசுக்கப்படும்போது,  நரக  வேதனையை  நேரடியாகப்  பார்க்கும்போது என்ன சொல்லி கதறுவார்கள் என்பதையும் அல்லாஹ் குர் ஆனில் தெளிவாக எடுத்துச் சொல்கிறான்.

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “”ஆ, கைசேதமே ! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே அல்லாஹ்
வுடைய தூதருக்கு வழிபட்டிருக்க வேண்டுமே !”

“” எங்கள்  ரப்பே!  நிச்சயமாக  நாங்கள்  எங்கள்  தலைவர்களுக்கும்  (ஸாதாத்துகளுக்கும்)  எங்கள்  பெரியவர்களுக்கும்  (அகாபிரீன்களுக்கும்) வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள் ”.

“” எங்கள் ரப்பே !  அவர்களுக்கு இருமடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெரும் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக; என்று கதறுவார்கள்(33:66,67,68)

இவ்வளவு தெளிவாக அல்லாஹ் குர் ஆனில் கூறி இருப்பதைப் புறக்கணித்துவிட்டுத் தங்களின் ஸாதாத்துக்கள், அகாபிரீன்கள் பெயரில் பெரும் நம்பிக்கை வைத்து, அவர்களின் மனித யூகங்களைக் கொண்டு உண்டாக்கப்பட்டுள்ள கத்தம், பாத்திஹா, மவ்லிது, புருதா, ஸலவாத்து நாரியா சமாதிச்  சடங்குகள், தர்கா சடங்குகள், தக்லீது, (மத்ஹபுகள்) தரீக்காக்கள் (கஸவ்வுஃப்) போன்ற காரியங்களில் மூழ்கி இருப்போர் சற்று நிதானமாகவே சிந்திப்பார்களாக. இங்கு இந்த உலகில் சிந்தித்து விளங்கி அவற்றைவிட்டுத் தவ்பா செய்யத்தவறினால், நாளை கண்டிப்பாக நரகில் போய் அல்லாஹ் சொல்வதுபோல்  கதறத்தான்  போகிறார்கள்.  நிச்சயமாக  எந்த  நபியும்,  எந்த  வலியும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு  ஹிதாயத் கொடுக்க  நாம்  துஆ  செய்கிறோம்.   இந்த விஷயங்கள் கசப்பாக  இருந்தாலும் எடுத்துச்சொல்வது, அவர்களின் ஹிதாயத்திற்காக  துஆ செய்வது எங்கள் மீது கடமையாக இருக்கிறது.

4:83 வசனத்தின்படி மார்க்க பண்டிதர்கள் மார்க்க வி­யங்களில் யூகம் செய்து அறிவித்தவை இந்தச் சமுதாயத்தை எங்கு  கொண்டு போய்  நிறுத்தி இருக்கிறது. என்பதைச் சற்று நிதானமாகவே சிந்தியுங்கள். மார்க்க வி­யங்களில் எந்த இமாமுக்கும், எந்த அல்லாமாவுக்கும் யூகம் செய்ய அனுமதி இல்லை என்பதை தெளிவாக உணருங்கள்,  தக்லீதையும், தஸவ்வுஃபையும்  விட்டு  தெளபா  செய்து,  அவை  இரண்டைக்  கொண்டும் மார்க்கத்தில்நுழைக்கப்பட்டுள்ள எல்லா சடங்கு, சம்பிரதாயங்களையும் விட்டு விடுபடுங்கள். அடுத்து முத்தஷாபிஹாத் வசனங்களைப்பற்றிப் பார்ப்போம்.
(இன்ஷா அல்லாஹ் வளரும்)
———————————————————————————————————————————–

இஸ்லாமிய சட்டங்களை உலகம்  உணர ஆரம்பித்து விட்டது.
. முஹம்மது அலி , திருச்சி
அல்லாஹுவின்  படைப்புகளிலேயே  மேலான  படைப்பான மனிதனிடம் பழிக்குப்பழி வாங்கும் குணம் மண்டிக்கிடக்கிறது. ஒருவனை ஒருவன்  திட்டிவிடுகிறான் ; அடிக்கிறான்; உதைக்கிறான்; காயப்படுத்தி விடுகிறான் ; மானபங்கப்படுத்திவிடுகிறான் பாதிக்கப்பட்டவன் திருப்பித் திட்டவோ, அடிக்கவோ, உதைக்கவோ, காயப்படுத்தவோ, மானபங்கப்படுத்தவோ நினைக்ககிறான். இது மனிதனுக்குள்ள இயற்கை சுபாவம் குணம்.

இவ்விதம்  பழிக்குப்பழி  வாங்காதவனை,  சமுதாயமும்  கோழையாக  கையாலாகாதவனாக கருதுகிறது. அநீதம் இழைக்கப்பட்டவன் வீனனாக இருந்தால் நிலையே வேறு அவன் தனது சுயமரியாதை அவமதிக்கப்பட்டதாக வருந்துகிறான். எனவே ” பழிக்குப்பழி’ வாங்குதல் மனிதனது இரத்தத்துடன் ஊறியுள்ள இயற்கை குணம் உலகப்பெருந் தவைலர்கள் கூட இதில் விதிவிலக்கல்ல. நேச நாடுகளின் தலைவர் ஒருவர், தங்களது விரோதி நாட்டின்  தலைவருடன் தனிமையில்  பேசிவிட்டார் என சிறுபிள்ளைத்தனமாக குரோதம் பாராட்டும் தலைவர்கள் இன்றும் உள்ளனர்.

பழிக்குப்  பழி  வாங்கும்  சுபாவத்தில்  இன்று  நமது நீதி மன்றங்களில்  பல “”மான நஷ்ட வழக்குகள் ”  நடந்து  வருவதையும்  காணுகிறோம். ஒருவன் தனது சுயமரியாதயைக் காத்துக்கொள்ள இவ்விதம் நடப்பதை இஸ்லாம் தவறு, கூடாது எனக் கூறவில்லை. ஆனால் வரம்பு மீறி விடக்கூடாது என்று மட்டும் எச்சரிக்கிறது.

பாதிக்கப்பட்டவன் சக்தியுள்ளவனாக, வலிமைமிக்கவனாக இருந்தால் அவன் பழிவாங்குவது வரம்பை மீறிச் செல்வதையும் காணலாம். அப்படிப்பட்டவன் பழிவாங்காமல் மன்னித்து மறந்துவிடுவது சாலச் சிறந்தது தான். ஆனால் அப்படி எத்தனை பேர் இருப்பர் என்பதே இங்கு எழும் கேள்வி ! மனிதனுக்குகே உரிய பழிவாங்கும் குணத்தைவிட்டு மன்னனித்து மறக்கும் குணம் எத்தனை பேருக்கு வரும் என்பது பெரும் கேள்விக்குறி ?

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக்காட்டு ! என் பைபிள் வாசகம் இன்று எத்தனைப்பேர் வாழ்வில் நடைபெறும்?! மறுகன்னத்தைக் காட்டுவது இருக்கட்டும். முதல் கன்னத்தில் பெற்றதையே மறப்பானா? மன்னிப்பானா? என்றால் ஆயிரத்தில் ஒருவர் ஏன் இலட்சத்தில், கோடியில்  ஒருவர் கூட  மிஞ்சார். அப்படியே  பாதிக்கப்பட்ட வலிமைமிக்கவர் மன்னித்து மறப்பாரானால் அவரை தியாகசீலர் தயாளர் என பெரும் பட்டங்களை தந்து சிறப்பிக்கிறது சமுதாயம் இச்சிறப்புக்களைப் பெற்றவர்கள் சரித்திரத்தில் எத்தனைப்பேர் என கணக்கிட்டால் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே மிஞ்சுவர்.

எனவே மனித இனத்தில் பாதிக்கப்பட்டவர் மன்னித்து மறப்பது வெகு சொற்பமே! பாதிப்பை மனதில் வைராக்கியமாகக் கொண்டு பழிக்குப் பழி வாங்கு பவர்களே அதிகம். அதுவே உடன் பிறந்த மனித குணம், இயற்கை சுபாவம். எனவே இவ்வியற்கை சுபாவத்தில் வாழும் எல்லா மனிதர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவே இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் மூல நூலாகிய குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது.

“”அவர்களுக்கு அ(வர்களுடைய வேதத்)தில் நாம் விதித்தோம் உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது பல்லுக்குப் பல் ஆகவும்,  காயங்களுக்கும்  நிச்சயமாகப்  பழிவாங்கப்படும் என்பதாகும் எனினும் எவரேனும் பழி வாங்குவதை (மன்னித்து)த் தாமாக விட்டுவிட்டால், அது அவரு(டைய தீவினை)க்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள் அல்லாஹ் அருளிய (வேதகட்டளைப்)படி தீர்ப்பளிக்வில்லையோ அவர்கள், நிச்சயமாக அக்கிரமக்காராகள் தாம் (அல்குர் ஆன் 5:45)

மீண்டும் ஒரு தடவை மேலே குறிப்பிட்ட இறை வசனத்தை படித்து பாருங்கள். பழிக்குப்பழி வாங்குவதை, அதனடிப்படையில் தண்டனை வழங்குவதைஅனுமதிக்கிறது  இஸ்லாம். அதே சமயம் “”எனினும் எவரேனும்  பழி வாங்குவதை (மன்னித்து)த் தானமாக விட்டுவிட்டால் அது அவரு(டைய தீவினை)க்குப் பரிகாரமாகிவிடும்” எனக்கூறவான் மறக்கவில்லை. எனவே இயற்கை மார்க்கமாகிய  இஸ்லாம் பழிக்குப்பழி வாங்கும் சாதாரண மனிதனாகவும், மன்னித்து  மறக்கும்  சிறது  மனிதனாகவும்  வாழ வழிகாட்டுகிறது.  இதில்  எது  தேவை என்பன தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நம்முடையதாக்குகிறது இஸ்லாம்.

இதனடிப்படையில்  இஸ்லாம்,  கொலை,  விபச்சாரம்,   களவு   போன்ற  பெரும்   சமுVயக்  குற்றங்களுக்கு  கொடிய  தண்டனைகளை  இரகசியமாக நிறைவேற்றாமல், பொதுமக்களும் பார்க்கும்படி நிறைவேற்ற ஆணையிடுகிறது.

ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இ(த்தீ)ச் செயலுக்கு தண்டனையாக Š அவர்களின் கைகளைத் துண்டித்துவிடுங்கள்.(அல்குர் ஆன் 5:38).

விபச்சாரம்  செய்த  பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். உண்மையாக நீங்கள் அல்லாஹுவையும்,  இறுதி  நாளையும் நம்பக்கூடியவர்களாக இருந்தால் அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றவதில் அவ்விருவர்களுடைய வி­யத்தில் உங்களுக்கு  இரக்கம்  ஏற்படக்கூடாது.  அவ்விருவர்களுக்கு(த் தண்டனையாக)  வேதனை கொடுக்கும் சமயத்தில், விசுவாசிகளில் ஒரு குழுவினர் (அதற்குச்)சாட்சியாக அங்கு இருக்கவும் (அல்குர் ஆன் 24:2)

பெரும் குற்றங்களுக்கு பகிரங்கமாக கொடியதண்டனை அளிப்பதன் மூலம், அதன் விபரீ தங்களைக் கண்டு பயந்து மக்கள் அக்குற்றங்களை செய்வதிலிருந்து தவிர்த்துக்கொள்வர். மனித சமுதாயத்தில் பெரும் குற்றங்களை குறையும் என்ற உண்மையை சொல்லாமல் சொல்கிறது. அல்குர் ஆன்.

எனவே தான் விஞ்ஞான யுகத்தில், நாகரீத்தின் உச்சியிலிருப்பதாக கூறிக்கொள்ளும் இன்றைய நிலையில், குர் ஆன் படி தண்டனை வழங்கும் இஸ்லாமிய   நாடுகளில்,   அவர்கள்  விஞ்ஞான  முன்னேற்றத்தில்  பின்  தங்கியவர்களாக  இருந்தாலும்  கொலை,  களவு.  விபச்சாரம்  போன்ற  குற்றங்களை  மிகக்  குறைவாக நிகழ்கின்றன.  நாகரீக  நவீன  நாடுகளான  மேலை  நாடுகளின்  குற்ற  விகிதாச்சாரத்தில்  இது  மிகமிகக்  குறைவு  என்பது கவனிக்கத்தக்கது.

சுமார் 10, 15 வருடங்களுக்கு முன் செளதியராபியாவில் அரச பரம்ரையைச் சார்ந்த ஒரு பெண்மணி செய்த விபச்சாரத்திற்காக பகிரங்மாக, பொதுமக்களறிய தண்டனை அளிக்கப்பட்டடாள். அது குர் ஆன் ஆணைப்படி கொடுக்கப்பட்ட தண்டனை. தங்களது அரச பரம்பரைக்கு முழுக்கு என நினைக்காமல், இறைச் சட்டத்தை மதித்த அந்நாட்டு தலைவர்கள் புகழத்தக்கவர்கள். ஆனால் மேலை நாட்டவர்கள் புகழவில்லை இகழ்ந்தனர். உலக அரசுகளாகிய பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் இது அநீதமான தண்டனை; காட்டுமிராண்டித்தனம் என கண்டித்தன. மனிதாபிமானமற்ற செயல் எனத் தூற்றினர்.  அமெரிக்கா  ஒருபடி  மேலே  போய்  இனி  மரண தண்டனை கொடுக்கக்கூடாது. மரண தண்டனை மனிதாபிமானமற்ற செயல் என மரணதண்டனையை குற்றவியலிலிருந்து நீக்கினர். பகரமாக ஆயுள்கால சிறை தண்டனை ;  கடின சிறை தண்டனை தர வேண்டுமென சட்டமியற்றினர்.  மனிதாபிமானத்தில்  மனித  உரிமைகளை  பாதுகாப்பதாக வாய் பந்தல் போட்டனர். தாங்களே கொடிய குற்றங்களுக்கு  கொடிய தண்டனைக் கொடுக்க அருகதையுள்ளவர்களாக படம் பிடித்துக் காட்டினர். முடிவு என்னவாயிற்று? குர்ஆனின் கூற்றாயிற்று !

எவர்கள் அல்லாஹ் அருளிய (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள், நிச்சயமாக அக்கிரமக்காரர்கள் தாம் (அல்குர் ஆன் 5:45)

மரண தண்டனை  போன்ற  கொடிய  தண்டனையை  எடுத்துவிட்டதால் அவர்கள் மனித சமுதாயத்திற்கு அக்கிரமம் செய்துவிட்டதை வெகு விரைவில் உணர்ந்தனர். கொலை  போன்ற  கடின  குற்றங்களுக்கு “”கொடிய தண்டனை இல்லை ; வெறும் சிறை வாழ்வுதான் என்ற மெத்தனம் மக்களிடையே உருவானது ; குற்றங்கள் அதிகமானது ; சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. நீதிமன்றங்கள் தரும் தண்டனைகள் மக்களை கொலைபோன்ற பெரும் குற்றங்கள் செய்வதிலிருந்து தடுக்க முடியவில்லை. முடிவு 1982Š ல் மீண்டும் மரண தண்டனை அவசியம் என சட்டமியற்றப்பட்டது. அது பொதுமக்களறியாமல் இரகசியமாக வி­ ஊசி ஏற்றி கொல்லும்படியான தண்டனையாகத் தரப்பட்டது அதில் ஏற்படும் விபரீதங்களை மக்கள் அறிய வாய்ப்பின்றிஇருந்தது.   எனவே  குற்றங்களுக்கான  தண்டனையின்  கொடுமை  தெரியவில்லை.  குற்றங்கள்  குறைந்தபாடில்லை.  தங்களை  அறியாமலேயே குர்ஆனின்  கூற்றுக்கு  தலைவணங்க  ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்காவில்  டெக்ஸாஸ்  மாகாணத்தின்  அட்டர்னி  ஜெனரல்  ஜிம்மேடக்ஸ் (மூஷ்துனிழிddலிமு) “” கொலை குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பபடும் மரண தண்டனையை படம்பிடித்து  தொலைகாட்சியில் (வீVயில்)  போட்டுக்  காட்டப்படவேண்டும்,   இதன் மூலம் கொடிய தண்டனையின் விபரீதத்தை மக்கள் கண்டு இக்குற்றங்களை தவிர்ப்பர்; கொடும் குற்றங்கள் குறையும், இரகசியமாக  மரண தண்டனை  தருவதால்  இக்குறிக்கோள் நிறைவேறவில்லை” எனக் கூறியுள்ளார். இதனை ஹன்ட்ஸ்வில் (க்ஷிற்ஐமிவிஸஷ்யியிe) என்ற நகரத்தின் அமெரிக்க செய்தி நிறுவனம் புய்Pவெளியிட்டுள்ளது.

1982 -ல் மீண்டும் மரண தண்டனையை கொண்டுவந்த அமெரிக்கர்கள், டெக்ஸாஸ் மாகாணத்தில் மட்டும் 28 மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளனர் Š இரகசியமாக  இத் தண்டனைகளை நிறைவற்றியதால்  நினைத்த  குறிக்கோளான “”  குற்றங்கள்  குறையும்”  என்பது  நிறைவேறவில்லை.எனவே மக்களுக்கு பகிரங்கமாக காட்ட ஆரம்பித்துவிட்டனர். (வீஜுeவீஷ்துeவிலிக்ஷூணூஐdஷ்ழி,ளூற்ஐe30,1987) இதனையே நமது அருள்மறை  குர் ஆன் சென்ற 1408வருடங்களாக  இயம்பிக்  கொண்டுள்ளது.

மேலை நாடுகளைப் போல மரண தண்டனையை கடுமையாக விமர்சித்த, இன்றும் விமர்ச்சிக்கும் சட்ட நிபுணர்கள் இந்தியாவிலும் உள்ளனர் என்பது வருந்தத் தக்க வி­யம்.மரண  தண்டனை  தேவைதானா?  என  கேட்குமளவுக்கு துணிந்துவிட்டனர். எனவே தான் உத்திர பிரதேசம், கான்பூர் போன்ற இடங்களில் சிறுவர்களின்  நரமாமிசம்  உணவு  விடுதிகளில்  பரிமாறப்பட்டுள்ளது.  ஆடு,  மாடுகளைப்   போல  இளம்  சிறார்களைக்  கொன்று,  வசிக்கும்  கொடிய
காட்டுமிராண்டித்  தனம்  நிகழ்ந்துள்ளது. இது உத்திர பிரதேசம் சட்டசபை வரை வந்துள்ளது. (தினமணி முதல் தேதி 27- 4-1988). இப்படிப்பட்ட கொடிய குற்றங்களுக்கு  குர் ஆன்  கூறும்  கடின தண்டனை செயலாற்றப்பட்டடால் இந்நிலை இருமா? இக்காட்டுமிராண்டி தர்பார் நடக்குமா? என அறிவும் ஆர்வமாக யோசிக்கக் கோருகிறோம்.

இங்கு மேலும் ஒரு கருத்தை வலியுற்றுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாம் வழங்கும் கடின தண்டனைகளை காட்டமாக விமர்சித்த இல்லை. நாட்டவர்கள் ; குர் ஆனிய சட்டம் அன்றைய மக்களுக்கு சரி அவர்கள் நாகரீகமற்றவர்கள்; கலாச்சாரமற்றவர்கள்; மனிதாபிமான அற்ற காட்டுமிராண்டிகள்.எனவே  அவர்களுக்கு  அது  ஏற்புடையது. இன்றைய நவீன, நாகரீக, விஞ்ஞான யுகத்தில் இக்கொடிய தண்டனை தேவையற்றது. மனிதாபிமானமற்றது.  இக்காலத்திற்கு  குர்ஆனிய  இச்சட்டம்  ஏற்புடையதன்று  என  கூறவும்  செய்தனர்.

நாகரீக, கலாச்சாரமற்ற 1400 வருடங்களுக்கு முந்திய மக்களை, இன்றைய நவீன, நாகரீக மக்களிடையே தான் அதிகமான இறங்கள் நிகழ்கிறது. ஓரிணப் புணர்ச்சியையும்,இயற்கை நியதிக்கு உறவுகளையும் சட்டமாக்கி வாழ்ந்து வருகின்றனர். அதனடிப்படயில் “”எய்ட்ஸ்”  போன்ற கொடிய நோய்கள் உருவாக்கியிருப்பதையும் காண்கிறோம். பல நவீன வழிகளில் இக்குற்றங்கள் நடக்கிறது. பதையும் மறந்து பேசினர். குற்ற விகிதாச்சாரத்தில் பார்த்தாலும் அன்று ஒரு நாளைக்கு ஒரு குற்றம் நடத்திருந்தால் இன்று ஒரு நிமிடத்திற்கு பற்பல குற்றங்கள் நடக்கின்றன.

குற்றங்களும் நவீனமாக, வெகுவேகமாக நடக்கிறது. நவீன நாகரீகம் வளர வளர குற்றங்களும் வளர்ந்துள்ளது. இதனை எவரும் மறுக்க முடியாது,   மேலை நாட்டவர்களின் சொந்த வாக்கு மூலமாகிய குற்றத் தொகை கணக்கெடுப்புகளும் இதனை நிரூபிக்கின்றன. எனவே  கொடிய  குற்றங்களை  குறைக்க  கடின தண்டனை அவசியம் என்ற இறைவாக்காக குர் ஆனின் கூற்றை அகிலத்தவர் அனைவரும்  ஏற்க ஆரம்பித்து விட்டனர். குர் ஆனின் சட்டங்கள் அன்றைக்கு ஏற்புடையதுபோல இன்றும்  ஏற்புடையது  என்பதை  விளங்கி  வருகின்றனர்.  மனிதனின் இயற்கை  குணங்களுக்கொப்ப  கூறும்  இஸ்லாமிய “சட்டங்கள்’ என்றென்றும் நிலையானது என்பதை உலகம் உணர ஆரம்பித்துவிட்டது.

அல்ஹம்துல்லில்லாஹ்! எல்லாத்துறைகளிலும் இவ்வுணர்வு வளர நாம் பிரார்த்திப்போமாக ! ஆமீன்!

ஒவ்வொரு சந்தாதாரரும், இன்னொரு சந்தாதாரரை அந்நஜாத்திற்கு அறிமுகப்படுத்தி தீன் பணிக்கு எங்களுக்கு உதவுங்கள்.
———————————————————————————————————————————-

மனித தீர்ப்பு காட்டும் வழி !
ஜெர்மனி சிறைச்சாலையில் நிகழ்த்திய பேட்டியில், பெரும்பான்மையான கைதிகள் தங்களுக்கு எப்படி கவனமாகத் திருடுவது; பிடிப்பட்டால் சாமர்த்தியமாக  எப்படி  தப்புவது;  என்பது  பற்றி அனுபவசாலியான பிற கைதிகளுடன் கற்றுக்கொள்வதற்குச் சிறந்த பள்ளிக்கூடமாக சிறைச்சாலை அமைகிறதுஎன்று கூறியுள்ளனர். (நன்றி : மலர்மதி ).
இப்போது   சொல்லுங்கள் :  அல்குர்ஆன் 5 : 38படி  இறைச்சட்டம் அமுலிலிருந்தால் இந்நிலை  உருவாகுமா? திருத்த வேண்டிய சிறைச்சாலை
திருட்டுக்கே பாடசாலையாகுமா?
———————————————————————————————————————————–

அன்புள்ள கீரனூரி அவர்களே ! அறிவு விளக்கம் தாரீர் !!
இன்ஜினியர் க்ஷி. அப்துஸ் ஸமது, சென்னைŠ16
சகோதரர் மவ்லவி கலீல் அஹ்மது கீரனூரி அவர்களுக்கு விளக்கம் கோரி எழுதும் கடிதம்:-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !  தாங்கள்  திருநெல்வேலியிலும் அதன் பின்னர் சென்னை அண்ணாசாலை மக்காப்பள்ளிவாசலில் நடந்த தமிழ்நாடு ஜமாத்துல் உலமா மகாசபைக் கூட்டத்திலும் ஆற்றிய சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. ஹதீதுகளின் கருத்துக்களைச் சாதாரண மக்கள் (மதரஸாக்களில் கற்ற மவ்லவிகள் அல்லாதார் ) விளங்கிக்கொள்ள முடியாது என்ற தங்களின் வாதத்தை நிலை நிறுத்தம் வகையில், மேலே கூறிய இரு இடங்களிலும் கீழ்க்கண்ட நிகழ்ச்சியை (?) எடுத்துக்கூறினீர்கள்.

அலி (ரழி) அவர்களை ஒரு சஹாபி அணுகி, அவரிடம் உள்ள பதினேழு ஒட்டகங்களை மூன்று பேர்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற கூறி அதற்குரிய  பங்கீட்டு  முறையை  அறிவித்துத்  தருமாறு வேண்டினார். அலி (ரழி) அவர்கள் ஒட்டகங்களைப் பெற வேண்டியவர்களில் முதலாமவர்க்கு பதினேழு ஒட்டகங்களில் நேர் பாதி கொடுக்குமாறும், இரண்டாமவர்க்கு மூன்றில் ஒன்றும், மூன்றாமவர்க்கு ஒன்பதில் ஒன்றும் கொடுக்குமாறும் தீர்ப்பு வழங்கினார்கள்.  பதினேழு  ஒட்டகங்களை  அலி (ரழி)  கூறிய முறையில் அவைகளை அறுக்காமல் பங்கிட முடியாது என்று கண்ட சஹாபி மீண்டும் அலி (ரழி)   அவர்களை  அணுகி,  தனது இயலாமையைக் கூறி ஒட்டகங்களைப் பகிர்ந்து அளிக்க ஒரு வழி நல்கியருளுமாறு வேண்டினார். அலி (ரழி) அவர்கள்  பைத்துல்  மாலில்   இருந்து   ஓர்   ஒட்டகையை   வரவழைத்துப்   பதினேழு  ஒட்டகங்களுடன்  அதனைச் சேர்த்து பதினெட்டாக்கி, ஒட்டகங்களைப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியவர்களில் முதலாமவர்க்கு பதினெட்டில் பாதி ஒன்பது ஒட்டகங்களும்,  இரண்டாமவர்க்கு  மூன்றில்  ஒன்றாகிய ஆறு  ஒட்டகங்களையும்,  மூன்றாமவர்க்கு  ஒன்பதில்  ஒன்றாகிய  இரண்டு  ஒட்டகைளையும்  வழங்கிவிட்டு மீதமாகிய ஒட்டகம் ஒன்றையும் பைத்துல் மாலில் திருப்பி சேர்த்துவிட்டார்கள்.

இக்கதையைக் கூறி தாங்கள்,  இந்தவிதமாக யுக்தியோடு சிந்தித்தால் மாத்திரமே ஹதீதுகளைப் புரிந்துகொள்ள முடியும் எனத் தீர்ப்பு வழங்கினீர்கள். ஹதீதுகளைப் புரிந்து கொள்ளுவதற்கும் தாங்கள் கூறிய இக்கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை எங்களால் உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை.  பதினேழு எந்த ஒரு இலக்கத்தாலும் வகுபட முடியாத ஒரு இலக்கம். அங்ஙனம் இருக்க பதினேழு ஒட்டகங்களை எந்த விகிதாச்சாரத்திலும் அறுக்காமல்  பங்கிட முடியாது  என்பது  கணிதம்  அறிந்த  எந்த சாதாரண மனிதனாலும் புரிந்து கொள்ளக் கூடிய உண்மை அங்ஙனம் இருக்க அலி (ரழி) அவர்கள் இவ்வதிம் ஒரு பங்கீட்டு முறையை கூறினார்கள் என்பதை நம்பமுடியவில்லை. ஆதாரம் தர வேண்டுகிறேன்.

அது மாத்திரமல்ல, அலி (ரழி) அவர்கள் கூறிய பங்கீட்டு முறைப்படி பதினேழு ஒட்டகங்களும், அவைகளில் சிலவற்றை அறுத்துப் பங்கிடப்பட்டாலும், உரியவர்களுக்கு  வழங்கப்பட்டபின்  மீதமாகிவிடும்.  முதலாமவர்க்கு  பதினேழு ஒட்டகங்களில் பாதி 81/2 ஒட்டகங்களும், இரண்டாமவர்க்கு மூன்றில் ஒன்று 5 2/3 ஒட்டகங்களும், மூன்றாமவர்க்கு ஒன்பதில் ஒன்று, 1 8/9 ஒட்டகங்களும் வழங்கப்பட்டால்  மொத்தம் 16 1/6 ஒட்டகங்கள் ஆகும். 5/6ஒட்டகம்  பாக்கியாகி  விடுகிறது.  பதினேழு ஒட்டகங்களைப் பங்கிட அலி (ரழி) அவர்கள் இவ்விதம் பாக்கியாகும். ஒரு முறையை உண்மையில் தந்திருப்பார்களா? தயவு கூர்ந்து தாங்கள் எடுத்துக்கூறும் இந் நிகழ்ச்சி எந்த நூலில் காணப்படுகிறது என்ற விபரம் அறிவிக்க வேண்டுகிறேன். இது போன்ற  சந்தர்ப்பங்களில்  பங்கிடப்பட  வேண்டியவைகளை  “”­ரியத்”தின் படி முறையாக, மீதமில்லாமல் பங்கிடக்கூடிய ஒரு வழி முறையைத் தான் எந்த அறிஞரும்தருவாரே  அல்லாமல்,  நடைமுறையில்  சாத்தியப்படாத  ஒரு  முறையைக்  கூறி, சொத்தின்  உரிமையாளரை  திணரும்படி   செய்து, அவர்  மீண்டும் தன்னை  அணுகும்படி   செய்து  பின்னர்  வேறு  ஒரு  முறையைக்  கையாண்டு,  அதை நடைமுறை சாத்தியமாகும்படி செய்து காட்டி தனது மேதாவித்தனத்தை  வெளிப்படுத்த  மாட்டார்.

அலி (ரழி) அவர்கள், திருமறையில் கூறி இருப்பதை ஒட்டி சொத்துப் பிரிவினை முறையை அறிவிக்காமல் தன் யுகதிக்கு ஏற்ப ஒரு முறையைக் கூறி அதை  சொத்துக்குரியவர்  ஏற்று செயல்படுவார் என்ற நிலை இருந்திருக்குமாயின் அலி (ரழி) அவர்கள் இவ்விதம் ஒரு நடைமுறையில் சாத்தியப்படாதமுறையைக்   கூறாமல்  நேரடியாகவே, முதலாமவர்க்கு பதினேழில் ஒன்பது ஒட்டகங்கள் என்றும், இரண்டாமவாக்கு ஆறு என்றும், மூன்றாமவர்க்கு இரண்டு என்றும் தீர்ப்பு வழங்கி இருக்கலாமல்லவா?

“ஹதீதை  சாதாரணமானவர்கள் விளங்கிக்கொள்ள  முடியாது  என்ற  தங்களின்  வாதத்தை  நிலைநிறுத்த  இங்ஙனம்  ஒரு  கட்டுக்கதையை தாங்கள்எடுத்துரைக்க  வேண்டுமா?  கட்டுக்கதை  அல்ல.  உண்மை நிகழ்ச்சிதான் என்று நாங்கள் நம்ப வேண்டுமாயின் தக்க ஆதாரத்துடன் நிரூபியுங்கள்; ஏற்றுக் கொள்கிறோம்.

தாங்கள் கூறிய மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி ஆதார பூர்வமானது தானா என்று அதைக்கூறிய தங்களுக்கே எழுதிக்கேட்பது நியாயமான செயலே ஆகும். ஆகவே உண்மை விளங்க நீங்கள், இதற்குப் பதில் எழுதி உதவுவீர்கள் என நம்புகிறேன். தாங்கள்  இதற்குப் பதில் எழுதினால் தங்களின் கூற்றுகளிலும், எழுத்துக்களிலும் எழுந்த இன்னும் பல சந்தேகங்களை தங்களுக்கே எழுதி விளக்கம் தேடுவேன்.  இதற்குப்  பதில்  தராவிட்டால்,  முறையான நியாயமான ரீதியில் செயல்படுவதைத் தாங்கள் விரும்பவில்லை என்று கருதி உண்மையை அறிவிக்க விமர்சனங்கள் எழுத நேரிடும்.

உண்மையை எடுத்துக்கூற எந்த மனிதனுக்கு உரிமை உண்டு முஸ்லிம்களுக்கு அது கடமையும் ஆகும். ஆலிம்கள் உண்மையில் மார்க்க அறிஞர்களாக இருப்பின் மக்களுக்கு எழும் மார்க்க சம்பந்தமாக சந்தேகங்களை நிவர்த்தி செய்வது அவர்கள் கடமை ஆகும்.  தங்களிடம் இருந்து தக்க பதிலை எதிர்பார்க்கிறேன்.

மேலே  குறிப்பிட்ட  சந்தேகங்கள்  எனக்கு  மாத்திரம்  எழுந்தவை  அல்ல.  பலருக்கு ஏற்பட்ட சந்தேகங்களே ஆகும். எனவே இக்கடிதத்தைப் பலரும் அறிய அந்நஜாத்தில் பிரசுரிக்க அனுப்புகிறேன். தாங்களும் தங்களின் பதிலை அந்நஜாத்துக்கே அனுப்ப வேண்டுகிறேன்.
வஸ்ஸலாம்
———————————————————————————————————————————

நபிவழித் தொகுப்பு வரலாறு  தொடர் Š 17
அபூ அஸ்மா
( 8 ) ஹதீஸ் அறிவிப்பாளர்களின் பெயர்களிலுள்ள குழப்பங்களை அகற்றும் கலை :
இக்கலையில்  குறிப்பாக  ஹதீஸ்  அறிவிப்பாளர்களின் பெயர்களும் அவர் இன்னவரின் தந்தை அல்லது மகன் என்று அழைக்கப்படும் பட்டப்பெயர்களும்,  மேலும்  அவர்களின்  தந்தை  அல்லது  பாட்டனார்  ஆகியவர்களின்  பட்டப்பெயர்களும்,  மேலும் அவர்களின் ஆசிரியர்களின் பெயர்களும் இவ்வாறே ஒரே பெயரில் பல நபர்கள் இருப்பதால் ஏற்படும் குழப்பத்தை நீக்கி, குறிப்பாக இந்த பெயரையுடைய இவர் இன்ன நபர்தான் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.  இல்லை என்றால்வி பரம்  அறியாதவர்  இக்குழப்பத்தின்  காரணமாக பெரிய சிக்கலில் மாட்டி தவிக்க நேரிடும். இக்கலையில் ஹாபிழ்  இப்னு  ஹஜர் (ரஹ்)  அவர்களின்  “”தஃபீருல் முன்தபிஹ்”  எனும்  நூல் சம்பந்தப்பட்ட அனைத்து வி­யங்களையும் கொண்டதோர் சிறந்த நூலாகும்.

( 9 ) ஒவ்வொரு ஹதீஸ்களையும் பற்றிய விபரங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் கலை :
இக்கலையில்  மூலம்  குறிப்பிட்ட  ஒரு ஹதீஸ்  எந்த  நூலில் இருக்கிறது? அதன் அறிவிப்பாளர் யார்? என்பனவற்றை அறிந்துகொள்ள ஏதுவாகும். உதாரணமாக; “” இன்னமல் அஃமாலு பின்னிய்யாத் ” எனும் ஹதீஸ் தொடர் ஒன்று உங்கள் நினைவில் இருக்கிறது. நீங்கள் இத்தொடரிலுள்ள ஹதீஸின் முழு வாசகத்தையும், அதன் அறவிப்பாளரையும், அந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ள நூலின் பெயரையும் அறிய முற்பட்டால், உங்களுக்கு
இக்கலையின் பக்கம் கவனம் செலுத்த  வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இவ்வடிப்படையில் ஹிஜ்ரீ 742 ல் ஹாபிஸ்மஹ யூசுப் மாஜீ என்பவரால் எழுதப்பட்ட “”துஹ்பத்துல் அஷ்ராஃப் ” எனும் நூல்  மிகவும் விரிவானதாகும். இந்நூலில்  ஹதீஸ்  நூற்களில்  பிரபலமான ஆறுநூற்கள் மற்றும் முஸ்னத் அஹ்மத், முஅத்தா, தாரமீ முதலிய நூற்களின் அட்டவனைகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நூலைத் தயாரித்து வெளியிடுவதற்கு ஹாபீஸ் யூசுப் மாஜீ அவர்களுக்கு சரியாக 26 ஆண்டுகள் செலவாகியுள்ளன. மிகக்கடுமையான மாபெரும் முயற்சிக்கு மத்தியில் இந்நூல் முழுமை அடைந்துள்ளது. இக்காலத்தில் மேற்கத்தியர் இத்தகைய நூற்களைப் பார்த்தே சிறிது மெருகேற்றி அழகிய வடிவில் புதியதோர் அமைப்பில் ஹதீஸ்களின் அட்டவனையைத் தயாரித்துள்ளனர், உதாரணமாக “” மிப்தாஹுகுனுஜிஸ்ஸுன்னா ” எனும்
நூல் ஆங்கிலத்தில்  வெளியாகியுள்ளது.  அதற்கு  1934 Šல்  அரபியில்  மொழி  பெயர்ப்புச் செய்து, எகிப்துலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. 1936Šல் மிகவும் விரிவான  அமைப்பில்  ஹதீஸ்களின்  அட்டவணை  “”அல்முஃஜ முல்முஃபஹ்ரிஸ் ” என்று பெயரில் மேற்கத்தியவரைச் சார்ந்த ஒரு குழுவினரால் முறையாக தொகுக்கப்பட்டு லண்டன் கலாசாலை ஒன்றில் அரபி பேராசிரியராக பணிபுரிந்துக் கொண்டிருந்த டாக்டர் “”விண்சிங்” என்பவரால் 7 பாகங்களில் முழுமையாக   வெளியிடப்பட்டுள்ளன.

( 10 ) சன்மார்க்க சட்டங்களை ஹதீஸின் வாயிலாக தொகுக்கப்படும்கலை :
இக்கலையில்  சட்டங்களை   ஆதாரமாகக்   கொண்டுள்ள   ஹதீஸ்களின்    உட்பொருள்களும்,   தத்துவங்களும்  தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.  இத் தலைப்பில் ஹிஜ்ரி 751-ல் காலம் சென்ற இமாம் இப்னுகய்யிம் (ரஹ்) அவர்களால் “” இஃலாமுல் மூக்கியீன் ” எனும் நூலும், ஷாஹ்வலிய்யுல்லாஹ்Vஹிப் “”தெஸ்லவீ” (ரஹ்) அவர்களின் “” ஹுஜ்ஜத் துல்லாஹிப் பாலிஹா ” எனும் நூலும் பயன்மிக்கவையாகும்.

இவையன்றி மார்க்க அறிஞரில் பலர் வாழ்க்கையின் பலதரப்பட்ட பிரச்சனைககளுக்கும் தனித்தனியாக நூற்கள் இயற்றியுள்ளனர். பிரச்சனைகளுக்கும்  தனித்தனியாக  நூற்கள்  இயற்றியுள்ளனர்.  உதாரணமாக  பொருளாதாரத்துறையில்  “” அபூஉபைது காஸிமுபின் ஸல்லாம் ”  எனபவர் ஹிஜ்ரீ 224- ல் எழுதிய “” கிதாபுல் அம்வால் ” எனும் நூல் பிரசித்தி  பெற்றது.  மேலும்  நிலப்பிரச்சினை  “” உஷ்ரு,காரஜ் ”  முதலியவை  பற்றி  காஜீ அபூயூசுப்
(ரஹ்) அவர்களின் “” அல்கராஜ் ” எனும் நூல் மிகச்  சிறந்ததோர் தயாரிப்பாகும். இத்துடன் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டே சன்மார்க்க சட்ட திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற உண்மை நிலையில் அறியவும், ஹதீஸ்களை  மறுப்பவர்களால்  கிளப்பிவிடப்பட்டுள்ள தப்பபிப்ராயங்களை தவிடுபொடியாக்கவும் கீழ்காணும் நூற்களைப் பார்வையிடுவது மிக அவசியாகும்.

( 1 )   “”கிதாபுல்  உம்மு”  7வது பாகம்,  ( 2 ) “” அர்ரிஸாலத்து இமாம் ஷாபியீ (ரஹ்) ” ,(3) “”அல்முவாஃபிகாத் ” 4 வது பாகம், (தொகுத்தளித்தவர்  ஹிஜ்ரீ  790-ல் காலம் சென்ற “”அபூ இஸ்ஹாக் ஷாத்திபீ (ரஹ்) ) ” (4) இப்னுகய்யிம் (ரஹ்) அவர்களுக்குரிய  “”ஸவாயிக்கு முர்ஸலா” 2- வது பாகம்: (5) ஹுஜ்ரீ456-ல்”” இப்னு ஹஜ்மு ” ( உந்துலுஸீ ) ( ரஹ் )  அவர்களால்   எழுதப்பட்ட   “”அல்அஹ்காம்”   எனும்  நூல்,  (6)  “” பத்ரே ஆலம் மீரட்டீ ”அவர்களின்”” முகத்திமா தர்ஜுமானுஸ்ஸூன்னத ” (7) 1961 Šல் தமது 34 Šவது வயதில் காலம் சென்ற ஹாபிஸ், “” அப்துஸ்ஸத்தார்” (ஹஸன் உமர்பூரீ) (ரஹ்) அவர்களின் இஸ்பாத்துஃகபர், ( 8 ) “” ஸையித் அபுல் அஃலா மவ்தூதீ ” அவர்களின் “”ஹதீஸ் அவர்குர்ஆன் ” எனும் நூல், ( 9 ) “” இஃப்திகார் அஹ்மத பல்கீ” அவர்களின் “”இன்காரே ஹதீஸ்கா மன்ழர்” எனும் நூல், (இது இதயத்தைக் கவரும் சிறந்த வி­யங்களைக் கொண்டதோர் நூலாகும். இதுவரை இதில்இரண்டு பாகங்களே வெளிவந்துள்ளன). சிறிது காலத்திற்கு முன்னால் “” முஸ்தபா ஸிபாயீ ” என்பவர் ஹதீஸ்கள் தக்க ஆதாரமாயிருப்பது குறித்து “” அல்முஸ்லிமூன் ” என்று டமாஸ்கஸ்ஸிலிருந்து ஒரு நூல் வெளியிட்டிருந்தார். இது தொடர்ச்சியான கருத்துக்களைக் கொண்டுள்ள மிகவும் பயனுள்ளநூலாக  இருந்தது. அதன் உருதூ பெயர்ப்பை கனம் ரபீக்மலிக்குலாம் அலி சாஹிப் அவர்கள் செய்த அதை “”நிஃதே ரசூல்” எனும் பெயரில் தாம்
அச்சிட்டு விநியோகித்துள்ளார்கள்.
( இன்ஷா அல்லாஹ் தொடரும்)
———————————————————————————————————————————–
ஞயம்பட உரை : (அல்குர் ஆன் 4: 9/ 33: 70 )
முஸ்லிம்கள் போர்குணம் கொண்டவர்களா?
பு.னி.பு., னி.பு., சென்னை
“”போர்வாளின் நிழலில் சுவர்க்கம் உள்ளது ” என்பது  நபி (ஸல்) கூறிய ஒரு நபி மொழி (ஹதீஸ்)யின் ஒரு சிறு பகுதி. இதனை பெரும்பாலும் ஒரு தனி ஹதீஸ் போன்றே, அனைவரும் பாவிக்கின்றனர். தத்தமது சொற்பொழிவுகளில் உபயோகிக்கின்றனர். ஒரு சில மார்க்க அறிஞர்கள் கூட தங்களது வீர தீரத்தை வெளிக்காட்ட இதனை விளம்புகின்றனர்.
இதே அடிப்படிடயில் அண்மையில் ஒரு ஆங்கில் பத்திரிக்கை (வீஜுeவீஷ்துeவிலிக்ஷூணூஐdஷ்ழி) நாளுக்கொரு நல்மொழி ( வீஜுலிற்ஆஜுமிக்ஷூலிrழிdழிதீ) என்ற தலைப்பில்
இந்நபி மொழியை வெளியிட்டது. இதனைக் கண்ணுற்ற மாற்றுமத நண்பர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், இந்திய முஸ்லிம்
களைப் பற்றியும் துவேச எண்ணம் கொண்டனர்.
அந்த ஆங்கில் பத்திரிக்கையின் வாசகர் ஒருவர் “” வாசகர்கள் பகுதி” (ஸிeமிமிerலிமிமிஜுeedஷ்மிலிr)யில் இந்திய முஸ்லிம்களாகிய நம்மைப் பற்றி எழுதியது நாம் அனைவரும்  கவனிக்கத்தக்கது. அவ்வாசகர் குறிப்பீடுகிறார்:  “” ஏன் முஸ்லிம்கள் எப்போதும் போர்குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்:  ஆங்காங்கு  மதச்சார்பான  கலவரங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர் என்பது இந்நபிமொழி மூலம் விளங்கலாயிற்று. அவர்களது நபி போர்வாளின் நிழலில் சுவர்க்கமிருப்பதாக  கூறி விட்டதாக, அவரது வாக்கை வேத வாக்காக மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இலகுவாக சுவர்க்கம் பெற நாடுகின்றனர்: போரில் மாண்ட தியாகிகளாக திகழ விரும்புகின்றனர். ”

இது ஒரு மாற்றுமத வாசகரின் தனிக் கூற்றாக இருந்தாலும்,  இதனை அப்பத்திரிக்கை பிரசுரித்தன் வாயிலாக பலரின் கூற்றாக நாம் காண்கிறோம், முஸ்லிம்களின்  விரோத  சக்திகளும்  தங்களது  வகுப்புவாத  பிரச்சாரத்திற்கு  இதனை  உபயோகப்படுத்தலாம்.  முஸ்லிம்களுக்கு  எதிரான  குரோத உணர்வை தங்களது சகாக்களிடம் உருவாக்கலாம். அவ்விதமே உருவாக்கியும் வருகின்றனர். என்பது கண்கூடு.

இதே  அடிப்படையில் தான் தமிழகத்தில் “”முரட்டு துளுக்கனும் முட்டாள் ……………………பட்டாளத்துக்கு லாய்க்கு” என்ற புதுமொழியும் உலவி வருகிறதுபோலும் சாந்தியும், சமாதானத்தையும் பெயராகக்  கொண்ட இஸ்லாத்தைச் சார்ந்த நாம் இத்தவறான எண்ணத்தை மாற்றுமத நண்பர்களிடம் ஞயம் பட உரைத்து, போக்கி சுமூகமான வாழ்வு வாழ வேண்டும். மக்காவிலிருந்து  ஹிஜ்ரத்  செய்து,  மதீனா குடியேறிய நபி (ஸல்) அவர்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த யூத, கிறித்துவ, முஷ்ரிக் போன்ற மாற்று மதத்தினருடன் சுமுகமாக வாழ்ந்ததை நாமும் செயலாக்க வேண்டும். அதுவே நபி(ஸல்) அவர்களை முழுமையான பின்பற்றுவதாகும். மேலே கூறப் பட்டுள்ள தவறான எண்ணத்தை எப்படி போக்குவது?என்ற வினா நம்மிடையே எழும். நியாயமான கேள்வி ! பதிலுக்கு அங்குமிங்கும் அலைய வேண்டாம். அதே நபி  மொழியை (ஹதீஸை) முழுமையாக கூறுங்கள். எதையும் கூட்டாமல் குறைக்காமல் நபி (ஸல்) கூறிய அனைத்தையும் எடுத்துரையுங்கள்.  முஸ்லிம்களாகிய  நமது  சாந்த  சொரூபம்  மாற்று  மதத்தினருக்கு  தெள்ளென  புரியும்  நல்லுறவு  நட்புணர்வு  வளரும்.

அதுவே  நபி(ஸல்)  நமக்கு  காட்டிய  முன்னுதாரண வழி முறையாகும். இப்போது அந்த நபி மொழியை முழுமையாக  பார்ப்போம்.
அம்ர் பின் உபைதுல்லாஹ் (ரழி) அவர்களின் காரியதரிசி சலீம் அபூநதர் (ரழி) அறிவிக்கிறார்கள்:
அப்துல்லாஹ் பின்  அபூ அவ்ஃபா (ரழி)  அவர்கள்  காரிஜிய்யா,  என்ற  கூட்டத்திற்கு  எழுதிய  கடிதம்  அம்ர் பின் உபைதுல்லாஹ் (ரழி) அவர்களுக்கு வாசித்து  காட்டப்பட்டது. அதில் “”நபி (ஸல்) ஒரு போரில் கலந்து கொண்டபோது, அன்றைய மாலை சூரியன் அஸ்தமித்ததும் எங்களுக்கு உபதேசித்தார்கள் ”

எனது மக்களே! உங்களது விரோதிகளை போர்க்களத்தில் சந்திக்க வேண்டுமென பேரவாக் கொள்ளாதீர்கள். மாறாக, சாந்திக்கும், சமாதானத்திற்கும். இறைவனிடம் இறைஞ்சுங்கள். ஆனால் உங்களது விரோதிகள் உங்களை போர்க் களத்தில் தான் சந்திக்க விரும்பினால் தைரியமாக சந்தியுங்கள் . அஞ்சு பின்வாங்கி விடாதீர்கள்.

புற முதுகு காட்டி ஓடி விடாதீர்கள். ஏனெனில் “” போர்வாளின் நிழலில் சுவர்க்கமிருக்கிறது, ” என அநீதமாக தாக்கப்படும் முஸ்லிம்களுக்கு ரசூல்(ஸல்) ஊக்கமளித்தார்கள். அதற்குப் பின் யா அல்லாஹ்! நீ (நேர் வழியான) வேத  நூலை  அளித்தாய் ! வானில் பேகங்களை உலகவிடுகிறாய்: எங்களை அநீதமாக தாக்குதல் எதிரிகளை தோல்வியுற செய்வாயாக! எங்களது இந்த  போராட்டத்தில் வெற்றியை நல்குவாயாக ! என பிரார்த்தித்தார்கள்.

இந்த  நபி மொழி (ஹதீஸ்),  மிக நம்பகமான ஹதீஸ் நூற்களில் முதலிடம் வகிக்கும் புகாரி, முஸ்லிம், அபூதாவூத் என்ற நூற்களில் இடம் பெறுகிறது. இந்நூற்களில்   “”ஜிஹாது”   (புனிதப் போர் )  என்ற பெரும் தலைப்பில் இடம் பெற்றாலும், குறிப்பிட்ட இந்த  ஹதீஸ் வரும் கிளை தலைப்பு கவனிக்கத்தக்கது.  இந்த  ஹதீஸை  கோர்வை  செய்த  இமாம் புகாரி (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்), இமாம் அபூதாவூத் (ரஹ்) போன்றோர் தலை சிறந்த  ஹதீஸ்கலா வல்லுநர்கள்.  இவர்கள்  இந்த  ஹதீஸின் உண்மையான கருத்தினை தெளிவான உணர்ந்தே சரியான துணைத் தலைப்பில் கீழ் இதனை பதிவு செய்துள்ளனர்.

ஸஹீஹ்  புகாரியில்  இமாம்  புகாரி(ரஹ்)  அவர்கள்  “”(போர் களத்தில் ) எதிரியை சந்திக்க பேரவாகக் கொள்ளக்கூடாது ” என கிளை தலைப்புக்கு பெயர்சூட்டியுள்ளார். இது புகாரியில் 156வது கிளை தலைப்பாக ஜிஹாது பாடத்தில் அமைந்துள்ளது. இந்த ஹதீஸுக்கு அடுத்து  இடம் பெறும் அபூஹுரைரா(ரழி)வின் ஹதீஸும் இந்த தலைப்பை ஊர்ஜிதம் செய்கிறது.

“”எதிரியை (போர்க்களத்தில்)  சந்திக்க  பேரவா  கொள்ளாதே!  ஆனால், அப்படி சந்தித்து விட்டால் சாத்வீகத்தைக் கடைபிடி ” என்பது அபூஹுரைரா (ரழி)கூறும் நபி மொழியாகும்.
இமாம்  முஸ்லிம்  (ரஹ்) அவர்களும் ஜிஹாத் (புனிதப்போர்) என்ற பாடத்தின் கீழ்வரும் ஆறாவது துணை  தலைப்பாக  மேற்படி  அபூஹுரைரா (ரழி) ஹதீஸையே குறிப்பிடுகிறார். பின் நாம் குறிப்பிட்ட ஹதீஸையும் பதிவு செய்துள்ளார். ஹதீஸ் கலா வல்லுநர்களின்  முதலிடம்  பெறும்  புகாரி (ரஹ்), முஸ்லிம் (ரஹ்) இவ்விரு ஹதீஸ்களுக்கு மட்டுமே இத்தலைப்பை கொடுத்திருப்பது  கவனிக்கத்தக்கதாகும்.

இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் “” போர்க்களத்தில்  எதிரியை சந்திக்க ஆசைப்படுவது (நபி(ஸல்) வழியல்ல) வெறுக்கத்தக்கது ” என தனது சுனனில் ஜிஹாத்  பாடத்தில்  97வது  துணை  தலைப்பாக  குறிப்பிடுகிறார். இத்தலைப்பில் இந்த ஒரு ஹதீஸ்தான் இடம் பெறுகிறது.

மீண்டும்  ஒரு முறை  முழுமையாக  நபிமொழியை  படியுங்கள்.  அந்நபிமொழியை  தங்களது  நூற்களில்  கோர்வை செய்த ஹதீஸ்கலா மேதைகள் அதனை எந்த தலைப்பின் கீழ் பதிவு செய்துள்ளனர் என்பதையும்  பாருங்கள்,  இப்போது  தெளிவாகப்  புரியும்.

Š நமது ரசூல் (ஸல்) அமைதியை போரின்மையை விரும்பினார்கள்.
Š வலுச் சண்டைக்கு தூண்டவில்லை: ஆனால் Š விரோதிகள் வீம்புடன் வலுச் சண்டைக்கு வந்தால் வாளா இருக்கவும் கூறவில்லை.
Šதங்களையும், தங்களது கொள்ளையையும்,  பாதுகாத்துக் கொள்ள வீண் சண்டைக்கு வருபவருடன் போரிட பணித்தார்கள்.
“”கொட்ட கொட்ட குனிபவனும்,  குனிய  குனிய  கொட்டுபவனும்  முட்டாள் ”   என்பதை எல்லோரும் ஏற்பர். இந்த ரீதியில் வலிய சண்டை வேண்டாமெனநபியவர்கள்.  மக்காவிலிருந்து  13  வருடங்களும்,  மதீனா வந்த முதலிரண்டு வருடங்களுமிருந்தார்கள்.  இவ்வளவு  பொறுமைக்குப்  பின்னும் இஸ்லாமிய விரோதிகளிடமிருந்து வலிய வரும் வீம்பு சண்டையிலிருந்து  தங்களைப்  பாதுகாத்துக் கொள்ளவே போரிட ஆணையிடுகிறார்கள். இக்
கருத்திலேயே இந்த ஹதீஸ் கூறப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக விளங்கும்.

நபி (ஸல்) அவர்களின் ஆணைப்படி இறுதி எட்டு வருடங்களில்  நடந்த  பத்ர்,  உஹது,  அகழ்  போன்ற  எல்லா  போர்களும்  தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே  போரிடப்பட்டது  என்பதை  சரித்திரம் சான்று கூறுகிறது.  நபி (ஸல்)  மதீனாவிலிருந்து  100 கிலோ மீட்டர் தள்ளியுள்ள பத்ரிலிருந்த போது, 350 கி, மீ. தூரத்திலிருந்து மக்கத்து விரோதிகள் போரிட்டனர். அதுவே இஸ்லாத்தின் முதல் “”( பத்ர்)” போர். நபி (ஸல்) மதீனாவிலிருந்த போது, தானே வலிய 450 கி.மீ. தூரத்தை கடந்து வந்து மக்கத்து குறை´கள் உஹது, அகழ் போர்களில் சமர் செய்தனர்.

இப்போது கூறுங்கள்: நபி(ஸல்) வலிய சண்டைக்கு சென்றார்களா? விரோதிகள் வம்பு சண்டைக்கு அதிக தூரங்களை கடந்து வந்து சமர் செய்தனரா? இவ்விதமாக வலிய வீம்பு சண்டைக்கு வரும் விரோதிகளை போர்க்களத்தில் சந்திக்காமல் வீட்டில் தூங்கி கொண்டிருப்பவன் ஒரு ஆண் மகனல்லவே! அதுவும்  நேரிய  கொள்கை  பீடிப்புள்ளவர்.  இறை  நம்பிக்கையாளர் அவரது கொள்கையை அழிக்க வரும் விரோதியை போர்க் களத்தில் சந்திப்பதும்தன்னையும், தனது கொள்கையையும் பாதுகாக்க எதிராளியுடன் போரிடுவதும் எல்லா நாட்டவரும், மொழியாளர்களும், குலத்தவரும்  ஏற்கும் நீதியாயிற்றே?   அவ்வியற்கை  ரீதியில்  பாதுகாப்பு  போருக்கு  ரசூல் (ஸல்)  அனுமதியளித்தார்கள்.  வீண்  வம்பு  சண்டைக்கு  வக்காலத்து  வாங்கவில்லை என்பதை உணரலாம்.

“” அவர் (விரோதி)கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீங்களும் அதன் பக்கம் சாயுங்கள் ” (வீணாக சண்டையிடாதீர்கள்) என அல்லாஹ் (குர் ஆன் 8:61)  கூறுகிறான்.  அதற்கொப்ப  பெரும்படையுடன்  மக்கா  சென்ற  நபி (ஸல்)  போரிடலாம்  “”சுல்ஹு ஹுதைபியா”  என்ற  சமாதான உடன்படிக்கை செய்து, அவ்வருட உம்ராவைக்கூட நிறைவேற்றாமல் மதீனா திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கருத்துக்களை  நமது  மாற்றுமத  நண்பர்களிடம்  ஞயம்பட  எடுத்துரையுங்கள்.  சாந்தி  சமாதானத்திற்கு சாந்தி நபி (ஸல்) காட்டிச் சென்ற அழகிய வழியை  ஆதாரத்துடன்  விளக்குங்கள், அவவர்களிடம், முஸ்லிம் விரோத சக்திகளால்  உருவாகியுள்ள  தவறான  எண்ணத்çதை  சரித்திர  ஆதாரத்தோடு களையுங்கள். சுமூக வாழ்வு தொடரும். அனைவரிடமும் நல்லுணர்வு வளரும்.
(விசுவாசிகளே !) நடு நிலையான சமுதாயத்தினராக உங்களை நாம் ஆக்கினோம், ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழி காட்டக் கூடிய) சாட்சிகளாக  இருங்கள். (அல்குர் ஆன் 2:143), அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.
“” லா யாஹ்முஹுல்லாஹ் மன் லா யர்ஹமுந் நாஸ் ”

பொருள் : எவரொருவர் மக்களுக்கு இரக்கம் காட்டவில்லையோ, அவருக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டன் (நபி மொழி)

அறிவிப்பு : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரழி), ஆதாரம் : புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது.
இந்த  நபிமொழிப்படி,  அனைத்துலக்கும்  பொது நபியானது  ரசூல் (ஸல்)  அனைத்து மக்கள் மீதும் இரக்கம் காட்ட பணித்துள்ளார்களேயன்றி, குறிப்பாக  முஸ்லிம்கள்  மீது   தான் இரக்கம்  காட்ட  வேண்டுமென  பணிக்கவில்லை  என்பதை  உணரலாம்,  எனவே  தான்  நபி (ஸல்) அவர்கள் அனைவருக்கும் முன்  மாதிரியாக  (உஸ்வத்துன் ஹஸனா) திகழ்கிறார்கள்.
———————————————————————————————————————————–
” அஸ் ஸிராத்துல் முஸ்தகீம் ”
Š அபூதஸ்னிம்
“”இஸ்தினஸ்  ஸிராத்தல்  முஸ்தகீம் Š (1:5), தம் தொழுகையின் போது ஒவ்வொரு அடியானும், ஒவ்வொரு ரக் அத்திலும் அல்லாஹ் (ஜல்)விடம் இடபடித்தான் பிரார்த்திக்கிறான். நம்மை படைத்து பாதுகாத்து வளர்க்கும் ரப்புல் ஆலமீனிடம், “” நேரிய பாதையை எங்களுக்கு அருள் வாயாக ”,  என்று மனமுருகி கேட்கும் அடியான் தான் வாழ்ந்து கொண்டிருக்கம் வாழ்க்கை  உண்மையிலேயே  அல்லாஹ்வுடைய  நேரிய  பாதையின்  வழிகாட்டலில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதை திட்டவட்டமாக அறிந்துக் கொள்ள கடமைப்பட்டவனாக இருக்கிறான்.

இக்கால  கட்டத்தில் உலகளாவில் அளவில் பல இஸ்லாமிய சகோதரர்கள் அல்லாஹ் காட்டிய ஸிராத்துல் முஸ்தகீம் என்ற நேரிய பாதையை விட்டும் மாறி தடம் புரண்டுŠ வெறும் மனித யூகங்களால் உண்டாக்கப்பட்ட அபிப்பிராயங்களையே தம்முடைய மார்க்கமாகவும், தமது வாழ்க்கைப் பாதையாகவும் கருதி தடுமாறி நிற்கின்றனர். இதன் காரணம் என்ன? என்று ஆராயும் போது பல திடுக்கிடும் உண்மைகள் நமக்கு தெரியவருகிறது. இஸ்லாத்தின் பரம விரோதிகளும், முனா பிக்கீன்களும் (நயவஞ்சகர்களும்) சேர்ந்து திட்டமிட்டு அல்லாஹ்வின் நேரிய பாதையை பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்கு தெரியப்படுத்தாமல், இருட்டடிப்பு செய்த சூழ்ச்சி, தந்திரங்கள் இப்போது நமக்கு தெரியவருகின்றன. உண்மை இஸ்லாத்தை மறைந்து போலிச் சடங்குகளையும், சம்பிரதாய வழக்கங்களையும் புகுத்தி முஸ்லிம்களை ஆண்டாண்டு காலமாக வழிகெடுத்தவர்களை அல்லாஹுத்தஆலா அடையாளம் காட்டி இவர்களது சுயரூபத்தை நமக்கு பகிரங்கப் படுத்தி விட்டான் (அல்ஹம்துலில்லாஹ்).

இஸ்லாம்Š என்ற பெயரில் மார்க்கத்திற்கு  கொஞ்சமும்  சம்பந்தமே  இல்லா  எத்தனையோ  வழிகேடுகளையும்,  முரணான கொள்கைகளையும் பின்பற்றி வரும் எத்தனையோ சகோதரர்கள் நாடுமுழுவதும் பரவலாக காணப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே, “” தாங்கள்அல்லாஹ் அருளிய நேரான பாதையிலேயே இருப்பதாக”கூறிய கொன்கின்றனர். இது அவர்களது வீண் கற்பனையே! அல்லாஹ்  அருளிய  ஸிராத்துல் முஸ்தகீம்Šஎன்ற  நேரிய  பாதைக்கும்.  மனித  அபிப்பிராயங்களால்  ஏற்பட்ட  “”பாதை”க்கும்  உள்ள  வேற்றுமைகளையும்,  வித்தியாசங்களையும்  நாம்  சற்று ஆராய்வோம்.

வேடதாரிகளின் மாய வலையில் சிக்கி, இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கைகளை, இஸ்லாத்தின் பெயராலேயே கடைபிடித்து வரும் அப்பாவி சகோதர முஸ்லிம்கள் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிந்து காணப்படுகிறார்கள்.

முதல் பிரிவினர் :-  இமாம்களை  கண்மூடித்தனமாக  பின்பற்றுவோர்.
வாசக அன்பர்கள் தயவுசெய்து மேற்கண்ட தலைப்பு வாசகங்களை மீண்டும் ஒருமுறை படிக்கும்போது கேட்டுக்கொள்கிறோம். காரணம் “”இமாம்களைபின்பற்றக்கூடாது” என்று நாங்கள் சொல்வதாக பொய்ப்பிரச்சாரம் செய்யும் போலி முல்லாக்கள் அலறிக்கொண்டிருக்கிறார்கள். குர்ஆன், ஹதீஸ் ஆதாரம்  பார்க்காமல்  இமாம்கள்  சொல்லிவிட்டார்கள்  என்ற  ஒரே  ஆதாரத்தின் அடிப்படையில் பின்பற்றுவதைத்தான்.  “”கண்மூடி பின்பற்றுதல் ”. அதாவது “” தக்லீத் செய்தல் ” என்று கூறி வருகிறோம். இவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒரு வகையினர் அலி (ரழி)  வழிவந்த சந்ததியில்  பன்னிருவர்களையும்,  இன்னைறய  ஆயத்துல்லா கொமைனியையும் இமாம்களாக்கி கியாமநான் வரை பின்பற்றுவதாக உறுதிகொண்டு
“” ´யா”க்கள் என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை,  வழிகேடர்கள்  என்று பறைசாற்றி உண்மையில் நாங்கள் தாம் ஸிராத்துல் முஸ்தகீம் எனும் நேரில் பாதையில் நடைபோடும் உண்மை முஸ்லிலம்கள் என கூறிக்கொண்ட இன்னொரு சாரார் தம்மை “” ஷீன்னி முஸ்லிம்கள் ” என்று பறைசாற்றி கொண்டனர். இவர்கள் “”´யா”Šபிரிவினர்போல  இமாம்களுடைய  வழி வழி சந்ததிகளை  பின்பற்றவில்லை. எனினும்,  கியாம நாள் வரை 4  இமாம்களில்  யாராவது  ஒருவரை  பின்பற்றியாக வேண்டும் என்ற கொள்கையில்  உறுதியுடன் இருந்து வருகின்றனர்.

“” ´யா Š ­ன்னி” Š எனப்படும் இந்த இரு சாரார்களும் இமாம்களை பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மேலாக இமாம்களை கண்ணியப்படுத்தி, இமாம்களை வரம்புமீறி புகழ்ந்து,  இமாம்களையே தமது பாதுகாவலர்களாகவும்,வழிகாட்டிகளாவும்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். உலக முஸ்லிம்கள் அனைவருக்கம் ஒரே இமாம், ஒரே வழிகாட்டி ரசூல் (ஸல்)Šஅவர்கள் தான் என்பதை இவர்கள் உணர தவறி விட்டனர்.

“” ´யா ”, பிரிவினரைவிட “” ஷின்னி ” பிரிவினர் தாம் நாம் வாழும் இந்திய நாட்டில் பரவலாக பெருகி காணப்படுகின்றனர். ஹனபி, ஷாபி, ஹம்பலி,   மாலிகி என்ற நான்கு பிரிவுகளின் பெயரில் உண்மையில் அந்த 4 இமாம்களும் சொல்லாததை அவர்கள் பெயரிலேயே இட்டு கட்டி, தமது முன்னோர்கள் எழுதிய “” பிக்ஹ் கிதாபுகளை ”  கண்  மூடித்தனமாக பின்பற்றி,  ஒரு  இமாமுக்கும்  மற்றொரு இமாமுக்கம் பற்பலவிதமான முரண்பட்ட கொள்கைகளை வகுத்துக்கொண்டுŠ 4 பிரிவுகளாக (மத்ஹபுகளாக) பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரே அல்லாஹ்,  ஒரே ரசூல்,  ஒரே மார்க்கம்,  ஒரே வேதம்,  என இப்படி இருக்கும்போது மார்க்கத்தை நான்காகப் பிரித்துŠநாலுவிதமான தொழுகை முறைகளை கற்பித்து, நாலுவிதமான சடங்கு சம்பிரதாயங்களை இஸ்லாத்தில் புகுத்தியுள்ள இவர்களுக்கும்Š ஸிராத்துல் முஸ்தகீம் என்ற பாதைக்கும்மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியா சங்கள் இருப்பதை நாம் உணரலாம்.

இரண்டாவது பிரிவினர் : இறந்து போனவர்களிடம் ஆதரவு வைப்பவர்கள். இறந்துபோன சில நல்லடியார்களின் பெயரால் “” தஸவ்வுஃப் ” என்று அமைத்துக்கொண்டு தமது ய­ய்குமார்கள் மீதும், பீர்கள் மீதும் கண்மூடித்தன மான நம்பிக்கை வைத்து இவர்கள் சொல்வது தான் வேதவாக்கு என்ற  நம்பிக்கையில் வாழ்ந்து வருபவர்கள். தரீக்காக்களின் பெயரால் ´ர்க்கையும்பித் அத்தையும்  செய்துகொண்டு, இறந்துபோனவர்களை தவறானமுறையில் (அளவுக்கு மீறி) புகழ்ந்தும், கண்ணியபடுத்தியும் வருகின்றனர். திருக் குர்ஆன் வசனங்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து ஒன்று லாஹிர் (வெளிரங்கம்), மற்றொன்று  பாத்தின் (அந்தரங்கம்)  என்று  இருவேறு கருத்துக் களை சொல்லும் வியப்புக்குரிய  வி­(ய)தாரிகள். தாம் கொண்ட கொள்கையை 4 பிரிவுகளாக (­ரீ அத், தரீகத்,ஹகீகத் மக்ரிபத்) பிரித்து  கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும் கதாநாயகர்கள். இதில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் இஸ்லாத்தை (லாஹிர் பாத்தின்) இரு கூறுகளாக  பிரித்து, லாஹிர் வவாழ்க்கையில் 4 இமாம்களில் யாராவது ஒருவரை பின்பற்றுவதையும்,  பாத்தின் எனும் அற்தரங்க  வாழ்க்கையில்  4 வலியுல்லாஹ்களில்

(காதிரி, முஸ்லிம், நக்ஸபந்தி, சுஹரவர்தி) ஒருவரை பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் நீங்காக் கடமையாகும் என்றும் பிதற்றி வருகின்றனர். ஆக,வாழ்க்கையின் சகல நிலைகளிலும் இமாம்களுக்கும், வலியுல்லாஹ்களும் மட்டும் தான் இடம் கொடுத்தனரே யல்லாமல்Š இமாம்களில் பெரிய இமாமும்Šவலியுல்லாஹ்களில் தலைசிறந்தவர்களுமான Š நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இவர்கள் முக்கியத்துவமே கொடுப்பது இல்லையயன்பதை  நாம்  அறிந்து  கொள்கிறோம்.

மூன்றாம் பிரிவினர் : (இயக்கங்கள்  என்ற  மாய  வலையில்  சிக்கியவர்கள்)
பற்பல  இயக்கங்கள் மேற்கண்ட இரு பிரிவினர்களையும் பின் பற்றாமல் தக்லீத் தஸவ்வுஃப் முதலிய வழிகேடுகளை கண்டித்து, புதிய பரிணாமத்தில் இஸ்லாத்தை  மக்களிடத்தில்  அறிமுகப்படுத்தி  வருகிறார்கள். தாம்  சார்ந்திருக்கும் இயக்கங்களின் அடிப்படையிலேயே குறுகிய வட்டத்திற்குள் தமது கொள்கையை வகுத்துக் கொண்டு, “” இது தான் அல்லாஹ் காட்டிய நேரான பாதை ” Šஎன்பதாகக் கூறிக் கொள்கின்றனர். உண்மையில்.  இந்த  இயக்கப் பிரிவினர்கள் நாம் மேலே பார்த்த தக்லீத், தரீக்கா பிரிவினர்களை விட சற்று மார்க்க விளக்கமுள்ளவர்களாய் காணப்பட்டாலும், தாம் சார்ந்துள்ள  இயக்கங்களின்  கொள்கைகளுக்கே முக்கியத்துவம்  கொடுத்து வருகினறனர்.  குர்ஆன்,  ஹதீஸ்  ஆதாரத்தில்  ஒரு  கொள்கையோ அல்லது  சட்டத்தையோ நாம் எடுத்து விளக்கும்போது அதனை ஒப்புக்கொள்வதற்கு மாறாக தாம் சார்ந்த இயக்கங்களின் கொள்கைக்கு அது முரணாக  இருக்கும் பட்சத்தில்  குர் ஆன், ஹதீஸ்  ஆதாரத்தை  ஏற்க மறுக்கின்றனர். தமது இயக்க கொள்கைக்கே முதலிடமும், முக்கியத்துவமும் கொடுக்கின்றனர். இவர்களது தலையாய நோக்கம் இஸ்லாம் வளர வேண்டுமென்பதைவிட தாம் சார்ந்திருக்கும் இயக்கம் வளர வேண்டும், புகழ் பெற வேண்டும்  என்பது தான். இவர்கள் தவறு செய்ய ஆரம்பிக்கும் இடம் இங்குதான்.
ஆக, நாட்டில் பரவலாக காணப்படும் இதுபோன்ற பிரிவினை வாதிகள் அனைவரும் தத்தமது மத்ஹபு கொள்கையிலும், தரீக்கா கொள்கையிலும், இயக்கங்களின் கொள்கையிலும் பிடிவாதமாகவும் மன முரண்பாடாகவும் இருந்து வருவது மட்டுமின்றி, இவர்கள் ஒவ்வொரு வரும், “” தாங்கள் தாம் உண்மையான ஸிராத்துல் முஸ்தகீம் என்ற நேரிய பாதையில் இருப்பதாக” கூறிக் கொள்கின்றனர்.

இது  எவ்வளவு  பெரிய  ஏமாற்றம் ! “”முஸ்லிம்கள் ”  என்ற  பெயரில் இஸ்லாத்திற்கு மாற்றமான, முரணான கொள்கையில் சிலர் வாழ்ந்து வருவதைப் போன்று “” ஸிராத்துல் முஸ்தகீம் ” என்ற நேரிய பாதை ” யின் பெயரில் வழிகெட்ட பாதையில் மேற்கண்ட மூன்று பிரிவினர்களும் போய்க்கொண்டிருக்கின்றனர். காரணம் ஷைத்தான் இவர்களுக்கு இவர்களுடைய செயலை மிக அழகாக காண்பித்து வழிகெடுத்துவிட்டான்.

ஷைத்தானின் இந்த சதியை மிக அழகாக அல்லாஹ் (ஜல்) தனது திருமறையில் கூறுகிறான். “” நீ என்னைப் பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகிய) அவர்கள் உன்னுடைய நேரானவழியில் (ஸிராத்துல் முஸ்தகீம்) செல்லாது (தடை செய்ய வழிமறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்” (7:16)என்று அல்லாஹுத ஆலாவிடம் சபதம் செய்தவன் தான் ஷைத்தான். நமது ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களை சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றியஇப்லீஸ் ஆதமின் சந்ததிகளை சுவனம் செல்வதற்கு நிச்சயமாக பொறுத்துக் கொள்ளவே மாட்டான்.

“” ஸிராத்துல் முஸ்தகீம்” எது என்பதை நாம் ஒவ்வொருவரும் தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அல்லாஹ் அருளிய நேரான பாதை என்பது நிச்சயமாக இப்போது காணப்படுவதைப்போல மனித யூகங்களின் அடிப்படையில் எழுந்த அபிப்பிராயங்களாக இருக்கவே முடியாது. ஏனெனில், மனிதன்  பலஹீனமானவன்  (4:28) அறியாமை நிறைந்தவன் (33:72)  என்பதை  அல்லாஹ்  தனது  திருமறையில்  கூறுகிறான்,  அறியாமையும், பலஹீனமும் நிறைந்த மனிதனால் சர்வவல்லமை பொருந்திய அல்லாஹ்வின் நேரான பாதையை காட்டுவது எப்படி சாத்தியமாகும்?

இதனடிப்படையில்,  நேரான  பாதையை  காண்பித்து  தரும்  ஒரே  தகுதி  அல்லாஹ்வின்  உரியது என்பதை நாம் அனைவரும் சந்தேகமற தெரிந்து கொள்ள வேண்டும். திருக்குர் ஆனும், “” அந்த  நேரான  பாதையை  நீயே  அருள்வாயாக”  என  அல்லாஹ்விடமே கேட்குமாறு  கட்டளையிடுகிறது. ஆக  நேரான  பாதை எது என்பதை அல்லாஹ் அறிவித்தாலன்றி நாம் அறிந்து கொள்ள முடியாது. அல்லாஹ்வின்  அந்த  நேரான  பாதையை
நபி(ஸல்) அவர்களை மிக அழகிய முறையில் நமக்கு அறிவித்து தருகின்றனர்.

“எனக்கு பிறகு நீங்கள் இரண்டை பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். திருக்குர்ஆனையும், எனது வழிமுறையினையும் நீங்கள் பின்பற்றும் வரை (நேரியபாதையிலிருந்து) வழி தவறவே மாட்டீர்கள்”  என்ற  கருத்துப்பட  வந்த  ஹதீது  நமக்கு  மிகத் தெளிவாக “” ஸிராத்துல் முஸ்தகீம் ” எது என்பதை
அறிவித்து கொடுக்கிறது.

அல்லாஹ் அறிவித்த அந்த நேரிய பாதையை திருக்குர் ஆனும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களின் செயல்முறையின் வழி (சுன்னத்) வாழும் ஒரு முஸ்லிம் தான் ” நேரிய பாதையில் ‘ இருந்து வருகிறார் என பதில் சற்றும் சந்தேகம் இல்லை.

அல்லாஹ்வின்  வேத வசனத்திற்கும்,  அவனது தூதர் நபி (ஸல்) அவர்களின் நடைமுறைக்கும் மாற்றமாக, முரணான ஆயிரமாயிரம் பாதைகளை அழகழகான விதத்தில் யார் காண்பித்து தந்தாலும் அது வழிதவறிய பாதை என்பதை உண்மை மூஃமீன்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். (மத்ஹபு வாதிகளும், தரீக்காவாதிகளும், இயக்கங்களை பின்பற்றுபவர்களும் நேரான பாதையை விட்டும் தடம் புரண்டு மனித அபிப்பிராயங்களுக் பலியாகி வருவதை  குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தோடு தெள்ளத் தெளிவாக கடந்த காலங்களில் அந்நஜாத் விளக்கியுள்ளது.Šஆர்)

ஆகவே, அன்புச் சகோதரர்களே நாம் அனைவரும் அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் காண்பித்து தந்த ஸிராத்துல் முஸ்தகீம் என்ற நேரான பாதையில் சென்று உண்மை மூஃமீனாக வாழ்ந்து ஈருலக வாழ்விலும் வெற்றி பெற வல்ல நாயகன் நமக்கு அருள்புரிவானாக. (நபியே!) நீர் கூறும் “” நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி ” (3:73).
———————————————————————————————————————————-

ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : பாத்திமா (ரழி) அவர்கள் ஹசன், ஹுசைன் (ரழிŠ அன்குமா) அவர்களை லுஹரில் பெற்றெடுத்து அசர் தொழுதாVகளா?
அப்துல்லா . விருதுநகர்.

தெளிவு : நபி (ஸல்) அவர்களின் அருமை மகளார் பாத்திமா (ரழி) அவர்களை “” பாத்திமதுத்தாஹிரா ” பரிசுத்தமான பாத்திமா என்றும் அழைப்பர். இப்பெயர்படி   பாத்திமா (ரழி)  பரிசுத்தமானவர்கள் ;  பரிசுத்தமான  நபி (ஸல்)  அவர்களின் மகளார்; எனவே அவர்களுக்கு மாதவிடாய், நிபாஸ் போன்ற அசுத்தங்கள்  ஏற்பட்டதில்லை  என அளவுக்கதிகமாக புகழ்ந்து, தனி நபர் ஆராதனைப்படி உருவான ஒரு (பிக்ஹுநூற்கள் கூறும் கதையின்
பின்னணியே  தங்களது  கேள்வியாகும்  என்பதை  முதலில்  தெரிந்து  கொள்ளுங்கள்.

மாதவிடாய் ஏற்படாத பெண், குழந்தை பெறவே முடியாது என்பதை யாவரும் அறிவர். பாத்திமா (ரழி) மாதவிடாய், நிபாஸ் போன்ற இயற்கை உபாதைகளற்ற இயற்கை நியதிக்கு மாறான (புணுஐலிrதுழியி) பெண் மகளர் என்பதற்கு எவ்வித  ஹதீஸ்  ஆதாரமுல்லை.  அப்படியே  மாதவிடாய்,  நிபாஸ் ஏற்பட்ட உடனே பரிசுத்தமாகி விடுவார்கள். என்ற பிக்ஹு நூற்களின் கூற்றுக்கும்Šஎவ்வித ஹதீஸ் ஆதாரமுமில்லை.

மற்றும்  ஹசன்,  ஹுசைன் (ரழிŠஅன்குமா )  லுஹரிலு  தான்  பிறந்தார்கள்  என்பதற்கு  எவ்வித  சரித்திர, ஹதீஸ் ஆதாரங்களைக் காண முடியாது. அப்படியே பிறந்திருந்தாலும் அன்றைய அசர் தொழுகையை நிபாஸ் உபாதையுடன் பாத்திமா (ரழி) தொழுதிருக்க முடியாது.

பிரசவ பெருந் தொடக்குள்ள பெண்கள் அதிலிருந்து சுத்தமாகும் வரை தொழக் கூடாது என்றும், அவ்விதம் விடுபட்ட தொழுகையை (களாத்) திருப்பித்  தொழ வேண்டியதில்லை என்ற அனுமதியும் நபி (ஸல்) தந்திருக்க அவரது அருமை மகளார் பாத்திமா(ரழி) அவர்களே அதனை ஏற்கவில்லை என்கிறீர்களா? சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

முஹைய்யத்தீன் அப்துல்காதிர் ஜெய்லானி என்பதில் முஹைய்யத்தீன் என்றால் தீனை  உயிரூட்டியவர்  என்ற  பொருளில் அப்துல்காதிர் ஜெய்லானி (ரஹ்)  அவர்கள்  தான்  இஸ்லாமிய  தீனை உயிரூட்டினார் என ஒரு சிலர் கூறித்திரிவது போல்  பாத்திமா (ரழி)  அவர்களின் பெயரால்  உருவான  ஒரு கதை  இது என்பதை அறியவும்.

ஐயம் : திருமணத்தன்று தீட்டு ஆனால் அன்று முதலிரவு வைத்துக் கொள்ளலாமா. அப்துல்லா,  விருத நகர்.

தெளிவு : வைத்துக்கொள்ளக் கூடாது. புதுமணம் பிரியப்போகும் மணப்பெண்ணின் மாதவிடாய் காலங்களை தோராயமாக கணக்கிட்டோம் தமது தாய்மார்கள், சகோதரிகள் மணப்பெண்ணுக்கு திருமண நாளை நிச்சியிக்க வேண்டும். இஸ்லாத்தில் நல்ல நாள், கெட்ட நாள், சார்ந்த முகூர்த்தம் போன்ற சடங்குகளில்லை.  எனவே மாதவிடாய் நாட்களை அனுசரித்து திருமண நாளை நிச்சயித்தல் சிறப்பாகும். அல்லது தாம்பத்யத்தைப்பற்றி  பற்பல எதிர்பார்ப்புகளுடன்  வரும்  புதுமனைத்  தம்பதிகளுக்கு  இது போன்ற  ஏமாற்றங்கள்  ஏற்படும்.  இப்போது  தங்களது  கேள்விக்கு  குர் ஆன்,  ஹதீஸ்படி விடையைக்  காணுங்கள்.
(நபியே!) மாதவிடாயைப் பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் :”” அது (அசுத்தமான) ஓர் உபாதை Š எனவே  மாதவிடாய்க்  காலத்தில் பெண்களை விட்டு விலகி, அவர்கள் சுத்தமாகி விட்டால், அல்லாஹ்  உங்களை  ஏவிய  முறையில் அவர்களிடம்  செல்லுங்கள்  நிச்சயமாக அல்லாஹ்(செய்து விட்ட பாவத்திற்காக)  பாவமன்னிப்பு கோருபவர்களையும், சுத்தமானவர்களையும் பிரியப்படுகிறான்.  (அல்குர் ஆன் 2:222)

தாங்கள் கேட்டது போலவே அன்றைய மக்களும் மாதவிடாய் பற்றி ரசூல் (ஸல்) அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள் அதற்கான பதிலை அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள். மாதவிடாய் ஒரு அசுத்தமான உபாதை அசுத்தமான பெண்ணுடன் புணர்வதை அல்லாஹ் விரும்பவில்லை. எனவே தான் மாதவிடாய் உபாதையால் பாதிக்கப்பட்ட உங்களது மனைவிŠமாற்று மதத்தினர் போன்று தீட்டானவள்  என்று ஓரம் கட்டி வைத்து விடாமல்Šஅவர்கள் சுத்தமாகும்  வரை அவர்களிடம் (போகிக்க) அணுக வேண்டாமென ஆணையுமிடுகிறான் அல்லாஹ்.  அல்லாஹுவின்  ஆணைக்கு  மாறு  செய்வது பெருங்குற்றம். ஹராமாக பாவிக்கப்பட வேண்டியது என்பதில் இரு கருத்துக் கொள்ள இடமே இல்லை.

திருமண  செய்வதும்,  மனைவியுடன்  ஹலாலான  முறையில்  உடல்  உறவு  கொள்வதும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்பட்ட அழகிய வழிமுறை(சுன்னத்) ஆகும். அதுவும் ஒரு மனிதனின் முதல் திருமணத்தில், முதலிரவில்Šமாதவிடாய் மனைவியுடன் புணர்வது கொண்டு ஒரு ஹாராமான செயலால்  அதனை  தொடங்கலாமா? ஒரு சில (3 முதல்5) நாட்கள் பொறுத்திருந்தால் மாதவிடாய் நின்றதும். அல்லாஹ் கூறியும் படி, அவன் ஏவிய வழியில், ஹலாலான முறையில் செல்லலாமே! அது ஒரு சிறப்பான வணக்கமாக ஆகுமே!

புதுமணம் முடித்த தம்பதியர், இன்னும் மூன்று, நான்கு நாட்கள் காக்கவேண்டுமா? என்று கேட்க நினைப்பது எங்களுக்கு புரிகிறது. அல்லாஹுவின் ஆணைக்கு மாறாக பதிலளிக்க முடியாதே! கிணற்று நீரை ஆற்று வெள்ளம் அடித்துச்செல்லாது! எனவே இவ்வளவு நாட்கள் மணமுடிக்காமல் உணர்வுகளை கட்டிவைத்திருந்தவர்கள், மாதவிடாய் 3 முதல்5 நாட்களிலும் கட்டிக்காத்து, மனைவி மாதவிடாய் அசுத்தத்திலிருந்து சுத்தமானதும் சேருவதே மார்க்கமாகும். ஏனெனில் அல்லாஹ் சுத்தமானவர்களை விரும்புகிறான். “” சுத்தம் ஈமானில் பாதி ”  என்பதும்  நபி மொழி (ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி,அஹ்மது, தாரமி )  ஆகும்.  அல்லாஹ் புதுமண தம்பதியர்களை அல்லாஹுவின் ஆணைக்கு முழுமையாக கட்டுபட்டு நடக்கவைக்க நாம் பிரார்த்திக்கிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம் : நமது  நாட்டு  முஸ்லிம்களுக்கிடையில்  புது வீடு கட்டியபின் ஆடு, கோழி இவைகளை பலி (காவு)  கொடுக்கப்படுகிறது.  இச்செயலை  மார்க்கம் (இஸ்லாம்)  அனுமதிக்கிறதா?  எலந்தை பு.னி.சபீர் அஹ்மது, துபாய்

தெளிவு : இச்செயலை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நபி (ஸல்) மதீனா வந்ததும் தான் தங்குவதற்காக ஒரு வீடு, மக்கள் தொழ குபா பள்ளி, மஸ்ஜிதுந்தபவி போன்றவற்றை உருவாக்கியார்கள். அதற்காக எந்த பலி (காவு)யும் கொடுக்கவில்லை.

மற்றும் அவரது அன்புத்தோழர்கள் தங்களுக்காக பலர் வீடு கட்டினர். அவர்களும் புது வீட்டிற்காக “” காவு ” கொடுத்ததிற்கு ஆதாரமில்லை; இமாம்கள் காலத்திலும்  இப்பழக்கங்களில்லை.

புது  வீடு கட்டி  குடிபுகுவதற்கு முன் ஏதாவது கோழி, ஆடு, போன்றவற்றை பலிகொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லையயனில் ஏதாவது அசம்பாவிதம்  ஏற்படும், குடிபுகுந்தவர்கள் நோய் நொடிகளில் பாதிக்கப்படுவர், செய்யும் தொழில், வியாபாரம் போன்றவற்றில் நஷ்டம் ஏற்படும் என்ற மூட நம்பிக்கை மாற்று மதத்தினரிடம் அவரவர்களது மதக்கோட்பாடாக இருந்து வருகிறது. அவர்களுடன் ஒன்றுபட்டு வாழும் நம்மிடமும் (முஸ்லிம் களிடம்) இம்மூடச்சடங்கு தொற்றிக்கொண்டது “” வல்கத்ரி கைரிஹி மினல்லாஹி த ஆலா ” நல்லதும், தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்ற இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையை தகர்க்கும் மூடச்சடங்கு இது. இம் மூடச்சடங்குகளுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை.

வீடு  மாற்றவோ,  புது வீடு  புகவோ, பால்  காய்ச்சும்  பழக்கமும்  இம் மூடச்  சடங்குகளைச்  சார்ந்ததே!   அல்லாஹுவின்  மீது  திடமான  நம்பிக்கைக் கொண்டு  மேற்கூறிய  இஸ்லாமிய அடிப்படைக் கொள்ளையை நினைவில் வைத்து, பிஸ்மில்லாஹ் கூறி புதுவீடு புகுங்கள் அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக!

ஐயம் :பொதுவாக துபாய் நாட்டு அரபிகள் “” பித்ர்” ஸதக்காவை பணமாக கொடுக்கக் கூடாது. அரிசி, கோதுமை, மாவு போன்றவற்றை மட்டுமே கொடுக்கவேண்டும் என்கின்றனர்  இதற்குத்  தகுந்த  ஆதாரம்  உண்டா?  எலந்தை பு.னி. சபீர் அஹ்மது, துபாய்

தெளிவு : நபி(ஸல்) அவர்கள் காலத்தில் உணவுப் பொருட்களிலிருந்து நாங்கள் ஒரு “” சாஉ” பித்ராவாக கொடுத்துக் கொண்டிருந்தோம். என அபூசயித் அல்குத்ரி (ரழி) அறிவிக்கும்  ஹதீஸ்,  புகாரி,  முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா, முஸ்னது அஹ்மது போன்ற ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றுள்ளது.

மேற்படி  ஹதீஸ்படி  நபி (ஸல்)  அவர்களின்  ஆணைக்கு முற்றும் வழிபட்டு நடந்த நபித்தோழர்கள், உணவு பொருட்களான பாலாடை, பேரீத்தம்பழம்பார்லீ, உலர் திராட்சை  போன்ற  விலை உயர்ந்த  பொருட்களையும்  பித்ராவாக  கொடுத்திருப்பதற்கு  ஹதீஸ் நூற்களில் பல ஆதாரங்களுள்ளன. ஆனால்   பித்ராவாக  பணம்,  காசு   கொடுத்ததற்கு நாமறிந்தவரை எந்த ஹதீஸ் ஆதாரமில்லை.  ஆனால் நபி (ஸல்) காலத்திலோ, ஸஹாபாக்கள், இமாம்கள்   காலத்திலோ,   ஸஹாபாக்கள்,   இமாம்கள்   காலத்திலோ   நாணய   புழக்கமில்லாமலில்லை.   இருப்பினும்  பணம்,  காசு  நாணயமாக கொடுத்ததித்ற்கு ஹதீஸ் ஆதாரமில்லை.

ஐயம் : நபி(ஸல்) அவர்களை படைக்கவில்லை என்றால் லவ்ஹுல் மஹ்பூல், கலம், அர்ஸ் எதையும் படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் சொன்னதாக ஹதீஸ் குதூஸியில் இருக்கிறது. இதைத்தான்  சீறாப்புராணத்தில் உமறுப்புலவர் பாடியுள்ளார் என்று கூறப்படுவது உண்மைதானா?
மு. யூசுப்ரஹ்மதுல்லாஹ், நாகூர்.

 

தெளிவு : தாங்கள் கேட்டுள்ள செய்தி ஹதீஸ்குதூஸி என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும். இதனை தாங்கள் எந்த நம்பகமான ஹதீஸ் நூற்களிலும் காண  முடியாது.  ஒளியிலிருந்து  படைக்கப்பட்டவர்கள்  நபி (ஸல்)  என்ற  இட்டுக்கட்டப்பட்ட  ஹதீஸை  மூலக்கருத்தாகக் கொண்ட மெளலூது, ராத்தீப்,  புர்தா  போன்ற  கற்பனை  காவியங்களில் மட்டுமே இதனைக் காணமுடியும். இதே அடிப்படையில் தமிழில் உருவான சீறாப்புராணத்தில் இக்கருத்து இருக்கிறது. இருப்பதும் வியப்புக்குரியதல்ல. இதனை மார்க்க ஆதாரமாகக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை, குர் ஆன் ஹதீஸ்களில் உரசிப்பார்த்தே  நாம்  ஏற்க  வேண்டும்.

குர்ஆன், ஹதீஸ் கருத்துக்களுக்கு மாறாக இது இட்டுக்கட்டப்பட்டது, இஸ்லாமியக்கொள்கைக்கு புறம்பானது என்பதை நமது அந்நஜாத் ஜூன் 1987 இதழில்  விளக்கியுள்ளோம்.  தயவு  செய்து  பார்கக்வும்.

 

ஐயம் :  “” எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர்கொடுத்தாய் (அல்குர் ஆன் 40:11) ” என்ற இறை  வசனத்தில்  இரு முறை  மரிக்கச்  செய்ததாகவும், இருமுறை உயிர் கொடுப்பதாகவும்,  அல்லாஹ் கூறுகிறான். இவ்வுலகில் பிறக்கும் போதும், மறுமையில்  எழுப்பப்படும்  போதும்  ஆக  இரு முறை உயிர் கொடுக்கிறான். “” இரு முறை மரிக்கச் செய்தாய் ” என்பதன் பொருள் விளங்கவில்லை. குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும். றீ.னி.ய.ஷாஹுல் ஹமீது, ய.சி., P.லி.யலிமு:4157 தமாம்.

தெளிவு : குர்ஆனே குர் ஆனுக்கு அழகிய விளக்கமா (தப்ஸீரா)க இருக்கிறது. தங்களின் கேள்விக்கு கீழ்காணும் குர்ஆன் வசனங்களைப் பார்கக்வும், (மனிதர்களே!)  உயிரற்றவர்களாக  இருந்த  உங்களுக்கு  அவனே  உயிருட்டியிருக்க, நீங்கள் அல்லாஹுவை  எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்?  பின்னும் அவனே  உங்களை  மரிக்கச்  செய்வான்;  பின்னும்  அவனே  உங்களை  உயிர்ப்பிப்பான்.   (அல்குர் ஆன் 2:28).

இவ்வசனத்தில் உயிரற்றவர்களாக. (அதாவது மரித்தவர்களாக)இருந்த உங்களுக்கு அவனே உயிருட்டினான் என அல்லாஹ் ஆரம்பித்து கூறுகிறான்அதாவது  உங்களது  கூற்றுப்படியே  நாம்  இவ்வுலகில்  பிறப்பதற்கு  முன்Šஏன்?  தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன் உயிரற்றவர்களாக அவரவர்தந்தையின் முதுகெலும்புகளில் விந்தாக இருந்தோம்.  இதனை  குர் ஆனின்  தலைசிறந்த  விளக்கவுரையாளர்  இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்.நீங்கள் உங்களது தந்தைகளின் முதுகெலும்புகளில் குழந்தையாக உருவாகும் வரை மரித்தவர்களாக இருந்தீர்கள். (ஆதாரம்: இப்னு ஜரீர்).

ழஹ்ஹாக்  (ரஹ்)  கூறுகிறார்கள்  :  மண்ணாக  இருந்த  மனிதனை  விந்தாக்கிய  இறைவன். மரித்த நிலையில் வைத்து பின்  குழந்தையாக உயிரூட் டுகிறான். மனித உருவற்று நாம் இல்லாமல் இருந்த நிலையைமரித்த நிலையாக அல்லாஹ் காட்டுகிறான். ஒரு ஆல விதைக்குள்ஆலமரமிருக்கிறது அவ்விதை சரியான நிலையில் நிலத்தில் ஊன்றப்பட்டு, அதனது வளர்ச்சிக்கான அனைத்து வசதிகளும் கிடைக்கும் வரை அவ்வாலமரம் அவ்விதைக்குள் மரித்தநிலையில் உள்ளது என்பதை எல்லோரும் உணர்வர். அதே நிலையில் நாம் மரித்த நிலையிலிருந்து உருவானோம்.

இக்கூற்றை நிரூபிக்கும் வகையில் மற்றொரு இடத்தில் அல்லாஹ் மனிதனை வினவுவதையும் பாரீர் :
இவர்கள் ஒன்றுமின்றித் தாகமாகவே உண்டாகிவிட்டானரா அல்லது, இவர்கள் தம்மைத் தாமே உருவாக்கிக் கொண்டனார? அல்லது, வாகனங்களையும், பூமியையும் தாமே சிருஷ்டித்தார்களா?  (அல்குர் ஆன்: 52:35,36)

இவ்விறை வசனம் மூலம் நாம் நாமாக, ஒன்றுமின்றி உருவாகவில்லை என்பதை உணரலாம். அதாவது நாம் ஏதோ ஒரு பொருளாக இருந்தோம். அதில் நமது மனித உருவம் மரித்த நிலையில்Šஆல விதையில் ஆலமரம் இருப்பது போலŠஇருந்தது என்பதையும்
அறியலாம். இதனையே  முதல்  மரித்தல். அல்லாஹுவின் “”லவ்ஹுல் மஹ்பூழ் ” படி இவ்வுலகில் நடக்க இருப்பவை அனைத்தும் படைக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மரித்த நிலையில் உள்ளது. அதிலிருந்து அவ்வப்போது உயிரூட்டி மனிதனுக்கு தனது சக்தியின் வலிமையை அல்லாஹ் காட்டுகிறான்எனவே தான் நம்மை  அல்லாஹ்  இருமுறை  உயிரளித்ததாகவும், நாம் கடைசி நாளில் வாக்கு மூலம் கொடுக்கப்போவதாக அல்லாஹ் 40:11ல் குறிப்பிட்டுக் காட்டுகிறான், அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம் :  நான்  இலங்கையில்  இருந்து  தொழிலுக்காக  சவூதி அரேபியா வந்தால் ஹஜ்ஜு செய்தேன். தொழிலுக்காக வந்த இடத்தில் ஹஜ்ஜு செய்தது ஏற்றுக்கொள்ளப்படுமா?  றீ.னி.க்ஷி. நாஸர், ரியாத்

தெளிவு : எவர்கள் பிரயாணம் செல்லச் சக்தியுடையவர்களாக  இருக்கிறார்களோ அத்தகையோர் மீது ஹஜ்ஜு செய்வது கடமையாகும். (3:97)

ஹஜ்ஜூடைய காலங்களில் யார் எங்கு இருந்து கொண்டிருக்கிறார்களோ, அங்கிருந்து ஹஜ்ஜூக்காகப் பிரயாணம் செய்ய சக்தியுடையவர்களாக இருந்தால், அவர்கள் மீது ஹஜ்ஜு செய்வது கடமையாகும். நீங்கள் தொழில் காரணமாக ரியாதில் இருந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ரியாதில் இருக்கும்நிலையில் ஹஜ்ஜுடைய காலம் வருகின்றது. ஹஜ்ஜை நிறைவேற்றுகிறீர்கள். இதன் காரணமாக உங்கள் ஹஜ்ஜூ ஏற்றுக் கொள்ளப்படாது என்று கூறுவதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லை, அப்படி வீண் சந்தேகங்களைக் கிளப்புகிறவர்கள் ஆதாரங்களின் அடிப்படையில் கூறவில்லை. மக்காவிற்கு சமீபமான நகரங்களில், நாடுகளில் இருந்தும், ஹஜ்ஜை  நிறைவேற்றுவகுற்கு  எல்லா வாய்ப்புக்களும் வசதிகளும் இருந்தும், இப்படிப்பட்ட தவறான எண்ணத்தின் காரணமாக ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இருப்பவர்களும் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாக ஆக நேரிடும் என்பதையும் அல்குர் ஆன் 3:97 வசனம் எச்சரிக்கை செய்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
———————————————————————————————————————————–
நபி வழியில் நம் தொழுகை (தொடர் Š 18)
அபூ அப்துர்ரஹ்மான்
நபியே ! சொல்வீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருப்பின் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான் மேலும், உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாக  இருக்கிறான்.(3 :31)
“” என்னைத் தொழுக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள் ” Š மாலிக் பின் ஹுவைரிஸ் (ரழி) (புகாரி, முஸ்லீம்)

சென்ற மே 88 இதழில் நிய்யத்து செய்வது, நிலை நிற்பது தக்பீருத் தஹ்ரீம், தொழுகையின் போது கைகளை உயர்த்துவது, கைகளை நெஞ்சின் மீது வைத்துக்கட்டும் முறை, தக்பீருக்குப்பின் ஓதும் துஆ ஆகியவற்றின் விபரங்களைப் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் இவ்விதழில் தொழும்போது பார்வை எங்கிருக்க வேண்டும், தொழுகையில் ஒருவர் தமது இமாமைப் பார்ப்பது தவறாகாது. சூரத்துல் ஃப்Vத்திஹா ஓதுவதற்கு முன் “” அஊது”
ஓதுவது சுன்னத்து, சப்தமின்றி மெதுவாக, ” பிஸ்மில்லாஹ் ”ஓதுவது, ஆகியவற்றைக் காண்போம், தொழும் போது பார்வை எங்கிருக்க வேண்டும்?

1.   அபூஹுரைரா (ரழி) அறிவித்துள்ளார்கள்:-
நபி (ஸல்) அவர்கள் தொழும் போது தமது பார்வையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாயிருந்தார்கள். அப்போது “” ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் தமது தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள் ” (23:1,2) எனும் வசனம் இறங்கியது, அதன் பின்னர் தமது தலையைக் கீழே தாழ்த்திக் கொண்டார்கள். (ஹாக்கிம்)

2.  அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி (ஸல்) அவர்கள் த­ஹ்ஹுது (இருப்பில்) அமரும் போது தமது வலக்கையை வலத்தொடை மீதும்,  இடக்கையை இடது தொடை மீதும் வைத்து, ஆட்காட்டி விரலைக்கொண்ட சமிக்கை செய்வார்கள். அவர்களின் பார்வை தாம் சமிக்கை (செய்யும் அவ்விரலை) விட்டும் அப்பால் செல்லாது. (அவ் விரைலையே  நோக்கியதாகயிருந்து  கொண்டிருக்கும்)  (அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

மேற்காணும்  இரு  ஹதீஸ்களும்  தொழுபவர்  தாம்  நிலையிலிருக்கும்  போது  எதிரில்  உள்ளவற்றின்  மீது  தமது பார்வையைச் செலுத்தாமல் தமது தலையை கீழே தாழ்த்திய நிலையில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், இருப்பில் அமரும் போது தமது பார்வை’ சமிக்கை செய்யும் அவ்விரலை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.

ஆ²ல்  தெழுகிறவர்  தாம்  நிலையில்  இருக்கும் சந்தர்ப்பத்தில்  தாம் தொழும் இடத்தைப் பார்த்தவராக இருப்பது விரும்பத்தக்கது என்று அறிவிக்கப்படும் அறிவிப்பு “” முர்ஸல்” ஆகும். (ஸஹாபின் பெயர் கூறப்படாது தாபியீன்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் என்று அறிவிப்பதாகும்).  இவ்வாறே  நிலையின் போது இரு பாதங்களையும் பார்த்தவண்ணம் இருத்தல் வேண்டும் என்ற அறிவிப்பும் முறையானதல்ல.
ஏனெனில் அதன்  அறிவிப்பாளர் வரிசையில் “”மூஸப்னு அல்துல்லாஹ்”  என்ற  நம்பகமற்ற  ஒருவர்  இடம்  பெற்றுள்ளார். ஆகவே அவ்வறிவிப்பு பலஹீனமானதாகும்.

மேலும்,  இது  போன்ற  ருகூஉவின்  போது  இரு  கால்களின்  கட்டை  விரல்களை  பார்க்க வேண்டும் என்பதற்கும் ஸூஜூதின் போது  மூக்கின்  நுனிப் பகுதியைப்  பார்க்க  வேண்டும் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது.

தொழுகையில் ஒருவர் தமது இமாமைப்பார்ப்பது தவறாகாது :
1. அபூமஃமர் (ரழி) அறிவித்துள்ளார்கள் :-
நாங்கள் ஒரு முறை கப்பாபு (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ளுஹ்ரு, அஸ்ரு, ஆகிய தொழுகைகளில் கிராஅத் ஓதிக் கொண்டிருந்தார்களா?” என்று  கேட்டோம்.  அதற்கு  அவர்கள் “ஆம்’ என்றார்கள் பின்னர், நாங்கள் அதை எவ்வாறு நீங்கள் அறிந்து  கொண்டிருந்தீர்கள்  என்கிறோம்,
அதற்கவர்கள் அவர்களின் தாடியின் அசைவினால் என்று கூறினார்கள். (புகாரீ).

இந்த  ஹதீஸின்  மூலம்  சஹாபாக்கள்  தாம்  தொழும் போது தமது இமாமாகிய நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் தாடி அசைவையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்  என்பதைப்  பார்க்கிறோம்.

2.  பர்ராஉ (ரழி) அறிவித்துள்ளார்கள் :
ஸஹாபா பெருமக்கள் நபி (ஸல்) அவர்களுடன் தாம் தொழுது கொண்டிருக்கும் போது, நபி (ஸல்) அவர்கள் ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தியபோது அவர்களும் (அவ்வாறே உயர்த்தி) நபி (ஸல்) அவர்கள் ஸூஜூது செய்யும் வரை அவர்களைப் பார்த்தவர்களாக நின்று கொண்டிருப்
பார்கள். (புகாரீ).

3. இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி(ஸல்)  அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம்  ஏற்பட்டது  அப்போது  அவர்கள்  தொழுதார்கள். (பின்னர்) ஸஹாபாக்கள்   நபி  (ஸல்)  அவர்களை  நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் (தொழும்போது) நிலையில் நின்று கொண்டிருக்கும் சமயம் ஏதோ ஒன்றை உங்கள் கையினால் பறித்தவர்களாக  நீங்கள்  பின்புறமாக  நகருவதைக்  கண்டோம்  (அது என்ன?)  என்றார்கள் அதற்கவர்கள், நான் நிச்சயமாக (அது சமயம்)  சுவர்க்கத்தைப்
பார்த்தேன். அப்போது அதன் ஒரு திராட்சைக் குழையைப் பறிக்க முயன்றேன். அவ்வாறு நான் அதைப் பறித்திருந்தால் நீங்கள் இவ்வுலகம் உள்ள காலம் வரை அதைச் சாப்பிட்டுக்கொண்டிருப்பீர்கள் என்று கூறினார்கள். (புகாரீ).

மேற்காணும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தாம் தொழும்போது சுவர்க்கத்தைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை அறிகிறோம். ஒருவர்  தாம் தொழும் பொழுது வானத்தைப் பார்ப்பது முற்றாக கண்டிக்கப்பட வேண்டியதோர் செயலாகும்.

1. அபூஹுரைரா (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தாம் தொழும்போது தமது பார்வைகளை வசனத்தின் பக்கம் உயர்த்திய வண்ணம் இருந்து கொண்டிருப்போர் அதைத் தவிர்த்துச் கொள்வார்களாக! இன்றேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுப் போய்விடும். ( முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)
சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதற்கு முன் “” அஊதுபில்லாஹி மின்ஷ்ஷைத்தானிர்ரஜீம்” என்று ஓதுவது சுன்னதாகும்.

(நபியே!) நீர் குர் ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானைவிட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக! (16:98)

அஸ்வத் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நான் உமர் (ரழி) அவர்களை அவர்கள் தொழ ஆரம்பிக்கும்போது “” சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரகஸ்முக்க வ த ஆலா ஜத்துக்க வலா இலாஹ கைருக்க ” என்று தாம் ஓதிய பின் “” அஊது” ஓது பவர்களாகக் கண்டேன். (தாரகுத்னீ).

முதல் ரகா அத்தில் மட்டும் “” அஊது” ஓதுவது :
அபூஹுரைரா (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது ரகா அத்துக்கு எழுந்திருந்தால் சப்தமின்றி மெதுவாக எதுவும் ஓதாது, “” அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்”
என்று கூறி கிராஅத்தைத் துவங்கிவிடுவார்கள்.  (முஸ்லிம்).

அனைத்தும் ரகா அத்துகளிலும் “”பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ” என்று ஓதுவது :
நயீமுல் முஜம்மிர் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நான் ஒரு முறை அபூஹுரைரா (ரழி) அவர்களுக்குப் பின்புறமாக நின்று தொழுது கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “” பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் ” என்று ஓதிய பின்னர் “” உம்முல்” குர் ஆன்” சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதினார்கள். (நஸயீ).
சப்தமின்றி மெதுவாக “” பிஸ்மில்லாஹ் ” ஓதுவது

(1) அனஸ்பின் மாலிக் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களுடனும், அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியவருடனும் தொழுதிருக்கிறேன், ஆனால் அவர்களில் எவரும்
“” பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்” என்று ஓத நான் கேட்டதில்லை. (முஸ்லிம், அஹ்மத்).

(2)  மற்றொரு அறிவிப்பில், நான் நபி (ஸல்)  அவர்களின் பின்புறமாக, மேலும்  அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியவர்களின் பின்புறமாகவும் நின்று தொழுதிருக்கிறேன். ஆனால் அவர்களில் எவரும் “” பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ” என்று சப்தமிட்டு ஓதிக் கொண்டிருக்கவில்லைஅனஸ் (ரழி), நஸயீ, அஹ்மத், இப்னுஹிப்பான், தாரகுத்னீ, தப்ரானீ).

(3) மற்றொரு அறிவிப்பில் நான், நபி (ஸல்) அவர்கள். அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான்(ரழி) ஆகியவர்களுக்குப் பின்புறமாக நின்று தொழுதிருக்கிறேன்; அவர்கள் (அனைவரும்) “அல்ஹாம் துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்றே (தமது தொழுகையைத்) துவங்கிக் கொண்டிருந்தார்கள்.

“” பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று கிராஅத்தின் ஆரம்பத்திலோ, கடைசியிலோ, ஓத மாட்டார்கள்.  அனஸ் (ரழி) (முஸ்லிம், அஹ்மத்)

(4) அனஸ் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். அப்போது, “” பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பதை எங்களுக்கு கேட்கும்படி ஓதவில்லை.(இவ்வாறே) ஆபூபக்கர் (ரழி) உமர் (ரழி) ஆகியவர்களிடமிருந்து அதை நாங்கள் கேட்டதில்லை. (நஸயீ).

(5) அனஸ் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நான்  அபூபக்கர் ஸித்தீக் (ரழி), உமரு பின் கத்தாபு (ரழி) உஸ்மானு பின் அஃப்பான் (ரழி) ஆகியவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதிருக்கிறேன்.
அவர்கள் அனைவரும் தொழ ஆரம்பித்தால் “” பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ” என்று (சப்தமிட்டு) ஓதாதவர் களாயிருந்தார்கள். (மு அத்தா)

(6) அப்துல்லாஹ்பின் முகஃப்பல் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நான்  (தொழுகையல்)  “” பிஸ்மில்லாஹிVரஹ்மானிVரஹிம்”  என்று (சப்தமிட்டு) கூறுவதை எனது தந்தை செவியுற்று, எனது அருமை மகனே ! நீ
சன்மார்க்கத்தில்  புதுமையைŠ பித் அத்தைப்  புகுத்துவரை  உனக்கு  நான்  எச்சரிக்கை  செய்கிறேன். நான் நபி (ஸல்) அவர்களுடனும். அபூபக்கர்
(ரழி), உமர் (ரழி)  உஸ்மான் (ரழி)  ஆகியவர்களுடனும்  தொழுதிருக்கிறேன்.  ஆனால்  அவர்களில்  எவரும்  அதைக் கூறியதாக நான் செவியுற
வில்லை. ஆகையால் அதை  நீர் (சப்தமிட்டுக்)  கூற வேண்டாம்.  நீர் தொழ ஆரம்பித்தால்  “” அல்ஹம்துல்லில்லாஹி ரப்பில் ஆலமீன் ” என்பதை
மட்டும் (சப்தமிட்டுக்) கூறுவீராக !          (திர்மதீ, நஸயீ, அஹ்மத்)
ஹதீஸ்  கலா வல்லுநர்களில்  உகைலீ (ரஹ்)  என்பவர்களும்,  தாரகுத்னீ (ரஹ்)  அவர்களும் “” பஸ்மில்லாஹ் ” சப்தமிட்டு ஓதுவதற்கான ஹதீஸ்களில் ஒன்று கூட ஸஹீஹானதாக இல்லை உன்று கூறியுள்ளார்கள்.
ஆகவே சஹாபா பெருமக்கள், மேலும் அவர்களுக்குப் பிறகு வந்துள்ள சன்மார்க்க மேதைகள் அனைவரும் “” பிஸ்மில்லாஹ் ”வை சப்தமிட்டு ஓதாது;அதை சப்தமின்றி மெதுவாகவே ஓதி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
( இன்ஷா அல்லாஹ் தொடரும்)
———————————————————————————————————————————–

Previous post:

Next post: