உணரப்படாத தீமை வட்டி!

in 2018 பிப்ரவரி

அப்துல்லாஹ்

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மை யாக மூமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையயன் றால் அல்லாஹ்விடமிருந்தும், அவன் தூதரி டமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட் டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா என்பதை (வட்டி) தொழில் செய்யும் முஸ்லிம்கள் உணர்வார்களா?

உணர்ந்து விட்டால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்:
“நீங்கள் தவ்பாச் செய்து மீண்டு விட்டால் உங்கள் பொருள்களின் அசல் முதல் உங்களுக்குண்டு. (கடன் பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள். (2:27)

வட்டியைப் பற்றி ஹதீஸ் கூறுவது:
வட்டி வாங்குவது-வட்டி கொடுப்பது- வட்டிக் கணக்கை எழுதுவது – வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் அவர்கள் அனைவரும் (பாவத் தில்) சமமானவரே. (அறிவிப்பாளர் : ஜாபிர் (ரழி)ஆதாரம் : முஸ்லிம் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)

இறைவன் நான்கு போர்களை சுவர்க்கத் திற்கோ அல்லது அவனுடைய சுகத்தை அனுபவிக்கவோ விடமாட்டான். அவர்கள்,
1. குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்
2. வட்டி வாங்கித் தின்றவர்கள்
3. அநாதைகளின் சொத்தை நியாயமாக அபகரித்தவர்கள்
4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா,
ஆதாரம்: ஹாக்கிம், (ரழி)

அறிந்து கொண்டே ஒரு திர்ஹம் வட்டி வாங்குவது, 36 முறை விபச்சாரம் புரிவதை விட மோசமானதாகும்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா, ஆதாரம்: அஹ்மத், தாரகுத்னீ, பைஹகீ.

வட்டி என்றால் என்ன?
நபியே! நாமே (வஹீ முலம்) இவ் வேதத்தை உம்மீது இறக்கினோம்! நீர் அதை மக்களுக்கு விளக்கிக் காட்டுவதற்காக.
(அல்குர்ஆன்16:44)

மேலே உள்ள இறை வசனத்தில் மூலம் குர்ஆனில் வரும் வட்டிக்கு விளக்கம் தர அங்கீகாரம் (உரிமை) பெற்ற நபி(ஸல்) அவர் கள் அதைப் பற்றி கூறுவதை கீழே காண் போம். பலவிதமான கொடுக்கல் வாங்கலில் நபி(ஸல்) அவர்கள் இவையயல்லாம் கூடும். இவையயல்லாம் வட்டி (ஹராம்) கூடாது என்று கூறியுள்ளதால், குறுகிய கண்ணோட்டத்துடன் அணுகாமல் எல்லா ஹதீஸ்களை யும் கருத்தில் கொண்டு அதைப் பற்றி அறிய முற்பட வேண்டும்.

1. வட்டி எல்லாம் தவணை முறையில் தான். கைக்குக்கை ஏற்றும் பொருட்களில் வட்டி இல்லை. (உஸாமத்துபின் ஜைத் (ரழி), புகாரீ, முஸ்லிம்)

2. உங்களில் ஒருவர் மற்றொருவருக்குக் கடன் கொடுத்திருக்கும் போது, கடன் வாங் கியவர் கடன் கொடுத்தவருக்கு ஒரு பொருளை அன்பளிப்புச் செய்தால் அல்லது தமது வாகனத்தில் இலவசமாக ஏற்றினால், அப்போது கடன் கொடுத்தவர் அந்த அன் பளிப்புப் பொருளை ஏற்றுக் கொள்ளவோ, அவ்வாகனத்தில் இலவசப் பிரயாணம் செய் யவோ கூடாது. ஆனால் அது போன்ற பரோபகாரத்தை கடன் வாங்கும் முன்பே இவர் செய்பவராயிருந்தாலே அன்றி.
(அனஸ்(ரழி), இப்னு மாஜ்ஜா, பைஹகீ)

3. தங்கத்தை தங்கத்திற்கு பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்கு பதிலாகவும், மணிக் கோதுமையை மணிக்கோதுமைக்கு பதிலாகவும், தொலிக் கோதுமையை தொலிக் கோதுமைக்கு பதிலாகவும், பேரீச்சம் பழத்தை, பேரீச்சம் பழத்திற்கு பதிலாகவும், உப்பை உப்பிற்குப் பதிலாக வும் சம எடையில், சம தரத்தில், கரத்திற்கு கரம் விற்றுக் கொள்ளுங்கள். இவ்வினங்கள் பேதகப்படுமானால் கரத்திற்கு கரம் நீங்கள் விரும்பிய பிரகாரம் விற்றுக் கொள்ளுங்கள். எவர் கூடுதலாகக் கொடுக்கவோ அல்லது கூடுதலாக வாங்கவோ செய்த போதினும் அது வட்டியாகும். விற்பவரும் வாங்குபவ ரும் சமமானவரே. (உபாதாத்துப்னிஸ் ஸாமித், முஸ்லிம், திர்மிதி)

4. நபி(ஸல்)அவர்களிடம் பிலால்(ரழி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி (ஸல்)அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரீச்சம்பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரீச்சம் பழம் வாங்கினேன் என்றார்கள். அப் பொழுது நபி(ஸல்)அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர், இவ்வாறு நீர் வாங்க நாடினால் முதலில் (உமது) பேரீச்சம் பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை (விலை கொடுத்து) வாங்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள்.
(அபூஸயீது, புகாரீ, முஸ்லிம், முஸ்னத், அஹ்மத்)

5. நான் கைபர் தினத்தன்று அங்கு மணிகள் இணைந்துள்ள தங்க மாலை ஒன்றை 12 திர்ஹத்திற்கு வாங்கினேன் அதைப் பிரித்த பொழுது தங்கத்தின் மதிப்பு 12 திர்ஹத்திற்கும் அதிகமாக இருப்பதை அறிந்து நபி(ஸல்) அவர்களிடம் சென்று விளக்கம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்மாலையிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்காதவரை விற்க வேண்டாம் என்று கூறினார்கள். (பிரித்த பின் தங்கத் திற்கு தங்கம் சம எடையிலோ அல்லது அதற்கு உரிய விலையிலோ விற்கப்பட லாம்) (ஃபழா லாபின் அபீஉபைத்(ரழி), முஸ்லிம், திர்மிதி, நஸயீ)

6. நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார் கள் : நிச்சயமாக வட்டிய பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னு மஸ்ஊத் (ரழி), அஹ்மத்)

7. வட்டித் தொழில் செய்து சாப் பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடு மாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப் படுவார். (இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு அபூஹாத்திம்)

8. நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார் கள்: ஹராமான உணவை உட்கொண்டு வளர்ந்த உடல் சுவர்க்கம் பிரவேசிக்காது.
(அபூபக்ரு(ரழி), பைஹகீ)

9. நபி(ஸல்)அவர்கள் கூறி²ர்கள் : மக்களுக்கு ஒருகாலம் வரும். அக்காலத் தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற் றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது (சம்பாதித்துக் கொண்டு) இருப்பர்.
(அபூஹுரைரா(ரழி) புகாரீ)

எனவே நாம் மேற்காணும் ஹதீஸ் களின் வாயிலாக வட்டி பெரும்பாவம் என்பதையும் அதை விட்டும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை யும் உணருகிறோம்.

இத்தகைய பெரும்பாவாமான வட்டி யிலிருந்து விலகி இன்றைய உலகில் நாம் வாழ முடியாது. அப்படி வாழ முற்பட்டால் நாமும். நமது சமுதாயமும் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்க நேரி டும் என்று சிறிதும் அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வும் அவன் தூதரின் வாக்கும் எக்காலத்திலும் பொய்யாகாது என்பது முஸ்லிம்களாகிய நாம் அறிந்த ஒன்றேயாகும் .

வல்ல நாயன் தனது மறையில் கூறுகின்றான். “வட்டியை எந்த பரக்கத்தும் இல்லா மல் அழித்து விடுவான் ‘.(2:276)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: இறை வன் எனது உள்ளத்தில் போட்டான் நிச்சய மாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாத வரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகு மான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர் களாக! (இப்னு மஸ்ஊத்(ரழி), பைஹகீ)

எனவே நாம் எவ்வளவு அதிகமாக கஷ் டப்பட்டு உழைத்தாலும் இறைவனால் நமக்கு அளித்த ரிஜ்கிற்கு மேல் அடைய முடியாது; அடையுமுன் யாரும் மரணிக்க முடியாது. ஆகவே வட்டி என்ற ஹராமை தவிர்த்து, ஹலாலான வழியிலேயே முயற்சி செய்வோம். நமக்குள்ள ரிஜ்க்கு நம்மை வந்தே அடையும் என்ற நபி(ஸல்) அவர் களின் வார்த்தையில் உறுதிகொண்டு உழைப்போமாக.

வல்ல நாயன், அழியக்கூடிய இவ்வுலக அற்ப இன்பத்திற்கு ஆசைப்பட்டு வட்டி என்ற பெரும் பாவத்தில் விழுந்துவிடாமல் காத்து அழியாத நிலைத்திருக்கக்கூடிய மறு மையில், சுவர்க்கத்தின் எல்லா நற்பேறு களையும் நாமும், மற்றவர்களும் அடைய தவ்ஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்.

Previous post:

Next post: