நான் ஆலிம்/ஆலிமா ஆக முடியுமா?

in 2018 பிப்ரவரி

A. பஷீர் அகமது, புதுக்கோட்டை

மார்க்கத்தை முறையாக படிக்க வேண் டும், பிழையில்லாமல் திருகுர்ஆன் ஓத வேண்டும், முடிந்தவரை தாவா செய்ய வேண்டும் என்று என்னைப் போல, பல சகோதரிகளும் கனவுலகில் வாழ்கிறார்கள். 20, 25 வயதில் இருந்த ஆர்வம், வேகமெல்லாம் வயது ஆகஆக குறைந்து கொண்டே போகிறது. இப்பொழுது எனக்கு 50 வயது ஆகிறது. இன்னும் கூட ஒரு சின்ன பயான் நிகழ்ச்சி நடத்த ஆலிம் உலமாக்களை சார்ந்தே நிற்க வேண்டியுள்ளது. பரவா யில்லை, நீயும் ஆலிம் ஆகலாம் என்று சில ஆலிம் நண்பர்கள் ஊக்கமூட்டியதால் இப் பொழுது முதலாம் ஆண்டு (1st ஜும்ர) Part Time Alim Degree Course படிக்கின்றேன். எனது மனப் போராட்டம், சந்தேகம், கடந்து வந்த பாதை, ஆலிம்கள் என்னிடம் சொன்னது, வேண்டுகோள் ஆகியவற்றை இங்கே தமிழ் முஸ்லிம் சமூகத்தில் விவாதப் பொருளாக வைக்க விரும்புகிறேன்.

7 சம்பவங்களையும் 3 தரப்பின் தீர்வுகளையும் “”அந்நஜாத்” பத்திரிக்கை வாயிலாக முஸ்லிம் சமூகத்தில் முன் வைக்கின்றேன். இந்தக் கருப்பொருளை உலமாக்கள் சபையில் பேசலாமே, மற்ற ஏதாவது ஒரு இயக்கத்தின் சார்பாக வீடியோ விவாத அரங்கம் ஏற்பாடு செய்யலாமே என்று சிலர் சொன்னார்கள். அப்படி யாரும் செய்ய விரும்பினால் இந்தக் கட்டுரையை ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் கொண்டு, இந்தக் கட்டுரையை உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.

சம்பவம் : 1
2017ம் வருடம் ரமழானின் கடைசி தினங்கள், வாட்ஸ் அப், முகநூலில் வந்த ஒரு செய்தி இந்தியா முழுவதும் தீயாய் பரவுகிறது. படிக்க படிக்க மனம் கனக்கிறது. வாழ்க்கையில் ஒரு சோகமான பெருநாளில் பொழுது போகிறது. ஹரியானா மாநிலத்தில் ஜுனைதீன் என்ற வாலிபரின் உயிர் போன செய்தி (ஷஹீதான) அது. அந்த வாலிபனின் மூச்சு அந்த நாளில் நின்றிருக்கலாம். ஆனால் அவர் சுவாசிக்கும் போது கண்ட கனவு என்னுள் மட்டுமல்ல, பல்லாயிரம் பேரின் உள்ளங்களில் பிரவேசிக்க துவங்கியது என்று சொல்லலாம். அந்த ஜுனைதீன் என்ன கனவு கண்டார்? மர ணிக்கும்போது வயது 17 அல்லது 18 இருக்கலாம். 7 ஆண்டுகள் மதரஸாவில் ஆலிம் படிப்பு படிக்கின்றார். தன்னுடைய வாழ்நாளில் மார்க்க ஆசிரியராக பணி புரிய வேண்டும் என்றும், டெல்லி ஜும்மா மசூதியில் தொழுகை நடத்தும் அளவுக்கு தான் வளர வேண்டும் என்று தன் ஆசையை சொன்னாராம். ஆனால் அந்த வாய்ப்பு நடப்பதற்கு முன் இறைவனிடம் சென்று விட்டார்.

ஆனால் அந்த ஜுனைதீன் தனது ஆசையை நம்மில் விதைத்துவிட்டு சென்றதாக உணர்கிறேன். அவனை கொன்றவர்களை பழி தீர்ப்பதல்ல நமது நோக்கம். ஜுனைதீனின் கூலி இறைவனிடம் இன்ஷா அல்லாஹ் கிட்டும். ஜுனை தீனைப் போல நாமும் ஏன் மார்க்கத்தை போதிக்கும் ஆசிரியராக/ஆசிரியையாக வரக்கூடாது? அப் படியென்றால் முதலில் மாணவராக நமது வாழ்வை ஆரம்பிக்கும் நேரம் வந்து விட்டது என என் டைரியில் குறித்துக் கொண்டேன்.

சம்பவம் : 2
07.07.2017 அன்று வாட்ஸ்அப்பில், ஒரு செய்தி என்னை அதிர்ச்சி அடையவைத்தது.
நெல்லை மாவட்டம் திருநெல்வேலி பேட்டையில் மவ்லவி ஷம்சுதீன் ரியாஜி (Sams Riyaji) ஜூம்ஆ மேடையில் அரபி மதரஸாக்கள் மற்றும் ஆலிம்களின் பின்னடைவுகள் குறித்து பொதுப்படையாக பேசினாராம். அவருடைய பேச்சு தங்களை மிகவும் பாதிக்க வைத்து விட்டது என்று கூறி எந்த முன் அறிவிப்பும் இன்றி 12.07.2017 மக்ரிப் முதல் இமாமத் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்தார்களாம். இது சம்பந்தமாக நீதி கேட்டு அந்த ஆலிம் அவர்களே செய்திகளை பரப்பிக் கொண்டிருந்தார். யோசித்துப் பார்த்தால் நாம் கனவு காணும் மார்க்க ஆசிரியர் எனும் நிலைப்பாடு சரியா? தவறா? என குழம்ப ஆரம்பித்தேன்.

சம்பவம் : 3
மதுரை, நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்ட ஒரு சிறு புத்தகம் படித்தேன், புத்தகத்தின் பெயர் “”சமுதாயத்தின் பார்வையில் ஆலிம்கள்” அந்த நூலில் தமிழ் நாட்டு ஆலிம், உலமாக்களின் அவல நிலையை பரிதாப நிலையை பிரபல ஆலிம் ஒருவரே எழுதி கண்ணீர் வடித்திருந்தார். அதைவிட ஒரு கொடுமையை அந்த புத்தகத்தில் எழுதியிருந்தார்கள். 7ம் ஆண்டு படித்த ஆலிம்கள் பெரும்பாலும் விபரம் பத்தாத மார்க்கம் விளங்காத, நபராகத்தான் இருக்கின்றார்கள். நூற்றில் ஒரு சிலர் தான் விபரமான ஆலிம்கள் என்ற கருத்தும் அந்த புத்தகத்தின் வாயிலாக அறிந்தேன். அட, இப்படிப்பட்ட ஆலிமாக நாம் ஆவதா? நமது நிலை என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

சம்பவம் : 4 என்னுடைய உறவினர் தீவிர தப்லீக்காரர் அவர் மகனும் நானும் சம வயதுடையவர்கள் பள்ளிப் பருவத்தில் நான் பொறியியல் படிக்க போய்விட்டேன். அவரோ அவரின் மகனை மதரஸாவிற்கு அனுப்பி விட்டார். 25 ஆண்டுகளுக்கும் பிறகு சந்தித்தேன். மக்தபு மதரசாவில் உஸ்தாத் ஆசிரியராக பணி புரிகிறாராம், பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகிறார், பெரிய பேச்சாளரும் இல்லை, எழுத்தாள ரும் இல்லை, நல்ல மனிதர்தான், ஒழுக்க மானவர்தான், சமூகத்தின் பார்வையில் ஒரு வேற்று கிரகவாசியை போல பார்க்கிறார்கள் அவரை!

இந்த மாதிரி மார்க்கம் படித்தவர்கள் நிலை இருந்தால் யார்தான் மார்க்க கல்வியை நோக்கி பயணிப்பார்கள்? பணம், காசு சம்பாதிக்க முடியாது. சமூக மரியாதையும் கிடையாது, ஒரு சிறு தொழில், கைத்தொழில் கூட செய்ய தெரியாத கையாலாகாத நிலை, இந்த நிலையை எந்த பெற்றோராவது தம் பிள்ளைக்கு விரும்புவார்களா?

சம்பவம்:5 ஆலிம்களின் தரத்தை மேம் படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு சிறிய கருத்தரங்கம் நடைபெற்றது. பேசியவர் ஒரு சீனியர் ஆலிம். பார்வையாளர்களில் ஆலிம்கள், இமாம்கள், ஆலிம் படிப்பு படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள், பேச்சாளர் கேட்டார், உங்களுடைய மகள் திருமணம் ஆகும் வயதில் உள்ளார். மணமகன் தேடுகிறீர்கள், அப்பொழுது ஒரு ஆலிம் மாப்பிள்ளை பயோடேட்டா பார்க்கிறீர்கள், உங்கள் மகளுக்கு அந்த ஆலிம் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக் கொடுப்பீர்களா?

பார்வையாளர்களில் உள்ள ஒரு பிரபல ஆலிம் பதில் சொன்னார். “”என் மகளுக்கு வேறு மாப்பிள்ளையை தேடுவேன். இந்த ஆலிம், இமாம் வேதனையெல்லாம் என்னோடு போகட்டும், என் மகளுக்கு நல்ல விதியை அல்லாஹ் காட்டுவான்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

சம்பவம் : 6
தமிழ்நாட்டில் 7 ஆண்டு ஆலிம் படிப்பு படித்த சிலர் வெளிநாடுகளுக்கு பணி புரிய செல்கிறார்கள். அரபு நாடுகள், மலேஷியா, சிங்கப்பூர், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலிய நாடுகளில் இருக்கிறார்கள். அங்கு சென்றுள்ள பலரில் வெகுசிலர்தான் மார்க்கம் தொடர்புடைய பணிகளில் இருக்கிறார்கள். பலர் வேறு வேலை, வியாபாரம் செய்கிறார்கள். அந்த ஆலிம்களில் தொழில் அதிபர்களும் உள்ளார்கள். கூலி தொழிலாளியும் உள்ளார்கள். இவர்களில் சிலரை சந்தித்து கேட்டேன், பரவாயில்லை நீங்கள் எந்த ஜமாஅத் நிர்வாகிக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. சுதந்திரமாக தாவா செய்யலாம் அப்படித்தானே என்று கேட்டேன்.

அந்த ஆலிம்களில் பலர் தலை குனிந்து நின்றார்கள். அவர்களின் பதில்களில் தொகுப்பு :
வெளிநாட்டில் இமாமத் செய்யலாம், உஸ்தாதாக வேலை செய்யலாம் என்ற கனவில் தான் கடல் கடந்து இங்கு வந்தோம். எவ்வளவு வருடம் வெளிநாட்டில் வேலை தொடரும் என்று தெரியாது. வேலை பர்மிட், விசா மற்றும் வெளிநாடுகளின் சட்டதிட்டங்கள். ஆகவே இருப்பதற்கும் நமது பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற சிந்தனை உருவாகிறது. கடும் உழைப்பு செய்து சிறு வியாபாரம் செய்து பார்த்தேன்.

அல்ஹம்துலில்லாஹ். இப்பொழுது குடும்பத்தோடு, கார், பங்களா என பறக்கத் தான் வாழ்க்கை, பிரச்சினை என்னவென்றால் நமக்கு ஐவேளை பள்ளிக்கு போய் வருவதே பெரிய விஷயமாகிவிட்டது. மார்க்கப் பணிக்கு நேரமே இல்லை என்று கூறுகிறார்.

சம்பவம் : 7
லண்டன், நியூயார்க் போன்ற ஊர்களில் பல்லாயிரம் முஸ்லிம்கள் மஹல்லாக்கள் உள்ளன. ரமழான் சமயத்தில் நமது நண்பர்கள் சென்று வந்தார்கள், அவர்கள் சொன்னார்கள்.

அங்கெல்லாம் தொழுகை நடத்தும் பல இமாம்களை சந்தித்தோம். அவர்களின் கிராஅத் அற்புதமாக இருந்தது, சிலரின் பயான் சிறப்பாக இருந்தது என்றெல்லாம் சிலாகித்து சொன்னவர்கள் சொன்ன செய்தி இன்ப அதிர்ச்சியை தந்தது.
அந்த இமாமத் செய்த நபர்கள் குரானையே மனனம் செய்துள்ளார்கள். ஆனாலும் முழு நேர இமாமத் செய்து சம்பளம் வாங்கவில்லை. வேறு வேலை, தொழில் செய்கிறார்கள், சுபுஹுக்கு ஒருவர், லுஹ ருக்கு வேறு ஒருவர் மற்ற தொழுகைகளுக்கு வேறு வேறு நபர்கள் என்று ஒரு சிஸ்டம் வைத்துள்ளார்களாம். சிலர் தொண்டூழியர்களாக உள்ளார்கள். சிலர் சிறு ஊதியம் வாங்கிக் கொள்கிறார்கள். எல்லோருக்கும் மெயின் வருமானம் வேறு வேறு துறைகளில் வருகிறது. ஆனாலும் தினசரி, அல்லது வார இறுதி என்று அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப நேரத்தை பள்ளிவாசலில் செலவிடுகிறார்கள். அந்த காட்சியை தமிழ்நாட்டோடு ஒப்பிட்டு பார்த்தால் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக தெரிகிறது.

தீர்வை நோக்கி : 1
சமீப காலமாக CMN சலீம் என்பவர் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். உலக கல்வியிலும் மார்க்க கல்வியிலும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் சிறந்து விளங்க பல்வேறு முயற்சிகளை செய்து வருவது போல சொல்கிறார். வளரும் புதிய தலைமுறை முஸ்லிம்களை நிபுணத்துவம் வாய்ந்த மக்களாக உருவாக்கிட பாடுபடுவதாக அவரது வீடியோக்கள் சொல்கின்றன. கேட்க நன்றாக உள்ளது, அவரின் முயற்சிக்கு துஆ செய்வது நம் கடமையாகும்.

ஆனால் அவரின் உபதேசத்தை கேட்டு எந்த மதரஸா தங்களின் பாடதிட்டத்தை மாற்றி உள்ளது? எந்த மதரசாவாவது CMN சலீமீன் கருத்துக்களை மதரஸாக்களில் ஏற்றுக் கொண்டுள்ளதா? அல்லது பொதுக் கல்வி நடத்தும் எந்த பள்ளிக்கூடம், கல்லூரி CMN பேச்சை கேட்டு இஸ்லாமிய கல்வியை தங்களின் பள்ளிக்கு கூடத்தில் சேர்ந்துள்ளது?

இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கா விட்டால் CMN சலீம் மற்றும் அவர் போன்றோர் செய்யும் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராக வீணாகி போய்விட வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் மேலும் பலர் தனி நபர்களாகவும், அமைப்புகளாகவும் கல்வி மேம்பாட்டு முயற்சிகளை செய்கிறார்கள். உண்மைதான் பொறியாளர்களை, மருத்துவர்களை, ஆசிரியர்களை, IAS ஆட்களை உருவாக்க பாடுபடுவதாக சொல்கிறார்கள். வரவேற்கவேண்டிய நல்ல முயற்சி, கேள்வி என்னவென்றால் அவர்கள் உருவாக்கிய, உருவாக்க விரும்பும் கல்வி யாளர்களை எத்தனை பேர் அந்த துறைகளி லாவது நிபுணத்துவம் வாய்ந்த Socialist ஆக வந்துள்ளார்களா? அவர்களில் எத்தனை பேர் தொழுகை நடத்தி, பயான் பண்ணும் அளவுக்கு மார்க்கத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்?

இந்த கேள்விக்கு பதில்கள் கிடைக்காவிட்டால் தீர்வுகள் எல்லாம் கனவுகளாகவே நிற்கும் நிஜ வாழ்க்கையில் உலக கல்வியுடன் மார்க்க கல்வியையும் சேர்த்து நிபுணத்துவம் வாய்ந்த Socialist உருவாக்க வேறு வழிகள் எங்கே? எங்கே?

தீர்வை நோக்கி : 2
சமீபத்தில் இணையத்தில் ஏதாவது கிடைக்குமா? என்று தேடினேன். இலங்கையை சேர்ந்த ஒரு மார்க்க அறிஞர் உரை நமது இந்த ஆய்வுக் கட்டுரைக்கு சில பதில்களை தருவதாக உணர்கிறேன். முழு பதில்கள் இல்லைதான் இருந்தாலும் அவரின் உரையின் மூலம் கேட்ட கருத்துக்களை இங்கே தொகுத்து தருகிறேன். அந்த அறிஞர் AC அகார் முகமது, அகீதாவைப் பற்றி பேசவில்லைதான் இருந்தாலும் Motivational Talk என்று சொல்லும் அளவுக்கு அவரின் உரை இருந்தது. ஈமானை ஊக்கு விப்பதாக பேசுகிறார் (Iman Motivational Lecture Among the Alim Degree Students)

ஆலிம் படிப்பு படிக்கும் மாணவர்கள் சுமார் 50 பேர் மத்தியில் இப்படி பேசுகிறார். (அவர் ஆற்றிய உரையைப் போல வேறு சில மார்க்க அறிஞர்களும் பேசியுள்ளதையும் Youtube-ல் கேட்டு தொகுத்து கீழே தருகிறேன்)

தீர்வை நோக்கி : 2
நீங்கள் படிக்கும் 7 ஆண்டு ஆலிம் படிப் புக்கான பாடப் புத்தகங்களை பார்வை யிட்டேன். இதையயல்லாம் படித்து உங்க ளில் சிலர் மிகச் சிறந்த ஆலிமாக வரலாம். சிலர் சிறந்த ஆலிமாக வரலாம். சிலர் நன்கு தஜ்வீத் அரபி உஸ்தாதாக வரலாம். பல் வேறு துறைகளில் நீங்கள் பணி செய்கிறீர் கள். இருப்பினும் நேரம் ஒதுக்கி மார்க் கத்தை கற்று ஆலிமாக வேண்டும் என முயற் சிக்கின்றீர்கள், வாழ்த்துக்கள், உங்களுக்காக துஆ செய்கிறேன்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: