அறிந்து கொள்வோம்!

in 2018 மார்ச்

மர்யம்பீ, குண்டூர்,

1. கிரகணத் தொழுகை நபி(ஸல்) அவர்கள் வழியா? கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி : 1041
2. மறுமை, மழை, கர்ப்பங்களில் உள்ளது, நாளை சம்பாதிப்பது, மரணிக்கும் பூமி எது என்பதையும் அல்லாஹ்தான் அறிவான் என அல்லாஹ் கூறும் வசனம். அத்.31, வசனம் 34
3. வெட்கம் எதனுடைய கிளைகள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? ஈமானுடைய கிளைகள், புகாரி :
4. ஜும்ஆ நாளில் குளிப்பது யாருக்கெல்லாம் கடமை? பருவமடைந்த ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. புகாரி : 879, 880
5. நிராகரிப்பாளர்களின் முகங்கள் நரகத்தில் புரட்டப்படும்போது எவ்வாறு புலம்புவார்கள்? அல்லாஹ்ஓவுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா என புலம்புவார்கள். அல்குர்ஆன்: 33:66
6. முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்று எது? நோயாளியை நலம் விசாரிப்பது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமை. புகாரி:1240
7. உண்மையான மூமின்களில் நிலை எவ்வாறு இருக்கும்? அவர்கள் அல்லாஹ்வின் திருநாமத் தினை செவிமடுத்தால் அவர்களின் இரு தயங்கள் நடுநடுங்கும். அல்குர்ஆன்:8:2
8. மறுமை நாள் பற்றிய அறிவு யாரிடம் உள்ளது? மறுமை நாள் பற்றிய அறிவு தன் னிடமே உள்ளது என அல்லாஹ் அத். 7, வசனம் 187ல் கூறுகிறான்.
9. மேட்டில் ஏறும் போது என்ன சொல்லிக் கொள்ளவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்? “”அல்லாஹு அக்பர்” என்று சொல்லிக் கொண்டே ஏறவேண்டும். புகாரி: 2993
10. பெருமையடித்தோரின் நிலை மறுமை யில் எவ்வாறு இருக்கும்? பெருமையடித்தோரின் நிலை தங்கும் இடம் நரகமாக இருக்கும். குர்ஆன்:39:60
11. பிறரிடம் யாசிப்பதை விடச் சிறந்தது எது? தன் முதுகில் விறகுக் கட்டையைச் சுமந்து விற்பது சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி: 24:1470, முஸ்லிம் : 12:1884
12. இப்லீஸ்(ஷைத்தான்) அல்லாஹ்விடம் எவ்வாறு தர்க்கம் செய்தான்? நான் அவரை ஆதம்(அலை) விடச் சிறந்தவன். நான் நெருப்பால் படைக் கப்பட்டவன், அவனை நீ களிமண் ணால் படைத்துள்ளாய் என்றான். அல்குர்ஆன் : 38:76
13. ஹவாலா என்றால் என்ன? ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுவது என்று விளக்கமளிக்கப்பட் டுள்ளது. புகாரி: பாடம் 38
14. மூஸா(அலை) அவர்கள் மத்யன் நகரின் கிணற்றின் அருகே யாரைப் பார்த்தார் கள்? இரண்டு பெண்களைப் பார்த் தார்கள். அல்குர்ஆன்: 28:23
15. “”ஸலம்” என்றால் என்ன? விலை பேசி முன்னரே விலையைக் கொடுத்து விடுதல். புகாரி: பாடம் 35
16. நபி(ஸல்) அவர்கள் எந்த நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள்? ரமழானின் இறுதி 10 நாட்களில். முஸ்லிம் : 2180
17. வகாலத் என்றால் என்ன? கொடுக்கல், வாங்கல்களுக்காக பிற ருக்கு அதிகாரம் வழங்குதல். புகாரி: பாடம் 40
18. தொழுகை எதை விட்டு தடுக்கும்? நிச்சயமாக மானக்கேடானதையும், தீமையை விட்டும் தடுக்கும். அல்குர்ஆன் : 29:45
19. நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் எதனை கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடவேண்டும்? பொறுமையைக் கொண்டும், தொழு கையைக் கொண்டும் உதவி தேட வேண்டும். அல்குர்ஆன் : 2:153
20. வானங்களில் இருப்போரும், பூமியில் இருப்போரும் எதன் காரணமாய் மூர்ச்சை ஆகி விடுவார்கள்? அந்நாளில் ஸுர் ஊதப்படும் போது மூர்ச்சை ஆகிவிடுவார்கள். அல்குர்ஆன்: 39:68

 

Previous post:

Next post: