சிந்தனை செய் மனமே!

in 2018 மார்ச்

அபூ அனீஸ்

அல்லாஹு ரப்பில் ஆலமீன் அகில உலகத்தாருக்கும் இறக்கி அருள் புரிந்திருக்கும் பரிசுத்த குர்ஆனின் முதலாம் அத்தியா யத்தின் நான்காவது வசனத்தை (1:4) கவனமாக படியுங்கள்; சிந்தனை செய்யுங்கள், சிந்தித்தபின் கட்டுரையை மேற்கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். இந்த ஆயத்தை நானும் படித்த நாளிலிருந்து சிந்திக்காமல், சமீபத்தில்தான் சிந்திக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு, அல்ஹம்துலில்லாஹ். அற்புதமான தெளிவு கிடைத்தது. அத்தெளிவை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தவறு இருப்பின் தெரிவித்தால் திருத்திக் கொள்கிறேன்.

1:4 இறை வசனத்தின் பொருள் : “”உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே யாசிக்கிறோம்” என்பதாகும். இஸ்லாத்தின் அடிப்படையே இந்த வசனம் தான்: உன்னையே, உன்னிடமே என்ற இரண்டு வார்த்தைகளும் “”அஹத்” (தனித் தவன்) என்ற அல்லாஹ்வின் தனித்தன் மையை ஓங்கி ஒலிக்கும் வார்த்தைகளாகும். “”உன்னையே” என்கின்ற வார்த்தையில் “”யே” எனும் ஒற்றை எழுத்து “”உன்னையே” என்ற வார்த்தைக்கு ஒரு தடித்த அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதாவது, “”உன்னையே வணங்குகிறோம்” என்றால், உன்னை மட்டுமே வணங்குகிறோம் என்று அழுத்த மான பொருளை அந்த ஒற்றை எழுத்து தருகிறது. அதேபோல, “”உன்னிடமே” என்கின்ற வார்த்தையில் “”மே” என்கிற ஒற்றை எழுத்து “”உன்னிடமே” என்ற வார்த்தைக்கு ஒரு தடித்த அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதாவது உன்னிடமே யாசிக்கிறோம் என்றால், “”உன்னிடம் மட்டுமே யாசிக்கிறோம்” என்று அழுத்தமான பொருளை அந்த ஒற்றை எழுத்து தருகிறது. சுருங்கக் கூறின், “”உன்னையே”, “”உன்னிடமே” என்ற இந்த இரண்டு வார்த்தைகளுக்கும், அல்லாஹ் அறிவித்துள்ள ஒற்றை அரபி வார்த்தை “”இய்யாக” என்பதாகும்.

இந்த வார்த்தையும் மேலே சொன்ன பொருள்களுடன் கூடுதலாக “”அல்லாஹ் வைத் தவிர இறைவன் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹு)” என்ற ஏகத்துவத்தை அற்புதமாக உள்ளடக்கி அதனை ஓங்கி ஒலிக்கச் செய்கிறது. இப்படிப்பட்ட அதி அற்புத வசனம் உலகெங்கும் தவறாக ஓதப்படும் விதம்தான் எம்மை சிந்திக்க வைத்தது! ஒட்டுமொத்தமாக உலகெங்கும் உள்ள அனைவரும் எப்படி தவறாக ஓதமுடிகிறது? இங்கேதான் நான் சிந்திக்க ஆரம்பித்தேன். இதை சிந்திக்க வேண்டி இருக்கிறது அல்லவா? இதில் ஏதோ சதி வலை பின்னப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரபி மொழியை தாய் மொழியாகக் கொண்டுள்ள சவூதி அரேபியாவில் கூட ஏன் எல்லா அரபிய நாடுகளி லெல்லாம் காரீகள் ஓதும் கிராஅத்கள் கூட இப்படித்தான் ஓதப்படுகிறது? எப்படி ஓது கிறார்கள் என்று பாருங்கள்! “”இய்யா கனஃபுது வ இய்யா, கனஸ்தயீன்” இப்படி ஓதுவது மிகப் பெரிய தவறு மட்டும் அல்ல. இப்படி ஓதுவதால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை அடித்து, நொறுக்கி, தகர்த்து, சின்னாபின்னமாக்கி, தூர எறிந்து விடலாம் என்கின்ற எண்ணத்தில், இந்த வேலையை ஷைத்தான் கணக்கச் சிதமாக செய்து கொண்டிருக்கும் முயற்சியே இது எப்படி என்கிறீர்களா? “”கனஃபுது”, “”கனஸ்தயீன்” என்று அரபியில் எந்த சொல்லும் கிடையாது. இரண்டிற்கும் அர்த்தமும் கிடையாது. அப்படி இருக்கையில் அரபி மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள், எப்படி அர்த்தம் இல்லாத வார்த்தைகளை ஓதுகிறார்கள்? இங்குதான் ஒவ்வொரு முஸ்லிமும் இன்னும் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். பின்னப்பட்டிருக்கும் சதி என்ன? மேலும் சிந்தனை செய்கிறேன். சிந்திப்பதற்கு, கீழ்காணும் இறைவசனங்கள் நமக்கு தூண்டுதலையும், தெளிவான அர்த்தத்தையும் தருகிறது. இந்த இறை வசனங்கள் அகிலங்களைப் படைத்த அல்லாஹ்வுக்கும், அவனால் விரட்டி அடிக்கப்பட்ட இப்லீசுக்கும் நடந்த உரையாட லாக அமைந்திருப்பதைப் பாருங்கள்.

 7:11 அல்லாஹ் : ஆதமுக்குப் பணியுங்கள் என்று வானவர்களிடம் கூறினோம். இப்லீசைத் தவிர யாவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

7:12 “”நான் உனக்கு கட்டளை இட்டபோது நீ பணியாதிருக்க உன்னைத் தடுத்தது யார்?” இப்லீஸ் : நான் அவரை விட மேலானவன். என்னை நீ நெருப்பினால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்தாய்.

7:13 அல்லாஹ் : இதிலிருந்து நீ இறங்கி விடு; இங்கே நீ பெருமையடிப்பது தகாது. ஆதலால் நீ வெளியேறு, நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்.

7:14 இப்லீஸ் : எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக. 7:15 அல்லாஹ் : “”நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர் களில் ஒருவனாவாய்”.

7:16 இப்லீஸ் : “”நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதன் காரணத்தால், உன்னுடைய நேரான பாதையில் செல்லாது தடுப் பதற்காக அவ்வழியில் அவர்களுக்காக திடமாக உட்கார்ந்து கொள்வேன்” 7:17 “”நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர் கள் பின்னும், அவர்கள் வலப் பக்கங்களிலும் அவர்கள் இடப் பக்கங்களிலும் வந்து (அவர்களை) வழிகெடுத்துக் கொண்டு இருப்பேன். ஆதலால், நீ அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய்.”

7:18 அல்லாஹ் : “”நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெறுக்கப்பட்டவனாகவும், இங்கிருந்து வெளியேறி விடு, அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன். மேற்கூறப்பட்ட இறை வசனங்கள் நமக்கு எதை தெரிவிக்கின்றன? ஜின் இனத்தை சேர்ந்த இப்லீஸாகிய ஷைத்தான்

(18:50) முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்து எல்லா மனிதர்களையும் வழிகேட்டில் இட்டுச் செல்லும் முயற்சியை அன்றே அப்போதே ஆரம்பித்துவிட்டான். அதுவும் எப்படி? அல்லாஹ்விடமிருந்து அவகாசம் பெற்று, இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை, அல்லாஹ்வின் நல்லடியார்களைத் தவிர மற்ற அனைவரையும் உடனே கெடுக்க ஆரம்பித்து விட்டான். இப்போதும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். இனியும் கெடுத்துக் கொண்டிருப்பான். (பார்க்க: 15:26-44) குறிப்பாக இறைவசனம் : 15:39,40: இப்லீஸ்: “”என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் அவர்களுக்கு பூமியில் அழகாகக் காண்பித்து, அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்”. “”அவர்களில் தேர்ந் தெடுக்கப்பட்ட உன் அடியார்களைத் தவிர” என்று கூறினான். மேலும் 15:42 அல்லாஹ் : நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. வழிகெட்டவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர. இப்லீஸின் முயற்சி எப்படி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்போது எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இனியும் எப்படி நடைபெறப் போகிறது என்பதை உலக அரங்கில் அன்றிலிருந்து நடந்த, இன்று வரை நடந்து கொண்டிருக்கின்ற, இனியும் நடக்கவிருக்கின்ற நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தால் அனைவரும், இன்ஷா அல்லாஹ், அந்த வழியை தெரிந்துகொள்ள முடியும். இதனை ஜனவரி 2018 அந்நஜாத் தலையங்கத்தில் இதைப் பற்றி, “”எதிர்பாருங்கள்” என்ற தலைப்பில் சுருக்கமாக அறிவித்திருக்கின்றோம்.

 இஸ்லாமியக் கொள்கை கோட்பாட்டில் உறுதியாக-நிலையாக இருக்கும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் நம்பிக்கையை (ஈமானை) கெடுக்க முடியாது என்பதை உணர்ந்த இப்லீஸ், வேறு விஷயங்களில் கெடுத்து இறைக் கட்டளைக்கு மாறு செய்யும் பாவியாக்க முயற்சித்தான். எந்த மனிதருக்கு சஜ்தா செய்யும்படி அல்லாஹ் கட்டளை இட்டானோ, அந்த மனிதர் மீது தனக்கு கொடுக்கப்பட்ட சக்தியைக் கொண்டு சோதனையை ஆரம்பித்தான். அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட மரத்தை நெருங்கும்படி செய்துவிட்டான். சிந்தனை செய்யுங்கள்! இதில் வென்றது யார்? இப்லீஸா? அல்லது ஆதம் (அலை) அவர்களா? மரத்தை நெருங்க வைத்து விட்டதால், இப்லீஸ்தான் வென்றான் என்று சுலபமாக எவரும் சொல்லி விடலாம். ஆனால், உண்மையில் வென்றது யார்? மரத்தை நெருங்க வைத்து விட்டதால், இப்லீஸ் வெற்றி பெற்றதாக தோன்றினாலும் அந்த தோற்றம் ஒரு மாயத்தோற்றமே! அல்லாஹ்வின் கட்டளையை இப்லீசும் மீறினான். ஆதம் (அலை) அவர்களும் மீறினார்கள். இருவரையுமே சுவர்க்கத்தை விட்டு அல்லாஹ் வெளியேற்றி, இருவருக்குமான தண்டனையை நிறைவேற்றியும் வைத்து விட்டான். இப்லீஸ் திட்டமிட்டு நடத்தியது ஒரு சோதனை ஓட்டம் அல்லது பலப் பரீட்சை (வீயூணூபுஸி) இதை நடத்திப் பார்ப்பது மட்டுமே அவனது திட்டம். இந்தத் திட்டத்தில், அவ னால் சாதனைப் படைக்க முடியவில்லை. காரணம் யாதெனில், இந்த சோதனையை அவன் ஆதம்(அலை) அவர்கள் மீது நடத்தினாலும், அவன் நடத்திய போட்டி இறைவனிடமே! அவனால் வெற்றி பெற முடியுமா?

இறைவனின் ஏற்பாட்டைப் பாருங்கள். இறைவசனம் 2:37 : பின்னர், ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டார் (அவர் அவற்றைக் கொண்டு மன்னிப்புக் கேட்கவே) இறைவன் அவரை மன்னித்தான். ஷைத்தானுடைய பாவங்கள் மன்னிக்கப்படாததால், அவன் தோல்வியைத் தழுவினான். இது ஆச்சரியப்படக்கூடிய விஷயம் அல்ல. ஏனெனில் மோதியது அல்லாஹ் விடம், இந்த சோதனை தரும் படிப்பினை என்ன தெரியுமா? இஸ்லாமியக் கொள்கை கோட்பாட்டில் நிலைத்திருக்கும் நல்ல அடி யார்களைக் கெடுக்க முடியாது என்பது இப்லீசுக்குக் கிடைத்த படிப்பினை. பாவம் செய்து விட்டால், பாவமன்னிப்பின் மூலம் வெற்றி பெற முடியும் என்பதும், நாம் உறுதி யாக இருந்தால் ஷைத்தானால் நம்மைக் கெடுக்க முடியாது என்பதும் நல்லடியார் களுக்கு கிடைத்த படிப்பினை. ஆக ஷைத்தான் அன்றே அப்போதே அவன் வேலையை ஆரம்பித்து மனிதர்களை வழிகேட்டில் செலுத்த ஆரம்பித்து விட்டான் என்பது நிதர்சனமாகி விட்டதல்லவா? அதன் தொடர்ச்சிதான், “”உன் னையே வணங்குகிறோம் – உன்னிடமே உதவி தேடுகிறோம்” என்ற வாக்கியத்திற்கு அல்லாஹ் இறக்கி அருள் புரிந்துள்ள சொற்களை-குர்ஆனில் உள்ளது உள்ளபடி (இய்யாக, நஃபுது-வ இய்யாக, நஸ்தயீன்) என்று ஓதவிடாமல், அதனை மாற்றி “”(இய்யா, கனஃபுது-வ இய்யா, கனஸ்தயீன்)” என்று எந்த அர்த்தத்தையும் தராத சொற்களைக் கொண்டு மனிதர்களை ஓதவைத்து அவனது குறிக்கோளை அடைந்து கொண்டிருக்கிறான். “”நிச்சயமாக நாமே இந்நெறிநூலை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதைப் பாதுகாப்போம்” என்று அல்லாஹ் வாக்களித்திருப்பதால் (15:9), “”மனிதர் களின் உள்ளங்களை சுலபமாக மாற்றி விட முடியும். ஆனால் பரிசுத்த குர்ஆன் வசனங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் பாதுகாக் கப்பட்டு வருவதால், அதை நம்மால் மாற்ற முடியாது என்பதை ஷைத்தான் மிக உறுதியாக மிக மிக உறுதியாக நன்றாக அறிந்து வைத்திருக்கிறான்.

எனவே உலகிலுள்ள ஒவ்வொரு முஸ்லி மும் இந்த ஆயத்தை குர்ஆனில் உள்ளது உள்ளபடி ஓத முயற்சிக்குமாறும், இந்த உண்மையை முடிந்தவரை அனைவரிடமும் பரப்புமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக மக்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. இக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பதை உள்ளம் உண்மை என்று நூறு சதம் நம்பினாலும், முன்பு ஏன் அப்படி ஓதினோம் என்பதற்கு வியாக்யானங்கள் கூறு வதும், உலகமே மாற்றி ஓதும்போது நாம் மட்டும் ஏன் குர்ஆனில் உள்ளவாறு ஓத வேண்டும் என்று வாதம் புரியும் பழக்கமே அது. அது மட்டுமின்றி குர்ஆனில் உள்ளது போலத்தான் ஓதவேண்டும் என அவர்கள் ஏற்றுக் கொண்டாலும், ஓதும் வேகத்தில் அல்லது சேர்த்து ஓதும்போது அல்லது ராகத் துடன் ஓதும்போது இப்படி ஓதும்படி ஆகி விடுகிறது என்று சர்வசாதாரணமாக சமாதானம் கூறிவிடுபவர்களும் உண்டு. அப்படிக் கூறுவது உண்மை அல்ல. ஒவ்வொருவர் ஓதுவதையும், குறிப்பாக கிராஅத் ஓதுவதில் தேர்ந்தவர்கள் ஓதும் கிராஅத்களை கவனித்து வந்தால், அனை வருமே குர்ஆனில் உள்ளவாறு “”இய்யாக” என்று ஓதுவதற்கு பதிலாக, அந்த சொல்லில் உள்ள “”இய்யா”வை தனியாக்கி “”க” என்று எழுத்தைப் பிரித்து அடுத்த வார்த்தையுடன் சேர்த்தது “”இய்யா கனஃபுது-வ இய்யா கனஸ்தயீன்” என்று சர்வசாதாரணமாக ஓது வதைத்தான் காணமுடிகிறது.

இந்த அளவுக்கு கூறிய பிறகும் “”இய்யா கனஃபுது-வ இய்யா கனஸ்தயீன்” என்று நாங்கள் ஓதுவதுதான் சரி என நீங்கள் தீர்ப்பு சொல்லக்கூடியவர்களாய் இருந்தால் உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்! நீங்கள் ஓதுவது போல, குர்ஆனில் இருப்பதை மாற்றி அமைக்க முயற்சி செய்து பாருங்களேன். அப்போது உங்கள் நிலை புரிந்து விடும் அல்லவா? “‘நிச்சயமாக! நாமே இந்நெறிநூலை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதைப் பாதுகாப்போம்” என்று அல்லாஹ் வாக்களித்திருப்பதால் (15:9) ஷைத்தான் கூட, வல்லமை மிக்க அல்லாஹ்வின் சொல்லை மாற்ற முடியாது என்பதை நன் கறிந்து பயந்து போய் அந்த சொல்லை மாற்றி அமைக்க முயற்சிக்காமல், மிக சாதுர்யமாக மக்களை அவன் விரும்பிய விதத்தில் ஓத வைத்து விட்டான். இந்த உண்மையை அறிந்தாவது இனி யும் வாதம் செய்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஷைத்தானின் மாய வலையிலி ருந்து விடுபட வேண்டும் என்ற வைராக்கி யத்துடன், அனைவரும் பரிசுத்த குர்ஆனில் அல்லாஹ் இறக்கி அருளியவாறு (இய்யாக, நஃபுது வ இய்யாக, நஸ்தயீன்) என்று ஓதி வருமாறு அன்புடன் கேட்டுக் கொள் கிறேன். இக்கட்டுரையின் சுருக்கம்: ஓதக்கூடாத விதம்: “”இய்யா, கனஃபுது-வ இய்யா, கனஸ்தயீன்” ஓதவேண்டிய விதம்: (குர்ஆனில் உள்ளபடி) “” (இய்யாக, நஃபுது-வ இய்யாக, நஸ்தயீன்” (சரியாக ஓதுபவர்களும் உலகில் இருக்கலாம். அவர்களுக்கு இது பொருந்தாது)
இன்ஷா அல்லாஹ், சிந்திப்போம்!

Previous post:

Next post: