நபிகள் நாயகம்!

in 2018 மார்ச்

இப்னு ஸதக்கத்துல்லாஹ்

நபிகள் நாயகம், நாயகம் என்ற சொல்லை எழுதாதவர்கள், பேசாதவர்கள் தப்லீக்கில் இருந்து தவ்ஹீது வரை ஒருவர் பாக்கியில்லை. பீ.ஜே.வைப் பொறுத்த வரை அந்நஜாத் ஆரம்பிக்கப்பட்ட (1986)தி லிருந்து தமுமுகவை ஆரம்பிக்கும் (1995) வரை, குர்ஆனிலோ, ஹதீஃதிலோ நபிகள் நாயகம் என்ற வார்த்தை இல்லை. நபி, ரசூல் என்றுதான்   இருக்கிறது. எனவே, நபி, ரசூல் என்று குறிப்பிடுவதுதான் சரி என்று எழுதியும், பேசியும் வந்தார். தமுமுக ஆரம் பிக்கப்பட்ட பிறகு பெரும்பான்மை முஸ்லிம்களை வளைத்துப் போடுவதற்காக நபிகள் நாயகத்தோடும், தொப்பியோடும் காட்சி தருகிறார். அவ்வாறே அவருடைய அடிமைகளும் நபிகள் நாயகத்தோடு காட்சி தருகின்றனர். குத்புல் அக்தாப், கவ்துல் அஃழம் என்ற வார்த்தைகள் எவருடைய மூளையில் உண்டானதோ, அவர்களுடைய மூளையில் உருவானதுதான் நபிகள் நாயகம் என்ற வார்த்தைகள். இதன் பொருள் நபிமார்களுக்கெல்லாம் (நடு) நாயகமானவர். அதாவது நபிமார்கள் என்ற சக்கரத்தின் அச்சாணி. எப்படி அச்சாணி இல்லையென்றால் சக்கரம் இல்லையோ? அதேபோல் முஹம்மது(ஸல்) என்ற அச்சாணி இல்லையென்றால் நபிமார்கள் என்ற சக்கரம் இல்லை என்ற பொருளைத் தரும் வார்த்தைகள்தான் இவை.

இப்படி நபிமார்களுக்கிடையே வேற்றுமை, ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் இந்த வார்த்தைகளை பயன்படுத்தலாமா? அல்லாஹ் சொல்கிறான்:

“”நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மேலும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப் பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம். அவர்களுக்கிடையே நாங்கள் (எந்தவித) வேறுபாடு (ஏற்றத்தாழ்வு) காட்டமாட்டோம். இன்னும் நாங்கள் “”முஸ்லிம்கள்” என்று சொல்வீர்களாக. 2:136

(இத்)தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்டதை நம்புகிறார்; (அவ் வாறே) நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) எல்லோரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய நெறிநூல்களையும், அவனுடைய (முந்தைய) தூதர்களையும் நம்புகிறார்கள். “”இன்னும் நாங்கள் இறை தூதர்களில் யாரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (உயர்வு, தாழ்வு கற்பிப்பதில்லை) செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) கட்டுப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கேட்கிறோம். உன்னிடம்தான் திரும்ப வேண்டியதிருக்கிறது” என்றும் சொல்கிறார்கள். 2:285

“”அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப் பட்டதையும், மேலும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் (மற்றும்) அவர்களின் சந்ததியர் மீது அருளப்பட்ட வற்றையும்,மேலும், மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களில் யாரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம். (உயர்வு, தாழ்வு கற்பிக்க மாட் டோம்) நாங்கள் முஸ்லிம்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. 3:84

யாரெல்லாம் அல்லாஹ்வையும், அவனு டைய தூதர்கள் அனைவரையும் ஏற்று தூதர்களுக்கிடையே வேற்றுமை பாராட்ட வில்லையோ (ஏற்றத் தாழ்வு கற்பிக்கவில் லையோ) நிச்சயமாக அவர்களுக்கு அவர்களின் கூலிகளை வழங்குவோம். மேலும், அல்லாஹ் அதிக மன்னிப்பு வழங்குபவனும் கருணை நிறைந்தோனுமாய் இருக்கிறான். 4:152.

 நபி(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் : “”மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என் றும் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். புகாரீ: 6830 “”(எல்லா) நபிமார்களையும் விட என்னை மேலானவன் என்று கருதாதீர்கள்” அறிவிப்பவர் : அபூ ஸஈது(ரழி), அபூதாவூது. மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்களின்படி நபிகள் நாயகம் என்று குறிப்பிடுவது நபிமார்களுக்கிடையே வேற்றுமை, ஏற்றத்தாழ்வு கற்பிப்பதும், நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறி புகழ்வதும், அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைகளை மீறிய செயலுமாகும் என்பதை அறிவோமாக!

அதேபோல், குர்ஆன் என்பது விளங்க முடியாத, நடைமுறை சாத்தியமில்லாத வேதமல்ல. விளங்கி, நடைமுறைப்படுத்தப்பட்ட நெறி நூலாகும், இறைநூலாகும் அரபு மூலத்தில் “”கிதாப்” என்றுதான் இருக்கிறது.கிதாப் என்றால் வேதம் என்று பொருளல்ல. மொழி பெயர்த்தவர்கள்தான் இந்து மதத்தை காப்பியடித்து வேதம் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். இது இறை வனிடமிருந்து வந்திருப்பதால் இறைநூல் என்றும், இப்படித்தான் வாழ வேண்டும், இப்படியயல்லாம் வாழக்கூடாது என்று வாழ்க்கை நெறிமுறை பற்றி பேசுவதால் நெறிநூல் என்றும் சொல்லலாம். மேலும், இதைப் பற்றி மறைந்த அபூ அப்தில்லாஹ் அவர்கள் விரிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே, குர்ஆனை வேதம் என்று குறிப்பிடுவது, குர்ஆன் விளங்காதது, விளங்க முடியாது, நடைமுறை சாத்தியமில்லாதது என்று சொல்லுவதாகும். இதுவும் குர்ஆன் ஹதீஃதுக்கு முரணான செயலாகும் என்பதை அறிவோமாக.

Previous post:

Next post: