அந்நஜாத் மார்ச் – 2016

in 2016 மார்ச்

மார்ச் 2016

ஜ.அவ்வல்-ஜ.ஆகிர் 1437

அரசுகள் ஏன்?

மனிதகுலம் தோன்றியதிலிருந்து ஒரே சமுதாயமாகவும், ஒரே தலைமையின் கீழும் வளமாக வாழ்ந்து வந்தது. ஷைத்தான் தனது சபதத்தை நிறைவேற்ற (பார்க்க : 2:36,38,39, 7:11-25, 15:31-44) மனித சமுதாயத்தில் புகுந்து அவர்களை வழிகெடுத்து அவர்களில் மிகப் பெரும்பாலோரை நரகில் தள்ளி வருகிறான். இறைவனும் மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்தத் தொடர்ந்து தனது தூதர்களை மனிதகுலத்திலிருந்தே தேர்ந்தெடுத்து மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டச் செய்தான். ஆயினும் ஒவ்வொரு இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகும் ஷைத்தான் அவர்களிடையே புகுந்து அவர்களிலிருந்தே மதகுருமார்கள் என்ற இடைத்தரகர்களைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு, இறைத் தூதர்களையே கடவுளாக, தெய்வமாக, அவதாரமாகக் கற்பனை செய்ய வைத்து, ஏகன் இறைவனுக்கு இணை வைக்கச் செய்து மனிதகுலத்தினரை நரகப் படுகுழியில் ஷைத்தான் தள்ளிக் கொண்டிருக்கிறான். (பார்க்க : 15:39, 32:13, 11:118,119) ஆக தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களாகிய மதகுரு மார்கள் ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தானுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, மனித குலத்தினரில் பெரும்பாலோரே நரகில் தள்ளி அவர்கள் இவ்வுலகில் ஹராமான வழியில் சொகுசாக வாழ்கிறார்கள். இது மறுமையைப் பாழ்படுத்தும் மதவியாபாரிகளான மதகுருமார்களின் எதார்த்த நிலையாகும்.

இப்போது மனித குலத்தினரின் இவ்வுலக வாழ்க்கையைப் பாழ்படுத்தும், அரசியல் வியாபாரிகள் பற்றிப் பார்ப்போம். அனைத்து இறைத்தூதர்களும் மறு உலக வாழ்க்கைக்குரிய ஒரே நேர்வழியை மனித குலத்தினருக்குக் காட்டினார்கள். அவர்களில் சிலர் இவ்வுலகிலும் இறையாட்சியை நிலைநாட்டிக் காட்டினார்கள்.

அவர்களில் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் நிறைவு பெற்ற முழுமையான, உலகம் அழியும் வரை மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டக்கூடிய இறைநூல் குர்ஆனை இறைவனிட மிருந்து பெற்று மக்களுக்கு அளித்ததோடு, முழுமை பெற்ற ஓர் இறையாட்சியையும் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். அந்த ஒரே இறையாட்சி மீண்டும் இவ்வுலகில் மலராதவரை மனித சமுதாயம் ஒற்றுமையாக, வளமாக, சுபீட்சமாக, மகிழ்ச்சியாக வாழ ஒருபோதும் வழி ஏற்படாது. அந்த ஆட்சி முறைதான் மனித சமூகத்தின் அனைத்து அத்தியா வசியத் தேவைகளையும் நிறைவாகப் பூர்த்தி செய்வ தாகவே இருக்கும். சமூகத்தில் ஒற்றுமை நிலவும்.

ஓர் அரசு ஏன் அமைக்கப்படுகிறதென்றால் மனிதனின் இயற்கையான அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்து தருவதாக அந்த அரசு இருக்க வேண்டும். மனிதரின் இயற்கைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், அதற்குத் தேவையான காற்று, நீர், கழிவு நீர் வடிகால், சுகாதாரமான சூழ்நிலை இவை அனைத்தும் இன்றியமையாதவை. மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் தக்கப் பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும். குடிமக்கள் இவற்றை முறையாக விளங்கி அதன்படி நடக்க அவர்களுக்கு கல்வி அறிவு அத்தியாவசியம். ஒரு நேர்மையான, மக்களுக்காக இருக்கும் அரசு இத்தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். சாலை, போக்குவரத்து, தொலைதொடர்பு, குடிநீர், சுகாதாரமான சுற்றுச் சூழல் வசதிகள் இவற்றை முறையாக, சரியாக அமைத்துத் தருவது அரசுகளின் கடமை. இவற்றை முறையாக நிறை வேற்றாத அரசு இருந்தாலும் ஒன்றுதான். இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

இன்றைய அரசுகள் என்ன செய்கின்றன? மத வியாபாரிகள் எப்படி மக்களின் சொத்துக்களை 9:34 இறைவாக்குக் கூறுவது போல் தவறான வழிகளில் கொள்ளை அடிக்கிறார்களோ அது போல் அரசியல் வியாபாரிகளும் மக்களின் சொத்துக்களை தவறான வழிகளில் கொள்ளை அடிக்கிறார்கள். இந்த வகையில் மதவியாபாரிகளும், அரசியல் வியாபாரிகளும் கூட்டுக் கள்ளன்களாக, கொள்ளையர்களாகவே இருக்கிறார்கள்.

அரசு நடத்த வேண்டிய கல்விச் சேவையான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சுகாதாரச் சேவையான சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், இவை போல் அரசே நடத்த வேண்டிய சேவைகளை, தனியாருக்கு அநியாய மாக மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல் வியாபாரிகளான பெரும் பண முதலை களான பினாமிகளுக்கு தாரை வார்த்ததை விட்டு, மனிதர்களே நடத்தக் கூடாத டாஸ்மாக் மதுபான கடைகள், சூதாட்டக் கிளப்புகள், விபச்சார விடுதி கள் என கேடுகெட்டத் தொழில்களை நடத்தவா மக்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சிந்தியுங்கள்! அரசியல் வியாபாரிகளை அகற்றி விட்டு, உண்மையிலேயே தொண்டு செய்ய ஆர்வம் உள்ளவர்களை மக்கள் ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே மக்கள் சுபிட்சமாக, வளமாக வாழ முடியும். இறையாட்சியை நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே மனிதகுலம் நிம்மதியான சுபீட்சமான வாழ்வைப் பெற முடியும். குறைந்தபட்சம் இந்த ஜனநாயக ஆட்சி முறையிலாவது, அரசியல் வியாபாரிகளை ஓரம் கட்டிவிட்டு, தொண்டு செய்யும் உள்ளம் படைத்தவர்களைத் தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுக்க முன்வரவேண்டும்.

இந்தோனேசியா தீவுகளில் விசித்திர குள்ளர்கள்: யாஜுஜ் மாஜுஜ்??

எஸ்.ஹலரத் அலி, திருச்சி

அல்லாஹ்வின் நெறிநூல் குர்ஆனில், மனித சமுதாயம் படிப்பினைப் பெறுவதற்காக ஏராள மான வரலாற்று சம்பவங்களை எடுத்துக் கூறுகிறான். இனி வரும் காலங்களில் நடைபெறப்போகும் சம்பவங்களும் நமக்கு முன் எச்சரிக்கை ஊட்டுவதற்காக அதில் தெளிவாக விளக்கியுள்ளான். அப்படியான ஒரு நிகழ்வுதான் கடைசி காலத்தில் வரக்கூடிய யாஜுஜ்-மாஜுஜ் கூட்டமாகும்.

இறுதி உம்மத்தான நம் காலத்தில்தான் இக்கூட்டம் வெளிவரப்போவதால், இக் கூட்டத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விரிவாக தெளிவாக விளக்கிச் சென்றுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் மக்காவில் இஸ்லாத்தை குரை´ மக்களிடம் போதித்த நேரத்தில், உண்மையில் இவர் இறைத் தூதர்தானா என்பதைச் சோதிப்பதற்காக, வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களிடம் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர்.

உண்மையில் இவர் இறைத்தூதர்தான் என்பதை அறிந்துகொள்ள மூன்று கேள்விகளைக் கேட்குமாறு யூதர்கள் ஆலோசனை சொன்னார்கள். அவற் றில் ஒன்றுதான் உலகின் கிழக்கு மேற்குத் திசைகளில் பிரயாணம் செய்த பயணியைப் பற்றிய செய்தி. இது குறித்து அல்லாஹ் வசனத்தை இறக்குகின்றான்.

(நபியே!) அவர்கள் துல்கர்னனைப் பற்றி உம்மிடம் வினவுகின்றனர். அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக்காண்பிக்கிறேன் என்று கூறுவீராக. அல்குர்ஆன்: 18:83.

பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் அடைந்தபோது, அவ் விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவர்களாக இருக்கவில்லை. அவர்கள் துல் கர்னைனே! நிச்சயமாக யாஃஜுஜும், மாஃஜுஜும் பூமியில் (ஃபஸாது) குழப்பம் செய்கிறார்கள். ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா? என்று கேட்டார்கள்.

அதற்கவர், என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதை விட) மேலானது. ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள் (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும்போது ஊதுங்கள் என்றார், அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள், அதன் மேல் ஊற்றுகிறேன் (என்றார்).

எனவே, (யாஃஜுஜ் மாஃஜுஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவார மிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை. இது என் இறைவனிடமிருந்துள்ள ஒருகிருபையே ஆகும். ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள்தூளாக்கி விடுவான், மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே என்று கூறினார். அல்குர்ஆன்: 18:83-98.

யாஃஜுஜு, மாஃஜுஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள். அல்குர்ஆன் :21:96

பூமியில் குழப்பம் விளைவிக்கும் ஒரு பெருங்கொண்ட கூட்டம் இறுதி நாளில் வெளியாகி மக்களுக்குத் தீங்கிழைப்பார்கள் என்ற உண்மையை குர்ஆனும், ஹதீஃத்களும் கூறுகின்றன. இவர்கள் பூமியில் இன்றும் உயரமான மலைகள் சூழ்ந்த அரண்களுக்குள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் விசித்திரக்குள்ளர்கள்.

இவர்கள் உயரம் ஒரு சான் அல்லது இரு சான் அதிகபட்சம் மூன்று சான்களுக்கு மேல் இருக்கமாட்டார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசித்திரக் குள்ளர்கள் இறுதி நாளின் போது வெளிக்கிளம்பி வந்து பெரும் அட்டூழியங்களில் ஈடுபடுவர். ஃபத்ஹுல் பாரி, நூல்: புகாரி 7ம் பாகம், பக்கம் 573.

இவர்கள் நம்மைப் போல ஆதம்(அலை) அவர்களின் சந்ததியில் வந்த மனிதர்களே. “”யாஃஜுஜ், மாஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி), நூல்:தப்ரானீ, இப்னு ஹஜர், பத்ஹுல் பாரி.

இவர்கள் நூஹ்(அலை) அவர்களின் புதல்வர் யாபிஸ் என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம்.

அல்லாஹ்வின் அடியார் துல் கர்னைன் அவர்கள், சூரியன் உதிக்கும் கிழக்கு திசை பயணத்தி லேயே யாஃஜுஜ்-மாஜுஜால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்கள். குழப்பமான பித்னாக்கள் புறப்படும் திசை கிழக்கு, பெரும் குழப்பவாதி தஜ்ஜால் கிழக்கு திசையிலிருந்துதான் புறப்பட்டு வருவான் என்பது நபிமொழி. (புஹாரி : 3279) கீழ் திசையில் இருக்கும் இந்தோனேசியா அடர்ந்த காட்டுத் தீவான புளோரஸ் என்னும் இடத்தில், 7 செப்டம்பர் 2003ம் ஆண்டு மூன்றடி உயரமுள்ள சுமார் 30 வயதுடைய ஒரு பெண்ணின் எலும்புக் கூட்டை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

இந்த விசித்திர குள்ளர்கள் வியாதியின் காரணமாக குள்ளமாக உள்ளார்களா அல்லது புதுவித இனமா என்பது பற்றி கடந்த பத்து வருடங்களாக பல்வேறு ஆய்வுகள் செய்து இறுதியில், இது மனித இனத்தை சார்ந்த குள்ள இனம். பல ஆயிரம் ஆண்டுகள் அத்தீவிலேயே தனிமைப்பட்டு வாழ்ந்ததில் குள்ளமாக உள்ளனர். மனிதர்கள் மட்டும் அல்ல. அங்குள்ள யானை போன்ற விலங்குகளும் குள்ளமாக இருந்தது. இது அத்தீவின் தனிப்பட்ட விஷேசம் என்பதை ஆய்வுகள் கூறின.

இந்தக் குள்ளர்கள் இன்றும் மலைப்பாங்கான அடர்ந்த காட்டு அரண்களுக்குள் வாழ்ந்து வர வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறினர். இவர்கள் மறைந்து வாழும் யாஜுஜ்-மாஜுஜ் கூட்டமாக இன்ஷா அல்லா இருக்கலாம் என்று அன்றே ஒரு கட்டுரை எழுதினோம்.

யாஃஜுஜ், மாஃஜுஜ், தஜ்ஜால்?

இந்த குள்ள மனிதர்களைப் பற்றிய கூடுதல் ஆய்வுச் சான்றுகள், புகழ்பெற்ற ஆராய்ச்சி இதழான நேச்சரில் (Nature-International Weekly journal of science, 14, January-2016)  இவ்வாரம் வெளியானது. குள்ள மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட புளோரஸ் தீவிலிருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள சூலவேசி என்ற தீவில் நடந்த தொல்பொருள் அகழாய்வில், மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்திய பல்வேறு கூர்மையான கற்கருவிகளை கண்டெடுத்தனர்.

இந்தக் கற்கருவிகளின் வயதை, அதி நவீன ஆய்வு முறையில் சோதித்து பார்த்தபோது, இவை கள் சுமார் 118,000 முதல் 194,000 வருடத்திற்கு முன் வாழ்ந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த உண்மை தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. காரணம், சுமார் 60,000 வருடங்களுக்கு முன்புதான் படகு மூலம் பயணம் செய்து, மனித இனம் ஆப்ரிக்காவில் இருந்து இந்தோனேசியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாக இதுவரை நம்பப்பட்டு வந்ததே.

சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பே இவர்கள் எவ்வாறு கடலைக் கடந்தார்கள் என்பது ஆய்வாளர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை பெரும் சுனாமி அலையின் தாக்கத்தினால் காட்டு மரங்களோடு மிதந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சூலவேசி தீவுகளில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதால், இவர்களுக்கும் இதற்கு அருகில் உள்ள புளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட குள்ள மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தோனேசியா புளோரஸ் தீவு குகையில் கண்டெடுக்கப்பட்ட மூன்றடி குள்ள மனித எலும்பு கூடு, யாஜுஜ், மாஜுஜ் மனிதக் கூட்டத்தை சேர்ந்த தாக இருக்க வேண்டும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஆனாலும் அல்லாஹ் மட்டுமே உண்மையை அறிந்தவன்.

1. நமது பூலோக ரீதியான கணக்கின்படி அல்லாஹ்வின் அடியார் துல்கர்னைன் அவர்கள் பயணம் செய்த சூரியன் முதலில் உதிக்கும் கிழக்கு திசையில் உள்ள நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு மலைகள் சூழ்ந்த அடர்ந்த காடுகளைக் கொண்ட தீவுகள் ஏராளம். துல் கர்னைன் பயணம் செய்த வடக்குப் பக்கம் சூலவேசி தீவு உள்ளது. தெற்கில் உள்ளது புளோரஸ் தீவு.

2. இந்த புளோரஸ் தீவுகளில் இன்று வாழ்ந்து வரும் மக்கள், வழி வழியாக தங்கள் மூதாதையர்கள் கூறிய குள்ள மனிதர்களைப் சிணுற் றூலிஆலி பற்றிய கதைகள். அவர்கள் ஊருக்குள் புகுந்து மக்களின் வாழ்வாதாரங்களை நாசம் செய்து, கிடைக்கும் அனைத்தையும் தின்று தீர்க்கும் குணம். இவை அனைத்தும். யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தாருக்கு ஒத்துப் போகிறது. சிணுற் றூலிஆலி என்று தீவுவாசிகளால் அழைக்கப்படும் சொல், சிணுற் னிழிஆலிஆ சொல்லுடன் பொருந்துகிறது.

3. யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஒரு இனமே என ஹதீஃத் கூறுகிறது. புளோரஸ் தீவில் கண் டெடுக்கப்பட்ட மூன்றடி குள்ள எலும்பு கூடும் மனித இனத்தின் உள்ள தனி இனம் என்று ஆய்வு முடிவுகள் கூறுவது கவனிக்கத்தக்கது.

4. யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் வில், அம்பு கொண்டு வேட்டையாடுவதில் வல்லவர்கள் என்று ஹதீஃத் கூறுவதை புளோரஸ் தீவின் குகை யில் கிடைத்த வேட்டைப் பிராணிகளின் எலும் பும், கூர்மையான கற்கருவிகளும், சூலவேசி தீவில் கண்டெடுத்த கல் ஆயுதங்களும் உறுதிப்படுத்துகின்றன.

5. அல்லாஹ்வின் அடியார் துல் கர்னைன் அவர்கள் இந்தோனேசியா தீவுப் பகுதிகளுக்கு வந்து ஆட்சி செய்ததற்கு சான்றாக, இன்றும் இந்தோ னேசியா சுமத்ரா தீவு அரச குடும்பத்தினர் தாங்கள் துல் கர்னைன் மன்னர் வழி வந்தவர்கள் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

6. ஹதீஃத்களில் கூறிய யாஜுஜ்-மாஜுஜ் முக அடையாளமும் குள்ள எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டை வைத்து கணினி வரைந்த முக அமைப்பும் முற்றாக பொருந்துகிறது.

யாஃஜுஜ், மாஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்க ளின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்ட மாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர் : காலித் பின் அல்துல்லாஹ், நூல்கள்: அஹ்மத் தப்ரானீ.

யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் ர´யா, காகாசிய -துருக்கி மலைப்பகுதிகளில் இருக்கலாம் என்று இன்றைய சில குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவது பைபிளின் விளக்கமாகவே உள்ளது. குர்ஆன் மற்றும் ஹதீஃத் விளக்கத்தின்படி யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் விசித்திர குள்ளர்கள். இவர் கள் எதையும் விளங்கிக்கொள்ள முடியாத காட்டு மிராண்டி ஆதிவாதிகள், கொலை, கொள்ளை, அழிவு நாசம் செய்யும் கொடூரமானவர்கள். இவர்கள் நாகரீகம் சூழ்ந்த காகாசிய நாடுகளில் இருக்க வாய்ப்பில்லை.

ஆதம்(அலை) அவர்களைப் படைத்ததலிருந்து, மறுமை நாள் ஏற்படுவதற்கும் இடைப்பட்ட நாளில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட பெரிய குழப்பம் ஏது மில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரழி), முஸ்லிம் : 2946

ஆதம்(அலை) அவர்கள் காலத்திலிருந்து இறுதி நபி(ஸல்) அவர்கள் வரை வந்த அத்தனை நபிமார்களும் தங்கள் உம்மத்திற்குச் செய்த எச்சரிக்கை ஒன்றுதான். மகா குழப்பவாதி தஜ்ஜாலின் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடுவதுதான். இன்று நமது ஐவேளை தொழுகையில் கேட்கப்படும் துஆவும் இதுதான். இந்த குழப்பவாதி தஜ்ஜாலை ஈஸா (அலை) அவர்கள் மட்டுமே கொல்ல முடியும். வேறு எவராலும் கொல்ல முடியாது.

தஜ்ஜாலை விட்டும் அல்லாஹ் காப்பாற்றி விட்ட ஒருகூட்டத்தாரிடம் அடுத்து ஈஸா(அலை) அவர்கள் வருவார்கள். அவர்களின் முகங்களை தடவி விடுவார்கள். அவர்களிடம் சொர்க்கத்தில் உள்ள அவர்களுக்குரிய தகுதிகளைப் பற்றி ஈஸா நபி கூறுவார்கள். அந்த சமயத்தில் ஈஸாவிடம் அல் லாஹ், நான் என் அடியார்களில் சிலரை வெளி யாக்க உள்ளேன். அவர்களிடம் யாரும் சண்டை செய்ய முடியாது. எனவே என் அடியார்களை தூர் மலைப் பக்கம் ஒன்று சேர்ப்பீராக! என்று அல்லாஹ் கூறுவான். அறிவிப்பவர் : நவாஸ் இப்னு ஸம்ஆன்(ரழி) முஸ்லிம் : 2937

தஜ்ஜாலுக்கு அடுத்து வரும் யாஜுஜ்மாஜுஜ் குழப்பக் கூட்டத்தை கொன்று குவிக்க ஈஸா(அலை) அவர்களாலும் முடியாது. அவர்கள் மிகப் பயங்கரமாக பூமியில் அட்டூழியம் செய்வார்கள். அவர்கள் வெளியாக்கப்படும்போது கண்ணில் படுவதை எல்லாம் தின்றும், ஓடும் ஆற்று நீர் வற்றிப் போகும் அளவு குடித்தும் பலம் பெறுவார்கள். ஒரு யாஜுஜ்- மாஜுஜ் பெண்ணானவள் ஆயிரம் குழந்தைகளைப் பெறாமல் மரணிக்க மாட்டாள் என்பது நபி மொழி.

எனவேதான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகிலுள்ள அத்தனை மனு,ஜின் கூட்டத்தில் ஆயிரத்தில் 999 பேர் நரகம் சென்றால், யாஜுஜ்- மாஜுஜ் கூட்டத்தார் 1000 பேரும் நரகம் செல்பவர்கள் என்று கூறினார்கள். (புகாரீ 3348, 4741) இந்த விசித்திரக்குள்ளர்கள் இறுதி காலத்தில் வெளியாக்கப்படுவார்கள் என்று சொல்வதிலிருந்து, இவர்கள் நாம் வாழும் உலகத்தில் ஏதோ ஓர் இடத்தில் மறைந்து வாழ்கிறார்கள். மறைந்து வாழ்வதற்கு பொருத்தமான இடமாக, அடர்ந்த காடு, உயரமான மலைகள், 150 எரி மலைகள் நிறைந்ததாக இந்தோனேசியா தீவு கூட்டம் உள்ளது.

இந்தோனேசியா மொத்த நிலப்பரப்பில் சுமார் 64% அடர்ந்த காடாக உள்ளது. மொத்தம் உள்ள 18,307 தீவுகளில் சுமார் 8,844 தீவுகளுக்கு மட்டுமே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 6000 தீவுகளில் மனிதர்கள் பரவலாக வசிக்கிறார்கள். 922 தீவுகளில் மனிதர் யாரும் இல்லா அடர்ந்த காடாக உள்ளன. யாஜுஜ்- மாஜுஜ் குள்ளர்கள் வசிப்பதற்கு உகந்த இடமாக இவை இருக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்.

தொல்பொருள் ஆய்வாளர்கள் தொடர்ந்து இங்கு அகழாய்வு செய்து வருகின்றனர். குள்ள மனிதர்களைப் பற்றிய புதிய செய்திகள் இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் கிடைக்கலாம். எனினும் அல்லாஹ் யாஜுஜ் – மாஜுஜ் கூட்டத்தாருக்கு அனுமதி கொடுக்கும்போதுதான், அவர்களைப் பற்றி உலகம் அறிந்து கொள்ள முடியும். அதுவரை எந்த ஆய்வாளர்களாலும் அவர்களை உயிருடன் காண முடியாது. காரணம் அவர்கள்மலை சூழ்ந்த அரணுக்குள் அகப்பட்டுள்ளார்கள்.

2003ம் வருடம் Lia Buang எனும் குகையில் கண்டெடுக்கப்பட்ட பெண் எலும்புக் கூடு வாழ்ந்த காலம் சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பு, ஒரு வேளை துல்கர்ணைன் (அலை) அவர்கள் இப்பிரதே சத்திற்கு வருவதற்கு முன்பு மரணித்த பெண்ணாக இருக்கலாம். அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.

அல்குர்ஆன் வசனங்களை இன்றைய நவீன ஆய்வுகள் தொடர்ந்து உண்மைப்படுத்தி வருவது ஆச்சரியமல்ல.

அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான். ஆனால் அவர்கள் அதைத் தங்கள் கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள். அல்குர்ஆன்: 20:110

Reconstructed Face of Extinct Hobbit Species Is Startlingly Humanlike

http:blogs.scientificamerican.com/observations/reconstructed-face-of-extinct-hobbit-species-is-
startlingly-humanlike/

This female’s head, like the rest of her body, was unusually small. Her brain was about a third the size of ours, but her species made and used stone tools, and hunted a variety of animals. The small body size of Homo floresiensis may have helped the species survive on an island with limited resources.

மதங்களும்! மதகுருமார்களும்!! மனிதர்களும்!!!

அபூ அப்தில்லாஹ்

ஜனவரி 31, 2016 அன்று திருச்சியில் ததஜ என்ற பிரிவினைவாதிகள் “ஷிர்க் ஒழிப்பு மாநாடு” என்ற பெயரில் அரங்கேற்றிய நாடக, பட்டிமன்ற, கலை நிகழ்ச்சியின் எதிர்வினையாக 4-ம் தேதியிட்ட தமிழ் இந்து நாளேட்டில் சமஸ் என்ற பெயரில் இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால் வஹாபியிசத்திற்கு என்ன பெயர்? என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் “”எம்மதமும் சம்மதம்” என்று புதிதாக ஒரு கோட்பாடு உருவாகி வருகிறதே அக்கோட்பாட்டைக் கட்டுரையாளர் வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய பெரும்பான்மை மக்களின் நிலையும் அதுதான். அதாவது வழிகேட்டில் ஒன்றுபடுவது, ஒருவரை ஒருவர் இணங்கிப் போவது.

எளிதாக விளங்க உதாரணம் ஒன்று கூறுகிறோம். 8×8=64 என்பது சரியான கணக்கு. 64 அல் லாத 62,65,70,75 என எத்தொகையைக் கூறினாலும் அவை அனைத்தும் தவறானவை என்பதில் ஒன்றுபடுகின்றன என்பது உண்மைதானே!

இப்போது பெருங்கொண்ட மக்கள் ஏற்றுக் கொள்ளாத, கடுமையாக எதிர்க்கும் ஒரு பேருண் மையை, இறுதி இறைநூல் குர்ஆன் மற்றும் முன்னைய, இறைவனால் ரத்து செய்யப்பட்ட மனிதக் கருத்துக்கள் நுழைக்கப்பட்ட இந்துக்களின் 4 வேதங்கள், யூதர்களின் தோரா, கிறித்தவர்களின் பைபிள், ஏனைய மதங்களின் வேத(?) நூல்கள் என அனைத்தும் ஏகோபித்துக் கூறும் உண்மை என்ன தெரியுமா? அகிலங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனித குலத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய, ஒரே கடவுளாகிய, ஒரே தெய்வமாகிய அரபியில், ஆண், பெண், ஒருமை, இருமை, பன்மை எனப் பல பொருள் எடுக்க முடியாத ஒரே பொருள் கொண்ட பெயரான “”அல்லாஹ்” என்று அழைக்கப்படும் ஒரே இறைவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும், அவனது கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும், அவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு இடைத்தரகர்களாகப் படைப்புகளில் எதையும் மனிதர்களில் எவரையும் கொள்ளக் கூடாது என்ற பேருண்மையே அது.

மனிதப் படைப்பின் ஆரம்பத்திலிருந்து மனித குலம் ஒரே சமுதாயமாக ஒற்றுமையாக, சுகமாக, சுபீட்சமாக, வளமாக, அமைதியாக இவ்வுலகில் வாழ்வதோடு, மறுமையில் மாபெரும் வெற்றி பெற இறைவனாகிய அல்லாஹ் கொடுத்தது ஒரே நேர்வழி மட்டுமே. இந்த பேருண்மையை மனித குலம் அனைவருக்கும் சொந்தமான (முஸ்லிம்களுக் குரிய வேதம்(?)அல்ல) அல்குர்ஆனின் : 2:38,39,213, 6:153 இன்னும் இவைபோல் பல வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஒரே இறைவனாகிய அல்லாஹ் கொடுத்த வழியல்லாத வேறு நேர்வழி இல்லவே இல்ல என்பதையும் பல குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இறைவன் கொடுத்தது ஒரே நேர்வழி – மார்க்கம்.
(பார்க்க : 6:153)

மனிதர்களின், குறிப்பாக கடவுள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி அற்பமான இவ்வுலகில் கேவலம் ஒரு ஜான் வயிற்றை முற்றும் தவறான-தடுக்கப்பட்ட வழியில் நிரப்பும் மதகுருமார்களின் கற்பனையில் உருவானவையே முஸ்லிம் மதம் (இஸ்லாமிய மார்க்கம் அல்ல) உட்பட அனைத்து மதங்களும். எனவே “”எம்மதமும் சம்மதம்” என்ற சம சினதும், தமிழ் இந்து நாளேட்டினதும் கோட்பாட்டில் உண்மை முஸ்லிமுக்கு அதாவது குர்ஆனைப் பின்பற்றுகிறவர்களுக்கு மறுப்பு ஏதும் இருக்க முடியாது.

ஆம்! கடவுள் பெயரைச் சொல்லியே மதங்கள் கற்பனை செய்யப்பட்டிருந்தாலும் மதங்களுக்கும், ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கும் அணுவளவும் சம்பந்தமே இல்லை. மதங்கள் தவறான-தடுக்கப்பட்ட வழிகளில் வயிறு வளர்க்கும் சுயநல நோக்கில் மதகுருமார்களின் கற்பனையில் உருவானவையே அனைத்து மதங்களும். ஆதி மனிதர் ஆதத்திலிருந்து எண்ணற்ற இறைத் தூதர்கள் இறைவனிடமிருந்து நேரடியாக இறைச் செய்திகளைப் பெற்று மக்களுக்கு அறிவித்தனர். அந்த இறைத்தூதர்கள் போதித் தது இறைவன் ஒருவனே. அவன் தனித்தவன். இணை துணை இல்லாதவன், அவனுக்கு மனைவி மக்கள் இல்லை. அவனை மட்டுமே தெய்வமாக ஏற்கவேண்டும். அவனை மட்டுமே வழிபடவேண்டும். அவனது வழிகாட்டல்படியே நடக்க வேண்டும். அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பது மட்டுமே! இறைத் தூதர்கள் எங்களின் இந்தப் பணிக்காக உங்களிடம் நாங்கள் கூலி-சம்பளம் எதுவும் கேட்கவில்லை. எங்களுக்குரிய சம்பளம் இறைவனிடம் மட்டுமே உண்டு என்று தெளிவாகப் பறைசாற்றியுள்ளதை இறுதி இறைநூல் குர்ஆனின் 42:13,14,15,16, 6:90, 10:72, 11:29,51, 23:72, 25:57, 26:109,127,145,164, 180, 34:47, 38:66, 42:23 ஆகிய வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிற வர்கள் அறிவார்கள்.

ஆக இறைத்தூதர்கள் நோவா, ஏப்ரஹாம், மோஸஸ், ஜீஸஸ், முஹம்மது முதல் அனைத்து இறைத்தூதர்களும் கூலி-சம்பளம் வாங்காமல் போதித்து 6:153 இறைவாக்குக் கூறும் ஒரே நேர்வழி யைத்தான். ஒரே மார்க்கத்தைத்தான். ஆனால் அந்த இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு சுயநலவாதி களான மதகுருமார்கள் சட்டவிரோதமாகத் திருட் டுத்தனமாக ஒவ்வொரு சமுதாயத்திலும் நுழைந்து அவர்களின் வயிற்றுப் பிழைப்பை ஆதாயகரமாக நடத்தக் கற்பனை செய்தவையே அனைத்து மதங்க ளும். இறைவன் ஆதியிலிருந்தே கொடுத்தது ஒரே நேர்வழி மார்க்கம்! மதகுருமார்களின் கற்பனையில் உருவானவையே எண்ணற்றக் கோணல் வழிகளான மதங்கள்.

மதங்களுக்கும், இறைவனுக்கும் அணுவளவும் சம்பந்தமே இல்லை. மதகுருமார்கள் கற்பனை செய்த மதங்களைப் பின்பற்றுவோர் இறைக் கோபத்திற்கு ஆளாகி நாளை நரகை அடைவர். எனவே சமஸ் கூறும் எம்மதமும் சம்மதம் என்பது குர்ஆன் சொல்வதல்ல. மதவாதிகளின் கூற்றாகும். இந்த உண்மையை வடலூர் வள்ளலாரும் கூறுகிறார். படித்துப் பாருங்கள்.

கடவுள் காட்டுவது (ஒரே நேர்வழி) பாதை. மதங்கள் ஊட்டுவது போதை.

மதம் அபின் போல் போதை தருவது என காரல் மார்க்ஸ் கூறுகிறார்.

இதையே வலியுறுத்தி ஈ.வே.ராவும் கூறியுள்ளார்.

மதங்கள் மனிதனை மிருகமாக்குகிறது. ஜாதிகள் (பிரிவுகள்) மனிதனை வெறியானாக்குகிறது?

மதங்கள் காரணமாகவே இன்று உலகளாவிய அளவில் எல்லா நாடுகளிலும் இடம்பெறும் அநியாய அட்டூழியங்கள், கொலை பாதகங்கள், அனாச்சாரங்கள், மூட நம்பிக்கைகள், சூதாட்டம், விபச்சாரம், வன்புணர்ச்சி, குடி இன்னும் பல தீய செயல்கள் கரைபுரண்டு ஓடுவதைப் பார்க்கத்தானே செய்கிறோம்.

தூய இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர அனைத்து மதங்களும் முஸ்லிம் மதம் உட்பட மதகுருமார்களின் மனிதக் கற்பனையில் உருவானவையே. மதங்களுக்கும், இறைவனுக்கும் அணுவளவும் சம்பந்தமே இல்லை. ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லியே இம்மதகுருமார்கள் மதங்களைக் கற்பனை செய்துள்ளதால் பெரும்பாலான மக்கள் ஏமாறுகிறார்கள். இம்மதகுருமார்கள் பின்னால் கண்மூடிச் செல்கிறார்கள் அவ்வளவுதான். முஸ்லிம் மதகுருமார்களும் குர்ஆனை அரபியில் முன்னால் இருப் பவர்கள் புரியா நிலையில் எதையாவது ஓதிவிட்டு, குர்ஆன் போதனைக்கு நேர்முரணான சுய கருத்துக்களைக் கூறி மக்களை கோணல் வழிகளில்- மதங்களில் இட்டுச் செல்கிறார்கள்.

அவர்கள் குர்ஆனின் நேரடிப் போதனைகளுக்கு முற்றிலும் முரணான சுய கருத்துக்களைக் கூறி மக்களை வழிகெடுப்பதால் தான் மக்கள் நேரடியாகப் படித்து நேர்வழியை அறியவிடாமல் முஸ்லிம்களையும், முஸ்லிமல்லாதவர்களையும் குர்ஆனைப் படித்து அறிய விடாமல் தடுக்கிறார்கள். காரல் மார்க்ஸ், ஏங்சல்ஸ், அம்பேத்கர், ஈ.வே.ரா. மற்றும் பல சுய சிந்தனையாளர்களுக்கு நேரடியாக இறுதி இறைநூல் குர்ஆனைப் படித்துச் சிந்திக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் சாந்தி மார்க்கம் இஸ்லாத்தைத் தழுவி இருப்பார்கள். அதைக் கெடுத்தவர்கள், குர்ஆன் முஸ்லிம்களின் வேதம்(?) மவ்லவிகளுக்கு மட்டுமே குர்ஆன் விளங்கும். பாமர முஸ்லிம்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் குர்ஆனைப் படித்தாலும் அவர்களால் விளங்க முடியாது. குர்ஆனை அங்கசுத்தி (ஒளூ) இல்லாமல் தொடக்கூடாது, மாதவிடாய்ப் பெண்கள் குர்ஆனை தொடவோ, படிக்கவோ கூடாது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குர்ஆனை கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது என்ற அண்டப்புளுகை, ஆகா சப் பொய்யை கடந்த ஆயிரம் வருடங்களாகக் கூறி வரும் முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளே.

நாளை மறுமையில் தங்கள் பாவச் சுமைகளோடு, உலக மக்கள் அனைவரின் பாவச் சுமைகளையும் சேர்த்துச் சுமக்கும் பெரும் பாவிகளாக இருப்பவர்கள் முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளே. இந்த உண்மையை 7:175-179, 16:25, 29:13, 45:23, 47:25 இன்னும் இவைபோல் பல இறைவாக்குகளை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் நிச்சயமாக மறுக்காமல் ஏற்பார்கள்.

ஆக இன்று உலக மக்கள் அனைவரும் அழிவின் விளிம்பில், நரக விளிம்பில் நிற்பதற்குக் காரணம் மதங்களைக் கற்பிக்கும் மதகுருமார்களே, குறிப்பாக முஸ்லிம் மதகுருமார்களான ஆலிம்கள் என்பதை ஏகன் இறைவனின் இறுதி நெறிநூல் குர்ஆன் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறது.

கழுதை விட்டையில் எப்படி முன்விட்டை, பின் விட்டை என வேறுபாடு இல்லையோ, அதே போல் மதங்களிலும் எவ்வித வேறுபாடும் இல்லை! ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

ஆக ஒட்டுமொத்த அனைத்து மதங்களுக்கும், இறைவனுக்கும் அணுவத்தனையும் சம்பந்தமே இல்லை. இறைத் தூதர்களின் மறைவுக்குப் பிறகு, இறைவனுக்கு இணை(´ர்க்) வைக்கும் நிலையில் சுயநல, உலக ஆதாய விரும்பிகளான மதகுருமார்களின் கற்பனையில் உதித்தவையே அனைத்து மதங்களும். எனவே “”எம்மதமும் சம்மதம்” என்ற மனிதக் கோட்பாட்டில் 6:153 இறுதி நெறிநூல் குர்ஆனின் வசனம் கூறும் ஒரே நேர்வழி (வேறு மத அடிப்படையிலான வழியே இல்லை) நடக்கும் முஸ்லிம்களுக்கு மறுப்பு இருக்க முடி யாது. இதை மீண்டும் கூறி உறுதிப்படுத்துகிறோம்.

மேற்படி கட்டுரையை எழுதிய ஸம்சுக்கும், அதைப் பிரசுரித்த இந்து நாளேட்டினருக்கும் இறைவனின் இறுதி நெறிநூல் குர்ஆனின் நேர்வழி போதனை தெரியவில்லை என்பது மட்டுமல்ல நமது இந்திய நாட்டின் வரலாறும் தெரியவில்லை என்பது மிக வேதனையான செய்தியாகும்.

இந்து மதம், இந்துத்துவம் என்ற சொற்றொடர்கள் எப்போது நடைமுறைக்கு வந்தன என்பதை அறியாதவர்கள் அவற்றைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால் இந்து நாளேடும் அதைத் தூக்கிப் பிடிப்பது அறிவுடைமையா?

அனைத்துப் படைப்புகள், படைப்பினங்கள், மனித குலத்தினர் அனைவருக்கும் ஒரே இறைவன் தான், ஒரே கடவுள்தான், ஒரே அல்லாஹ்தான் என் பதை உறுதிப்படுத்தும் வசனங்களை இந்துக்களிடம் இருக்கும் நான்கு வேதங்களிலிருந்தும் எம்மால் காட்ட முடியும். தோரா, பைபிள் இதர வேதங்கள் அனைத்திலிருந்தும் காட்டமுடியும். அதேபோல் இந்துக்களுக்கு ஒரு கடவுள், கிறித்தவர்களுக்குப் பிரிதொரு கடவுள், யூதர்களுக்கு இன்னொரு கடவுள் என்பது மடைமை வாதம் என்பதையும் அவர்களிடமிருக்கும் நான்கு வேதங்கள், தோரா, பைபிள் போன்ற நூல்களிலேயே எம்மால் காட்ட முடியும். இந்த நிலையில் “”இந்து மதம்” என்றோ “”இந்துத்துவா” என்றோ இந்துக்களின் நான்கு வேதங்களில் ஒன்றிலிருந்தாவது அவர்களால் காட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது. அப்படி யானால் இந்து மதம், இந்துத்துவா இரண்டும் மிகச் சமீப காலத்தில் பிராமண மதகுருமார்களால் கற் பனை செய்யப்பட்டவை என்பது எளிதாக விளங்குகிறதா? இல்லையா?

இந்திய மக்களின் ஆரம்ப அடிப்படை வாதம் “”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதேயாகும். ஆரியர்களின் வருகைக்கு முன்னர் இந்திய மக்கள் ஒரே சமுதாயமாக இருந்து கடவுள் ஒருவனுக்கு மட்டுமே வழிபாடுகளைச் செய்து வந்தனர். மதகுருமார்களான ஆரிய பிரமாணர்களே இந்திய மக்களுக் குள் திருட்டுத்தனமாகப் புகுந்து அவர்கள் தங்கள் வாழ்வை வளம்பெறச் செய்ய கோணல் வழியான மதத்தைக் கற்பனை செய்தார்கள். 2:213 இறுதி நெறி நூல் குர்ஆன் வசனம் கூறுவது போல், அவர்களி டையே ஏற்பட்டப் போட்டி, பொறாமை காரணமாக சிவனை முழுமுதல் கடவுளாகக் கொள்ளும் சைவ மதப் பிரிவையும், திருமாலைப் பரம் பொருளாகக் கொள்ளும் வைணவ மதப் பிரிவையும் கற்பனை செய்தார்கள். அதற்கு மேலும் மனுநீதி-அதாவது மனிதன் கற்பனை செய்த நீதி என்ற பெயரில் நான்கு ஜாதிகளைக் கற்பனை செய்து பஞ்சமர் என்ற ஐந்தாவது பிரிவையும் கற்பனை செய்து, நம் நாட்டு மண்ணின் மைந்தர்களை தீண்டத்தகாதவர்களாக, கீழ் ஜாதியாக, இன இழிவுக்கு ஆளாக்கி, அவர்களை தங்களின் கொத்தடிமைகளாக ஆக்கிக் கொண்டு, ஆரிய மதகுருமார்கள் கடவுள் பெயரைச் சொல்லியே தங்களின் வாழ்வை வளமாக்கிக் கொண்டார்கள். ஆக ஆரிய பிராமணர்களின் சூழ்ச்சியால் “”ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என் நிலையில் ஒரே சமுதாயமாக இருந்த நம் நாட்டு மக்கள் பல ஜாதிகளாகப் பிளவுபடுத்தப் பட்டு இழிவுக்கும், வறுமைக்கும், கொடும் துன்பங்களுக்கும் ஆளானார்கள். இன்று வரை அதே இழிவு நிலையே நீடிக்கிறது.

வெள்ளையன் சூழ்ச்சி செய்து மதகுருமார்களில் சிலரை ஆசைக் காட்டித் தன் கைக்குள் போட்டுக் கொண்டு நம் நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமரும் வரை சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் என பல மதங்கள் காணப்பட்டனவே அல்லாமல் இந்து மதம் என்று ஒன்று இருக்கவில்லை.

அரபு நாட்டினருக்கு நம் நாட்டுடன் வெகு நீண்ட கால வணிகத் தொடர்பு உண்டு. அவர்களே நம் நாட்டை “ஹிந்த்’ என்று அழைத்து வந்தார்கள். அதை வைத்தே வெள்ளையன் நம் நாட்டை இந்தியா என்று பிரபல்யப்படுத்தினான். ஆக வெள்ளையன் வருகைக்குப் பின்னரே இந்து மதம் கற்பனை செய்யப்பட்டது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் காந்தியை கையில் இஸ்மாயீல் என பெயர் குத்தி முஸ்லிம் வேடத்தில் சுட்டுக் கொன்ற கோட்சேயின் இனமான பிராமணர்களால் RSS மற்றும் அதன் உட்பிரிவுகளான பல பிரிவுகள் கற்பனை செய்யப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்துத்துவா பிரிவு. இந்த நிலையில் இந்துத்துவம் என்ற பிரிவு எப்படி அடிப்படை வாதமாக அமை யும். சிந்தியுங்கள்.

வேண்டுமென்றால், நீண்ட நெடுங்காலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருதாய் மக்கள் போல் மிகுந்த ஒற்றுமையுடனும், பாசத்துடனும் வாழ் வதைக் கெடுத்து, அவர்களிடையே பொய்ச் செய்திகளைப் பரப்பி, கலவரங்களைத் தூண்டி விட்டு, சண்டைச் சச்சரவுகளில் ஈடுபடுத்தி, அவர்களிடை யேயும் போட்டி பொறாமையை ஏற்படுத்தி நாட் டைச் சுடுகாடாக்கும் தீய நோக்குடன் செயல்படும் அமைப்புக்கு இந்துத்துவ அடிப்படைவாதம் என்பது மிகமிகப் பொருத்தமே.

இப்போது வஹாபியிசம் என்றால் என்ன என்று பார்ப்போம் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் கி.பி.1699-ல் அரபு நாட்டில் அப்துல் வஹ்ஹாப் என் பவருக்கு மகனாகப் பிறந்தவர் முஹம்மது என்பவர். அவரது காலத்தில் சுமார் 1450 வருடங்களுக்கு முன்னர் அரபு நாடு எப்படி சிலை வணக்கத்தில் மூழ்கி இருந்ததோ அதே நிலைக்கு கபுரு வணக்கத்திற்கு மீண்டும் முஸ்லிம் மதகுருமார்களால் தள்ளப்பட்டிருந்தது. அது இறைவனுக்கு இணை வைக்கும் கொடும் செயல். சிலை வழிபாடும், சமாதி வழிபாடும் ஒன்றுதான், இறைவனுக்கு இணை வைக்கும் செயல் எனக் கடுமையாகப் பிரசாரம் செய்தார். அதனால் அன்றைய முஸ்லிம் மதகுருமார்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார்.

அவரது கபுரு-தர்கா வழிபாடு எதிர்ப்புப் பிரசாரத்தின் தாக்கம் இந்தியாவையும் வந்தடைந்து, கபுரு வழிபாடுகள் மூலம் வயிறு வளர்க்கும் முஸ்லிம் மதகுருமார்கள் பொறுப்பார்களா? எனவே முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் எடுத்து வைத்த குர்ஆன், ஹதீஃத் போதனைகளை வழமை போல் அவரது சுய போதனைகளாகச் சொல்லி, தங்கள் பின்னால் கண் மூடி வந்த முஸ்லிம்களைக் காத்துக் கொள்ள முற்பட்டார்கள். அதற்காக சுன்னத் ஜமாஅத் மதகுரு மார்கள் கற்பனை செய்ததே வஹ்ஹாபியிசம்.

சுன்னத் ஜமாஅத் மதகுருமார்கள் எந்தளவு மூளை வரண்டவர்கள் என்று பாருங்கள். கபுரு வழிபாடுகளை எதிர்த்துப் பிரசாரம் செய்தவர் முஹம் மது. அவரது தகப்பனார் பெயர் அப்துல் வஹ்ஹாப். அப்படியானால் அப்துல் வஹ்ஹாபின் மகன் முஹம்மதுடைய கொள்கை என்று அவர்கள் நம்பி னால் “”முஹம்மதீ” என்றல்லவா சொல்ல வேண்டும். ஏன் வஹ்ஹாபி என்று சொல்ல வேண்டும்? உண்மை இதுதான். “”முஹம்மதீ” என்றால் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை இழிவுபடுத்துவது போல் ஆகும் என்ற தவறான எண்ணத்தில் வஹ்ஹாபி என்று அவதூறு பரப்பினர். உண்மையில் “”வஹ்ஹாப்” என்ற பெயர் ஏக இறைவனான அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று என்பதை அறியாதவர்களா இந்த முஸ்லிம் மதகுருமார்கள்?

அப்படியானால் மார்க்ஸ் வகுத்தளித்தது மார்க்ஸிசம் என்பது போல் மனிதகுலத்தினர் அனைவருக்கும் ஒரே இறைவனாகிய அரபு மொழியில் அல்லாஹ் என்றும், அவனுடைய பெயர்களில் ஒன்றான வஹ்ஹாப் என்றும் அழைக்கப்படும் இறைவன் வகுத்தளித்த சட்டம்தான் வஹ்ஹாபிசம் என்ற இந்த உண்மையை அறிந்திருந்தால் இந்த மவ்லவிகள் வஹ்ஹாபி, வஹ்ஹாபியிசம் என இழிவுபடுத்த முற்படுவார்களா?

இன்னும் இந்த மவ்லவிகளின் அறிவீனத்தைப் பாருங்கள்! அப்துல் வஹ்ஹாபின் மகன் முஹம்மது வெளிப்படுத்திய கொள்கை என்ற மூட நம்பிக்கை யில் சொல்வது ஒரு குற்றம். அதை “”முஹம்மதீ” என்று சொல்லாமல் “”வஹ்ஹாபி” என்று சொல்வது அதைவிட மிக அறிவீனமாகும். இறுதித் தூதரின் பெயர் முஹம்மது(ஸல்) முஹம்மதீ என்றால் அவர் களை இழிவுபடுத்துவதாகும். அது கூடாது, ஆனால் “”வஹ்ஹாபி” என்று கெட்ட நோக்கத்துடன் கூறுவது அல்லாஹ்வையே இழிவுபடுத்தும் பெருங்குற்ற மாகுமே என்பதைக் கூட அறியாத மூடர்களாக இருக்கிறார்கள் இம்மவ்லவிகள்.

“வஹ்ஹாபி’ என்றால் அல்லாஹ்வைச் சேர்ந்தவன். அப்படி என்றால் சுன்னத் ஜமாஅத்தினர் தங்களைத் தாங்களே அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஷைத்தானி-ஷைத்தானைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி அளிக்கிறார்களா?

அறியாத மூடர்கள் என்பதைவிட அறிந்த மூடர்கள் என்றுதான் சொல்லவேண்டும். இதையே 2:146, 6:20 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. முன்னைய சமூகங்களில் திருட்டுத்தனமாக நுழைந்த மதகுருமார்கள் அச்சமூகங்களுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களையே அவர்களின் மறைவுக்குப் பிறகு கடவுளின் நிலைக்கு உயர்த்தி இறைவனுக்கு இணை வைத்து ஷைத்தானின் ஆதரவையும், உதவியையும் பெற்று பெருங்கொண்ட மக்களை தங்களுக்கு அடிமையாக்கியது போல், முஸ்லிம் சமுதாயத்தில் திருட்டுத்தனமாக நுழைந்துள்ள இம்மதகுருமார்களும் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை தெய்வமாக்கும் வீண் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால்தான் அடிப்படை உறுதிமொழியான கலிமாவிலுள்ள “”அல்லாஹ்வின் அடிமையும் தூதராகவும் இருக்கிறார்கள்” என்று உறுதி கூறுவதி லுள்ள அடிமையைத் தூக்கி எறிந்துவிட்டு “”தூதராக இருக்கிறார்கள்” என்று மட்டும் கூறி வருகிறார்கள். அதையே மக்களிடமும் பரப்பி வருகிறார்கள்.

சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் பாருங்கள். பள்ளியின் முன் பகுதியில் மேலே வலப்பக்கம் அரபியில் “”அல்லாஹ்” என்றும் இடம் பக்கம் “”முஹம்மது” என்று எழுதியும், இறைவனுக்கு அடிமையான இறைத்தூதரை இறைவனுக்குச் சமமாக உயர்த்தி இருக்கிறார்கள். அதே மூட நம்பிக்கையில்தான் இங்கு முஹம்மதீ என்று கூறினால் அது தூதரை இழிவுபடுத்தியதாகும் என நினைத்து “”வஹ்ஹாபி” எனக்கூறி வஹ்ஹாப் என்ற பெயரையும் உடைய இறைவனையே அவர்களது தவறான எண்ணத்தில் இழிவுபடுத்துகிறார்கள். அதுபோலவே குர்ஆன் 40:41 இறைவாக்கு “”என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை நஜாத் ஈடேற்றத்தின் பால் அழைக்கிறேன். ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பின்பால் அழைக்கிறீர்கள். (40:41)

நான் இறைவனை நிராகரிக்க வேண்டுமென்றும் எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் இறைவனுக்கு இணையாக்க வேண்டும் என் றும் என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். ஆனால் நானோ(யாவரையும்) மிகைத்தோனும் மிக மன்னிப்பவனுமாகியவனின் பக்கம் அழைக்கிறேன். (40:42)

சந்தேகமில்லாமல் என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (தெய்வம் என) அழைக்கப்படுவ தற்கு சிறிதும் தகுதியில்லாதவை. மேலும் நிச்சயமாக நம்முடைய மீளுமிடம் ஏகன் இறைவனின் பக்கமே யாகும். இன்னும் நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரகவாசிகளாகவே இருக்கிறார்கள். (40:43)

இந்த மூன்று குர்ஆன் வசனங்களை மீண்டும் மீண்டும் கவனமாகப் படித்துப்பாருங்கள். ஒரே நேர்வழி மார்க்கத்தைப் பல கோணல் வழிகள் மத மாக்கி முற்றிலும் தவறான-ஹராமான வழியில் தங்கள் வயிறுகளை நிரப்பும் மதகுருமார்கள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள். அத னால்தான் வஹ்ஹாபியிசத்தையும், நஜாத்தையும் மக்களிடையே தவறாகச் சித்தரித்து மக்கள் நேர்வழி யின்பால் வருவதைத் தொடர்ந்து தடுத்து வருகிறார்கள்.

இம்மவ்லவிகளின் இழி செயலைப் படம் பிடித்து காட்டும் கதை ஒன்றுண்டு. ஒரு பள்ளிக்குப் பக்கத்தில் சேட்டு ஒருவர் கடை வைத்திருந்தார். முஸ்லிம்கள் அன்றாடம் அக்கடையில் பொருள்களை வாங்கி வந்தனர். அப்பள்ளி இமாமும் அக்கடையில் பொருள்களைக் கடனுக்கு வாங்குவார். ஆனால் கடனை முறையாகக் கொடுக்கமாட்டார். 9:34 இறைவாக்குக் கூறுவது போல் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறவர் கள்தானே இம்மதகுருமார்கள். அதனால் சேட்டு இமாமுக்குப் பொருள் கொடுப்பதை நிறுத்திவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த இமாம் ஜுமுஆ உரையில் அந்த சேட்டு வஹ்ஹாபி ஆகிவிட்டான்.

எனவே யாரும் அவனது கடையில் பொருள்கள் வாங்காதீர்கள் என்று கூறி மக்கள் அக்கடையில் பொருள்கள் வாங்குவதைத் தடுத்துவிட்டார். வியாபாரம் பாதிப்படைவதைப் பார்த்த சேட்டு, இமாமைக் கூப்பிட்டுப் பொருள்களைக் கொடுக்க ஆரம்பித்தார். அடுத்த ஜுமுஆவில் அந்த இமாம் அக்கடைக்காரர் வஹ்ஹாபியிசத்தை விட்டு தெளபா செய்து மீண்டுவிட்டார். எனவே இனி தாராளமாக அவரது கடையில் பொருள்களை வாங்குங்கள் என அறிவித்தார். இம்மதகுருமார்கள் எந்தளவு இழி குணம் படைத்தவர்கள் என்பது புரிகிறதா?

இந்த மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும் அப்பாவி மக்களுக்குப் பூச்சாண்டி காட்டுவது தான் வஹ்ஹாபி, வஹ்ஹாபியிசம் பூச்சாண்டியும், நஜாத் பூச்சாண்டியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஆதி மனிதரிலிருந்து இன்றுவரை மனிதகுலத்தைப் படைத்த இறைவன் மனிதனின் நேர்வழிக் காகக் கொடுத்தது ஒரே நேர்வழி, அரபு மொழியில் “”இஸ்லாம்” என்று கூறப்படுகிறது. அந்தத் தூய நேர்வழி மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை. இதை அல்குர்ஆன் 2:256 வசனம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது. இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே நேர்வழியை மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், மறுமையில் அடை யப் போகும் சுவர்க்கம், நரகம் பற்றி எச்சரிப்பது மட்டும்தான் கடமை. (5:3, 3:19,85, 6:253)

யாரையும் நிர்ப்பந்தப்படுத்தியோ, ஆசை வார்த்தை காட்டியோ நேர்வழிக்குக் கொண்டு வரக்கூடாது என்ற தடை தெளிவாக இருக்கிறது. தந்தை தான் பெற்ற மகனையே வற்புறுத்தி நேர்வழிக்குக் கொண்டுவர அனுமதி இஸ்லாத்தில் இல்லவே இல்லை.

மற்ற மதத்தவர்களிடமிருந்து நிந்தனைகள், ஏச்சுப் பேச்சுக்கள், எனச் செவிமடுத்தாலும் நீங்கள் எதிர்வினையாற்ற முற்படாதீர்கள். நீங்கள் பொறு மையை மேற்கொள்ளுங்கள். நீங்கள் உண்மையிலேயே பயபக்தியுடையவர்களாக இருந்தால் அதுவே தீரமிக்கச் செயலாகும் என்று குர்ஆன் 3:186 வசனம் வழிகாட்டுகிறது. மாற்று மதக் கடவுளர்களைத் திட்டாதீர்கள். அப்படி நீங்கள் திட்டினால் அவர்கள் உண்மையான ஏகன் இறைவனை அவர்கள் திட்ட நேரிடும் என்று குர்ஆன் 6:108 வசனம் கட்டளையிடுகிறது. நன்மையும், தீமையும் சமமாகமாட்டா. நீர் (தீமையை) மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அப்போது எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ அவர் உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார் என்று 41:34 இறைவாக்கு பாடம் கற்றுத் தருகிறது.

இப்படி மனித நேயத்தை, மனிதப் பண் பாட்டை மிக அழகிய முறையில் கற்றுத்தருகிறது. ஆயினும் இந்த அரிய உபதேசங்கள் மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டுள்ள மதகுருமார்களுக்கும், இயக்கத் தலைவர்களுக்கும் எட்டிக்காயாகவே கசக்கும். இதையும் குர்ஆனின் 17:41, 45-47,89, 22:72, 25:60, 39:45 இறைவாக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இம்மதகுருமார்களின், தலைவர்களின் வீண் ஆணவம், பெருமை அவர்களை இறை அறிவிப்புகளை விட்டே விரண் டோடச் செய்கிறது. நேரடியாக இறை அறிவிப்புகளைக் காட்டினாலும் ஏற்கமாட்டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகக் கொள்வார்கள் என்று 7:146 குர்ஆன் வசனம் உறுதியாகக் கூறுகிறது. எம் மதத்தின் மதகுருவாக இருந்தாலும் அவர்கள் சுவர்க்கம் செல்லும் வழியை காட்டமாட்டார்கள். நரகம் செல்லும் வழியையே காட்டுவார்கள்.

எவர்கள் இறைப்பணியை கூலி-சம்பளம் வாங் காமல், மறுமையில் கூலி-சம்பளத்தை இறைவனி டம் மட்டுமே எதிர்பார்த்துச் செய்கிறார்களோ அவர்கள் மட்டுமே நேர்வழியைப் போதிக்க முடியும். கூலி-சம்பளத்தை இவ்வுலகில் மனிதர்களிடம் பெற்றுக்கொண்டு இறைப்பணியை எவர்கள் செய்கிறார்களோ அவர்கள் ஒருபோதும் நேர்வழியில் இருக்க முடியாது வழிகேட்டில்தான் செல்வார்கள் என்பதை குர்ஆன் 36:21, 2:41,79, 3:78,187,188, 4:44,46, 5:62, 6:26, 9:9,10,34, 11:18,19, 31:6 இந்த வசனங்கள் அனைத்தையும் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட அனைத்து மதங்களின் மதகுருமார்களும் பெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள். அவர்களை நம்பியுள்ள மக்களை இறைவனுக்கு ஏதாவதொரு வகையில் இணை வைக்கச் செய்து அவர்களை நாளை நரகில் தள்ளும் முயற்சியிலேயே இருக்கிறார்கள். 2:256, 257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17 குர்ஆன் வசனங்கள் கூறும் வரம்பு மீறி நடக்கும் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களாக இருக்கிறார்கள். 15:39 இறைவாக்கில் ஷைத்தான் கூறுவதை நிறைவேற்ற அவனுக்குத் துணை போகிறவர்கள் தான் அனைத்து மதங்களின் மதகுருமார்கள்.

மதங்களிடையே விரோத குரோதத்தையும், தங்களுக்கிடையேயுள்ள போட்டி பொறாமை காரண மாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிவதற் கும் முழுமுதல் காரணகர்த்தாக்கள் அனைத்து மத மதகுருமார்களே. குர்ஆனின் 109:6 வசனம் “”உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் எங்களுக்கு, எங்களுடைய மார்க்கம்” என்று சொல்லிவிட்டு ஒதுங்கிப் போகும்படி கட்டளையிடும் இந்த வசனத்தை 25:30 வசனம் கூறுவது போல் ஒதுக்கித்தள்ளிப் புறக்கணித்து விட்டு பிற மதத்தினருடன் மோதலும், தங்களுக்குள்ளேயே ஒருவரோடொருவர் சண்டையிட்டு மாய்வதும் ஏகன் இறைவனுக்குப் பொருத்தமான செயலா சொல்லுங்கள். முஸ்லிம் மதகுருமார் களும், தலைவர்களும், தங்களை நம்பியுள்ள அப்பாவி மக்களை ஏமாற்றி வஞ்சித்து, நரகில் தள்ளுவ தோடு, அவர்கள் உலகியல் ஆதாயங்களை அடைகிறார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

மனிதகுலத்தினர் அல்லாஹ் கொடுத்த ஒரே நேர்வழியை (6:153) ஏற்கப் பெரிதும் முட்டுக்கட்டை யாக இருப்பவர்கள் முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகள் மற்றும் இம்மவ்லவிகளுக்குப்பின்னால் கண்மூடிச் செல்லும் பெரும்பான்மை முஸ்லிம்கள் (பார்க்க : 6:116) மதகுருமார்களான இம்மவ்லவிகள் அகிலத்திலுமுள்ள ஒட்டுமொத்த மனிதக்குலத்தினருக்குக்கென்றே இறைவன் இறக்கியருளிய வாழ்க்கை நெறிநூல் குர்ஆனை, வேதம் என்றும், முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்றும், மவ்லவி அல்லாத முஸ்லிம்கள் குர்ஆனை அவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் குர்ஆன் மொழி பெயர்ப்பைப் படித்தும் விளங்க முடியாது என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறி, முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்குவதைத் தடுத்து விட்டார்கள். அதன் விளைவு முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் இறையளித்த வாழ்க்கை நெறி நூலில் அறவே தொடர்பு இல்லாமல் போய் விட்டது. அதனால் இம்மவ்லவிகள் மாற்று மத கலாச்சாரங்களை முஸ்லிம்களிடையே புகுத்தி அவர்கள் தங்கள் வயிறுகளை ஹராமான தவறான வழிகளில் நிரப்பி வருகிறார்கள்.

இது வி­யமாக இம்மவ்லவிகள் இறுதித் தூதரின் கடுமையான எச்சரிக்கையைக் கண்டு கொள்வதே இல்லை. அது வருமாறு.

ஒரு காலம் சம்பவிக்கும். நீங்கள் முன் சென்ற வர்களை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின் பற்றுவீர்கள். அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்திருந்தால், நீங்களும் அப்பொந்தில் நுழைவீர்கள் என்பதே அந்த எச்சரிக்கையாகும்.

இன்றைய முஸ்லிம்களின் உண்மை நிலை என்ன? அடிப்படை கலிமா-உறுதிமொழி “”அல்லாஹ் அல்லாத இறைவனே இல்லை என்று நான் சாட்சி சொல்கிறேன்; முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன்” என்று தெளிவாக விளங்கிச் சொல்லக் கூடியவர்கள் இன்றைய முஸ்லிம்களில் எத்தனை பேர் தேர்வார்கள். அடுத்து ஐங்காலத் தொழுகை கட்டாயக் கடமை. எவனிடம் தொழுகை இல்லையோ அவன் நாளை மறுமையில் முஸ்லிம்களோடு இருக்கமாட்டான், நிராகரிப்பா ளர்களோடு தான் இருப்பான்.

முஸ்லிம்களில் ஐங்கால தொழுகை தொழக் கூடியவர்கள் எத்தனை பேர் தேர்வார்கள்? அதிலும் ஐந்து நேரத் தொழுகைகளையும் விடாமல் பேணித் தொழுது தொழுகையை நிலைநாட்டக் கூடியவர்கள் எத்தனை பேர் தேர்வார்கள்?

ஆம்! இன்று முஸ்லிம்களில் மிகமிகப் பெரும் பான்மையோர் 12:106 வசனம் கூறுவது போல் முஸ் லிம் மதகுருமார்களான மவ்லவிகளை 9:31 இறை வாக்குக் கூறுவது போல் கிறித்தவர்களைப் பின்பற்றி தங்களின் ரப்பாக-இறைவனாகக் கொண்டு கொடிய ´ர்க்கில்-இணைவைப்பில் மூழ்கி இருக்கிறார்கள். 25:30 குர்ஆன் வசனம் கூறுவது போல் குர்ஆனை நிராகரித்துப் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள். முழுக்க முழுக்க மாற்று மதக் கலாச்சாரங்களையே பின்பற்றி வருகிறார்கள்.

ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஒரு பிள்ளை பிறந்து வளர்ந்து வாலிபமாகி திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று வயது முதிர்ந்து இறக்கும் வரை, இறந்த பின்னும் அக்குழந்தை முதல் வயோதிகம் வரை வாழ்வில் இடம்பெறும் அத்தனை சடங்கு சம்பிரதாயங்களையும் உற்று நோக்குங்கள். அவை அனைத்தும் மாற்று மதக்கலாச்சாரத்தைப் பின்பற்றித்தான் இருக்கும். சாப்பாட்டில் தொட்டுக்கொள்ள ஊருகாய் இருப்பது போல், அரபு மொழியில் சில உச்சாடனங்களை மொழிவார்கள். அவ்வளவுதான் இவர்கள் குர்ஆன், ஹதீஃத் வழிகாட்டல்படியா நடக்கிறார்கள்.

இந்த முஸ்லிம்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து மற்றவர்கள் இஸ்லாத்தை தழுவ முன்வரு வார்களா? ஒருபோதும் வரமாட்டார்கள். இஸ்லாத் தைத் தழுவிய ஒரு பாடகர், “”நான் முஸ்லிம்களாகிய உங்களைப் பார்த்திருந்தால், முஸ்லிமாகியே இருக்க மாட்டேன்” என்று சொன்னது பிரபல்யமா னது. மேல்நாடுகளில் இஸ்லாம் வேகமாகப் பரவி வருகிறதென்றால், முஸ்லிம்களைப் பார்த்து அல்ல. அவர்கள் இந்த ஆலிம்களின் மூட ஃபத்வாவைக் கண்டுகொள்ளாமல் குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்கி வருவதால் இஸ்லாத்தைத் தழுவி வருகிறார்கள்.

இங்கு முஸ்லிம்கள் அனுபவித்து வரும் தொல்லைகள், இடர்பாடுகள், துன்பங்கள், மனக் குமுறல்கள் அனைத்தும் அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறுவது போல் அவர்கள் தங்கள் கைகளால் தேடிக் கொண்டவையே. முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள், RSSகாரர்கள், இந்துத்துவாக்கள், காவிகள் மீது பாய்வதில் அர்த்தமே இல்லை. யூத, கிறித்தவ, ஹிந்து மதக் கலாச்சாரங்களைப் பின்பற்றிக் கொண்டு அவர்களைக் குற்றம் சொல்வது நீதியாகுமா? சொல்லுங்கள்.

முஸ்லிம்கள் அவர்கள் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்களை முற்றிலு மாகப் புறக்கணித்து 3:103 இறைக்கட்டளைப்படி ஒரே ஜமாஅத்தாக ஒற்றுமையாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து, 2:186, 3:186, 7:3, 18:102-106, 41:34 குர்ஆன் வசனங்ளுக்கு முற்றிலும் அடிபணிந்து ஒரு முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ்வதுடன், மற்ற மனிதர்களுடன் மனித நேயத்துடன், மனித பாசத்துடன் அவர்கள் கொடுக்கும் துன்பங்களை அல்லாஹ்வுக்காக, சகித்துப் பொறுமை காப்பது டன், அவர்கள் தீமை செய்தாலும், அவர்களுக்குப் பிரதி உபகாரமாக நன்மை செய்யும் உயர்ந்த குணம் இந்த முஸ்லிம்களுக்கு வந்துவிட்டால், இன்றைய உலகின் போக்கையே மாற்றியமைத்துவிடும் அதிசயம் நிகழ்ந்துவிடும். அதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம்கள் அல்ல, கணிசமான ஒரு தொகையினர் ஷைத்தானின் ஏஜண்டுகளான, தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களாகிய அனைத்துப் பிரிவுகளில் மதகுருமார்களான மவ்லவிகளை முற்றிலும் புறக் கணித்து ஒதுக்கி விட்டு, ஒற்றுமையாக ஒரே ஜமா அத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடி வழிகாட்டல்படி நடக்க முன்வரவேண்டும். இன்றைய காலத்தில் அல்லாஹ் மனிதகுலத்திற்கு மறுமலர்ச்சியை நாடினால் அது நடக்கும்; துஆ செய்கிறோம். துஆ செய்ய வேண்டுகிறோம்.

அல்லாஹ் பாவியான மனிதனின் மூலமாகவும் அவனது தூய மார்க்கத்திற்கு வலுவூட்டுகின்றான்

S.M. அமீர், நிந்தவூர், இலங்கை\

பிப்ரவரி 2016 தொடர்ச்சி…..

நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள் அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! இரு(யூத) மூதாட்டிகள் என்னிடம் வந்து மண்ணறை வாழ்வு குறித்து இப்படி இப்படியயல்லாம் சொன்னார்கள்; இவை உண்மைதானா? என்று நபிகளாரிடம் கேட்டேன். அவ்விருவரும் உண்மையையே சொன்னார் கள். மண்ணறையிலிருக்கும் பாவிகள் கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அவ்வேதனையை தாங்க முடியாது. அவதியுறும் அவர்களின் அலறல்களை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன என்று சொன்னார்கள். அதற்குப் பின்னர் நபி(ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி : 6366, 1372, 1049, 1050, 1056)

நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா வருவார்கள் என்பதை தங்களது நபிமார்களிடமிருந்து அறிந்து வைத்திருந்த யூதர்கள் அவ்வாறு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனா வரும்போது அவர்களை முதலில் ஏற்பவர் களாக ஆகவேண்டும் என்பதற்காக எகிப்து, பலஸ்தீன் போன்ற பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து மதீனாவிற்கு வந்து குடியேறினார்கள். மதீனாவாசிகளுக்கும் குடியேறிய யூதர்களுக்கும் சண்டை மூழும்போதெல்லாம் கடைசி காலத்தில் ஒரு நபி வருவார் அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம் என்று யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இதன் காரணமாகவே மதீனாவில் “அகபா’ என்ற இடத்தில் தங்கியிருந்த மதீனாவாசிகள் ஆறு பேர்களிடம் நபி(ஸல்) அவர்கள் இரவு நேரம் சென்று தன்னை நபி என்று அறிமுகப்படுத்தியபோது அவர்களை நபி என்று தெளிவாக அறிந்து கொள்வது மதீனாவாசிகளுக்கு மிகவும் எளிதாக இருந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நபியை வைத்தே யூதர்கள் உங்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். எனவே அவர்களுக்கு முன்னர் நாம் இவரை முதலில் ஏற்போம் என்று பேசிக் கொண்டார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம், (ரஹீக் 178, 2:146, 7:157, 48:29, 61:6)

கிறிஸ்தவப் பாதிரியாரைக் கொண்டும் :

ஹிஜ்ரி ஒன்பதாவது ஆண்டு நஜ்ரான் தேசத்திலிருந்து அறுபது பேர்கள் கொண்ட கிறிஸ்தவர்கள் குழுவொன்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைச் சந்திக்க மதீனாவிற்கு வந்து அதில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் முக்கிய பிரமுகர்கள் பதினான்கு பேரும் அடங்கும். வந்தவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பலவிதமான வாதங்களை வைத்தனர். அவர்களது வாதத்திற்குப் பதிலாக ஆலு இம்றான் அத்தியாயம் அருளப்பட்டு அதை அவர்கள் ஏற்க மறுத்தால் அவர்களுடன் சாப அழைப்புப் பிரமாணம் (முபாஹலா) செய்யுமாறு அல்லாஹ் அறிவித்தான். அதன் பிரகாரம் முபாஹலா செய்வதற்கு முன்வருமாறு அவர்களை நபி(ஸல்) அழைத்தார்கள். சற்று அவகாசம் கேட்டு அவர்களில் நல்ல ஆலோசனைகளை வழங்கக் கூடிய “ஆகிப்’ என்பவரைத் தனிமையில் சந்தித்து “முபாஹலா’ செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில்.

கிறிஸ்தவப் பெருமக்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மத் ஓர் இறைதூதர் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். உங்களின் தோழர் ஈசா தொடர்பாக அவர் தெளிவான தகவலை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அதுமட்டுமல்ல, ஒரு சமூகம் தம்முடைய நபியுடன் சாப அழைப்புப் பிரமாணம் செய்தால், அதிலுள்ள பெரியவர்கள் அதன் பிறகு தொடர்ந்து வாழ்ந்ததாகவோ, சிறியவர்கள் வளர்ந்ததாகவோ வரலாறில்லை. அந்த நிமிடமே அனைவரும் அழிந்து போவார்கள் என்பதை நீங்களும் அறிந்தேயுள்ளீர்கள்.

எனவே நீங்கள் முஹம்மதுடன் “முபாஹலா’ செய்தால் நீங்களே உங்களை வேரோடு சாய்த்துக் கொள்வதாக அர்த்தம். எனவே பேசாமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை ஏற்க முடியாது என்று கருதினால் அந்த மனிதரிடம் ஒரு சமாதான உடன்படிக்கை செய்துவிட்டு உங்கள் ஊர்களுக்குத் திரும்புங்கள் என்று கூறினார். (சுருக்கம்) சீரத் இப்னு ஹிஷாம் பாகம் 2, பக்கம் 162-170, 3:61, தப்ஸீர் இப்னு கஸீர் : 2, பக்கம் 109-118 புகாரி : 3745, 4380, 4381,7254,4958.

ஹிஜ்ரி ஐந்து துல்கஅதா மாதத்தில் பனூ குரைளாவினரின் கோட்டைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்ட மூவாயிரம் பேர் கொண்ட இஸ்லாமியப் படையினரின் முற்றுகை கடுமையாக இருந்ததைக் கண்ட குரைளாவினரின் தலைவர் “கஅப் இப்னு அஸது’ தனது மக்களிடம் மூன்று கருத்துக்களை முன்வைத்தார்.

அவற்றில் முதலாவது அனைவரும் முஸ்லிமாகி முஹம்மதுடைய மார்க்கத்தில் சேர்வது; அப்படிச் சேர்ந்தால் நாம் நமது உயிர், பொருள், பிள்ளைகள், பெண்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக முஹம்மது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதும் அவரைப் பற்றித் தவ்றாத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும் என்று கூறினார். இதன் காரணமாக யூதர்கள் தங்களது கோட்டைகளிலிருந்து வெளியேறி நபியவர்களுக்கு முன் சரணடைந்தனர். (இப்னு ஹிஷாம், ரஹீக் 383-389, ஜாதுல் மஆது, புஹாரி, முஸ்லிம், திர்மிதி) ஆனாலும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை.

ஹிஜ்ரி நான்காம் ஆண்டில் முஸ்லிம்களின் வளர்ச்சியைப் பார்த்து மதீனாவை அண்டியுள்ள யூதர்கள் உள்ளுக்குள் எரிந்தனர். முஸ்லிம்களை நேரடியாக எதிர்க்க ஆற்றலும் துணிவும் இல்லாததால் மக்காவிலுள்ள இணைவைப்பாளர்களுடனும் மதீனாவிலுள்ள நயவஞ்சகர்களுடனும், தங்களின் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மறைவாக சூழ்ச்சி செய்வதிலும், சதித்திட்டம் தீட்டுவதிலும் ஈடுபட்டு வந்தனர். தங்களின் பகைமை மற்றும் குரோதத்தையும் அவ்வப் போது வெளிப்படுத்தினர். பனூ நழீர் இனத்தவரான இந்த யூதர்கள் குறித்து பொறுமையைக் கடைப்பிடித்த நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்கள் சிலரை அழைத்துக் கொண்டு இவர்களிடம் வந்தார்கள். அம்ர் இப்னு உமய்யா ழம்ரி என்ற தனது தோழரால் தவறுதலாகக் கொல்லப்பட்ட கிலாப் குலத்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும். அதற்காக தங்களால் ஆன உதவிகளைச் செய்யும்படி நபி(ஸல்) அவர்கள் கோரினார்கள். யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மத்தியில் இதற்கு முன்னர் செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி நஷ்டஈடு கொடுக்கும் விஷயத்தில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதும் ஒன்று.

ஆனால் காலங்காலமாக சூழ்ச்சிக்குப் பேர் போன வஞ்சக யூதர்கள் நபியவர்களிடம் இங்கு அமருங்கள். நீங்கள் வந்த தேவையை நாங்கள் நிறைவேற்றித் தருகின்றோம் என்றனர். இவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் என்று எதிர் பார்த்த நபி அவர்கள் அவர்களின் வீட்டுச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார்கள். நபி(ஸல்) அவர்களுடன் அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) அலி(ரழி) மற்றும் சகல தோழர்களும் இருந்தனர். அவ்வேளை யூதர்கள் தங்களுக்குள் தனிமையில் சிந்தித்து நபி(ஸல்) அவர் களை வஞ்சமாகக் கொன்றுவிட சதித்திட்டம் தீட்டினர். திருகைக்கல்லை எடுத்துக் கொண்டு வீட்டுக் கூரைக்கு மேல் ஏறி முஹம்மதின் தலை மீது போட்டு தலையை நொறுக்கிக் கொன்றுவிடலாம் என அவர்களில் ஒருவன் ஆலோசனை கூறினான். அதை அனைவரும் ஆமோதித்தனர். இதைச் செய்ய வழிகேடன் அம்ர் இப்னு ஜஹாஷ் என்ற விஷமி ஆயத்தமானான்.

ஆனால் யூதர்களில் “ஸலாம் இப்னு மிஷ்கம்’ என் பவர் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்களைத் தடுத்தார். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் தீட்டும் சதித்திட்டம் அவருக்கு அறிவிக்கப்பட்டு விடும். அது நமக்கும் அவருக்குமிடையில் உள்ள உடன்படிக்கையை முறிப்பதாகி விடும் என்று எச்சரித்தார். ஸுனன் அபூதாவூத், ரஹீக் : 358,359. ஆனாலும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை.

அனஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார் (பரிசுத்த குர்ஆனின்) அல்பகறா மற்றும் ஆலு இம்றான் ஆகிய அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி(ஸல்) அவர்களுக்காக (இறை வெளிப்பாடாகிய அல்குர்ஆனை) எழுதி வந்தார் (அவர் மீண்டும் மதம் மாறி) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அந்நிலையிலேயே மரணித்தும் விட்டார். புகாரி : 3617

துறவி “”பஹீரா”வைக் கொண்டும் :

நபி(ஸல்) அவர்களுக்கு பன்னிரெண்டு வயதா கும்போது அபூதாலிப் வியாபாரத்திற்காக “ஷாம்’ தேசம் சென்றார். அப்போது சிறுவராக இருந்த நபி (ஸல்) அவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்த போது அங்கு இருந்த “பஹீரா’ என்ற பிரபலமான துறவி ஒருவர் சிறுவராக இருந்த நபி(ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக் கொண்டு “இதோ உலகத்தாரின் தலைவர்’ இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர் இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான் என்று கூறி அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையையும் காண்பித்து இது சம்பந்தமாக தமது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விருந்தளித்து சிறப்பாக உபசரித்துவிட்டு இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே இவரை இங்கிருந்தே மக்காவிற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பிவிடுங் கள் என்று அபூதாலிப்பிடம் கூறினார்.

அதற்கிணங்க அபூதாலிப் நபி அவர்களை சில வாலிபர்களுடன் பாதுகாப்பாக மக்காவுக்கு அனுப்பி வைத்தார். ஸுனனுத் திர்மிதி, தபரி, முஸன்னஃப் அபீஷைபா, இப்னு ஹீஷாம், பைககீ, ரஹீக்:79

யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து கஅபாவின் மீது சத்தியமாக என்றும் அல்லாஹ் நாடினான். நீங்களும் நாடினீர்கள் (அல்லது) அல்லாஹ்வும் நீங்களும் நாடினால் என்றும் உங்களை நோக்கி, உங்கள் தோழர்கள் கூறுகிறார்கள். (இதன் காரணமாக) நீங்களும் இணை வைக்கிறீர்கள்? (தானே) என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்ய நாடினால் கஅபாவின் இறைவனின் மீது சத்தியமாக என்று கூறுங்கள். (மேலும்) அல்லாஹ் நாடினான் நீங்களும் நாடினீர்கள் என்று கூறுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் (தமது தோழர்களுக்கு) கட்டளையிட்டார்கள். அறிவிப்பு : கதீலா(ரழி), நஸயீ, குதைலத் பின்ந் ஸைஃபி(ரழி), நஸயீ, இப்னு மாஜா.

ஷைத்தானைக் கொண்டும் :

ஸக்காத் பொருட்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அபூஹுரைரா(ரழி) அவர்களிடம் அதைத் திருடு வதற்காக வந்து இரண்டு நாட்களும் பிடிபட்ட ஷைத்தான் பொய்யான சாக்குப் போக்குகளைக் கூறித் தப்பிச் சென்ற போதிலும் மூன்றாவது நாள் நபி(ஸல்) அவர்களது அறிவுறுத்தல் பிரகாரம் அபூஹுரைரா(ரழி) அவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டபோது தப்பிச் செல்வதற்காக வேறு வழியின்றி என்னை விட்டுவிடும். அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன் என்று கூறி நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்; அவ்வாறு செய்தால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற(வானவர்) ஒருவர் இருந்து கொண்டே இருப்பார். ஷைத்தான் உம்மை நெருங்கமாட்டான் என்று கூறியபோது நல்லமல்களின்பால் ஆர்வமுள்ள அபூஹுரைரா(ரழி) அவர்கள் அவனை விடுவித்து விட்டு நடந்த சம்பவத்தை நபி(ஸல்) அவர்களிடம் விபரித்தபோது அவன் பெரும் பொய்யனாக (பாவியாக) இருப்பினும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கின்றான் என்று கூறி ஷைத்தான் சொன்ன வி­யத்தை அங்கீகரித்து அதை மார்க்கமாகவும் அறிவித்து விட்டார்கள். (சுருக்கம்) அறிவிப்பு : அபூஹுரைரா(ரழி), புஹாரி:2311, 3275,5010.

உர்வாவைக் கொண்டும் :

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டளவில் நடைபெற்ற ஹுதைபியா சம்பவத்தின் போது குறை´களின் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட “உர்வா இப்னு மஸ்வூத் ஸகஃபி’ என்பவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து பலவிதமான வாதப் பிரதிவாதங்கள் நடை பெற்று பேச்சுவார்த்தைகளுக்கு இடையில் நபி தோழர்களையும் அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யும் கண்ணியத்தையும் நன்கு கவனித்து விட்டு பிரமிப்படைந்த “உர்வா’ அங்கிருந்து தமது நண்பர் களிடம் திரும்பிச் சென்று கூறினார். எனது சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். உரோம் மன்னன் சீசரிடமும், பாரசீக மன்னன் கிஸ்ராவியிடமும், அபீ சீனிய மன்னன் நஜ்ஜா´யிடமும் தூதுக்குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக் கின்ற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரது தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததே இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரது தோழர்களில் ஒருவர் தமது கையில் ஏந்திக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரது கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவ ரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முன் வருகிறார்கள். அவர் ஒளூ செய்தால் அவர் ஒளூ செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்கின்ற அளவிற்குச் சென்று விடுகிறார்கள். அவர் பேசினால் அவரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். அவரைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அவரைக் கூர்ந்து நேருக்கு நேர் பார்ப்பதில்லை. மேலும் அவர் உங்கள் முன்னால் நேரிய திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். ஆகவே அதை “ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். (சுருக்கம்) அறிவிப்பு : மிஸ்வர் பின் மத்ரமா(ரழி) புகாரி:2731, 2732, ரஹீக் : 410-426.

அறிமுகமற்ற ஆட்டிடையனைக் கொண்டும் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் அரு மைத் தோழர் அபூபக்கர்(ரழி) அவர்களும் மக்கா நகரிலிருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்த ஆபத் தான பிரயாணத்தில் நண்பகல் நேரம் நிழலே இல்லாத சிரமமான பாதையில் வெப்பம் அதிகரித்து எவரும் நடமாட முடியாதபடி காலியாகி விட்ட சிரமமான நேரத்தில் தனது ஆடுகளுடன் அவ் வழியே வந்த ஓர் ஆட்டிடையனிடம் விபரம் கேட்டு வழிப்போக்கர்களுக்கு இடையர்கள் தங்கள் கால்நடைகளிலிருந்து பால் கறந்து கொடுப்பது பொதுவாக அன்று நடைமுறையில் இருந்த காரணத்தினாலும் அதற்கு கால்நடைகளின் உரிமையாளர்களும் பொது அனுமதி அளித்திருந்த காரணத்தினாலும் அந்த அடிப்படையிலேயே அபூபக்கர்(ரழி) அவர்கள் இடையனிடம் பால் கறந்து கேட்டு அதிலே தண்ணீரையும் கலந்து அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களுடைய தாகம் தீர அருந்தக் கொடுத்தார்கள்.(சுருக்கம்) அறிவிப்பு : அபூபக்கர் (ரழி), பராஉ பின் ஆஸிப்(ரழி), புகாரி : 2439, 3615.

சிரமமான அப்பிரயாணத்தின் மூன்றாவது நாள் குஜாயி கிளையைச் சேர்ந்த “உம்மு மஅபத்’ என்ற பெண்ணின் அனுமதி பெற்று அவரது மெலிந்த ஆட்டிலிருந்தும் நபி(ஸல்) அவர்களே பால் கறந்து மற்றவர்களுக்கும் தாகம் தீர அருந்தக் கொடுத்து தாமும் அருந்தினார்கள். (ஜாதுல் மஆது, முஸ்தத்ரகுல் ஹாகிம், ரஹீக் : 204-218)

அறியாமைக்கால “வரகா’ வைக் கொண்டும் :

அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் ஹிரா குகையில் தனித்திருந்த வேளையில் முதன் முதலாக இறை அறிவிப்போடு வந்த ஜிப்ரில்(அலை) அவர்களைக் கண்டு இதயம் படபடத்தவர்களாக கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள் என்றார்கள். நடுக்கத்துடன் நபி(ஸல்) அவர்களை போர்த்திய கதீஜா(ரழி) அவர்கள் ஹிராவில் நடந்த சம்பவங்களைக் கேட்ட றிந்து ஆறுதல் சொல்லி விட்டு தமது தந்தையின் உடன் பிறந்த சகோதரரான நவ்ஃபல் என்பவரின் மகனும் அப்துல் உஸ்ஸா என்பவரின் பேரனுமாவார். “வரகா’ அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். அவர் ஹிப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை ஹிப்ரு மொழியில் எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற வயோதிபராகவும் இருந்தார்.

அப்போது வரகா நபி(ஸல்) அவர்களிடம் என் சகோ தரர் மகனே நீர் எதைக் கண்டீர்? எனக் கேட்டார் கள். நபி(ஸல்) அவர்கள் நாம் பார்த்த செய்திகளை அவர்களிடம் சொன்னார்கள். அதைக் கேட்டதும் வரகா இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ்(என்றழைக்கப்படும் ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! என்றும் அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்கள் என்னை வெளியேற்றவும் செய்வார்களா? என்று கேட்டார்கள். ஆம் நீர் கொண்டுவந்திருப்பது போன்ற சத்தி யத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. அவர்கள் உம்மை வெளியேற்றப்படும் அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவி செய்வேன் என்று கூறினார். (சுருக்கம்) அறிவிப்பு : ஆயிஷா (ரழி), புகாரி:03, முஸ்லிம், ரஹீக்:89-94)

நெருப்பு வணங்கியைக் கொண்டும் :

அநேகமாக எல்லா மதரஸாக்களிலுமுல்ள மிகப் பிரபல்யமான அரபு அகராதி “முன்ஜித்’ இதை எழுதி யவர் “அபூ லுவைஸ் மஃலூஃப் அல் யகஈ எனும் (நெருப்பு வணங்கியான) மஜுஸி தானே!

ரோமாபுரி மன்னர் யஹர்குலிஸைக் கொண்டும் :

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு நடைபெற்ற ஹுதை பிய்யா உடன்படிக்கைக்கு பின்னர் அப்போது இஸ்லாத்தை ஏற்றிராத குறை´களின் ஒரு தலைவர் அபூசுஃப்யான் சிரியா நாட்டிற்கு வியாபாரத்திற்காகச் சென்றிருந்த போது பைத்துல் முகத்திஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த ரோமபுரி மன்னர் யஹர்குலிஸ் நபி(ஸல்) அவர்களது வருகை குறித்து செய்தி கேள்விப்பட்டு விபரம் அறியவேண்டி அபூ ஸுஃப்யானை தமது சபைக்கு வரவழைத்து

1. உங்களில் அவரது குலம் எத்தகையது?

2. இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தை செய்ததுண்டா?

3. இவரது முன்னோர்களில் யாராவது மன்னர்களாக இருந்திருக்கிறார்களா?

4. இவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?

5. அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றார்களா? அல்லது குறைகிறார்களா?

6. அவரது மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறி இருக்கி றார்களா?

7. அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?

8. அவர் வாக்கு மீறியது உண்டா?

9. அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கிறீர்களா?

10. அவருடன் நீங்கள் நடத்திய போரின் முடிவு என்ன?

11. அவர் உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்? போன்ற கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்கள் சொல்லப்பட்ட உடன் மன்னர் யஹர்குலிஸ் சொன்னார்.

நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் ஒரு காலத்தில் எனது இரு பாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். இப்படிப்பட்ட ஒரு இறைத்தூதர் வெகு விரைவில் தோன்றுவார் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்திப்பேன். இப்போது நான் அவர் அருகே இருந்தால் அவரது பாதங்களை நான் கழுவி விடுவேன் என்றார்.

இதன் பிறகு ஹிம்ஸ் என்ற நகரத்திற்கு பயணமாகிச் சென்று அந்நகரில் இருந்த தமது கோட்டை ஒன்றிற்கு வருமாறு ரோமாபுரியின் பிரமுகர்கள் அனைவரையும் அழைத்து வரும்படி ஆணையிட்டார். அவர்கள் அனைவரும் வந்து சேர்ந்ததும் அந்த கோட்டையின் வாயில்களை எல்லாம் பூட்டிவிடும்படி உத்தரவிட்டார். கோட்டையின் வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பின்னர் மன்னர் யஹர்குலிஸ் அப்பிரமுகர்கள் முன் தோன்றி ரோமாபுரியினரே! நீங்கள் வெற்றியும், நேர்வழியும் பெற வேண்டுமென்றும் உங்கள் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் இந்த இறைத் தூதரை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார். (சுருக்கம்) இப்னு அப்பாஸ்(ரழி) புகாரி:07,51, 2681,2804,2941,2978,3174,4553,7541

கிறிஸ்தவரைக் கொண்டும் :

உலகப் பிரசித்தி பெற்ற உலகில் சரித்திரம் படைத்த நூறு பேரில் அதில் முதலாவது அந்தஸ்தைக் கொடுத்து முஹம்மது(ஸல்) அவர்களது நபித்துவத்தை உலகிற்கு மேன்மைப்படுத்தியது அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கல் யஹட்ச் ஹார்ட் என்னும் கிறிஸ்தவர் தானே! (THEி 100)

அரபு இலக்கண இலக்கியம் கற்றறிந்த மெளலவி களாகிய நாங்கள் தான் இறைவனுக்கு மிக நெருக்க மானவர்கள். ஆகவே அதற்கேற்ப உயர்வுபடுத்தி மக்கள் எங்களை சிறப்புற மதிப்பளிக்க வேண்டும். எங்களால்தான் குர்ஆனை சரியாக விளங்க முடியும். அதேபோன்று எங்களால்தான் குர்ஆனை சரியாக விளக்கவும் முடியும்.

நாங்கள்தான் இறைவனை அடைய சரியான நேர்வழி காட்டுபவர்கள். ஆகவே எங்களது வழிகாட்டல் இல்லாமல் பாமர மக்கள் நேர்வழி பெற முடியாது என்றெல்லாம் வீண் பெருமை பேசி மார்க்கத்தைத் தொழிலாகக் கொண்டு வயிறு வளர்க்கும் மெளலவிமார்களுக்கும் அவர்களின் கோணல் வழிகளையே கண்மூடிப் பின்பற்றும் மூட முஸ்லிம்களுக்கும் நெற்றிப்பொட்டில் அடிப்பது போன்றே மேற்கண்ட சில அறிவிப்புகள் சிறந்த பாடமாக அமைவதுடன் அல்லாஹ் பெரும் பாவிகளைக் கொண்டும் காபிர்களைக் கொண்டும் அவனது தூய மார்க்கத்தை மேலோங்கச் செய்வான் என்பதற்கு அவ்வறிவிப்புகள் மிகச் சிறந்த சான்றுகளாகும்.

விவாதம் ஓர் ஆய்வு!

எஸ்.முஹம்மத் ஸலீம், ஈரோடு, 9842696165

சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு விவாதம் தான் மிகச் சிறந்த வழிமுறை என்று அல்லாஹ்வோ அவனது தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களோ எந்த ஓர் இடத்திலும் கூறவில்லை. உண்மை நிலை இவ்வாறிருக்க TNTJ இயக்கத்தினர்கள் விவாதத்தை ஏன் தூக்கிப் பிடிக்கிறார்களென்றால் விவாதம் தொடர் பாக இவர்களாகவே சில விஷயங்களைக் கற்பனை செய்து இட்டுக் கட்டிக் கொண்டார்கள். தாமாக இட்டுக்கட்டிக் கொண்டது அவர்களது மார்க்க விஷயத்தில் அவர்களை ஏமாற்றிவிட்டது (குர்ஆன்:3:24) என்று யூத, கிறிஸ்தவர்களை நோக்கி அல்லாஹ் கூறுவதைப் போன்று விவாதம் தொடர்பாக TNTJ தலைவர்கள் தாங்களாகவே சில வி­ஷஷயங்களைக் கற்பனை செய்து இட்டுக்கட்டிக் கொண்டதன் விளைவாக தலைவர்களும், தொண்டர்களும் எதற் கெடுத்தாலும் விவாதம் விவாதம் என்று தட்டழிந்து குழப்பம் விளைவித்துத் திரிகிறார்கள். விவாதம் தொடர்பாக இவர்களாகவே கற்பனை செய்து இட்டுக் கட்டிக் கொண்ட விஷயங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

விவாதத்தில் உண்மைதான் வெல்லும்: விவாதத்தில் உண்மை மட்டும்தான் ஜெயிக்கும் அதனால்தான் சத்தியத்தில் உள்ள நாங்கள் துணிந்து யாரையும் விவாதத்திற்கு அழைக்கிறோம். மற்றவர்கள் எங்களை விவாதத்திற்கு அழைத்தால் அந்த அழைப்பை உடனே ஏற்று தைரியமாகவும் விவாதத்திற்குச் செல்கிறோம் என்று TNTJ இயக்கத்தினர்கள் பந்தாவாக கூறி வருகிறார்கள். வாதத்தில் உண்மை மட்டும்தான் வெல்லும் என்று அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ எங்கும் சொல்லவில்லை.

மாறாக அசத்தியத்தில் உள்ளவன்கூட வாதத்தில் வெல்ல முடியும் என்றே குர்ஆன் கூறுகிறது. வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரிமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்தபோது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர்! நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான முறையில் தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக! என்று அவர்கள் கூறினர். இவர் எனது சகோதரர், இவருக்கு தொன்னூற்று ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கோ ஒரே ஒரு ஆடுதான் உள்ளது. அதையும் என் பொறுப்பில் விடு என்று இவர் கூறுகிறார். வாதத்தில் என்னை ஜெயித்து விட்டார் என்று ஒருவர் கூறினார். உமது ஆட்டைத் தனது ஆடுகளுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதி இழைத்து விட் டார். உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர அவர்கள் மிகவும் குறைவுதான் என்று தாவூத் கூறினார். (குர்ஆன் : 38:21-24)

99 ஆடுகள் வைத்திருந்த ஒரு அநீதியாளன், நீதியாளர் ஒருவரை வாதத்தில் வென்றது எதை காட்டுகிறது? அநீதியும் வாதத்தில் வெல்லும் என்பதை தெளிவாக காட்டவில்லையா? அநீதியாளனும் வாதத்தில் வெல்ல முடியும் என்று மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் நாம் கூறினால் ஆடு சம்பந்தப்பட்ட இந்த விஷயம் உலகியல் சார்ந்தது; ஆகவே இதில் அசத்தியத்தில் உள்ளவன் கூட வெல்ல முடியும். மறுமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் உண்மை மட்டும்தான் வெல்லும் என்று TNTJ இயக்கத்தினர்கள் சொல்லக்கூடும். ஆகையால் மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கின்றோம். (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள். நிச்சயமாக அது குற்றம். நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள். நீங் கள் அவர்களுக்கு கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்களும் இணை கற்பிப்பவர்களே. (குர்ஆன் 6:121)

மேற்கண்ட வசனத்தில் நீங்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டால் என்று அல்லாஹ் சொல்வதிலி ருந்து இணைவைப்பாளர்கள் சத்தியத்தில் உள்ள முஸ்லிம்களைக் கூட தர்க்க ரீதியாக பேசி மடக்கி கட்டுப்பட வைக்க முடியும் என்று தெளிவாக உணர முடிகிறது. நமது இந்த கூற்றை உறுதி செய்யும் விதமாக உள்ள நபிமொழி ஒன்றைப் பாருங்கள். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியிருப்பதாவது, குறை´யர் (மற்றும் யூதர்கள்) முஸ்லிம்களிடத்தில் நீங்கள் அறுத்தவற்றை உண்கிறீர்கள். ஆனால் அல்லாஹ் அறுத்தவற்றை (அதாவது தாமாக இறந்த வற்றை) நீங்கள் உண்பதில்லையே என்று தர்க்கம் செய்தனர். அப்போது தான் இந்த வசனம் (6:121) அருளப்பட்டது. நூல்: அபூதாவூது, இப்னுமாஜா

முஸ்லிம்களை வீழ்த்தக்கூடிய வகையில் தர்க்க ரீதியிலான வாதத்தை முன்வைத்து காஃபிர்கள் உரையாடியது எதைக் காட்டுகிறது? அசத்தியத்தில் உள்ளவன் தர்க்க ரீதியாக பேசிச் சத்தியத்தில் உள்ளவனை வீழ்த்த முடியும் என்பதைக் காட்ட வில்லையா? மேலும் உளு செய்வதற்கு தண்ணீர் கிடைக் காதபோது தயம்மும் செய்வதைப் பற்றி நாம் அறிந்துள்ளோம். தண்ணீர் உடலைச் சுத்தமாக்கும். தண்ணீருக்கு மாற்றுப் பரிகாரமாக நீங்கள் சொல்லக்கூடிய மண் உடலை சுத்தப்படுத்துமா? என்கின்ற ரீதியில் பிற சமயத்தவர்கள் முஸ்லிம்களை நோக்கி வாதம் வைத்தால் அவர்களது வாயை அடைக்கும் வகையில் பதில் தரமுடியுமா? இன்னும் யூனுஸ் நபியை மீன் விழுங்கிய சம்பவம் தொடர்பாக மீன் விழுங்கியவர் உயிருடன் திரும்பி வர முடியுமா? எத்தனை நாட்கள் மீன் வயிற்றில் அவர் இருந்தார்? எப்படி பேசினார்? எப்படி சுவாசித்தார்? என்கின்ற ரீதியில் தர்க்கரீதியாக வினாக்களை நம்மிடம் தொடுத்தால் அவர்களை மிகைக்கும் வகையில் நம்மால் பதில் தரமுடியுமா?

இன்னும் இதுபோன்ற ஏராளமான வி­யங்களில் அசத்தியத்தில் உள்ளவர் கள் கேள்விகள் கேட்கும்போது அவர்கள் திருப்தி யடையும் வகையில் நம்மால் பதில் தரமுடியாது. நம்மால் பதில் தரமுடியவில்லை என்பதால் குர்ஆன், ஹதீஃத் மட்டும்தான் மார்க்கம் என்ற நமது கொள்கை பொய்யாகி விடுமா? விவாதத்தில் உண்மை மட்டும்தான் வெல்லும் என்று இவர்களாகவே கற்பனை செய்து கொண்ட விஷயம் தவறானது என்பதை இவர்களது நடவடிக்கைகள் மூலமாகவும் அல்லாஹ் வெளிப்படுத்தி வருகிறான். களியக்காவிளை விவாதத்தில் சுன்னத் ஜமாஅத்தினரை திணரடிக்கும் வகையில் இவர்கள் பதில் தரவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆகை யால்தான் விவாதம் முடிந்த பிறகு தீன்குலப் பெண்மணி என்ற இதழில் “விதண்டாவாதமும் உண்மை விளக்கமும்” என்ற தலைப்பில் பல மாதங்களாக கட்டுரைகள் மூலமாக பதிலளிக்க நேர்ந்தது.

விவாதத்தில் இவர்களது வாதம் மிகைக்கவில்லை என்ப தால் தர்ஹா, மவ்லிது, மத்ஹபு போன்றவைகள் மார்க்கத்தில் உள்ளவைதான் என்றாகி விடுமா? களியக்காவிளை விவாதத்தில் ஜமாலியின் வாயை அடைக்கும் வகையில் நாங்கள் பதில் தந்தோம் என்று TNTJ இயக்கத்தினர்கள் பொய்களைக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. களியக் காவிளை விவாதத்தின் போது ஜமாலி எந்த இடத்தில் திணறி, நிலை தடுமாறி வாயடைத்துப் போனார் என்பதை இவர்கள் “”கிளிபிங்” போட்டு காட்டட்டுமே பார்க்கலாம். விவாதத்தில் உண்மை மட்டும்தான் வெல்லும் என்பது இவர்களது கற்பனையில் உதித்த வெற்று தத்துவம்தானே தவிர குர்ஆனுக்கும் இவர்கள் கூறும் இந்தக் கருத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

விவாதத்திற்கு வர மறுப்பவர்களிடம் உண்மை இருக்காது : விவாதத்திற்கு நாம் ஒருவரை அழைத்து அவர் வர மறுத்தால் இந்த இடத்தில் நாம் எப்படி விளங்க வேண்டுமென்றால் சரியான கருத்தில் உள்ளவன் தான் விவாதத்திற்கு அழைப்பான். தவறான கருத்தில் உள்ளவன்தான் விவாதத்திற்கு வராமல் பின்வாங்கி ஓடுவான். இது ஜைனுல் ஆபிதீன் தனது தொண்டர்களுக்கு சொல்லிக் கொடுத்த சிறு பிள்ளைத்தனமான பாடம். (பார்க்க தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள் தொண்டி) இந்த முட்டாள்த்தனமான பாடத்தை மண்டையில் ஏற்றி நெஞ்சில் சுமந்து திரியும் இந்த TNTJ தொண்டர்கள் எதற்க்கெடுத்தாலும் மற்றவர்களைப் பார்த்து எங்களோடு விவாதிக்க தயாரா? என்று அறைகூவல், முழு கூவல் விடுவார்கள். குர்ஆன் கூறும் விவாதம் வேறு. வீஹிவீமூவினரின் அடாவடித்தனமான விவாதம் வேறு என்பதை உணர்ந்தவர்கள் இவர்களிடம் விவாதிக்க செல்லவில்லை என்றவுடன் நாங்கள் மட்டும்தான் சத்தியத்தில் இருக்கிறோம் ஆகையால்தான் எங்க ளோடு விவாதிக்க மறுத்துப் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார்கள் என்று மடத்தனமாக கூறி வருகிறார்கள்.

விவாதத்தின் பெயரால் ஆணவம் கொண்டு அலையும் இவர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கின்றோம், திராணியிருந்தால் (அவர்களது பாணியில் எழுதியுள்ளோம்) எமது கேள்விகளுக்கு குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் பதில் தரட்டும்.

1. விவாதத்திற்கு மற்றவர்களை அழைப்பவர் சத்தியத்தில் உள்ளார் விவாதத்திற்கு வர மறுப்பவர் அசத்தியத்தில் உள்ளார்; என்று எந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்? 2. களியக்காவிளை விவாதம் நடந்த ஓரிரு மாதங்கள் கழித்து அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? என்ற தலைப்பில் விவாதிக்க தயாரா? என்று ஜமாலி TNTJவினருக்கு 2006ல் அழைப்புக் கொடுத்தார்; அந்த அழைப்பை TNTJவினர் உடனே ஏற்றுக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி 2010ல் தான் விவாதத்திற்குச் சென்றார்கள். அப்படியயன்றால் ஜமாலியின் அழைப்புக்கு உடனே பதில் தராமல் மெளனம் காத்த நான்கு ஆண்டுகள் TNTJ அசத்தியத்தில் இருந்ததா?

3. “SAN” என்ற கிறிஸ்தவ அமைப்பினர் ஜாஹிர் நாயக் அவர்களை விவாதத்திற்கு அழைத்தபோது அவர் விவாதத்திற்கு வர மறுத்துவிட்டார். இதனால் “SAN”அமைப்பினர் சத்தியத்திலும், ஜாஹிர் நாயக் அவர்கள் முழுக்க முழுக்க அசத்தியத்திலும் உள்ளார் என்று கூறுவீர்களா?

4. விதி தொடர்பாக ஒருவர் விவாதிக்க அழைத்தால் உங்களது நிலைப்பாடு என்ன? விதியை குறித்து தர்க்கம் செய்யவேண்டாம் என்ற நபி மொழியை நிராகரித்துவிட்டு விவாதம் செய்வீர் களா? அல்லது நபிமொழிக்கு மதிப்புக் கொடுத்து இத்தகைய விவாதத்தை புறக்கணிப்பீர்களா?

5. குகைவாசிகளைக் குறித்து அவர்கள் யார்? அவர்களின் பெயர்கள் என்ன? என்கின்ற ரீதியில் ஒருவர் விவாதிக்க அழைத்தால் “”அவர்கள் குறித்து தெரிந்ததை தவிர (வேறு எதிலும்) தர்க்கம் செய்யாதீர்” என்ற அல்லாஹ்வின் கட் டளையை புறக்கணித்துவிட்டு விவாதத்திற்குச் செல்வீர்களா? அல்லது அல்லாஹ்வின் வார்த்தைக்கு அடிபணிந்து இத்தகைய விவாதத்தை புறக்கணிப்பீர்களா? நபிமார்களின் எதிரிகள் கூட பொய்யின் மூலமாக உண்மையை அழிப்பதற்காக தர்க்கம் செய்தார்கள்(பார்க்க 18:56, 40:15)

எனும்போது விவாதத்திற்கு அழைப்பவர்கள் சத்தியத்தில் உள்ளவர்கள் என்றும், விவாதத்திற்கு வர மறுப்பவர்கள் அசத்தியத்தில் உள்ளவர்கள் என்றும் கூறுவது முஸ்லிம்களை வழிகெடுத்து நரகத்திற்கு அழைப்புக் கொடுப்பவர்களின் வெற்று வாதம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. விவாதத்தின் மூலம் தெளிவு கிடைக்குமா? விவாதத்தின் மூலமாகத்தான் தெளிவு கிடைக்கும் என்று மக்களை தந்திரமாக நம்பவைத்ததன் விளைவாக ஒருசில சகோதரர்கள் நம்மிடம் நீங்கள் ஒரு கருத்தை கூறுகிறீர்கள். அதே விஷயத்தை TNTJ வினர் வேறுவிதமாக கூறுகின்றனர்.

ஆகையால் எங் களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எனவே நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விவாதித்தால் எங்களுக்குத் தெளிவு கிடைக்கும் என்று கூறுகின்றார் கள். TNTJவில் உள்ள கூட்டத்தை பார்த்து ஏமாந்த தோடு, குர்ஆனை தினசரி பொருள் உணர்ந்து படிக்காத காரணத்தினால்தான் இந்த கருத்தை முன் வைக்கிறார்கள். குர்ஆனில் அல்லாஹ் புரிய வைத் ததை விட இரண்டு மனிதர்கள் சேர்ந்து வாயடிப்பதால் நான் உண்மையை விளங்கி கொள்வேன் என்று கூறுபவர்களின் ஈமானின் நிலை எப்படியிருக்கும்? குர்ஆனை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு அல்லாஹ்வின் உதவியால் எந்த குழப்பமும் வராது. ஒருவேளை குழப்பங்கள் வந்தாலும் அல்லாஹ் தனது அருளினால் குர்ஆனைக் கொண்டு அந்த குழப்பத்தை தீர்த்து வைப்பான்.

இதுவே ஒரு உண்மை முஸ்லிமின் நம்பிக்கையாக இருக்க முடியும். நபி(ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தின் நிலையைப் பாருங்கள். யூதர்கள் தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி அதை முஸ்லிம்களுக்கு அரபு மொழியில் விளக்கி வந்தார்கள் (பார்க்க புகாரீ 4485) இந்தச் சந்தர்ப்பத்தில் எந்த ஒரு நபிதோழரும் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஒரு கருத்தைக் கூறுகிறீர்கள். யூதர்கள் தவ்ராத்தைக் கொண்டு வேறுவிதமாகக் கூறுகிறார்கள். ஆகவே எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆகையால் யூதர்களோடு நீங்கள் விவாதம் செய்து எங்களுக்கு தெளிவைத் தாருங்கள் என்று கூறவில்லை. ஸஹாபாக்கள் குர்ஆனை நடைமுறைப்படுத்தி வந்த காரணத்தினால் விவாதத்தின் மூலம் தெளிவு கிடைக்கும் என்ற பேச்சு அவர்களிடம் ஒருபோதும் எழவில்லை.

இன்னும் சொல்வதென்றால் விவாதத்தின் மூலம் தெளிவு கிடைக்கும் என்று சொல்லக் கூடிய ஜைனுல் ஆபிதீன் எந்த விவாதத்தைப் பார்த்து தர்கா, தாயத்து, மவ்லிது, தரீக்கா, மத்ஹபு போன்றவை தவறானவை என்று அறிந்து கொண்டார்? குர்ஆனைக் கொண்டு பிறருடன் உரையாடியதன் அடிப்படையில் உண்மைகளை அறிந்து கொண்ட அண்ணன் தனது தம்பிமார்களுக்கு தலை கீழாகப் பாடம் நடத்தி சமுதாயத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார். இறைவனுக்கு உருவம் உண்டா? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தின் போது TNTJ வின் அப்போதைய மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது என்பவர் கேள்வி நேரத்தின்போது ஜைனுல் ஆபிதீனிடம் நீங்களும், ஜமாலியும் மாறி மாறி பதிலித்து வருகிறீர்கள். இதனால் எங்களுக்கு தெளிவு ஏதும் ஏற்படவில்லை என்று அல்லாஹ் சொல்லவைத்தும் TNTJ இயக்கத்தினர்கள் உண்மையை உணர முடியாத குருடர்களாகவே இருக்கிறார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பயபக்தியுடயவர்களாக இருந்தால் உங்களுக்கு தெளிவை அவன் வழங்குவான் . (குர்ஆன் 8:29) தக்வாவின் அடிப்படையில் நாம் வாழ்ந்தால் நன்மை எது? தீமை எது? என பகுத்துப் பிரித்துப் பார்க்கும் தெளிவை அல்லாஹ் வழங்குவான். ஆகவே முஸ்லிம்கள் தக்வாவின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை கூறுவதை புறக்கணித்து விட்டு விவாதத்தின் மூலமாகத்தான் தெளிவு கிடைக்கும் என்று தலைகீழாகப் பாடம் நடத்தும் TNTJ தலைவர்களாலும் அவர்களை அப்படியே கண்மூடிப் பின்பற்றும் தொண்டர்களாலும் சமுதாயத்தில் மென்மேலும் குழப்பங்கள்தான் அதிகரிக்கும். சான்றுகளை காட்டியவுடன் எதிரிகள் சரணடைந்து விடுவார்களா? நாம் சொல்லக்கூடிய எல்லா விஷயங்களுக்கும் பலமான சான்றுகள் நம்மிடம் உள்ளன.

ஆகவே அந்த சான்றுகளை வைத்து மாற்றுக் கருத்து கொண்டவர்களை எளிதாக மடக்கி விடலாம் என்று சொல்லி அதன் அடிப்படையிலேயே TNTJ இயக்கத்தினர்கள் விவாதங்களை ஆர்வமாகவும், மும்மரமாகவும் நடத்தி வருகிறார்கள். நாம் சான்றுகளைக் காட்டியவுடன் மாற்றுக் கருத்துடையவர்கள் உடனே சரணடைந்துவிடுவார்களா? இதோ குர்ஆன் பதில் தருகிறது பாருங்கள். வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அத்தனைச் சான்றுகளையும் (நபியே) நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவை பின்பற்றமாட்டார்கள். குர்ஆன்:2:145

(நபியே) உம்மிடம் (வந்து) செவிமடுப்போரும் அவர்களில் உள்ளனர். அதை புரிந்து கொள்ளாத வகையில் அவர்களின் உள்ளங்கள் மீது திரைகளை யும், காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தி விட்டோம். அத்தனை சான்றுகளையும் அவர்கள் பார்த்தாலும் அதை நம்பமாட்டார்கள். குர்ஆன் : 6:25 (அவர்கள் விருப்பப்படி) யாதொரு அத்தாட்சி அவர்களுக்காக வரும் சமயத்தில் “”நிச்சயமாக நாங்கள் அதனை நம்புவோம்” என அவர்கள் அல்லாஹ்வின்மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். (நபியே) நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன என்று கூறும்.

அவர்களிடம் (அத்தாட்சிகள்) வரும் சமயத்தில் அதனை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது போலவே (இப்பொழுதும்) அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் புரட்டுவோம்; அவர்களை அவர்களின் அத்துமீறலில் தடுமாற விட்டு விடுவோம். குர்ஆன் 6:109,110 அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தனர். அவர்கள் நம் பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குர்ஆன்: 10:13

நிச்சயமாக குர்ஆன் மூலம் மலைகள் பெயர்க்கப்பட்டாலும், அல்லது நிலப்பரப்பு துண்டு துண்டாக்கப்பட்டாலும், அல்லது அதன்மூலம் இறந்தவர்களுடன் பேசப்பட்டாலும் (அவர்கள் நம்பமாட்டார்கள்) அதிகாரம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவ ருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை நம் பிக்கை கொண்டோர் அறியவில்லையா? குர்ஆன் 13:31

கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் யூதர்களை பார்த்து இந்த ஆட்டில் விஷயம் கலந்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அவர்கள் ஆம் (கலந்திருக்கிறோம்) என்று பதில் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள் ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கேட்டார்கள். அவர்கள் நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது என்று பதிலளித்தார்கள். (ஹதீஃ தின் சுருக்கம் பார்க்க புகாரீ 3169)

மலைகள் பெயர்க்கப்படுதல், நிலப்பரப்பு துண்டு துண்டாக்கப்படுதல் இறந்தவர்களை பேச வைத்தல், வானவர்கள் வருதல், வி­ம் கலந்த உணவை சாப்பிட்ட நபி(ஸல்) அவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிரோடு இருந்ததை யூதர் கள் பார்த்தது இது போன்ற மிகப் பெரிய சான்று களைப் பார்த்தாலும் அல்லாஹ் நாடினாலே தவிர எவரும் நேர்வழியை அடையமுடியாது என்று குர் ஆனும் ஹதீஃதும் தெளிவுபடுத்திக் கொண்டிருக்க இதற்கு மாற்றமாக நமது சான்றுகளை பார்த்தவு டன் மாற்று கருத்தில் உள்ளவர்கள் பணிந்து விடு வார்கள் என்று கூறுவது குர்ஆன் ஹதீஃதில் பெயரால் மக்களை ஏமாற்றுபவர்களின் கூற்றாகும். மேலும் சான்றுகளைக் காட்டி மக்களை பணிய வைப்பது அல்லாஹ் ஒருவனால் மட்டுமே செய்ய முடியும். (மறுக்க முடியாத) முழுமையான சான்று அல்லாஹ்வுக்கே உரியது. (குர்ஆன் : 6:149)

அல்லாஹ்வினால் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தை நாங்களும் விவாதத்தின் மூலமாக செய்வோம் என் கின்ற ரீதியில் ஆணவமாக செயல்படுபவர்கள் உண் மையான முஸ்லிமாக இருக்க முடியுமா? நம்முடைய அறிஞர்கள் வாதத் திறமை மிக்கவர்கள்: நம்முடைய ஜமாஅத்தில் உள்ள அறிஞர்கள் அனைவரும் மிகச் சிறந்த பேச்சாளர்கள், ஆய்வாளர்கள், வாதத் திறமை மிக்கவர்கள் ஆகையால் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நமது அறிஞர்கள் வாதத் திறமையால் மிக எளிதில் மடக்கி வாயடைக்க வைத்துவிடுவார்கள். அதன் மூலம் வழிகேட்டில் உள்ள மக்கள் TNTJ சொல்வதுதான் சரி என்று அறிந்து நமது ஜமாஅத்தில் இணைந்து விடுவார்கள் என்ற குருட்டு நம்பிக்கை TNTJ தொண்டர்கள் அனைவரிடமும் உள்ளது.

ஆகையால் விவாத பித்தம் தலைக்கேறிய இவர்கள் யாரை பார்த்தாலும் எங்களது ஜமாஅத் தோடு விவாதிக்கத் தயாரா? என்று திமிரான முறையில் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருடைய பேச்சும், எழுத்தும், உபதேசமும், வாதத் திறமையும் ஒருபோதும் நேர்வழியை காட்டி விட முடியாது. அல்லாஹ் எவருக்கு அருள்புரிகிறானோ அவர்கள் மட்டுமே நேர்வழியை அடைய முடியும். நூஹ் நபி தமது சமுதாயத்தினரை நோக்கி கூறியதைப் பாருங்கள். நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழிகேட்டில் விட்டுவிட அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது. குர்ஆன்: 11:34

இன்னும் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுவதையும் பாருங்கள். குருடர்களின் வழி கேட்டை நீக்கி அவர்களுக்கு நேர்வழி காட்டுபவராகவும் நீர் இல்லை. நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருப்போருக்கே நீர் கேட்கச் செய்வீர். குர்ஆன் 27:81, 30:53

(நபியே!) நீர் செவி டரைச் செவியேற்கச் செய்வீரா? குருடருக்கும் தெளிவான வழிகேட்டில் இருப்பவருக்கும் நீர் வழிகாட்டுவீரா? குர்ஆன் 43:40

(நபியே!) உமது கூற்றை காது கொடுத்துக் கேட்போரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் விளங்காத போதும் குருடனுக்கு நீர் வழிகாட்டுவீரா? குர்ஆன் : 10:42,43

(நபியே) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகிவிட்டதோ நெருப்பிலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விட முடியுமா? குர்ஆன்:39:19

மேலும் எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. அன்றியும் எவரை அல்லாஹ் நேர் வழியில் நடத்துகிறானோ, அவரை வழிகெடுப்பவர் எவருமில்லை… குர்ஆன் : 39:36,37

(நபியே) தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான்; அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான்; அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ் வுக்கு பின் அவனுக்கு வழிகாட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? குர்ஆன்: 45:23

அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வழிகாட்டுபவன் யார்? குர்ஆன்: 30:29

காஃபிர்களின் சூழ்ச்சி அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது; அவர்கள் (நல்) வழியிலிருந்து தடுக்கப்பட்டுவிட்டனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வழிகாட்டுபவன் இல்லை. குர்ஆன்: 13:33

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காணமாட்டீர். குர்ஆன்: 17:97

அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு அவனன்றி எந்த உதவியாளனும் இல்லை. குர்ஆன்: 42:44

அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவனுக்கு எந்த வழியும் இல்லை. குர்ஆன்: 42:46

அல்லாஹ் ஒருவரை வழிகேட்டில் விட்டுவிட்டால் நபி(ஸல்) அவர்கள் உட்பட எந்த நபியாலும், எந்த மனிதராலும் நேர்வழி காட்டமுடியாது என்று குர்ஆன் தெளிவுபடுத்தி கொண்டிருக்க இதற்கு மாற்றமாக விவாதத்தின் மூலம் நாங்கள் நேர்வழி காட்டி விடுவோம் என்கின்ற ரீதியில் செயல்படும் இந்த TNTJ இயக்கத்தினர்கள் குர்ஆன் கூறும் வழியில் செயல்படுபவர்கள் கிடையாது; மாறாக தங்களது மனோஇச்சைகளின் அடிப்படையில் புதிய மதம் ஒன்றை உருவாக்கி அதற்கு குர்ஆன் ஹதீஃத் என்ற முலாம் பூசி முஸ்லிம்களை ஏமாற்றி தங்களது இயக்கத்தை வளர்த்து வருகிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை. இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்…

மற்றவர்களின் உபதேசங்களை கேட்கவிடாமல் தடுப்பவர் யார்?

இப்னு ஹத்தாது

அல்குர்ஆன் கூறுகிறது :

எவர்கள் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களை (மதகுருமார்கள்) வணங்குவதை விட்டும் விலகி, முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக் கிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம் சுப சோபனம். ஆகவே என்னுடைய அடியார்களுக்கு நன்மாராயம் கூறுவீராக! (39:17)

அவர்கள் சொல்லைச் செவியேற்று, அதில் அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத்தான், இவர்கள்தாம் அறிவுடையோர். (39:18)

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. – திருக்குறள் 423

இந்த இரண்டு குர்ஆன் வசனங்களையும் மீண்டும் மீண்டும் படித்து அவற்றின் கருத்தை உள் வாங்குங்கள். தாஃகூத் என்ற ஷைத்தானைப் போல் வரம்பு மீறி நடக்கும் (பார்க்க : 2:34, 7:11,12,13,18) மனித ஷைத்தான்களான இம்மதகுருமார்களான மவ்லவிகளை வணங்குவதை விட்டும் (பார்க்க: 9:31), அதாவது அவர்கள் பிறரது உபதேசங்களைக் கேட்பதைத் தடுப்பதை நிராகரித்து, யார் பேசினாலும் கேட்டு, எழுதினாலும் படித்து அவற்றிலுள்ள குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டதை – அழகானதை எடுத்து நடக்கக் கட்டளையிடுகிறான் அல்லாஹ். அவர்களே அல்லாஹ்வால் நேர்வழியில் நடத்தப்படுகிறார்கள். அறிவாளிகள், அல்லாஹ்வின் நன்மாராயம் பெற்றவர்கள் என்பதைத் திட்டமாக அறியமுடிகிறது.

அதற்கு மாறாக அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மவ்லவிகள், தலைவர்கள், மற்றவர்களின் போதனைகளைக் கேட்கவிடாமல் தடுப்பதை அப்படியே வேதவாக்காகக் கொண்டு பிறரது பேச்சைக் கேட்காமல், எழுத்தைப் படிக்காமல் தங்கள் காதையும், கண்ணையும் பொத்திக் கொள்பவர்கள் நாளை மறுமையில் குருடர்களாகவும், செவிடர்களாகவும், அவர் நம்பிக்கை வைத்த மவ்லவியை வணங்கி (9:31) அல்லாஹ்வுக்கு இணை வைத்த நிராகரித்தப் பெரும் பாவிகளாகவே எழுப்பப்படுவார்கள்.

 யார் இம்மவ்லவிகளை வணங்குவதை விட்டும் விலகி, அதாவது அவர்கள் மற்றவர்களின் உபதேசத் தைக் கேட்கவிடாமல் தடுப்பதை ஏற்காமல், புறக் கணித்துவிட்டு யார் பேசினாலும் காது கொடுத்துக் கேட்டு, யார் எழுதினாலும் படித்து அவற்றில் குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டதை ஏற்று, எதிரானதை நிராகரித்து நடப்பவர்கள் மட்டுமே 6:153 இறைவாக்குக் கூறும் நேர்வழியில் இருக்கிறார்கள். எனவே ஒருவர் எப்படிப்பட்ட வழிகேடராக இருந்தாலும் அவரது உபதேசத்தைக் கேட்க விடாமல் தடுக்க நேர்வழி நடப்போருக்கு அனுமதியே இல்லை. கடந்த ஜனவரி 31 அன்று திருச்சியில் ததஜவினர் நடத்தி முடித்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு போகக் கூடாது என்று இந்துக்கள், சுன்னத் ஜமாஅத்தினர், பல இயக்கத்தினர், ஜாக் என அனைத்துப் பிரிவினரும் தடுத்துள்ளனர். இதில் இன்னும் பெரிய வேதனையான செய்தி, பீ.ஜையுடன் நீண்ட காலம் இருந்து அவர் கூறுவதை அடிபிசகாமல் அப்படியே ஒப்புவித்தவர்,

இப்போது அவரை விட்டு வெளியேறியபின், அவரது 31ம் தேதி கூட்டத்திற்கு போகக்கூடாது என்று தடுத்ததுக்கு மேற்படியார் கொடுத்த ஆதாரம் 6:159 இறைவாக்காகும். அது வருமாறு : நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்துப் பல பிரி வினர்களாகி விட்டனரோ, அவர்களின் எந்தக் காரி யத்திலும் உமக்குச் சம்பந்தமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (6:159) இந்த 6:159 இறைவாக்கை அரபியில் ஓதிக் காட்டி, இந்த வசனத்தில் அவர்களுக்கும் நமக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை. அதனால் அவரின் கூட்டத்திற்கு மற்றவர்கள் போகக்கூடாது என்று ஃபத்வா கொடுத்தார். தூய ஒரே மார்க்கத்தைப் பல பிரிவு மதங்களாக்கி அவற்றை கொண்டு வயிறு வளர்ப்பவர்களான மதகுருமார்கள் 36:21 குர்ஆன் வசனப்படி ஒருபோதும் நேர்வழியில் இருக்க முடி யாது.

இவர்கள் வழிகேடர்களிலும் பெருத்த வழி கேடர்கள், மூடர்களிலும் பெருத்த மூடர்கள் என்று நாம் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களை நேரடியாகக் காட்டியே எடுத்துச் சொன்னாலும் அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளும், பெரும்பாலான முஸ்லிம் களும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குர்ஆன் வசனங்களையே நிராகரிக்கும் நிலையில் இருக்கிறார்கள். இப்போது இந்த மவ்லவி எடுத்துச் சொன்ன 6:159 இறைவாக்கை நேரடியாகப் படித்துப் பாருங்கள். இந்த இறைவாக்கு எடுத்த எடுப்பிலேயே ஒரே மார்க்கத்தை மத்ஹப், தரீக்கா, இயக்கம், ஜமாஅத் என பல பிரிவுகளாகப் பிரித்து விட்டவர்களைக் கடுமையாகக் கண்டிக்கிறது. இந்த வசனம் மட்டுமல்ல. இன்னும் 3:103,105, 6:153, 30:32, 42:13, 14 போன்ற வசனங்களும் இறைவன் கொடுத்த ஒரே கொள்கையுடைய மார்க்கத்தைப் பல கொள்கைகள் உடைய பலப் பிரிவுகளாகப் பிரித்தவர்கள் பெரும் வழிகேடர்கள். நாளை நரகம் புகுகிறவர்கள் என்று திட்டமாகக் கூறுகின்றன.

ததஜவை விட்டு வெளியே வந்த இந்த மவ்லவிக்கு அனைத்துப் பிரிவுகளும் வழிகேடுகள் தான் என்று நேரடியாகச் சொல்லப்பட்டிருப்பது விளங்கவில்லை. ஆனால் ததஜ வழிகேடு என்பது மட்டும் புரிகிறது. அதிலும் அவர் செய்யும் பெரும் மோசடி 2:159 இறைவாக்குக் கூறுவது போல் 6:159 குர்ஆனின் நேரடிக் கருத்தை வளைத்துத் திரித்து மறைப்பதுதான். அதிலுள்ள “”அவர்களின் எந்தக் காரியத்திலும் உமக்குச் சம்பந்தமில்லை” என்றப் பகுதியைக் காட்டி, ததஜவினர் வழிகேட்டில் சென்றுவிட்டதால், அவர்கள் வேறு, நாம் வேறு அவர்கள் கூட்டியுள்ள கூட்டத்திற்கு மற்றவர்கள் போய்க் கலந்து கொள்ளக் கூடாது என்ற வழிகெட் டப் போக்கை மக்களிடம் திணிக்கிறார். தங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்குத் தங்களை எதிர்ப்பவர்களுக்கு இம்மவ்லவிகள் இவ்வுலகிலேயே அல்லாஹ்வின் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்து குஃப்ர், ´ர்க் ஃபத்வா கொடுப்பது, அவர்கள் வேறு, நாம் வேறு என்று சொல்வது, அவர்களின் நல்ல, கெட்ட காரியங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்பது, அவர்களின் ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளக் கூடாது அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று இப்படியயல்லாம் வழிகெட்டச் சட்டங்களை மேற் படி 6:159 வசனத்தையும் இன்னும் இதுபோன்ற வசனங்களையும் வளைத்துத் திரித்துச் சட்டங்கள் சொல்வதுதான் இம்மவ்லவிகளின் வழிகெட்ட போக்கு. “”அவர்களின் எந்தக் காரியத்திலும் உமக்குச் சம்பந்தமில்லை” என்ற பகுதிக்கு குர்ஆன் கூறும் நேரடிக் கருத்து, அவர்கள் சமுதாயத்தைப் பிளவுபடுத்திப் பெரும் வழிகேட்டில்தான் இருக்கிறார் கள். இதே நிலையில் மரணித்தால் நாளை நரகை அடைகிறவர்கள்தான். ஆயினும் அவர்களுக்கு அப்படி இவ்வுலகிலேயே ஃபத்வா கொடுத்து அதற்கு மேலும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தப் போகாதீர்கள் என்பதையே மேற்படி 6:159 வசனம் கூறுகிறது.

இதை “”அவர்கள் செய்து கொண்டிருந்தவற் றைப் பற்றி (நாளை அல்லாஹ்வாகிய) அவன் அவர்களுக்கு அறிவிப்பான்” என்ற இறுதிப் பகுதி உறுதிப்படுத்துகிறது. இதற்கு மேலும் 3:128 வசனம் எப் படிப்பட்ட அநியாயக்காரர்கள், வழிகேடர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இவ்வுலகிலேயே இப்படி ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் இறுதித் தூதருக்கே இல்லவே இல்லை என்பதை ஆழமாக உறுதிப்படுத்துகிறது. ஒரே மார்க்கத்தைப் பல மதப் பிரிவுகளாக்கி அவற்றையே தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட இம்மவ்லவிகள் எப்படியயல்லாம் மனம்போன போக்கில் மனோஇச்சைக்கு அடிமைப்பட்டு விளையாடுகிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்பார்கள் என்பதை 7:146 இறைவாக்கு எந்தளவு ஆணித்தரமாகக் கூறுகிறது என்பது புரிகிறதா இல்லையா? ஆக எவரது பேச்சைக் கேட்பதை விட்டும் தடுக்க குர்ஆன், ஹதீஃதில் ஆதாரமே இல்லை. அதற்கு மாறாக எவரது பேச்சாக இருந்தாலும் கேட்டு அதில் அழகானதை அதாவது குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டதை எடுத்து நடக் கவே 39:17,18 குர்ஆன் வசனங்கள் வழிகாட்டுகின் றன. எனவே எவருடைய பேச்சையும் கேட்கவிடாமல் தடுப்பது குர்ஆன் கூறும் நேர்வழியல்ல. இப்படி நாம் குர்ஆன் ஆதாரத்தைக் காட்டுவதால் பீ.ஜை. மகாமகா யோக்கியர். அவர் கூறுவது அனைத்தும் நேர்வழியே என்று நாம் கூறவில்லை.

இன்றைய நிலையில் 42:21, 49:16 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல், அல்லாஹ்வின் அதிகாரங்களைத் தன் கையில் எடுத்து மனம்போன போக்கில் மனோ இச்சைப்படி குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் சுய விளக்கம் கொடுக்கும் பெரும் வழிகேட்டில் இருக்கிறார். தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் ஜமாஅத் எனப் பிதற்றி ஷிர்க்கிலும் கொடிய ஷி´ர்க்கில், குஃப்ரிலும் கொடிய குஃப்ரில் மூழ்கி இருக்கிறார். 4:49,115, 53:2, 7:146,175-179, 45:23, 47:25 இறைவாக்குகளை நிராகரிக்கும் பெரும் பாவியாக இருக்கிறார். பீ.ஜை என்ற மதவியாபாரி “ஷிர்க் ஒழிப்பு(?) மாநாட்டுக்காக வீணாக, பெருமையாக, ஆடம்பர மாக கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட்டார். இவர் எந்த முகத்தோடு தனது பக்தர்களை மண்ட பங்களில் நடக்கும் திருமணங்கள் வீண் செலவு, ஆடம்பரம், அவற்றில் ததஜவினர், அக்கா, தங்கை, அண்ணன், தம்பி இன்னும் நெருங்கிய உறவினர் களாக இருந்தாலும், உறவை முறிப்பதாக இருந்தாலும் அத்திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று ஃபத்வா-தீர்ப்பு அளிக்கிறாரோ அல்லாஹ் வுக்கே வெளிச்சம். ஆக பீ.ஜை. வழிகேட்டின் உச்சியில், ஷிர்க்கின் உச்சியில், குஃப்ரின் உச்சியில், பித்அத்களின் உச்சியில் இன்றைய நிலையில் இருக்கிறார் என்பதற்கு எண்ணற்ற குர்ஆன் வசனங்களும், ஹதீஃத்களும் போதிய ஆதாரங்களாக இருக்கின்றன. அதுவல்ல பிரச்சினை. அல்லாஹ் ஷைத்தானைக் கொண்டும் நல்ல தைச் சொல்ல வைப்பான் (ஆயத்துல் குர்ஸி) தாகூத் என்ற மனித ஷைத்தான்களைக் கொண்டு அழகானதைச் சொல்ல வைப்பான், பெரும் வழிகேடர்கள், பாவிகள், நரகவாதிகள் கொண்டும் தீனுடைய வேலையை வாங்கும் சக்தி பெற்றவன் என்பதை நாம் உணர வேண்டும். ஒருவருடைய பேச்சைக் கேட்டு பலர் சுவர்க்கம் போவார்கள். அவரோ நர கில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஓலமிடுவார். இவை அனைத்தும் அல்லாஹ்வின் அதிகாரத் திலுள்ளவை என்று பரிபூரணமாக ஈமான் கொள்பவரே முழுமையான முஸ்லிம். பீ.ஜையே எடுத்துக் கொள்ளுங்கள் அவர் பெரும் பொய்யன், பரம அயோக்கியன், அவதூறு மன்னன் என்பதில் எமக்குக் கடுகளவும் சந்தேகமில்லை. இவை அனைத்திற்கும் எம்மிடம் ஆதாரங் கள் அடுக்கடுக்காக இருக்கின்றன.

நேரடி சாட்சியங் களும் இருக்கிறார்கள். அதனால்தான் அவர் தான் பொய்யன் இல்லை. உண்மையாளன். அயோக்கி யன் இல்லை, யோக்கியன். அவதூறு மன்னன் இல்லை, உண்மைச் செய்திகளை மட்டுமே பரப்பு வேன் என்று நிலைநாட்ட வராமல், 1987லிலிருந்து இன்று 2016 வரை பிடரியில் பின்னங்கால் அடிபட ஓடுகிறார். ஆயினும் அவரது உபதேசத்தைக் கொண்டு எண்ணற்றோர் தர்கா, தரீக்கா, மத்ஹபு வழிபாடுகளை விட்டும் விடுபட்டு, குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என வாயளவிலாவது சொல்கிறார்களா இல்லையா? நேர்வழியில் சில படிகள் முன்னேறிய பீ.ஜை. அடுத்தடுத்த படிகளிலேயே அவரது சுயநலமும், வழிகேடுகளும் வெளிப்படுகின்றன. ஆயினும் அவர்கள் இமாம்களை தக்லீது செய்வதை விட்டும் விடுபட்டு பீ.ஜையை தக்லீது செய்யும் முகல்லிதுகளாக இருக்கிறார்கள். குர்ஆன், ஹதீஃதை நேரடியாகப் படித்து விளங்கும் பழக்கம் ததஜவினரிடம் இல்லை.

பீ.ஜை. சொல்வதை வேத வாக்காகக் கொண்டு அவற்றை அப்படியே ஒப்பு விப்பார்கள். பரப்பித் திரிவார்கள். உதாரணமாக ஜமாஅத்துல் முஸ்லிமீன் அபூ அப்தில்லாஹ் ஜமாஅத் “”அபூ அப்தில்லாஹ் மன நோயாளி” என்று பீ.ஜை சொல்வதை அவரது பக்தர்கள் பரப்பித் திரிகிறார்களா இல்லையா? நாம் எமது எழுத்திலோ, பேச்சிலோ பீ.ஜை.யைப் போல் எமது சொந்தக் கருத்தை, சுய மேல் விளக்கத்தை சொல்லி வருகிறோமா? குர்ஆனிலுள் ளதை, ஹதீஃதிலுள்ளதை அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம். அதுவும் அத்தியாய எண், வசன எண் இவற்றைக் குறிப்பிட்டு நீங்களே நேரடியாக குர்ஆனை எடுத்துப் படித்துப் பார்த்து அவை அல்லாஹ்வின் சொல்தான் என உறுதிப்படுத்திக் கொண்டு செயல்படுங்கள் என்றே சொல்கிறோம். இதில் அபூ அப்தில்லாஹ்வுக்கு என்ன சம்பந்தம்?

அதேபோல் ஒரு விஷயத்தில் ஒருவர் நேரடியாக குர்ஆன் வசனத்தையோ, ஹதீஃதையோ எடுத்துக் காட்டிவிட்டால் உடனே அவரை நீ அபூ அப்தில்லாஹ்வின் ஆளா? என்று கேட்பது, அல்லாஹ் பெயரிட்டு, (22:78, 41:33) நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்திக் காட்டிய ஜமாஅத்துல் முஸ்லிமீன் அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் எனக் கூறித் திரிவது, அவதூறு பரப்புவது யாருடைய வேலை? பொய்யன் பீ.ஜையினதும், அவரது பக்தர்கள், முகல்லிதுகளின் வேலை அல்லாமல் யாருடைய வேலை? சுன்னத் ஜமாஅத்தினர் “”வஹ்ஹாபி” எனப் பூச்சாண்டி காட்டி அல்லாஹ்வை இழிவுபடுத்துவது போல், ததஜவினர் குர்ஆனும், ஹதீஃதும் சொல் வதைத் திரித்து அபூஅப்தில்லாஹ் பூச்சாண்டி காட்டுவது அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இழிவுபடுத்துவதுதானே!

ஆக பொய்யன் பீ.ஜையை ஒட்டுமொத்த மத குருமார்கள் விமர்சிப்பதை விட மிகமிகக் கடுமையாக விமர்சித்தாலும் இம்மவ்லவிகள் பீ.ஜை. பேச் சைக் கேட்பதை விட்டும் தடுப்பது போல் நாம் ஒரு போதும் தடுக்க மாட்டோம். ஏன் என்றால் அல்லாஹ் அதற்கு அனுமதி தரவில்லை என்பதே! (பார்க்க : 39:17,18) ஒருவர் மாநாட்டுக்குப் போவதைத் தடுக்கக் கூடாது என்கிறீர்கள். அங்கு போகிறவர்கள் கூட்டத்தைப் பார்த்தும் அவரது சூன்யப் பேச்சில் மயங்கியும் ததஜவில் சேர வாய்ப்பு ஏற்படுமே என்றார். குர்ஆனை தினசரி படித்துக் கொண்டு, கலிமா உறுதியுடன் ஐங்காலத் தொழுகைகளைப் பேணி நிலை நாட்டுபவர்கள் ஒருபோதும் வழிகேட்டில் செல்ல மாட்டார்கள் என்று பதில் அளித்தோம்.

யாரெல்லாம் பிறரின் பேச்சைக் கேட்கவிடாமல் தங்கள் ஆதரவாளர்களைத் தடுப்பார்கள் தெரியுமா? ஆம்! யாரெல்லாம் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் தாங்கள் ஏமாற்றிச் சேர்த்து வைத்திருக்கும் தங்கள் பக்தர்கள் தப்பித் தவறியும் அந்தப் பக்கம் போய்விடக்கூடாது என்ற பயமே தடுப்பதற்குரிய காரணம். தர்கா வழிபாட்டுக்காரர்கள், தப்லீக் கூட்டங்களுக்குப் போவதைத் தடுப்பார்கள். சுன்னத் ஜமாஅத்தினர், ஜாக், ததஜ, இதஜ போன்ற இயக்கத் தினர் நடத்தும் கூட்டங்களுக்குப் போவதைத் தடுப்பார்கள். அதேபோல் பொய்யன் பீ.ஜை. தனது பக்தர்கள் அந்நஜாத்தைப் படிப்பதையோ, எமது பேச்சைக் கேட்பதையோ, எமது கூட்டங்களுக்கு வருவதையோ தனது பக்தர்களைத் தடுப்பார். பீ.ஜையிடம் பத்திரிக்கை தர்மமும் இல்லை.

சுன்னத் ஜமாஅத், தோலான் துருத்தி எனப் பலருக்கும் தனது உணர்வு, ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி ஆகியவற்றை மாற்றுப் பிரதிகளாக அனுப்புவார், இவற்றை அந்நஜாத்திற்கு மாற்றுப் பிரதியாக அனுப்பமாட்டார். அந்தளவு தொடை நடுக்கம் உள்ளவர்தான் பொய்யன் பீ.ஜை. ஆகத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். குர்ஆன், ஹதீஃத் போதனைக்கு முரணாக வழிகேட்டில் இருந்து கொண்டு தங்கள் பின்னால் நரகை நோக்கி நடைபோடும் ஒவ்வொரு ஆயிரத்திலும், 999 பேரில் ஒரு கணிசமான கூட்டத்தை தங்கள் பின்னால் கண்மூடி வரச் செய்திருக்கிறார்களோ, அவர்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்கவிடாமல் தடுப்பார்கள். யார் குர்ஆன், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறார்களோ அவர்கள் எப்படிப்பட்ட பாவியின் பேச்சையும் கேட்பதை ஒருபோதும் தடுக்க மாட்டார்கள்.

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : தெளிவாக தர்காவில் இணை வைப்பவர்களையும், அவர்களைப் பின்பற்றியவர் களையும் காஃபிர் என்று கூறக்கூடாது. நாங்கள் மறுக்கவில்லை, மறுக்கவும் முடியாது. ஆனால் தர்கா சடங்குகளை விட்டு வெளிவந்து ஜமாஅத் அல் முஸ்லிமீன் என்ற பெயரை விட்டுவிட்டு வேறு பெயரில் தனித்தனி கூட்டங்களாக செயல்படும் ஒவ்வொரு முஸ்லிமையும் நரகவாசி என்று உங்களால் கூறமுடியும்.

உங்கள் ஒருவரைத் தவிர உங்கள் வாதத்தைக் கூறும் இரண்டாவது நபர் கூட இருக்க மாட்டார்கள். இன்றைய காஃபிர் நாளை முஸ்லிமாகலாம். நரகவாசி என்று முடிவு செய்வது யார்? முஸ்லிம் ஜமாஅத்துடனும் அதன் இமாமுடனும் சேராவிட்டாலும் பரவாயில்லை. இது உண்மை.

ஆனால் கூட்டங்களில் ஒரு கூட்டமாக வேறு பெயரில் செயல்பட்டால் அது மன்னிக்கப்படாத குற்றம். 1984ல் இருந்து 2016 ஆகியும் மாற்றிக் கொள்ள முடியாத, மாற்றத்திற்கு இடமே இல்லாத அப்படி ஒரு உறுதியான முடிவு.   S.B.ராபியத், பொதக்குடி

விளக்கம் : அன்புச் சகோதரி, நாம் கூறுவதை திரித்து வளைத்துக் கூறி மக்களை வழிகெடுக்கும் மவ்லவிகளின் கூற்றை தங்கள் உள்ளத்தில் பதித்துக் கொண்டவர்களில் நீங்களும் ஆகிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். குர்ஆனின் முஹ்க்கமாத் வசனங்கள் நேரடியாகக் கூறும் கருத்துக்களை 2:159 வசனம் கூறுவது போல் வளைத்து மறைத்துக் கூறுபவர்களும், அதை நம்பி ஏற்பவர்களும் நாளை நரகம் புக நேரிடும் என்று 2:161,162 வசனங்கள் கூறுவதை நாம் எடுத்து எழுதினால், நாம் இவ்வுலகிலேயே அவர்களை காஃபிர் என்றும், நரகவாசி என்றும் கூறுவதாகத் தப்புப் பிரசாரம் செய்கிறார்கள். பெரும்பாலோர் அவர்களின் தவறான இந்தக் கூற்றை நம்பி அப்படியே அவதூறு பரப்புகிறார்கள்.

20:48 வசனத்தைப் படித்துப் பாருங்கள் :

“”எவன் (இறைச் செய்தியை) பொய்ப்பித்து புறக் கணிக்கிறானோ அவன்மீது நிச்சயமாக (நரக) நேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது” (என்று நீங்களிருவரும் அவனுக்குக் கூறுங்கள்). (20:48)

இங்கு மூஸா, ஹாரூன்(அலை-ம்) இருவரும் இறை அறிவிப்புகளை நிராகரித்தால் நாளை மறுமையில் நரகம் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.

உடனே ஃபிர்அவ்ன், (இந்த நிலையில் மரணித்த) அப்படி என்றால் முன் சென்ற தலைமுறையினரின் நிலைமை என்ன என்று கேட்டான். (20:51)

அவர்கள் உயிரோடு இல்லை. மரணித்து விட்டார்கள். தவ்பா செய்து மீள்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்த நிலையிலும் மூஸா(அலை) அவர்கள், அந்த மக்கள் நரகவாசிகள் என்று கூறினார்களா? இல்லவே இல்லை! அதற்கு மாறாக என்ன சொன்னார்கள்? இதோ குர்ஆன் 20:52 வசனம் கூறுகிறது படித்துப் பாருங்கள்.

இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனின் (பதிவு) புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் தவறுவதும் இல்லை, மறப்பதும் இல்லை என்று (மூஸா) கூறினார். (20:52)

இப்போது புரிகிறதா? குர்ஆன் வசனங்களைக் காட்டி அவற்றை நிராகரித்தால், அது வழிகேடு, நாளை நரகில் சேர்க்கும் என்று சொல்வதற்கும், இவ் வுலகிலேயே குர்ஆன் வசனங்களை சுயவிளக்கம் கொடுத்து பொய்ப்பித்து நிராகரிப்பவர்களுக்கு ஷ´ர்க், குஃப்ரி ஃபத்வா கொடுத்து, ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதற்குமுள்ள மலைக்கும் மடுவுக்குமுள்ள பெருத்த வேறுபாடு புரிகிறதா?

ஆம்! குர்ஆன் வசனங்களை நேரடியாகக் காட்டி அவற்றிற்குச் சுய விளக்கம், மேல்விளக்கம் கொடுத்து 25:30 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனை புறக்கணித்து ஒதுக்குவது மாபெரும் குற்றச் செயல், வழிகேடு, நாளை நரகில் கொண்டு சேர்க்கும் என்று மக்களுக்குக் கடுமையாக எச்சரிப்பது குர்ஆனின் பல வசனங்கள் வலியுறுத்தும் செயல். நபிமார்கள் செய்த புனிதப் பணியை கண்டிப்பாக முஸ்லிமான ஒவ்வொரு ஆணும், பெண்ணும் செய்யவேண்டிய பணி. அதைச் செய்யாவிட்டால் 3:110, 9:71, 103:1-3 குர்ஆன் வசனங்களை நிராகரித்தப் பெரும் பாவிகளாக நேரிடும்.

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த உண்மையை அறியாதிருக்கிறார்கள். அறிந்த ஒரு சிலரும் அவர்கள் அறிந்த இந்த உண்மையை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க முன்வருவதில்லை. காரணம் மக்களில் மிகப் பெரும்பாலோர் குர்ஆனின் நற்போதனைகளை ஏற்க முன்வருவதில்லை. மாறாகக் கடுமையாக எதிர்ப்பார்கள். இதையும் 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 போன்ற குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஆக மார்க்கம், 6:153 வசனம் கூறும் ஒரே நேர்வழி தெள்ளத்தெளிவாக இருந்தும், ஷைத்தானுக் கும், ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படும் தாஃகூத்களான-மனித ஷைத்தான்களான ஆலிம் என பெருமை பேசும், தூய மார்க்கத்தை மதமாக்கி முற்றிலும் ஹராமான வழியில் வயிறு வளர்க்கும் மவ்லவிகளுக்கும் அடிமைப்பட்டு அவர்களின் சூன்ய வசீகர பேச்சில் மயங்கி, அவர்களின் சுய விளக்கங்களை, மேல் விளக்கங்களை வேதவாக்காகக் கொண்டு பெரும்பாலான முஸ்லிம்கள் செயல்படுகிறார்கள் என்பது நமக்குத் திட்டமாகத் தெரிகிறது. 2:160 இறைவாக்குக் கூறுவது போல், குர்ஆன் வசனங்கள் நேரடியாக எடுத்துக்காட்டப்பட்டால் அதை ஏற்று தவ்பா செய்தால் அல்லாஹ் மன்னிக்கிறான். அப்படியும் திருந்தாமல் அதே நிலையில் மரணித்தால் அவர்களுக்கு நிரந்தர நரகம், அதிலிருந்து மீட்சியே இல்லை. அவர்களுக்கு அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரது சாபமும் உண்டு என்று 2:159-162 இறைவாக்குகள் கூறு வதை எடுத்து எழுதினால், அவர்களுக்கு இவ்வுலகி லேயே குஃப்ர், ஷிர்க், ஃபத்வா கொடுத்தது ஆகுமா? நாளை மறுமையில் அனுபவிக்கப்போகும் கடும் தண்டனைகள் குறித்து குர்ஆன் கூறும் வசனங்களை எடுத்துக் காட்டி மக்களை எச்சரிப்பது கடமை. பலமுறை எச்சரித்தும் மக்கள் கேட்க மறுக்கிறார்கள். குர்ஆன் வசனங்களை நிராகரித்துப் பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை காஃபிர் முஷ்ரிக் என்று ஃபத்வா கொடுத்தும், அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்றும் கூறுவது பெருங்குற்றம். இரண்டுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் ஆட்சேபிக்கும் “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” பற்றி குர்ஆன், ஹதீஃத் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

அல்குர்ஆன் :

“…(அல்லாஹ்வாகிய) அவன்தான் முன்னரே உங்களுக்கு “”முஸ்லிமீன்” எனப் பெயர் சூட்டினான். (இறை நூலாகிய) இதிலும் (அவ்வாறே கூறப்பட் டுள்ளது….” (22:78)

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து நற்செயல்களையும் செய்து கொண்டு “”நிச்சயமாக நான் (மினல் முஸ்லிமீன்) முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுகிறாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்? (41:33)

2:131,132, 5:111, 7:26, 10:72,84, குர்ஆன் வசனங்களைப் படித்துப் பாருங்கள். நபிமார்கள் அனைவரும் தங்களை மினல் முஸ்லிமீன்-முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்றே பறைசாற்றியுள்ளனர்.

இவை அல்லாமல் குர்ஆனில் “”முஸ்லிமீன்” முஸ்லிமூன்-முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்றும் இன்னும் சில திரிபுகளிலும் ஆக மொத்தம் 44 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

ஹதீஃத்கள் எவ்வளவு கடுமையாக எச்சரிக்கின்றன என்று பாருங்கள்.

எவன் கீழ்ப்படிவதை விட்டும், ஜமாஅத்தையும் விட்டு அப்புறப்பட்டுவிடுகிறானோ அவன் (அதே நிலையில்) இறந்துவிடின் அறியாமைக் காலத்தவ னாக (நிராகரிப்பவன்) இறப்பான் என்று நபி(ஸல்) கூறினார்கள். அபூ ஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம், அல்ஹதீஃத் : 2301.

எவர் கீழ்ப்படியாததுடன் ஜமாஅத்தை விட்டும் அப்புறப்பட்டு விடுகிறாரோ அவர் (அதே நிலையில்) இறந்துவிடின் அறியாமைக் காலத்தவர் இறப்பது போன்று இறப்பார் என்று நபி(ஸல்) கூறினார். அபூ ஹுரைரா(ரழி) முஸ்லிம், நஸாயி அல்ஹதீஃத் 2302.

இப்போது மிகக் கொடிய ஹராமான வழிகளில் வயிறு வளர்க்கும் இம்மவ்லவிகள், முஸ்லிமீன் (22:78) மினல் முஸ்லிமீன் (41:33)  ஜமாஅத்துல் முஸ்லிமீன் (புகாரீ, முஸ்லிம்) போன்ற அல்லாஹ் சூட்டிய இடுகுறி பெயரை எப்படி எல்லாம் திரித்து, வளைத்துச் சுயவிளக்கம் கொடுத்து, அல்லாஹ் மீது முழு நம்பிக்கை வைக்காமல், தங்களை முழுக்க முழுக்க நம்பியுள்ள அப்பாவி முஸ்லிம்களை எப்படி எல்லாம் வழிகெடுக்கிறார் கள் என்று பாருங்கள்.

“முஸ்லிமீன்” ஜமாஅத்துல் முஸ்லிமீன் இரண் டும் அல்லாஹ்வும், அவனது இறுதித் தூதரும் இட்ட இடுகுறி பெயர்களாகும். இடுகுறி பெயர் கள் என்றால் அவை எந்த மொழியில் சொல்லப்பட்டாலும் அதே உச்சரிப்பில் மட்டுமே சொல்ல வேண்டும். இந்த அறிவு இந்த மவ்லவிகளுக்கு இல்லையா? நிச்சயம் இருக்கிறது. 2:146, 6:20 இறை வாக்குகள் கூறுவது போல் இந்த உண்மையை தங்கள் பிள்ளைகளை அறிவது போல் அறிவார்கள்.

இவர்களின் பெற்றோர்கள் இவர்களுக்கு இட்ட பெயர் கமாலுத்தீன், ஜைனுல் ஆபிதீன். இவர்கள் தங்கள் இடுகுறி பெயரை அதே அரபியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தமிழில் அப்படியே உச்சரிக்கிறார்களா? மொழிபெயர்த்துச் சொல்கிறார்களா? சிந்தியுங்கள்!

அதேபோல் 1988ல் இவர்கள் தங்கள் பித்அத் தான இயக்கத்திற்கு இட்ட பெயர் ஜம்யியத்து அஹலுல் குர்ஆன் வல் ஹதீஃத் 2005ல் இட்ட பெயர் “”தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.” இந்த இரண்டு இடுகுறி பெயர்களையும் அதே அரபி மொழியில் அரங்கேற்றி தங்கள் மேடைகளில் முழங்குகிறார்களா? தமிழில் மொழிபெயர்த்துச் சொல்கிறார்களா? சிந்தியுங்கள்!

இந்த நிலையில் மனிதப் படைப்பின் ஆரம்பத்தி லேயே இந்தச் சமுதாயத்திற்கு அல்லாஹ் இட்ட பெயர் முஸ்லிமீன் (பார்க்க : 22:78) நபி(ஸல்) அவர் கள் பெயரிட்டு நடைமுறைப்படுத்திய ஜமாஅத், “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” (பார்க்க : 41:33, புகாரீ(ஆ) 4/803, 9:206, முஸ்லிம் : 3/4553, 4554, திர்மிதி(அ)ஃபித்தன் 57,இப்னுமாஜ்ஜா(அ) ஃபித்தன் 2/3979, தயாலிசி(அ) 1/443.

இந்த நிலையில் தங்கள் பெயரையும், தங்கள் ஜாக், ததஜ ஜமாஅத் பெயரையும் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லத் துணியாதவர்கள், அது தவறு என்று விளங்கியவர்கள், அல்லாஹ் பெயரிட்டுள்ள முஸ்லிமீன், நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்தி விட்டுச் சென்ற “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ஐயும் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டும் என்று சொல்பவர்கள் எந்தளவு வக்கிரபுத்தி உடையவர்களாகவும், எந்தளவு வழிகேடர்களாகவும் இருப்பார்கள், அவர்களின் இந்த மூடத்தனமான பேச்சை நம்பி ஏற்பவர்கள் எப்படிப்பட்ட வடிகட்டிய மூடர்களாக இருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

அதிலும் மனிதப் படைப்பின் துவக்கத்திலேயே அல்லாஹ்வே பெயரிட்டு சுமார் 1450 ஆண்டுகளுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” 1400 ஆண்டுகளுக்குப் பின் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என்று எவ்வித மானம், ரோசம், வெட்கம் சிறிதுமின்றிப் பிதற்றித் திரிகிறவர்கள் எந்த அளவு வழிகேடர்களாகவும், வடிகட்டிய மூடர்களாகவும் இருப்பார்கள் என்பதை அறிவுடையவர்கள் அறிவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் காலத்து அபூ ஜஹீலுக்கும், தாருநத்வா ஜாஹில்களுக்கும் இவர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கமுடியுமா? அன்றைய அபூஜஹீலும், ஜாஹில்களான ஆலிம்களும், மக்கள் தப்பித்தவறியும் சத்தியத்தின்பால், நேர்வழியின் பால் போய்விடக்கூடாது என்ற வைராக்கியத்தில் எப்படிப்பட்ட பொய்களை, அவதூறுகளை, வீண் பழிகளையும், பேயன், பயித்தியக்காரன், மன நோயாளி என்று அவதூறுகள் பரப்பினார்ளோ, அவற்றில் அணுவளவும் குறைவில்லாமல் இந்த மவ்லவிகள் பொய்கள், அவதூறுகள், வீண் பழிகள், மனநோயாளி என எவ்வித சுயவிளக்கமோ, மேல் விளக்கமோ இல்லாமல் குர்ஆன், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்பவர்கள் மீது சுமத்துகிறவர்கள் அபூ ஜஹீலின் வாரிசுகளா? இல்லையா? அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவது காலத்தின் கட்டாயமா? இல்லையா?

இன்னும் பாருங்கள் இம்மவ்லவிகளின் வக்கிர புத்தியை? குர்ஆனை, ஹதீஃதை முறையாகத் தின சரி பொருள் அறிந்து படித்து வருகிறவர்கள் மனிதர் களுக்கு இஸ்லாம் அல்லாத ஒரு மார்க்கமோ, ஜமா அத்துல் முஸ்லிமீன் அல்லாத ஒரு ஜமாஅத்தோ இல்லவே இல்லை என்பதைத் திட்டமாக அறிய முடியும். எனவே ஹதீஃத்களில் குறிப்பிட் டுள்ள ஜமாஅத் “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அல்லாத பிரிதொரு ஜமாஅத் அல்ல. இதிலும் இந்த மவ்லவி களின் வக்கிர புத்தியைப் பாருங்கள்.

ஹதீஃத்களில் வெறும் ஜமாஅத், ஜமாஅத் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நாம் விரும்பிய பெயரை அதாவது ஜாக், ததஜ, இதஜ எனச் சூட்டிக் கொண்டு செயல்படலாம் என வழிகேட்டை நியாயப்படுத்துகின்றனர்.

ஒருவருக்கு ஒரேயயாரு மகன்தான். வேறு மகன்கள் இல்லை. இந்த நிலையில் அவரிடம் அவரின் மகன் பற்றிக் கூற முற்படும் எவரும் “உங்கள் மகன்” என்று குறிப்பிட்டுச் சொல்வார்களே அல்லாமல் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லும் தேவை இல்லை. அப்படிப் பெயர் குறிப்பிட்டால் அவருக்கு வேறு மகன்களும் இருக்கிறார்கள் என்பது பொருளாகும். ஒரு திருமணத்திற்காகக் காத்திருப்பவர்கள் “”மாப்பிள்ளை இன்னும் வரவில்லை” என்று கூறுவார்களே அல்லாமல் மாப்பிள்ளையின் பெயர் சொல்ல மாட்டார்கள். இரண்டு, மூன்று மாப்பிள்ளைகள் இருந்தால் மாப்பிள்ளையின் பெயரைக் கூறிச் சொல்லும் நிலை இருக்கவே செய்யும்.

தூய இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களுக்கு “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற ஒரு பெயர் மட் டுமே அல்லாஹ்வும் அவனது தூதரும் வரையறுத்துக் கொடுத்தது. பிரிதொரு பெயரை இஸ்லாமிய கொள்கை அடிப்படையில் அவர்களாகச் சூட்டிக் கொள்வது பெரும் தவறு, வழிகேடு, நாளை நரகில் சேர்க்கும் என்பதை 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14, 21:92,93, 23:52-56 இன்னும் இவை போல் எண்ணற்றக் குர்ஆன் வசனங்களை நீங்களே படித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

இந்த குர்ஆன் வசனங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அல்லாஹ் கூறுவதையே 1984 லிருந்து இன்று 2016 வரை ஓயாது கூறுவது மட்டுமல்ல எம் உயிரிருக்கும் வரை கூறிக் கொண்டிருப்போம். “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற பெயரை விட்டு விட்டு வேறு பெயரில் தனித்தனி கூட்டங்களாக செயல்படும் ஒவ்வொரு முஸ்லிமையும் நரகவாசி என்று உங்ளால் கூறமுடியும்” என்று நாம் கூறுவதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது மேலே நாம் விளக்கியுள்ளது போல் சுயநல மவ்லவிகள் திரித்துக் கூறுவதை அப்படியே நம்பி அப்படிக் கூறுகிறீர்கள். கபுரு வழிபாடுகள் செய்பவர்களுக்கும் இவ்வுலகில் காஃபிர் என்று கூறக்கூடாது என்று நாம் கூறுவதை சரிகண்டுள்ள நீங்கள் பிரிவுப் பெயர்களில் செயல்படுகிறவர்களை இவ்வுலகில் நரகவாசிகள் என்று நாம் கூறுவோமா? நீங்களே சொல்லுங்கள்! “”முஸ்லிம்” என்று சொல்லும் எவரையும் நாம் இவ்வுலகில் முஷ்ரிக், காஃபிர் என்று ஒருபோதும் ஃபத்வா-தீர்ப்புக் கொடுக்க மாட்டோம். அவர்களைப் பின்பற் றித் தொழக் கூடாது என்றும் சொல்லமாட்டோம். நாளை மறுமையில் அவர்கள் அடையப்போகும் தண்டனைகள் பற்றி குர்ஆன் கூறுவதையே நாம் எடுத்துச் சொல்கிறோம்.

“உங்கள் ஒருவரைத் தவிர உங்கள் வாதத்தைக் கூறும் இரண்டாவது நபர் கூட இருக்க மாட்டார்கள்” என்று கூறி இருக்கிறீர்கள்.

தூய இஸ்லாமிய மார்க்கத்தில், அல்லாஹ் பெயரிட்டு (22:78, 41:33) நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திவிட்டுச் சென்ற ஜமாஅத்துல் முஸ்லிமீன் அல்லாத பிரிதொரு பெயர் இல்லவே இல்லை என்பதை மட்டும் நாம் ஒருவராகச் சொல்லவில்லை, மதப்பிரிவுகளுக்கும் இறைவனுக்கும் அணுவளவும் சம்பந்தம் இல்லை. மதங்கள் அனைத் தும் மதகுருமார்களின் கற்பனையில் உதித்தவை.

தூய இஸ்லாமிய மார்க்கத்தில் மதகுரு என்று ஒரு தனிப்பிரிவு இல்லை. சமுதாயத்தை ஆலிம்-அவாம் என வேறுபடுத்தக்கூடாது. முஸ்லிம்கள் யாரையும் தக்லீது செய்யும் முகல்லித்களாக இருக்கக் கூடாது. இவ்வுலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கை. ஒவ் வொரு ஆணும், பெண்ணும் நேரடியாக சுயமாக குர்ஆன், ஹதீஃதை பார்த்துப் படித்து விளங்கி குர்ஆன் வழிகாட்டல்படி மட்டுமே நடக்க வேண்டும். கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவது-கொடுப்பது ஹராம்களிலேயே மிகக் கொடிய ஹராம். கூலிக்கு மாரடிக்கும் இம்மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியைக் காட்டமாட்டார்கள். வழி கேடுகளைத்தான் நேர்வழியாகக் காட்டுவார்கள். (பார்க்க : 36:21, 7:146)

இப்படி கடந்த சுமார் 1200 ஆண்டுகளாக இம்மதகுருமார்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட குர்ஆனின் நேரடிப் போதனைகளை உரிய குர்ஆன் வசனங்களை எடுத்துக்காட்டி 1984லிலிருந்து இருந்து 2016 வரை விடாது நாம் மட்டுமே சொல்லி வருகிறோம் என்பது உண்மைதான்.

நேர்வழியை-சத்தியத்தை பெரும்பாலான மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை குர்ஆன் 2:100, 243, 3:110, 5:37,103, 6:111,116, 7:17, 102,131,187, 8:34, 9:8, 10:36,55,60, 11:17, 12:21,38, 40,68,103, 106, 13:1, 16:38,75,83,101, 17:89, 18:54, 21:24, 23:70, 25:44,50, 26:67,103,121,139,158,174,190, 223, 27:61,73, 28:13,57, 29:63, 30:6,30,42, 31:25, 34:35,36,41, 36:7, 37:71, 39:29,49, 40:57,59,61,82, 41:4, 44:39, 45:26, 49:4, 52:47, இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நீங்களே நேரடியாகப் படித்து உணர்ந்தால் எதார்த்த நிலையை அறிவீர்கள்.

ஆக ஜமாஅத்துல் முஸ்லிமீன் அல்லாஹ் பெயரிட்டு இறுதித் தூதர் நடைமுறைப்படுத்தி விட்டுச் சென்ற ஜமாஅத். இது அபூஅப்தில்லாஹ்வின் ஜமஜாஅத் எனப் பொய்யுரைப்பவர்கள் இவ் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடு கெட்டவர்கள்.

சுன்னத் ஜமாஅத் மவ்லவிகள், தங்களின் பக்தர்கள் தப்பித் தவறியும் குர்ஆன், ஹதீஃத் பக்கம் போய்விடக் கூடாது என்ற அச்சத்தில், குலை நடுக் கத்தில் வஹ்ஹாபி பூச்சாண்டி, நஜாத்காரன் பூச்சாண்டி காட்டுவது போல், ஜாக், ததஜ, இதஜ மவ்லவிகள் தங்கள் பக்தர்கள் குர்ஆன், ஹதீஃத் பக்கம் தப்பித் தவறியும் போட்விடக்கூடாது என்ற அச்சத்தில் ஜமாஅத்துல் முஸ்லிமீன் அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். குர்ஆன், ஹதீஃதை மட்டுமே எடுத்துக் காட்டுபவர்களைப் பார்த்து “”நீ அபூ அப்தில்லாஹ் ஆளா?” எனப் பூச்சாண்டிக் காட்டுகிறார்கள்.

மீண்டும் உறுதியாகக் கூறுகிறோம். இஸ்லாமிய மார்க்கம் குர்ஆன், ஹதீஃத் கூறும் ஒரே கொள் கையை மட்டுமே கொண்டது. இஸ்லாமிய மார்க் கத்தில் பல கொள்கைகளுக்கு, அதாவது பிரிவினைவாத பல கொள்கைகள் கொண்ட இயக்கங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் இடமே இல்லை. (பார்க்க: 5:3, 3:19,85)

எனவே அல்லாஹ் பெயரிட்டு, நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி இந்த உம்மத்துக்காக விட்டுச் சென்ற “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அல்லாத, மதகுருமார்களின் சுயநலக் கற்பனைளில் உருவான அனைத்து மத்ஹப், தரீக்கா, இயக்கம், ஜமாஅத், அமைப்பு என பிரிவுகள் அனைத்தும் பெருத்த வழிகேடுகளே. நாளை நரகில் சேர்ப்பவையே எனக் கடுமையாக எச்சரிக்கிறோம்.

ஆயினும் இந்த குர்ஆன், ஹதீஃத் கூறும் மறுக்க முடியாத உண்மையை மதகுருமார்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் (7:146) பெரும்பாலான மக்க ளும் ஏற்கமாட்டார்கள் என பல குர்ஆன் வசனங்கள் கூறுவதை நாம் நன்கு அறிந்தே தொடர்ந்து 1984லிலிருந்து இன்று 2016 வரை கூறி வருகிறோம். வஹியுடன் தொடர்புடன் இருந்த நபிமார்களே ஒரு நபரைக் கூட நேர்வழிக்குக் கொண்டுவர முடியாமல் மனைவி மக்களையும் திருத்த முடியாமல் தன்னந்தனியாக சுவர்க்கம் போவதாக புகாரீ 5705, 5752 ஹதீஃத்கள் கூறியிருக்கும்போது சாதாரண நபரான நாம் எம்மாத்திரம்? ஆயினும் 5:67 இறைவாக்குக்கு முற்றிலும் அடிபணிந்து இந்த குர்ஆன், ஹதீஃத் நேரடி கருத்துக்களை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து மரணம் வரை வைத்துக் கொண்டே இருப்போம். இன்ஷா அல்லாஹ்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே அதிமுக்கிய வேண்டுகோள்!

K.M.H. . அபூ அப்தில்லாஹ்

அல்லாஹ்வின் பேரருளால் வஹிமூலம் பெறப்பட்ட குர்ஆன், சுன்னாஹ் மட்டுமே மனித குலத்தினர் அனைவருக்கும் ஒரே மார்க்கம்-நேர்வழி என்ற தெளிவை அல்லாஹ் எமக்குத் தந்த 1984லிலிருந்து குர்ஆன், தூதர் நடைமுறைகளை மட்டுமே மக்கள் மன்றத்தில் சிறு, சிறு பிரசுரங்களாக வெளியிட்டோம். 30.10.1984 அன்று தூய சின்னப்பர் இறையியல் கல்லூரி, திருச்சி என்ற கிறித்தவ மதகுருமார்களைப் பயிற்றுவிக்கும் இடத்தில் “”சமயங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினோம். அந்த உரை “”பல்சமயச் சிந்தனை” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. அந்நூலைப் படித்துப் பார்த்துவிட்டு இன்றைய மூத்த தவ்ஹீத்(?) மவ்லவிகளும் நம்முடன் இணைந்து பணியாற்ற முன்வந்தனர். 1986 ஏப்ரலில் அந்நஜாத் மாத இதழ் துவங்கப்பட்டது. அந்த நூலிலேயே குர்ஆன், சுன்னாஹ் (நபி நடைமுறை) மட்டுமே ஒரே நேர்வழி என்று தெளிவாக விளக்கி இருக்கிறோம்.

இதை அறிந்த நிலையில் தான் இமமவ்லவிகள் எம்மை அவர்களின் புரோகித வலைக்குள் சிக்க வைத்து விடலாம், கூட இருந்தே குழி பறிக்கலாம் என்ற சதித் திட்டத் துடனேயே நம்மோடு வந்து இணைந்து செயல்பட்டனர் என்பது பின்னரே எமக்குப் புரிந்தது. எப்படி யயல்லாமோ ஆசை வார்த்தைக் காட்டி னார்கள். கோடிக்கணக்கில் பணம் புரள வைக்கலாம் என்றனர். கேரளா, இலங்கை என அழைத்துச் சென்று ஸலஃபிப் பிரிவு அடிப்படையில் மஸ்ஜித்கள், மதரஸாக்கள், இன்னும் பல மக்கள் நலத் திட்டங்களைக் காட்டி எம்மை மயக்கி அவர்களின் புரோகித வலையில் சிக்கவைக்கப் பார்த்தார்கள். முழு உலகமே நம் கையில் கிடைத்தாலும் அவை அனைத்தும் அதிகாலையில் தொழும் பஜ்ர் தொழுகைக்கு முன் தொழும் சுன்னத் இரண்டு ரகாஅத் தொழுகைக்கு ஈடாகாது என்ற தெளிவான விளக்கத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்குத் தந்து பாதுகாத்தான். எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் தனது தனிப்பெரும் கிருபையைக் கொண்டு அவர்களின் சதி திட்டங்கள் அனைத்தையும் முறியடித்து எம்மைப் பாதுகாத்தான். அல்ஹம்துலில்லாஹ்.

இம்மவ்லவிகளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றபின் எம்மையும், அந்நஜாத்தையும் விட்டு வெளியேறி அந்நஜாத் நின்றுவிட்டது என்று அவதூறு பரப்பினார்கள். ஒட்டுமொத்த மவ்லவிகளும் எம்மை விட்டு வெளியேறியதால் எம்மால் வெளியிட முடியாமல் அந்நஜாத் நின்றுவிடும் என்று அவர்கள் பகல் கனவு கண்டார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக, அல்லாஹ் அவனது தனிப்பெரும் அருளைக் கொண்டு எத்தனையோ இடையூறுகள், அவதூறுகள், நிதி நெருக்கடிகள், அரசு தரப்பு தபால்துறை இடையூறுகள் இவை அனைத்தையும் சமாளித்து அந்நஜாத் தொடர்ந்து வெளிவர அருள்புரிந்து வருகிறான். அதே சமயம் 1987ல் நம்மை விட்டு வெளியேறிய அனைத்து மவ்லவிகளும் ஒன்று சேர்ந்து ஏர்ப்போட்டுக்குப் பக்கத்தில் “”ஸலஃபி நகர் ” என்று ஒன்றை உருவாக்கி அங்கு ஸலஃபி பள்ளியும் கட்டித் தங்களின் புரோகிதத் தொழிலை வளர்க்க முனைந்தனர். 1987லிலிருந்து 1997 வரை இந்த மவ்லவிகள் ஒன்றாக இருந்து தமிழகமெங்கும் புரோகித ஜாக் பள்ளிகள் கட்டித் தங்கள் வயிற்றுப் பிழைப்பை ஜாம் ஜாம் என நடத்துகின்றனர்.

1997ல் அவர்களிலும் பிளவு ஏற்பட்டது. அதன்பின் பல பிரிவுகள் தோன்றின. சமுதாயத்தைச் சின்னாபின்னாமாக்கினர். இம்மவ்லவிகள் அந்நஜாத்தை முடக்கப்படாத பாடு பட்டதோடு, நாம் திட்டமிட்டிருந்த நபிவழியில் மாதிரி மஹல்லா-கிராமம் திட்டத்தையும் முடக்கி விட்டார்கள். திருச்சி சூரியூரில் மாதிரி மஹல்லா திட்டத்திற்காக ஏக்கர் 5000/- என்று 17 ஏக்கருக்கு 85,0000/- என்று பேசி ரூ.15,000/- முன்பணமும் கொடுத்தும் விட்டோம். அப்படி ஒரு மாதிரி மஹல்லா உருவாகி மக்களுக்குக் காட்டிவிட்டால், மதகுருமார்களான மவ்லவிகளின் குட்டு அம்பலமாகிவிடும். அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தில் அவர்களின் துர், அவதூறு பிரச்சாரம் மூலம் அத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் ஆக்கிவிட்டார்கள். அன்று ஒரு ஏக்கர் 5000/-மாக இருந்தது. இன்று ஒரு ஏக்கர் ஒரு கோடியையும் தாண்டிவிட்டது. ஆக இந்த மதகுருமார்களின் கடும் எதிர்ப்பால் மாதிரி மஹல்லா-கிராமம் இதுவரைப் பகல் கனவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் நபி யின் காலத்தில் நடைமுறையில் இருந்தது போல், ஒரு பள்ளியில் கூலி வாங்காமல் பணிபுரிந்து காட்டுங்களேன் என சவால் விட்டார்கள்.

அவர்களின் சவாலை எம்மால் ஏற்க முடியவில்லை. வழிகேட்டில் செல்லும் நயவஞ்சகர்கள் மட்டுமே அற்ப உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு ஊரைப் பிளவுபடுத்தி தனிப் போட்டிப் பள்ளி கட்டுவார்கள் என்று எச்சரிக்கும் 9:107,108 குர்ஆன் வசனங்களே எமக்கு வழிகாட்டின. அதனால் ஊரை இரண்டாக்கும் கொடிய குற்றத்தைச் செய்ய இறையச்சம் எமக்கு இடம் தரவில்லை; பொறுத்திருந்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்போது ஒரு நல்ல வாய்ப்பைத் தந்துள்ளான். ஊரே இல்லாத ஓரிடத்தில் புதிதாக ஓர் ஊர் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மணப்பாறையிலிருந்து குளித்தலை போகும் பாதையில், கரூர் புகளூரில் இருக்கும் பேப்பர் ஆலையைவிட பிரமாண்டமான TNPL காகித அட்டை ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இது அல்லாமல் SIPCOT பல தொழிற்சாலைகள் அதற்குப் பக்கத்திலேயே ஆரம்பிக்க இருக்கிறார்கள். எனவே அங்கு ஜனப் புழக்கம் பெருகி ஒரு நகரமே உருவாக இருக்கிறது. அதற்கேற்றால் போல் அவற்றைச் சுற்றி பல வீட்டுமனைகள் உருவாகி விற்பனைக்காக இருக்கின்றன. நபிவழியில் ஒரு மாதிரி கிராமத்தைத்தான் நம்மால் உருவாக்க முடியவில்லை. நபிவழியில் ஒரு பள்ளியை உருவாக்கும் வாய்ப்பை அல்லாஹ் தந்துள்ளான். 1985லிருந்து நமது நெருங்கிய நண்பர், அந்நஜாத் ஆரம்பிக்க நம்மைக் கடுமையாகத் தூண்டியவர், குர்ஆன், ஸுன்னாஹ் கொள்கைப் பிடிப்புமிருந்தவர், பள்ளிக்கென்றே ஒரு தொகையை எம்மிடம் கொடுத்து வைத்திருந்தார். அத்தொகையைக் கொண்டு 4000 ச.அடி வாங்கி இருக்கிறோம். நிறுவனத்தினர் 2355 ச.அடி தானமாகத் தந்துள்ளனர். ஆக 6355 சதுர அடி பள்ளி வாசலுக்கென்றே பத்திரத்தில் குறிப்பிட்டு வாங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டுச் செயல்பட, புரோகிதம் ஊடுருவாத தூய முஸ்லிம்கள், ஏகன் இறைவனை தூய்மையான நிலையில் வழிபட ஒரு பள்ளி அவசியம் என்ற எண்ணத்தில் வீட்டு மனைகள் விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில், மஸ்ஜிதுக்கென்று 6355 சதுரஅடி நிலம் வாங்கப்பட்டுள்ளது. இப்போது நமது கடமை அப்பள்ளியைச் சுற்றி முஸ்லிம்கள் வீடுகள் கட்டிக் குடியேறவும், அழகிய முறையில் மஸ்ஜித் மற்றும் அது சம்பந்தப்பட்டக் கட்டிடங்கள் உருவாக முயற்சி எடுக்க வேண்டும். இன்று தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14, 21:92,93, 23:52-56 குர்ஆன் வசனங்கள் மிகக் கடுமையாகக் கண்டித்துக் கூறும் பிரிவுகளைச் சார்ந்த பள்ளிகளே. இந்தப் பள்ளிகளில் குர்ஆனிலும், ஹதீஃதிலும் இருப்பதை உள்ளபடிசொல்ல அனு மதியே இல்லை. எப்பிரிவைச் சார்ந்த பள்ளியோ அப்பிரிவின் கொள்கை அடிப்படையில் மட்டுமே பேசமுடியும். ஆம்! அவை மக்களை வழிகெடுக்கும் மதகுருமார்களின் ஆதிக்கத்திலுள்ள பள்ளிக ளாகும். எனவே அப்படிப்பட்ட பிரிவுப் பள்ளிகளுக்குச் செலவிடுவது ஏகன் அல்லாஹ்விடம் நன்மையைப் பெற்றுத்தராது. சமுதாயத்தைப் பிளவுபடுத்தத் துணைபோன குற்றத்தையே பெற்றுத்தரும். இப்போது நாம் இடம் வாங்கிக் கட்ட முற்படும் பள்ளி ஊரைப் பிளவுபடுத்திக் கட்டும் பள்ளி அல்ல. இனிமேல் உருவாகப் போகும் ஊரில் எப்பிரிவையும் சாராது, ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமாக அல்லாஹ்வின் பள்ளியாக (மஸ்ஜிதுல் அஹத்) மட்டுமே இருக்கும். அதில் குர்ஆன், ஹதீஃதை மட்டுமே சொல்லும் யாரும் வந்து உரையாற்ற முடியும். 2:114, 9:17,18, 18:21, 39:17, 18, 22:40, 72:18 குர்ஆன் வசனங்களில் பள்ளி வாசல்கள் பற்றி அல்லாஹ் என்ன கட்டளையிட் டிருக்கிறானோ அவற்றிற்கு முற்றிலும் அடிபணிந்து அல்லாஹ்வின் கட்டளைப்படியே இப்பள்ளியில் தொழுகை மற்றும் தூய செயல்கள் அனைத்தும் நிறைவேற முயற்சிப்போம். நாளை மறுமையில் மகத்தான நன்மையை அடைய விரும்புவோர் அந்த வகைக்கு தாராளமாகப் பொருள் உதவி செய்ய முன்வரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

அடுத்து அப்பள்ளியைச் சுற்றி முஸ்லிம்கள் குடியேறி புதியதோர் மஹல்லா அமைய அப்பள்ளியைச் சுற்றியுள்ள வீட்டு மனைகளை விலைக்கு வாங்க முன் வரவேண்டும். சதுர அடி 250/-,290/-,370/-, 400/- இந்த அடிப்படையில் வீட்டு மனைகள் விற்பனைக்கு இருக்கின்றன. JBR CONSTRUCTION என்ற நிறுவனம் KRG GARDEN என்ற பெயரில் இப்போதைக்கு வீட்டு மனைகள் விற்பனை செய்கிறார்கள். பக்கத்தில் 1000+ஏக்கரில் TNPL தொழிற்சாலை செயல்படுகிறது. 1000+ஏக்கரில் SIPCOT தொழிற்பேட்டை, மணப்பாறை RTO அலுவலகம் இன்னும் சில சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளதால் இது ஒரு தொழில் நகரமாக வளர வாய்ப்பு அதிகம். பெரும் ஜனப் புழக்கமும் ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எமது விருப்பம் இதுதான். கடந்த 1200 வருடங்களாக தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் காணப்படாத, நபிவழியில் இடைத்தரகர் மதகுருமார் இல்லாமல் செயல்படும் ஒரு முன்மாதிரிப்பள்ளி உதயமாக வேண்டும் என்பதே. அப்படி ஒரு மஸ்ஜிதைக் கட்டி நடத்திக் காட்டுங்கள் என்று சவால்விட்டனர். ஊரை இரண் டாக்குவது கொடிய குற்றம் என்பதால் அதற்கு நாம் துணியவில்லை.

இப்போது ஊரே இல்லாத அதே சமயம் பெரியதொரு ஊர் உண்டாகப்போகும் இடத்தில் முதலில் பள்ளிக்கென்று 6355 சதுர அடியில் இடம் வாங்கும் வாய்ப்பை அல்லாஹ் தன் அருளால் நல்கியுள்ளான். அப்பள்ளியைச் சுற்றி கணிசமான முஸ்லிம்கள் மனைகள் வாங்கி வீடுகள் நிறைந்த ஒரு மஹல் லாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் எமது வேண்டுகோள். அல்லாஹ் மீதும், மறுமையிலும் உறுதியான நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் இதற்காக அணி திரள வேண்டும் என்பதே எமது அன்பு வேண்டுகோள். அல்லாஹ்வும் அதை நிறைவேற்றித் தர அன்பர்கள் அதிகமதிகம் துஆ செய்யவும். நாமும் அதிகமதிகம் துஆ செய்கிறோம். இந்த அரிய திட்டத்தை முறியடிக்க முன்பு போல் பல ஃபித்னாபசாதுகளையும், அவதூறுகையும், மதகுருமார்களான மவ்லவிகளும், அவர்களது பக்தர் களும் பரப்புவார்கள். உலகியல் ஆதாயம் எதையும் குறிக்கோளாகக் கொண்டு இம்முயற்சியில் நாம் இறங்கவில்லை. அல்லாஹ்வின் தூய மார்க்கம் இம்மதகுருமார்களின் வசீகர, உடும்புப் பிடியிலிருந்து விடு பட்டு, இடைத்தரகர்கள் இல்லாமல் 2:186, 7:3, 18:102 -106 குர்ஆன் வசனங்களை முழுமையாக நம்பி நபிவழியில் செயல்பட வேண்டும் என்பது மட்டுமே எமது குறிக்கோள்! அல்லாஹ் அருள் புரிவானாக!

Previous post:

Next post: