ஐயமும்! தெளிவும்!!

in 2018 ஏப்ரல்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : நாளின் ஆரம்பம் இரவா? பகலா? என்பதை விளங்கிக் கொள்வதற்கு கூட லைல் லயல் நஹார் யவ்ம் இவைகளை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும் மட்டுமல்ல அரபு இலக்கணம் அறிந்தாக வேண்டும் இந்நிலையில் பாமரர்களுக்கு குர்ஆன் விளங்கும் என்று அந்நஜாத் கூறுவதை ஏற்க கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது.

குர்ஆன் சுன்னாவிற்கு சுயவிளக்கம் புதுவிளக்கம் கொடுக்கிறார்கள் புரோகிதர்கள் என்கிறீர்கள் அவர்களின் மொழியாக்கம் இல்லாமல் குர்ஆனை விளங்க முடியாதே! என்ன சொல்கிறீர்கள்?  M.அபூநபீல், தேங்காய்பட்டணம்.

தெளிவு : நாளின் ஆரம்பம் இரவா? பகலா? என்பதை 36:40ல் குர்ஆன் வசனம் தெளிவாக “இரவு பகலை முந்த முடியாது” என்று தெளிவாக கூறும்போது, அதில் சந்தேகம் ஏன்? இதற்கு அரபு இலக்கணம் ஏன் அறிந்தாக வேண்டும் என்ற நிலை தேவை இல்லை. குர்ஆனின் மொழி பெயர்ப்புகள் போதும் மொழி பெயர்ப்புகள் எல்லாமே தெளிவாக ஒரே மாதிரியாக “இரவு பகலை முந்தாது” என்று தெளிவாக உள்ளது.

மேலும் குர்ஆனை மொழியாக்கம் செய்ய புரோகிதர்தான் வேண்டும் என்ற உங்கள் எண்ணம் தவறான ஒன்றாகும். தங்களை போன்ற படித்த மக்களே இவ்வாறு தவறாக விளங்கி வைத்திருக்கும்போது மற்ற சாதாரண மக்கள் எண்ணமும் இப்படி தான் தவறாக விளங்கி வைத்திருப்பார்கள்.

ஒரு மொழியை வேறு மொழிக்கு மொழியாக்கம் செய்ய மூலமொழியும், மொழி பெயர்க்கும் மொழியும் தெரிந்த எந்த ஒரு மனிதரும் மொழியாக்கம் செய்து விடுவார்கள். அரபியில் M.A., Phd., படித்தவர்களை விடவா. இந்த 7 வருட மதரஸா புரோகிதர்கள் சரியாக மொழி பெயர்த்து விட போகிறார். அந்த அளவு அரபி புலமை இருந்தால் ஏன் அரபியில் ஒரு பக்க விசா கண்டவுடன் அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை கூட சொல்ல முடியாமல் தவிப்பதையும் ஆர்ட் காலேஜ் அரபி டிபார்ட்மெண்ட்டில் சென்று மொழி பெயர்த்து வாங்கி கொள்ளும்படி கூறு வதையும் நீங்கள் பார்த்தது இல்லையா?

குர்ஆன் தமிழ்மொழி பெயர்ப்புகள் பெரும்பாலும் புரோகிதர்களால் மொழி பெயர்க்கப்பட்டதால் தான் நிறைய பிழைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு புரோகிதரும் தாங்கள் சார்ந்த இயக்கக் கொள்கை களுக்கு ஏற்ப மொழி பெயர்ப்பதால் பல தீமைகள் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ளன. பிப். 18 அந்நஜாத் இதழில் முஹிப்புல் இஸ்லாம் எழுதிய “குர்ஆன் பார்வையில் தஃப்ஸீர்கள்” என்ற கட்டுரை இது பற்றி தெளிவாக விளக்குகின்றது.

அரபி மொழி கற்று கொள்வது எதுவும் மிகப் பெரிய வித்தை அல்ல. முயற்சி செய் தால் கற்றுக் கொள்வது சுலபம் நீங்களும் அதை கற்றுக் கொள்ள முயற்சியுங்கள். உலக வாழ்க்கைக்காக ஆங்கிலத்தை கற்று உள்ள மக்கள். மறுமை வாழ்க்கைக்காக அரபி கற்று கொள்ள முயற்சி செய்யாதது ஏன்? இன்னும் தங்கள் பகுதி மக்தப் மதரஸாக்களில் அரபியை ஓத மட்டும் கற்று தராமல், பொருளுடன் கற்று தரச் சொல்லி உங்கள் குழந்தைகள் வெறுமனே மந்திரம் ஓதுவது போல் அரபி ஓதாமல் அர்த்தத்துடன் அரபியை அர்த்தத்துடன் விளங்கி படிக்க வைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு இப்போது பல பாட புத்தகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கிடைக்கிறது அதற்கான முகவரி வேண்டுபவர்கள் கேட்டு பெற்று கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் அரபியை அனைத்து முஸ்லிம்களும் அறிந்து கொள்ள அல்லாஹ் உதவி செய்வானாக.

Previous post:

Next post: