விமர்சனம்! விளக்கம்!!

in 2018 ஏப்ரல்

விமர்சனம் : பல்பொருள் தரும் “முத்தஷாபி ஹாத்” வசனங்களின் உண்மை பொருளை அல்லாஹுவே அறிவான். ஆனால், அண்ணனின் தர்ஜுமாவில் “அல்லாஹு விற்கு இணையாக கல்வியில் தேர்ந்தவர் களும் விளங்கிக் கொள்வார்கள்” என்கி றாரே அது பற்றிய விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். அல்லாஹுவுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹு குர்ஆனில் ஏன் கூறவேண்டும்? என்று கேள்வி வேறு எழுப்புகிறார். முத்தஷாபிஹாத் வசனமாக எந்த வசனத்தை கூறலாம்?
வார்னர் நதீர், நாகர்கோவில்

விளக்கம் : முத்தஷாபிஹாத் வசனங்களை பற்றி குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது. அவன்தான் (இந்) நெறிநூலை உம்மீது இறக்கினான். இதில் தீர்க்கமான வசனங் களும் இருக்கின்றன; இவைதான் இந்நெறிநூலின் அடிப்படையாகும். மற்றவை பல பொருட்களைக் கொண்டவையாகும். ஆகவே, எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ, அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும், அதனில் (தாம் விரும்பும்) விளக்கத்தைத் தேடுவதற்காகவும் அதிலிருந்து பல பொருட்கள் கொண்டவை களையே பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான கருத்துக்களை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களோ “இதனையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். (இவ்விருவகை வசனங்கள்) ஒவ்வொன்றும் எங்கள் இறைவனிடமிருந்து உள்ளவைதாம்!” என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள் இதைக் கொண்டு) உபதேசம் பெற மாட்டார்கள். (3:7)

இந்த வசனத்திலிருந்து “முத்தஷாபிஹாத்” வசனங்களில் உண்மைப் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான் வேறு எவரும் அறிய முடியாது என்று தெளிவாக அறிய முடிகின்றது.

அல்குர்ஆனில் இத்தவறுகளை சிலர் “முத்தஷாபிஹாத்” வசனங்களின் உண்மை பொருளை அல்லாஹ்வும் அறிவான். கல்வியறிவில் தேர்ந்தவர்களும் அறிவார்கள் என்று அல்லாஹ்விற்கு ஒப்பான கல்வியறிவாளர்களை ஆக்க முற்படுகின்றனர்.

இதற்கு காரணம் “தப்ஸீர்” என்ற பெயரில் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதி வைத்து இருப்பதே காரணமாகும். 3:7 வசனத்தை நடுநிலையோடு வாசிப்பவர் எவரும் அந்த வசனத்தின் முழு பொருளையும் இணைத்துப் பார்க்கும்போது முத்தஷா பிஹாத் வசனத்தின் உண்மை பொருள்களை அல்லாஹ் மட்டுமே அறிவான் என் பதையும் மனதில் மாறுபாடு இருப்பவர்களே அவர்கள் மனம் போன போக்கில் விளக்கம் தந்து அதை பின்பற்றுவார்கள் என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மை பொருளை கல்வியில் தேர்ந்தவர்களும் அறிவார்கள் என்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம், மனிதர்களால் விளங்கி கொள்ள முடியாதவற்றை அல்லாஹ் ஏன் இறக்கி வைக்கவேண்டும்? அதை ஏன் மக்கள் ஓதவேண்டும்? சிந்திக்க வேண்டாமா? விளங்கி கொள்ள வேண்டாமா? என்ற கருத்துபட வரும் வசனங்கள்படி எப்படி இவைகளை விளங்குவது? எல்லோரும் விளங்காவிட்டாலும் கல்வி அறிவில் தேர்ந்தவர்களுக்கு மட்டுமாவது விளங்கும் என்று வாதிடுகிறார்கள்?

இதற்கு 3:7 வசனமே விடை தருகிறது கல்வி அறிவில் உறுதிப்பாடுடையவர்களோ “நாங்கள் பூரணமாக அதில் நம்பிக்கை கொள்கிறோம் அவைகள் முழுவதுமே எங்கள் ரப்பிடம் இருந்து வந்தவைகள் தான்” என்று கூறுவார்கள். மனிதர்கள் அறிவு ஏற்று சரிகாணாத விஷயங்களையும் அவன் தனது ரப்பிடம் இருந்து வந்தது என்று ஏற்றுக் கொள்வது தான் அவனது சரியான நிலையாகும். “இவர்கள் மொழி பெயர்த்தது போல் மொழி பெயர்த்தால் “”நாங்கள் இதனை நம்பிக்கை கொள்கிறோம் இவைகள் எங்கள் இறைவனிட மிருந்து வந்தவை” என்ற வாக்கியத்தில் வரும் “நாங்கள்” “எங்கள்” போன்ற எழுவாய்கள் இலக்கணப்படி இறைவனையும், கல்வி அறிவு உடையவர்களையும் சேர்த்து குறிப்பிடும் அதனால் இது இலக்கணப்படி தவறாகும்.

இதனை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கடந்த 3 இதழ்களில் வரும் “குர்ஆனை விளங்கி கொள்பவர்கள் யார்?” என்ற தொடரை தொடர்ந்து முழுமையாக படித்தால் உங்களுக்கு இது தொடர்பான முழு விளக்கம் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: