அந்நஜாத் ஜூன் – 2016

in 2016 ஜுன்

ஜூன் 2016 ­

 ஷஃபான்-ரமழான் 1437

அந்நஜாத்தின் பணி தொடரவேண்டிய அவசியம்!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

அந்நஜாத் மாத இதழ் 1986 ஏப்ரலிலிருந்து தொடர்ந்து பல சிரமங்களிடையே, கடுமையான எதிர்ப்புகளிடையே, கொலை மிரட்டல்களிடையே, விமத்தனமான அவதூறுகளிடையே, ஓயாத கடுஞ் சொற்களிடையே, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையே, தபால் துறை அநீதிக்கிடையே கடந்த 31 வருடங்களாக எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் பேருதவியாலும் பெருங்கிருபையினாலும், அந்நஜாத் நின்றுவிட வேண்டும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு, விருப்பத்திற்கிடையே இடைவிடாது வந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

இத்தனை இடர்பாடுகளுக்குக் காரணம்? ஆம்! 1200 வருடங்களாக ஆதத்தின் சந்ததிகள்-மனித குலத்தினர் அனைவருக்கும் சொந்தமான இறைவனின் இறுதி வாழ்க்கை நெறிநூலை மறைத்து வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி அவர்களை நரகில் தள்ளும் கொடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் திருடனிலும் கேடுகெட்ட திருடர்களை, புரோ கிதர்களான, இடைத்தரகர்களை மக்களுக்கு இனம் காட்டி, அவர்களின் முகத்திரையைக் கிழித்தெரிந்து, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இம்மவ்லவிகளின் வசீகர, சூன்ய, உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் பற்றிப் பிடித்து அவர்களை 6:153 இறைவாக்குக் கூறும் நேர்வழி நடக்க வைக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது அந்நஜாத்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் சீர்கேடுகளை, அதலபாதாள வீழ்ச்சியைப் பார்த்து, சமுதாய சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டு, இந்த மவ்லவிகளைப் போல் எமது சுயக்கருத்துக்களையோ. கற்பனைகளையோ அவிழ்த்து விடவில்லை. அப்படியானால் அது 2:159, 33:36 இறைக் கட்டளைகள்படி பகிரங்க வழிகேடு என்பதை நன்கு அறிந்திருக்கிறோம். ஆனால் அதற்கு மாறாக முழுக்க முழுக்க குர்ஆன் வசனங்கள் கூறுவதையே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது அந்நஜாத்.

2:186 இறைவாக்கு மனிதர்களில் யாரையும் நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்பவேண்டும், அவனது வழிகாட்டல்படியே நடக்க வேண்டும். அவனிடம் மட்டுமே கேட்கவேண்டும் என்று கட்டளையிடுவதையே எடுத்துக் கூறுகிறது அந்நஜாத். அதற்கு மேலும் விளக்கமாக 7:3 இறைவாக்கு அல்லாஹ்வால் இறக்கப்பட்டவற்றை மட்டுமே பின்பற்றவேண்டும். அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வையில் ஒன்று குர்ஆன் மற்றது சுன்னா(ஹதீஃத்) (பார்க்க : 53:2-5) என்பதையே எடுத்துக் கூறுகிறது அந்நஜாத். இவை போதாதென்று மேலும் மிகக் கடுமையாக 108:102-106 இறைவாக்குகள் கூறுவதையே எடுத்துக் கூறுகிறது அந்நஜாத்.

18:102 இறைவாக்கு அல்லாஹ்வை விட்டு மனிதர்களில் அவுலியா-இமாம்-மவ்லவி, வழிகாட்டி என நம்பிப் பின்பற்றுகிறவர்கள் காஃபிர்-நிராகரிப்பாளர்களே, அவர்கள் ஒதுங்குமிடம் நரகம் என மிகக் கடுமையாக எச்சரிப்பதையே அந்நஜாத் எடுத்துக் காட்டுகிறது. 9:31 இறைவாக்கு அல்லாஹ்வை விட்டு மனிதர்களில் யாரை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டாலும், அவர்கள் அம்மனிதர்களை ரப்பாக-இறைவனாகக் கொண்டு கொடிய ஷிர்க்கில் மூழ்குவதால் தான் அவர்கள் நரகை அடைகிறார்கள் என்பதையே அந்நஜாத் எடுத்துக் கூறுகிறது.

18:103 முதல் 106 வரையுள்ள இறைவாக்குகள் இமாம்கள், ஆலிம்கள், மவ்லவிகள் என மனிதர்களைத் தங்கள் வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டவர்கள் மாபெரும் நஷ்டவாளிகள், அவர்கள் பாவமான செயல்களைச் செய்துகொண்டு நன்மையான செயல்களைச் செய்வதாக அறிவீனமாக நம்பிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செயல்கள் நாளை மறுமையில் நிறுக்கப்படா. நரகமே அவர்களுக்குக் கூலியாகும். காரணம் அவர்கள் குர்ஆனை, சுன்னாவை நேரடியாகப் பார்க்காமல் அவற்றை நிராகரித்து மனிதர்கள் பின்னால் செல்வதாகும் என்று கூறுவதையே அந்நஜாத் எடுத்துக் கூறுகிறது.

33:36 இறைவாக்குக் கூறும் அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கம் பற்றி தெளிவுபடுத்திய பின்னர், மார்க்கத்தில் மேல் விளக்கம், தஃப்ஸீர் என்ற பெயரால் குர்ஆன், ஹதீஃதின் நேரடிக் கருத்துக்களை திரிப்பது, வளைப்பது, மறைப்பது (பார்க்க 2:159) பகிரங்கமான வழிகேடு என்று கூறுவதையே அந்நஜாத் எடுத்து வைக்கிறது. அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலை இருட்டடிப்புச் செய்யும் இந்த மவ்லவிகளைப் பின்பற்றும் முஸ்லிம்களின் நாளைய நிலை பற்றி 33:66-68, 7:35-41, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற எண்ணற்ற இறைவாக்குகள் கூறுவதையே அந்நஜாத் எடுத்து வைக்கிறது.

இவ்வசனங்களில் சில பெருமையடித்தவர்கள் என்று குறிப்பிடுவது நாங்கள்தான் ஆலிம்கள்-மவ்லவிகள்-மார்க்கம் கற்றவர்கள், அவாம்கள் குர்ஆனை அவர்களது தாய்மொழியில் படித்தும் விளங்க முடியாது என்று வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகளையே குறிப்பதை அந்நஜாத் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது. மவ்லவிகள் பின்னால் சென்று நாளை நரகை நிரப்பும் முஸ்லிம்கள் 3:103 இறைக் கட்டளைப்படி இம்மவ்லவிகளின் வழிகெட்ட போக்கை நன்கறிந்து அவர்களை நிராகரித்துப் புறக்கணித்துவிட்டு, நேரடியாக குர்ஆன், ஹதீஃத் போதனைப்படி நடப்பவர்களை, வஹ்ஹாபிகள், நஜாத்காரன், குழப்பவாதிகள், ஜமாஅத்துல் முஸ்லிமீன் அபூஅப்துல்லாஹ்வின் ஜமாஅத், நரகவாதிகள் எனப் பூச்சாண்டி காட்டிப் பிதற்றிக் கொண்டும், மக்களை ஏமாற்றி வஞ்சித்துக் கொண்டும், நரகை நோக்கி நடைபோட வைக்கும் மவ்லவிகளும், அவர்களது பக்தர்களும், நாளை அவர்களை நரகில் காணாமல் ஆச்சரியத்துடன் கேட்பதை 38:62,63 வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இப்படிப் பெருமையடிக்கும் இம்மவ்லவிகளின் இழிநிலைகள் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களை எடுத்து வைத்து அவர்களின் போலி வேடத்தைக் கலைத்து வருகிறது அந்நஜாத். அவர்களின் வீண் பெருமை காரணமாக அல்லாஹ்வே அவர்களை குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பி விடுவதாகவும், நேரடியான குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டினாலும் இம் மவ்லவிகள் நம்பி ஏற்கமாட்டார்கள். ஒரே நேரான வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். நரகில் கொண்டு சேர்க்கும் கோணல் வழிகளையே தங்க ளின் வழியாகக் கொண்டு, அவற்றையே நேர்வழியாக மக்களுக்குப் போதிப்பார்கள் என்று 7:146 குர்ஆன் வசனம் கூறுவதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது அந்நஜாத்.

இந்த நேரடி குர்ஆன் வசனங்கள் அனைத்தும் 51:55 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான் உறுதியாக உள்ள ஒருசிலருக்கு மட்டுமே பலன் தரும். 32:13, 11:118,119, 12:106, 25:30 இறைவாக்குகள் கூறுவது போல் மிகமிகப் பெரும்பான்மையினருக்கு குர்ஆன் உபதேசங்கள் விழலுக்கு இறைத்த நீர்தான். அது மட்டுமல்ல. பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு குர்ஆன் உபதேசம் எட்டிக் காயாகக் கசக்கும் என்ற உண்மையை 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 இறைவாக்குகள் அம்பலப் படுத்துவதையும் அந்நஜாத் மக்கள் மன்றத்தில் யாருக்கும் அஞ்சாமல், படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சி எடுத்து வைக்கிறது. இந்த மூட முல்லாக்கள் அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) அல்லாஹ் சொல்லாத சட்டங்களைச் சொல்லி அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்கும் அதிமேதாவிகளாகி வழிகெட்டுச் செல்வதை 42:21, 49:16 இறைவாக்குகள் கூறுவதையே மக்களிடம் அந்நஜாத் எடுத்து வைக்கிறது.

இப்போது சொல்லுங்கள். பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் அந்நஜாத்திற்கு ஆதரவு கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது. பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற சத்தியத்தை மறைத்து அசத்தியத்தை அதாவது தர்கா, தரீக்கா, மத்ஹபு, ஜாக், மஸ்லக், ஸலஃபி, ததஜ, இதஜ, இன்ன பிற இயக்கங்களைச் சரிகண்டு அந்நஜாத்தில் எழுத முடியுமா? ஒருபோதும் முடியாது. அப்படியானால் அந் நஜாத்தை நிறுத்தி விடுவதா? ஒருபோதும் முடியாது.

1000ல் 999 பேர் நரகத்திற்குரியவர்கள் (பார்க்க : புகாரீ : 3348, 4741 முஸ்லிம் 379) என்ற எச்சரிக்கையும், சில நபிமார்கள் ஒரேயயாரு நபரைக்கூட நேர் வழிக்குக் கொண்டுவர முடியாமல் தன்னந்தனியாக சுவர்க்கம் போவார்கள் (பார்க்க: புகாரீ : 5705, 5752) என்ற எச்சரிக்கையும் நமக்கு எதை உணர்த்துகிறது? நாம் சுவர்க்கம் போக என்ன வழி? என்றுதான் பார்க்க வேண்டுமே அல்லாமல், ஊரைத் திருத்தும் பொறுப்பை அல்லாஹ் நபிமார்களுக்கும் தரவில்லை, மனிதர்களின் எவருக்கும் தரவில்லை. தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருப்பதே நமது கடமை. இதை எண்ணற்ற வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. (பார்க்க : 10:99, 13:40, 50:45, 2:272, 28:56, 3:92, 5:99, 13:40, 14:52, 16:35,82, 24:54, 29:18, 36:17,30, 42:48, 46:35, 64:12)

இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் பொறுமையாக, நடுநிலையுடன் நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள், அல்லாஹ்விடமிருந்து வஹீ மூலம் பெற்ற சத்திய-நேர்வழிச் செய்திகளை மக்கள் மன்றத்தில் வைக்கும்போது, அந்நேர் வழியை எத்தனை பேர் ஏற்றுக் கொண்டார்கள். மிகப் பெரும்பான்மையினர் அந்நபிமார்களை எப்படி எல்லாம் இழித்தும், பழித்தும், பொய்யர்கள், குழப்பவாதிகள், பயித்தியக்காரர்கள், மன நோயாளிகள் என்று வாய்க்கு வந்தவாரெல்லாம் திட்டி அந்நபிமார்களின் நேர்வழிக் கருத்துக்களை மக்கள் கேட்கவிடாமல் தடுத்தார்கள்.

நபிமார்கள் வேதனையின் விளிம்பிற்கே செல்லும்போது அல்லாஹ் அவர்களுக்கு எப்படிப்பட்ட ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவர்களைத் திடப்படுத்தினான் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள முடியும். 36:30 இறைவாக்கு அந்தோ அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை என்று அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். ஆக சத்தியத்தை-நேர்வழியை மிகப்பெரும்பான்மை யினர் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். மிகமிக சொற்பமானவர்கள் மட்டுமே நேர்வழியை ஏற்பார்கள் என குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இன்றும் குர்ஆன், சுன்னாவில் உள்ளதை உள்ளபடி சொல்பவர்கள் பெரும்பான்மை மக்களால் இழிவுபடுத்தப்படுகிறார்கள். பேயன், பைத்தியக்காரன்,, பொய்யன், மன நோயாளி இன்னும் இவைபோல் பல இழி சொற்களால் பரிகாசம் செய்து மக்கள் அவர்களின் நேர்வழி பேச்சைக் கேட்காமல் தடுத்துவிடுகிறார்கள். அல்லாஹ் குர்ஆன் 2:256,257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17, 51:53, 52:32 ஆகிய வசனங்களில் தாஃகூத், தாஃகூன் என்று குறிப்பிடுவது வழிகெடுக்கும் மனித ஷைத்தான்களாகிய இம்மவ்லவிகளையே. அவர்கள் 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல் குர்ஆனின் நேரடிப் போதனைகளை தாங்கள் பெற்றக் குழந்தைகளை அறிவது போல் அறிந்த நிலையில்தான் அவற்றை மறுக்கிறார்கள்.

ஆம்! அவர்கள் 6:153 இறைவாக்குச் சொல்லும் ஒரே நேர்வழி மார்க்கத்தை எண்ணற்றக் கோணல் வழிகள் மதங்களாக்கி அவை கொண்டு தங்கள் வயிற்றையும், பையையும் நிரப்புவதால் 36:21, 2:79, 174,175, 31:6 இறைவாக்குகள் கூறுவது போல் அவர்கள் நேர்வழிக்கு வர வாய்ப்பே இல்லை என்று குர்ஆன் கூறுவதை நாம் மறுக்க முடியுமா? உணவு, உடை, இருப்பிடம் ஒட்டுமொத்தமாக முழுக்க முழுக்க ஹராமில் இருக்கும், அதனால் பெருமை பேசும் இந்த மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள் (பார்க்க : 7:146) என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுவது எமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை.

ஆனால் சொந்த ஹலாலான உழைப்பில் கை நிறைய பொருளீட்டும் டாக்டர்கள், விஞ்ஞானிகள், பொறிஞர்கள், வியாபாரிகள் போன்ற அறிவு ஜீவிகளும், இரவும் பகலைப் போல் வெள்ளைவெளேர் என்ற நிலையில், உள்ளங்கை நெல்லிக்கனி போல், குன்றிலிட்ட தீபம் போல் கடுகளவும் சந்தேகமே இல்லாத குர்ஆன் வசனங்கள் கூறும் இந்த உண்மைகளை உணர முடியாத அறிவிலிகளாக இருப்பதே எமக்குப் பெருத்த ஆச்சரியத்தைத் தருகிறது. அவர்களுக்கு வயிற்றுப் பிரச்சனையோ, வாழ்க்கைப் பிரச்சனையோ இல்லவே இல்லை.

பின் ஏன் நேர்வழியை ஏற்கத் தயங்குகிறார்கள் தெரியுமா? நேர்வழியில் இருப்பவர்கள் மிகமிகச் சொற்பமாக இருப்பதால், ஆயிரத்தில் ஒன்று லட்சத்தில் ஒன்று என்று மட்டுமே இருப்பதால், மக்கள் செல்வாக்குக் கிடைக்காது, பேர் புகழ் கிடைக்காது, இருக்கிற பேர் புகழும், பட்டம் பதவியும் பறிபோய்விடும் என்ற அச்சமே அவர்களை நேர்வழியை-சத்தியத்தை ஏற்று நடக்கத் தடையாக இருக்கிறது.

பாவம் அவர்கள், அனைத்து நபிமார்களும் பெரும்பான்மை மக்களிடம் பட்ட கஷ்டங்களை, ஏற்ற அவதூறு, அர்ச்சனைகள், இன்னும் பல உள்ளத்தை வேதனைப்படுத்தும் அவமானங்களை குர்ஆனை நேரடியாகப் படித்து உணர்ந்திருந்தால், அற்பமான அழிந்துபடும் இவ்வுலகில் கிடைக்கும் மக்கள் செல்வாக்கு, பட்டம், பதவி இவற்றில் மயங்கி உள்ளம் ஒப்புக்கொண்ட உண்மைகளை மறைக்க முற்படுவார்களா? ஒரு பிரபலமான மருத்துவர், எழுத்தாளர், நாவலாசிரியர், பேச்சாளர் தனது பேச்சுக்களில், எழுத் துக்களில் 3:103 இறைவாக்கிலுள்ள பிஹப்லில்லாஹ் -அல்லாஹ்வின் கயிறு அதாவது குர்ஆனை பிரியாமல் ஒரே ஜமாஅத்தாகப் பற்றிப் பிடியுங்கள் என்றிருப்பதை ஒற்றுமையின் கயிறைப் பற்றிப் பிடியுங்கள் என்றே தொடர்ந்து தனது பேச்சுக்களில், எழுத்துக்களில் பயன்படுத்தி வருகிறார்.

இது காலம் கால மாக மூட முல்லாக்கள் சொல்லி வருவது, எழுதி வருவது, அதற்கு நியாயமான காரணமும் உண்டு. அதா வது ஹப்லில்லாஹ்-அல்லாஹ்வின் கயிறு என்று உள் ளதை உள்ளபடி சொன்னால், மக்கள் குர்ஆனைப் பற்றிப் பிடிக்க ஆரம்பித்துவிட்டால் இந்த மவ்லவிகளின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமே. அதை அவர்களால் ஜீரணிக்க முடியாதே. அதனால் தான் 1984லிலிருந்து நாம் தொடர்ந்து தெளிவாக விளக்கி இருந்தாலும், இந்த மூடமுல்லாக்கள் பிடி வாதமாக ஒற்றுமை எனும் கயிறு என்று பிதற்றி வருகிறார்கள்.

அதாவது கடந்த 1200 வருடங்களாக சுன்னத் ஜமாஅத் என்ற பித்அத்தான நரகில் சேர்க்கும் வழி கெட்ட பிரிவில் ஒற்றுமையாக இருப்பதாகவும், அந்த ஜமாஅத்தில்தான் ஒற்றுமையாக நிலைத் திருந்து நரகில் போய் சேரத் தூண்டுகிறார்கள்; தாஃகூத் என்ற மனித இன ஷைத்தானின் வேலையை தொடர்ந்து பிடிவாதமாகச் செய்து வருகிறார்கள். அதற்கு மாறாக ஓரளவு வளமான இவ்வுலக வாழ்க்கையை அல்லாஹ் கொடுத்திருக்கும் இந்த அறிவு ஜீவிகளுக்குப் பிடித்த கேடு என்ன? மூட முல்லாக்கள் சுயநலத்துடன் ஒப்புவிக்கும் வழிகேட்டை, இவர்களும் போதிக்கும் மர்மம் என்ன? 33:36,66-68 இன்னும் பல இறைவாக்குகள் எச்சரிப்பது போல் நாளை நரகில் கிடந்து கொண்டு இந்த மவ்லவிகளைத் திட்டிச் சபித்து ஒப்பாரி வைக்கப் போகிறார்களா?

ஆகக் கடந்த 31 வருடங்களாக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இந்த மவ்லவிகளின் வழி கெட்ட துர்போதனைகளை அறிந்து அவர்களிடமிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆனையும், சுன்னாவையும் பற்றிப் பிடித்து அவற்றின் நேரடி வழிகாட்டல்படி மட்டுமே நடக்கவேண்டும் (பார்க்க : 2:186, 7:3, 18:102-106, 59:7) என்று தொடரந்து எழுதிவந்தாலும் இந்த குர்ஆன் கூறும் கருத்து மக்களில் 0.001% போய்ச்சேரவில்லை.

அப்படிப் போய்ச்சேர்ந்த முஸ்லிம்களில் 0.01% அதை ஏற்று அதன்படி நேர்வழி நடக்க முன்வரவில்லை. ஜின் இன ஷைத்தான்களும், தாஃகூத் என்ற மனித இன ஷைத்தான்களும் மக்களை குர்ஆன் கூறும் நேர்வழிக்கு வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் ஆயிரக்கணக்கான நபிமார்களின் நேர்வழிப் போதனைகளை எத்தனை பேர் ஏற்றுக் கொண்டார்கள் என்று குர்ஆன் விவரிக்கும் செய்திகளைப் படித்து அறிந்துள்ளதால், எமக்கு இது ஆச்சரியத்தையோ, வேதனையோ தரவில்லை. நபி நூஹ்(அலை) மற்றும் தன்னந்தனியாக சுவர்க்கம் போகும் சில நபிமார்களின் வரலாறுகளை குர்ஆன் கூறுவது எமக்குப் போதிய அறிவைத் தருகிறது.

ஆகவே எமது உயிர் மூச்சு உள்ளவரை அந்நஜாத்தின் குர்ஆன் வழி போதனையை தொடர்வது மட்டுமல்லாமல், எமது மரணத்திற்குப் பின்னரும் அந்நஜாத்தின் பணி தொடர வேண்டும் என்ற பேராவலுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு அருள் புரிய வேண்டும், அதற்குரிய சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அந்த வல்லவனிடம் தொடர்ந்து துஆ செய்கிறோம். முஃமின்களை துஆ செய்ய அன்புடன் வேண்டுகிறோம். அந்நஜாத் எடுத்துவைக்கும் 2:159 இறைவாக்கு எச்சரிப்பது போல், திரிக்கப்படாமல், வளைக்கப்படாமல், மறைக்கப்படாமல் குர்ஆனின் நேரடிக் கருத்துக்கள் கடந்த 31 ஆண்டுகளில் முழு முஸ்லிம் சமுதாயத்தையே சென்றடையவில்லை. தமிழ் பேசும் முஸ்லிம்களிடையேயும் முழுமையாக சென்றடையவில்லை.

இந்த நிலையில் ஆதத்தின் சந்ததிகளான மனிதகுலம் அனைவருக்கும் குர்ஆனின் நேர டிக் கருத்துக்கள் போய் சேருவது எப்போது? நமது கடமை அதற்கான முழு முயற்சிகளில், நமது சொந்த யூகம், சுய கருத்து, கற்பனை எதையும் புகுத்தாமல், அல்லாஹ் வழிகாட்டியுள்ளபடி மட்டுமே விடாது தொடர்ந்து பாடுபடுவதாகும். பெரும் ஜிஹாத் செய்வதாகும். ஜிஹாத் என்றால் துப்பாக்கி எடுத்துப் போர் புரிவதல்ல. மிகக் கடும் முயற்சி செய்வதாகும்.

அல்லாஹ் இந்த ஹிஜ்ரி 15ம் நூற்றாண்டில் மனிதகுலத்தினருக்கு ஒரு மறுமலர்ச்சியை நாடினால் அது நடக்கும். அந்த மறுமலர்ச்சி அல்லாஹ்வின் நாட்டத்தில் இல்லை என்றால் அது நடக்காது. ஆயினும் நம்முடைய முயற்சிக்கு நிச்சயம் நாளை மறுமையில் நற்கூலி உண்டு. மஹத்தான வெகுமதிகள் நிச்சயம் உண்டு. அந்நஜாத் வாசகர்களே, உங்களில் பலர் வெறுமனே அந்நஜாத்தைப் படிக்கிறீர்களே அல்லாமல், அதில் குறிப்பிடும் குர்ஆன் வசனங்களை நேரடியாக குர்ஆனை எடுத்துப் படித்து விளங்கும் பழக்கம் இல்லை.

குர்ஆனுடன் நேரடித் தொடர்பு உங்களுக்கு ஏற்படாதவரை, குர்ஆன் கூறும் நேர்வழியை அறியும் வாய்ப்புக் குறைவு. அவர்களே அந்நஜாத் சொன்ன வி­யங்களையே மீண்டும் மீண்டும் சொல்கிறது என சலித்துக் கொள்கிறார்கள். குர்ஆன் 1450 வருடங்களாக சொன்ன வியங்களையே மீண்டும், மீண்டும் சொல்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். சிலர் அந்நஜாத் குறிப்பிடும் குர்ஆன் வசனங்களை உடனடியாக குர்ஆனை எடுத்து நேரடியாகப் படித்து விளங்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு நேரடியாக குர்ஆனுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் அந்நஜாத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டியதில்லைதான்; ஆயினும் அவர்கள் ஒன்றை நினைவு கூற வேண்டும். அந்நஜாத்தைப் படித்ததன் மூலம் குர்ஆனுடன் நேரடித் தொடர்பு ஏற்படும் பாக்கியம் தங்களுக்குக் கிடைத்தது.

அந்த பாக்கியம் மனித குலத்தினரில் அல்லாஹ் நாடுவோருக்குக் கிடைக்க வேண்டும் என்றால், இடைத்தரகு புரோகிதமற்ற குர்ஆனின் நேரடிக் கருத்துக்கள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். இந்த முயற்சியை அந்நஜாத் மட்டுமே செய்து வருகிறது. மற்றபடி உலகளாவிய அளவில் இஸ்லாத்தின் பெயரால், வழிகெட்ட எண் ணற்றப் பிரிவினர்களின் இடைத்தரகர்களான மதகுருமார்களின் சுய கருத்துக்களே குர்ஆன் விளக்கமாக-தஃப்ஸீராக எடுத்து வைக்கப்படுகின்றன.

நேரடியாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் கருத்துக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற நேரிய-சத்தியக் கருத்துக்களை எடுத்து வைக்கும் அரிய முயற்சி உலகின் எந்தப் பகுதியிலும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. எனவே அந்நஜாத்தின் சீரிய இந்த முயற்சி கண்டிப்பாகத் தொடர்வதோடு, அந்நாஜாத் கூறும் நேரடி குர்ஆன், சுன்னா கருத்துக்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய நம்மால் ஆன முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அதன் முடிவு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கையிலேயே இருக்கிறது. எமது கையில் இல்லை என்பதிலும் உறுதியாக இருக்கவேண்டும்.

எனவே அந்நஜாத்தைப் படிப்பதன் மூலம் குர்ஆனை நேரடியாகப் பற்றிப் பிடிக்கும் பாக்கியம் பெற்ற சகோதர, சகோதரிகளும் அந்நஜாத் தொய்வின்றித் தொடர்ந்து வெளிவர தங்கள் சந்தாக்களைப் புதுப்பிப்பதோடு, தாராளமாக அந்நஜாத்திற்கு வளர்ச்சி நிதி கொடுத்தும் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் குர்ஆனைப் பற்றிப் பிடிக்கும் நன்நோக்கில் அவர்களுக்கும் அந்நஜாத்தை அறிமுகப்படுத்தி சந்தா சேர்த்து அந்நஜாத் தொடர்ந்து வெளிவர உதவுங்கள். இது உங்களுக்கு மறுமையில் மகத்தான நற்கூலிகளைப் பெற்றுத் தரும்.

அடுத்து அந்நஜாத் ஆரம்பித்த காலத்திலிருந்து சகோதர சகோதரிகளிடமிருந்து அவர்களுடைய ஜகாத்தைப் பெற்று 9:60 இறைவாக்குக் கூறும் நபர்களுக்கு கொடுத்துவிட்டு அதன் வரவு செலவு கணக்கை வருடா வருடம் ஜகாத் கொடுத்தவர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். மற்றபடி சில அறிவீனர்கள் பேர் புகழை விரும்பி ஜகாத் பெறுபவர்களைப் படம் பிடித்து பத்திரிக்கைகளில் போட்டு அவர்களை அவமானப்படுத்தும் தீச்செயலை நாம் செய்வதே இல்லை. (பார்க்க: 2:261-265)

அந்நஜாத் வளர்ச்சி நிதி என்று குறிப்பிட்டு வரும் நிதியை மட்டுமே அந்நஜாத் கணக்கில் சேர்க்கி றோம். ஜகாத் நிதியிலிருந்து சல்லிக்காசும் அந்நஜாத் திற்காக எடுப்பதில்லை. 9:60 இறைவாக்கு ஜகாத்தை வசூலிப்பது, விநியோகிப்பது, கணக்கிடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு ஒரு பங்கு உண்டு என்று கூறினாலும் நாம் அப்படி எடுப்பதில்லை. பட்டியல் தயாரித்து அச்சடிப்பது, தபாலில் அனுப்புவது போன்ற செலவினங்களையும் ஜகாத் கணக்கில் கொண்டு வருவதில்லை. நாமே செல வழிக்கிறோம். இலவசப் பிரசுரங்களின் செலவையும் அந்நஜாத் நிதியிலிருந்தோ, ஜகாத் நிதியிலிருந்தோ எடுப்பதில்லை. ஜகாத் பணத்தைக் கொள்ளை அடித்துச் சுரண்டுவதாக சில தறுதலைகள் அவதூறு பரப்புவதால் இந்த விளக்கம் அவசியமாகிறது.

இதைக் கண்டு கொள்ளாமல் விட்டால், அவர்தான் மறுப்புத் தெரிவிக்கவில்லையே. அதனால் சொல்வது உண்மை என்று அவரே ஏற்றுக்கொண்டார் என்றும் அத்தறுதலைகள் அவதூறு பரப்பலாம். அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்களது அந்நஜாத் சந்தாக்களை அவசியம் புதுப்பித்து அந்நஜாத் பணி தொய்வில்லாமல் தொடர உதவுங்கள்,

மேலும் அந்நஜாத் வளர்ச்சி நிதியாகக் கொடுத்து அந்நஜாத்தைப் பலப்படுத்துங்கள். உங்களது ஜகாத் பணத்தை தாராளமாக அனுப்பி, ஏழை, எளிய மக்களின் நியாயமான, அத்தியாவசியத் தேவைகளுக்குக் கொடுத்து உதவும் அரிய சேவைக்கு ஒத்துழைப்புத் தருமாறு மிக்க அன்புடனும், ஆதரவு வைத்தும் வேண்டுகிறோம். அந்நஜாத் தொய்வின்றித் தொடர நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள். உங்களின் இவ்வுலக மறு உலக வாழ்க்கை வளமாக, சுபீட்சமாக அமையவும், உங்கள் சிறிய, பெரிய பாவங்களை அல்லாஹ் கருணையுடன் மன்னித்து நாளை மறுமையில் மகத்தான பதவிகளைத் தரவும் துஆ செய்கிறோம்.

ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)

– அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு : மே 1986

நீண்ட காலமாக உலகமெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் இரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் 20 ரக்அத்துகள் தொழுது வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக 20 ரக்அத்துகள் தொழுது வருவதால் அதை நியாயப்படுத்தவே மனிதமனம் விரும்புகின்றது. ஆனால் மனித விருப்பம் மார்க்கம் ஆக முடியாது. அல்லாஹ்(ஜல்), நபி(ஸல்) அவர்களைக் கொண்டு, மார்க்கமாகக் காட்டித்தந்தது மட்டும் தான் மார்க்கமாக முடியும்.

மார்க்கம் நிறைவு பெறவில்லையா?

குர்ஆனிலும், ஹதீஃதிலும் மார்க்கம் நிறைவாக இல்லை. அதை நிறைவுபடுத்த மனித அறிவு அவசியம் என்று எண்ணுவதே ஈமானைப் பங்கப்படுத்தும் சிந்தனையாகும். குர்ஆனிலும், ஹதீஃதிலும் மனிதனின் நேரான வாழ்க்கைக்குத் தேவையானவை, நிறைவாகவும், தெளிவாகவும் இருக்கின்றன என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கிறது.

இந்த அடிப்படைச் சிந்தனைகளோடு, ரமழான் இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்துகள் என்று ஆதாரபூர்வமான ஹதீஃத்களைக் கொண்டு ஆராய்வோம். நாம் இன்று பயன்படுத்திவரும் தராவீஹ் என்ற பதம் ஹதீஃத்களில் காணப்படவில்லை என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இரவுத் தொழுகை, ரமழான் இரவுத் தொழுகை, தஹஜ்த், வித்ர் என்ற பெயர்களாலேயே இந்தக் குறிப்பிட்ட தொழுகை பல ஹதீஃத்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரபூர்வமான ஹதீஃத்களில் நபி(ஸல்) அவர்கள், உமர்(ரழி) அவர்கள், மற்றும் சிறப்புக்குரிய நபிதோழர்கள் 8+3 ரக்அத்துகளுக்கு மேல் இந்த ரமழான் தொழுகை தொழுததில்லை என்றுதான் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தராவீஹ் என்று பெயர் மாற்றம் செய்தவர்களும், 20 ரக்அத்துகள் ஆக்கியவர்களும் பின்னால் தோன்றியவர்களே அல்லாமல் அல்லாஹ்(ஜல்) தனது தூதரைக் கொண்டு கற்பித்தது அல்ல என்பதை விளங்கிக் கொள்வோமாக.

ரமழான் தொழுகை 8+3 ரக்அத்துகள் :

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் அபூசல் மதுப்னு அப்திர் ரஹ்மான்(ரழி), நபி(ஸல்) அவர்களின் ரமழான் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டதற்கு ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ஸல்) 8 ரக்அத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை என்று கூறிய ஹதீஃத் காணப்படும் நூல்கள் :

1. புகாரி பாகம்…1 பக்கம் 342,343

2. முஸ்லிம் பாகம்…1 பக்கம் 254

3. அபூதாவூத் பாகம்…1 பக்கம் 196

4. திர்மிதி பாகம்…1 பக்கம் 58

5. நஸாயீ பாகம்…3 பக்கம் 234

6. முஅத்தா இமாம் மாலிக் பாகம்… பக்கம் 81

7. இப்னு ஹுஸைமா பாகம்…2 பக்கம் 192

8. முஸ்னது அஹ்மத் பாகம்…6 பக்கம் 36

9. முஸ்னது அபூஅவானா பாகம்…2 பக்கம் 234

10. முஅத்தா இமாம் முஹம்மது பக்கம் 141

11. பைஹகீ பாகம்…2 பக்கம் 495

12. ஷாஹ்ம ஆனில் ஆதார் தஹாவீ பாகம்…2 பக்கம் 282

13. ­ரஹ் சுன்னாஹ் பாகம்… 4 பக்கம் 3

14. தாரமீ பாகம்…1 பக்கம் 344

மேற்கண்ட நூல்களில் காணப்படும் இந்த ஹதீஃத், தஹஜ்ஜுத் குறித்தது. ரமழான் தொழுகை சம்பந்தப்பட்டதல்ல என்று இன்று சிலர் வாதிடுகின்றனர். பாவம் ஹதீஃதைப் பற்றிய விளக்கம் இன்று இவர்கள் சொல்லித்தான் தெரியவேண்டியுள்ளது. ஹதீஃத்களைக் கோர்வை செய்த அறிஞர்கள் அனைவரும் அன்று அறியாமல் இந்த ஹதீஃதை ரமழான் தொழுகை என்ற பாடத்தில் எழுதிவிட்டார்கள் போலும்! இந்த ஹதீஃத் ரமழான் தொழுகையைக் குறிக்கும் என்று புகாரிக்கு விரிவுரை எழுதிய பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக:

1. அல்லாமா அஹ்மதிப்னு முஹம்மது கதீப்கஸ் தலானி(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் : 2, பக்கம் 267.

2. அல்லாமா ஹாபிழ் அஹ்மது அலீ ஹனபி ஜபரன்பூரி(ரஹ்) புகாரி விரிவுரை பாகம்1, பக்கம் 154.

3. அல்லாமா ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) புகாரி விரவுரை பாகம் 4, பக்கம் 254.

4. அல்லாமா அன்வர்ஷா கஷ்மீரி(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 2, பக்கம் 420.

5. முல்லா அலீகாரி(ரஹ்) மிர்காத் ஹா´யா மிஷ்காத் பாகம் 1, பக்கம் 115.

இன்னும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. விரிவஞ்சி விடுகிறோம்.

அல்லாமா முஹம்மது காஸிம் நானுத்தவி தேவ்பந்த் மதரஸாவின் ஸதாபகர் அறிவுடையவர் களிடம் ரமழான் தொழுகை (தராவீஹ்) தஹஜ்ஜுத் இரண்டும் ஒன்றுதான் என்று தனது பைஜுல் காசிமிய்யா பக்கம் 13-ல் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆக இந்த ஹதீஃத் தஹஜ்ஜுத் சம்பந்தப்பட்டது. ரமழான் தொழுகை சம்பந்தப்பட்டதல்ல என்று வாதிடுவோர் குறைமதி படைத்தவர்களே. இவர்கள் வாதம் சரி என்றால் நபி(ஸல்) ரமழானில் ரமழான் தொழுகை 23 ரக்அத்துகள், தஹஜ்ஜுத் 11 ரக்அத்துகள் ஆக 34 ரக்அத்துகள் தொழுதிருக்க வேண்டும். அதுவும் வித்று இரண்டு முறை தொழுதிருக்க வேண்டும். இது அறிவுக்குப் பொருந்தாது? 34 ரக்அத்துகள் நபி(ஸல்) தொழுதிருந்தால் 11 ரக்அத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை என்று ஆயிஷா(ரழி) அறிவித்திருப்பார்களா? என்று ஆராய்ந்து பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் ரமழானின் தொழுகை 8+3=11 ரக்அத்துகள் மட்டுமே தொழுதார்கள் என்பதற்கு மேலும் இரண்டு ஹதீஃத்கள் இருக்கின்றன. அவற்றையும் அறியத் தருகிறோம்.

1. ஜாபிர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 8 ரக்அத்துகளும் வித்று 3 ரக்அத்துகளும் தொழவைத்ததாக அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஃத் இப்னு ஹுஸைமா பாகம் 2, பக்கம் 138-ல் காணப் படுகிறது.

2. உபை இப்னு கஃப்(ரழி) ரமழானின் இரவில் பெண்களுக்கு 8 ரக்அத்துகளும் வித்று 3 ரக்அத்து களும் தொழவைத்ததை நபி(ஸல்) அவர்களிடம் அறிவித்தபோது நபி(ஸல்) அவர்கள் அதை மெளனமாக ஏற்றுக்கொண்டார்கள் என்ற அறிவிப்பு முஸ்னது அபூயஃலா பக்கம் 155ல் காணப்படுகிறது. இந்த ஹதீஃதை ரயீஸுத் தப்லீக் மெளலவி யூசுப் (ரஹ்) அவர்கள் தனது ஹயாத்துஸ்ஸஹாபா பாகம் 3, பக்கம் 167-ல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தப்லீக் தஃலீம் தொகுப்புக்களைத் தொகுத்த மெளலவி ஜகரிய்யா(ரஹ்) அவர்கள் அவ்ஜஸுல் மஸாலிக் என்ற இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் முஅத்தாவின் விரிவுரை பாகம் 1, பக்கம் 39-ல் ரமழான் தொழுகை 20 ரக்அத்துகள் என்பதற்கு ஆதாரம் இல்லை. அறிஞர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்தில் குறிப்பிட்டிருக்கி றார்கள். அவர்களின் ரமழான் சிறப்பு என்ற தஃலீம் நூலில் ரமழான் தொழுகை 20 ரக்அத்துகள் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதை முஸ் லிம்கள் சிந்திக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ரமழான் தொழுகை 20 ரக்அத்துகள் என்ற ஹதீஃத்களின் நிலை?

நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 20 ரக்அத்துகள் தொழுததாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்ட ஒரு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத் சில கிதாபுகளில் காணப்படுகின்றது.

இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்ற :

1. அபூசைபா இப்ராஹீம் இப்னு உஸ்மான், 2.ஹகம் இப்னு உதைபா ஆகிய இருவரும் காஜிகளாக இருந்தார்கள். பொய்யர்கள் என்று அஸ்மாவுர்ரிஜால் (அறிவிப்பாளர்களின் தகுதிகளை எடைபோடும்) கலையில் வல்லுனர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.

இமாம்களான ஸுஹ்பா, அஹமது, இப்னு முயீன், புகாரீ, நஸயீ (ரஹ்-அலை) போன்றோர் இந்த இருவரையும் நல்லவர்களாக, நேர்மையாளர்களாக் கணிக்கவில்லை. ஹதீஃத் கலைவல்லுநர்கள் அனைவரும் ஏகோபித்து இந்த ஹதீஃத், அன்னை ஆயிஷா(ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள உண்மையான ஹதீஃதுக்கு எதிராக இருக்கிறது என்று அறிவித்து நிராகரித்திருக்கிறார்கள். தேவ்பந்த் ஆலிம்கள் பலரின் நூல்களில் இந்த உண்மை தெளி வாக இருந்தும் அப்பாவி முஸ்லிம்களை சிலர் ஏன் தான் ஏமாற்றி, கஷ்டம் கொடுக்கிறார்களோ தெரியவில்லை?

இதேபோல் உமர்(ரழி) 20 ரக்அத்துகள் தொழுதார்கள். தொழ வைக்கும்படி சொன்னார்கள். உமர் (ரழி) காலத்தில் 20 ரக்அத்துகள் மக்களால் தொழப்பட்டது போன்ற ஹதீஃத்களும் இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீஃத்களாக ஹதீஃத் கலை வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. பைஹகீயில் காணப்படும் உமர்(ரழி) காலத்தில் மக்கள் 20 ரக்அத்துகள் தொழுதார்கள் என்ற ஹதீஃத் பலஹீனமானது; காரணம் இதை ரிவாயத்துச் செய்யும் யஸீதுப்னுரூமான் உமர்(ரழி) காலத்தில் பிறக்கவே இல்லை என்று பைஹகி இமாமே பைஹகீ பாகம் 2, பக்கம் 496ல் குறிப்பிட்டுள்ளதை ஏன் மறைக்கின்றார்கள்?

உமர்(ரழி) அவர்கள் ஒருவரிடம் ஜனங்களுக்கு 20 ரக்அத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்டதாக, யஹ்யா இப்னு சயீத்(ரஹ்) அவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஃதை ஆராயும்போது, இந்த யஹ்யா இப்னு சயீத் 5வது தலைமுறையைச் சேர்ந்த வர், உமர்(ரழி) காலத்தில் பிறந்திருக்கவேமாட்டார். உமர்(ரழி) இறப்பிற்கும் 100 வருடம் பின்னால் வாழ்ந்தவர் என்று ஹதீஃத் கலை வல்லுநர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

உபை இப்னு கஃபு(ரழி) ஜனங்களுக்கு 20 ரக்அத்துகள் தொழ வைத்தார்கள் என்பதும் ஆதாரமற்றது. காரணம், உபை இப்னு கஃபு (ரழி) நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே பெண்களுக்கு 8+3 ரக்அத்துகள் தொழ வைத்து நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஹதீஃத் பலமானது. மேலும் உமர் (ரழி), உபை இப்னு கஃபு(ரழி), தமீமுத்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், ஜனங்களுக்கு 8+3 ரக்அத்துகள் தொழ வைக்க ஏவிய சம்பவம், ஸாயிப் இப்னு யஸீதால் அறிவிக்கப்பட்டதை, இமாம் மாலிக்(ரஹ்) தனது முஅத்தாவின் 58ம் பக்கத்திலும் இமாம் முஹம்மது இப்னு நஸீர்(ரஹ்) தனது கியாமுல்லைல் பக்கம் 91லும் பதிவு செய்துள்ளார்கள். இது தஹாவீ பாகம்1, பக்கம் 173லும் குறிப்பிடப்பட்டுள்ளது. ­ரஹ் மஆனில் ஆதார் பாகம் 2, பக்கம் 293லும் பதியப்பட்டுள்ளது.

ஆக ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்) 8+3 என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் வரை போய்ச் சேரும் ஹதீஃத்கள் மூன்றும் ஆதாரபூர்வமானவை. 20 ரக்அத்துகள் என்ற ஹதீஃத்கள் நபி(ஸல்) அவர்கள் வரைப் போய்ச் சேரவில்லை. அறிவிப்புகளும் மிகவும் பலஹீனமானவை என்று ஹதீஃத் கலை வல்லு னர்களாலேயே நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆதாரபூர்வமான ஹதீஃத்களை வைத்துச் செயல்படுவதா? பலஹீனமான ஹதீஃத்களை வைத்துச் செயல்படு வதா? என்பதை அறிவுடையவர்கள் ஆராய்ந்து பார்க்கட்டும். மார்க்கத்தை அல்லாஹ்(ஜல்), நபி (ஸல்) அவர்களைக் கொண்டே நிறைவு செய்திருக்கிறான் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்னுமொரு சந்தேகம் :

அடுத்து இந்தச் சிலர் இன்னொரு ஐயத்தைக் கிளப்புகிறார்கள். நபி(ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுகிறவர்கள், ரமழான் இரவுத் தொழுகையை 3 நாட்கள் தானே ஜமாஅத்துடன் தொழ வேண்டும். ரமழான் முழுவதும் எப்படி ஜமாஅத்துடன் தொழுகிறார்கள்? என்ற கேள்வியே அது.

இக்கேள்வி மிக நியாயமான கேள்வியே:

இந்த ஆக்கத்தை 1986 மே மாதம் வெளியிடும் போது இமாம் புகாரீ(ரஹ்) அத்தியாயம் 31-ல் தராவீஹ் தொழுகை என்ற தலைப்பில் எழுதியுள்ள ஹதீஃத்களை மட்டுமே கவனித்தோம். அப்போது புகாரீ(ரஹ்) ஹதீஃத்களில் காணப்படாத தராவீஹ் தொழுகை என்று ஏன் எழுதினார் என்பது சந்தேகத்திற்குரியதாக இருந்தது. பாடம்:1. ரமழானில் (இரவில்) நின்று வழிபடுவதன் சிறப்பு என்று குறிப்பிட்டே ஹதீஃத்களை குறிப்பிடுகிறார். (பார்க்க புகாரீ : 2008 -2103) 2010-வது ஹதீஃதில் உமர்(ரழி) தனித்துத் தொழுது கொண்டிருந்தவர்களை ஒரே ஜமாஅத்தாக ஆக்கி தொழக் கட்டளையிட்ட செய்தி காணப்படுகிறது. இச்செயல் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திற்கு மாற்றமாக இல்லை என்ற நம்பிக்கையில் நாமும் அதைச் சரிகண்டு எழுதினோம்.

ஆனால் நபி(ஸல்) அவர்களின் நேரடியான கட்டளை அதே புகாரீ 731வது ஹதீஃதாக இரவுத் தொழுகை என்ற தலைப்பில், ரமழான் இரவுத் தொழுகையை நடுநிசியில் தங்கள் தங்கள் வீடுகளில் தனியாகத் தொழுவதே சிறப்பு என்று அறிவித்த செய்தி காணப்படுகிறது. புகாரீ(ரஹ்) அவர்கள் ஏன் இந்த ஹதீஃதை ரமழான் இரவுத் தொழுகை பாடத்தில் கொண்டு வராமல், தொழுகை அறிவிப்பு (பாங்கு) என்ற தலைப்பில், இரவுத் தொழுகை என்ற உப தலைப்பில் கொண்டு வந்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆம்! குர்ஆன் அல்பகரா 2:256, 257 இறைவாக்குகள் கூறும் தாஃகூத்-மனித இன ஷைத்தான்களான மதகுருமார்கள் முஸ்லிம் சமுதாயத்திலும் புகுந்து அன்றே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது. நபி(ஸல்) அவர்களின் தெளிவான, நேரடியான வழிகாட்டல், கட்டளை இருக்கும் போது அதற்கு மாறான உமர்(ரழி) அவர்களின் நடைமுறை மார்க்கமாகாது.

எனவே 731வது ஹதீஃது கூறும் ரமழான் இரவுத் தொழுகையை, வீட்டில் நடுநிசியில் எழுந்து 8+3=11 ரகாஅத்துகள் தொழுவதே சிறப்பாகும். நபி வழியாகும். முஸ்லிம்கள் சஹர் செய்ய இரவில் எழுவது கட்டாயமே. 1 மணி நேரம் முன்னதாக எழுந்து நல்ல முறையில் ஒளூ செய்து கொண்டு நிம்மதியாகத் தங்களுக்குத் தெரிந்த குர்ஆன் வசனங்களை ஓதி 8+3 ரகாஅத்துகள் தொழுவதே அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும். நபிவழியைப் பேணுவோமாக. அதுவே நேர்வழியாகும்.

இமாம் அபூ ஹனீஃபா(ரஹ்) அவர்களின் கருத்து :

இமாம் அபூ ஹனீஃபா(ரஹ்) அவர்களது பார்வையில் ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்) 8 ரக்அத்துக்கள் மட்டும் தான், 20 ரக்அத்துகள் என்பதற்கு அவர்கள் புறத்திலிருந்து ஒரு சிறு ஜாடயையும் காணமுடியவில்லை என்பதற்கு பதாவாயே சுபுக்கி பக்கம் 166-ல் காணப்படும் ஒரு சம்பா­னை சான்று பகர்கின்றது. இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மாணவர் இமாம் முஹம்மது(ரஹ்) அவர்கள் தமது முஅத்தாவின் 141-ம் பக்கத்தில் ரமழான் இரவுத் தொழுகை பாடத்தில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களால் ரிவாயத்து செய்யப்படுகின்ற 11 ரக்அத்துக்களையே பதிவு செய்துள்ளார்கள். அந்தப் பாடத்தில் 20 ரக்அத்துக்களுக்கான ஹதீஃத் ஒன்று கூட இல்லை. ரமழான் இரவுத் தொழுகைக்கு இந்த 11 ரக்அத்துக்கள் ஹதீஃதையே நாம் ஆதாரமாக எடுத்திருக்கிறோம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இமாம் தஹாவீ(ரஹ்) அவர்கள் ­ரஹ் மஆனி ஆதார் பாகம் 2, பக்கம் 334-ல் இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களின் பார்வையில் 8 ரக்அத்துக்களுக்கு மேல் அதிகப்படுத்துவது மக்ரூஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் அபிப்பிராயம்:

ஹாபிழ் சுயூத்தி(ரஹ்) அவர்கள் தனது கிதாபு மஸாபீஹின் 76ம் பக்கத்தில், இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் உமர்(ரழி) அவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த ரக்அத்துகள் எனக்கு மிகவும் பிரிய மானவை, அவை 11 ரக்அத்துக்களாகும், மேலும் 13 இதற்கு நெருக்கமானது. ஆனால், ஜனங்கள் இந்த அளவு அதிக ரக்அத்துகளை எங்கிருந்து பெற்றார் கள்? என்பது தெரியவில்லை என்று குறிப்பிடுவதாக அறிவிக்கிறார்கள்.

இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் அபிப்பிராயம் : இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் மக்கா, மதீனாவின் நடைமுறை காரணமாக 20 ரக்அத்துகள் முஸ் தஹப் என்று தனது கிதாப் உம்மில் பதிவு செய்துள் ளார்கள். ஆயினும் ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரக்அத்துகள் ஹதீஃதையே ஆதாரமாக எடுத்திருக் கிறார்கள்.

முஸ்லிம் பாகம்1 பக்கம் 254-ல் காணப்படும் ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரக்அத்துகள் விஷயமாக இமாம் நவவீ(ரஹ்) இந்த ஹதீஃதை வைத்து கிராஅத், கியாம் (நிலை) நீட்டமாக இருப்பதற்கு ஆதாரம் கிடைக்கிறது. ரக்அத்துகளை அதிகப்படுத் துவதைவிட கிராஅத், கியாமை நீட்டுவது சிறந்தது என்று குறிப்பிடுகிறார்கள்.

இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்) அவர்களின் அபிப்பிராயம் :

இமாம் இப்னுகுதாமா(ரஹ்) தனது மூன்றாவது கிதாப் மஆனியின் பாகம் 2 பக்கம் 123ல், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) 20 ரக்அத்துகள் என்று முடிவு எடுத்திருந்தார்கள் என்று குறிப்பிடுகின்றார். ஆனால் இக்கூற்று முற்றிலும் ஆதார மற்றது, தவறானது, காரணம் இப்னு குதாமா(ரஹ்) அவர்கள் இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களுக்கு சில நூறு வருடங்கள் கழித்து ஹிஜ்ரி 541-ல் ஜமாயீல் என்ற கிராமத்தில் பிறந்திருக்கிறார்கள். இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க முடியாது. இந்தச் செய்தி கிடைத்த வழியையும் அவர்கள் குறிப்பிடவில்லை.

இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தனது ­ரஹுஸ் ஸுன்னத் பாகம் 4, பக்கம் 123-ல் தெளிவாக, இமாம் அஹ்மது(ரஹ்) ரமழான் தொழுகை வி­யமாக இத்தனை ரக்அத்துகள் என்று குறிப்பிடவில்லை. அது விஷயமாக முடிவு செய்வதற்கு எவ்வித அவசியமும் ஏற்படவில்லை. ஏனென்றால் ரமழான் இரவுத் தொழுகை 11 ரக்அத்துக்கள்தான் என்ற ஹதீஃதை அவர்களது கிதாப் முஸ்னது அஹ்மதில் ரிவாயத் செய்துள்ளார்கள் என்று பதிவு செய்துள்ளார்கள்.

மார்க்கத்தில் அதிகப்படுத்தலாமா?

அடுத்து, நபி(ஸல்) அவர்கள் தொழுதது 8+3 ரக்அத்துகள் என்பது சரிதான். ஆனாலும் ரமழான் மாதத்தில் இரவு காலங்களில் அதிக ரக்அத்துகள் தொழுவது நல்லதுதானே? அதிலே என்ன கெடுதி இருக்கிறது? நன்மைதானே என்று இறுதியாக சப்பைக்கட்டுக் கட்டுகிறார்கள்.

அப்சோஸ்! முஸ்லிம் சமுதாயம் இந்த அளவில் வழிகேட்டில் போய்விட்டதே என்று கைசேதப்படு வதைத் தவிர வேறு வழியில்லை. நபி(ஸல்) அவர்களால் பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று தெளிவாக இனம் காட்டப்பட்டவை, நாம் நினைப்பது போல் கடிகாரம் கட்டுவதோ கான்கிரீட் கட்டிடத்தில் வசிப்பதோ, பிளேனில் பறப்பதோ அல்ல. மார்க்கத்தில் நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தோடு நபி(ஸல்) அவர்களால் காட் டித்தரப்படாத அமல்களைச் செய்வதும், அதிகப் படுத்துவதும் தான் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் என்று புரிந்து கொள்ளப்போகிறதோ தெரிய வில்லை, அதுவரை முஸ்லிம்களுக்கு விமோசனமும் இல்லை. கீழே குறிப்பிடப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களை நன்கு நோட்டமிட்டு நன்மை என்று மார்க்கத்தில் அதிகப்படுத்தலாமா? என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

ஒரு காட்டரபி நபி(ஸல்) அவர்களிடம் வந்து உளூவின் விவரத்தைக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று முறைகளாக உளூ செய்து காட்டி, இவ்விதமாகத்தான் உளூ செய்ய வேண்டும் என்று கூறி, பின்னர் எவர் இதைவிட அதிகமாகச் செய்கிறாரோ, அவர் நிச்சயமாகத் தீமையைச் செய்தவராகவும், அளவு மீறியவராகவும், அநியாயம் செய்பவராகவும் ஆவார் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரழி), நூல் : அபூதாவூது, நஸயீ.

நீண்டதொரு ஹதீஸின் இடையில், நற்செயல்களில் எனக்கு மாறு செய்வதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் நபி தோழர்களிடம் உறுதிப்பிரமாணம் வாங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவிப்பவர் : உபாதா, இப்னு ஸாமித்(ரழி), ஆதாரநூல் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதி, நஸயீ.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் அபூ மூஸா(ரழி) அவர்களிடம் உங்கள் தந்தையாரிடம் என் தந்தை என்ன கூறினார்கள் என்பதை தாங்கள் அறிவீர்களா? என்று ஆரம்பிக்கும் மற்றொரு நீண்ட ஹதீஃதில், இறுதியில் உமர்(ரழி) அவர்கள், எவன் வசம் உமருடைய உயிர் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! மெய்யாகவே நாம் நபி(ஸல்) அவர்களுடன் செய்தவை அனைத்தும் நமக்குப் பலன் அளிக்க அப்படியே இருந்து, அவர் களுக்குப் பின்னர் நாம் செய்த எல்லாச் செயல்களும் நம்மை வேதனையை விட்டும் காக்க முழுக்க முழுக்க போதுமானவையாக இருந்துவிடாதா என நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபூபுர்தா அமீர் இப்னு அபீமூஸா, ஆதார நூல் : புகாரி.

நபி(ஸல்) அவர்கள் செய்ததற்குமேல் செய்ததை உமர்(ரழி) அவர்கள் எந்த அளவு பயந்துள்ளனர் என்பதை இந்த ஹதீஃத் தெளிவுபடுத்துகிறது. இந்த நிலையில், அவர்கள 20 ரக்அத்துகள் தொழுதார்கள் என்பது சரிதானா என்பது சிந்தனைக்குரியது.

எவரும் நம் மார்க்கத்தில், மார்க்கத்தில் இல்லாதவற்றைப் புதிதாக உண்டாக்கினால், அவை மறுக்கப்பட வேண்டியவையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) ஆதார நூல் : புகாரி, முஸ்லிம்.

ஹஜ்ஜில் கல் எறிவது சம்பந்தமான ஹதீஃதில், இவ்விதமான கற்களாகவே இருக்கவேண்டும். மேலும் நான் உங்களுக்கு அச்சமூட்டுகிறேன். நீங்கள் மார்க்கத்தில் அளவுக்கு மீறிச் செய்லாற்றுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக உங்களுக்கு முன்னுள்ளோர் தங்களின் மார்க்கத்தில் அளவுக்கு மீறியதால் அழிந்துபட்டனர் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி), ஆதார நூல் : நஸயீ.

நபி(ஸல்) அவர்களின் மனைவியின் இல்லத்திற்கு மூவர் சென்று நபி(ஸல்) அவர்களின் வணக்க முறையைப் பற்றி அவர்களிடம் விசாரித்தனர். அதற்கு விடையளிக்கப்பட்டபோது அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்கத்தை மிகக் குறைவாக மதிப்பிட்டு, நாம் அவர்களுடன் சமமாக வணங்க எவ்விதம் சாலும்? அவர்களுடைய முன்பின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு இருக்கின்றனவே என்று தம் மனதிற்குள் எண்ணிக் கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர், நான் நாள்தோறும் இரவு முழுவதும் தொழுது வருவேன் என்றார். மற்றொருவர் நான் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பேன், நோன்பின்றி ஒரு நாளும் கழிக்கமாட்டேன் என் றார். மூன்றாமவர், நான் ஒருபோதும் மணமுடிக்க மாட்டேன், பெண்களை விட்டு ஒதுங்கி இருப்பேன் என்றார்.

இதற்குள் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்து விட்டார்கள். நீங்கள் தாமா இன்ன இன்ன விதமாக வெல்லாம் கூறிக் கொண்டிருந்தீர்கள்? என்று வினவி விட்டுக் கூறினர். அறிந்து கொள்ளுங்கள், இறைவன் மீது ஆணையாக, நான் உங்களைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவனாகவும், மிகவும் தூய்மை யானவனாகவும் உள்ளேன். எனினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். நோற்காமலும் இருக்கிறேன். தொழவும் செய்கிறேன், தூங்கவும் செய்கி றேன், திருமணமும் செய்துள்ளேன். எனவே எவரேனும் என் வழியைப் புறக்கணிப்பின் அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று அருளிச் செய்தனர். அறிவிப்பவர் : அனஸ்(ரழி), ஆதார நூல் : புகாரி, முஸ்லிம், நஸயி.

மக்கா மாநகரம் வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அங்கு சென்றனர். குராவுல் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் ஒரு கோப்பை தண்ணீர் கொணரச் செய்து அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்களும் அதைக் கண்ணுற்ற பின் அதனைப் பருகினர். இதன்பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அத்தகையோர் பாவி களே, அத்தகையோர் பாவிகளே, என்று கூறினர். அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி), ஆதார நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ.

இந்த ஹதீஃத்களை எல்லாம் பார்வையிட்ட பின் னரும், நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு நல்ல அமல் இருக்கிறது என்று நம்புகிறவர்கள், நிச்சயமாக ஷைத்தானின் வலையில் சிக்குண்டிருக்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. இதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் மீது அவர்கள் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை முழுமையாகக் கற்றுத்தரவில்லை, மறைத்து விட்டார்கள், சொன்னதைச் செய்து காட்டவில்லை, தான் செய்யாததை மக்களுக்கு உபதேசித்து இருக்கிறார்கள், இப்படிப்பட்ட பல குற்றச்சாட்டுகளை நபி(ஸல்) அவர்கள் மீது, தாங்கள் அதிகமாகச் செய்யும் செயல்களைக் கொண்டு சுமத்துகிறவர்கள், எப்படி நேர்வழி நடக் கக்கூடியவர்களாக இருக்க முடியும்?

நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை நிறைவாகக் கற்றுத்தந்து விட்டார்கள். எதனையும் மறைக்க வில்லை, சொன்னதையே செய்துகாட்டினார்கள், குர்ஆனின் வாழ்க்கையை முழுமையாக பிரதிபலித் தார்கள் என்று பூரணமாக நம்புகிறவர்கள், நபி(ஸல்) அவர்கள் செய்ததற்கு மேல் ஒரு அணுவத்தனையையும் நன்மை என்று ஒருபோதும் செய்யமாட்டார்கள். தொழுகையாக இருக்கட்டும், திக்ராக இருக்கட்டும், எதுவாக இருக்கட்டும் நபி(ஸல்) அவர்கள் எதை எப்படி எந்த அளவு செய்து காட்டினார்களோ அதை அப்படியே அந்த அளவு மட்டுமே செய்வது கொண்டு திருப்தி அடைவார்கள். அதுவே பூரண மான மார்க்கமென்று உறுதியாக நம்புவார்கள். அல்லாஹ்(ஜல்) அந்த நல்ல கூட்டத்தில் நம்மையும் இணைத்து வைப்பானாக ஆமீன்.

மார்க்கத்தில் அதிகப்படுத்துதல் ஏன் ஏற்பட்டது?

மார்க்கத்தில் அதிகப்படுத்துதல் ஏன் ஏற்பட்டது என்று ஆராயும்போது ஓர் உண்மை தெளிவாகின் றது. மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்டவர் களின்சதியே இது என்று புலப்படுகிறது. அரசு அலு வலகத்தில் ஒருவருக்கு ஒரு வேலை, ஆபீஸர் ஒரு கையயழுத்துத்தான் போடவேண்டும். ஆனால் ஏதோ காரணங்களைச் சொல்லி நாளை வா நாளை வா என்று அலைய விடுகிறார். அந்த ஒருவருக்கு சிரமமாகத தெரிகின்றது; பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டுகிறார். ஆபீஸர் உடனே கையயழுத்துப்போட்டு கொடுத்து விடுகிறார். ஆபீஸர் அலையவிட்டு சிரமத்தைக் கொடுத்ததன் நோக்கம் புரிகிறதா? உடனே கையயழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டால், ஆபீஸருக்கு ஆதாயம் இல்லை. அவர் ஆதாயத்திற்காக எளிதான வேலை யைக் கஷ்டமானதாகக் காட்டுகிறார்.

இதேபோல், மார்க்கம் உள்ளது உள்ளபடி இருந்தால், முஸ்லிம்கள் அனைவருக்கும் கடைபிடிக்க எளிதாக இருக்கும். முஸ்லிம்கள் அனைவரும் மார்க் கத்தை எளிதாகக் கடைபிடித்தால், இந்த இடைத்தரகர்களுக்கு-மவ்லவிகளுக்கு ஆதாயம் இல்லாமல் போய்விடும். இவர்களுக்கு ஆதாயம் கிடைப்பதாக இருக்க வேண்டுமானால், மார்க்கம் மக்களுக்கு கஷ்டமாகத் தோன்ற வேண்டும். அப்படியானால் தான், குறுக்கு வழியில் நன்மைகளை அடைந்து கொள்ள இந்த இடைத்தரகர்களை நாடுவார்கள். ஆக, தங்கள் உலக ஆதாயத்தைக் கருதி, இந்த இடைத்தரகர்களை நம்ப வைத்து விட்டார்கள். எளிதான தொழுகையைக் கஷ்டமானதாகக் காட்டி, முஸ்லிம்களில் பெரும்பாலானோரைத் தொழாதவர்களாக ஆக்கி, தொழாதவர்களும் முஸ்லிம்களாக இருக்கமுடியும் என்று குர்ஆனுக் கும், ஹதீஃதுக்கும் மாற்றமாக சட்டமும் அமைத்துக் கொண்டார்கள்.

தொழாதவனுக்கும், இஸ்லாத்திற்கும் சமபந்தம் இல்லை என்ற ஹதீஃதை உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டால் யாரும் தொழாமல் இருக்கப் போவதில்லை. தொழாத முஸ்லிம் இல்லை என்றால் இந்த இடைத்தரகர்கள் மார்க்கத்தில் இல்லாத கத்தம்-பாத்திஹா, கபுருச் சடங்குகள், மீலாது, மெளலூது, புருடா, ஷபே மிஃராஜ், ஷபே பராஅத் இப்படிப்பட்ட சடங்குகள் மூலம் இஸ்லாத்தின் பேரால் பிழைப்பு நடத்த முடியாது. பெயரளவில் முஸ்லிம்கள் என்று இருந்து கொண்டு, இவர்களது வலையில் சிக்கி இவர்களுக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருக்க ஒரு பெருங்கூட்டம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே மார்க்கத்தில் இல்லாததை எல்லாம் உள்ளது என்று அதிகப்படுத்தி எளிதான மார்க்கத்தைக் கஷ்டமானது என்று அப்பாவி முஸ்லிம்களை நம்ப வைத்திருக்கிறார்கள். இவர்களின் இந்த வேஷங்களைக் கலைக்கவே, நஜாத் பவனி வர ஆரம்பித்துள்ளது.

ரமழான் மாதம் சிறிது நோட்டமிட்டுப் பாருங்கள். இருபத்தைந்தாயிரம் தர வேண்டும். இருபதாயிரம் தந்தால்தான் தொழவைக்க முடியும், பதினைந்தாயிரமாவது தரவேண்டும். இப்படிப்பட்ட பேரங்கள் நாடெங்கும் நடைபெறுவதைக் காண் கிறோம். காணலாம்?

ஆம்! குர்ஆனின் வசனங்களுக்கு மாற்றமாகவே குர்ஆன் விலை பேசப்படும். அல்லாஹ்வுக்காகத் தொழவைப்பதற்கு இந்த இழிவான பேரமா? என்று எப்போதாவது அவர்களில் யாராவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? அப்பாவி முஸ்லிம்களை இந்தப் போலி ஆலிம்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா? முஸ்லிம்களே சிந்தியுங்கள்.

நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா? மஃறிபா?

இப்னு ஹத்தாது

நாளின் ஆரம்பம் ஃபஜ்ராக இருந்தால் முதலில் பகல், அடுத்து வருவது இரவு; மஃறிபாக இருந்தால் முதலில் இரவு அடுத்து வருவது பகல். இப்போது கீழ்க்காணும் குர்ஆன் வசனங்கள் பகலுக்குப் பின் இரவு என்கின்றனவா? அதற்கு மாறாக இரவுக்குப் பின் பகல் என்கின்றனவா? நீங்களே படித்து அறியுங்கள்!

1. சூரியன் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தத்தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (36:40)

2. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக, அதைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக, பகல் வெளியாகும் போது, அதன் மீதும் சத்தியமாக, இரவு மூடிக் கொள்ளும் போது அதன்மீதும் சத்தியமாக! (91:1-4)

3. ….சந்திரன் மீது சத்தியமாக, பின்தொடரும் இரவின் மீது சத்தியமாக வெளிச்சமாகும் விடியற் காலையின் மீது சத்தியமாக. (74:32-34)

4. அவனே இரவைப் பகலால் மூடுகிறான். இவற் றில் சிந்திக்கும் மக்களுக்கு நிச்சயம் பல சான்றுகள் உள்ளன. (13:3)

5. அவனே இரவால் பகலை மூடுகிறான். அது விரைவாக அதை (பகலை) பின்தொடர்கிறது. (7:54)

6. நிச்சயமாக இதை(குர்ஆனை) கண்ணியமிக்க ஒரு நாளில் இறக்கினோம். கண்ணியமிக்க நாள் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க நாள் ஆயிரம் மாதங்களை விட மிகச் சிறந்ததாகும். அதில் வானவர்களும் ஜிப்ரயீலும் தம் இரட்சகனின் கட்டளையின்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகிறார்கள். அமைதி நிலவியிருக்கும் அது(அந்நாள்) அதி காலை வரை இருக்கிறது. (97:1-5)

இங்கு நாள் என்பதை இம்மூட முல்லாக்கள் இரவு என மொழி பெயர்த்து அவர்கள் வழிகெடுவ தோடு, அவர்களை நம்பி அவர்களைத் தக்லீது செய்யும் அப்பாவி முஸ்லிம்களையும் யூதர்களின் வழியில் பெரும் வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்கள். பின்னர் அது பற்றிச் தெளிவாக விளக்குவோம்.

7. தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணுங்கள், அல்லாஹ்வின் முன்பு உள்ளச்சத்துடன் நில்லுங்கள். (2:238)

நடுத்தொழுகை அஸர் தொழுகைதான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, அவர்களது மனைவிமார்களும், நபிதோழர்களும் அறிவித்த பல ஹதீஃத்கள், உறுதிப்படுத்துகின்றன.

அடுத்து நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான் என்பதை உறுதிப்படுத்தும் ஹதீஃத்கள் வருமாறு :

1. உங்களில் ஒருவர் திட்டமிட்டுத் தம் மனைவியை அடிமையை அடிப்பது போல் அடிக்கிறார். பின்னர் அந்நாளின் ஒரு பகுதியான இறுதியில்-இரவில் அவளுடன் (பாலுறவுக்காக) அவர் படுக்க நேரலாம். அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ (ரழி), புகாரீ : 4942

2. நபி(ஸல்) ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப் பேன். ஸுப்ஹு தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஆயிஷா(ரழி) புகாரீ: 2033

3. …உங்களின் (நாளின்) கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். இப்னு உமர்(ரழி) புகாரீ 998.

4. ,,,,உங்களின் கடைசி தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். இப்னு உமர்(ரழி) புகாரீ 472.

5. ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 9-ல் அரஃபா மைதானத்தில் இருந்தால் தான் அவர்களது ஹஜ் நிறைவேறும். ஹஜ்ஜுக்காக வந்தவர்கள் ஏதோ இடையூறு காரணமாக பிறை 9 பகலில் அரஃபா மைதானத்தை அடைய முடியவில்லை. ஆயினும் மஃறிபுக்குப் பிறகானாலும் அன்றைய பஜ்ருக்குள் அரஃபா மைதானத்தை அடைந்துவிட்டால் அவர்களது ஹஜ் நிறைவேறிவிடும்.

இப்போது சிந்தியுங்கள். இந்த மூடமுல்லாக்களின் வாதப்படி பிறை 8 மாலை மஃறிபிலிருந்து துல்ஹஜ் பிறை 9 அரஃபாவுடைய நாள் ஆரம்பித்து பிறை 9 மாலை மஃறிபுடன் 24 மணி நேரம் கொண்ட அரஃபா நாள் முடிவு பெறுகிறது. இந்த மவ்லவிகளின் மூடத்தனமானக் கருத்துப்படி பிறை 9-ன் மஃறிபோடு அரஃபா தினம் முடிவுற்றது. 10-ம் நாள் அறுப்பின் தினம் ஆரம்பித்து விடுகிறதே! அப்படியானால் பிறை 9 மாலை மஃறிபுக்குப் பிறகு அரஃபா மைதானத்தை அடைபவர்களுக்கு ஹஜ் எப்படி நிறைவேறும்? சிந்தியுங்கள்!

இந்த மூட முல்லாக்கள் சொல்வது போல் நாள் மஃறிபில் அல்ல; ஃபஜ்ரில் ஆரம்பிக்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லையா?

இதுவரை இங்கு நாம் எழுதி இருப்பவை 33:36 வசனத்தை நிராகரித்து பகிரங்கமான வழிகேட்டிலாகியோ, 2:159 இறைவாக்கை நிராகரித்து எமது சுயவிளக்கங்களையோ, மேல் விளக்கங்களையோ தரவே இல்லை. குர்ஆன் வசனங்களையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் மட்டுமே எடுத்துத் தந்திருக்கிறோம். ஆனால் மார்க்கத்தை கொடும் ஹராமான வழியில் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள இந்த அறிவில்லா மவ்லவிகளுக்கு 17:41, 45-47,89. 22:72, 25:60, 39:45 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல், குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனைகள் எட்டிக்காயாகக் கசக்கவே செய்யும் என்பதை மறுக்க முடியுமா? ஒருபோதும் முடியாது.

இந்த அடிப்படையில் இந்த மவ்லவிகள் குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்துக்களை மறுத்து அவர்கள் எடுத்து வைக்கும் 33:36 வசனம் கூறும் வேறு அபிப்பிராயங்கள் சுய கருத்துக்கள் வருமாறு:

நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்பது நபி(ஸல்) காலத்திலிருந்தே இருந்து வருகிறது. அது எப்படித் தவறாகும்? நபி(ஸல்) அவர் காலத்திலேயே அரபு நாட்டில் ஏன் கஃபத்துல்லாஹ்விலேயே சிலை வணக்கம் இருந்தது. அது எப்படித் தவறாகும் என்று காவி மதகுருமார்கள் கேட்பதற்கும், இந்த முஸ்லிம் மதகுருமார்கள் கேட்பதற்கும் வேறுபாடு உண்டா? இரு சாராரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!

நபி(ஸல்) காலமென்ன, அதற்கும் 1000 வருடங்களுக்கு முன்பிருந்தே கி.மு. 383லிருந்தே யூதர்களிடம் நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற மூட நம்பிக்கை காலம் காலமாக இருந்து வரத்தான் செய்கிறது. இன்றும் அவர்களின் மதச் சடங்குகளில் இருக்கத்தான் செய்கிறது. பார்க்க அவர்களின் வலை தளங்கள்.

நபி(ஸல்) அவர்கள் இந்த மூட நம்பிக்கையை ஏற்று ஆதரித்தார்களா? அதற்கு இந்த மவ்லவிகளிடம் ஆதாரம் உண்டா? ஒரேயொரு ஆதாரத்தையாவது காட்டமுடியுமா? அதற்கு மாறாக எப்படித் தினசரி சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து ஐங்கால தொழுகைகளின் நேரத்தை அறிந்து தொழுது வந்தார்களோ, அதேபோல் சந்திரனின் ஓட்டத்தையும் தினசரி பார்த்து சந்திர மாதத்தின் தேதிகளை அறிந்து வந்தார்கள். அப்படித் தினசரி பார்த்து வரும்போது மாதத்தின் கடைசி நாளுக்கு (சங்கமம்) முதல்நாள் குர்ஆன் 36:39 இறைவாக்குக் கூறும் கண்ணுக்குத் தெரியும் இறுதிப் பிறையை (உர்ஜூனில் கதீம்) சூரிய உதயத்திற்கு முன் கிழக்கில் பார்த்து வந்ததுதான் இந்த 36:39 இறைவாக்கின் மூலம் உறுதியாகிறது. அடுத்த நாள் பிறை மறைக்கப்படும் நாள் (கும்ம) என்றும் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள் என்று முடிவு செய்ததற்குரிய ஆதாரங்களே கிடைக்கின்றன.

நம் நாட்டிலுள்ள ஹிந்து மக்கள் கூட சந்திரன் மறைக்கப்படும் (கும்ம) நாளை அமாவாசை என்றும், அதற்கு அடுத்த நாளை பிரதமை அதாவது மாதத்தின் முதல் நாள் என்றும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். முஸ்லிம் மூட மவ்லவிகள் மட்டுமே பிரதமை என்பதைப் பாட்டிமை என திரித்து வளைத்துக் கூறி (பார்க்க : 2:159, 33:36) மாதத்தின் 3-ம் நாளை 1-ம் நாள் எனக் கூறி முஸ்லிம்களை வழிகேட்டில் இட்டுச் செல்கின்றனர். சந்திர மாதத்தைக் கணக்கிடுவதில் ஹிந்துக்களும், ஹிந்து மதகுருமார் களும் மிகச் சரியாக இருக்கின்றனர்.

முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளும், அவர்களை தக்லீது செய்யும் முஸ்லிம்களும், யூதர்களை தக்லீது செய்து கி.மு. 383-லிருந்து கடை பிடித்து வரும் மாதத்தின் 3-ம் நாளை முதல் நாளாகக் கொள்ளும் மிகப் பெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள். இந்த மவ்லவிகளின் வழிகேட்டின் உச்ச நிலையை அவர்களின் குருட்டுக் கணிப்பின் படி மாதத்தின் நடுப்பகுதியில் இடம்பெறும் சந்திர கிரகணம் பிறை 12-ல் இடம் பெறும் அவலமும், மாதத்தின் இறுதியில் இடம் பெறும் சூரியகிரகணம் பிறை 27 அல்லது 28-ல் இடம் பெறும் அவலமும் சுய சிந்தனையாளர்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

இந்த வழிகேடு காலையில் உதித்து மாலையில் மறையும் இரண்டாம் பிறையைக் கண்ணால் பார்த்து விட்டு பிறை பிறந்துவிட்டது. நாள் ஆரம்பித்து விட்டது; நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூட நம்பிக்கையில் பிறந்ததே. பிறை மேற்கில் பிறந்து கிழக்கில் மறைகிறது என்று ஆணவத்துடன் கூறும் வடிகட்டின மூடர்களுக்கு நேர்வழி எங்கே தெரியப்போகிறது? சூரியனும், சந்திரனும் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்றன. ஒவ்வொன்றும் உதித்து மறைய சுமார் 12 மணி நேரம் எடுக்கும் என்ற உண்மையும் இந்த மூட முல்லாக்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான் மாலையில் மறையும் பிறையைப் பார்த்து விட்டுப் பிறை பிறந்துவிட்டது; நாள் ஆரம்பித்துவிட்டது என்று மூடத்தனமாகப் பிதற்றுகிறார்கள். (பார்க்க : 7:146)

அடுத்து நாள் மஃறிபில்தான் துவங்குகிறது என்ற மூட நம்பிக்கையை நிலைநாட்ட இந்த மூட முல்லாக்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் சில பலவீனமான ஹதீஃத்கள் மட்டுமே; மற்றபடி குர்ஆன் அல்ல, ஹதீஃத் அல்ல, அஃதரும் அல்ல, அஃதர் என்று சொல்லக்கூட தகுதியற்ற தாபியீன்களின் அறிவிப்புகள். இந்த இடத்தில் பொய்யன் பீ.ஜையின் வழி கேட்டின் ஆழத்தை மக்கள் மன்றத்தில் வைத்துத் தான் ஆக வேண்டும்.

பொருள் கைக்குக் கிடைத்து ஒரு வருடம் நிறைவு பெற்றால் தான் ஜகாத் கடமை. மேலும் வருடா வருடம் அப்பொருளுக்கு ஜகாத் கடமை என்று நபி(ஸல்) பிரசாரப்பணியை ஆரம்பித்த 40வது வயதிலிருந்து மரணித்த 63 வயது வரை நபி(ஸல்) கூடவே இருந்து அவர்களின் அன்றாட அலுவல்களை பார்த்த, ஜகாத்தை எப்படி வசூலித் தார்கள் என்று வருடாவருடம் கண்கூடாகப் பார்த்த உமர் (ரழி), அலீ(ரழி) சொல்வது மார்க்க ஆதாரம் இல்லையாம். அவர்கள் நபி(ஸல்) சொல்லாததைச் சொல்கிறார்களாம். அதற்கு மாறாக கலீஃபா அல்ல, நபி தோழர் அல்ல, ஒரு தாபியீ நபி(ஸல்) காலத்தில் நடந்த ஒரு சம்பவமாக இரு கிராமவாசிகள் வந்து “நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம்” என்று சொன்ன குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களுக்கும் முரணான செய்தி, உமர்(ரழி), அலீ(ரழி) இருவரையும், பொய் யர்களாக்கும் பொய்யன் பீ.ஜை.க்குப் பெரிய ஆதாரமாம். இதிலிருந்தே அவர் மாபெரும் வழிகேட்டின் உச்சியில் இருப்பதை அவரை தக்லீது செய்யாமல் சுயமாகச் சிந்திப்பவர்கள் எளிதாக விளங்க முடியும். ஆக இந்த மவ்லவிகள் யூத மதக் கலாச்சாரத்தை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றி நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்று சொல்கிறார்களே அல்லாமல், குர்ஆன், ஹதீஃத் ஆதாரப்படியல்ல.

கேவலம், தங்களின் பெரும் பொய்யான வாதத்தை நிலைநாட்ட 2:159, 33:36 வசனங்களைக் கண்டுகொள்ளாமல் அவற்றை நிராகரித்து குஃப்ரி லாகி 97:1-3 மூன்று வசனங்களில் இடம் பெறும் லைலத் என்ற பதத்திற்கு நாள் என்று மொழி பெயர்க் காமல் இரவு என்று வம்படியாக மொழி பெயர்த்து அவர்களும் வழிகெடுவதோடு, அவர்களை தக்லீது செய்யும் மக்களையும் வழிகெடுக்கிறார்கள்.

அல் யவ்ம வல் லைலத் என்று கூறும்போது பகல், இரவு என்று பொருள்படும். யவ்ம் என்று தனித்து எழுதப்பட்டால் அது நாளைக் குறிப்பது போல், லைலத் என்று தனித்து எழுதப்பட்டால் அது பெரும்பாலும் நாளையே குறிக்கிறது. இதற்கு குர்ஆன் 3:41 இடம்பெறும் ஃதலாஃதத்த அய்யாம்- மூன்று நாட்கள் என்று நாளைக் குறிக்கும் அதே விஷயம் 19:10ல் ஃதலாஃதலயாலின்-மூன்று நாட்கள் என்று குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது உறுதிப்படுத்துகிறது.

மேலும் 2:51 இறைவாக்கிலுள்ள அர்பயீன லைலத்-நாற்பது நாட்கள் என்ற நாட்களையே குறிக்கிறது. அது நாற்பது இரவுகளாக இருந்தால் மூஸா(அலை) பகலில் மலை அடிவாரத்தில் இருந்த தன் சமூகத்தோடு இருந்திருக்க முடியும். அவரது சமூகம் காளைக் கன்றைக் கடவுளாக வணங்கும் ஷிர்க்கான நிலை ஏற்பட்டிருக்க முடியாது. இதே போல் 97:1-3 இறைவாக்குகளிலுள்ள லைலத் பதம் நாளைக் குறிக்கிறதே அல்லாமல் இந்த மூட முல்லாக்கள் பிடிவாதம் பிடிப்பது போல் இரவை அல்லவே அல்ல.

சாதாரண, நடுத்தர அறிவையுடையவனும் 97:1-3ல் இருக்கும் மூன்று லைலத் பதங்களும் நாளைக் குறிக்கிறது என்பதை மிக எளிதாக விளங்க முடியும். லைலத்துல் கத்ர் இரவாக இருந்தால் அது மஃறிபிலிருந்து சூரிய உதயம் வரை 12 மணி நேரம் இருக்க வேண்டும் ஃபஜ்ருடன் அது முடிய முடியாது. அதாவது இரவு 10¾ மணி நேரத்துடன் முடியவே முடியாது. இவர்களின் வாதப்படி லைலத்துல் கத்ர் 10¾ மணி நேரம் மட்டுமே இருந்தால் உலகின் எஞ்சியுள்ள 13¼ மணி நேரத்திலுள்ள மக்களுக்கு லைலத்துல் கத்ர் என்ற பாக்கியம் இல்லையா? அவர்கள் இரவை அடையும்போது அவர்களுக்கும் லைலத்துல் கத்ரின் பாக்கியம் கிடைக்கவே செய்யும் என்பது இந்த மூட முல்லாக்களின் பதில் என்றால் 10¾ +13¼ =24 ஆக அது ஒருநாள் என்பதைக் கூட அறிய முடியாத மக்கு மண்டூகங்களா ஆலிம் என்று பெருமை பேசும் மவ்லவிகள்.

இந்த மூட முல்லாக்கள் 97:1-3 மூன்று இடங்களில் வரும் லைலத்துல் கத்ர்-இரவை அல்ல நாளையே குறிக்கிறது என்ற உண்மையை ஒப்புக் கொண்டால் நாள் ஃபஜ்ரில் ஆரம்பித்து ஃபஜ்ரில் முடிகிறது; மஃறிபில் ஆரம்பித்து மஃறிபில் முடிகிறது என்ற யூதர்களின் நடைமுறை பெரும் தவறு வழிகேடு என்பதை எளிதாக உணர முடியும். ஆனால் இந்த மவ்லவிகளின் வீண் பெருமையும், ஆணவம், அகங்காரம் காரணமாக அல்லாஹ்வே அவர்களை குர்ஆனை விட்டும் திருப்பிவிடுகிறான். குர்ஆன் வசனங்களை நேரடியாகக் காட்டினாலும் ஏற்க மாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாக மக்களுக்குப் போதிப்பார்கள். அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் நேர்வழியை மறுக்கிறார்கள் என்பதை நீங்களே 7:146, 27:14, 4:44 குர்ஆன் வசனங்களைப் படித்து நேர்வழியை அறிந்து கொள்ளுங்கள். 

பொய்யன் பீ.ஜை. வீம்பாக, சாப்பிடுவது என்றால் வாயால் மட்டுமே என்பது போல் பார்ப்பது என்றால் கண்ணால் மட்டுமே என்று மூடத்தனமாகப் பிதற்றுவது போல், நாம் லைலத் என்றால் நாள் மட்டும்தான் என்று பிதற்றவில்லை. சில இடங்களில் இரவு என்ற பொருளும் உண்டு. 2:187ல் வரும் லைலத் இரவையே குறிக்கிறது என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம்.

சகோதர சகோதரிகளே, இந்த மூட முல்லாக்களை தக்லீது செய்வதை விட்டு தெளபா செய்து நீங்களே இந்த கட்டுரையிலுள்ள குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்துப் பார்த்து அதன்படி நடந்து வெற்றி பெற முன் வாருங்கள். அல்லாஹ் அருள்புரிவானாக.

கணக்கீட்டின்படி பிறையா? கண் பார்வைப்படி பிறையா?

– அபூ அப்திர்ரஹ்மான்

நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள் ஆலிம்கள், மவ்லவிகள் என வீண் பெருமை பேசும் மவ்லவிகள் (பார்க்க : 7:146) தலைப் பிறையை மேற்கில் சூரியன் மறைந்தபின் பார்த்துப் பிறைப் புறக்கண்ணுக்குத் தென்பட்டால் மட்டுமே மாதத்தைத் துவங்க வேண்டும். இன்றைய நவீன கண்டுபிடிப்பான கணக்கீட்டின்படி மாதத்தைத் துவங்குவது கூடாது, ஹராம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இவர்களின் இந்த வாதம் எந்தளவு குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்படுகிறது என்பதை வரிசையாகப் பார்ப்போம்.

1. அவனே சூரியனையும், சந்திரனையும் காலம் காட்டியாக அமைத்தான்… (6:96)

2. ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு (சந்திரனான) அதற்கு (மாறி மாறி) வரும் பல படித்தரங்கள் உண்டாக்கினான்…(10:5)

3. இன்னும் சூரியனையும், சந்திரனையும் (கணக்கிடத் தோதுவாக) வசப்படுத்தினான். (31:29)

4. சூரியனும், சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)

இந்த நான்கு குர்ஆன் வசனங்களும் சூரியன், சந்திரன் இரண்டுமே துல்லிய கணக்குப்படி சுழல்கின்றன. அவற்றின் சுழற்சியை கணக்கிடும் வகையில் அவற்றை வசப்படுத்தித் தந்துள்ளதாகவும் அல்லாஹ் கூறுகிறான்.

 …அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவாகக் கணக்கிடுகிறான். அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ளமாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான். ஆகவே அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்துவிட்டான். (73:20)

இப்போது சிந்தியுங்கள்! பகலையும், இரவையும், உண்டாக்கும் சூரிய ஓட்டத்தைத் துல்லியமாகக் கணக்கிட மனிதர்களால் முடியாது என்று அல்லாஹ் கூறி இருக்கிறான். இந்த நிலையில் சூரிய ஓட்டத்தை கணக்கிடும் கடிகாரம் போன்ற நவீன கருவிகளால் கணக்கிட்டு, சூரியனைப் புறக்கண்ணால் பார்க்காமல் இந்த மவ்லவிகள் எவ்வித மறுப்பும் இல்லாமல் தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். அதற்கு மாறாக எவ்வித குறைபாடும் இல்லாத மிகமிகத் துல்லிய கணக்கீட்டின்படி சந்திர சுழற்சியை அறிந்துக் கடைபிடிக்கும் சந்திரமாதத் துவக்கத்தை ஏற்க மறுக்கிறார்கள். இதிலிருந்தே அவர்களின் பெருமை, ஆணவம், அகங்காரம் வெளிப்படுவதை குர்ஆன் 7:146, 27:14, 4:44 வசனங்களை நீங்களே நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இன்று இம்மவ்லவிகள் ஏற்றிருக்கும் சூரிய சுழற்சியின் கணக்கீட்டை, அது முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததும் உடனடியாக ஏற்றிருப்பார்கள் என நினைக்கிறீர்களா? அப்படி உடனடியாக ஏற்க அவர்களின் வக்கிர ஆணவப்போக்கு ஒருபோதும் இடம் தந்திருக்காது. இன்று சந்திரக் கணக்கைக் கடுமையாகச் சுய விளக்கம் கொடுத்து எதிர்ப்பது போல் அன்றும் சூரியக் கணக்கைக் கடுமையாக எதிர்த்துத்தான் இருப்பார்கள். புரோகிதப் புத்தி அப்படித்தான் அவர்களைச் செயல்பட வைக்கும் 73:20 வசனத்தைக் காட்டி அல்லாஹ்வே பகலையும், இரவையும் உண்டாக்கும் சூரிய சுழற்சியைத் துல்லியமாக மனிதர்களால் கணக்கிடமுடியாது என்று கூறி இருக்கும் போது நீங்கள் எப்படி ஐவேளைத் தொழுகை யின் நேரங்களை கணக்கிட்டுத் தொழ முடியும்? சூரிய ஓட்டத்தை வழமைபோல் கண்ணால் பார்த்து மட்டுமே தொழ வேண்டும் என்று வரட்டுப் பிடிவாதம் பிடித்துத்தான் இருப்பார்கள்.

உலகியல் நடைமுறைதான் அவர்களை மாற்றியது. அவர்களாக உணர்ந்து மாறவில்லை. தர்கா வழிபாடு, தரீக்கா வழிபாடு, சு.ஜ. வழிபாடு, மத்ஹபு வழிபாடு, மஸ்லக் வழிபாடு, இயக்க வழிபாடு, பிரிவுகள் வழிபாடு என அனைத்து வழிபாடுகளும் வழிபாடல்ல வழிகேடுகள் என குர்ஆன், ஹதீஃத் நேரடி ஆதாரங்களைக் கொண்டு தெளிவுபடுத்தினாலும், அதன் உண்மை நிலை நாளை மறுமையில் தான் பார்க்க முடியும். இவ்வுலகில் அவைதான் செழிப்பான, சுகமான வாழ்க்கையை கொடுப்பதாக 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தான் வழிகேடுகளைத்தான் வழிபாடாகக் காட்டுவான்.

எனவே இவற்றில் பெருங்கொண்ட மக்கள் மயங்கி வழிகேட்டில் நிலைத்திருக்கத்தான் செய்வார்கள். நேரடியாக சுய சிந்தனையுடன் குர்ஆன் வசனங்களைப் படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட வழிகேடுகளை விட்டும் விடுபட்டு நேர்வழி பெறமுடியும். மற்றபடி மதகுருமார்களான இந்த அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளைக் குருட்டுத்தனமாக நம்பி அவர்களை தக்லீது செய்யும் முகல்லிதுகளாக இருக்கும் வரை நாளை மறுமையில் நரகில் எறியப்படும்போதுதான் தாங்கள் வழிகேடுகளில் இருந்ததை ஒப்புக்கொண்டு பிதற்றுவதை பல குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

உலகியல் நடைமுறைகள் அப்படி அல்ல. எப்படிப்பட்ட முகல்லிதாக இருந்தாலும், அவர்கள் சுயமாகச் சிந்தித்து விளங்காவிட்டாலும், நடைமுறைகள் அவர்களை மாற்றத்தான் செய்யும். உதாரணமாக அனைத்து மதகுருமார்களின் துர்போதனை காரணமாக, காலங்காலமாக பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற மூட நம்பிக்கை இருந்து வரத்தான் செய்தது.

முஸ்லிம் மதகுருமார்களை உற்பத்தி செய்யும் குருத்துவக் கல்லூரிகளான அரபு மதரஸாக்களில் இன் றும் போதிக்கப்படும், புவியியல் சம்பந்தமான நூலான “தஷ்ரீக்குல் அஃப்லாக்” என்ற சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூலில் பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்றே எழுதப்பட்டுள்ளது. இன்றைய மதரஸாக்களிலும் இந்நூலே அதில்தான் பரக்கத் இருக்கிறது என்ற குருட்டு நம்பிக்கையில் படிப்பிக்கப்படுகிறது. ஆயினும் உலகியல் நடைமுறைப்படி பெரும்பாலான மவ்லவிகள் இன்று பூமி உருண்டை என்றும், பூமி தான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று ஒப்புக் கொள்கிறார்கள். ஒருசில மக்கு மண்டூகங்களே அந்நூலி லுள்ளதை வேதவாக்காகக் கொண்டு அதையே பிதற்றி வருகின்றனர். ஒரு மதனியே இவ்வாறு பிதற் றியதை எமது சொந்த அனுபவத்தில் அறிந்துள்ளோம்.

அதுபோல்தான் சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து ஐங்காலத் தொழுகை நேரங்களைக் கணித்து நெடுங்காலம் தொழுது வந்த இம்மவ்லவிகள் முதன்முதலில் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு சூரியனைப் பார்க்காமல் கடிகாரத்தைப் பார்த்துத் தொழ ஆரம்பிக்கும்போது இப்படித்தான் குய்யோ முறையோ என ஓலமிட்டிருப்பார்கள். அவர்கள் மாறவில்லை. கால ஓட்டம்தான் அவர்களை மாற்றியது. இன்று ஒவ்வொரு பள்ளியிலும் தொழுகை நேர அட்டவணை என பலகைத் தொங்குவதைப் பார்க் கிறோம். அதில் நாளின் முதல் தொழுகையாக ஃபஜ்ர் தொழுகை எழுதப்பட்டிருப்பதும், நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான் என்பதையும் அவர்கள் அறியாமலேயே ஒப்புக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இப்போது முஸ்லிம்களே சுயமாகச் சிந்திக்க முன்வாருங்கள். இம்மதகுருமார்கள் முன்காலத்தில் பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்று பிடிவாதம் பிடித்தார்கள். இப்போது அதில் இம்மவ்லவிகள் பொய்யர்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு பூமி உருண்டை, பூமியே சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதேபோல் சூரியனைக் கண்ணால் பார்த்தே ஐங்காலத் தொழுகை நேரங்களை முடிவு செய்ய வேண்டும் கடிகாரம் காட்டும் நேரத்தை ஒரு போதும் ஏற்கக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்கள். இப்போது அதில் இம்மவ்லவிகள் பொய்யர்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு, சூரியனைப் பார்க்காமல் கடிகாரம் பார்த்து ஐங்காலத் தொழுகைகளைத் தொழுது வருகிறார்கள்.

அதே வரிசையில் இன்று நவீன கண்டுபிடிப்பான கணினி கணக்கீட்டைக் கொண்டு சந்திரனின் ஓட்டத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதை ஏற்கக் கூடாது. நபி(ஸல்) அவர்கள் பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் மாதத்தைத் துவங்கச் சொல்லியிருக்கிறார்கள். அதன்படி சூரியன் பூமி, சந்திரன் மூன்று கோள்களும் நேர்கோட்டிற்கு வந்து மாதம் முடிவதை சங்கமம் உறுதிப்படுத்தினாலும், அடுத்த நாளை (பிரதமை) முதல் நாளாகக் கணக்கிடக் கூடாது. கண்ணுக்குத் தெரியும் பிறை பார்த்து 3-ம் நாளைத்தான் 1-ம் நாளாகக் கொள்ள வேண்டும் என்ற ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யை நபி(ஸல்) கூறியதாகக் கோரஸாகக் கூறி வருகிறார்கள். பூமி விஷயத்தில், சூரியன் விஷயத்தில் இம்மவ்லவிகள் பொய்யர்கள் என நிரூபனமானது போல், சந்திரன் விஷயத்திலும் இம்மவ்லவிகள் மகா பொய்யர்கள் என்பது நிரூபணமாகத்தான் போகிறது. அவர்கள் உண்மையை ஏற்கமாட்டார்கள். (பார்க்க : 27:14, 4:44) கால ஓட்டம் தான் அவர்கள் பொய்யர்கள் என்பதை அம்பலப்படுத்தும்.

காலத்தைக் கணக்கிட கடிகாரமோ, சந்திர மாதத் துவக்கத்தைக் கணக்கிட கணினியோ அன்று நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருக்கவில்லை. அதனால் சூரிய சுழற்சியைக் கண்ணால் பார்த்து நேரத்தையும், சந்திரச் சுழற்சியைக் கண்ணால் பார்த்து மாதத் துவக்கத்தையும் அறியும் சந்தேகத்திற்குரிய நிலையே அன்று இருந்தது. அதனால்தான் மேகமூட்டமான ஒரு நாளில் நபி(ஸல்) சூரியன் மறைவதற்கு முன்னரே நோன்பு துறந்து விட்டார்கள் என்ற செய்தியை புகாரீ 1959வது ஹதீஃத் அறி விக்கிறது. ஆனால் இன்றோ நவீன கருவிகள் மூலம் நேரத்தையும், சந்திர மாதத் துவக்கத்தையும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி மிகத் துல்லியமாக அறிந்து செயல்படும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான்.

அதை முன்னறிவிப்புச் செய்யும் ஹதீஃத் இதோ பாருங்கள் :

நாம் எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயம் (உம்மத்துன் உம்மிய்யா) ஆவோம். எழுதுவதை அறியமாட்டோம். கணக்கையும் அறியமாட்டோம். மாதம் என்பது இப்படியும், அப்படியும் இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சில வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும். இப்னு உமர்(ரழி) புகாரீ : 1913

இந்த ஹதீஃதை காதால் கேட்ட ஒரு எழுதப் படிக்கத் தெரியாத பாமரனும் (அவாம்) இது மாதம் 29-ல் முடிகிறதா? 30-ல் முடிகிறதா? என்று உறுதியாகச் சொல்லமுடியாத, சந்திரச் சுழற்சியைக் கணக்கிட்டு அறியமுடியாத காலத்தில் இருக்கிறோம் என்று நபி(ஸல்) கூறியதை அறிந்து கொள்வான். ஆக இந்த ஹதீஃத் சந்திர சுழற்சியை கணக்கிடவும், முன்கூட்டியே கணக்கிட்டு எழுதி வைக்கவும் அறியாத நிலையில் இருக்கிறோம் என்று நபி(ஸல்) சொன்னதாக அப்பாமரன் விளங்கிக் கொள்வான்.

அதற்கு மாறாக மெத்தப் படித்த மேதைகள், ஆலிம்கள் என்று வீண் பெருமை பேசும் (7:146) இம் மவ்லவிகளின் மூடத்தனத்தைப் பாருங்கள். கணக்கீட்டை ஏற்கக் கூடாது. கண்ணால் பார்த்து மூன்றாம் நாளைத்தான் முதல் நாளாக எடுக்க வேண்டும் என்ற அவர்களின் மூடக் கொள்கையை நிலைநாட்ட எப்படிப் பொய்யுரைக்கிறார்கள் பாருங்கள். பொய்யன் பீ.ஜையின் பொய்யுரையைப் பாருங்கள். இந்த ஹதீஃதில் குறிப்பிடும் கணக்கு சந்திரனின் சுழற்சி பற்றிய கணக்கு இல்லையாம். சாதாரண கணக்காம். அடுத்து ஜாக் மவ்லவிகளின் பொய்யுரையைப் பாருங்கள்.

விண்ணியல் அறிவு வளர்ச்சியுற்று சந்திர சுழற்சிக் கணக்குத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தாலும் கணக்கிடவும் கூடாது, அவற்றை எழுதி வைக்கவும் கூடாது என்று நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளதாகப் பொய்யுரைக்கிறார்கள். ஆக தூய மார்க்கத்தைப் பல மதங்களாக்கி கொடிய ஹராமான வழியில் நரக நெருப்பை (2:174) கொண்டு வயிற்றை நிரப்பும் ஒட்டுமொத்த மதகுருமார்களான மவ்லவிகள் பெரும் பொய்யர்களே. (பார்க்க : 16:105)

பொய்யர்களுக்குக் கேடுதான் நரகம்தான் என்பதை 45:7, 52:11, 77:15,19,24,28,34,37,40,45,47,49, 83:10 ஆகிய 13 இடங்களில் மீண்டும் மீண்டும் அல்லாஹ் கூறி எச்சரிக்கிறான். ஆனால் அல்லாஹ்வின் இந்தக் கடும் எச்சரிக்கைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். தூய மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாக்கிக் காலம் தள்ளும் மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழிக்கு வரமாட்டார்கள் என்பதை 36:21, 7:146, 27:14, 4:44, இன்னும் எண்ணற்ற வசனங்கள் உறுதிப்படுத்து கின்றன.

2:159-162, 33:36,66-68 இறைவாக்குகளைக் கண்டுகொள்ளாமல் அவற்றை நிராகரித்து குஃப்ரிலாகி துணிந்து பொய்யுரைப்பவர்கள்தான் ஆலிம் என பெருமை பேசும் இம்மவ்லவிகள்.

குர்ஆனில் சுமார் 213 இடங்களில் பொய்யர்கள் பற்றி வருகிறது. இவற்றில் மிகப் பெரும்பாலானவை அல்லாஹ்வுக்கும், அடியார்களுக்கும் இடை யில் தரகர்களாகத் திருட்டுத்தனமாகப் புகுந்து இறைவனின் பெயரைச் சொல்லியே மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கும் இம்மதகுருமார்கள் பொய்யர்களே, அவர்களுக்குக் கேடுதான் நரகம்தான் என்றே கூறுகின்றன; இவர்களின் பொய் நிலையை மக்களுக்கு அடையாளம் காட்டுகின்றன. முஸ்லிம்கள் நேரடியாக குர்ஆனைப் படித்தாலல் லவா விளங்கப் போகிறார்கள்.

முஸ்லிம்கள் குர்ஆனைத் தொடுவதற்குக் கூட அஞ்சுகிறார்கள். அந்த ளவு இம்மவ்லவிகள் அவர்களைப் பயமுறுத்தி வைத் திருக்கிறார்கள். அதனால் பெரும்பாலான முஸ்லிம் கள் 12:106 இறைவாக்குச் சொல்வது போல், கொடிய ஷிர்க்கில் மூழ்கி இருக்கிறார்கள். 9:31 இறைவாக்குச் சொல்வது போல் இம்மவ்லவிகளை ரப்பாக-இறைவனாகக் கொண்டு அவர்களை தக்லீது செய்து நாளை நரகை நிரப்ப இருக்கிறார்கள். (பார்க்க : 32:13, 11:118,119)

அந்த தைரியத்தில்தான் மவ்லவிகள் துணிந்து அப்பட்டமான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்ப்பதோடு, அவர்களை நரகிற்கு அழைக்கிறார்கள். மக்களே உஷார்.

உலகியல் நடைமுறைகள் பற்றி அவர்கள் பொய் கூறினாலும், காலக்கிரமத்தில் அவர்கள் பொய்யர்கள்தான் என்பது மக்களின் கவனத்திற்கு வந்து விடும். அந்த அடிப்படையில் பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது, சூரியனை கண்ணால் பார்த்துத்தான் தொழவேண்டும். கடிகாரம் பார்க் கக்கூடாது, ஒலிபெருக்கி ஹராம் போன்ற பொய்கள் அம்பலத்துக்கு வந்துவிட்டன. கூடிய விரைவில் சந்திரனைக் கண்ணால் பார்த்துத்தான் 3-ம் நாளை 1-ம் நாளாக எடுக்க வேண்டும் என்ற பொய்யும் அம்பலத்திற்கு வந்துவிடும். ஆனால் மறுமையைப் பற்றி அவர்கள் அவிழ்த்து விடும் பொய்களை முஸ்லிம்களே நீங்கள் நாளை மறுமையில் தான் கண்டு, அவர்களைத் திட்டிச் சபிக்கப் போகிறீர்கள். (பார்க்க : 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45)

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே நாளை மறுமையில் இந்த மவ்லவிகளை அடையா ளம் காண்பதால் உங்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. நரகிலிருந்து விடுதலை கிடைக்காது. இவ்வுலகிலேயே அவர்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு, 2:186 இறைவாக்குச் சொல்வது போல் அல்லாஹ்வை மட்டுமே நம்பி, 7:3 இறைவாக்குக்கு அடிபணிந்து நேரடியாக உங்கள் தாய்மொழியிலுள்ள குர்ஆன் மொழி பெயர்ப்பைப் படித்து அதன் வழிகாட்டல்படி நடக்க முன்வாருங்கள். அதுவே 6:153 இறைவாக்குச் சொல்வது போல் ஒரே நேர்வழியாகும்.

சந்திரச் சுழற்சியின் துல்லிய கணக்குப்படி 1437ம் வருட ரமழான் 06.06.2016 திங்கள் அன்று ஆரம்பித்து 04.07.2016 திங்களோடு 29 நோன்புகளுடன் முடிவடைகிறது. 05.07.2016 செவ்வாய் நோன்புப் பெருநாள். இந்த மவ்லவிகளை நம்பி 3ம் பிறையை முதல் பிறையாகக் கொண்டு உங்களின் நோன்புகளைப் பாழாக்கி நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு இந்த மவ்லவிகளை திட்டிச் சபிக்க முற்படாதீர்கள். அது உங்களுக்கு எவ்விதப் பலனையும் தராது. நிரந்தர நரகம்! தப்பிக்க வழியை இங்கேயே பாருங்கள்! அல்லாஹ் அருள் புரிவானாக.

இமாமத் செய்ய தகுதியுடையவர்…

– நஸீர் அஹ்மது, குன்னூர்

மறுபதிப்பு : ஜூன் 1996

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாவும்.

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்…

நாம் இன்று அல்லாஹ்வுக்கு எவ்வளவோ நன்றி செலுத்த வேண்டும். இப்படி உலகத்தில் 99.99% ஆதமுடைய மக்கள் வழிகேட்டில் இருக்க கூடிய சமயத் தில் அல்லாஹ்வையும், அல்லஹ்வையுடைய தீனையும், நபிவழியிலும், குர்ஆனின் ஒளியிலும் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஒரு சமுதாயம் இன்று நம் வாழ்நாளிலே உருவாகிக் கொண்டு வருகிறது. இதன் காரணத்தினால் நாமும், நம் குடும்பத்தாரும், நம் சந்ததிகளும் நேர்வழி பெற்ற முஸ்லிம்களில் ஒரு வராக திகழ ஒரு மாபெரும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.

மேலும் இதை உலக மக்களுக்குக் கொண்டு சேர்க்கக் கூடிய பாக்கியமும் நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இப்படி ஒரு பாக்கியம் நமக்கு கிடைக்காது வழிகேட்டிலேயே நாமும் வாழ்ந்து இருந்திருந்தால், எவ்வளவு பெரிய நஷ்டத்தை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை நம் எவராலும் ஊகித்து பார்க்க முடியுமா? உலக மக்கள் அனைவரும் கூடி அந்நஷ்டத்தை இவ்வளவுதான் என்று கணிக்க முடியுமா? இல்லை சுவர்க்கம் செல்வது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதைத்தான் கணிக்க முடியுமா?

இவ்வுலகத்தில் மனிதன் தன் அளவற்ற அன்பின் காரணத்தினால் அவர்களுக்கு பிரியமுடையவர் களுக்கு (உற்றார், உறவினர், மனைவி, மக்கள்) அதிக மாக உதவிகள் செய்ய வேண்டும் என்று எண்ணி எவ்வளவோ உதவிகளைச் செய்து வருகிறார்கள். அதில் ஒருவர் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்று கருதி அல்லாஹ்வுடைய தீனை அழகான முறையில் எடுத்துரைத்துத் தொழுகும்படி செய்தால், அதன் காரணத்தினால் அவர்கள் சொர்க்கவாதியாகிவிட்டால் இதை விட ஒரு பெரிய உபகாரம் யாராவது ஒருவர் அவருக்குச் செய்துவிட முடியுமா? இல்லை அல்லாஹ்வுடைய தீனை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாமல் எவர் எவரோ சொன்னதை வைத்துக் கொண்டு அவர் அவர் இஷ்டப்படி வாழ்ந்து தானும் கெட்டு பிறருக்கும் அல்லாஹ்வுடைய தீனை தெளிவான முறையில் கிடைக்கச் செய்யாத காரணத்தினால் அவர்களுடைய மனைவி, மக்கள், உற்றார், உறவினர் இதன் காரணத்தினால் நரகவாதி ஆகி விட்டார்களேயானால், இதைவிட மாபெரும் துரோகம் இவர்களால் செய்திருக்க முடியுமா என்று சிந்தியுங்கள். இதில் எவ்வகையில் நாம் இருக்கி றோம் என்பதையும் சிந்தியுங்கள்.

உலகத்தில் வாழும் மனிதர்களில் வணக்க வழிப் பாட்டில் இருக்கும் அனைவரும் அல்லாஹ்வையும், சொர்க்கத்தையும் தான் தேடுகிறார்கள். நரகத்தை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள். எதைக் கொண்டு நாம் ஒருவரை நேர்வழியில் இருக்கிறாரா? இல் லையா? என்பதை கணிக்கிறோம் என்றால், அல் லாஹ்வும், அவனுடைய தூதரும் சொன்ன வழியில் இருக்கிறார்களா? இல்லை அதற்கு மாறு செய்கிறார்களா? என்பதை அறிந்தே முடிவுக்கு வருகிறோம்.

இன்றைய சூழ்நிலையில் நாம் நம் நாட்டுக்கு ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க ஒரு அயல் நாட்டு மனிதரைத் தேர்ந்தெடுக்க மாட்டோம். நிச்சயமாக அவர் நம் நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதைப் போன்றே நம் மாநிலத்தின் முதன் மந்திரி நம் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அப்படி அல்லாத பட்சத்தில் அவர் நம் மாநிலத்தில் பல வருடங்களுக்கு முன் குடியேறியவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வழக்கம். அயல்நாட்டாரை நம் நாட்டுக்கு பிரதமராக இருங்கள் என்பதோ அல்லது மற்ற மாநிலத்தில் வாழக்கூடியவரை நம் மாநிலத்தில் முதன் மந்திரியாக இருங்கள் என்று கூறுவது மடமையாகும்.

இதைப் போலவே நம் முஹல்லாவில் வாழக்கூடிய வரையே நம் முஹல்லாவுக்கு, பள்ளிக்கு முதவல்லியாகவோ, அமீராகவோ தேர்ந்தெடுக்க வேண்டும். அதை அல்லாமல் வேறு ஊரில் வாழக்கூடியவரை முதவல்லியாகவோ, அமீராகவோ தேர்ந்தெடுப்பது ஓர் அர்த்தமற்ற செயலாகும். 1. திர்மிதியில் ஒரு ஹதீஃத் கூறுகிறது மாலிக் பின் ஹுவைரிஃத்(ரழி) எங்களைச் சந்திக்க எங்கள் மஸ்ஜிதுக்கு வரக்கூடியவராக இருந்தார்கள். ஒரு தடவை மஃரிப் உடைய நேரத்தில் அவர் வந்தார். நாங்கள் அவரை நீங்கள் முன் சென்று எங்களுக்கு இமாமத் செய்வீராக என்று சொன்னோம்.

அதற்கு அவர் மறுத்து விட்டார். (இமாமத் செய்வதை) உங்களில் ஒருவர் முன் சென்று தொழவைக்கட்டும். தொழுததற்குப் பின் காரணத்தைக் கூறுகிறேன் என்று சொன்னார். பின் கூறினார் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார் கள். ஒரு கூட்டத்தாரை நீங்கள் சந்திக்கச் சென்றால் நீங்கள் இமாமத் செய்யாதீர்கள். அவர்களில் ஒரு வரையே இமாமத் செய்யச் சொல்லுங்கள். அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஃத்(ரழி) 2. சஹிஹீல் புகாரி Vணூ/P,435/க்ஷி,782,787 அறிவிப்பவர் : அபூகிலாஃபா(ரழி) ஒரு நாள் மாலிக் பின் ஹுவைரிஃத்(ரழி) எங் களைச் சந்திக்க பள்ளிக்கு வந்தார்கள்.

அப்பொழுது கடமையான தொழுகை அல்லாத நேரத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் தொழுத முறையை காட்டட்டுமா என்று கூறி தொழுது காட்டினார். தொழுகை நேரம் வந்தவுடன் அதனை கூறுங்கள்; உங்களில் வயதில் மூத்தவர் தொழ வையுங்கள். (இமாமத் செய்யுங்கள்) என்று கூறினார். 3. முஸ்லிமிலும், திர்மிதியிலும் உள்ள ஒரு ஹதீஃத்: அறிவிப்பவர் : அபூமஸ்ஊத்(ரழி) நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் நெறி நூலை அதிகம் ஓதியவர் ஒரு சமுதாயத்திற்கு இமாமத் செய்யட்டும். ஓதுவதில் பலரும் சமநிலையில் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு தெரிந்த வர் இமாமத் செய்யட்டும். நபிவழியை நன்கு தெரிந்தவர் பலர் சமநிலையில் இருந்தால் ஹிஜ்ரத் செய்வதில் அவர்களில் முந்தியவர் இமாமத் செய்யட்டும்.

ஹிஜ்ரத்திலும் அவர்கள் சமநிலையில் இருந்தால் அவர்கள் வயதில் மூத்தவர் இமாமத் செய்யட்டும். ஒரு மனிதரின் அதிகாரத்திற்குட்பட்ட விஷயத்தில் இன்னொருவர் அதிகாரம் செலுத்தக் கூடாது. ஒரு மனிதனின் இல்லத்தில் அவனுக்கே உரிய ஆசனத் தில் அவனது அனுமதியின்றி மற்றவர் அமரக் கூடாது. மேற்காட்டிய ஹதீஃத்களில் இருந்து நமக்கு என்ன தெளிவாகிறது என்றால், இமாமத் செய்ய தகுதியுடையவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர்களே. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களே இமாமத் செய்துள்ளார்கள். அபூபக்கர்(ரழி) காலத்தில் அவர்களே இமாமத் செய்துள்ளார்கள். இதைப்போலவே உமர்(ரழி), உஸ்மான்(ரழி), அலீ(ரழி) அவர்களுடைய காலத் திலும் அவர்களே இமாமத் செய்துள்ளார்கள்.

இதைப் போலவே ஒரு நாட்டுக்கோ, ஊருக்கோ தலைவராக, அமீராக நியமிக்கப்பட்டவரே இமாமத் செய்துள்ளார்கள். இதற்கு எவரும் காசோ, பணமோ, எவ்வகையான கூலியோ பெற்றதாக சரித்திரம் இல்லை. மாறாக எவ்வகையிலும் இமா மத் செய்வதற்கு கூலிகள் வாங்க கூடாது என்பதற்கு பல குர்ஆன் வசனங்கள், ஆதாரபூர்வமான ஹதீஃத் கள் உள்ளன. உதாரணமாக உஸ்மான் இப்னு அபீல் ஆஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கக் கூடிய ஹதீஃத் அபூ தாவூத், திர்மிதியில் உள்ளது. முஅத்தினை நியமனம் செய்தால் எந்தவிதமான பிரதிபலனும் (கூலியோ, சம்பளமோ) பெற்றுக் கொள்ளாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நபி(ஸல்) என்னிடம் இறுதியான, உறுதிமொழி வாங்கினார்கள் என்று கூறினார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு முஅத்தின் ஒரு ஊருக்கு, ஒரு முஹல்லாவுக்கு ஒரு பள்ளிக்கு, ஒரு பர்ழான நேரத்திற்கு ஒருவர் ஒருமுறை அதான் கூறினால் போதுமானதாயிற்று, ஊரில் இருக்கும் அனைவரும் அதைச் செய்யத் தேவையில்லை. அப்படி இருந்த பட்சத்திலும் நபி(ஸல்) எப்பிரதிபலனை யும் (மனிதர்களிடம்) எதிர்பாராத ஒரு நபரை முஅத்தினை நியமிக்கும்படி கட்டளையிட்டிருக் கும் பட்சத்தில் எல்லா மனிதர்கள் மீதும் கடமை யான ஒரு தொழுகையை நிறைவேற்றக் கூடிய அல் லாஹ்வின் மஸ்ஜிதில் அத்தொழுகையை நிலை நாட்ட ஓர் இமாம் நியமிக்கப்பட்டால் எவ்வகை யில் கூலி பெற அனுமதிக்கப்படும். அல்லாஹ் சுப்ஹானஹு த ஆலா கடுமையான முறையில் 22 இடங்களில் திருகுர்ஆனில் தன் வச னங்களை விற்பதை ஹராம் ஆக்கியுள்ளான். (அல் குர்ஆன் 2:44, 2:41,42, 3:187, 4:46, 5:44)

மேலும் நபி(ஸல்) கூறுகிறார்கள் :

1. குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள். நபிமொழி நூல்கள் : அஹ்மத், தஹாவீ, தப்ரானீ, இப்னு அஸாகிர்.

2. எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல் லாஹ்விடமே கேட்கட்டும். வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி) கேட்பவர்கள் தோன்றுவார்கள் (என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.) நூல்கள் : திர்மிதி, அஹ்மத்.

3. குர்ஆனை ஓதுங்கள், அறிந்து கொள்ளுங்கள் அதன் மூலம் பொருள் திரட்டவோ, சாப்பிடவோ செய்யாதீர்கள். நூல்கள் : அஹ்மத், தப்ரானி சாதாரணமாக மனிதர்கள் குர்ஆன் வசனங் களை விற்க வேண்டாம் என்றால் இப்பொழுது கிடைக்ககூடிய அச்சடித்து பைண்ட் செய்யப்பட்ட குர்ஆன் நூல்களையே என்று எண்ணுகிறார்கள். அப்படியல்ல, அதை விற்கவோ, வாங்கவோ எவ்வித தடைகளும் இல்லை. ஆனால் எதைத் தடை செய்யப்பட்டு உள்ளது என்றால், குர்ஆன் வசனங்கள் வஹீ மூலம் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. அதை அவர்கள் மனனம் செய்தார்கள். அதைப் பிறரிடம் எடுத்துரைத்தார்கள்.

அதை ஒவ்வொரு வரும் இதைப்போலவே மனனம் செய்து கொண் டார்கள். அதை ஓதியதற்கு பகரமாக மக்களிடம் பணம்/கூலி பெற்றல் கூடாது என்று இதைத்தான் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எச்சரித்துள்ளார்கள். சகோதர, சகோதரிகளே! சிந்தித்துப் பாருங்கள்! எவரேனும் குர்ஆனை ஓதாமல் இமாமத் செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது.அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் இமாமத்திற்குக்காசு பெற்றுக் கொள்வது ஹராமாகும். அவர் கேட்பதும் ஹராமா கும். கொடுப்பதும் ஹராம் ஆகும். அல்லாஹ் சுப்ஹானஹு த ஆலாவை பொறுத்த வரையில் ஹராமில் சிறியது, பெரியது இல்லை. ஹராம் என்றால் ஷைத்தானுக்கு வழிபடுதல், அது மதுவோ, மதுக்கடையோ, மது தயாரிப்போ, விபச்சாரியோ, விபச்சார விடுதியோ, வட்டியோ, வட்டிக் கடையோ, காசுக்காக இமாமத் செய்வதோ அல்லாஹ்வின் முன்னிலையில் அனைத்து ஹராமான செயல்கள் புரிபவர்கள் பாவத்தில் சமநிலையில் உள்ளார்கள். ஷைத்தானுக்கு அடிபணிந்தவர்களாக உள்ளார்கள். இந்நிலையில் அல்லாஹ்விடம் நன் மையை நாடுவது அறிவீனமாகும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். (நபியே!) நெறிநூலில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும் நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான், எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன்: 4:51,52)

ஒரு எஜமான் தன் கடையை பார்த்துக் கொண்டிருக்கும் வேலை ஆட்களிடம் இந்த ஜாடிகளை எல்லாம் நல்லமுறையில் பேணிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் செல்கிறார். ஒரு மடையன் அந்த வேலை ஆட்களிடம் அந்த ஜாடிகளை எடுத்து உடைத்துவிடுங்கள் என்று கூறுகிறான். அந்த வேலை ஆட்களில் ஒரு சிலரும் அந்த ஜாடிகளை உடைத்து விட்டு எஜமான் திருப்திபடுவார். சந்தோஷப்படுவார் என்று எண்ணுகிறார்கள். இதைச் சிந்திக்கக்கூடிய எந்த ஒரு மனிதரும் என்ன ஒரு பைத்தியக்காரனாக இருக்கிறான் என்றுதான் எண்ணுவார்கள். ஏனெனில் எஜமான் சொன்னதற்கு மாற்றமாக செய்ததும் அல்லாமல் எஜமானிடம் அவனுடைய தண்டனைக்கு அஞ்சாமல் எஜமானுடைய திருப்தியையும், நற்கூலியுமல்லவா எதிர்பார்க்கிறார்கள்.

அல்லாஹ் தெளிவான முறையில் குர்ஆனில் பல இடங்களிலும், நபி(ஸல்) மூலமாகவும் அல்லாஹு வுக்கு மாறு செய்வதை கடுமையான முறையிலே எச்சரித்துள்ளான். மேலும் ஷைத்தான் சூழ்ச்சி செய்வதெல்லாம் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வைத்து (ஹராம்) நரகத்தின்பால் மக்களைப் புகுத்து வதற்கே விடாமுயற்சி செய்து கொண்டிருக்கிறான். இப்படியிருக்கும்பட்சத்தில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து எவ்வாறு அவனிடம் நன்மையை எதிர் பார்க்க முடியும். (பார்க்க : 15:39)

இதற்கு முன் உள்ள சமுதாயமும் வழிகேட்டில் ஆவதற்கு காரணம் அவர்களுடைய குருமார்களே, அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அவர்கள் அல் லாஹ்வை விட்டு விட்டு தங்கள் பாதிரிமார்களையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும், கடவுள் ஆக்கிக் கொண்டார்கள். (அல்குர்ஆன் : 9:31) இந்த வாக்கியம் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டபொழுது அதீய்யிபின் ஹாதிம்(ரழி) ஒரு கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தை அப்பொழுது தான் ஏற்று இருந்தார். அவர் நாங்கள் அவர்களை வணங்கவில்லையே எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அந்த பாதிரிகள் (ஹஜரத்துகள்) அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்குகின்றனர். இவ்விஷயத்தில் நீங்கள் அவர்களைப் பின்பற்றுகிறீர்கள் அல்லவா? என்று கேட்க ஆம் என பதில் கூறினார்.

இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மத். சிந்தியுங்கள்! தீனை அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியமான அம்சமாக உள்ளது. வாழ்க் கையில் ஈடேற்றம் பெறவும், இம்மை, மறுமை வாழ்க்கை வெற்றியடையவும், தீனை அறிந்து கொள்வது மிகமிக முக்கியமான அம்சமாக உள்ளது. இவர் கூறினார், அவர் கூறினார் என்று கூறு வதை விட அல்லாஹ் என்ன கூறியுள்ளான். அவன் தூதர் என்ன கூறினார்கள் என்று அறிந்து கொள்வதே மிகவும் முக்கியமானதாகவும், சிறந்ததாகவும் உள்ளது. இதை மனிதர்கள் அறியாத காரணத்தினாலேயே அதிகமான ஜனங்கள் வழிதவறக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள். ஹராமையும், ஷிர்க்கையும், சூஃப்ரையும் வணக்க வழிபாடுகள் என்று எண்ணி பயபக்தியுடன் நிலைநாட்ட முற்படுகிறார்கள்.

உதாரணமாக சிலை வணக்கம், தர்காக்கள், மந்திரித்த நூல் தாயத்து அணிதல், ஷபே மிஃறாஜ் ஷபே பராஅத் இன்னும் தீனில் பலவாறாக பிரிதல்; ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தைப் (பலவாறாக) பிரித்து பல பிரிவினர்களாக பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே) உமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. (அல்குர்ஆன் : 6:159) நபி(ஸல்) அவர்களும் கூறுகிறார்கள். என்னுடைய உம்மத் 73 பிரிவினர்களாக பிரிவார்கள்.

அதில் ஒன்றே ஒன்று மட்டும் சொர்க்கம் வரும். இப்படியிருந்தும் தற்போது எத்தனை வகையான பிரிவுகளைக் காண்கிறோம். உதாரணமாக ஹனபி, ஷாபி, ஹம்பலி, மாலிகி, காதியானி பஹாயி, முஜாஹித், ஜாக், அஹ்லஹதீஃத், மஸ்லக், ஸலஃபி, ததஜ, இதஜ, பல இயக்கப் பிரிவுகள். அல்லாஹ் அவனது நெறிநூலில் கூறுகிறான் எவர் பிரிந்து விட்டனரோ நபிக்கும் அவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டதால் இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் உள்ளதா? என்று சிந்தியுங்கள். அல்லாஹ்வின் பாதையை விட்டு மனிதர்களை வழிகெடுக்கச் செய்யும் அடிப்படையான அம்சம் இப்பிரிவினனைகள்தான். ஒரு காலத்தில் அல்லாஹ் வின் தூதர் ஒருவருக்கு அருளப்பட்ட நேரிய மார்க் கம் அதைப் பின்பற்றியவர்களால் திரிக்கப்பட்டு அதிலும் பல பிளவுகளை உண்டாக்கி அனுஷ்டிக்கப்பட்டு, மிகச் சமீபகாலத்தில் ஹிந்து மதம் என்று மனிதர்களால் பெயரிடப்பட்டுள்ள ஹிந்து மதத்தில் மேலும் எத்தனை பிரிவுகள் ஆகி உள்ளன.

எந்தளவுக்கு வழிகேட்டில் சென்று விட்டார்கள் என்று அவர்களுக்கே புலப்படுவதில்லை. இதைப் போன்றே யூத கிறிஸ்தவ மதங்களும், இப்பொழுது முஸ்லிம்களிடையேயும் இதையே காண்கிறோம். அவர் அவர்கள் செய்து கொண்டு இருப்பதே சரி என்று காண்கிறார்கள். இந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் செய்தால் தான் தவறு, முஸ்லிம்கள் செய்தால் தவறு இல்லை என்று யாராலும் கூற முடியுமா? அல்லது அனைவருமே ஆதமின் மக்கள், அல்லாஹ்வும், அவன் தூதர்(ஸல்) சொல்லும் வழியே சரி, அதற்கு மாறு செய்யும் அனைவருமே தவறான வழியில் உள்ளார்கள் என்று கூறுவது சரியா? இல்லையா? முஸ்லிம்களிடையே இப்பிரிவினைகளுக்கு காரணமாக இருக்கக் கூடியது, அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், உங்களில்(நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். (அல்குர்ஆன் : 4:59) இதில் (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர்களுக்கு கீழ்ப்படியுங்கள் என்பது நம்முடன் உயிரு டன் இருப்பவர்களையே குறிக்கும்.

ஆனால் சிலர் அது இறந்தவர்களையும் குறிக்கும் என்று எண்ணு கிறார்கள். அவர்கள் எதை அறிந்துக் கொள்ள வேண் டும் என்றால் நாம் இறந்தவர்களை ஒருக்காலமும் அதிகாரத்தில் வைக்கப்போவதில்லை. ஏனெனில் அல்லாஹ் அதே வசனத்தில் கூறுகிறான். உங்களில் ஏதேனும் ஒரு விஷயத்தில் தர்க்கம் ஏற்படும். ஆனால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடியவர்களானால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். நாம் யாரை அதிகாரத்தில் (தலைவராக) வைத்துள்ளோமோ அவர் நிச்சயமாக உயிருடன்தான் இருக்க வேண்டும். அவர் இடும் கட்டளைகள் அல்லாஹ்வும், அவன் தூதரும் சொன்ன சட்டத்தின் அடிப்படையில் உள்ளதா? என்று நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர் இடும் கட்டளைகள் அல்லாஹ்வும், அவன் தூதரும் சொன்ன சட்டத்தின் அடிப்படையில் உள்ளதா? என்று நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அப்படி அவர் சொல்லக் கூடியதிலோ, ஏவக் கூடிய திலோ அல்லாஹ்வுக்கும் ரசூல்(ஸல்) அவர்களுக்கும் மாற்றமாக இருந்தால் நாம் அவருக்கு கட்டுப்படக் கூடாது. அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்குமே கட்டுப்படவேண்டும். இதுதான் மேற்கூறப்பட்ட வசனத்தில் தெளிவு. இதைத்தான் இமாம்கள் (ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹம்பலி) நால்வரும் கூறினார்கள். எங்களை நீங்கள் பொறுப்புதாரி ஆக்கிவிடாதீர்கள். நாங்கள் ஒருக்காலமும் பொறுப்பு ஏற்கமாட்டோம்.

நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்குமே கட்டுப்படுங்கள். இதை அறியாத மூடர்கள் இமாம்களுக்கும் அதிக காலம் பின்னால் அவர்களின் பெயர்களால் பல பிரிவினைகளை ஏற்படுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும் (குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும்) மாற்ற மான பல சட்டங்களையும் இயற்றியுள்ளார்கள். ஈஸா(அலை) அவர்கள் நான் வணங்கும் இறைவனையே நீயும் வணங்கு என்பதாகக் கூறி னார்கள். ஆயினும் அவர் மேல் உள்ள அளவற்ற பக்தியினாலும் முஹப்பத்தினாலும், அவரையே வணங்கக் கூடியவர்களாக கிறிஸ்தவர்கள் ஆகிவிட் டார்கள். இதைப்போல் தான் அல்லாஹ் கூறுகிறான். நபிக்கு வழிபடுங்கள் என்பதாக, இமாம்களும் அதையே கூறினார்கள்.

ஆனால் இமாம் மேல் உள்ள முஹப்பத்தினால், பக்தியினால் இமாம்கள் இறந்த பின்னும் அவர்களின் பெயரால் மத்ஹப்களை உருவாக்கி, அல்லாஹ் ரசூல் கொடுத்த சட்டங்களை மாற்றி இவர்களே சட்டநூல்களை தயாரித்து (ரத்துல் முக்தார், துர்ருல் முக்தார், ஆலம்கீரி, ஷரஹுல் விகாயா, கன்ஸு, ஹிதாயா, இஆனா சிமிஉ.,) போன்ற பல சட்டநூல்களை தயாரித்து இதன் அடிப்படையில் மத்ஹப்களை பின்பற்றியும் வருகிறார்கள். இவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் ஜாடிகளை உடைத்து எஜமானுடைய பொறுத்தத்தையும், நற்கூலியையும் எதிர்பார்க்கும் பைத்தியக்காரர்களே ஆவார்கள். ரசூல்(ஸல்) கூறுகிறார்கள், நிச்சயமாக உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள், நபிமார்கள் தீனா ருக்கோ, திர்ஹமுக்கோ வாரிசாக மாட்டார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா(ரழி), நூல்கள் : அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத், பைஹகீ, ஹாக்கிம், தப்ரானி. மேல்காணும் ஹதீஃதில் தெள்ளத் தெளிவாக ரசூல்(ஸல்) கூறுகிறார்கள்.

ஆலிம், உலமாக்கள் நபி மார்களின் வாரிசுகள்தான் என்று, ஆனால் நிச்சய மாக காசுக்கோ பணத்திற்கோ எவர்கள் தங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் தீனின் வேலையை செய்கிறார்களோ, அவர்கள் ஒரு காலமும் நபிமார்களின் வாரிசு ஆக மாட்டார்கள். ஒரு வாரிசுதாரர் தன் தகப்பனுடைய சொத்துக்களையும், வேலைகளையும் பேணிப்பாதுகாத்து மாசற்ற தூய்மையான முறையிலேயே மேலும் மேலும் முன்னேறப் பாடுபடுவார்கள். (இது பலவீனமான ஹதீஃத்) அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

நபி(ஸல்) பல ஹதீஃத்களில் கூறுகிறார்கள். உஹது போரின் பொழுது முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருந்தார்கள். அதில் ஒரு குறிப்பிட்ட ஒரு சிறிய கூட்டத்தாரை நபி(ஸல்) அழைத்து, அவர்கள் மிகவும் அழகிய முறையில் அம்பு எய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் நபி(ஸல்) ஒரு இடத்தை குறிப்பிட்டு இவ்விடத்தில் இருந்து நான் கூறும் வரையில் நீங்கள் ஒருபொழுதும் நகரக் கூடாது என்பதாக கட்டளையிட்டார்கள். போர் மூண்டதும் மிக எளிய முறையில் அழகிய வெற்றி முஸ்லிம்களுக்கு கிடைத்தது.

எதிரிகள் (மக்கத்து காஃபிர்கள்) விரண்டோடினார்கள். இதைப் பார்த்த சஹாபாக்கள் அவர்கள் விட்டுச் சென்ற (கனீமத்) பொருளை சேகரிக்க ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த அந்த சிறிய கூட்டத்தார் எவரிடம் நபி(ஸல்) என் அனுமதியின்றி இவ்விடத்தில் இருந்து செல்லாதீர்கள் என்று கூறினார்களோ, அவர்கள் அவ்விடத்தை பாதுகாப்பதை விட்டுவிட்டு போர் தான் முடிந்து விட்டதே நாமும் அந்த (கனிமத்) பொருளை சேகரிப்போம் என்று எண்ணி அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்கள்.

அப்பொழுதும் ஒரு சிலர் நபி(ஸல்) இவ் விடத்தை விட்டு நரகவேண்டாம் என்று கூறியிருக் கிறார்கள். நாங்கள் செல்லமாட்டோம் என்று கூறி அங்கேயே இருந்தார்கள். பெரும்பாலானோர் சென்று விட்டார்கள். விரண்டோடிக் கொண்டிருந்த எதிரிகள் இவ்விடம் காலியாக இருப்பதைக் கண்டு அவ்வழியாக வந்து முஸ்லிம்களுக்கு பலத்த சேதத்தை உண்டுபண்ணி அதிகமான சஹாபாக் களை ­ஹீதாக்கவும் செய்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்கும் பலத்த அடியும், ஒரு பல்லும் உடைந்து முகத்தில் காயமும் ஏற்பட்டது. நபி(ஸல்) இறந்து விட்டார்கள் என்ற கூக்குரலும் எழுப்பப்பட்டது. ஆனால் ஒரு சிலரின் வீரச் செயலினால் அம் முஸ்லிம்களுக்கு ஏற்பட இருந்த பலத்த தோல்வியில் இருந்து அல்லாஹ் பாதுகாத்தான். இத்தோல்விக்கு முக்கியக் காரணம், இந்த சிறியக் கூட்டத்தார்தான்.

நபி(ஸல்) அவர்களுக்கு அருளிய தீனையும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையையும் (மக்களிடையே தீனை பரவச் செய்தல்) குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் அல்லாஹ்விடமே கூலியை எதிர் பார்த்தவர்களாகச் செயல்பட வேண்டும். இன்றைய சூழ்நிலையில் இவர்கள் காசு, பணத்துக்கு என்று (கனீமத்பொருளை தேடி) அழைகிறார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம் சமுதாயம் உலக முழுவதிலுமே பெரிய வீழ்ச்சியில் உள்ளது. ஒரு சிலரால் இச்சமுதாயம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. பலத்த சேதத்தில் இருந்து அல்லாஹ் பாதுகாத்து இம்மையிலும், மறுமையிலும் முழுமை யான வெற்றியை நமக்கு அருள்வானாக! ஆமீன்!

ஆகையால் இமாமத் செய்பவர்களை தம் முஹல்லாவாசிகளாக இருக்கக் கூடியவர்களிலிருந்தே (தலைவர்களாக) தேர்ந்தெடுத்து குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் தொழ வைப்பவராகவும், அவர் இல்லாத பட்சத்தில் அவருக்கு அடுத்தபடி யானவர், அல்லது அவருக்கு அடுத்தபடியானவர், அல்லது அவருக்கு அடுத்தபடியானவர் அப்படியே அந்த முஹல்லாவாசிகள் அனைவருமே தொழ வைக்க வாய்ப்பும் கிடைக்கும். குர்ஆன், ஹதீஃதை தெளிவான முறையில் அறிய வாய்ப்பும் கிட்டும், அப்படியில்லாதபட்சத்தில் ஒரு மனிதருக்கு காசை கொடுத்து தொழ வைக்கச் சொன்னால் அவர் இல்லையயனில் வேறு ஒருத்தரை அதே கூலிக்கு (அல்லாஹ்வுக்கும் அவன் நபிக்கும் மாறு செய்யக் கூடிய நிலையில்) இமாமத் செய்ய வைப்பார்கள். இந்த அடிப்படையில் போய்கொண்டிருந்தால் நம்மிடம் உள்ள தீன் சிறுக சிறுக அழிந்துவிடக் கூடும். இச்சூழ்நிலையை நம் கண்முன்னால் பார்த் துக் கொண்டுள்ளோம். அல்லாஹ் பாதுகாப்பானாக; மேலும் அவனுடைய தீனை ஓங்கச் செய்ய நமக்கு அருள்புரிவானாக. (ஆமீன்)

சேமித்து வைக்கும் செல்வங்களுக்கு..

ஜகாத் ஒரேயயாரு முறையா? ஒவ்வொரு ஆண்டுமா?

– அபூ அப்தில்லாஹ்

அல்குர்ஆன் வழிகாட்டுகிறது : நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிமார்களிலும், சந்நியா சிகளிலும் அநேகர், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும், எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (9:34)

(நபியே!) அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் நரக நெருப் பில் அவை காய்ச்சப்பட்டு, அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும்; (இன்னும்) இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது; ஆகவே, நீங்கள் சேமித்து வைத்திருந்ததைச் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறப்படும்). (9:35)

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுத்துக்கொண்டு, அதைக் கொண்டு அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவீராக! இன்னும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். (9:103)

(வெற்றி கொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும்; (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக் கும், ஏழைகளுக்கும் வழிப்போக்கருக்கும் உரியதாகும். உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு) பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்கினாரோ (அதை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (59:7)

மேலும் பார்க்க : 2:43,83,110,177,195,261, 262, 277, 3:180, 4:77,162, 5:12,55, 7:156, 8:60, 9:5,11,18,60,71, 18:81, 19:13,31,55,59, 21:73, 22:41,78, 23:4, 24:3,7, 24:56, 27:3, 30:39, 31:4, 33:33, 41:7, 49:15, 51:19, 58:13, 61:11, 70:24, 73:20, 92:17,18, 98:5. அல்ஹதீஃத் வழிகாட்டுகிறது : யாருக்கேனும், அல்லாஹ் பொருளாதார வசதியை வழங்கி அதற்கு அவன் ஜகாத் கொடுக் காமல் இருந்தால், கியாமத் நாளில் கடுமையான விஷம் நிறைந்த பாம்பு ஒன்றை அவன் கழுத்தில் சுற்றச் செய்யப்படும். “நான்தான் நீ சேர்த்து வைத்த செல்வம், நான்தான் நீ புதைத்து வைத்தப் புதையல்” என்று கூறிக் கொண்டே அது அவனைத் தீண்டிக் கொண்டிருக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம்.

ஏழைகளுக்குச் சொந்தமான ஜகாத் பொருள், மற்ற பொருள்களுடன் கலந்திருந்தால் அவற்றை ஜகாத் பொருள் அழித்துவிடும் என நபி(ஸல்) கூறினார்கள். ஆயிஷா(ரழி) புகாரீ இமாமின் வரலாற்று நூல். வியாபாரத்திற்காக வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும் அதற்குக் கட்டாயம் ஜகாத் வழங்கி வரவேண்டும். அது எந்தப் பொருளாக இருப்பினும் ஜகாத் கட்டாயம் வழங்கியே ஆகவேண்டும்.

நாங்கள் வியாபாரத்திற்காக வைத்திருக்கும் பொருட்களுக்காக ஜகாத் கொடுத்துவர வேண்டும் என்று நபி(ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சமூராஇப்னு ஜுன்துப்(ரழி) அபூதாவூது, பைஹகீ. இன்று நிலங்கள், கட்டிடங்கள் வருமானத்தைப் பெருக்கும் வியாபாரப் பொருள்களாக இருப்பதால் அவற்றிற்கும் ஜகாத் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். நீர் பாய்ச்சி விளைந்த விளைச்சலில் 5% இயற்கையாக விளையும் விளைச்சலில் 10% உடனடியாக ஜகாத்தாகக் கொடுக்க வேண்டும். இப்னு உமர்(ரழி), புகாரீ.

20 தீனாருக்கு (87 கிராம் தங்கம்) குறைவானவற்றில் ஜகாத் கடமையில்லை. 20 தீனார் ஒரு ஆண்டு இருந்தால் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அலீ (ரழி) அஹ்மத், அபூதாவூத், பைஹகீ. 190 திர்ஹம் (687 கிராம் வெள்ளி) வரை ஜகாத் இல்லை. 200 திர்ஹம் இருக்கும்போது அதற்கு 5 திர்ஹம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அலீ(ரழி) அபூதாவூது, நஸாயீ, திர்மிதி, இப்னு மாஜா. அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நான் எவர் தொழுகைக்கும், ஜகாத்துக்கும் இடையில் பாகுபாடு செய்கின்றாரோ அவரோடு போர் தொடுப்பேன். ஏனெனில் நிச்சயமாக ஜகாத் பொருளின் மீதுள்ள பாத்தியதையாகும்.

மேலும் அல்லாஹ்வின் மீது ஆணை யாக அவர் ஒரு ஆட்டுக்குட்டியேனும் (இன்னொரு அறிவிப்பில் ஒட்டகத்தைக் கட்டும் ஒரு சிறிய கயிறாக இருப்பினும்) எனக்கு அளிக்க மறுப்பாராயின், நபி(ஸல்) அவர்களிடம் அவர் அதனை அளித்து வந்திருப்பின் நிச்சயமாக அவர்கள் அதனை மறுத்தால் நான் அவர்களோடு போர் தொடுப்பேன் என்று முதல் கலீஃபா அபூபக்கர்(ரழி) கூறினார்கள். அபூஹு ரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம், முஅத்தா, அபூ தாபூது, திர்மிதி, நஸாயீ. இந்த ஹதீஃதை எவ்வித சுயநல உள்நோக்க மும் இல்லாமல் நடுநிலையுடன் படிப்பவர்கள் ஜகாத் கொடுத்த பொருள்களுக்கே மீண்டும் மீண்டும், வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பதை எளிதாக விளங்க முடியும். அறிந்து கொள்ளுங்கள்.

எவர் பணம் படைத்த அநாதைகளுக்குச் செயலாளராக இருக்கிறாரோ அவர், அவர்களின் பொருள்களில் வியாபாரம் செய்யவும். அன்றி ஜகாத் அவற்றைக் கரைத்து விடும் வரை(ஆண்டு தோறும்) ஜகாத் கொடுத்துச் சிறுகக் குறைய) விட்டு விடாதீர்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். அம்ருப்னு ஷிஐபுதம் தந்தை மூலமாகவும் அவர்தம் பாட்டனார் மூலம் அறிந்து. திர்மிதி. நிச்சயமாக, நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்தாள். அவருடன் அவரின் மகளும் வந்திருந்தாள். அவளின் கைகளில் இரு பெரும் பொற்காப்புகள் இருந்தன. அப்பொழுது நபி (ஸல்) அப்பெண்ணிடம், இதற்கு நீர் ஜகாத் கொடுத்து வருகிறீரா? என்று கேட்டனர். இல்லை என்றாள் அப்பெண்;(அதற்கு) அவர் கள், அல்லாஹ் உமக்கு மறுமை நாளில் இதன் காரணமாக தீக்குழம்பிலான இரண்டு காப்புகளை அணிவிக்க உமக்கு விருப்பம்தானே? என்று வினவினர்.

உடனே அவர் அவ்விரண்டையும் கழற்றி நபி(ஸல்) அவர்களின் முன் போட்டு, இவ்விரண்டும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உரியவையாகும் என்று கூறினார். அம்ருப்னு ஷிஐபு அவர்கள் தம் தந்தை மூலமாகவும் அவர்தம் பாட்டனாரின் மூலமாகவும் அறிந்து ஸுனன். ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்றிருந்தால் அக்காப்புகளின் 40-ல் 1 கொடுத்தால் போதும் அல்லவா? தொடர்ந்து வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் விட்டதால் அல்லவா இரண்டு காப்புகளையும் கழற்றி ஒப்படைத்துள்ளார்.

மூன்று காரியங்களைச் செய்பவர்கள் இறை விசு வாசத்தின் ருசியைச் சுவைத்துக் கொள்வார்கள்.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனே இல்லை என்ற அடிப்படையில் இறைவனுக்கு மட்டுமே அடிபணிபவர்.

2. தனது செல்வத்தின் ஜகாத்தை பரிசுத்த எண்ணத்துடனும், உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர்.

3. பல் உடைந்த, மட்டமான, நோய்வாய்ப்பட்டவற்றை கொடுக்காமல் இருப்பவர். உமர்(ரழி), அபூதாவூத் : 1349

ஜகாத் கொடுத்து வரும்படி நபி(ஸல்) கட்டளையிட்ட ஹதீஃத்களில் துஅத்தீ-கொடுக்கிறீரா? என்றும், அதுஃத்தீ தருகிறாயா? என்று தொடர் நிலையில் கேட்டிருக்கிறார்களே அல்லாமல் அஃதய்த்த-கொடுத்துவீட்டீரா என்றோ, இறந்தகால வளையில் கேட்கவில்லை. இதிலிருந்து ஒரு பொருளுக்கு வருடா வருடம் தொடர்ந்து ஜகாத் கொடுப்பது கடமை என்பது உறுதியாகிறது.

“ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை.” அலீ(ரழி) அபூதாவூது, பைஹகி

இதுவரை நாம் எடுத்து எழுதியுள்ளவை ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண் டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லும் குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்கள் ஆகும். பொய்யன் பீ.ஜை. தனது வழிகெட்டக் கொள்கையை நிலைநாட்ட 22:78-ல் ஹுவ சம்மாக்கு முல் முஸ்லிமீன் அவனே உங்களுக்கு முஸ்லிமீன் எனப் பெயரிட்டுள்ளான் என்பதை அவன் முஸ்லிம் எனச் சொன்னான்-கூறினான் என்று திரித்துக் கூறுவது போல், 9:34-ல் வல்லஃதீன யக்னிசூனஃத் ஃதஹப வல்ஃபிழ்ழத வலாயுன்பிகூனஹாஃபீ ஸபீலில்லாஹ்-எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடா திருக்கிறார்களோ என்றிருப்பதிலுள்ள “சேமித்து வைத்துக்கொண்டு” என்றிருப்பதை தனது வழிகெட்ட சுயநல வாதத்தை நிலைநாட்ட இருட்டடிப்புச் செய்வது போல் (2:159) இன்னும் இவைபோல் பல தில்லுமுல்லுகள், திருகுதாளங்கள், உருட்டல் பெறட்டல்கள் செய்து வரம்பு மீறிச் செயல்படும் தாஃகூத் என்ற மனித ஷைத்தானாவது போல் நாம் 2:159 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆன் வசனங்களைத் திரித்து வளைத்து மறைத்துக் கூறவில்லை. குர்ஆன், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி எடுத்து எழுதியிருக்கிறோம். ஒவ்வொரு வரும் நேரடியாகக் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்களைப் படித்து விளங்க முன்வாருங்கள். 29:69 அல்லாஹ்வின் வாக்குறுதிப்படி நேர்வழியை அவனே எளிதாக்கித் தருவான்.

மேலே நாம் எடுத்தெழுதியுள்ள ஹதீஃத்களில் சிலவற்றில் அறிவிப்பாளர் வரிசையில் சில குறைபாடுகள் இருந்தாலும், அவை 9:34, 59:7 வசனங்கள் கூறும் கருத்தையே கூறுவதால் அவை ஏற்கத்தக்கவையே! இந்த மூட முல்லாக்களுக்கு ஹதீஃத்களைத் தரம் பிரிக்கும் ஆற்றலும் இல்லை. இவர்கள் கல்வி கற்ற புரோகித மதரஸாக்களில் ஹதீஃத் கலை முறையாகக் கற்றிக் கொடுக்கப்படுவதில்லை. காரணம் என்ன தெரியுமா? மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்ட இவர்களின் முன்னோர்களான ஆலிம்கள் என பெருமை பேசிக் கொண்டு, தங்கள் புரோகிதத் தொழிலுக்குச் சாதகமாகக் கள்ளநோட்டுக்களை அச்சடிப்பது போல் லட்சக்கணக்கான பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஃத்களைக் கற்பனை செய்து முஸ்லிம்களிடையே புழக்கத்தில் விட்டு வயிற்றையும், பையையும் நிரப்ப ஆரம்பித்தார்கள்.

அவையே கடந்த 1200 ஆண்டுகளாக முஸ்லிம்களில் நடைமுறையில் இருக்கின்றன. இன்று இவர்களின் புரோகித மதரஸாக் களில் படிப்பிக்கும் நூல்களில் நிறைந்து காணப் படுபவை பலகீன, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களே. இந்த நிலையில் ஹதீஃத்கலையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் துணிவு அவர்களுக்கு இருக்க முடியுமா? அப்படிக் கற்றுக் கொடுத்தால் அவர்களின் ஹராமான வயிற்றுப் பிழைப்பு நாறிப்போய்விடாதா? அவர்களின் வீடுகளிலுள்ள அடுப்புகளில் பூனை தூங்க ஆரம்பித்துவிடாதா? எனவே இந்த மூட முல்லாக்களுக்கு ஹதீஃத் கலைஞானம் கடுகளவும் இல்லை. நாம் 1984லிலிருந்து குர்ஆனை பொருள் அறிந்து படிப்பதுடன் ஹக்கீகத்துல் பிக்ஹ் என்ற உருது நூலையும் படித்து பொய்யான, பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களையும் அறிந்து கொண்டோம். முஸ்லிம் சமுதாயத்தின் அதலபாதாள வீழ்ச்சிக்கு இப்பொய்யான ஹதீஃத்களே அடிப்படைக் காரணம் என்பதை அறிந்திருந்ததால், அந்நஜாத்தில் அதுபற்றி எழுத இம்மவ்லவிகளைத் தூண்டி னோம். அவர்கள் முன்வரவில்லை.

காரணம் அதுபற்றிய ஞானம் அவர்களிடம் அப்போது இருக்கவில்லை. இப்போதும் தெளிவாக இல்லை. எனவே நாம் நஜாத் ஆரம்பித்த 2ம் இதழில் (மே 1986) ரமழான் இரவுத் தொழுகை பற்றி எழுதிவிட்டு 3ம் இதழிலிருந்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் 1986 வரை ஐந்து இதழ்களில் “ஹதீஃதுகளின் பாகுபாடுகள்” என்ற தலைப்பில் எழுதி வந்தோம். இது இம் மவ்லவிகளுக்குப் பெரும் மானக்கேடாகப் போய்விட்டது.

நீங்கள் எழுத வேண்டாம் மவ்லவிகளாகிய நாங்களே எழுதுகிறோம் என்று கூறி அந்த உருது கிதாபை என்னிடமிருந்து வாங்கி  “நபிவழி தொகுப்பு வரலாறு” எனத் தொடராக எழுத ஆரம்பித்தார். அவை தனிநூலாகவும் வெளிவந்தது. அப்படி இருந்தும் பொய்யன் பீ.ஜைக்கு ஹதீஃத்கள் பற்றி முழுமையான தெளிவான ஞானம் இல்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையே கடிக்க முற்பட்டுவிட்டதாக ஒரு கதை சொல்வார்களே அதுபோல் கலீஃபாக்களையும், நபிதோழர்களையும் பொய்யர்கள் எனத் தூற்றத் தொடங்கி இருக்கிறார். இம்மவ்லவிகளின் ஆபாக்களான-முன்னோர்களான மதகுருமார்களே பலவீனமான, இட்டுக்கட்டப்பட்டப் பொய்யான லட்சக் கணக்கான ஹதீஃத்களை தங்களின் சுயலாபத்திற்காக, அற்ப உலகியல் ஆதாயங்களுக்காக, ஹராமான வழியில் தொப்பையை நிரப்பக் கற்பனை செய்துப் பரப்பினார்கள். நபி தோழர்களுக்கு ஹராமான வழியில் தொப்பையை நிரப்பும் நோக்கம் கடுகளவும் இல்லை.

எனவே ஹதீஃத் என்ற பெயரால் பொய்களை இட்டுக் கட்டும் அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. இன்றும் இப்புரோகிதப் பூசாரிகளுக்குப் பொய் ஹதீஃதுகள் இல்லாமல் பிழைப்பு நடக்காது. இது கடந்த 1200 வருடங்களாக நடக்கும் தொடர் கதையாகும். எனவே 1200 வருடங்களுக்கு முன்னரே அல்லாஹ் “உலில் அல்பாப்” என்று கூறும் சில உண்மையான அறிஞர்கள் இந்த ஹதீஃத்களை பெரும் முயற்சி செய்து தரம் பிரித்துத் தந்தார்கள். அதற்காக அவர்கள் கைக்கொண்ட முறை நபிதோழருக்குப் பிறகு அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெரும் நபர்களின் அறிமுகம், நம்பகத்தன்மை, ஞாபகத் தன்மை, பொய்யரா, கேட்ட நபிதோழரை மறைத்துச் சொல்கிறாரா, யாரிடமிருந்து கேட்டதாகச் சொல்கிறாரோ அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இருந்ததா?

இப்படிப் பல கோணங்களில் விசாரித்தறிந்து, ஆய்ந்தறிந்து ஹதீஃத்களைத் தரம் பிரித்து எழுதிப் பாதுகாத்தார்கள். இப்படி ஐந்து லட்சம் அறிவிப்பாளர்களின் தரமான, தரமற்ற நிலைகள் அஸ்மாவுர் ரிஜால் என்ற நூலில் பதிந்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த 1200 வருடங்களாக ஹதீஃத் அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெறும் நபர்களின் தராதரம், உண்மையாளர்களா? பொய்யர்களா? என்று அலசி ஆராயப்பட்டுள்ளதே அல் லாமல், நபி தோழர்களில் எவரையும் எந்த அறி ஞரும் அவர்கள் உண்மை சொல்கிறார்களா? அல்லது பொய்யர்களா? என ஆய்வு செய்ததாக வரலாறு இல்லை.

எந்த நூலிலும் அப்படியயாரு ஆய்வு நடத்தி பதிவு செய்துள்ளதை நாம் பார்க்கவில்லை. அப்படியயாரு அயோக்கியத் தனத்தையே பொய்யன் பீ.ஜை. அரங்கேற்றி யுள்ளார். ஆக பொய்யர்களிலேயே தான்தான் மாபெரும் பொய்யன் என்பதற்கு அவரே ஆதாரமாக இருக்கிறார். முதலில் சேமித்து வைக்கும் பொருளுக்கு வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களை முறியடிக்க ஷைத்தானைப் பின்பற்றி பல பொய் வாதங்களை வைத்தார். ஒரு பொருளுக்கு ஒருமுறை மட்டுமே ஜகாத் என்ற பொய் வாதத்தை நிலைநாட்ட 9:34ல் “சேமித்து வைக்கும் பொருளுக்கு” என்றிருப்பதை இருட்டடிப்புச் செய்து “தங்கள் பொருளுக்கு” என்று உண்மையை மறைத்து எழுதி, பொருள் கிடைத்தவுடன் ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று தனது மனோசாட்சிக்கு விரோதமாக, மனோ இச்சைக்கு (ஷைத்தானுக்கு) அடிமைப்பட்டு வாதிட்டு வருகிறார்.

9:34 இறைவாக்கோ 59:7 இறைவாக்குச் சொல்வது போல் வெளியே செல்லவிடாமல் தடுத்துச் சேமித்து வைக்கும் பொருளுக்கு ஜகாத் கடமை என்கிறது. மற்றபடி இன்று நடை முறையிலிருக்கும் வருமான வரி பற்றியது அல்ல ஜகாத். வருமான வரி பற்றிச் சொல்வதாக இருந்தால் வெறும் 2டி% மட்டும் சொல்லுமா என்ற சாதாரண அறிவும் பொய்யன் பீ.ஜைக்கு இல்லை. சேமித்து வைக்கும் நிலை என்றால் அது தலைமுறை தலைமுறைக்கு இருக்க வாய்ப்பில்லை. அதற்கு கால நிர்ணயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த கால அளவைத்தான் அலீ(ரழி) ஒரு வருடம் என அறிவிக்கிறார்கள். அலீ(ரழி) சொல்வது பொய் அதாவது அலீ(ரழி) பொய்யர்(நவூதுபில்லாஹ்) என்பது பொய்யன் பீ.ஜையின் வாக்குமூலம். அந்த ஒரு வருடத்திற் குப் பின்னும் அச்செல்வம் அவரிடமே சேமிக்கப்பட்டு வெளியே செல்லாமல் தடுக்கப்பட்டிருந்தால் அடுத்த ஒரு வருடத்திற்கு அதற்குரிய ஜகாத் உண்டு. இதையே உமர்(ரழி) பொருள் களுக்கு வருடா வருடம் ஜகாத் கடமை என்று கூறி இருக்கிறார்கள்.

இங்கும் உமர்(ரழி) சொல் வது உண்மை அல்ல; பொய். உமர்(ரழி) பொய் யர் என்பது பொய்யன் பீ.ஜை.யின் வாக்கு மூலம் (நவூதுபில்லாஹ்) கலீஃபாக்களில், நபிதோழர்களில் யாருமே நபி(ஸல்) சொல்லாத, செய்யாத, அங்கீகரிக்காத ஒன்றை மார்க்கமாக்கினார்கள் என்று கடந்த 1200 ஆண்டுகளில் யாரும் சொன்னதாக எந்த முன்னுதாரணமும் இல்லை. அப்படிப்பட்ட பெரும் பழியை உமர்(ரழி), அலீ(ரழி) இரண்டு கலீஃபாக்கள் மீது சுமத்தும் பொய்யன் பீ.ஜை. எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக்கிறார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். செல்வத்திற்கு வருடா வருடம் ஜகாத் கொடுத்தால் செல்வம் கரைந்து செல்வந்தர்கள் ஏழையாகி விடுவார்கள் எனச் செல்வந்தர்களைப் பயமுறுத்தி அவர்கள் ஜகாத் கொடுப் பதைத் தடுத்தார். ஜகாத் செல்வத்தை மேலும் மேலும் வளரச் செய்யும் வட்டி செல்வத்தை அழித்தொழிக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க: 30:39)

அப்படியே செல்வம் வியாபாரம், தொழில் எதிலும் ஈடுபடுத்தப்படாமல் முடக்கி வைக்கப் பட்டிருந்தாலும், வருடா வருடம் ஜகாத் கொடுத்து செல்வம் 87 கிராம் தங்கம் அளவைத் தொட்டுவிட்டால் அதன்மீது ஜகாத் கடமை இல்லை. அப்படியானால் பொய்யன் பீ.ஜை. சொல்வது போல் வருடா வருடம் ஜகாத் கொடுப்பதால் செல்வந்தன், ஏழையாக ஆவானா? பீ.ஜையின் ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்யைப் பார்த்தீர்களா? 30:39ல் அல்லாஹ் சொல்வது பொய் (நவூதுபில்லாஹ்) நான் சொல் வதுதான் உண்மை என்று அல்லாஹ்வை மறந்து பிதற்றும் பொய்யன் பீ.ஜையின் நிலை நாளை என்னவாகும்? சிந்தியுங்கள்!

இந்தப் பொய் வாதத்தில் மூக்கறுபட்ட பின் அடுத்தப் பொய் வாதம் என்ன தெரியுமா? வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதால்தான் பெரும் பெரும் செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்கத் தயங்குகிறார்கள். ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என்றால் எல்லா செல்வந்தர்களும் ஜகாத் கொடுக்க முன் வருவார்கள்.

எப்படி இருக்கிறது பொய்யன் பீ.ஜையின் பொய் வாதம்? நாளை இந்தப் பொய்யன் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை என்றிருப்பதால்தான் 99.9% முஸ்லிம்கள் தொழுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளைத் தொழுகை மட்டும்தான் என்றால் முஸ்லிம்கள் அனைவரும் தொழுகை யாளிகள் ஆகிவிடுவார்கள் என்று பொய்யன் பிரசாரம் செய்ய ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பீ.ஜை.யும் அவரது பக்தகோடிகளும் ஐவேளைத் தொழுகைகளைப் பேணித் தொழுது, தொழுகையை நிலைநாட்டுவதில்லை என்பது ஊரறிந்த உண்மை.

அல்லாஹ் அல்குர்ஆனில் 32 இடங்களில் தொழுகையை நிலைநாட்டுங்கள். ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள் என்று மடக்கி மடக்கிச் சொல்வதிலிருந்தே தொழுகையும், ஜகாத்தும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவை என்பது உறுதியாகத் தெரிகிறது. இப்படி எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து-குஃப்ரிலாகி ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும், அதுவும் பொருள் கைக்குக் கிடைத்தவுடன் ஜகாத் கொடுக்க வேண்டும்.

ஒரு வருடம் கழிய வேண் டியதில்லை என்று அல்லாஹ்வும் அவனது தூத ரும் முடிவு செய்த வி­யத்தில் வேறு கருத்துக் கூறும் பீ.ஜையின் நாளைய நிலையை 33:36 இறைவாக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. நாளை மறுமையில் அவரும் அவரது பக்த கோடிகளும் அடையப்போகும் வேதனைகளை குர்ஆன் 33:66,67,68 இறைவாக்குகள் அப் பட்டமாக அறிவிக்கின்றன. (மேலும் பார்க்க 7:35-41, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45)

இந்த இறைவாக்குகளெல்லாம் எங்களைப் பற்றி அல்ல. முன்சென்ற மதங்களின் மதகுரு மார்கள் மற்றும் அவர்களது பக்தகோடிகள் பற்றிக் கூறுகின்றன என்று கூறி இந்த மவ்லவிகள் தங்கள் பக்தகோடிகளை ஏமாற்றி வருகின்றனர். முன்னைய மதகுருமார்களையும் அவர்களது பக்தகோடிகளையும் இந்த மவ்லவிகளும் அவர்களது பக்தகோடிகளும் ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்திருந்தால் இவர்களும் அதில் நுழைபவர்களாகவே இருக் கிறார்கள். (பார்க்க : புகாரீ: 3456, 7319, 7320, முஸ்லிம் 5184)

நாங்கள்தான் நேர்வழி காட்டக்கூடியவர்கள், இறைவனை அடையச் செய்யக்கூடியவர்கள், சுவர்க்கத்திற்கு வழிகாட்டக்கூடியவர்கள் எனப் பெருமை பேசும் அனைத்து மதங்களின் மத குருமார்களும் கடைந்தெடுத்த அயோக்கியர்கள், பொய்யர்கள், மக்களை நரகத்திற்கு இட்டுச் செல்லக் கூடியவர்கள், தாஃகூத்கள் என்பதை நீங்களே கீழ்க்கண்ட குர்ஆன் வசனங் களை நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள். 2:34,256,257, 7:36-40,146, 175-179,206, 27:14, 4:36, 44, 35:10, 2:159-162, 3:77, 4:27, 5:48, 6:157, 18:57, 45:23, 47:25, 21:19, 11:10, 16:22,23,49, 17:37, 25:63, 28:83, 31:7,18, 32:15, 35:10, 39:49, 72, 40:35,47,48,56,60, 45:37, 49:13, 57:23, 59:23, 74:1-3, 34:31-33, புகாரீ 4850, 4918, 6071, 6657, முஸ்லிம் 2620.

இத்தனை குர்ஆன் வசனங்களையும், யார் நேரடியாகப் படித்து அறிகிறார்களோ, ஹதீஃத்களையும் படித்துணர்கிறார்களோ அவர்கள் நிச் சயமாக அறிந்து கொள்ள முடியும். நாங்கள் தான் ஆலிம்கள், மவ்லவிகள் குர்ஆனைச் சரியாக விளங்கி மக்களுக்குப் போதிக்கும் உரிமை பெற்றவர்கள் என்று வீண் பெருமை பேசுகிறவர்கள், நாளை தங்களின் பக்தர்களோடு நரகில் கிடந்து வெந்து கரிக்கட்டைகளாக ஆகிக் கொண்டு ஒப்பாரி வைக்கப் போகிறார்கள் என்பதை, கோடிக்கணக்கில் பல தலைமுறைகளுக்குச் செல்வத்தைச் சேமித்துக் குவித்து வைத்துப் பெருமைப்படும் பெரும் செல்வந்தர்களுக்கு பொய்யன் பீ.ஜையின் ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும். மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்ற வழிகெட்ட மூட ஃபத்வா பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தம் செல்வத் திலிருந்து ஒரு சிறு பகுதியைப் பொய்யனுக்கு வாரி இறைக்கின்றனர்.

பொய்யனின் இலட்சியமும் அதுதானே! செல்வந்தர்களோ கப்ரைச் சந்திக்கும் வரை செல்வத்தைக் குவிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள் என்று 102:1,2 இறை வாக்குகள் கூறுகின்றன. நாளை அவர்களின் நிலை பற்றி 102:3-8 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. 30 கோடி ரூபாயைத் தங்கத்தில் முதலீடு செய்து நகைக்கடை வைத்திருக்கும் ஒரு நகைக் கடைக்காரர், 30 கோடி ரூபாய்க்கு வருடா வருடம் 2% சதவீதம் என்று 75 லட்ச ரூபாயை ஜகாத்தாகக் கொடுக்க முடியுமா? என்று கேட்டார். அதுபோல் 40 கோடி செல்வம் இருந்தால், 1 கோடி வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் 100 கோடி செல்வம் இருந்தால் 2டி கோடி வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும். இது எப்படிங்க முடியும்? ஒரு சில ஆயிரக்கணக்கில் ஜகாத் கொடுக்கும்போது ஜகாத் வருடா வருடம் கொடுக்க முன் வந்த இந்தச் செல்வந்தர்களுக்கு, கோடிக் கணக்கில் ஜகாத் வருடா வருடம் கொடுக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களின் செல்வத்தில் 30:39 இறைவாக்கில் வாக்களித்திருப்பது போல் பல மடங்கு பெருகிப் பல நூறு கோடியானவுடன், கோடிக்கணக்கில் வருடா வருடம் ஜகாத் கொடுப்பதா என மலைக்கிறார்கள். அவர்களின் மலைப்புக்கு நீர் வார்த்தது போல் பொய்யன் பீ.ஜை. அவர்களை மகிழ்விக்க ஒரு பொருளுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று வழிகெட்ட குருட்டு ஃபத்வாவை வழங்கி வருகிறார். இந்தக் குருட்டு ஃபத்வா மூலம் இச்செல்வந்தர்களை பொய்யன் பீ.ஜை. எப்படி பெரும் இழப்புக்கு ஆளாக்கி வருகிறார் என்று பாருங்கள்.

100 கோடி செல்வம் உடைய ஒரு செல்வந்தன் இந்த வருடம் 2டி கோடி ஜகாத் கொடுக்கிறான் என்றால் அந்த 2டி கோடிதான் அவனது நிரந்தர வைப்பு நிதி. வருடா வருடம் அவன் தொடர்ந்து ஜகாத் கொடுத்து வந்தால் வருடா வருடம் அவனது நிரந்தர வைப்பு நிதியில் அது சேர்ந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் அவனது அஜல் முடிந்து மரணத்தைத் தழுவு கிறான். அவன் இதுவரை எனது செல்வம், எனது செல்வம் எனப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தானே அது இப்போது அவன் செல்வமில்லை. அவனது வாரிசுகளினதும், பினாமிகளினதும் செல்வமாகிவிட்டது. அவன் தனது செல்வம், தனது செல்வம் என்று பெருமை பேசிக்கொண்டிருந்தானே அந்தச் செல்வத்தை இழப்பதோடு மட்டுமல்ல, அவனது வாரிசுகளும், பினாமிகளும் அதை அனுபவித்து மகிழ்வது மட்டுமல்ல, நாளை மறுமையில் அவை நரக நெருப்பில் காய்ச்சப்பட்டு அவனது விலாப் புறங்களிலும், நெற்றியிலும், முதுகிலும் சூடு போடப்படும். இதுதான் நீ உனக்காகச் சேமித்து வைத்திருந்தது. நீ சேமித்து வைத்திருந்ததைச் சுவைத்துப் பார் என்று அச்செல்வந்தர்களுக்குக் கூறப்படும். (பார்க்க : 9:34,35)

நபி(ஸல்) அவர்களும் இப்படி எச்சரித்துள் ளார்கள். மனிதன் தனது செல்வம் தனது செல்வம் என பெருமையடிக்கிறான். அவன் உண்டு கழித்தது, உடுத்திக் கிழித்தது, மறுமை வைப்பு நிதியில் சேமித்தது மட்டுமே அவனது செல்வம் எஞ்சியவை அவனது வாரிசுகளுக்குரியதாகும். (ஹதீஃத் சுருக்கம்) செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு பொய்யன் பீ.ஜை.யின் வழிகெட்ட மூட ஃபத்வாவை நம்பி உங்கள் செல்வத்திற்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் சேமித்து வைத்திருக்கிறீர்களே அது உங்கள் செல்வம் அல்ல. நீங்கள் வருடா வருடம் ஜகாத், சதக்கா கொடுத்து மறுமை வைப்பு நிதியில் சேர்த்து வைப்பது மட்டுமே உங்கள் செல்வம். அதுவே நாளை மறுமையில் பலனளிக்கும். வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் நீங்கள் சேமித்து வைக்கும் செல்வம் நாளை மறுமையில் நெருப்பிலிட்டுக் காய்ச்சப்பட்டு உங்கள் நெற்றி, விலா, முதுகில் சூடு வைக்கப்படும் எச்சரிக்கை. (பார்க்க : 9:34,35)

“ஈர்ப்பு அலைகளின் விண்வெளி இரைச்சல்”

– எஸ். ஹலரத் அலி, திருச்சி-7.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீபன் 100 ஆண்டுகளுக்கு முன், 1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை (Gravitational force) குறித்த தனது பொது சார்பியல் தத்துவத்தை (General Theory of Relativity) வெளியிட்டார். அண்டத்தின் கண்களுக்குப் புலப்படாத, இன்னொரு இருண்ட பக்கம் குறித்த தத்துவம் அது. விண்வெளியில் சூரியன் போன்றுள்ள நட்சத்திரங்கள் தங்கள் வாழ்வின் இறுதியில் கருந்துளைகளாக மாறும். இதையடுத்து உருவாகும் மாபெரும் வெடிப்பின்போது (Big bang) வலுவான ஈர்ப்பு விசை அலைகள் உருவாகும் என்றார்.

இந்த அலைகள், தான் உருவான இடத்தை ஒட்டிய விண்வெளியையும், காலத்தையும் (Space and Time)  சேர்த்து மடக்கி, அதன் உருவத்தையே சிதைக்கும் என்றார் அவர். இந்தச் சிதைவு அந்த இடத்துடன் நிற்காது. அது விண்வெளியின் பிற பகுதிகளுக்கும் அலைகளாகப் பரவும் என்றார். ஆனால், ஐன்ஸ்டீனின் இந்த கருத்தை உறுதி செய்ய முடியாமல் தவிர்த்து வந்தது இயற்பியல் உலகம். அதே சமயம் நட்சத்திரங்களும் தங்கள் ஒளியை இழந்து மறையும் என்ற அறிவியல் உண்மையை அல்லாஹ் அன்றே கூறியது சிந்திக்கத்தக்கது.

மாபெரும் நட்சத்திரங்கள் தங்கள் எரியும் ஆற்றலை இழந்து இறுதியில் கருந்துளைகளாக மாறும் மாபெரும் நிகழ்ச்சியை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் (Black Hole) மீது நாம் சத்தியம் செய்கின்றோம் (உங்களுக்கு) அறிவிருந்தால் நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியம் என்பதை தெரிந்து கொள்வீர்கள். அல்குர்ஆன் : 56:75,76

இவ்வாறான இரு (Binary Stars) நட்சத்திர கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது (யஷ்ஆ யழிஐஆ) பெருவெடிப்பு எனும் அண்டவெளியில் அதிர்வுகள் ஏற்பட்டு அலைகளாக விண்வெளியில் பரவும். இந்த ஈர்ப்பு அலைகள் சுருங்கி விரிவதன் மூலம் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஈர்ப்பு அலைகளின் விரிவாக்கம்தான் வெளியையும் காலத்தையும் (Space & Time) உருவாக்குகின்றன. ஓசை மயமான இந்த ஈர்ப்பாற்றல் அலைகள் பிரபஞ்சத்தின் ஒலித்தடங் கள் என்று அழைக்கப்படுகின்றன.

கடந்த பிப்ரவரி 11.2016 அன்று, இயற்பியல் விஞ்ஞானிகள் ஈர்ப்பு அலைகளின் இருப்பை (Existance of Gravitational Waves)  உலகத்துக்கு அறிவித்தனர். இந்த கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் போற்றிக் கொண்டாடி வருகிறது. காரணம் 1916 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த தேடல், நூறு ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டுதான் முடிவுக்கு வந்துள்ளது. அதனால்தான் ஈர்ப்பு அலைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அறிவியல் அறிஞர்களால் புகழப்படுகிறது. இந்த ஈர்ப்பு அலைகளின் விளைவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் பொதுச் சார்பியல் கோட்பாடு அடிப்படையாக என்ன சொல்கிறது என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

பொதுச் சார்பியல் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்து எந்த ஒரு பொருளும் (Massive Object) தன்னைச் சுற்றியுள்ள காலவெளியை (Space-Time) வளைக்கிறது. அதிக நிறையுள்ள பொருள் (Massive Object) தன்னைச் சுற்றியுள்ள காலவெளியை (Space-Time) மிக அதிகமாக வளைக்கிறது என்பதே நியூட்டன் ஈர்ப்பு விசைக் கோட்பாடு. எந்த இரு பொருளுக்கும் இடையில் ஈர்ப்பு விசை உள்ளது. அதனால்தான் மேலே எறியப்பட்ட கல் பூமியை நோக்கி திரும்ப வருகிறது. அதைப்போல நிலா பூமியை சுற்றி வருவதற்கும் இந்த பூமியின் ஈர்ப்பு விசைதான் காரணம் என்று கூறுகிறது.

ஆனால் ஐன்ஸ்டீன் பொதுச் சார்பியல் கோட் பாடோ நிலா பூமியை சுற்றி வரக்காரணம் பூமியை சுற்றி உள்ள வெளி (Space)  வளைந்துள்ளதால்தான் (Space is curved) அதே மாதிரி மேலே எறியப்பட்டப் பொருள் பூமியை நோக்கி வரக் காரணம் பூமியின் மிக அருகில் வெளி மிக அதிகாக வளைந்துள்ளதால் தான் நிலா மிக தொலைவில் இருப்பதால் வளைவின் வலிமை இதைவிட சற்று குறைவானதாக இருக்கிறது. அதனால்தான் அது நேரடியாக பூமியில் வந்து விழவில்லை என்று விளங்குகிறது. இதன் மூலம் ஐன்ஸ்டீன் ஈர்ப்புவிசை என்பதே காலவெளி யின் வளைவுதான் என்று சொன்னார்.

இப்போது நாம் கண்டுபிடித்த ஈர்ப்பு அலை களை வெளியிட்ட ஈர்மை கருந்துளைகளில் ஒரு கருந்துளை 29 மடங்கு சூரியனின் நிறையும் இன்னொரு கருந்துளை 36 மடங்கு சூரியனின் நிறையும் கொண்டது. இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரே கருந்துளையாக மாறியபின் அதன் நிறை 62 மடங்கு சூரயனின் நிறைதான். மீதமுள்ள மூன்று மடங்கு சூரியனின் நிறை முழுவதும் ஈர்ப்பு அலைகளாக மாறி பிரபஞ்சத்தில் பரவியது. ஈர்ப்பு அலைகள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கின்றன. (நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்) அப்படி இருந்தும் இந்த ஈர்ப்பு அலைகள் பூமியை வந்தடைய எடுத்துக் கொண்ட காலம் கிட்டத்தட்ட 130 கோடி ஒளியாண்டு வருடங்கள்.

மின்காந்த அலைகளின் கண்டுபிடிப்பு நமக்கு பிரபஞ்ச ரகசியங்களை அறிய உதவியது போல இந்த ஈர்ப்பு அலைகளின் கண்டுபிடிப்பு இதுவரை அறியமுடியாத பிரபஞ்சத்தின் பல மர்மங்களை விளக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அது மட்டுமில்லாமல் ஈர்ப்பு அலைகளின் கண்டு பிடிப்பால் இந்த பிரபஞ்சம் பெருவெடிப்பின் போது, இந்த அலைகள் சுருங்கி விரிவடைவதால் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக கருதப்படுகிறது. விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய் வின் மூலம், கருந்துளைகளின் மோதலில் எழுந்த நம் காதுக்குள் கேட்காத ஈர்ப்பாற்றல் அலை ஓசையை நவீன கருவிகள் மூலம் பதிவு செய்துள்ளனர்.

கருந்துளைகள் உருவாக்கிய ஈர்ப்பலைகளின் இரைச்சல் ஒலி, விண்வெளி பெருவெளியில் தொடர்ந்து வருகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வானத்தின் ஈர்ப்பு அலை இரைச்சலை கேட்டுள்ளார்கள்.

நிச்சயமாக நீங்கள் பார்க்காத ஒன்றை நான் பார்க்கிறேன். நீங்கள் கேட்காத ஒன்றை நான் கேட்கிறேன். வானம் இரைகிறது. அதற்கான தகுதியுடன் அது இரைகிறது. வான்வெளி எங்கும் மலக்குமார்கள் நிறைந்துள்ளார்கள். எந்தளவு என்றால் நான்கு விரற்கடை அளவு இடைவெளியிலும் ஒரு மலக்கு குனிந்து வணங்கியோ, அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்யாமல் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்(ரழி), ஆதாரம்: அஹ்மது 5:173, திர்மிதீ 2312, இப்னு மாஜா, 4190, அல்ஹாக்கிம் 2:510, ஷேக் அல்பானீயின் அஸ் ஸஹீஹா 1722.

(Verify! I see what you do not see, and I hear you do not hear, The heaven is creaking and it has every right to Creak, for there is no space in it the width of four fingers but there is an angel there, placing his forehead in prostration of Allah)

இரண்டு பெரும் நட்சத்திரங்கள் ஒளி இழந்து பெரும் வேகத்தில் அதிக நிறையுடன் மோதும் போது ஈர்ப்பாற்றல் ஒலியானது எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாய், ஒரு ஒட்டகத்தின் மீது பளு மிகுந்த சுமையை ஏற்றும்போது அதை சுமக்க முடியாமல் அந்த ஒட்டகம் எழுப்பும் முனங்கல் ஒலி போன்று இருப்பதாக விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

The heaven Atat (Creaking) and it has every right to creak.
And the Atit is the Sarir Ar-Rahi(camel’s Creaking) Meaning, if there was a heavy load on top of the camel, you would hear to it a creaking sound due to heavy weight of the load.
https/www.youtube.com/watch annajaath.com

வானத்தின் ஈர்ப்பலை இரைச்சலின் ஒலிப்பதிவு.

மேலும் அல்லாஹ்வின் ஏழு வானங்களிலும் வானவர்கள் நெருக்கமாக இருந்து அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து வருவதையும் அறிய முடிகிறது. நபி (ஸல்) அவர்கள் இஸ்ரா என்ற விண்வெளி மிஹ்ராஜ் பயணத்தில், ஏழாம் வானத்தில், அங்கு பைத்துல் மஹ்மூர் என்னும் வளமான இறையில்லம் எனக்கு காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் கேட்டேன். இதுதான் அல்பைத்துல் மஹ்மூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால், திரும்ப இதனிடம் வரமாட்டார்கள். அதுவே அவர்களின் கடைசியாக நுழைந்ததாகிவிடும் என்று கூறினார்கள். புகாரி : 3207.

அல்-தபரீ விரிவுரையில் இப்னு மஸ்வூத்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். எல்லா வானங்களிலும் வானவர்கள் நிறைந்துள்ளனர். எந்தளவு என்றால் நான்கு விரற்கடை இடைவெளியிலும் ஒரு வானவர் நின்ற நிலையில் அல்லது குனிந்த நிலையில் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து கொண்டிருப்பதாக கூறி, இவ்வசனத்தை ஓதினார்கள்.

(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்) குறிப்பிட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் ஒருவருமில்லை, நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்து) அணி வகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்) மேலும், நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வை துதி செய்து) தஸ்பீஹ் செய்பவர்களாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன்:37:164-167)

விண்வெளியில் ஒளியின் வேகத்தில் பயணிக் கும்போது காலம் சுருங்கும் இயற்பியல் கோட்பாடு கள் மூலம் காலப்பயணம் சாத்தியம் என ஐன்ஸ்டீன் முதல் ஸ்டீபன் ஹாக்கிங் வரை பல அறிவியல் அறிஞர்களால் கூறப்பட்டிருந்தாலும், செயல்முறையில் இதனை இன்னும் சாத்தியப்படுத்தியதாக எந்த பதிவும் இல்லை. கால வெளியில் பயணம் செய்ய வேண்டுமென்றால், ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் பயணிக்க வேண்டும். அப்படி பயணம் செய்யப் பயன்படும் அந்த பாதைகளை (நிலிrது க்ஷிலியிeவி) என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மனிதனால் போகமுடியாத அளவில் காணப்படும் அந்தத் துளைகள், இந்தப் பேரண்டத்தில் பல கோடிக்கணக்கிலிருக்கின்றன.

நபி(ஸல்) அவர்கள் விண்ணேற்றம் செய்த இஸ்ரா மற்றும் மிஹ்ராஜ் பயணம் கூட சிறப்பு சார்பியல் தத்துவத்தை அனுபவப்பூர்வமாக விளக்குகிறது. ஐன்ஸ்டீன் கூறியது இதுதான். ஒளியின் வேகத்தில் செல்லும் போது அளவில் சுருக்கம் ஏற்படும், எடை கூடும், காலம் சுருங்குதல் போன்ற எண்ணற்ற வினோதங்கள் நடைபெறும் என்றார்.

நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் மக்காவிலிருந்து பைத்துல் முகத்திஸ் (ஜெருஸலம்) சென்று அங்கிருந்து ஏழாம் வானம் வரை சென்று அல்லாஹ்விடம் உரையாடி கடமையான ஐவேளைத் தொழுகையைப் பெற்று வந்தார்கள். நாம் பூமியில் கணக்கிடும் கால நேரத்தைக் கொண்டு இப்பயணத்தை விளக்க முடியாத அளவில் இப்பயணம் ஒரு அற்புதமாக உள் ளது. மேலும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்.

நிச்சயமாக உங்களது இறைவனிடத்தில் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகின்ற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். அல்குர்ஆன்: 22:47

அறுநூறு இறக்கைகள் கொண்ட ஒளியால் படைக்கப்பட்ட ஜிப்ரீல்(அலை) அவர்களுடன், ஒரு காலடி தூரத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவு பயணம் செய்யக்கூடிய புராக் என்ற வாகனத்தில் பயணிக்கும்போது வெளி நேரம் சுருங்கி விடுவதால் ஓர் இரவில் நடந்த மிஹ்ராஜ் காலப் பயணம் அறிவியல் ரீதியாகவே உண்மையாகிறது.

நமது கணக்குப்படி ஒளியின் வேகம் நொடிக்கு 30,00,00 2,86,282 மைல்) ஒளியால் படைக்கப்பட்ட ஜிப்ஹீல்(அலை) அவர்களின் வேகமும், புராக் வாகனத்தின் வேகமும் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.

சொர்க்கம், நரகம் உண்டா என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் அறிவியல் உலகில், அவை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் கூறியதை, இன்றைய அறிவியல் உலகமும் அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக கூறுவது கவனிக்கத்தக்கது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விசித்திரம் தான் கேன்ஸ்ரி 55 இ சமீபத்திய வரலாற் றில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகவும் புதிரான கிரகங்களில் கேன்ஸ்ரி 55 இ கிரகமும் ஒன்றாகும். குறிப்பாக, கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் வியப்பான கலவையானது அதை ஒரு நரகம் போல் காட்சிப்படுத்துகிறது என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

கேன்ஸ்ரி 55 இ கிரகத்திற்கு இரண்டு முகங்கள் அல்லது இரண்டு அரைக்கோளம்  உள்ளது. கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் ஒரு முகம் ஆனது கொதிக்கும் எரிமலைக் குழம்பால் மூடப்பட்டிருக்கிறது. மற்றொரு முகமானது நிரந்தர இருளான நிலையில் இருக்கிறது.

சூரியனை நோக்கி உள்ள கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் பகுதியானது சுமார் 1,000 டிகிரி செல்சியஸ் உயர் வெப்பநிலையில் உள்ளது. அது மட்டுமின்றி அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நொடியில் உயிரைப் பறிக்கும் விஷ வாயுவான ஹைட்ரஜன் சயனைடுதனை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

செவ்வாய் போன்ற உயிர் வாழத் தகுதியில்லாத கிரகங்கள் பல இருப்பினும், பைபிள் விவிலிய விளக்கங்களின்படி நரகம் ஆனது இப்படித்தான் இருக்கும் என்பதை ஒற்று இருக்கிறது கேன்ஸ்ரி 55 இ…

பூமி கிரகம் முழுக்க ஆங்காங்கே எரிமலை ஆறுகள் மற்றும் பெரிய பெரிய மாக்மா குளங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் அப்படித்தான் இருக்கும் கேன்ஸ்ரி 55 இ. அது மட்டுமின்றி கேன்ஸ்ரி 55 இ. பூமி கிரகத்தை விட இரண்டு மடங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியால் கண்காணிப்பு நிகழ்த்தப்பட்டு, இந்த கிரகத்தில் முதல் வெப்பநிலை வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் நிலவு பூமியோடு பூட்டப்பட்டுள்ளது போல, கேன்ஸ்ரி 55 இ. கிரகம் ஆனது சூரியனோடு பூட்டப்பட்டுள்ளது. எனவேதான் அக்கிரகத்தின் ஒரு பகுதியானது எப்போதுமே கொளுத்தும் சூரியனை எதிர்கொள்கிறது. மறுபக்கம் நிரந்தரமாக இருளில் மூழ்கி கிடக்கிறது.

இவை மட்டுமின்றி கேன்ஸ்ரி இ கிரம் ஆனது ஒரு குண்டு வெடிப்பு அல்லது உள்வெடிப்பு நிகழ்ந்த தற்கு சமமான அளவிற்கு வலுவான கதிர்வீச்சை வெளியிடுகிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விண்வெளியில் இதுபோன்ற ஒரு விசித்திரமான மற்றும் படுபயங்கரமான ஒரு கிரகப்பொருள் இருக்கவே முடியாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதனால்தான் இதை நரகம் என்று குறிப்பிடுகின்றனர்.

ஒருமுறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். அவர்கள், இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நாங்கள், அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னோம்.

நபி(ஸல்) அவர்கள், இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கி எறியப்பட்ட கல்லாகும். அது இந்த நேரம் வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம் : 5466.

ஒளி ஆற்றல் மங்கி மறைந்து, கருந்துளைகளாக மாறும் நட்சத்திரங்களின் கிறீச் ஒலி பூமியை அடைய 130 கோடி ஒளியாண்டு ஆகிறது. நமது நட்சத்திரமான சூரியனிடமிருந்து ஒளி, பூமிக்கு வர எட்டு நிமிடங்களாக்கிறது. நரகத்தில் போடப்படும் கற்கள் அதன் அடி ஆழத்தை அடைய எழுபது வருடங்கள் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் அற்புதங்கள் மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.

ஆனால் அனைத்தும் உண்மையானவை. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு அல்லாஹ்வின் தூதர் சொன்ன வான்வெளி ஈர்ப்பாற்றல் இரைச்சல் ஒலி அலையை  இன்றைய இயற்பியல் விஞ்ஞானிகள் உண்மைப்படுத்திவிட்டார்கள். காலப்பயணத்தை மிஹ்ராஜ் பயணம் மெய்ப்பிக்கிறது. நரகம் இருக்க வாய்ப்புள்ளது என அறிவியல் உலகம் கருதுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

(நபியே!) பாக்கியம் பெற்ற இந்நெறிநூலை உம்மீது அருளினோம். அவர்கள் இதன் வசனங்களைக் கவனத்து ஆராய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். அல்குர்ஆன்:38:2

Previous post:

Next post: