அமல்களின் சிறப்புகள்….

in 2018 மே

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு!

M. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.

தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி.

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையி லிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.

திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி…

பக்கம் 378ல் முதலாவது பாராவில் சொல் லப்பட்டுள்ள செய்தி.

மெளலானா ஜஃபர் அஹ்மத் அவர்கள் வாயிலாக, ஹஜ்ரத் மெளலானா கலீல் அஹ்மத் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் வாழ்க்கை வரலாறாகிய “தஃத்கிரத்துல் கலீல்” என்ற நூலில் எழுதியுள்ளதாவது: ஹஜ்ரத் அவர்கள் ஐந்தாவது தடவையாக ஹஜ்ஜுக்குச் சென்றபோது “தவாபுல் குதூம் செய்வதற்காக ஹரம் ஷரீஃபிற்குள் வந்தார்கள். அந்த நேரத்தில் மெளலானா இம்தாதுல்லாஹ் முஹாஜிரே மக்கீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் பிரதான கலீபாவும், கஷ்பு என்னும் ஞானப் பார்வை உடையவருமான மெளலானா முஹிப்புதீன் சாஹிப் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் சலாவாத்துடைய ஒரு கிதாபை வைத்து ஓதிக் கொண்டிருந்தார்கள். நான் அவர் களின் அருகில் உட்கார்ந்திருந்தேன். திடீர் என்று என்னை நோக்கி, இப்பொழுது ஹரம் ஷரீஃபிற்குள் யார் வந்தது? ஹரம் ஷரீஃப் முழுவதும் ஒளிமயமாகி விட்டதே என்று கேட்டார்கள். நான் மெளனமாக இருந்தேன். அதற்குள் மெளலானா கலீல் அஹ்மத் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தவாஃபை முடித்துக்கொண்டு மெளலானா முஹிப்புதீன் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களுக்கு சமீபமாக சென்றார்கள். உடனே மெளலானா அவர்கள் மரியாதைக்காக எழுந்து நின்றார்கள். இப்போது ஹரம் ஷரீபிற்கு யார் வந்தது என்று நானே சொல்கிறேன் என்பதாக சிரித்துக் கொண்டே கூறினார்கள்.

எமது ஆய்வு :

தப்லீக் ஜமாஅத்தினரின் தலீம் தொகுப்பு நூலான அமல்களின் சிறப்பு (அசி) புத்தகத்தின் அடுத்த கப்ஸா கதைதான் மேலே உள்ள கற்பனை சம்பவம். அதைப் படித்ததும் உங்களுக்கு தலையை சுத்தியிருக்கும். இதைப் புரிந்து கொள்வதற்காக மேற்கண்ட சம்பவத்தை எத்தனை தடவைகள் படித்த பிறகு புரிந்து கொண்டீர்கள் என்பதை நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல இக்கதையில் நடித்த பாத்திரங்கள் எத்தனை நபர்கள் என்பதையும் புரிந்துகொள்ள பலமுறை படித்திருப்பீர்கள்.

இதை பலமுறை படித்தும் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்காக, கப்ஸா கதையில் நடித்திருக்கும் மூன்று நடிகர்களைப் பற்றியும், கப்ஸா கதையின் சுருக்கமும் இங்கே ஓர் அறிமுகமாக முன் வைக்கப்படுகிறது.

இம்தாலுல்லாஹ் முஹாஜிரே மக்கீ என்பவர் ஒரு பெரியார். கதையில் நடிக்காதவர், அறிமுகம் மட்டும் செய்யப்பட்டுள்ளார்.

1. இந்த முஹாஜிரே மக்கீயின் கலீபா தான் முஹிப்புதீன் என்பவராம். இக்கதையின் துணை நடிகராக நடித்துள்ளார். இவர் எந்த அளவுக்கு பெரியார் என்றால், முஹாஜிரே மக்கீயின் கலீபா மட்டும் அல்ல; கஷ்பு என்னும் ஞானப் பார்வை இவருக்கு இருக்கிறதாம். அதாவது மறைவான விஷயங்களை அறியக் கூடியவராம்.

2. இப்பேர்பட்ட முஹிப்புத்தீனை விட ஆகப் பெரியார் இக்கதையின் கதாநாயக நடிகர் கலீல் அஹ்மத் இவர் எந்த அளவுக்கு பெரியார் என்றால், இவரது வாழ்க்கை வரலாறு “தஃத்கிரத்துல் கலீல்” என்ற நூலாக வெளிவந்திருக்கிறதாம். அதனால் இவர் பெரியார்களுக்கெல்லாம் பெரியாராக, கதாநாயகன் வேடத்தில் நடிக்கிறார். உலகத்தின் ஒன்பது அதிசயங்களை விட உலக மாந்தர்கள் எவராலும் செய்ய முடியாத சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது இவர் ஐந்தாவது தடவையாக ஹஜ்ஜுக்குச் சென்றபோது, அல்லாஹ்வின் வீடாகிய கஃபத்துல்லாஹ் அதாவது ஹரம் ஷரீஃப் முழுவதும் ஒளிமயமாகி விட்டதாம்.  அதனால் அந்தப் பெரியார் தமது பக்கத்தில் வந்த போது கலீபா முஹிபுத்தீன் மரியாதை செய்வதற்காக எழுந்து நின்றாராம்.

இந்த இரண்டே இரண்டு நடிகர்களை வைத்து மேலே காட்டிய அதிசயத்தக்க கப்சா கதையை அறிவிப்பாளர் நடிகராக வரும் ஜஃபர் அஹ்மத் வாயிலாக தெரிவிக்கிறது “அசி” புத்தகம்.

குர்ஆனிலும், ஹதீஃதிலும் சொன்னதை செவிமடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து உறுதிபூண்டுள்ள இந்த கதையின் முரண்பாடுகளை இனி கவனிப்போம்.

பெரியார்கள் என இப்புத்தகம் வர்ணிக்கும் பேர்வழிகளுக்கு முன்னால் “மெளலானா” என்ற டைட்டிலை தந்திருக்கிறது “அசி” புத்தகம். மெளலானா என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் அல்குர்ஆன் 2:286 ஆயத்தை கவனியுங்கள். அதில் அல்லாஹ்வை “அன்த்த மெளலானா” என்ற அரபி வார்த்தையைக் கொண்டு, “நீயே எங்கள் பாதுகாவலன் (இரட்சகன்)” என்ற அர்த்தத்துடன் அழைக்கிறது. அல்லாஹ்வை மட்டும் “மெளலானா” என்று குர்ஆன் அழைக்கிறது.

இந்திரியத்திலிருந்து படைக்கப்பட்ட மனிதனை (86:5-7), அவசரக்காரன் (21:37), அறியாமைக்காரன் (33:72), பலஹீனமானவன் (4:28), நன்றி கெட்டவன் (17:67) என் றெல்லாம் அல்லாஹ் பொதுவாக அறிவித்துவிட்ட பின்னும், முழு அறிவைப் பெற்றிராத பேர்வழிகளை எல்லாம் அல்லாஹ்வுக்கு ஒப்பாக “மெளலானா” என்று அழைத்து “அசி” புத்தகம் அல்லாஹ்வை கேலி செய்கிறது.

கலீல் அஹ்மத் என்பவர் ஹரம் ஷரீஃபுக் குள் வந்ததும் ஹரம் ஷரீஃப் முழுவதும் ஒளி மயமாகி விட்டதாக நெஞ்சழுத்தத்துடன் கூறுகிறார் “அசி” புத்தக ஆசிரியர். கலீல் அஹமது வருவதற்கு முன் அல்லாஹ்வின் ஒளிமிக்க அந்த வீடு இருண்டு போய் கிடந் தது என்று நினைத்துக் கொண்டாரா “அசி” ஆசிரியர். உம்மை மனிதனாகப் படைத்த அந்த ரப்புவை கண்ணியப்படுத்தத் தெரியாத அறியாமைக்காரனாக, அவசரக்கார னாக, பலஹீனனாக, நன்றி கெட்டவனாக இருக்கின்றார் இந்த மனுஷன்.

கலீல் அஹ்மது ஹரம் ஷரீஃபுக்குள் வரு வதற்கு முன்பு, அய்யா பெரியாரே! சல வாத்து புத்தகத்தை நீர் ஓதிக்கொண்டு இருந்ததாக சொல்லுகிறதே “அசி” புத்தகம். அப் படியானால் அந்த புத்தகத்தை இருட்டிலா உட்கார்ந்து ஓதிக் கொண்டிருந்தீர்? ஸல வாத்து என்றால் என்னவென்று தெரியுமா? உமக்கு? தொழுகையில் அத்தஹிய்யாத்தில் ஓதவேண்டிய “அல்லாஹும்ம ஸல்லி அல்லா முஹம்மதின்” என்று ஓதுகிறோமே அதுதான் ஸலவாத்து. இதற்கென்ன ஒரு புத்தகம் தேவைப்படுகிறது? நீர் தொழுகிற ஆளாகவும் தெரியலே; குர்ஆன், ஹதீஃத் தெரிந்த ஆளாகவும் தெரியவில்லை. தொழு கிற ஆளாக இருந்தால், ஸலவாத்திற்கு என்று தனியாக ஒரு புத்தகம் வைத்திருக்கமாட்டீர். நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத “ஸலவாத்துன்னாரியா” போன்ற கண்டவைகளையும் ஸலவாத் என்று அப்புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார்கள். இவர் இதைப் படிக்கத்தான் ஹரம் ஷரீஃபுக்குள் போனாரா?

கலீல் அஹ்மத் ஹரம் ஷரீஃபுக்குள் வந்ததும் ஹரம் ­ரீஃப் முழுவதும் ஒளிமயமாகி விட்டது என்று முஹிப்புதீன் கூறிய வி­ யம் கலீல் அஹ்மதின் வாழ்க்கை வரலாறா கிய “தஃத்கிரத்துல் கலீல்” என்ற நூலில் இருப்பதாக “அசி” புத்தகம் கூறுகிறது. குர் ஆனின் 80:11 வசனத்தில் “இன்னஹா தஃத்கிரதுன்”. இது (குர்ஆன்) ஓர் நினைவூட்டல் (நல்லுபதேசம்) ஆகும் என்று கண்ணிய மிக்க அல்லாஹ் தெரிவிக்கும்போது, கலீல் அஹ்மதுவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத் திற்கு “தஃத்கிரத்துல் கலீல்” என்று பெயர் வைத்திருப்பதில், குர்ஆனுக்கு எதிராக ஏதாவது ஒன்றை சொல்லவேண்டும் என்ற “அசி” புத்தகத்தின் அசிங்கமான உள்நோக்கம் காணப்படுவது தெரிகிறது அல்லவா?

ஹரம் ஷரீப் என்று நீர் கூறுவது மக்கா வில் உள்ள இறை இல்லத்தையா? அல்லது மதீனாவில் உள்ள நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாயிலையா? விவரம் இல்லாத ஆளாக இருப்பீர் போல் தெரிகிறதே. உம்மை போய் ஜக்கரிய்யா சாஹிப் பெரியார் என்கிறாரே. அவரும் விவரம் இல்லாத ஆள்தான் என்று நிரூபிக்கிறாரா? ஏனென்றால், நபி(ஸல்) அவர்கள் ஹரம் ஷரீஃபில் என்னென்ன அமல்கள் செய்யவேண்டும். அவைகளில் என்னென்ன ஓத வேண்டும் என்று அறிவுரை கூறியதில், ஸலவாத்து ஓதும்படி சொல்லவில்லையே. ஓ! நீர் ஹதீஃதை பின்பற்றாத ஆள் அல்லவா? அதுதான் இப்படி எழுதி இருக்கிறீர்.

இந்த அக்கிரமக்காரர் செய்யும் அடுத்த அநியாயத்தைப் பாருங்கள். கதாநாயகன் கலீல் அஹ்மது தம் பக்கம் வந்தபோது, முஹிபுத்தீன் மரியாதை செய்வதற்காக எழுந்து நின்றாராம். “”எவன் ஒருவன் தான் வரும்போது பிறர் எழுந்து நிற்பதை விரும்புகிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரக நெருப்பில் ஆக்கிக் கொள்ளட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஃத் கலீல் அஹ்மதுக்கு தெரியாதா? மார்க்கம் தெரியாத நபர்தானா கதாநாயகன் கலீல் அஹமத்!

கலீல் அஹ்மது வந்தபோது எழுந்து நின்ற முஹிபுத்தீனே! உமக்கும் மார்க்கம் தெரியாதா? இந்த லட்சணத்தில் உமக்கு கஷ்பு என்னும் ஞானப் பார்வை ஒரு கேடா?

“மறைவானவற்றை நான் அறியமாட்டேன்” என்று தன்னுடைய தூதர், நபி(ஸல்) அவர்களை அல்லாஹு (ஜல்) சொல்லச் சொல்லும் (6:50) இறைவசனமும், “மறைவானவற்றின் திறவு கோள்கள் என் னிடமே இருக்கின்றன” என்று அல்லாஹ் அறிவிக்கும் (6:59) இறைவசனமும் உமக்குத் தெரியாதா?

குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் எதிராக செயல்பட்டு, திட்டமிட்டு மக்களை வழிகேட்டில் இட்டுச் சென்று கொண்டிருக்கும் உங்களுக்கான கூலி அல்லாஹ்விடமிருந்து கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருங்கள் என்று “அசி” புத்தகத்தை எச்சரிக்கை செய்கின்றோம்.

Previous post:

Next post: