சகோதரி ஆசிஃபாவே….

in 2018 மே

சகோதரி ஆசிஃபாவே….

அபூ கனிபா, புளியங்குடி

இதுவும் இறைவனின் நாட்டமே :

ஒரு மரத்தின் ஒரு இலை உதிர்ந்தாலும் ஏக இறைவன் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் உதிர்வது இல்லை. நீ உதிர்ந்ததும் ஏக இறைவனின் நாட்டப்படியே. எந்த உயிரும் இறைவனின் நாட்டம் இல்லாமல் மரணிப்பது இல்லை. எல்லாம் விதியின் அடிப்படையில் நடக்கிறது. உன்னுடைய மரணமும் விதியின் அடிப்படையில் நிகழ்ந்தவையே.

ஒரு அடியானின் காலில் ஒரு முள் தைத்தாலும் அவனுடைய ஏதாவது ஒரு பாவத்தை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பது இல்லை. உன்மீது இரும்பு முள்களால் உருவாக்கப்பட்ட மரமே விழுந்திருக்கிறது. இறைவன் நாடியிருந்தால் நீ நிச்சயமாக சொர்க்கத்தில் சிட்டுக்குருவியாக பறந்து சென்று கொண்டிருப்பாய்.

ஏக இறைவனின் ஆட்சி என்றால் :

சகோதரியே! நீ அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆட்சி செய்யும் நாட்டில் பிறந்து உனக்கு இது போன்று ஒரு துன்பம் நேர்ந்திருந்தால் உன்மீது விழுந்த முள் மரத்தின் ஆணிவேர் அப்போதே பிடுங்கப்பட்டு இருக்கும். ஆனால் நீ பிறந்ததோ இந்திய நாட்டில், அதுவும் மனிதர்கள் உருவாக்கிய சட்டத்தைக் கொண்டு ஆட்சி செய்யும் ஜனநாயக நாட்டில், இங்கு ஆட்சியாளர்கள் சட்டத்திற்கு கட்டுப்படுவதும் இல்லை, நீதி செலுத்துவதும் இல்லை, இறைவனுக்கு அஞ்சுவதும் இல்லை.

முஸ்லிம் சமுதாயத்திற்கு எச்சரிக்கை :

உன்னைப் போன்றவர்களின் மரணம் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு சோதனை அதன் மூலம் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு எச்சரிக்கை. ஆட்சியாளர்களும் அநீதி இழைக்கிறார்கள், நீதி வழங்குபவர்களும் அநீதி இழைக்கிறார்கள், ஆட்சியாளர்களுக்கு சாதகமாக நீதி வழங்குகிறார்கள். முஸ்லிம் சமுதாயம் என்றாலே வஞ்சிக் கப்படக்கூடிய சமுதாயமாக மாறிவிட்டது.

ஒரு காலத்தில் ஆட்சி அதிகாரம் செய்த இந்த முஸ்லிம் சமுதாயம் இன்று தன்னுடைய அடிப்படை உரிமைக்கே ஆட்சியாளர்களிடம் கையேந்தக்கூடிய நிலையில் இருக் கிறது. அதற்கு காரணம் என்ன? முஸ்லிம்கள் தங்கள் கைகளால் தேடிக் கொண்டதே. நபி(ஸல்) அவர்கள் ஆட்சியை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள், கலிபாக்களின் ஆட்சியை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இன்று இந்த முஸ்லிம் சமுதாயம் ஓர் அமீரின் கீழ் ஓர் தலைமையின் கீழ் கட்டுப்பட்டு நடக்க விரும்பவில்லை. ஒரு குடும்பத்தில் தலைவர் இல்லை என்றால் அந்த குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுமோ அந்த நிலையை இந்த முஸ்லிம் சமுதாயம் அடைந்து கொண்டிருக்கிறது. அதிகாரம் படைத்த அதிகார வர்க்கம் தலைமை இல்லாத இந்த சமுதாயத்தை வஞ்சிக்கிறார்கள் ஏன் தெரியுமா? கேட்பதற்கு எந்த நாதியும் இல்லை, எதிர்த்துப் போராட ஒற்றுமையும் இல்லை.

ஒரு தலைமை இல்லாத சமுதாயம் :

ஒரு குடும்பத்தில் குடும்ப தலைவர் என்ற ஆண் மகன் இல்லை என்றால் இந்த உலகம் அந்த குடும்பத்தை எப்படி எல்லாம் வஞ்சிக்குமோ அந்த வஞ்சனைகள் அனைத் தும் இந்த ஒற்றுமை இல்லாத ஒரு தலைமை இல்லாத முஸ்லிம் சமுதாயத்தின் மீது திணிக்கப்படுகிறது. இதற்கு யார் காரணம்? நான் முஸ்லிம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் தான் காரணம்! இறை கட்டளைகளுக்கு கட்டுப்படாத முஸ்லிம்களே காரணம். இறை வசனங்கள் நிராகரிப்பதே காரணம்.

முஸ்லிம்களே பிரிந்து விடாதீர்கள் :

அல்குர்ஆன் 42:13 நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால் : “நீங்கள்(அனை வரும்) சன்மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்”

இன்றைக்கு முஸ்லிம்கள் நான்கு பேர் சேர்ந்தால் ஒரு இயக்கத்தை உருவாக்கி விடுவார்கள். ஆளுக்கு ஒரு திசையில் ஒரு தலைவரை உருவாக்கி கொண்டு பிற மத தலைவர்களை, அரசியல்வாதிகளை பணத்திற்காக, பதவிக்காக, ஆதரிக்கிறார்கள். பிற மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் இதுபோன்ற முஸ்லிம் இயக்கவாதிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களை ஒன்றுபடவிடாமல் செய்கின்றனர். முஸ்லிம்களின் ஒற்றுமையை தகர்த்துவிடுகின்றனர். இந்த முஸ்லிம் இயக்கவாதிகளோ ஆதரித்துவிட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக, தங்களின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக, பதவியை பாதுகாப்பதற்காக, அவர்கள் எதை செய்தாலும் தடுப்பதற்கு வழியின்றி அவர்களின் கைப்பாவையாகவே செயல்படுகின்றனர். அப்படி செயல்பட நிர்பந்திக்கின்றனர். அதற்கு யார் காரணம்? அந்த நிர்பந்தத்திற்கு யார் காரணம்? அந்த இயக்கங்களை உருவாக்கிய முஸ்லிம்களே காரணம் அவர்கள் தங்கள் கைகளால் ஏற்படுத்திக் கொண்ட செயல்களே காரணம்.

ஒரே சமுதாயம் இதில் பிரிவு இல்லை :

அல்குர்ஆன் 21:92 வசனத்தில் அல்லாஹ் சொல்லக்கூடிய இந்த சமுதாயம் ஒரே சமுதாயம் தான் இதில் எத்தகைய பிரிவுகளும் கிடையாது என்று அந்த சொல்லை நிராகரித்து தனித்தனி இயக்கங்களை உருவாக்கியதுதான் காரணம். தனித்தனி இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்று எண்ணிய முஸ்லிம்கள் அந்த எண்ணமே இந்த சமுதாயத்திற்கு ஆபத்து ஏற்படுத்துகிறது என்பதை உணரவில்லை.

இந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றால் என்ன கிடைக்கும் என்பதை இறைவனே சொல்கிறான்?

அல்குர்ஆன் 3:186 (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (உயிர்களிலும்) திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;

உங்களுக்கு முன் நெறிநூல் கொடுக்கப்பட்டோரிடமிருந்து (யூத, கிறிஸ்தவர்கள்), இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் (ஆர்எஸ்எஸ், பீ.ஜே.பிக்காரர்கள்) நிந்தனை கள் பலவற்றையும், செவிமடுப்பீர்கள், ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.

இன்றைக்கு ஆசிஃபா என்ற சிறுமி உயிர் போக காரணம் அவள் முஸ்லிம் என்பதனால், இஸ்லாமிய பெண் என்பதனால், இஸ்லாத்தை அழிக்க நினைத்து ஒரு உயிரை அழித்து இருக்கிறார்கள். அந்த வழிகெட்ட கூட்டத்தாருக்கு அழிவு உண்டாக வேண்டுமானால் ஏக இறைவனின் கட்டளைகளுக்கு முஸ்லிம்கள் கட்டுப்பட்டால் அல்லாமல் அது ஏற்படாது.

சிரமங்களுக்கு காரணம் முஸ்லிம்களே!

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. 22:78

இன்றைக்கு முஸ்லிம்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்றால் அதற்கு ஈமான் கொண்ட முஸ்லிம்கள் தான் காரணம். இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்படாததே காரணம். இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். 3:103

ஏக இறைவன் பொறுமையாளர்களுடனே இருக்கின்றான் :

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள், உங்கள் பலம் குன்றிவிடும், (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். அல்குர்ஆன் : 8:46

அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறேன் என்று சொல்லும்போது, பொறுமை இல்லாமல், ஒற்றுமை இல்லாமல் தனித்தனி பிரிவுகளாக பிரிந்து தனித்தனியாக போராடுவதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், சாலைகளை மறிப்பதுமாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் வருமா? உதவி வருமா? சாபம் தான் வரும் அதுதான் வந்து கொண்டு இருக்கிறது. இந்த சாபம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. அதற்குக் காரணம் முஸ்லிம் சமுதாயத்தில் ஒற்றுமையின்மையும், இறை நிராகரிப்பும்தான்.

தலைவர்கள் சொல்வது மார்க்கம் ஆகுமா?

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்க மாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? என்று அல்லாஹ் கேட்கிறான். அல்குர்ஆன் : 42:21 இன்றைக்கு முஸ்லிம் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் சொல்வதுதான் மார்க்கம் என்று அவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றி 9:31ல் அல்லாஹ் சொல்வதுபோல முஸ்லிம் இயக்கத் தலைவர்களையும், மெளலவிகளையும், உலமாக்களையும் அல்லாஹ்விற்கு இணையாக வைத்துக்கொண்டு மத்ஹப்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் என்று தனித்தனியாக பிரிந்து கொண்டு அவர்கள் எது சொன்னாலும் மார்க்கம் என்று அவர்களை அப்படியே பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் எதை வேண்டுமானாலும் மன்னித்து விடுவதாக சொல்கிறான் தனக்கு இணை வைப்பதை மட்டும் மன்னிக்க மாட்டேன் என்று சொல்கிறான். இன்றைக்கு முஸ்லிம்கள் ஒன்றுபடுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்து அல்லாஹ்விற்கு இணை வைக்கிறார்கள். ஒரே சமுதாயம் ஒரே தலைமை என்ற ஏக இறைவனின் கட்டளையை புறக்கணித்த இந்த முஸ்லிம் சமுதாயம் பல இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாகுகிறார்கள்.

மத்ஹப்களும், இயக்கங்களும், பிரிவுகளும் சோதனையே :

இயக்கங்களாகவும், மத்ஹப்களாகவும், சன்னி, சியா போன்ற பல பெயர்களில் பிரிந்து செயல்படும் காலம் எல்லாம் இந்த முஸ்லிம் சமுதாயம் சோதனையையும், வேதனையையும் அனுபவிக்கத்தான் போகிறது. ஒற்றுமையை வலியுறுத்தக்கூடிய முஸ்லிம்களால் என்ன செய்யமுடியும் என்று பலரும் கேட்கலாம்? ஒற்றுமை இல்லாமல் எந்த ஒரு சாதனையும் இந்த சமுதாயத்தால் செய்துவிட முடியாது. இயக்கவாதிகளால், மத்ஹப்வாதிகளால் இன்றுவரை பிரிந்து ஒரு சாதனையும் செய்யமுடியவில்லை, செய்யவும் முடியாது. எங்களால் ஒற்றுமையை வலியுறுத்த முடியும், ஒன்றுபடவில்லை என்றால் இறைவனிடம் கையேந்துவதை தவிர வேறு வழியில்லை அல்லாஹ்வின் சாபம் இந்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது இறங்காமல் இருக்க பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும். நாங்கள் பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கின்றோம் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்காக…

முஸ்லிம்கள் ஒன்றுபடுவார்களா?

இந்த ஆசிஃபாவுக்கு வந்த சோதனை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று நினைக்கக் கூடிய முஸ்லிம்கள் வெட்டு, குத்து என்று போலியாக கோஷம் போடாமல் உண்மையாக இறை நம்பிக்கையோடு அல்லாஹ்விற்கு இணைவைக்காது பிரிவுகளை புறக்கணித்து ஒன்றுபடுங்கள்.

“உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலி ஹான) நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்து வதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். “அவர்கள் என்னோடு இணை வைக்காமல் அவர்கள் என்னையே வணங்குவார்கள்” 24:55

முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி மலரும், இஸ்லாமிய ஆட்சி வந்தால் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சனையும் வராது, மாற்று மதத்தவர்க ளுக்கும் அநீதி இழைக்கப்படாது. முஸ்லிம்கள் ஏக இறைவனை அஞ்சி ஒன்றுபடுவார்களா?

Previous post:

Next post: