சிரியா…

in 2018 மே

சிரியா…

இப்னு ஸதக்கத்துல்லாஹ்

“…அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். ஆனால், அவர்களிடையே பிளவை உண்டாக்குவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் : 5417

நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். 3:103

யாரெல்லாம் தங்கள் மார்க்கத்தை (தங் கள் இஷ்டப்படி)ப் பிரித்து பல பிரிவினராகி விட்டார்களோ அவர்களுடன் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 6:159

“நீங்கள் இருவரும் இ(ந்த சொர்க்கத்)திலிருந்து (பூமிக்கு) வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் ஒரு சாரார் மற்றொரு சாராருக்கு எதிரிகளாகி (பிரிந்து) விடுவார்கள். அப்போது, என்னுடைய நேர்வழி நிச்சயமாக உங்களிடம் வரும். 20:123

(உங்களில்) யார் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எந்த கவலையுமில்லை, பயமுமில்லை. 2:38

“…நீங்கள் நெறிநூலில் உள்ளதில் சிலதை ஏற்று சிலதை நிராகரிக்கிறீர்களா? உங்களில் இப்படிச் செயல்படுகிறவர்கள் இவ்வுலக வாழ்விலேயே இழிவுபட்டுப் போவார்கள்.” 2:85 அல்லாஹ்வின் கரம் முஸ்லிம்களின் ஜமாஅத் மீது தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (நஸாயீ : 4032)

எனக்கு பிறகு நிறைய சுயநலப் போக்கையும், பாரபட்சமாக நடக்கும் போக்கையும், நீங்கள் விரும்பாத பலவற்றையும் காண்பீர்கள் என்று நபி(ஸல்) சொன்னார்கள். அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், குடிமக்கள் என்ற முறையில் நீங்கள் அவர்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து வாருங்கள். உங்களுடைய உரிமையை அல்லாஹ்விடத்தில் கேளுங்கள் என்று சொன்னார்கள். புகாரி : 7052

உங்களுடைய ஆட்சியாளர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய உரிமையை கடமையை கொடுத்து விடுங்கள் அவர் தன்னுடைய பொறுப்பில் எப்படி நடந்து கொண் டார் என்பதை பற்றியயல்லாம் அல்லாஹ் கவனித்துக் கொள்வான் என்று நபி(ஸல்) கூறினார்கள். புகாரி : 3455

உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்கு பின்வரும் காலம் முன்பிருந்ததை விட மோசமானதாகத்தான் இருக்கும். எனவே, “மறுமையில் நீங்கள் இறைவனைச் சந்திக் கும் வரை பொறுமையாக இருங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். புகாரி: 7068

“எனக்குப் பிறகு சில (ஆட்சித்) தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் எனது வழிமுறையை (சுன்னா) கடைப்பிடிக்க மாட்டார்கள். எனது நேர்வழி அல்லாத வழி யில் நடப்பார்கள். அவர்களிடையே சிலர் தோன்றுவார்கள். அவர்கள் மனித உடலில் ஷைத்தான்களின் உள்ளம் படைத்தவர்களாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.

“அந்தக் கால கட்டத்தை அடைந்தால் நான் என்ன செய்ய வேண்டும். அல்லாஹ் வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு “அந்த (ஆட்சி) தலைவரின் கட்டளையைச் செவியுற்று அவருக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள். உன் முதுகில் (குத்தப்பட்டாலும்) தாக்கப்பட்டாலும் சரி! உன் செல்வங்கள் பறிக்கப்பட்டாலும் சரி! (அந்த ஆட்சித் தலைவரின் கட்டளையைச்) செவியுற்றுக் கட்டுப்பட்டு நடந்துகொள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். முஸ்லிம் : 3765

எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி : 7079

உங்களுடைய இந்தச் சமுதாயத்தின் நிம்மதியான வாழ்வு என்பது அதன் ஆரம்பக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சமுதாயத்தில் இறுதியானவர்களுக்குச் சோதனைகளும் நீங்கள் வெறுக்கின்ற பல விஷயங்களும் ஏற்படும். முஸ்லிம்: 3759 

தம்(ஆட்சித்) தலைவரிடமிருந்து எதை யேனும் (கண்டு அதை) வெறுப்பவர், பொறுமையாக இருக்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம் : 3769

(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் இனவெறி எனும் அறியாமைக்கால அரசியலின் கீழே நின்று (சன்னி, ஷியா, ஸலஃபி இஹ்வான் எனும்) இனவெறி கொள்கிறார். கோபப்படுகிறார், போரிடுகிறார், அல்லது இனவெறியின் பக்கம் அழைக்கிறார், அல்லது இனவெறிக்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் (செத்தால் அல்லது) கொல்லப்பட்டால், அவரது மரணம் அறியாமைக்கால மரணமே ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் : 3766

இன்பத்திலும், துன்பத்திலும், விருப்பிலும், வெறுப்பிலும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்திலிருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும், அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம். முஸ்லிம் : 3754

(இராக் திசையில் இருக்கும்) “நஜ்த்” பகுதியில்தான் நிலநடுக்கங்களும், குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் : 7094

மேற்கூறிய விஷயங்களை, எச்சரிக்கை களையயல்லாம் மறந்தால், அல்லது பொருட்படுத்தாமல் போனால் என்ன நடக்கும் என்பதைத் தான் உதுமான்(ரழி) ஆட்சி காலத்திலிருந்து சிரியாவின் பஸ்ஸார் ஆட்சி வரை நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன. இதிலிருந்து படிப்பினை பெற்று தன்னை திருத்திக் கொள்ள வேண்டிய முஸ் லிம் சமுதாயம் திருந்துமா என்றால் அதுவும் நடக்காது என்பதை, புகாரி : 525, 1435, 3586, 7096, முஸ்லிம் : 231, 5545, 5538 ஆகிய அறிவிப்புகள் சொல்கின்றன.

அதை நம் கண்முன் நடக்கும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக, சிரியா, இலங்கை முஸ்லிம்களுக்காக ஒவ்வொரு பிரிவினரும் ஆர்ப்பாட்டம் நடத்து கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் அங்கே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று அவர்களுக்கு தெரியும். ஆனாலும் நடத்துகிறார்கள், ஏன் நடத்து கிறார்கள்? அவர்களே சொல்கிறார்கள். “இளைஞர்கள் உணர்ச்சி வயப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள்,

இப்போது நம் தமிழ்நாட்டை பாருங்கள், தனி ஈழம் என்றவுடன் ஆளாளுக்கு கத்துகிறார்கள். யாருக்காவது அறிவு இருக்கிறதா? இன்னொரு நாட்டில் தனி நாடு உண்டாக்குவதற்கு இங்கு கத்தினால் நடக்குமா? ஆனாலும், மாணவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், இளம் வயதானது உணர்வை தூண்டி விட்டால் சிந்திக்காது. அந்த மாதிரி ஆள்களும், நமது சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்கள்தான் இவர்களுடைய குறி, டார்கெட், தமிழ் இயக்கங்கள் மாணவர்களை தூண்டி ராஜபக்சேவையும், பிரபாகரன் மகனையும் காட்டினால் உடனே ஆவென்று எழுந்து விடுவார்கள்.

நாம் கத்துவதாலோ கூட்டம் போடுவதாலோ ஏதாவது பிரயோஜனம் உண்டா என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். ராஜபக்சேவை கொளுத்து, தூக்கில் போடு என்று கத்துவார்கள், ராஜபக்சேவை படம் போட்டு தூக்கில் தொங்கவிடுகிறார்கள். இவர்கள் இங்கே தூக்கில் தொங்க விடும்போது அந்த நாட்டில் அவர் அரசு விழாவில் சிரித்துக் கொண்டிருப்பார். ஆக, இப்படி விளங்காத அப்பாவிகளை பிடிப்பதற்காகவும், தங்களுக்கென்று ஒரு தளத்தை உண்டாக்குவதற்காகவும் தான் ஒவ்வொருவரும் எதையாவது சொல்லிக் கொண்டு கிளம்புகிறார்கள்.

“கிலாபத்தும் ஜிஹாத்தும்” என்ற தலைப்பில் பீ.ஜே. பேசியது. ஆம்! தங்களிடம் சிக்கியுள்ள விளங்காத வர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக வும், இன்னமும் தங்கள் வலையில் சிக்காத விளங்காதவர்களை சிக்க வைப்பதற்காகவும்தான் ஒவ்வொரு பிரிவினரும் ஆர்ப் பாட்டம் நடத்துகிறார்கள். பிரிவினையை, பிரிவுகளை உரம் போட்டு வளர்க்கிறார்கள். இவர்களுக்கிடையில் நமது நிலை என்னவென்றால், “(தீர்ப்பு நாளில்) எங்கள் இறைவனிடம் (நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்த பிரதிநிதித்துவம் என்ற) பொறுப்பிலிருந்து விடுபடுவதற்காகவும், இன்னும் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிவிடலாம் என்பதற்காகவும்தான். 7:164

“இறைவா! எங்கள் சிரியாவில் எங்களுக்கு செழிப்பை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமனில் எங்களுக்கு செழிப்பை வழங்குவாயாக! என்று நபி(ஸல்) பிரார்த்தித்தார்கள். முஸ்லிம்: 7094

Previous post:

Next post: