நோன்பின் மாண்பு…

in 2018 மே

நோன்பின் மாண்பு…

மிஸ்பாஹி

மறுபதிப்பு : ஏப்ரல் 1987

உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் மீது (நோன்பு) கடமையாக்கப்பட்டது போல் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆவதற்காக வேண்டி உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)

மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளை கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான குர்ஆன் இறக்கியரு ளப்பட்ட (மகத்தான) மாதமாகும் ரமழான். எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் (கட்டாயம்) நோன்பு நோற்க வேண்டும். யாரேனும் நோயாளியாகவோ அல்லது பயணியாகவோ இருந்தால் (அந்தக் காலத்தில் விடுபட்ட நோன்பை) வேறு நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான். உங்களுக்கு கஷ்டம் தர அவன் நாடுவதில்லை. (அல்குர்ஆன் : 2:183)

நபிமொழிகள் :

நோன்பு (தீமைகளிலிருந்து தடுக்கின்ற) கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது அருவருப்பான பேச் சுக்களையோ, வீண் பேச்சுக்களையோ பேச வேண்டாம். யாரேனும் ஏசினாலோ அல்லது சண்டைக்கு வந்தாலோ “”நான் நோன்பாளி” என்று கூறவும். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி.

நோன்பாளியின் இரண்டு மகிழ்ச்சிகள் ஏற்படுகின்றன. (ஒன்று) நோன்பு திறக்கும் போது அவன் மகிழ்ச்சி அடைகிறான். (இரண்டாவது) தன்னுடைய இறைவனைச் சந்திக்கும்போது (தான் நோன்பு வைத்த காரணத்தினால் கிடைக்கும் வெகுமதியைக் கண்டு) மகிழ்கிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல் : புகாரி.

உங்களில் ஒருவர் ரமழானுக்கு ஒரு நாள் முன்பாகவோ நோன்பு நோற்கக் கூடாது. (அதாவது ­ஃபான் மாதத்தில் இறுதி இரண்டு நாட்கள் நோன்பு நோற்கக் கூடாது அவன் ஒவ்வொரு மாதமும்) அந்த நாட்களில் வாடிக்கையாக நோன்பு நோற்ப வனாக இருந்தால் அந்த நாளில் நோன்பு நோற்கலாம். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), நூல் : புகாரி, முஸ்லிம். ரமழான் மாதத்தில் (உறுதியான) நம்பிக்கையுடனும் (இறை திருப்தியை) எதிர்பார்த்தவனாகவும் நோன்பு நோற்பவ னுக்கு அவனது முன் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.

Previous post:

Next post: