பிறை (சந்திர) நமஸ்காரம்

in 2018 ஜூன்,பிறை

இப்னு ஸதக்கத்துல்லாஹ்

(முஸ்லிம்களே!) இவர்கள் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் (வந்து விடுவார்கள்) என்று நீங்கள் நினைக்கிறீரகளா? (அதுதான் இல்லை) இவர்களில் ஒரு சாரார். அல்லாஹ்வின் அருள்மொழிகளைக் கேட்டு, நன்கு விளங்கிய பிறகு வேண்டுமென்றே அதை புரட்டக்கூடியவர்கள். 2:75

மற்றொரு சாரார், எழுதப் படிக்கத் (தெரிந்த மற்றும்) தெரியாதவர்கள் ஆவர். அவர்களுக்கு நெறிநூலைப் பற்றிய எந்த அறிவும் கிடையாது. அவர்களிடம்  இருப்பதெல்லாம் அடிப்படையற்ற நம்பிக்கைகளும் ஆசைகளும்தான். மேலும் வெறும் ஊகங்களிலேயே அவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள். 2:78

அபூ அப்துல்லா குழப்பம், அபூ அப்துல்லாஹ் குழப்பம் என்னவென்றால் பிறையை பார்க்கவே கூடாது என்ற குழப்பம்.

மாதம், நோன்பு, ஹஜ் ஆகியவற்றை தீர்மானிக்க பிறையை கண்ணால் பார்த்தேயாக வேண்டும். கண்ணால் பார்க்காமல் செய்யவே செய்யாதே என்று ரசூலுல்லாஹ் (ஸல்) கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் ஒட்டகத்தில் போனார்கள். நீங்கள் விமானத்தில் போகிறீர்களே? என் றெல்லாம் கேட்கக் கூடாது. அது உலக விஷயம், இது மார்க்க விஷயம்.

அது வணக்கம், இபாதத்,

கண்ணால் பார்க்க வேண்டும் என்பது மார்க்கம். கண்ணால் பார்க்க தேவையில்லை என்பது வழிகேடு.

பிறை என்பது ஒரு ஆப்ஜெக்ட்தான், கண்ணால் தான் பார்க்க வேண்டும்.

ருஹ்யத் என்ற வார்த்தைக்கு ஒரு ஆப்ஜெக்ட்தான், கண்ணால் பார்த்தல் என்பதுதான் அர்த்தம். வேறு அர்த்தம் கிடையாது.

இதை நாம் பல வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். அபூ அப்துல்லாஹ்வும் பதில் சொல்லவில்லை. யாரும் பதில் சொல்லவில்லை, நம்மிடம் அது பற்றிய குறிப்புகளெல்லாம் இருக்கிறது.

மேலே இருப்பது ததஜ மேலாதிக்க குழு தலைவர் மெளலவி அப்துந்நாஸிர் (மிஸ்க்) பேசியது.

“கேட்பவன் கேணையனாக இருந்தால் கேழ்வரகிலும் நெய் வடியும்” என்று ஒரு பழமொழி உண்டு. அவர்களுடன் இருக்கும் விளங்காதவர்கள் அந்நஜாத் படிப்ப தில்லை, ஹிஜ்ரி கமிட்டியினரின் வீடியோக்களை பார்ப்பதில்லை என்ற தைரியத்தில் இப்படியயல்லாம் அள்ளி விட்டுக் கொண்டு திரிகிறார்கள்.

பிறை பற்றிய சர்ச்சை, விவாதம் என்பது அநேகமாக 1995ல் தொடங்கி அபூ அப்துல்லாஹ் அவர்கள் மறையும் வரை நடந்து முடிந்து விட்டது. அக்கால கட்டத்தில், அபூ அப்துல்லாஹ்வும், ஹிஜ்ரி கமிட்டியினரும் பிறை பற்றிய எல்லாக் குழப்பங்களையும் தெளிவுபடுத்தி விட்டார்கள். ஆனால், அவர்கள் கேட்ட பல கேள்வி களுக்கு இவர்கள்தான் இன்னமும் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். இப்படி பதில் சொல்லாமல் இருப்பவர்களை மனோ இச்சையை பின்பற்றுபவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க : 28:50) மனோ இச்சையை பின்பற்றும் இவர்கள் அல்லாஹ்வின் ஆதாரங்களை பொய்யாக்க முற்படுவதாகவும், ஆயினும் அவை ஒவ்வொன்றும் அவைகளுக்குரிய கால நேரம் வரும் போது உண்மையாகி, உறுதியாகி விடும் என்றும் கூறுகிறான். (பார்க்க :54:3) இந்த மனோஇச்சையை பின்பற்றக்கூடிய தவ்ஹீத் மவ்லவிகள் தாங்கள் விட்ட அஸ்திரம் எல்லாம் புஸ்வாணமாகிப் போனதைப் பார்த்து வேறு வழியில்லாமல் மறுபடியும் முதலிலிருந்து குழப்ப ஆரம்பிக்கிறார்கள்.

இவர்களின் கொள்கைப்படி ஒவ்வொரு மாதத்தையும், பிறையைக் கண்ணால் பார்த்து தீர்மானிக்காத ஜமாஅத்துல் முஸ்லி மீனும், ஹிஜ்ரி கமிட்டியினரும் குழப்ப வாதிகள், பிறையை கண்ணால் பார்த்தேயாக வேண்டும். கண்ணால் பார்க்காமல் செய்யவே செய்யாதே என்ற ரசூலுல்லாஹ் (ஸல்) சொல்லை மீறியவர்கள், பிறையைக் கண்ணால் பார்க்கும் வணக்கத்தை, (பிறை நமஸ்காரம்) செய்யத் தவறியவர்கள். ஆப்ஜெக்ட் இலக்கணம் தெரியாதவர்கள், பிறையைக் கண்ணால்தான் பார்க்க வேண் டும் என்ற மார்க்க விதியை மீறியவர்கள், பிறையைக் கண்ணால் பார்த்து மாதத்தை தீர்மானிக்க தவறிய வழிகேடர்கள், மடை யர்கள் என்ற உயர்ந்த அந்தஸ்தை பெறுகிறார்கள்.

இதில் சுவாரசியமான வி­யம் என்ன வென்றால், மேற்கூறிய உயர்ந்த அந்தஸ்தை பெறுவதில் நபி(ஸல்) அவர்கள் நம்மை முந்திவிட்டார்கள். அது மட்டுமின்றி, பிறையைக் கண்ணால் பார்த்துதான் மாதத்தை தீர்மானிக்க வேண்டும். கண்ணால் பார்க்காமல் தீர்மானிக்காதே என்று உலகுக்கு உபதேசித்துவிட்டு தன் சொந்த வாழ்க்கையில் அதைச் செய்யாதவர் என்ற கூடுதலான ஒரு புள்ளியும் பெற்று விட்டார் கள். எப்படியயன்றால்,

பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். பிறையை பார்க்காமல் நோன்பு வைக்கா தீர்கள். பிறையை பார்க்காமல் நோன்பை விடாதீர்கள் என்று எந்த நபி(ஸல்) சொன் னார்களோ, அந்த நபி(ஸல்) அவர்கள்தான் பிறையை கண்ணால் பார்க்காமல், வேறொரு வழியில் மாதத்தை தீர்மானித்து வழிகாட்டினார்கள். (பார்க்க : புகாரீ 2468, 5191, 5201, 5289, 6684, முஸ்லிம் 1977, 1979, 1980, 2947, 2952, நஸாயீ 2104). ஆக, முதன் முதலாக பிறையை கண்ணால் பார்க்காமல் (பிறை நமஸ்காரம் செய்யாமல்) வேறொரு வழியில் மாதத்தை தீர்மானித்தது நபி(ஸல்) அவர்கள்தான். அவர்கள் காட்டிய அந்த வழியைத்தான் அபூஅப்துல்லாஹ்வும் ஹிஜ்ரி கமிட்டியினரும் பிரசாரம் செய்தார்கள்.

அந்த வகையில், தவ்ஹீது மவ்லவிகளின் கொள்கைப்படி முதல் குற்றவாளி நபி(ஸல்) அவர்கள்தான். இரண்டாவது இடத்தைத் தான் நாங்கள் பெறுகிறோம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த உயர்ந்த அந்தஸ்தை எங்களுக்கும் வழங்கியமைக்காக தவ்ஹீத் மவ்லவிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். பிறையை பார்க்காமல் நோன்பு வைக்காதீர்கள், பிறையை பார்க்காமல் நோன்பை விடாதீர்கள் என்ற ஹதீஃத் வெவ்வேறு அறிவிப்பாளர்கல் வரிசையில் மீண்டும் மீண்டும் ஹதீஃத் நூல்களில் இடம் பெற்றிருக்கிறது. இதைத்தான் நபி(ஸல்) திரும்ப திரும்ப சொன்னதாகவும், வலியுறுத்தியதாகவம் அதனால்தான் இது மார்க்க அந்தஸ்து பெறுவதாகவும், இபாதத் (நமஸ்கார) அந்தஸ்து பெறுவதாகவும் தவ்ஹீது மவ்லவிகள் அள்ளி விடுகிறார்கள். உண்மை என்ன?

“பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். பிறையை பார்க்காமல் நோன்பு வைக்காதீர்கள், பிறையை பார்க்காமல் நோன்பை விடாதீர்கள்” என்பதோடு நபி(ஸல்) நிறுத்தியிருந்தால், பிறையைப் பார்ப்பது மார்க்கம்தான், இபாதத்தான், (நமஸ்காரம்தான்) வணக்கம்தான் என்ற முடிவுக்கு நாங்களும் வந்திருப்போம். ஆனால், நபி(ஸல்) தொடர்ந்து சொல்கிறார்கள்.

உங்களுக்கு மறைக்கப்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று,

ஹதீஃதின் முன் பாதியை திரும்பத் திரும்ப, திருப்பித் திருப்பி உச்சரிப்பவர்கள், ஹதீஃதின் இந்த பின் பாதியை சொல்வதில்லை, அல்லது ஒரு தடவை சொல்லி விட்டு லேசாக கடந்து சென்று விடுகிறார்கள். ஏனென்றால், ஹதீஃதில் இந்த பின் பாதிதான் பிறையை பார்க்க வேண்டியது, கட்டாயம் இல்லை என்பதை உணர்த்து கிறது. அதனால்தான் அவர்கள் ஹதீஃதின் பின் பாதியை ஒரு தடவை சொல்லி விட்டு லேசாக கடந்து சென்று விடுகிறார்கள்.

இது எப்படியிருக்கிறது என்றால், கடவுள் இல்லை, அல்லாஹ்வைத் தவிர என்ற வாசகம் குர்ஆனிலும், ஹதீஃதிலும் பல இடங்களில் வருவதைக் காட்டி பார்த்தீர்களா? முஹம்மது நபியே கடவுள் இல்லை என்று சொல்லி விட்டார் என்று சொல்லும் அயோக்கியனைப் போல் இருக்கிறது.

ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகும். எனினும், பிறையைப் பார்க் காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடா தீர்கள். உங்களுக்கு மறைக்கப்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள். அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரழி) அவர்கள் முஸ்லிம் : 1961.

அதாவது, பிறை தெரிந்தால் அந்த மாதம் 29 நாட்களோடு முடிகிறது என்று பொருள். பிறை தெரியவில்லையயன்றால் அந்த மாதம் 30 நாட்களைக் கொண்டது என்று முடிவு செய்து விட்டு போய்க் கொண்டே இருங்கள் என்பதுதான் ஹதீஃதின் கருத்து.

அதாவது பிறை பார்ப்பதென்பது, நடப்பு மாதம் எத்தனை நாட்களை கொண்டது என்பதை முடிவு செய்வதற்கான ஒரு ஸ்கேல், அளவுகோல் தானே தவிர வணக்கமுமல்ல (நமஸ்காரமுமல்ல) இபாதத்துமல்ல என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

அது மார்க்கம், வணக்கம், (நமஸ்காரம்) இபாதத் என்றால் முன் பாதியோடு நிறுத்தியிருப்பார்கள். பின் பாதியை சொல்லியிருக்க மாட்டார்கள். பிறையை பார்க்காமல் 29வது நாளோடு மனைவியரிடமும் வந்திருக்கவும் மாட்டார்கள்.

அப்படியானால் “”பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். பிறையை பார்க்காமல் நோன்பு வைக்காதீர்கள். பிறையை பார்க் காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மறைக்கப்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏன் சொல்ல வேண்டும். எதற்காகச் சொல்ல வேண்டும், சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

அதாவது, அன்றைக்கிருந்த யூத மெளலவிகள் மாதங்களை முன்பின்னாக்கி மக்களை வழிகெடுத்துக் கொண்டிருந்தார்கள். (பார்க்க 9:37) அவர்களுடைய வழிகேட்டி லிருந்து முஸ்லிம்களை காக்கவும், சந்திர ஆண்டை, மாதத்தை எப்படி கணக்கிட வேண்டும் என்பதை விளக்குவதற்காகவும் தான் அல்லாஹ்வும் (பார்க்க : 9:36, 10:5, 36:39), அல்லாஹ்வின் தூதரும்(ஸல்) பிறை பற்றி பேசியிருக்கிறார்கள்.

உண்மையிலேயே இது மார்க்கம், இபாதத் (நமஸ்காரம்) என்றால் இந்த தவ்ஹீத் மவ்லவிகள் என்ன செய்திருப்பார் கள்? ஒவ்வொரு மாதமும் 29வது நாளில், பிறை பார்ப்பது மார்க்கம், இபாதத், (நமஸ் காரம்) எனவே, கொள்கைச் சகோதரர் கள்(?) எல்லோரும் பிறையை பார்க்காமல் (பிறை நமஸ்காரம் செய்யாமல்) விடக் கூடாது. கண்டிப்பாக இன்றிலிருந்து பிறை பார்க்கும் வரை மஹ்ரிபு வேளையில் பிறை பார்ப்பதற்காக (பிறை நமஸ்காரம் செய் வதற்காக) அணி திரளவும், பிறை இன்று தெரியலாம். அல்லது நாளை தெரியலாம். அல்லது நாளை மறுநாள் தெரியலாம். பிறை பார்க்க வரும் அனைவருக்கும் ராத்திரி சோற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்று தங்களுடைய மீடியாக்களில் அறிவிப்பு வெளியிட்டிருப்பார்கள்.

கூடும் கூட்டத்தினரிடையே “பிறை பார்க்கும் வணக்கத்தை செய்வதற்காக மாநாடு போல் நாமெல்லாம் இங்கே குழுமியிருக்கிறோம்” என்று ஜும்ஆ குத்பா போல் ஒரு பயானையும், ஒரு வசூலையும் நடத்தியிருப்பார்கள். அது மட்டுமின்றி, அந்த கூட்டங்களையயல்லாம் வீடியோ எடுத்து, பிறை பார்க்கும் இபாதத்தை செய்வதற்காக மாநாடு போல் கூடிய கூட்டம் என்று மீடியாக்களில் பரப்பியிருப்பார்கள். இவை எதுவுமே நடக்கவில்லை.

மாறாக என்ன நடக்கிறது? ஒவ்வொரு மாதமும் 29வது நாளில் பிறையை தேடுமாறு(?) அறிவிப்பு வெளியிடுகிறார்கள். சில மாதங்களில் ஏதாவதொரு ஊரிலிருந்து யாராவது சிலர் தகவல் தந்ததாகவும், அதன் படி நாளை முதல் தேதி என்று அறிவிப்பை வெளியிட்டு விட்டு போய் படுத்து விடுகிறார்கள். சில மாதங்களில் எங்கிருந்துமே தகவல் வரவில்லை. எனவே நாளை மறுநாள் முதல் தேதி என்று பிறையை கண்ணால் பார்க்காமல் நம்மைப் போல் கணக்கிட்டு முன்னறிவிப்பு செய்து விட்டு போய் படுத்து விடுகிறார்கள். இதிலிருந்தே தெரிகிறதல்லவா இது மார்க்கம் இல்லை, இபாதத் இல்லை, பித்தலாட்டம் என்று.

அவர்களில் ஒரு சாரார், மற்றொரு சாராரை ஏமாற்றுவதற்காக (ஆளை) மயக் கும் பேச்சுக்களை பேசுகின்றனர். உம்முடைய இறைவன் நாடியிருந்தால் அவர் கள் இச்செயலைச் செய்திருக்க மாட்டார்கள். 6:112

எனவே, நீ அவர்களை (அவர்களின் போக்கில்) விட்டுவிடும்! அவர்கள் (ஆளை) மயக்கும் பேச்சுக்களை பேசிக் கொண்டே யிருக்கட்டும்! மேலும் (அவர்களை நாம் ஏன் விட்டு வைத்திருக்கிறோம் என்றால்) மறுமையை (நம்ப வேண்டிய விதத்தில்) நம்பாதவர்கள் இவர்களின் இந்த (ஆளை) மயக்கும் ஏமாற்றுப் பேச்சின் பக்கம் சாய்ந்து இன்புறுவதற்காகவும், மேலும் அவர்கள் சம்பாதிக்க வேண்டிய பாவங்களை சம்பாதிப்பதற்காகவும்தான்! 6:113.

Previous post:

Next post: