ஐயமும்! தெளிவும்!! …

in 2018 செப்டம்பர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : ஒளூ செய்வதற்கு முன் பல் விளக்குவது நபிவழி. ஒளூ செய்து சுத்தம் செய்த பிறகு தொழுகையில் நிற்கும்பொழுது மீண்டும் மிஸ்வாக் செய்கிறார்கள் சிலர்; செய்துவிட்டு நஜீஸான குச்சியை தன் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு தொழுகி றார்கள். இதற்கு ஆதாரம் உண்டா? னி.அபூ நபீல், தேங்காய்பட்டணம்.

தெளிவு : நடைமுறையிலுள்ள சிலருடைய பழக்கத்தைப் பற்றி கேட்டுள்ளீர்கள்.

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் :

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் படுக்கச் செல்லும் முன்பும், படுக் கையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்ததும், மரணத் தருவாயில் இருக்கும்போதும் பல் துலக்கி (மிஸ்வாக் செய்து) இருப்பதாக சஹீஹான ஹதீஃத்கள் புகாரீ, முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜா போன்ற பல நூல்களிலிருந்து காணக் கிடைக்கிறது.

வீட்டிற்குள் நுழைந்தது முதல் காரி யமாக பல் துலக்கி இருக்கிறார்கள். நாக்கை பல் குச்சியால் துலக்கி இருக்கிறார்கள் போன்ற சஹீஹான ஹதீஃத்கள் அபூதாவுதில் இடம் பெற்றுள்ளன.

“நான் மூஃமின்களுக்கு சிரமம் கொடுத்தவன் என்றில்லையானால், நான் அவர்களுக்கு இஷாவை பிற்படுத்தி தொழ வேண் டும் என்றும், ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டிருப்பேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) அபூதாவூது ஹதீஃத் எண் : 46 (இதே கருத்துள்ள ஹதீஃத்கள் புகாரீ, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், ஹாகிம், இப்னு மாஜா, இப்னு ஹிப்பான், முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளன)

ஒளூ செய்து சுத்தம் செய்த பிறகு தொழுகையில் நிற்கும்பொழுது மீண்டும் மிஷ்வாக் செய்கிறார்கள் சிலர்; செய்து விட்டு நஜீஸான குச்சியை தன் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு தொழுகிறார். இதற்கு ஆதாரம் உண்டா? என்று வினா எழுப்பி உள்ளீர்கள். சவூதியில் சில இமாம்கள் தொழ நின்றபின் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளதாக ஹதீஃதை எம்மால் காண முடியவில்லை. பிறகு இப்பழக்கம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை கீழுள்ள ஹதீஃத் தெரிவிப்பதை இப்போது காண்போம்.

“எனது சமுதாயத்தவர்களுக்கு நான் கஷ்டம் கொடுத்தவன் ஆவேன் என்றில்லா விட்டால், ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டும் என்று நான் அவர்களுக்கு உத்தரவு இட்டிருப்பேன்” என அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என்று ஸைது காலித் அல் ஜூஹைனீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் காரணமாக எழுத்தாளனுடைய காதில் பேனா இடம் பெறுவது போல் ஸைது பின் காலித்(ரழி) அவர்கள் காதில் பற் குச்சி இடம் வகிக்கும் நிலையில் அவர்களைப் பள்ளியில் அமர்ந்திருக்கக் கண்டேன். அவர்கள் தொழத் தயாராகும் போதெல்லாம் பல் துலக்குவார்கள். அறிவிப்பாளர் : அபூஸலமா(ரழி) அபூதாவூது, ஹதீஃத் எண் : 47, திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு காதில் பற்குச்சியை வைத்துக் கொள்ளுமாறு கட்டளை இடவில்லை. நபித் தோழர் ஒருவர் தான் இவ்வாறு செய்துள்ளார். அவரது எண்ணம் நல்லதாக இருந்தாலும் உம்மத்துக்கு அவர் முன்மாதிரி அல்ல. நபிதோழர் செய்ததால் தாங்களும் செய்யலாம் என செய்ய ஆரம்பிப்பீர்களே யானால் அது தவறு.

ஏனெனில், “நஜீஸான குச்சி” என்ற எண்ணம் உங்களுள் ஏற்பட் டிருப்பதால் தங்களின் எண்ணத்தை எம்மா லும் சரி காண முடிகிறது. எப்படியயனில், தொழுகையில் நிற்கும்போது மிஸ்வாக் செய்பவர் வாயைக் கொப்பளிப்பதும் இல்லை. குச்சியைக் கழுவுவதும் இல்லை. நிச்சயமாக இது நஜீஸ் தான். எனவே, இச் செயல் பார்க்க அருவருப்பாய் இருக்க வாய்ப்புண்டு. வாய் துர்நாற்றம் மற்றும் எண்ணற்ற பேக்டீரியாக்கள் இருப்பதை மிஷ்வாக்கின் மூலம் அகற்ற முடிகிறது.

எனவேதான் மிஷ்வாக்கின் போது வாய் கொப்பளிக்கிறோம். குச்சியையும் கழுவுகிறோம். இதையயல்லாம் செயயாமல் இருக்கும் பட்சத்தில், அச்செயல் பார்ப்பவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தத்தானே செய்யும்? தொழ நிற்கும் இமாம் மிஸ்வாக் செய்துவிட்டு வாய் கொப்பளித்து விட்டு குச்சியையும் கழுவி விட்டு தொழுகையை ஆரம்பிக்கலாமே என்றொரு வினா இப்போது எவருக்கேனும் எழலாம். இது நகைப்பிற்குரிய விஷயம் மட்டும் அல்ல. பின்னால் தொழ நிற்பவர்கள் இதை யயல்லாம் வேடிக்கைப் பார்த்துவிட்டு தொழுகையை ஆரம்பித்தால் அவர் தொழுகை எப்படி இருக்கும்?

இவை மட்டுமில்லாமல், நாமாக இப்படியயல்லாம் கண்டதையும் செய்வதற்கு மார்க்க அனுமதி இல்லவே இல்லை. ஸஹீஹான ஹதீஃதின்படி, தொழ நிற்கும் ஒவ்வொருவரும் “அல்லாஹ்வை பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்ற அச்சத்துடன் தொழ வேண்டும். இயலாவிட்டால் “அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்ற அச்சத்துடன் தொழ வேண்டும். எனவே மிஷ்வாக் செய்ய நேரிடும் போது மிஷ்வாக் செய்ய வேண்டும்; உளூவில் வாய் கொப்பளிக்க வேண்டும் என்பதையும் தொழ நின்ற பின் நபி(ஸல்) அவர்கள் மிஷ்வாக் செய்ததாக ஆதாரங்கள் இல்லை என்பதையும் அறிவோமாக.

Previous post:

Next post: