ஏழைகளுக்கான பொருளாதாரத்தை விழுங்கும் மதபோதகர்களும், இயக்கங்களும்…

in 2018 அக்டோபர்

அபூ ஹனீபா, புளியங்குடி

இஸ்லாமிய மார்க்கத்தை தனது பிழைப்பாக கொண்டவர்கள் ஒரு காலமும் சத்தி யத்தை சொல்லமாட்டார்கள். மார்க்க பணிக்கு என்று தனிப்பட்ட ஒரு கூட்டம் (புரோகிதம்) இஸ்லாத்தில் இல்லை. அதுவும் கூலி வாங்கிக் கொண்டு நிச்சயமாக இருக்கவில்லை. உழைத்து உண்ணுங்கள் அதன் மூலம் மார்க்க பணி செய்யுங்கள். நபிமார்கள் உழைத்து உண்டார்கள், உத்தம ஸஹாபாக் கள், கண்ணியமிக்க இமாம்கள் உழைத்து உண்டார்கள் அதன் மூலம் மார்க்க பணி செய்தார்கள். அவர்களை விட சிறந்த மார்க்க பிரச்சாரர்களை இன்று காணமுடியுமா? முடியவே முடியாது. இன்று மார்க்கத்தை போதிக்க கூலி கேட்கிறார்கள்.

எந்த ஒரு இயக்கமாக இருந் தாலும் மத்ஹப்களாக இருந்தாலும் கூலி இல்லாமல் ஒரு வார்த்தை கூட அவர்கள் வாயில் இருந்து வராது காரணம் மார்க்கம் தான் அவர்களின் பிழைப்பு அதனை விட்டு விட்டால் பிழைப்புக்கு வேறு மாற்று வழி இல்லை. ஆடு மேய்க்காத நபிமார்கள் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இன்று ஆடு மேய்க்கின்ற ஒரு மவ்லவியை, ஒரு ஆலிமை பார்த்திருக்கிறீர்களா? ஆடு மேய்க்காவிட்டாலும் பரவாயில்லை, வேர்வை சிந்தி உழைக்கின்ற மவ்லவியை பார்த்திருக்கிறீர்களா? கூலி வாங்காமல் எந்த பள்ளிவாசலிலாவது தொழவைக்கின்ற மவ்லவியை பார்த்திருக்கிறீர்களா? இல்லையே! ஏன்?

ஆம்! இன்று இஸ்லாமிய மார்க்கம் பணம் சம்பாதிக்கும் வியாபாரத்தளமாக மாற்றப்பட்டு விட்டது. மறுமைக்கு பயந்து மார்க்க பணி செய்த காலம் போய் தனது வயிற்றிற்காக மார்க்க பணி செய்யும் காலம் வந்துவிட்டது. ஒரு சில குர்ஆன் வசனங்களை எடுத்துக் கொண்டு அதனை வைத்து தங்களுக்கு என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி தனது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ளக் கூடிய கூட்டத்தார்கள் வந்துவிட்டார்கள். அனைவருடைய கையிலும் இறைவனுடைய வசனங்கள், சுய விளக்கங்கள், நான் சொல்வதுதான் சரி, நாங்கள் செய்வது தான் சரி, நாங்கள் தான் நேரான வழியில் இருக்கிறோம் என்ற முழக்கத்தோடு கூட்டம் கூட்டமாக பிரிவுகளாக பிரிந்து செயல்படு கிறார்கள் அவர்களை வழிநடத்தக்கூடிய அனைவரும் மார்க்கம் என்ற பெயரால் கூலி வாங்கக்கூடியவர்களே.

தங்களிடம் இருக்கும் கூட்டம் திசை திரும்பிவிடக்கூடாது என்ற நோக்கத்தால் தொடர் மார்க்க பிரச்சாரங்கள், மார்க்க போதனைகள் சமூக சேவைகள் என்று இடைவிடாது தொடர் கிறார்கள் காரணம் கூட்டம் குறைந்தால் வரவு குறையும்; வரவு குறைந்தால் இயக்கத்தை நடத்த முடியாது எல்லாம் பணமே! மார்க்க பிரச்சாரங்கள் செய்யக் கூடிய அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் அவர்கள் சார்ந்த இயக்கங்கள் தாராளமாக செய்து கொடுக்கிறார்கள். உடன் பயணச் செலவு என்ற பெயராலும் கொடுக்கின்றனர். அந்த பயணச் செலவு அடுத்த மார்க்க பிரச்சாரம் வரைக்கும் தாக்கு பிடிக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் எல்லாம் பணமே! இன்றைய முஸ்லிம்கள் துடிப்புடன் இருக்கிறார்கள் மார்க்கத்தை வளர்க்க அல்ல. தங்கள் சார்ந்த இயக்கத்தை வளர்க்க ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்துப் பாருங்கள். தான் உழைத்தது மறுமைக்காகவா? அல்லது தான் சார்ந்த இயக்கத்திற்காகவா? ஒன்றை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

எந்த ஒரு மனிதரும் இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்னாலே அந்த மனிதனுக்கான அனைத்தும் தயார் செய்யப்பட்டு விட்டது அவனின் இறுதி நேரம் வரைக்கும் அதனை அவன் அடைந்து கொள்வான். ஆனால் இன்று மனிதர்களுக்கு சேவை செய்யப் போகிறோம், முஸ்லிம்களை பாதுகாக்கப் போகிறோம் என்று ஆளாலுக்கு ஒரு இயக்கத்தை உருவாக்குகிறார்கள். முஸ்லிம்களை பாதுகாக்கவா? அல்லது தங்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கவா? தனி இயக்கங்களை உருவாக்க அவர்களுக்கு என்ன அவசியம் வந்தது. அவர்கள் தான் முஸ்லிம்களை பாதுகாக்க போகிறார்களா? அவர்கள் தான் முஸ்லிம்களை பாதுகாக்கிறார்களா? அவர்கள் வருவதற்கு முன்னால் முஸ்லிம்களை பாதுகாத்தது யார்? ஏழைகளுக்கு உணவு, உடை கல்வி ஆதாரங்கள், மருத்துவ சேவை எல்லாம் நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்களே, போஸ்டர் ஒட்டுகிறார்களே, தாங்கள் செய்த செயலை வெளிக்காட்ட விளம்பரம் செய்கிறார்களே, அந்த விளம்பரத்திற்கு மக்கள் பணத்தை பயன்படுத்துகிறார்களே? அவர்கள் வருவ தற்கு முன்னால் யார் கொடுத்தது? இந்த இந்தியாவிலே முஸ்லிம் இயக்கங்கள், மத்ஹப்கள், ஜிஹாதி இயக்கங்கள் உருவாகுவதற்கு முன்னால் முஸ்லிம்களை பாதுகாத்தது யார்? முஸ்லிம் இயக்கங்கள், மத்ஹப் பிரிவுகள், ஜிஹாத் இயக்கங்கள் வருவதற்கு முன்னால் முஸ்லிம்கள் பாது காப்பாக இருந்திருக்கிறார்கள் என்றால் இன்று ஏன் பாதுகாப்பாக இருக்க முடியாது?

முஸ்லிம்கள் தாங்களாகவே தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். தாங்களா கவே தங்கள் பொருளாதாரத்தில் உயர முடியும் என்றால் இந்த முஸ்லிம் பிரிவு இயக்கங் கள் எதற்காக? முஸ்லிம்களின் பொருளாதாரத்தை ஏன் இயக்கங்களுக்கு கொடுக்க வேண்டும்? ஏன் இயக்கங்கள் வளர வேண்டும்? இன்றைக்கு முஸ்லிம்கள் ஜகாத் நிதி களை பிரிவு இயக்கங்களுக்கு கொடுப்பதினால் முஸ்லிம் ஏழைகள் முன்னேறுவதை விட இயக்க தலைவர்கள் தான் முன்னேறி இருக்கிறார்கள். முஸ்லிம் ஏழைகளின் வாழ் வாதாரம் முன்னேறி இருக்கிறதோ இல்லையோ இயக்க நிர்வாகிகளின் வாழ்வாதாரம் முன்னேறி இருக்கிறது. இன்றைக்கு ஏழை முஸ்லிம்களுக்கு சென்று சேரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் ஜகாத் நிதி இயக்க சொத்துகளாக, சில நபர்களின் சொத்துகளாக இருக்கின்றது. இதற்கு காரணம் மார்க்கம் என்ற பெயரால் தங்களை வளர்த்துக் கொள்ள கூலி வாங்குவதே. எந்த ஒரு மனிதராக இருந்தாலும் கூலி வாங்காமல் மறுமைக்காக மார்க்க பிரச்சாரம் செய்தால் நிச்சயமாக சத்தியத்தை மறைக்க அவருக்கு எந்த நிர்பந்தமும் ஏற்படாது. சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்வார் எந்த கூட்டமும், கூட்டத்தையும் திரட்டவேண்டிய அவசியம் இல்லை. பேர், புகழ் தேவையில்லை, பொய் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படாது. அப்படி செய்ய இன்றைக்கு முஸ்லிம் இளைஞர்கள் தயாரா? மார்க்க கல்வி கற்ற மவ்லவிகள் தயாரா? மறுமைக்காக உழைக்க தயாரா?

அப்படி எந்த கூலியும் வாங்காமல் மறுமை நன்மைக்காக மார்க்க பணி செய்ய அனைவரும் தயாராகி விட்டால், இயக்க பிரிவுகள், மத்ஹப் பிரிவுகள், ஜிஹாத் பிரிவுகள், அரசியல் பிரிவுகள் என்று முஸ்லிம் சமுதாயத்தில் எந்த பிரிவுகளுமே இருக்காது. முஸ்லிம் சமுதாயம் என்ற உம்மத்தன் வாஹிதா மட்டுமே இருக்கும். (அல்குர்ஆன் : 21:92, 23:52) முஸ்லிம் இளைஞர்களே நீங்கள் உங்கள் மறுமை வெற்றிக்காக உழைக்க போகிறீர்களா? அல்லது உங்கள் தலைவர்கள் உருவாக்கிய இயக்க வெற்றிக்கு உழைக்கப் போகிறீர்களா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். பணம் பத்தும் செய்யும் என்பார்கள் இன்றைக்கு இயக்கங்களுக்கு கிடைக்கின்ற ஜகாத், நன்கொடை, பொருளாதாரம் தான் முஸ்லிம்களை பிரிவுகளுக்கு உட்படுத்துகிறது. உழைத்து மார்க்க பணி செய்யுங்கள். உங்களுக்கு சத்தியத்தை சொல்ல எந்த நெருக்கடியும் இருக்காது. கூலிக்கு மார்க்க பணி செய்தால் நிச்சயமாக நெருக்கடி உருவாகும் சத்தியத்தை மறைக்க வேண்டிய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். எந்த ஒன்றையும் நாம் கொண்டு செல்லப் போவது இல்லை, நாம் செய்யக்கூடிய நன்மையான செயல்களை தவிர.

Previous post:

Next post: