விமர்சனம் : அந்நஜாத் வாசகர்களில் ஒரு கூட்டம் தான் இன்று “அஹ்லே குர்ஆன்” காரர்களுடன் இணைந்திருக்கிறார்கள் இது அந்நஜாத்தின் சுய சிந்தனையாளர்களை உருவாக்கும் பணிக்கு கிடைத்த தோல்வி என்கிறேன். ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? அபூ நபீல், தேங்காய்பட்டணம்

விளக்கம் : நிகழ்கால நடப்பின் மீதான தங்க ளின் ஐயம் அருமையான சிந்தனை! ஏற் பதா? மறுப்பதா? என்பதை குர்ஆன், ஹதீஃத் கொண்டு பார்ப்போமா!

இந்நிகழ்வை, சுய சிந்தனையாளர்களை உருவாக்கும் எமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கருதுகிறோம். எப்படி என்கிறீர்களா? குர்ஆன் மற்றும் ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்பது உள்ளங்கை நெல்லிக் கணியாய் தெளிவான பின்பும், அப்படி இப்படி இருந்தவர்கள் வெளியேறி விட்டார்கள் அல்லவா? இதன் மூலம் சுயசிந்தனை யாளர்கள் வடிகட்டி தரப்பட்டுள்ளனர்.

இது அல்லாஹ் கொடுத்துள்ள வெற்றிதானே! 6:116வது இறை வசனம் “பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்று வீரானால், அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள்” என்ற இறைச் செய்தி அன்றிலிருந்து இன்று வரை உத்வேகடானிக்காக நமக்கு இருந்து கொண்டிருக்கிறதல்லவா? இந்த ஆயத்தைப் படித்தவுடன், குர்ஆன், ஹதீஃதை மட்டும் பின்பற்றுபவர்களை விட பிரிந்து சென்றவர்கள் சிறு கூட்டமாகத்தானே இருக்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் நேரான வழியில் இருக்கிறார்களோ என்ற ஒரு சந்தேகம் எழுகிறதா?

மேலே உள்ள இறை வசனத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். உண்மையை அறிவீர்கள். அல்லாஹ் கூறுவதிலி ருந்து மொத்தம் இருப்பது இரண்டு சாரார் மட்டுமே என்பதை அறிய முடிகிறது. ஒருசாரார் சிறுபான்மை, மறுசாரார் பெரும்பான்மை! அதாவது குர்ஆன், ஹதீஃதை மட்டும் பின்பற்றும் சாரார் சிறுபான்மையினர். மறு சாரார் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்ற ஒட்டுமொத்த பிரிவுகளிலுள்ள பெரும்பான்மையினர். பெரும்பாலோர் யார்? அல்லாஹ் கொடுத்த பெயரில் செயல்படாமல், காரிஜிய்யா, ஷிஆ, ராபிழா, ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹன்பலி, இன்னும் பல பெயர்களில் பல நாடுகளில், குறிப்பாக நமது தமிழகத்தில் எண்ணற்ற பிரிவுகளாகப் பிரிந்துசென்ற (தாங்கள் இப்போது தெரிவிக்கின்ற பிரிவும் இதில் அடக்கம்) அனைத்துப் பிரிவுகளும் சேர்த்து தான் பெரும்பான்மையினர். ஒவ்வொரு பிரிவினரும் பிரிந்து விட்ட தற்கான காரணம் அவர்களின் யூகங்களே. 6:116வது இறை வசனத்தின் தொடர்ச்சியைப் பாருங்கள்.

“வெறும் யூகங்களைத் தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் அனுமானம் செய்பவர்களே தவிர வேறில்லை” பிரிந்து சென்றவர்களின் யூகங்களை சிறிது பார்ப்போம். யூகங்கள் என்று ஆகிவிட்டபிறகு, அவைகள் குர்ஆன், ஹதீஃதில் இல்லாதவைகள் என்று சொல்லவும் வேண்டுமா? பிரிவினர்களின் ஒரு சிலரின் யூகங்களைப் பாருங்கள். பெரும்பாவம் புரிபவன் காஃபிர்கள் என்றனர் காரிஜியாக்கள். நபி(ஸல்) அவர்களால் சுவர்க்க நன்மாராயம் கூறப்பட்ட அலீ(ரழி) அவர்களை எதிர்த்து அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பிரிந்தவர்கள் காரிஜியாக்கள்.

நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின், அலீ(ரழி) அவர்களும், அஹ்லு பைத்தை சார்ந்தவர்களும் மட்டும்தான் அரசாட்சி செய்ய உரிமை பெற்றவர்கள் எனக்கூறி, மூன்று கலீஃபாக்களையும் அவர் களது ஆதாரவாளர்களான எண்ணற்ற சஹாபாக்களை நிராகரித்தவர்கள். அந்த ஸஹாபாக்கள் அறிவித்த கணக்கிலடங்கா ஹதீஃத்களையும் நிராகரித்த ஷிஆக்கள். ஷிஆக்களின் கொள்கையை ஏற்று அதே நேரத்தில் அதிகமான ஸஹாபாக்களை காஃபிர்கள் எனக் கூறி அதிலிருந்து பிரிந்த ராபிழாக்கள். “கத்ர் எனும் விதியை மறுத்து, மனித விருப்பப்படி அனைத்து செயல்களும் நடப்பதாக நம்பிக்கைக் கொண்ட கத்ரிய்யாக்கள் (முஃதஸிலாக்கள்) விதியின்படியே அனைத்தும் நடப்பதாகவும், ஆனால் மனிதன் விருப்பம் இழந்தவன் என்ற சித்தாந்தத்தை புகுத்திய ஜஹமிய்யாக்கள்.

அல்லாஹ்வின் பண்புகளை (ஷிஃபத்) மறுத்து விட்ட ஜஹமிய்யாவினர். நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வாழ்ந்து மறைந்த முன்சென்ற நல்லடியார்களின் பெயர்களில் ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹன்பலி எனும் பிரிவுகளை உள்ளடக்கி பிரிந்து சென்ற சுன்னத் ஜமாஅத்தினர். சுன்னத் ஜமாஅத்தான மத்ஹபுகளில் இருந்துகொண்டு, தரீக்காக்களில் இருந்து கொண்டும், மார்க்கத்தில் இல்லாதவை களை எல்லாம் மார்க்கத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் தப்லீக் ஜமாஅத்தினர். குர்ஆன், ஹதீஃத்தான் மார்க்கம் எனக் கூறி, மத்ஹபுகளிலிருந்து வெளியேறி சரியான கொள்கைக்கு வந்துவிட்ட, ஆனால் அதே நேரத்தில் “அஹ்லே ஹதீஃத்” என பெயரிட்டுக் கொண்டு பிரிந்து சென்ற ஜமாஅத்தினர். குர்ஆன் மட்டும் போதும் எனக் கூறி மத்ஹப்களிலிருந்து பிரிந்து சென்ற அஹ்லுல் குர்ஆன் பிரிவினர். மரித்துவிட்ட நல்லடியார்களிடம் தங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கையேந்தும் இவர்களிலுள்ள தரீக்காவாதிகள். நபி(ஸல்) அவர்கள் இறுதித் தூதர் அல்ல என வாதிடும் காதியானிகள். நபி(ஸல்) கொடுத்துள்ள மார்க்கத்தில் பிரிவுகளுக்கு இடமில்லை எனக்கூறி மத்ஹபுகளிலிருந்து வெளியேறி, சுயசிந்தனையுடன், நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் மட்டுமே செயல்பட வேண்டும் என நேரியக் கொள்கையை மீண்டும் நிலைநாட்டும் முயற்சியை தமிழகத்தில் உருவாக்க ஒருசிலர் நல்ல எண்ணத்துடன் முனைந்து செயல்பட்டனர்.

ஆனால், அதிலும் கூட தனி மனிதர் குற்றம் செய்ததாக அவதூறு கூறி, அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையில் குற்றவாளியாக இருந்தால் அவரின் குற்றத்திற்கு தீர்ப்பு நாளின் அதிபதி யான அல்லாஹ் மறுமையில் தண்டனை கொடுப்பான் என்ற அல்லாஹ்வின் வாக்கை மறந்து விட்டு தவ்ஹீத் என்ற பிறிதொரு பிரிவை ஏற்படுத்தி பிரிந்து சென்ற புதிய பிரிவினர். இந்த புதிய பிரிவினரை நம்பிச் சென்று, இறுதியில் ஏமாற்றம் அடைந்து வேறு பிரிவு, பிறகு அதிலும் வேறு பிரிவு, அதனுள்ளிருந் தும் இன்னும் இன்னும் வெவ்வேறு பிரிவுகளை இன்றளவும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பற்பல பெயர்களில் பற்பல பிரிவுகள்.

நமது தமிழ்நாட்டில் மட்டும். அல்லாஹ்வும், அவனது தூதருமான, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த மார்க்கத்தை சுய சிந்தனையுடன் நிலைநாட்ட வந்தவர்களிடமிருந்து வெளியேறி அஹ்லுல் குர்ஆனுடன் இணைந்த தாங்கள் கூறும் நபர்கள். இந்த கணக்கிலடங்காத பிரிவினர்கள் யூகங்களைப் பின்பற்றவில்லை என்று கூறு வார்களேயானால், அல்லாஹ் காட்டிய இஸ்லாம் என்ற பெயரிலிருந்து வேறு பெயர்களை ஏன் வைத்துக் கொண்டார்கள்? அல்லாஹ்வின் மார்க்கம் பிடிக்க வில்லை என்றுதானே பொருள் கொள்ள முடியும்? அத்தனைப் பிரிவுகளுமே ஏதோதோ காரணங்களைக் கூறி அல்லாஹ் காட்டிய மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்கள்.

அதுவும் எப்படி தெரியுமா? அல்லாஹ்வின் கடுமையான ஒரு எச்சரிக்கையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தங்களின் மனோ இச்சைக்குப் பலியாகி, அதே நேரத்தில் அதைப்பற்றி சிறிது கூட கவலைப்படாமல் பிரிந்தவர்கள் ஆவார்கள். வெளியேறவில்லை என்று சொல்வார் களேயானால், அவர்களின் கூற்று தவறு என்று 6:159வது இறை வசனம் எச்சரிக்கிறது.

அந்த கடுமையான எச்சரிக்கைகளைப் பாருங்கள். 6:159வது இறை வசனம் “நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து பல பிரிவுகளாகிவிட்டனரோ, அவர்களின் எந்தக் காரியத்திலும் (நபியே!) உமக்கு சம்பந்தம் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். இந்த கூட்டத்தினர் அனைவரையுமே சுலபமாக அறிந்து கொள்வதற்காக ஒரு தட யத்தையும் (ளீஸிUசி) 30:32 இறைவசனத்தில் அல்லாஹ் தருவதைப் பாருங்கள்.

“எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ, ஒவ்வொரு கூட்டத் தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.” இப்படிப்பட்ட தெளிவை, உண்மையான இறைவனாகிய அல்லாஹ் ஒருவனால் தான் கொடுக்க முடியும். அல்ஹம்துலில்லாஹ்.

எனவே, தாங்கள் கூறும் அந்நஜாத் வாசகர்களில் சிலர் இன்று “அஹ்லுல் குர்ஆன்”காரர்களுடன் இணைந்திருக்கிறார்கள் என்பதை அந்நஜாத்திற்கு அல்லாஹ் கொடுத்த வெற்றியாகக் கருதுகிறோம்.

Previous post:

Next post: