மர்யம்பீ, குண்டூர்,
- யாரை நீர் விரட்ட வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்?
யாசிப்பவரை நீர் விரட்டவேண்டாம். அல்குர்ஆன் : 93:10 - பாறைகளை குடைந்து வசித்த கூட்டத்தார் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
ஸமூது கூட்டத்தார். அல்குர்ஆன் : 89:9,10 - ஸமூது கூட்டத்தினர் எந்த ஒட்டகத்தை அறுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ்வின் பெண் ஒட்டகத்தை அறுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் : 91:12,13 - யார் யாரெல்லாம் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை விட்டு தூரமாக்குவதாக அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர்களை. அல்குர்ஆன் : 92:17 - ஜிப்ரில்(அலை) அவர்களை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
“ரூஹுல் குதூஸ்” என்று கூறுகிறார். அல்குர்ஆன் : 2:87 - “குன்” என்றால் என்ன?
“ஆகுக” என்று அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் : 2:117 - யூஸுப்(அலை) அவர்கள் என்ன ஆனார்கள் என்று அவரது சகோதரர்கள் கூறினர்?
அவரை ஓநாய் தின்றுவிட்டது என்று கூறினார்கள். அல்குர்ஆன் : 12:17 - அல்கலம் என்றால் என்ன? எழுதுகோல். அத்தியாயம் : 68
- குழப்பம் விளைவிப்பதை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
கொலையைவிடப் பெரும்பாவம் என கூறுகிறான். அல்குர்ஆன் : 2:217 - மது, சூது பற்றி அல்லாஹ் எவ்வாறு எச்சரிக்கிறான்?
“பலனை” விட “கேடு” மிகப் பெரிது என கூறுகிறான். அல்குர்ஆன் : 2:219 - யாரை மேலானவன் என அல்லாஹ் கூறுகிறான்?
உங்களை கவரக்கூடிய இணை வைக்கும் ஆணை விட முஃமினான அடிமை மேலானவன். அல்குர்ஆன் : 2:221 - எதையயல்லாம் சமமாக மாட்டாது என அல்லாஹ் கூறுகிறான்?
தீயதும், நல்லதும் சமமாக மாட்டாது. அல்குர்ஆன் : 5:100 - மனிதனின் நிலை பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
அவசரக்காரனாகவே இருப்பதாக கூறுகிறான். அல்குர்ஆன் : 17:11 - யாருடைய உடலை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
ஓர் அத்தாட்சிக்காக பிர்அவ்னின் உடலை பாதுகாப்பதாக கூறுகிறான். அல்குர்ஆன் : 10:92 - அழ்ழுஹா என்றால் என்ன? முற்பகல். அத்தியாயம் : 93
- மூஸா(அலை) அவர்களுக்கு யார் உதவியாளராக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான்?
மூஸாவின் சகோதரர் ஹாரூனை (அலை). 25:35 - அல்லாஹ்வைத் தவிர வணங்குபவர்களை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
நரகத்தின் எரிகொள்ளிகள். 21:98 - அல்புர்கான் என்றால் என்ன?
பிரித்தறிவித்தல். அத்தியாயம் 25 - ஒருபோதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்கமாட்டேன் என அல்லாஹ்விடம் கூறியவர் யார்?
மூஸா(அலை) அல்குர்ஆன் : 28: 17 - சுகபோகிகளை வேதனையைக் கொண்டு நாம் பிடிக்கும் போது அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
அபயக்குரல் எழுப்புவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் : 23:64