அமல்களின் சிறப்புகள்….
ஒரு திறனாய்வு!
தொடர் : 42
- அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.
தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.
திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… சென்ற மாதம் ஜனவரி 2019 இதழில் அமல்களின் சிறப்பு (அசி) புத்தகம், நல்லபிள்ளை வேஷம் போட்டு மார்க்கத்தில் நச்சுக் கருத் துக்களைப் புகுத்தியிருப்பது உண்மை என்பதையும், அல்லாஹ்வுக்கே தந்திரம் சொல்லிக் கொடுக்கும் ஷைத்தானிய வேலைகள் செய்ததையும் கண்டறிந்தோம்.
சதித் திட்டம்! சதித்திட்டம் செய்து அவர்களின் ஆதரவாளர்களை மூளைச் சலவை செய்வதை இந்த இதழில் பார்ப்போம்.
ஆதரவாளர்களை குர்ஆன் ஹதீஃத் இரண்டையும் படிக்கவிடாமல் செய்துவிட்டாலும், குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் எதிராக “அசி’ புத்தகம் எழுதுவதை, மார்க்கம் தெரிந்த அதாவது குர்ஆனையும், ஹதீஃதையும் தெரிந்த எவரேனும் கண்டுபிடித்து, மக்களுக்குத் தெரிவித்துவிடுவார்கள் என்பதை, புத்தகத்தை எழுதும்போதே தொலைநோக்கு பார்வையில் முன்கூட்டியே கணித்து, அப்படி தெரிவித்தால், ஆதரவாளர்களை எப்படி மூளைச் சலவை செய்து தக்கவைத்துக் கொள்ளலாம் என் பதை பக்கம் 388ல் முதல் பத்தியில் எழுதப்பட்டுள்ளது. அதை கீழே கொடுத்துள்ளோம். கவனமாகப் படித்துப் பாருங்கள்.
“சப்தமிட்டு திக்ர் செய்வது பித்அத் என்றும், கூடாது என்றும் சிலர் கூறுகின்றனர். இது ஹதீஃத்களை விளங்காத காரணத்தால் கூறுவதாகும். மெளலானா. அப்துல் ஹை (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ஸபாஹத்துல் ஃபிக்ர் என்ற நூலில், சப்தமிட்டு திக்ர் செய்வதற்கு ஆதாரமாக சுமார் ஐம்பது ஹதீஃத்களை கூறியுள்ளார். ஆனால், அதற்குரிய நிபந்தனைகளைப் பேணி அதன் எல்லைக்குள் செய்வதும், பிறருக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதும் அவசியமாகும்.
”எமது ஆய்வு :
“சப்தமிட்டு திக்ர் செய்வது பித்அத் என்றும், கூடாது என்றும் சிலர் கூறுகின்றனர்” என்று இப்புத்தகத்தில் எழுதியுள்ளதை இப்போது ஆய்வு செய்வோம்.
இக் கருத்தை பல முஸ்லிம்கள் ஆதாரங்களுடன் காலம் காலமாக சொல்லி வருகின்றனர். இது மார்க்கத்தில் இல்லாத அமல் என்றும் எனவே சப்தமாக திக்ர் செய்யக் கூடாது என்பதை நாமும் ஆதாரங்களுடன் சென்ற இதழில் எழுதினோம். ஆக, குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் எதிராக பொய்யான அமல்களை எழுதும்போதே, எதிர்ப்பு ஏற்படும் என்பதை எதிர்பார்த்து இருக்கிறது இப்புத்தகம். எப்படி என்றால், எதிர்ப்பு களை சமாளிக்கும் டெக்னிக்கை அடுத்த வாக்கியத்தில், “இது ஹதீஃத்களை விளங் காத காரணத்தால் கூறுவதாகும்” என்று எழுதப்பட்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
இப்புத்தகம் இந்த எதிர்ப்புகளை சமாளிக்க பயன்படுத்தும் அடுத்தடுத்த டெக்னிக்குகளை, எழுதப்பட்டிருக்கும் வாசகத்திலிருந்து இனி காண்போம்.
அல்குர்ஆன் : 7:205 ஆயத்தில் “சொல்லில் உரத்த சப்தம் இல்லாமல்” திக்ர் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் அறிவுறுத்தியிருக்க, இதை மக்களுக்கு எடுத்துச் சொல்பவர்கள் ஹதீஃத்களை விளங்காதவர்களாம். குர்ஆன் வசனத்தைக் கூறுபவர்களை ஹதீஃத்களை விளங்காதவர்கள் என்று கூறி திசை மாற்றம் செய்து பிளேட்டை திருப்பிப் போட்டு தங்கள் ஆதரவாளர்களிலுள்ள புரபசர்கள், டாக்டர்கள், இஞ்ஜினியர்கள், படித்த மேதைகள், பாமரர்கள் அனைவரையும் நாம் காட்டும் இறைவசனம் குர்ஆனில் இல்லாதது போல் காட்டி மூளைச் சலவை செய்யும் சதித் திட்டம் தான் இவர்களது டெக்னிக்.
“மெளலானா, அப்துல் ஹை (ரஹ்மத் துல்லாஹி அலைஹி) அவர்கள் ஸபாஹத்துல் ஃபிக்ர் என்ற நூலில், சப்தமிட்டு திக்ர் செய்வதற்கு ஆதாரமாக சுமார் ஐம்பது ஹதீஃத்களை கூறியுள்ளார்” என அடுத்து கதைக்கிறது அசி புத்தகம்.
ஐம்பது ஹதீஃத்களை கூறியுள்ளார் என்றால் என்ன அர்த்தம்? மார்க்கத்தில் ரசூல் (ஸல்) அவர்கள் கூறுவது மட்டும்தான் ஹதீஃத் இந்த அப்துல் ஹை ஹதீஃதை கூறும் நபி அல்ல; ஹதீஃதை அறிவிக்கும் சஹாபியும் கிடையாது. ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருப்பது அவர் மீது அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக என்று துஆ கேட்பது தான்.
அசி புத்தகம் மவுத்தாப்போன வயதான முஸ்லிம்களின் பெயரைப் போட்டு, பின்னால் அடைப்புக் குறியில் ரஹ்மத்துல் லாஹி அலைஹி என்று போட்டு, முன்னால் மெளலானா என்று போட்டு, கப்சா ஹதீஃத்களை அரங்கேற்றம் செய்வது இவர்களது வாடிக்கை. சரி! வியத்துக்கு வருவோம். யார் இந்த அப்துல் ஹை? அப்துல் ஹை என்றே ஒருவர் இல்லாமலே கற்பனைப் பெயராகவும் இருக்கலாம். அல்லது மற்ற முஸ்லிம்களைப் போல இவரும் ஒரு முஸ்லிம் அவ்வளவுதான். அவர் நல்லவரா யிருந்தாலும், கெட்டவராயிருந்தாலும், இவர்கள் சொல்வது போல மெளலானா வாக இருந்தாலும் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. மறுமையில் அவருடையதை அனுபவிக்கப் போகிறவர் அவரே.
குர்ஆன் எதைக் கூறினாலும் இவர்களுக்கு கிஞ்சிற்றும் கவலை கிடையாது என் பது தெரிகிறது. சப்தமிட்டு திக்ர் செய்வ தற்கு ஆதாரமாக சுமார் ஐம்பது ஹதீஃத் களை அப்துல் ஹை கூறியுள்ளாராம். அப்படி என்றால், குர்ஆனுக்கு எதிராக உள்ள இந்த ஹதீஃத்களை குப்பையில் எரியப்பட வேண்டிய பொய்யனா ஹதீஃத்கள் என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள். இதில் பியூட்டி என்னவென்றால் இப்படி ஒரு குர்ஆன் வசனம் இருப்பதையே இப்புத்தகம் கண்டுகொள்ளவும் இல்லை. அதாவது அவரது ஆதரவாளர்களுக்குத் தெரியப்படுத்தவும் இல்லை. இந்த லட்சணத்தில், குப்பையில் எறியப்படவேண்டியவைகளை ஒரு புத்தகமாக போட்டிருக்கிறார் அப்துல் ஹை சாஹிப். அந்த புத்தகத்திற்கு ஸபாஹத்துல் ஃபிக்ர் என்று பெயர் நாமத்தை பாராட்டி மகிழ்கிறது. அசி புத்தகம்!
சென்ற இதழில் சொல்லி இருந்தோமே நல்ல பிள்ளை வேம் போடுகிறது அசி புத்தகம் என்று! அதை அடுத்த வாக்கியத்தில் பார்த்து கண்டுகளியுங்கள்! இதோ அந்த வாக்கியம்.
“ஆனால், அதற்குரிய நிபந்தனைகளைப் பேணி அதன் எல்லைக்குள் செய்வதும், பிறருக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதும் அவசியமாகும்”
இதைப் படித்தவுடன் என்ன தோன்றும்? பிறருக்கு இடையூறு தருவதைத் தவிர்த்து திக்ர் செய்வது நல்லதுதானே என்று, படிப்பவரை நினைக்கச் செய்வதன் மூலம், குர்ஆன் வசனம் மீறுப்பட்டதை படிப்பவர்கள் கண்டு கொள்ளாமல் திசை மாற்றம் செய்யப்படுகிறார்கள். அல்லாஹ்(ஜல்) அறிவித்ததை அலட்சியம் செய்யும்படி இந்த ஜமாத்தினரை ஆக்கிவிட்டது அசி புத்தகம் என்ற உண்மையை விவரம் புரிந்தவர்கள் மட்டும் உணர்கின்றனர்.
உம்மத்தை வழிகெடுக்கும் இந்த முயற்சியை ஏன் இவர்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எமது இந்தத் தொட ரைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எனவே, எப்படி வழிகெடுக்கிறார்கள் என்பதை அடுத்த இதழில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ், இனியும் வரும்.