அல்லாஹ்வின் கடும் சோதனை !

in 2019 மே

அல்லாஹ்வின் கடும் சோதனை !

முஸ்லிம்களே சுதாரித்துக் கொள்ளுங்கள்!!

K.M.H.  அபூ அப்தில்லாஹ் ஆக்கத்திலிருந்து மீள்பதிவு

“…அல்லாஹ், தான் நாடியோருக்கு (ஆட்சி) அதிகாரத்தை வழங்குகிறான்…”  (2:247)

“அல்லாஹ்வே! ஆட்சிகளின் அதிபதியே! நீ விரும்பியோருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். இன்னும் நீ விரும்புவோரிடமிருந்து ஆட்சியை அகற்றியும் விடுகிறாய். நீ நாடி யோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் யாவும் உன் வசமே உள்ளன. நிச்சயமாக நீ ஒவ்வொரு பொருளிலும் ஆற்றல் மிக்கவன்” என (தூதரே) கூறும். (3:26)

ஆட்சியில் சிறிதேனும் இவர்களுக்குப் பங்கிருக்கிறதா? அப்படி இருந்தால், மக்களுக்கு (அதிலிருந்து) சிறிதும் கொடுக்கமாட்டார்கள். (4:53)
(மேலும் பார்க்க: 4:48-56)

இந்த மூன்று குர்ஆன் வசனங்களையும் படித்து உணர்கிறவர்கள் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க ஏக இறை வனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். அவன் விரும்புகிறவர்களுக்கு மட்டுமே ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்கிறான் என்பதைத் திட்டமாக அறிய முடியும். முன்னர் கொடியோன்களான நம்ரூதுக்கும், ஃபிர்அவ்னுக்கும் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தது போல், இப்போது நரபலி மோடிக்கு இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை அந்த ஏக இறைவன் அல்லாஹ் கொடுத்து இருந்தான். ஆம்! முஸ்லிம்களை மிகக் கடுமையான சோதனையில் ஆக்கினான் அல்லாஹ்.

தெற்கே கன்னியாகுமரியிலிருந்து வடக்கே காஷ்மீர் வரையுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களும், யா அல்லாஹ்! கொடியோன் நரபலி மோடியை இந்தியாவில் ஆட்சியாளனாக ஒருபோதும் ஆக்கி விடாதே, என தொடர்ந்து கண்ணீர் விட்டு துஆ கேட்டும், அல்லாஹ் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பல நாள்கள் செய்த துஆக்களை ஏற்காமல் நிராகரித்து விட்டான். என்ன காரணம்?

இத்தனைக்கும் முஃமின்களை காப்பது நம்மீது கடமை. (10:103)

முஃமின்களை நிச்சயம் அல்லாஹ் பாதுகாக்கிறான். (22:38)

முஃமின்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் கடமை. (30:47)

அல்லாஹ் ஒருபோதும் வாக்குறுதி மீற மாட்டான். (3:9,194, 8:42, 13:31, 39:20)

இவ்வளவு தெளிவான சான்றுகளும், உறுதியான அல்லாஹ்வின் வாக்குறுதிகளும் இருந்தும் அல்லாஹ் முஸ்லிம்களை ஏன் சோதனைக்குள்ளாக்கினான்? அவர்களது துஆக்களை ஏற்காமல் நிராகரித்து நரபலி மோடியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினான் மீண்டும் கூட அமர்த்தலாம் ஏன்? முஸ்லிம்கள் ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ஆம்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் முன்னிலை வகிப்பவர்கள் இன்றைய முஸ்லிம்களே. அல்லாஹ்வின் “தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள்” என்ற எண்ணற்றக் கட்டளைகளுக்கு அப்படியே அடிபணிந்து வாழ்கிறவர்கள் எத்தனை முஸ்லிம்கள்? அப்படியே தொழுதாலும் வழிகெட்ட பிரிவுகளை விட்டு நீங்கி நபிவழியில் தொழுகையை நிலைநாட்டுபவர்கள் எத்தனை பேர்? ஐங்கால தொழுகைகளையும் விடாது அதன் அதன் நேரத்தில் நிலைநாட்டுபவர்கள் எத்தனை பேர்? இந்தியாவில் ஒரேயயாரு பள்ளியிலாவது தொழுகை வரிசை நேராகவும், நெருக்கமாகவும் ஷைத்தானுக்கு இடம் கொடாமல் நிற்பதைப் பார்க்க முடிகிறதா? முஸ்லிம் சமுதாயத்தில் 0.1 சதவீதம் தேறுவது கடினம் தான். அதே போல் முஸ்லிம் செல்வந்தர்கள் 59:7 குர்ஆன் வசனம் சொல்வது போல் வெளியே செல்லவிடாமல் தடுத்து வைத்திருக்கும் செல்வத்திற்கு வருடா வருடம் தவறாமல் ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்கள் எத்தனை பேர்? இப்படி ஐங்கடமைகளையும் முறைப் படி நபிவழியில் தவறாமல் செய்பவர்கள் எத்தனை பேர்?

அதுமட்டுமா? அடிப்படையான கலிமாவை உள்ளத்தால் உணர்ந்து வாயால் சரியாக வெளிப்படுத்தத் தெரியாத முஸ்லிம்களே பெரும்பான்மை முஸ்லிம்களாக இருக்கிறார்கள். அன்று இறுதி நபியின் வருகைக்கு முன்னர் இப்றாஹீம் (அலை) அவர்களின் வாரிசுகளான குறைஷ்கள் நரகின் விளிம்பில் இருந்ததாக 3:103 குர்ஆன் வசனம் கூறுவது போல், இன்றைய முஸ்லிம்கள் அதே நரக விளிம்பில் நிற்கிறார்கள்.

அன்று குறைஷ்கள் தாருந்நத்வா உலமாக்கள் காட்டிய வழியில் தொழுது கொண்டு, நோன்பு வைத்துக் கொண்டு, தானதர்மம் செய்து கொண்டு, ஹஜ் செய்து கொண்டு, தாருந்நத்வா ஆலிம்களை தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் 7:3, 18:102-106, 9:31 இறைக் கட்டளைகளுக்கு முரணாக மதகுருமார்களாகப் புகுத்தி அவர்களது வழிகாட்டல்படி சிலை வணக்கம், சமாதிச் சடங்குகள், மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், பல பலப் பிரிவுகள் போன்றவற்றில் மூழ்கி இருந்ததுபோல், இன்றைய முஸ்லிம்கள், இன்றைய உலமாக்கள் காட்டிய வழியில் தொழுது கொண்டு, நோன்பு வைத்துக் கொண்டு, தான தர்மம் செய்து கொண்டு, ஹஜ் செய்து கொண்டு, இந்த உலமாக்களை தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் அதே 7:3, 18:102-106, 9:31 இறைக் கட்டளைகளுக்கு முரணாக மதகுருமார்களாகப் புகுத்தி அவர்களது வழிகாட்டல்படி சமாதிச் சடங்குகள், கபுரு சடங்குகள், மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், பல பலப் பிரிவுகள் போன்றவற்றில் அக்கால குறைஷ்கள் போலவே மூழ்கி இருக்கின்றனர். இம்மவ்லவிகளின் துர்போதனைகள் காரணமாக அவற்றையும் மீறி இன்று சில முஸ்லிம்கள் தர்காக்களுக்கு மட்டுமல்ல. கோயில்கள், சர்ச்சுகள் இவற்றிற்கும் சென்று வழிபடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எண்ணற்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள். 3:103 இறைவாக்குக் கூறுவது போல் நரக விளிம்பில் நிற்கிறார்கள்.

இந்த நிலையில் அல்லாஹ்வின் பாதுகாப்போ, உதவியோ இன்றைய முஸ்லிம்களுக்குக் கிடைக்க முடியுமா? ஒருபோதும் கிடைக்காது. அதனால் தான் கொடுமைக் காரனை ஆட்சியில் அமர்த்தினான், நாடினால் மீண்டும் அமர்த்துவான் அல்லாஹ். அல்லாஹ்வின் மீதும், மறுமையின் மீதும் சுவர்க்கம், நரகம் பற்றியும் உறுதியான நம்பிக்கையில்லாத பெருங்கொண்ட முஸ்லிம்கள் மற்றும் மவ்லவிகள் நிலை இவ்வாறிருக்க, 7:55 இறைவாக்கை நிராகரித்து வரம்பு மீறிக் கூட்டு துஆ என்ற பெயரில் பதுஆக்கள் செய்யும் நிலையில், அல்லாஹ்வின் மீதும், மறுமையின் மீதும், சுவர்க்கம், நரகம் மீதும் மிகமிக உறுதியான நம்பிக்கையில் முழுக்க முழுக்க நபி வழியில் செயல்படும் உண்மையான முஃமின்கள், பெருங்கொண்ட இம்முஸ்லிம்களை நாளை நரகிலிருந்து விடுவிக்க ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வயிற்றிலுள்ள பெருங்கட்டியை அகற்றச் சிறு துன்பமான வயிற்றைக் கிழிப்பது போல், இம்முஸ்லிம்கள் அழிந்துபடும் இவ்வுலகில் கொடுங்கோல் ஆட்சியாளன் கொடுக்கும் துன்பங்களை அனுபவிக்க வைக்க வேண்டும் என்று 7:55 இறைவாக்குக்கு அடிபணிந்து வரம்பு மீறாமல் துஆ கேட்பது நல்லதுதானே!

அப்போது அற்பமான அழிந்துபடும் இவ்வுலகில் மூழ்கி இருக்கும் பெருங்கொண்ட முஸ்லிம்களில் அல்லாஹ் நாடும் ஒரு சிலராவது பாடம் பெறமாட்டார்களா? திருந்த மாட்டார்களா? அல்லாஹ்வின் மீதும், மறுமையின் மீதும் உறுதியான நம்பிக்கை கொள்ள மாட்டார்களா? என்று தான் ஆசை கொள்வார்கள். அதற்கு 6:63, 17:67 குர்ஆன் வசனங்கள் நம்பிக்கையூட்டுகின்றன. அவை வருமாறு:

“நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் (துன்பப்படும்போது) எங்களை இதை விட்டுக் காப்பாற்றினால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் எனப் பணிவாகவும், இரகசியமாகவும் அவனை நீங்கள் பிரார்த்திக்கும் போது உங்களைக் காப்பாற்றுபவன் யார்? என (தூதரே) கேளும். (6:63)

உங்களுக்குக் கடலில் ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், அவனைத் தவிர (படைப்பினங்களை) அழைக்கிறீர்கள். அவை மறைந்து விட்டன. எனினும் அவன் (இறைவன்) உங்களைக் காப்பாற்றிக் கரையில் சேர்க்கிறான். பின்னர் புறக்கணிக்கிறீர்கள். மனிதன் பெரும் நன்றி கெட்டவனாக உள்ளான். (17:67)

இன்றைய முஸ்லிம்கள், சட்டவிரோத கமாக, திருட்டுத்தனமாகப் புகுந்துள்ள மதகுருமார்கள், மத போதகர்கள் என வேடமிட்டு நடிக்கும் மவ்லவிகளை முற்றிலும் நம்பி, அவர்களின் சுய விளக்கங்களை வேத வாக்காகக் கொண்டு செயல்படுவதால், அல்லாஹ்வை நிராகரிக்கும் செயல்பாடுகளில் மூழ்கி இருப்பதால், அல்லாஹ் நம்மீது அநியாயக்கார ஆட்சியாளனாக நரபலி நரேந்திரமோடியைத் தேர்ந்தெடுத்திருந்தான். மீண்டும் இதையே நாடினால் தொடர செய்வான். முஸ்லிம்களே எச்சரிக்கை! படிப் பினைப் பெறுங்கள்.

எங்களுக்குத்தான் குர்ஆன் விளங்கும், நாங்கள் தான் மார்க்கம் சொல்ல தகுதியும் உரிமையும் பெற்றவர்கள், குர்ஆன் மொழி பெயர்ப்புகளை பார்த்து அவாம்கள் விளங்க முடியாது என்றெல்லாம் பெருமை பேசுபவர்களே பெரும் வழிகேடர்கள். அல்லாஹ்வே அவர்களை நேர்வழியை விட்டும் திருப்பி விடுகிறான். நேர்வழியை அவர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகச் சொல்வார்கள் என்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் அல்லாஹ் 7:146 இறைவாக்கில் கூறுவதை மீண்டும் மீண்டும் படித்து உணர்வு பெறுங்கள். அன்றைய தாருந்நத்வா உலமாக்களும் இன்றைய உலமாக்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே! மவ்லவிகள் எனப் பெருமை பேசும் அனைத்துப் பிரிவு மவ்லவிகளையும் முற்றிலும் நிராகரித்து, குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் நேரடியாகத் தினசரிப் படித்து 6:153 இறைவாக்குக் கூறும் ஒரே நேர்வழி நடக்க முன்வாருங்கள். அதுவே இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றியைத் தரும். அல்லாஹ் அருள் புரிவானாக.

Previous post:

Next post: