விமர்சனம்! விளக்கம்!!

in 2019 மே,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : ஹிஜ்ரி காலண்டர் அறிமுகமாகி 1380 வருடங்களும் கிரோகோரியன் காலண்டர் அறிமுகமாகி 437 வருடங்களுமாகிறது என்பதை அறிய முடிகிறது.
இரண்டாம் கலீஃபா உமர்(ரழி) அவர்கள்தான் காலண்டர் முறையை உலகுக்கு முதலில் தந்தவர் என்கிறீர்கள்.

உலகுக்கு காலண்டரை தந்தவர்கள் நாம் தான் என்று கூறும் அதே நேரத்தில் இஸ்லாமிய தேதிக்கோடு & சர்வதேச நேரம் என்று ஒன்று இதுநாள்வரையிலும் நம்மிடம் இல்லையே ஏன்?

அது இல்லாத காரணத்தினால்தான் இன்று உலகளாவிய அளவில் நோன்பு & பெருநாள் ஒரே தேதி, ஒரு கிழமை என்ற நிலை இல்லாது ஒரு தேதிக்கு மூன்று கிழமைகள் இருப்பதை பார்க்கிறோம்.

எனவே, உலகளாவிய அளவில் முஸ்லிம்களிடையே கூட செயல்படுத்த முடியாத காலண்டராகத்தான் ஹிஜ்ரி காலண்டர் இருக்கிறது. உலகளாவிய அளவில் ஹிஜ்ரி காலண்டரை செயல்படுத்துவது சாத்தியமா? இல்லையா?   S.M. நாசர், நாகர்கோவில்.

விளக்கம் : உலகுக்கு தற்போது உபயோகத்தில் உள்ள காலண்டர் முறையை முதலில் தந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதில் வேறு கருத்து இல்லை. வருடத்திற்கு 12 மாதம் என்பதையும் 9:36 அல்குர்ஆன் கட்டளைப்படி ஏற்று உலகில் நடைமுறைப்படுத்தியவர்கள் முஸ்லிம்கள்தான். (கிரிகோரியன் ஆரம்பத்தில் 10 மாதமாகவே இருந்தி ருக்கிறது) வருடத்தை 12 மாதமாக கணக்கிட கற்றுத் தந்த முஸ்லிம்கள் தேதிக்கோடு (IDL) சர்வதேச நேரம் (UTC) இவைகள் ஆங்கிலேயரால் தவறாக நிர்ணயிக்கப்பட்டபோது உலகம் முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றதும் இஸ்லாமிய ஆட்சி யாளர்கள் குர்ஆனை விட்டு அறியாமையில் ஆட்சி செய்ததும் தான் காரணம். ஆனால் இன்றுவரை இஸ்லாமிய அறிவியல் வல்லுநர்களின் முயற்சி இன்மையால், பலரும் இந்த தவறான IDL மற்றும் UTCயை சரிகாண்கின்றனர். காரணம் ஆங்கிலேயர் சூரியக் கணக்கை காலண்டராக எடுத்துகொண்டதே ஆகும். சூரிய காலண்டர் சூரியனை பூமி சுற்றி வருவதை அடிப்படையாக கொண்டு அமைந்திருப்பதால் அது பருவ நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.

மேலும் உச்சி முதல் உச்சி வரை வரும் சூரியனை அடிப்படையாக்கி கணக்கிட ஏதுவாக அமைந்த ஒரு காரணத்திலேயே அறிவியல் வல்லுனர்களும் இதனை சரி காண்கின்றனர்.

இன்று உள்ள வளைந்து நெளிந்த தேதி கோட்டின் அடிப்படையில் ஒரு வினாடி நேரம் கூட பூமி முழுவதும் ஒரே கிழமையில் வராது. நேர்கோடாக அது அமையும் பட்சத்தில் தான் அது சாத்தியம் ஆகும். உலக அளவில் ஹிஜ்ரி காலண்டர் செயல்படுத்த முடியாமல் இருப்பதற்கு காரணம். முஸ்லிம்கள் அறியாமையினால் பல பிரிவாக பிரிந்து கிடப்பதும் குர்ஆனை பற்றி பிடிக்காததும் தான் காரணம், ஆனால் உலகளவில் ஹிஜ்ரி காலண்டரை செயல்படுத்துவது சாத்தியமே. வரும் காலம் இதனை மாற்றும் இன்ஷா அல்லாஹ். மக்கள் இதை உணர்ந்து சரியான காலண்டரின் பக்கம் வர அல்லாஹ்விடம் நாம் துஆ செய்வோம்.

 

Previous post:

Next post: