நமது இரயில்வே!

in 2019 ஜுலை,தலையங்கம்

அந்நஜாத் –  ஜூலை 2019

ஷவ்வால்  – துல்கஃதா 1440

  1. தலையங்கம்!
  2. அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா?
  3. அமல்களின் சிறப்புகள்!
  4. ஹதீஃதில் கூறப்படும் உதாரணங்கள்! 1
  5. உருவப்படம் வரையலாமா?   (பகுதி-3)
  6. ஹஜ் பெருநாள் சிந்தனைகள்- தியாகத் திருநாள்…
  7. ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்…
  8. பெரும்பாண்மை…
  9. அறிந்து கொள்வோம்…

தலையங்கம்!   

நமது இரயில்வே!

ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இரயில்வே மேப், இரயில்வே டைம்டேபிள் ஆகியவைகளின் மாஸ்டர் காப்பி தொலைந்து போய், ரெஃபர் செய்வதற்கு வேறு நகல் இல்லாவிட்டால், ஆங்காங்கே ரயில்கள் மோதிக் கொண்டு நின்றுவிடும், திரும்ப ஓடுவதற்கு சில காலம் ஆகலாம், அல்லது நிலைமையை சீர் செய்ய முடியாமலும் போகலாம் என்று அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு சிலர் கேலியாகப் பேசிக்கொள்வர். இதில் உண்மை இல்லை என்றாலும், நம்மவர்கள் திறமையாளர்கள் என்பதால் இந்த கேலிப் பேச்சுக்கள் கேலிக்காக பேசப்பட்டவைகளாகவே பார்க்கப்பட்டன.

ஆனால் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறதென்றால், திறமையாளர்கள், பலர் பணியில் இருந்தாலும், பெரிய காரணம் எதுவும் இல்லாமல் அற்ப விஷயங்களை அமுலுக்குக் கொண்டு வந்துவிட்டால், ஆங்காங்கே இரயில்கள் சுலபமாக மோதிக் கொள்ள முடியும் என்றாகி விட்டது.

சமீபத்திய சதர்ன் இரயில்வேயின் உத்தரவு ஒன்றினால், அப்படியான சூழ்நிலை ஏற்பட்டது. அந்தந்த டிவிசன்களிலுள்ள இரயில்வே கண்ட்ரோல் அறையும், சம்பந்தப்பட்ட ஸ்டேசன் மாஸ்டர்களும் பிராந்திய மொழியில் தொடர்பு கொள்ளும் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்றும், இரு சாராருக்கும் தொடர்பு மொழி இந்தி அல்லது ஆங்கிலமாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சதர்ன் இரயில்வே உத்தரவு ஒன்றை மே மாதம் வெளியிட்டது.

இந்த உத்தரவின் தொடர்ச்சியாக, விபரீதம் ஒன்று ஏற்படும் வாய்ப்பு உருவானது. செங்கோட்டை பயணிகள் இரயில், திருமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து கள்ளிக்குடி நோக்கி புறப்படுமாறும், மதுரை பயணிகள் இரயில், கள்ளிக்குடி இரயில் நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி அதே நேரத்தில் புறப்படுமாறும் விபரீத அனுமதி வழங்கப்பட்டது. நல்ல வேளை! திறமையான பணியாளரால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் அலறின!

சம்பவத்தை விசாரித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு, இரு முனைகளிலும் ஒருவருக்கொருவர் புரியாத வெவ்வேறு மொழிகளில் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் 14.06.2019 அன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்து எதிர்ப்பு வலுத்தது.

இந்த சூழலில் சதர்ன் இரயில்வே தமது உத்தரவை வாபஸ் பெற்று, கட்டுப்பாட்டு அறையினரும் ஸ்டேஷன் மாஸ்டர்களும் குழப்பம் ஏற்படாத வகையில் தங்களுக்குப் புரியும் எந்த மொழியிலும் பேசலாம் என்ற தமது புதிய அறிவிப்பை வெளியிட்டது.

சதர்ன் இரயில்வே அதனுடைய பிராந்திய மொழியான தமிழில் தகவல் தொடர்பு கொள்ளக்கூடாது என்று உத்தரவு இடுகிறது என்றால், இதன் பின்னணி யார் என்பதை பத்திரிகைகளும் ஊடகங்களும் ஏன் தெரியப்படுத்த மறுக்கின்றன என்பது புரியாத புதிராக இருக்கிறது.

Previous post:

Next post: